Sign in to follow this  
பிழம்பு

பிரா அணியாமல் இருப்பதை இயக்கமாக முன்னெடுக்கும் பெண்கள்

Recommended Posts

 
#NoBraபடத்தின் காப்புரிமை SULLI / Facebook Image caption தென்கொரியாவில் பிரா அணியாத இயக்கத்தின் ஓர் அடையாளமாக நடிகையும், பாடகியுமான சுல்லி மாறியுள்ளார்.

தென்கொரியாவில் பெண்கள் மேலாடைக்கு உள்ளே பிரா அணியாமல் இருக்கும் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.

#NoBra என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி இது சமூக ஊடகத்தில் பெண்கள் இயக்கமாக மாறி வருகிறது.

தென்கொரிய நடிகையும், பாடகியுமான சுல்லி என்பவர், லட்சக் கணக்கானோர் பின்தொடரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாம் பிரா அணியாதிருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை பரவி வருகிறது.

தென்கொரியாவில் பிரா அணியாத இயக்கத்தின் ஓர் அடையாளமாக அவர் மாறியுள்ளார். பிரா அணிவதோ அல்லது அணியாமல் இருப்பதோ ''தனிப்பட்ட சுதந்திரம்'' என்ற செய்தியை வெளிப்படுத்துவதாக இந்த இயக்கம் அமைந்துள்ளது.

பிரா அணியாத இயக்கம்

ஆதரவு தெரிவித்து நிறைய பதிவுகள் பதிவிடப்பட்டுள்ள போதிலும், அவர், ''தன் மீது கவனத்தை ஈர்க்க'' முயற்சிக்கிறார் என்றும், வேண்டுமென்றே மக்களின் உணர்வுகளைத் தூண்டும் செயலில் ஈடுபடுகிறார் என்றும் சமூக ஊடக பயனாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தன் சொந்த விளம்பரத்துக்காக பெண்ணிய பிரசாரத்தை அவர் பயன்படுத்துகிறார் என்றும் சிலர் கருதுகின்றனர்.

கடந்து செல்க இன்ஸ்டாகிராம் பதிவு இவரது jelly_jilli

முடிவு இன்ஸ்டாகிராம் பதிவின் இவரது jelly_jilli

<div class="embed-image-wrap" style="max-width: 599px"> <a href="https://www.instagram.com/p/BwUQRVLh0jH/?utm_source=ig_embed"> <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img class="js-image-replace" alt="இன்ஸ்டாகிராம் இவரது பதிவு jelly_jilli: " src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://www.instagram.com/p/BwUQRVLh0jH/?utm_source=ig_embed~/tamil/global-49567473" width="599" height="965"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை jelly_jilli</span> <span class="story-image-copyright" aria-hidden="true">jelly_jilli</span> </span> </figure> </a> </div>

''பிரா அணிவது உங்களுடைய விருப்பம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் எப்போதும் இறுக்கமான ஆடைகளை அணிந்து மார்பகங்களை வெளிக்காட்டும் வகையில் அவர் புகைப்படங்கள் எடுத்து வருகிறார். அதுபோல அவர் செய்யத் தேவையில்லை,'' என்று ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

''பிரா அணியாததற்காக உங்களை நாங்கள் குற்றம் சொல்லவில்லை. உங்கள் மார்புக் காம்புகளை மறைக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்,'' என்கிறது இன்னொரு பதிவு.

''உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன். இதேபோல பிரா அணியாமல் சர்ச்சுக்கு நீங்கள் செல்ல முடியுமா? உங்கள் சகோதரியின் கணவரை அல்லது உங்கள் கணவருடைய பெற்றோரை இதுபோல சென்று சந்திக்க முடியுமா,'' போன்ற கேள்விகள் எழுவது மட்டுமல்லாது ''ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இதை அசௌகரியமாக உணர்கிறார்கள்,'' என்றும் கருத்துகள் பதிவிடப் பட்டுள்ளன.

மிக சமீபத்தில் ஹிவாசா என்ற மற்றொரு பிரபலமான பாடகியும் #NoBra இயக்கத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருந்தார்.

பிரா அணியாத பெண்கள் இயக்கும்

தேர்வு செய்வதற்கு சுதந்திரம்

ஹாங்காங்கில் இசை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சோலுக்கு திரும்பியபோது உள்ளே பிரா போடாமல் டி-சர்ட் அணிந்து கொண்டு அவர் இறங்கி வந்த புகைப்படங்களும், காணொளிகளும் வைரலாகப் பரவின.

