Jump to content

3.5 மில்லியன் ஆண்டு பழமையான நம் முன்னோர் இவர்தான்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

3.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான நம் முன்னோர் இவர் தான் ! அதிசய கண்டுபிடிப்பு.!

fount-place-skulldiscovery-main-15674882

குரங்கிலிருந்து மில்லியன்கணக்கான ஆண்டுகளாக பரிமாண வளர்ச்சி பெற்று மனிதன் தற்போதுள்ள தோற்றத்தை அடைந்தான் என்பதைப்பற்றியது அல்ல இது.

3.5 மில்லியன் ஆண்டுகள்

எனினும் சமீபத்தில் எத்தியோப்பியாவில் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்ட 3.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான மண்டையோடு ஒன்று, நம் முன்னோர்கள் உண்மையில் எப்படி தோற்றமளித்தனர் என்ற உண்மையை வெளிக்கொண்டுவந்துள்ளது.

க்ளேவ்லேண்ட் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்ட்ரி

க்ளேவ்லேண்ட் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்ட்ரி-ஐ சேர்ந்த மானுடவியல் தொல்லியலாளரும், இந்த ஆராய்ச்சியை வழிநடத்திய ஆய்வாளருமான யோகன்ஸ் ஹெய்லே சிலாஸீ கூறுகையில், இது ஒரு வாழ்நாள் கண்டுபிடிப்பு மற்றும் இதைவிட உற்சாகமானது வேறெதுவும் இல்லை. தொல்பொருள் பதிவுகளில் 3 மில்லியன் ஆண்டுகளுக்கு பழமையானவை இதுவரை கண்டறிந்திராத நிலையில், முற்கால மனித மூதாதையரின் முழுமையான மண்டைஓட்டைப் பற்றி நாம் இப்போது பேசிவருகிறோம் என்கிறார்.

பெரிய தாடை, நீண்ட வடிவம்

எம்ஆர்டி என பெயரிடப்பட்டுள்ள இந்த தொல்பொருள், லூசி இனங்களின் ஆஸ்ட்ராலோபிதிகஸ் அபரென்சிஸ்-ன் நேரடி மூதாதையர் என நம்பப்படும் ஆஸ்ட்ராலோபிதிகஸ் அனாமென்சிஸ் மூதாதையர் ஆகும். இந்த காலக்கட்டத்தில் தான் நமது மூதாதையர்கள் இரண்டு கால்களை பயன்படுத்தி தரையில் நடக்க கற்றுக்கொண்டனர். அதுமட்டுமின்றி இந்த சமயத்தில் தான் அவர்களது முகத்தில் மனிதகுரங்கு போன்ற அம்சங்களும், பெரிய தாடை, நீண்ட வடிவம் மற்றும் சிறிய மூளையையும் கொண்டிருந்தனர்.

சாகிட்டல் கிரீஸ்ட்

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி,எம்ஆர்டி-ல் நீண்ட முகத்துடன் கூடிய வலுவான உடல் மற்றும் சாகிட்டல் கிரீஸ்ட்(sagittal crest) எனப்படும் தாடை தசைகளுக்கு வலுசேரக்கும் தலையில் உள்ள எலும்பும் குறைவில்லாமல் வளர்ந்திருந்தது.

தனிமைபடுத்தப்பட்ட தாடை பாகங்கள்

மனித இன பரிணாம வளர்ச்சிக்கு லூசி முக்கிய பங்காக இருந்தாலும், அதை போதுமான தகவல்களை கொண்டிராததால் இதுவரை அவற்றின் மூதாதையர்களைப் பற்றி கவனம் செலுத்தவில்லை. அவர்களால் கண்டுபிடிக்கமுடிந்தது எல்லாமே தனிமைபடுத்தப்பட்ட தாடை பாகங்கள் மற்றும் பற்கள் மட்டுமே. எனினும் எம்ஆர்டி பற்றிய சமீபத்திய கண்டுபிடிப்பு அனைத்தையும் மாற்றிவிட்டது.

நமது பரிணாம வளர்ச்சி

எம்ஆர்டி தொல்பொருளின் வயது அது லூசி இனத்துடன் சுமார் 100,000 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தது என்ற உண்மையை வெளி கொண்டு வந்துள்ளதுடன், அதன் மூதாதையர் ஒன்றாக வாழவில்லை என்ற முந்தைய கணிப்பையும் பொய்யாக்கியுள்ளது. நாம் இங்கு பார்ப்பது நமது பரிணாம வளர்ச்சி, ஒரு இனத்திலிருந்து மற்றொன்றிற்கு முழுவதுமாக நேரடியான மாற்றித்தின் மூலம் வந்ததல்ல என்பதையே குறிக்கிறது என்கிறார் ஹெய்லே.

https://tamil.gizbot.com/scitech/is-this-how-ancestors-looked-nearly-3-5-million-years-ago/articlecontent-pf164184-023017.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

3.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான நம் முன்னோர் இவர் தான் ! அதிசய கண்டுபிடிப்பு.!

fount-place-skulldiscovery-main-15674882

 

Ãhnliches Foto

3.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட,  நம் முன்னோர்கள்...  
மீசை  வளர்ப்பதை விரும்பவில்லை போலுள்ளது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போது தூசி இல்லை அதனால் மீசையும் இல்லை,  பின்பு தூசியும் புகையும் நிறைந்து விட்டதால் மீசை ஒட்ட வேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது.....!     🤔 

Link to comment
Share on other sites

On 9/3/2019 at 7:07 PM, suvy said:

அப்போது தூசி இல்லை அதனால் மீசையும் இல்லை,  பின்பு தூசியும் புகையும் நிறைந்து விட்டதால் மீசை ஒட்ட வேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது.....!     🤔 

அந்தக்காலத்தில் பனம்கள்ளும் தூய்மையாகலே இருந்தது. வடித்துக் குடிக்க, வடி மற்றும் மீசையின் தேவைகளும் வேண்டியிருக்கவில்லை. 🤣

 

Link to comment
Share on other sites

இருக்கும் தமிழருக்கும் தொடர்பு இருக்கலாம் 🙂

இலங்கையில் உள்ள ஆதி மனிதர்கள், அவுசில் உள்ள பூர்வீக குடிகள் இந்த முக ஒற்றுமையை கொண்டிருக்கின்றார்கள்.  

fount-place-skulldiscovery-main-1567488295.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.