• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ampanai

அதிக எடைகொண்ட டெஸ்ட் வீரராக மே.இ. தீவுகளின் கோர்வோல் சாதனை

Recommended Posts

SPT04.jpg?itok=PuRqf_eA

உலகில் அதிக எடையுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரராக மேற்கிந்தி தீவுகளின் புதிய சகலதுறை வீரர் ரகீம் கோர்ன்வோல் பதிவாகியுள்ளார்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது ஆட்டம் கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ரகீம் கோர்ன்வோல் களமிறக்கப்பட்டுள்ளார்.

சகலதுறை வீரரான கோர்ன்வோல் தனது முதல் ஆட்டத்திலேயே புஜாராவை ஆட்டமிழக்கச் செய்தார். புதிய வீரரான கோர்ன்வோல் 6.5 அடி உயரம் கொண்டவர். அவரது மொத்த எடை 140 கிலோ ஆகும்.

இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் வார்விக் ஆம்ஸ்ட்ரோங் 133–139 கிலோ எடையுடன் ஆடினார். அவரது எடையை முறியடித்துள்ளார் ரகீம் கோர்ன்வோல்.

ஓப் ஸ்பின்னரான ரகீம், கீழ் வரிசை துடுப்பாட்ட வீரராகவும் உள்ளார்.

முதல் டெஸ்ட் ஆட்டத்தில் கார்ன்வோல் ஆடவில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் ஏ அணியில் இடம் பெற்று 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

26 வயதான அண்டிகுவாவில் பிறந்த கோர்ன்வோல் கடந்த 2016 இல் இந்தியாவுக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் மோதிய மே.இ.தீவுகள் கிரிக்கெட் சபை தலைவர் அணியில் ஆடினார். உள்ளுர் போட்டிகளில் மொத்தம் 260 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் கோர்ன்வோல்.

https://www.thinakaran.lk/2019/09/02/விளையாட்டு/39585/அதிக-எடைகொண்ட-டெஸ்ட்-வீரராக-மேஇ-தீவுகளின்-கோர்வோல்-சாதனை