ஆனால், அதன் பிறகு சாமானியப் பெண்கள் மத்தியில் #NoBra இயக்கம் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தென் கொரியாவில் பெண்கள் சுதந்திரத்தில் நாட்டம் காட்டுவது இது தனிப்பட்ட நிகழ்வு அல்ல. 2018ல் ''மார்பில் இறுக்கமான உடைகளில் இருந்து விடுதலை,'' என்ற இயக்கம் தீவிரமடைந்தது.

பல பெண்கள் நீண்ட தலைமுடியை மொட்டை அடித்துக் கொண்டு, மேக்-அப் இல்லாமல் வெளியில் சென்றனர். அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

தென்கொரியாவில் உண்மைக்கு மாறான அழகு நிலைகளை உருவாக்கிக் கொள்வதற்கு மேக்-அப் மற்றும் தோல் பராமரிப்பில் பெண்கள் அதிக நேரம் செலவிடுதலுக்கு எதிராக இந்த முழக்கம் உருவானது.

தென் கொரிய யு டியூப் நட்சத்திரம் லினா பேயே Image caption பெண்களுக்கு ஆதரவாக ஒப்பனை செய்து கொள்ளாமல் தென்கொரிய யூ டியூப் நட்சத்திரம் லினா பேயே காணொளி வெளியிட்டதால், கொலை மிரட்டல்களை எதிர்கொண்டார்.

பிபிசியிடம் பேசிய பெண்களில் பலர், இந்த இரு இயக்கங்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறினர். சமூக ஊடகங்களில் இது பரவுவதைப் பார்த்தால், புதிய வகையிலான போராளித்துவம் உருவாகிறது என்பதன் அறிகுறி என்று தெரியும்.

'பார்வையால் வல்லுறவு'

தென் கொரியாவில் சமீபத்திய ஆண்டுகளில் ஆணாதிக்க கலாசாரத்துக்கு எதிராகவும், பாலியல் வன்முறைக்கு எதிராகவும், கழிவறை மற்றும் பொது இடங்களில் ஆண்கள் 'ரகசிய கேமரா' பொருத்துவதற்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

2018ல் நாட்டில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. ரகசிய கேமராவில் எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களை ஒழிக்க வலியுறுத்தி சியோல் நகர தெருக்களில் பத்தாயிரக்கணக்கான பெண்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

பிபிசியிடம் பேசிய தென்கொரிய பெண்களில் சிலர் இருவேறு கருத்துகளில் இருக்கின்றனர். பிரா அணியாமல் செல்வதை அவர்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால் பொது இடத்தில் தங்களால் அப்படி செல்ல முடியுமா என்ற நம்பிக்கை அவர்களிடம் இல்லை.

'பார்வையால் பாலியல் வல்லுறவு செய்தல்' என்ற போக்குதான் அவர்களுக்கு மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்கள் அளவுக்கு அதிகமாக உற்றுப் பார்ப்பது, அத்துமீறிய செயலாக உள்ளது என்று அவர்கள் கருதுகின்றனர்.

பிரா அணியாமல் செல்வதில் பெண்களின் அனுபவங்கள் குறித்து 'No Brablem' என்ற ஆவணப்படத்தை 2014ல் தயாரித்த குழுவில் இருந்தவர் 28 வயதான ஜியாங் சியாங்-இயுன்.

பல்கலைக்கழக்தில் இருந்தபோது, பிரா அணிவது இயல்பானது என்று நாம் ஏன் நினைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பத் தொடங்கியபோது, நண்பர்களுடன் சேர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டதாக சியோங் இயுன் தெரிவித்தார்.

தேர்வு செய்யும் உரிமை

இந்த விஷயத்தை பொதுவெளியில் நிறைய பெண்கள் விவாதிக்கிறார்கள் என்பது நல்லது தான் என்று அவர் நினைத்தாலும், டி-சர்ட்களில் மார்புக் காம்புகளை வெளிக் காட்டிக் கொள்வதை பெரும்பாலான பெண்கள் இன்னும் அவமானத்துக்குரிய செயலாகவே கருதுகிறார்கள் என்று நம்புகிறார்.

''தென்கொரியாவில் பிரா அணிவது இயல்பானதாகவே இன்னும் கருதப்படுகிறது என்பதை அவர்கள் அறிவார்கள். அதனால் பிரா அணிவதை அவர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள்,'' என்று அவர் கூறுகிறார்.

