Jump to content

காணொளியில் முகத்தை மாற்றும் செயலியால், சீனாவில் சர்ச்சை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Zao-720x450.jpg

காணொளியில் முகத்தை மாற்றும் செயலியால், சீனாவில் சர்ச்சை.

காணொளிகளில் இடம்பெறும் நபர்களின் முகங்களை மற்றவர்களின் முகங்களுடன் மாற்றும் ZAO செயலியால் சீனாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ZAO செயலி சீனாவில் பல மில்லியன் பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் தனிநபர் பாதுகாப்பு அச்சங்களைக் மேற்கோள் காட்டி செயலிக்கான எதிர்ப்பு தற்போது அதிகரித்து வருகின்றது.

சீனாவில் மட்டுமே கிடைக்கும் ZAO செயலி பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், அடையாளச் சரிபார்த்தல் குறித்த அக்கறைகளை எழுப்பியுள்ளது. இந்த செயலி, நேற்றுவரை சீனாவில் அதிகமாகப் பதிவிறக்கப்பட்ட செயலியாக காணப்படுகின்றது.  பயனர்கள் தங்கள் கைத்தொலைபேசிகளில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களைக் கொண்டு செயலியில் உள்ள பல காணொளிகளில் இடம்பெறும் பிரபலங்களுடன் முகத்தை மாற்றிக்கொள்ளலாம்.

அதன் பின்னர் அந்த காணொளிகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.