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • கந்தக்காட்டில் சற்றுமுன் மேலும் 87 பேருக்கு கொரோன உறுதி! பொலனறுவை – கந்தக்காட்டில் அமைந்துள்ள போதைப் பொருள் பாவனையுடன் தொடர்பு உடைய நபர்களுக்கான புனர்வாழ்வு மையத்தில் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று இன்று (10) மாலை சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த மையத்தில் இன்று மட்டும் 283 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை மாெத்தமாக 340 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   https://newuthayan.com/கந்தக்காட்டில்-சற்றுமுன/
  • Tholar Balan 38 mins ·    •சுமந்திரன் உருவப் பொம்மையை எரித்தால் இலங்கை அரசு ஏன் எரிச்சல் அடைகிறது? கடந்த மே மாதம் 14ம் திகதி இயக்குனர் களஞ்சியம் அவர்கள் தமிழ்நாட்டில் சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்படி வழங்கி எரித்தார். உடனே இலங்கைப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்கள் களஞ்சியம் அவர்களை போனில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர் என அறிய வருகிறது. “எமக்கு தமிழ்நாட்டில் 200 பேர் இருக்கிறார்கள். கருணா அம்மானுக்கு 300 பேர் இருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து உன்னை தூக்குவோம்” என்று களஞ்சியம் அவர்களை கொச்சைத் தமிழில் மிரட்டியுள்ளனராம். இதைவிட தமிழக கியு பிரிவு பொலிஸ் “தேவையானால் மோடியின்ரை உருவப் பொம்மையை கொளுத்துங்க. ஆனால் சுமந்திரன் உருவப் பொம்மையை மட்டும் கொளுத்தாதீங்க” என்று கேட்கிறார்களாம். சுமந்திரன் உருவப் பொம்மை எரித்தமைக்கு நேரடியாக வழக்கு போட முடியாததால் கொரோனோவில் வீட்டை விட்டு வெளியேறியது குற்றம் என்று வழக்கு போடுகிறார்களாம். இப்போது எமது கேள்வி என்னவெனில் சுமந்திரன் தமிழர் தலைவர் என்றால் அவரது உருவப் பொம்மை எரிக்கப்பட்டமைக்கு தமிழ் மக்கள்தானே எரிச்சல்பட வேண்டும். ஏன் இலங்கை இந்திய அரசுகள் எரிச்சல் அடைகின்றன? இலங்கை இந்திய அரசுகள் தாம் நேரடியாக செய்ய முடியாததை சுமந்திரன் மூலம் சாதிக்க முனைகின்றன என்பதே இதன் அர்த்தம் ஆகும். எனவேதான் சுமந்திரன் தோல்வியுற்றால் மீண்டும் தமிழ் தேசிய உணர்வு மேலோங்கிவிடும் என இவ் அரசுகளின் புலனாய்வு அமைப்புகள் அச்சமடைகின்றன. குறிப்பு- இயக்கனர் களஞ்சியம் அவர்கள் நான் எழதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூலை பெற்றுக்கொண்டபோது எடுத்த படம். இந்த படத்தை பார்த்ததும் இதற்காக இன்னொருமுறை களஞ்சியத்தை கியூ பிரிவினர் விசாரிக்கப் போகிறார்கள்? பாவம் மனுசன்.
  • தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத) தின்னப் பழங்கொண்டு தருவான்;-பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால்-அதனை எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத) தேனொத்த பண்டங்கள் கொண்டு-என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்; மானொத்த பெண்ணடி என்பான்-சற்று மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான். (தீராத) அழகுள்ள மலர்கொண்டு வந்தே-என்னை அழஅழச் செய்துபின் “கண்ணை மூடிக்கொள்; குழலிலே சூட்டுவேன்” என்பான்-என்னைக் குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத) பின்னலைப் பின்னின் றிழப்பான்;-தலை பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்; வன்னப் புதுச்சேலை தனிலே-புழுதி வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத) புல்லாங் குழல்கொண்டு வருவான்-அமுது பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான், கள்ளர்ல் மயங்குவது போலே அதைக் கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத) அங்காந் திருக்கும்வாய் தனிலே-கண்ணன் ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்; எங்காகிலும் பார்த்த துண்டோ?-கண்ணன் எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? (தீராத) விளையாட வாவென் றழைப்பான்;-வீட்டில் வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்; இளையாரொ டாடிக் குதிப்பான்;-எம்மை இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான (தீராத) அம்மைக்கு நல்லவன்,கண்டீர்!-மூளி அத்தைக்கு நல்லவன்,தந்தைக்கு மஃதே, எம்மைத் துயர்செய்யும் பெரியோர்-வீட்டில் யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத) கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்;-பொய்மை சூத்திரம் பழிசொலக் கூசாக் சழக்கன்; ஆளுக் கிசைந்தபடி பேசித்-தெருவில் அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)  