பார்க் ஐ-செயுல் என்ற 24 வயதான தென்கொரிய மாடல், பாடி பாசிடிவிட்டி இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். கடந்த ஆண்டு பிரா அணியாமல் தலைநகர் சியோலில் மூன்று நாட்கள் சென்று அதை காணொளியாகப் பதிவு செய்ய முடிவு செய்தார்.

அந்த காணொளியை பல்லாயிரம் பேர் பார்த்ததால் அது பிரபலம் ஆனது.

தன்னைப் பின்தொடர்பவர்களில் சிலர் தோள்பட்டையில் பிடிமானம் இல்லா மென்மையான கப் உள்ள பிராலெட்களை தேர்வு செய்வதாக அவர் கூறுகிறார்.

சித்தரிப்பு படம் Image caption # நோபிரா இயக்கம் சமூக ஊடகங்கள் மூலம் பரவியது.

``தோள்பட்டையில் பிடிமானம் இல்லாத பிரா அணிந்தால் மார்பகங்கள் தொங்கி, அசிங்கமாகத் தோன்றும் என்ற தவறான எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால், அந்த காணொளி எடுத்த பிறகு நான் பிரா அணிவது இல்லை. இப்போது பெரும்பாலான நாட்களில் நான் கோடையில் பிராலெட் அணிகிறேன், குளிர்காலங்களில் பிரா இல்லாமலே செல்கிறேன்,'' என்கிறார் அவர்.

டேயெகு நகரைச் சேர்ந்த 22 வயதான காட்சி வடிவமைப்பு மாணவி நாஹ்யெயுன் லீ -யும் இதனால் ஈர்க்கப் பட்டுள்ளார். கெயிம்யுங் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்புக்கு யிப்பீ என்ற முன்னணி பிராண்ட் உடன் தனது பயணத்தை தொடங்கினார். கடந்த மே மாதத்தில் இருந்து "Brassiere, it's okay, if you don't!" என்ற வாசகத்துடன் இந்த பிராண்ட்டில் காம்புகளை மறைக்கும் பட்டைகளை அவர் விற்பனை செய்து வருகிறார்.

பாடகி மற்றும் நடிகை சுல்லியின் புகைப்படங்களைப் பார்த்து தமக்கு உத்வேகம் கிடைத்திருப்பதாக ஜியோல்லனம்-டோ மாகாணத்தைச் சேர்ந்த டா-கியுங் என்ற 28 வயதுப் பெண் கூறுகிறார். அலுவலகத்தில் மேலதிகாரி அருகில் இருக்கும் போது பிரா அணிவதாகவும், ஆண் நண்பருடன் வெளியில் செல்லும் போது அணிவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

தோள்பட்டையில் பிடிமானம் இல்லாத பிரா அணிந்தால் மார்பகங்கள் தொங்கி, அசிங்கமாகத் தோன்றும் என்ற தவறான எண்ணம் எனக்கு இருந்தது.படத்தின் காப்புரிமை NAHYEUN LEE Image caption தோள்பட்டையில் பிடிமானம் இல்லாத பிரா அணிந்தால் மார்பகங்கள் தொங்கி, அசிங்கமாகத் தோன்றும் என்ற தவறான எண்ணம் இருந்தது.

''பிரா அணிவது உனக்கு சவுகரியமாக இல்லாவிட்டால், அதை அணிய வேண்டாம் என்று என் ஆண் நண்பர் கூறுகிறார்,'' என்று அவர் தெரிவித்தார்.

இதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்யும் உரிமை தங்களுக்கு இருப்பதாகப் பெண்கள் கூறுகின்றனர். ஆனால் பிரா அணியாமல் இருப்பது பற்றி ஆராய்ச்சிகள் என்ன கூறுகின்றன?

போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தில் பயோமெக்கானிக்ஸ் துறையில் மூத்த விரிவுரையாளராக இருப்பவர் டாக்டர் ஜென்னி புர்பேஜ். பிரா அணிவதால் அசவுகரியம் அல்லது வலியாக உணர்வது என்பது ''சரியாகப் பொருந்தாத பிரா அணிவதுடன் தொடர்புடைய'' பிரச்சனை என்று அவர் கூறுகிறார்.

''எங்களுடைய ஆராய்ச்சிக் குழு அறிந்த வரையில், மார்பகப் புற்றுநோய்க்கும், பிரா அணியும் பழக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக, நம்பகமான எந்த அறிவியல் ஆய்வு முடிவுகளும் வெளியிடப்படவில்லை,'' என்று அவர் தெரிவிக்கிறார்.

ஆனால் பிராவுக்கு எதிராக பெண்கள் இயக்கம் நடத்துவது இது முதல் முறை அல்ல.