செயலியின் பயனர்கள் ஒப்பந்தத்தின்கீழ், செயலியில் தங்கள் ஒளிப்படங்களைப் பதிவேற்றம் செய்வோர், தங்கள் ஒளிப்படத்திற்கான மதிநுட்பச் சொத்தை விளம்பரப் பயன்பாட்டுக்காகச் செயலியிடம் வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் குறித்த செயலியால் சர்ச்சை எழுந்துள்ள வேளையில் பயனர்களின் அச்சங்களை விரைவில் தீர்த்துவைப்பதாகச் ZAO செயலி, Weibo சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/காணொளியில்-முகத்தை-மாற்ற/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தலதா மாளிகையில் எந்தவோர் ஊழியரும் தொற்றுக்காளாகவில்லை; கண்டி பொலிஸார் 21 பேருக்கு கொவிட்-19 கண்டி தலதா மாளிகையில் எந்தவோர் ஊழியரும் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகவில்லை என தலதா மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை வலுப்படுத்தவும் கோவிலுக்குள் கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுலில் இருப்பதை உறுதி செய்யவும் கண்டி பொலிஸ் பிரிவின் மேலதிக அதிகாரிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை கூறுகிறது. அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் வழிகாட்டலின் கீழும் தியவதன நிலமேயின் கடுமையான மேற்பார்வையிலும் நாளாந்த சடங்குகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது. இதேவேளை தலதா மாளிகையில் பாதுகாப்பு வழங்கவென நிறுத்தப்பட்டிருந்த 21 பொலிஸார் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் தொடர்பிலிருந்த 237 பொலிஸார் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கண்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறியுள்ளார். Thinakkural.lk
    • இது ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்துபோன நட்ஷத்திரங்களைத்தான்  நாம் இப்போ வானில் பார்க்கிறோம் என்பது போன்ற தியோரி  இதை இல்லை என்று நாம் அடித்து கூறமுடியாது.  ஒளி தொடர்ந்தும் பயணிக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்று என்றாலும்  இன்னொரு பால்வீதியை கடக்கும்போது வரும் ஒளி முறிவு அதன் தாக்கம்  அதிர்வலைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு ஒரு இருண்ட வெளியில்  ஒளி பயணிக்கிறது எனும்போது ஏற்றக்கொள்ள கூடிய தியறியாகவே நான் பார்க்கிறேன். நான் பேசுவது காற்றாலையில் அதிர்வலையாக பயணிக்கும்போது  அந்த அதிர்வலையை ஒரு விமானம் அல்லது பட்டாசு வெடி ஓசையின்  அதிர்வலை கடக்கும்போது அங்கு என்ன நிகழும்?  ஏன் சோர்ட் வே வானொலி அலை குறிப்பிட்ட எல்லையை கடந்ததும்  கேட்க்க முடியாது போகிறது?  ஜேசு பேசிய ஒரு பகுதியை நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன்  அவர் ஓம் நமச்சிவாய என்று கூறுகிறார் என்று நாம் புது புரளியை கிளம்பிவிட வேண்டும்  மூலிகை பெட்ரோல் மாதிரி  பின்பு அவர்களாகவே ஆய்வு செய்து அப்படி பதிய முடியாது என்று சொல்வார்கள் 
    • துரோகத்தின் நாட்காட்டி : நாள் 4, ஆடி, 2007 இரு துணைப்படைக் கூலிக் குழுக்களிடையே மோதல் - கொம்மாதுறை ராணுவ முகாமில் சம்பவம் கடந்த புதனன்று, மட்டக்களப்பு செங்கலடிப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் கொம்மாதுறை ராணுவ முகாமில் இருந்து இயங்கிவரும் துணைப்படைக் கூலிக் குழுக்களான கருணா குழுவினருக்கும் ஈ பீ டி பி யினருக்கும் இடையே நடந்த சண்டையில் ஒரு கருணா துணைப்படை உறுப்பினர் கொல்லப்பட்டதோடு இரு ஈ பி டி பி துணைப்படையுறுப்பினர்கள் காயமடைந்திருக்கின்றனர்.  இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இயங்கும் ஒரே துணைப்படைக் கூலிக் குழுவான ஈ பி டி பியினருக்கு எதிரான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளில் கருணா துணைப்படைக் கூலிகள் கொம்மாதுறை முகாமினுள் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த இரு மாதங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா துணைப்படைக் கூலிகள் ஈ பி டி பியினரின் செயற்பாடுகளுக்கு தடங்கலாக இருந்து வருகின்றனர். சம்பவ தினம் கொம்மாதுறை முகாமில் ஈ பி டி பியினர் தங்கியிருக்கும் பகுதிக்குள் நுழைந்த 5 கருணா துணைப்படைக் கூலிகள் கிர்னேட்டுக்கள் கொண்டும், தானியங்கித் துப்பாக்கிகள் கொண்டும் உள்ளிருந்தவர்கள் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். தாக்குதலில் சிவஞானம் சுதாகரன் மற்றும் கோவிந்தன் விஷ்ணு ஆகிய ஈ பீ டி பி துணைப்படையினர் காயமடைந்தனர். இவ்விரு துணைப்படையினருக்கும் பாதுகாப்பு வழங்கிவரும் இலங்கை ராணுவம், சண்டையினை முடிவிற்குக் கொண்டுவர தாக்குதலாளிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யவே கருணா துணைப்படைக் கூலியொருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.  அத்துடன் சண்டை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதுடன், காயப்பட்டவர்களை இராணுவம் வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றது.  மட்டக்களப்பு வாழைச்சேனை நகர்களுக்கிடையே அமைந்திருக்கும் ராணுவ முகாம்களில் கொம்மாதுறை ராணுவமுகாமே மிகவும் பெரியது என்பதுடன், இம்முகாமின் இருவேறு பகுதிகளில் இவ்விரு துணைப்படைக் கூலிக்குழுக்களும் இலங்கை ராணுவத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.  மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து புலிகள் தமது தளங்களை வன்னிக்கு நகர்த்தியிருக்கும் வேளையில், அரசு மட்டக்களப்பில் தேர்தல்களை நடத்த திட்டமிட்டு வரும் பின்னணியிலேயே தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் தொடர்பாக இக்குழுக்களுக்கிடையேயான மோதல் வெடித்துள்ளது.  கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களை கருணா துணைப்படைக் கூலிகள் கிழக்கில் தடைசெய்துள்ள நிலையில், கருணா குழுவும் ஈ பி டி பி யினரும் தமது சொந்தப் பிரச்சாரப் பத்திரிக்கைகளை இப்பகுதிகளில் ஏட்டிக்குப் போட்டியாக விநியோகித்து வருவது நடக்கிறது. 
    • வாதங்களில் எனக்கு இப்போது இஷடம் பெரிதாக இல்லை  நான் கடந்த காலங்களை இப்படி வீண் செய்து இருக்கிறேன் என்பதை  நினைத்து இப்போ வெட்கப்படுகிறேன். உங்களின் கருத்தை எதிர்ப்பதோ மறுப்பதோ எனது எண்ணம் இல்லை  எனது கருத்தை பகிர்வதே நோக்கம். நான் இந்த ஓவியம் பற்றியும் மனிதர்களின் கடந்த கால ஆய்வுகள் பற்றியும் மட்டுமே  சிந்திக்கிறேன் இந்த காலப்பகுதியில் இப்படி ஓவியம் வரைய கூடிய அறிவு அளவில் மனிதர்கள்  வாழ்ந்தார்கள் என்று இதற்கு முன்பு யாரும் எங்கும் கூறவில்லை.  வேறு திரியில் என்ன பேசுகிறார்கள்  யார் ஆமையில் பயணம் செய்கிறார்கள் என்பதுக்குள் நாம் மையம் கொள்ள தேவை இல்லை என்று எண்ணுகிறேன். நான் கூறிய கொலம்பஸ் உதாரணம் அமரிக்க வரலாறு பற்றியது. மனித குழுமம்  கொலம்பஸில் தொங்கும்போது அதற்கு முந்திய அமரிக்க வாழ் மனிதர்களின் வரலாறு என்பது இருளாகவே  இருக்கும் யார் அந்த இருளுக்குள்ளும் பயணிக்கிறார்கள் என்பதே உண்மைக்கு வலி சமைக்கும்  நான் மகாபாரதத்தை நம்பவில்லை அதுக்கு போதுமான அளவு அறிவு எனக்கு இல்லாததும்  காரணமாக இருக்கலாம்  ஆனால் அது எழுதப்பட்ட காலம் அதுக்கு முந்திய காலம் எனும்போது வேத காலத்துக்கு முந்திய  காலமாக அது பத்து ஆயிரம் ஆண்டு தாண்டுகிறது. அந்த புள்ளியில் இப்போது இவர்கள் முன்வைக்கும் முசுப்பேத்திய நாகரீகத்தை தொடக்கமாக கொள்வது என்பது கேள்வி குறியானதே.  நான் வாசித்த அளவில் மனித நாகரீகம் பத்து ஆயிரம் வருடம் முன்னதாகவே இருக்கிறது  அதை யாருக்கும் திணிக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த லாபமும் இல்லை என்பதால்  அதில் எனக்கு அக்கறை இல்லை
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.