  • கொரோனா: அ.தி.மு.கவில் மூன்றாவது அமைச்சர்! மருத்துவமனையில் செல்லூர் ராஜு     கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, கொரோனா தொற்று காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் கே.பி.அன்பழகனுக்குக் கொரோனா; அதிர்ச்சியில் பிற அமைச்சர்கள்... விழித்துக்கொள்ளுமா அரசு?! தமிழக அமைச்சர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவரும் சூழலில், தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம், அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் அங்கு சிகிச்சை எடுத்துவரும் நிலையில், தற்போது செல்லூர் ராஜுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில், அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவதாக அமைச்சர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக செல்லூர் ராஜு நெருக்கிய வட்டாரத்தில் கேட்ட போது, ``அவரின் மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டபோது, செல்லூர் ராஜுவுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தது. எனவே, சென்னையில் இருந்தே தனது அலுவலகப் பணிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை நந்தம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்” என்றனர். ஏற்கெனவே உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மின்துறை அமைச்சர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்ட அ.தி.மு.க முக்கிய பிரபலங்கள் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.   https://www.vikatan.com/government-and-politics/politics/minister-selur-raju-admitted-in-chennai-hospital-over-corona-virus-infection
  • டிக்டாக்குக்கு மாற்று; `சில் 5’ செயலி! - அசத்தும் திருப்பூர் பட்டதாரி நண்பர்கள் டிக்டாக்குக்குப் பதிலாக மாற்று செயலியை அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கிறார்கள் திருப்பூரைச் சேர்ந்த 5 பட்டதாரி நண்பர்கள். இளசுகள் முதல் பெரியவர்கள் வரை எனப் பலரும் பயன்படுத்தி அதகளம் செய்த ஒரு மொபைல் செயலி என்றால் அது டிக்டாக் தான். `டிக்டாக்கில் ஆபாசம் அதிகமாக இருக்கிறது. இந்தச் செயலியை தடை செய்ய வேண்டும்’ என இந்தச் செயலிக்கு எதிராகப் பல எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வந்தன. இருந்தாலும் பட்டி தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பி வந்தது டிக்டாக் செயலி. இதற்கிடையே இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையையொட்டி சீன பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் வலுவானது. அதேநேரம், சீன நாட்டைச் சேர்ந்த மொபைல் செயலிகள் மூலம், இந்தியாவின் தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது.             சில்5 செயலி அதன்பிறகு டிக்டாக்கின் இடத்தைப் பிடிக்கவும், டிக்டாக்குக்கு மாற்றாகவும் வர பல செயலிகள் முனைப்பு காட்டின. அந்தவகையில் திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி நண்பர்கள் இணைந்து டிக்டாக் செயலிக்கு மாற்றாக `சில்5’ (chill5) என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர். திருப்பூரைச் சேர்ந்த ஹரிஷ்குமார் (26), சௌந்தரகுமார் (28), சந்தீப் (25), கோகுல் (25), வெங்கடேஷ் (25) ஆகிய 5 பேரும் சேர்ந்து இந்தச் செயலியை வடிவமைத்துள்ளனர். டிக் டாக் போலவே காட்சி தரும் இந்த செயலி, டிக் டாக் போலவே வீடியோ பதிவேற்றம், பரிமாற்றம் என பல அம்சங்கள் கொண்டுள்ளது. இதுவரை 10,000-க்கும் மேற்பட்டோர் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.   இதுகுறித்து சில்5 செயலி உருவாக்கத்தில் ஒருவரான கோகுல் என்பவரிடம் பேசினோம். `இந்திய மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் மொபைல் ஆப்கள் பெரும்பாலும் வெளிநாட்டைச் சேர்ந்தவையாக இருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்துவதில் பல பாதுகாப்புக் குறைபாடுகள் இருக்கின்றன. எனவே, முழுக்க பாதுகாப்பான, இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரு ஆப்பை மக்களிடம் சேர்க்க வேண்டுமென நினைத்தோம்.   சில்5 செயலி உருவாக்கத்தின் போது எங்களோட வெப் டிசைனிங் கம்பெனி மூலமாக இதுவரை 50-க்கும் மேற்பட்ட வெப்சைட்டுகளை டிசைன் செய்து கொடுத்திருக்கிறோம். ஒரு மொபைல் ஆப் உருவாக்குவது என்பது இதுதான் முதல்முறை. ஜனவரி மாதம் டிக்டாக்கைப் போலவே ஒரு ஆப்பை உருவாக்க ஆரம்பித்தோம். சர்வர் தளம் மிகவும் பாதுகாப்பானதாகவும், தகவல்கள் திருடப்படாத வகையில் கட்டமைத்து ஜூன் 4-ம் தேதி பிளேஸ்டோரில் பதிவேற்றினோம்   டிக்டாக்கில் உள்ள ஆபாசம், ரத்தம் தெரிவது போன்ற வன்முறை காட்சிகள் போன்றவற்றை எங்களுடைய மொபைல் ஆப்பில் அனுமதிக்க மாட்டோம். இதைத் தடுப்பதற்காக இப்போது ரிப்போர்ட் பட்டன் வைத்திருக்கிறோம். தானாகவே இப்படியான வீடியோக்களை நீக்குவதற்கான அல்காரிதம் டிஸைன் செய்து வருகிறோம். வீடியோவை எத்தனை பேர் பார்த்தாங்கன்னு காட்டுகின்ற வகையில் `வியூஸ் கவுண்ட்’ எங்க ஆப்ல இருக்கு. குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் ஆசிரியர்களை வைத்து பொது அறிவு மற்றும் கல்வி சம்பந்தமான சின்னச் சின்ன வீடியோக்களை போஸ்ட் செய்யவிருக்கிறோம். டிக்டாக்குக்கு முன்னாடியே எங்க ஆப்பை ரிலீஸ் பண்ணிட்டோம்.   நாங்க நினைச்ச அளவுக்கு எங்க ஆப் பெருசா ரீச் ஆகலை. டிக்டாக் ஆப் தடை செஞ்ச செய்தியைக் கேட்டதும் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இப்போ, நிறைய பேர் எங்க ஆப்பை பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உருவாக்கிய மொபைல் ஆப்புக்கு மக்கள் ஆதரவு கொடுப்பாங்கன்னு நம்புறோம். இன்னும் இன்ஸ்டாகிராம், ஹலோ ஆப் மாதிரியான டிஸைன்களில் புதிய ஆப்களைத் தயார் செய்ய பிளான் பண்ணியிருக்கோம்” என்றார் மகிழ்ச்சியுடன்.   https://www.vikatan.com/story-feed