1968ல் மிஸ் அமெரிக்கா அழகிப் போட்டி நடந்த இடத்துக்கு வெளியே நடந்த போராட்டத்துக்குப் பிறகு, ''பிரா எரிக்கும் பெண்ணியவாதிகள்'' என்ற வாசகம் உருவானது.

அப்போது பெண்கள் - பிரா உள்ளிட்ட பொருட்களை குப்பைத் தொட்டியில் வீசினர். அது பெண்களின் அடக்குமுறைக்கான அடையாளமாக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். இருந்தாலும் ஒருபோதும் உண்மையில் அதை அவர்கள் எரிக்கவில்லை.

ஆனால் அப்போதிருந்து பிரா எரிப்பு என்பது பெண்களின் விடுதலை இயக்கத்துடன் தொடர்புடையதாக இருந்து வருகிறது.

நோ பிரா இயக்கம்படத்தின் காப்புரிமை Getty Images Image caption "பெண்ணியவாதிகள் எரியும் பிராக்கள்" என்ற சொற்றொடர் 1960 களின் பிற்பகுதியில் தோன்றியது

இந்த ஆண்டு ஜூன் மாதம், சுவிட்சர்லாந்தில் ஆயிரக்கணக்கான பெண்கள், பணியில் இருந்து வெளியேறி பிராக்களை எரித்து போக்குவரத்தை நிறுத்தினர். நியாயமான சம்பளம், அதிக சமத்துவம் கோரியும், பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளுக்கு முடிவு கட்டக் கோரியும் போராட்டம் நடத்தியபோது அவர்கள் இந்தச் செயல்களில் இறங்கினர்.

அக்டோபர் 13 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்ட பிரா இல்லாத நாள் என்பது, உலகெங்கும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸில் அதிக பாலின சமத்துவம் கோரி இதற்காக ஒரு நாளை கடைபிடித்தனர்.

பிரா இல்லாத நாள் என்பது ''எங்களுடைய பெண்ணியத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது. ஒருபெண்ணாக யார் என்பதைக் காட்டுவதாக உள்ளது,'' என்று பத்திரிகையாளர் வனெஸ்ஸா அல்மெடா கூறியுள்ளார்.

''பெண்கள் எப்படி அடிமைத்தனத்தில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதன் அடையாளமாக பிரா இருக்கிறது,'' என்கிறார் அவர்.

ஆண்களும், பெண்களும் தங்கள் மார்புக் காம்புகளை வெளிக்காட்டும்போது சென்சார் செய்வதில் இரட்டை நிலைப்பாடு இருப்பதைக் குறிப்பிட்டு சமீபத்திய ஆண்டுகளில் பிரசாரங்கள் நடைபெறுகின்றன.

"ஃபிரி த நிப்பிள்" நடவடிக்கை பெண்களின் மார்பகங்களை தணிக்கை செய்வதை எதிர்க்கிறது.படத்தின் காப்புரிமை Getty Images

2014 டிசம்பரில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் Free the Nipple என்ற தலைப்பில் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக பெண்களின் மார்பகங்களை மையமாகக் கொண்ட கிரிமினல் செயல்பாடுகள் மற்றும் சென்சார் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயார் நகரில் இளம்பெண்கள் குழுவினர் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினர்.

இதனால் ''Free the Nipple'' பிரசாரம் உலகளாவிய செயல்பாடாக உருவெடுத்தது.

தென்கொரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட ''No Bra'' இயக்கம், பெண்களின் உடல்களை மையமாகக் கொண்டு உலகெங்கும் உள்ள கட்டுப்பாடுகள் மீது கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தென்கொரியாவில் இதில் பங்கேற்ற பெண்கள், கலாசார எதிர்பார்ப்புகள் காரணமாக இதற்கு தயக்கம் காட்டுவதாகக் கூறுகின்றனர். இருந்தாலும், ''தனிப்பட்ட சுதந்திரம்'' என்ற அளவில் இது அடிப்படை குறித்தது என்று பல பெண்கள் கூறியுள்ளனர்.

