Jump to content

இரு­த­யத்தில் நுண்­க­ணினி பொருத்­தப்­பட்ட முத­லா­வது பெண்


Recommended Posts

உல­கி­லேயே இரு­த­யத்தில் நுண் கணினி உப­க­ரணம்  பொருத்­தப்­பட்ட முத­லா­வது  நோயாளி என்ற பெயரை பிரித்­தா­னி­யாவைச் சேர்ந்த 75 வயது பெண்­மணி பெறு­கிறார்.

பர்­மிங்­காமைச் சேர்ந்த மார்க்ரெட் மக்­டெர்­மோதி என்ற மேற்­படி பெண் இரு­தய இயக்கம் செய­லி­ழந்த நிலையில் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

27.jpg

இந்­நி­லையில் அவ­ருக்கு கடந்த  ஜூலை மாதத்தில் இரு­தய அறுவைச் சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டது. எனினும் அவ­ரது இரு­தய தசைகள் குருதியை ­  உடல் எங்கும் செலுத்­து­வ­தற்கு போதிய சக்தி இல்­லாது பல­வீ­ன­மாகக் காணப்­பட்­டதால்  அவர் உயி­ரா­பத்­தான நிலையை தொடர்ந்து எதிர்­கொண்­டுள்ளார். இந்­நி­லையில் அவ­ரது இரு­த­யத்தில் திடீ­ரென ஏற்­படக்கூடிய செய­லி­ழப்பை உட­னுக்­குடன் அறிந்து தாம­த­மின்றி அவ­ருக்கு சிகிச்­சையை மேற்­கொண்டு அவ­ரது உயிரைக் காப்­பாற்றும் முக­மாக  அவ­ரது இரு­த­யத்தில் நுண் கணினி உப­கர­ண­மொன்று பொருத்­தப்­ப­ட்­டது. இந்த உப­க­ர­ண­மா­னது அவ­ரது இரு­தய தசை­க­ளுக்கு குரு­தியை உடல் எங்கும் செலுத்த முடி­யாத நிலை ஏற்­ப­டு­கையில் அது தொடர்பில் ஆரம்பக் கட்­டத்­தி­லேயே மருத்­து­வர்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை செய்து  அவ­ருக்கு உட­ன­டி­யாக சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட வழி­வகை செய்­கி­றது.D-D-g_bXUAAZSLO.jpg

 

https://www.virakesari.lk/article/64026

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.