இந்த இயக்கம் தீவிரமடைந்து வரும் வேகத்தைப் பார்த்தால், பிரா அணியாமல் இருப்பது பிரச்சனையில்லை என்ற நிலை வரும் வரையில் இந்த ஹேஷ்டேக் வேகம் குறையாது என்று தெரிகிறது.

https://www.bbc.com/tamil/global-49567473

Share this post


Link to post
Share on other sites

நமக்கும்... "பிரா"  வாங்குற  செலவு மிச்சம். :grin:
இந்த இயக்கத்தின்... போராட்டம், விரைவில்... முழு வெற்றி பெற வாழ்த்துக்கள். :)

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

நமக்கும்... "பிரா"  வாங்குற  செலவு மிச்சம். :grin:
இந்த இயக்கத்தின்... போராட்டம், விரைவில்... முழு வெற்றி பெற வாழ்த்துக்கள். :)

வெள்ளிக்கிழமை தொடரலாம்😋

Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, தமிழ் சிறி said:

நமக்கும்... "பிரா"  வாங்குற  செலவு மிச்சம். :grin:
இந்த இயக்கத்தின்... போராட்டம், விரைவில்... முழு வெற்றி பெற வாழ்த்துக்கள். :)

 

1 hour ago, விசுகு said:

வெள்ளிக்கிழமை தொடரலாம்😋

tmpk1-thumb-3.jpg

எட்டிப்பார்த்துட்டு போவோம்  ஆடை சுதந்திரம் என்று சொல்லிட்டு போயிடுவம்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, தமிழ் சிறி said:

நமக்கும்... "பிரா"  வாங்குற  செலவு மிச்சம். :grin:
இந்த இயக்கத்தின்... போராட்டம், விரைவில்... முழு வெற்றி பெற வாழ்த்துக்கள். :)

நீங்களும் இப்ப இதெல்லாம் போட வெளிகிட்டியளே அண்ணை? 😂.

இந்த இயக்கம் வெற்றி பெற்று, அடுத்து மேலாடை இல்லாமல் போகும் போராட்டத்தை ஆரம்பிக்கும் அளவுக்கு இவர்கள் போராட்டம் வெற்றி பெற என் முழு ஆதரவு எப்போதும் உண்டு.

ஆனால் இது ஒண்டும் புதிசில்லையே? 1970 களிலேயே, வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய யாழ் பல்கலைகழக புத்தி சீவிகள் இதை முன்னெடுத்துள்ளாதாக கேள்வி.

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

உலகில் எங்கெங்கு மக்கள் போராட்டங்கள் இடம்பெறுகின்றதோ அவற்றுக்கெல்லாம் இந்த நிழலி ஆதரவு கொடுப்பான். கொரிய பெண்களின் போராட்டத்துக்கும் தன் இரு கண்களையும் அகலத் திறந்து ஆதரவு கொடுக்கின்றான்.

இந்த மக்கள் போராட்டம் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு நகரங்களிலும், ஒவ்வொரு குக்கிராமங்களிலும் கூட வெடிக்கட்டும். பிரா என்ற ஒரு ஆடையே உலகில் இருந்து ஒழியட்டும்.

வெற்றி நமதே!

 • Like 2
 • Thanks 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
Quote

பிரா அணியாமல் இருப்பதை இயக்கமாக முன்னெடுக்கும் பெண்கள்

ஹா ஹா

Share this post


Link to post
Share on other sites
30 minutes ago, நிழலி said:

உலகில் எங்கெங்கு மக்கள் போராட்டங்கள் இடம்பெறுகின்றதோ அவற்றுக்கெல்லாம் இந்த நிழலி ஆதரவு கொடுப்பான். கொரிய பெண்களின் போராட்டத்துக்கும் தன் இரு கண்களையும் அகலத் திறந்து ஆதரவு கொடுக்கின்றான்.

இந்த மக்கள் போராட்டம் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு நகரங்களிலும், ஒவ்வொரு குக்கிராமங்களிலும் கூட வெடிக்கட்டும். பிரா என்ற ஒரு ஆடையே உலகில் இருந்து ஒழியட்டும்.

வெற்றி நமதே!

உங்களது இந்த வீர உரையை யாழ் கள உறுப்பினர்கள. அனைவரும் விண்அதிர கரகோசம் செய்து வரவேற்கிறார்கள். பொது எதிரிக்கு (பிரா) எதிராக யாழகளமே திரண்டிருப்பது மகிழ்ச்சி. 

 • Haha 3

Share this post


Link to post
Share on other sites

கொரிய பெண்கள் .... நமது தமிழ் பெண்களுக்கு ஓகே ...
நம்ம மலையாள மாந்திரீகள் எப்படி திரிவது?
வண்டியில் கட்டியது உங்கள் சொந்த மாடு என்றாலும் .... நாணயகயிறு போட்டு 
ஒரு கட்டுபாட்டுக்குள் வைத்திருந்தால்தானே பயணம் சீராக அமைந்து ஊர்போய் சேரலாம். 
ஒரு மாடு ஒரு பக்கம் இழுத்தால் .... வண்டி எங்கு போவது? 

Varsha-Pandey-White-Saree-Stills-Spicy-Photos-1.jpg

 

sathya_sai_movie_actress_hot_stills_010.jpg

Japanese companies turn bras into fuel

burn_bras_flickr_anemoneprojectors

The whole "feminists burn their bras" thing is kind of a canard, but now you can do it for real and for an equally good cause. Japanese lingerie manufacturers are collecting bras and recycling them into solid fuel.

It's been pretty successful, too:

Triumph has collected more than 200,000 bras since it began the program in 2009 and turned them into 14 tons of [refuse paper and plastic] fuel. Wacoal has collected more than 179,200 bras and produced 17.9 tons of the fuel.

Apparently Japanese women are powerfully bashful about the task of disposing of worn-out underclothes — which makes more sense when you know that many municipalities in Japan require you to put trash in a transparent bag and leave it at a public pick-up point. Women apparently feel weird about being all "HERE'S MY OLD BRA, WORLD," and who can blame them. 

The bra-recycling program spares them the embarrassment of throwing bras away, plus it recycles them into fuel to make more bras. It's the circle of bras. Ourobraros

Share this post


Link to post
Share on other sites

எனக்கு என்டால் இது பிடிக்கல்லே. என்னடப்பா இது.

இங்கு இலங்கையில நம்மட குடும்பப்பெண்கள் எங்கும் வெளியில் புறப்ப‌டும்போது, ட்ரெஸிங் ரூம்பில் கண்ணாடி முன் நின்று, சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருக்கும் தன் கணவனை,  "அப்பா இங்க‌ ஒருக்க வாங்க, இந்த பிரா கொக்கியை கொஞ்சம் சரிய போட்டு விடுங்கள், என்று கேட்கும் போது, ஓடி சென்று தொட்டு தடவி, பிரா கொக்கியை சரியாக பூட்டி விட்டு ஒரு அணைப்பு கொடுத்து விட்டு போகும் போது கிடைக்கும் சந்தோசம் / அன்பு எல்லாம் இல்லாமல் போகின்றதே. 

Share this post


Link to post
Share on other sites

அடிப்படையை ஆட்டம் காண வைக்கும் முயற்சி …..
எதுவுமே தெரிந்தும் தெரியாமலும் , ஊகங்களிற்கு இடம் கொடுத்தும் நிற்கும் பொது அதிலிருக்கும் இழுப்பும்ம்ம் கவர்ச்சியும்ம்ம்ம் சொல்லி மாளாது ।। இது ஏவாள் ஓடிப் போய் இலை பறித்து மறைத்ததிலேயே தொடங்கி விட்டது
இப்ப என்ன தம்பி தங்கை மார் புதிதாக …..

 

 

Share this post


Link to post
Share on other sites
20 hours ago, goshan_che said:

நீங்களும் இப்ப இதெல்லாம் போட வெளிகிட்டியளே அண்ணை? 😂.

இந்த இயக்கம் வெற்றி பெற்று, அடுத்து மேலாடை இல்லாமல் போகும் போராட்டத்தை ஆரம்பிக்கும் அளவுக்கு இவர்கள் போராட்டம் வெற்றி பெற என் முழு ஆதரவு எப்போதும் உண்டு.

ஆனால் இது ஒண்டும் புதிசில்லையே? 1970 களிலேயே, வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய யாழ் பல்கலைகழக புத்தி சீவிகள் இதை முன்னெடுத்துள்ளாதாக கேள்வி.

அட கடவுளே... கோசான், இதென்ன கோதாரியாய் கிடக்கு.  😮
நான்... என்னத்தையோ... நினைத்து, எழுத...
நீங்கள், அதற்கு... வேறு அர்த்தம் கற்பித்து விட்டீர்களே....  :grin:

டிஸ்கி:  என்ரை மனிசிக்கு, பிரா வேண்டுற செலவு இல்லை எனத் தான் சொல்ல வந்தேன் ஐயா.

டிஸ்கிக்கு டிஸ்கி: ஆண்களும்... கோவணம் கட்டக் கூடாது,  போன்ற போராட்டங்களை  நடத்தினால்....  எமக்கும், ஒரு விடிவு கிடைக்கும். 

இதற்காக... கோவணம் விற்கும் கடைகளின் முன்..  உண்ணாவிரதம் இருந்து,
மறியல் போராட்டம்  செய்யவும், தயாராக உள்ளேன். 

Edited by தமிழ் சிறி
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Tribal Beauties (Reprint on Paper - Unframed)

எங்கடை ஆச்சிமார் பிரா ஒண்டுமில்லாமல் சும்மா குறுக்குக்கட்டோடை தானே திரிஞ்சவை.அதையெல்லாம் பட்டிக்காடு எண்டு சொல்லிப்போட்டு இப்ப பிரா இல்லாட்டி நல்லதாம்...
அப்பு கோமணத்தோடை காட்சி தர....
ஆச்சி குறுக்குக்கட்டோடை குறுக்காலை மறுக்காலை திரிய....
குடும்பத்துக்கு ஒரு டசின் பிள்ளைச்செல்வங்கள்
அதெல்லாம் ஒரு காலம்

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, குமாரசாமி said:

Tribal Beauties (Reprint on Paper - Unframed)

எங்கடை ஆச்சிமார் பிரா ஒண்டுமில்லாமல் சும்மா குறுக்குக்கட்டோடை தானே திரிஞ்சவை.அதையெல்லாம் பட்டிக்காடு எண்டு சொல்லிப்போட்டு இப்ப பிரா இல்லாட்டி நல்லதாம்...
அப்பு கோமணத்தோடை காட்சி தர....
ஆச்சி குறுக்குக்கட்டோடை குறுக்காலை மறுக்காலை திரிய....
குடும்பத்துக்கு ஒரு டசின் பிள்ளைச்செல்வங்கள்
அதெல்லாம் ஒரு காலம்

அந்தக்கால அப்பச்சிமார் சொல்லுவார்கள் எட்டிக்கடந்தால் ஏழு பிள்ளை பெறுவோம் என இப்பெல்லாம்

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, குமாரசாமி said:

Tribal Beauties (Reprint on Paper - Unframed)

எங்கடை ஆச்சிமார் பிரா ஒண்டுமில்லாமல் சும்மா குறுக்குக்கட்டோடை தானே திரிஞ்சவை.அதையெல்லாம் பட்டிக்காடு எண்டு சொல்லிப்போட்டு இப்ப பிரா இல்லாட்டி நல்லதாம்...
அப்பு கோமணத்தோடை காட்சி தர....
ஆச்சி குறுக்குக்கட்டோடை குறுக்காலை மறுக்காலை திரிய....
குடும்பத்துக்கு ஒரு டசின் பிள்ளைச்செல்வங்கள்
அதெல்லாம் ஒரு காலம்

இதிலும் ஒரு மோசமான பின்கதை இருக்கிறது.

முன்பு பிரா போடும் வழக்கம் இருக்கவில்லை எனிலும் ரவிக்கை போடும் வழக்கம் இருந்திருக்கிறது.

ஆனால் ரவிக்கை போடும் உரிமை வெள்ளாளச் சாதி பெண்களுக்கு மட்டுமே.

ஏனைய சாதிப் பெண்கள் ஒன்றில் வெறுமனே முந்தானையால் கொசுவம் போல மேலுடம்பை மறைக்க வேண்டுமாம்.

சில ஊர்களில் வெள்ளாச் சாதியினர் வரும் போது, ஏனைய சாதி ஆண்கள் தலையில் துண்டையும், பெண்கள் முந்தானையையும் தளர்த்த வேண்டியதும் இருந்ததாம்.

மானிப்பாய் பொதுச்சந்தையிற்கு “ரவிக்கைச் சந்தை” என்பதும் ஒரு பெயர். முதலில் வியாபாரத்துக்கு வரும் பெண்களும் ரவிக்கை அணியத் தடை இல்லாமல் இருந்த ஒரே சந்தை என்பதால் வந்த காரணப் பெயர்.

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, goshan_che said:

சில ஊர்களில் வெள்ளாச் சாதியினர் வரும் போது, ஏனைய சாதி ஆண்கள் தலையில் துண்டையும், பெண்கள் முந்தானையையும் தளர்த்த வேண்டியதும் இருந்ததாம்.

நான் ஊரில் இருக்கும் போது இந்த வழக்கம் இருந்தது. வெள்ளாளரை நைனார் என்றும் அழைப்பார்கள். ஆனால் பிரா இல்லாமல் சேலை கட்டும் பழக்கம் பரவலாக எல்லா சாதியினரிடமும் இருந்தது.
எனக்கு தெரிந்த ஆச்சிமார் எல்லாரும் ஒன்லி குறுக்குக்கட்டு ஸ்டைல் :cool:

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, goshan_che said:

 

மானிப்பாய் பொதுச்சந்தையிற்கு “ரவிக்கைச் சந்தை” என்பதும் ஒரு பெயர். முதலில் வியாபாரத்துக்கு வரும் பெண்களும் ரவிக்கை அணியத் தடை இல்லாமல் இருந்த ஒரே சந்தை என்பதால் வந்த காரணப் பெயர்.

 

 

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, putthan said:

 

நல்ல பதிவு புத்தர். ஒருகணம் சங்கானை கோட்டையில் இருந்து டச்சுத் துருப்புகள் மானிப்பாய் சந்தைக்கு ரோந்து வாற மாரி கற்பனை செய்து பார்த்தேன் 😂. ஒரே கிளுகிளுப்புத்தான்.

13 hours ago, குமாரசாமி said:

நான் ஊரில் இருக்கும் போது இந்த வழக்கம் இருந்தது. வெள்ளாளரை நைனார் என்றும் அழைப்பார்கள். ஆனால் பிரா இல்லாமல் சேலை கட்டும் பழக்கம் பரவலாக எல்லா சாதியினரிடமும் இருந்தது.
எனக்கு தெரிந்த ஆச்சிமார் எல்லாரும் ஒன்லி குறுக்குக்கட்டு ஸ்டைல் :cool:

நீங்கள் இளந்தாரியெல்லே அண்ணை. நான் சொல்லுறது இப்ப 100 வருடத்துக்கு முன். அப்பெல்லாம் மேலாடை  ( நீங்கள் சொல்லும் குறுக்கு) அணியும் உரிமை குறித்த சாதியினருக்கு மட்டுமே.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • பெரியார்: புனிதங்களை சுட்டுப் பொசுக்கியவர் சுனில் கில்னானிவரலாற்றாசிரியர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க இந்தியாவில் உள்ள பெண்களையெல்லாம் சேர்ந்து ஒரு நாடாக கருதிக்கொள்வோம். இந்திய பெண்கள் குடியரசு என அதனை அழைப்போம். 60 கோடி பேரை கொண்டிருக்கும் அந்த நாடு, உலகின் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும். 2014ஆம் ஆண்டின் ஐ.நா. மனித உரிமைக் குறியீட்டு தரவரிசையின்படி அந்த நாடு மியான்மருக்கும், ருவாண்டாவுக்கும் இடையில் இருக்கும். இந்திய பெண்கள் குடியரசில் குழந்தைகள் சராசரியாக 3.2 ஆண்டுகளே பள்ளிக்குச் செல்வார்கள். கிட்டத்தட்ட மொசாம்பிக் நாட்டின் நிலைதான் இருக்கும். தனிநபர் வருவாயை வைத்துப் பார்த்தால் ஐவரி கோஸ்டும், பாபுவா நியூ கினியாவும் இந்த நாட்டிற்கு மேலே இருக்கும். 2000வது ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மும்மடங்காகப் பெருகியும் இந்திய பெண்களின் நிலை மேம்படவில்லை. உண்மையில் இந்தியப் பெண்களின் திறமையை இந்த அளவுக்கு நெருக்காத, சுதந்திரமான சூழலோடு ஒப்பிட வேண்டுமென்றால் அதற்கு ஒரு வெளிநாட்டைத் தேட வேண்டியதில்லை. தென்னிந்திய மாநிலங்களில் வளர்ச்சிக் குறியீடுகளும் சுதந்திரமும் வடஇந்திய மாநிலங்களைவிட நீண்ட காலமாகவே சிறப்பானதாக, வேறுபட்டதாக இருக்கிறது. வட இந்தியாவில் பெரும்பாலான பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் முடிந்துவிடுகிறது. தென்னிந்தியாவில் 15 சதவீதத்திற்கும் குறைவான பெண்களுக்கே 18 வயதுக்கு முன்பாக திருமணமாகிறது. இதன் விளைவாக பல வட இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டால் தென்னிந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் பாதிதான். பெண்களின் கல்வியறிவு, பணியிடத்தில் வேலை பார்க்கும் பெண்களின் சதவீதம் போன்றவையும் வட இந்தியாவோடு ஒப்பிட்டால் அதிகம். இந்தியாவின் முக்கியமான சமூக, பொருளாதார பிளவாக கருதப்படும் வட இந்திய - தென்னிந்திய பிளவுக்கு இந்த வேறுபாடுகளே முக்கியக் காரணம். சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்பாகப் பிறந்த, பள்ளிப் படிப்பை முடிக்காத ஈ. வி. ராமசாமி நாயக்கரும் இதற்கு ஒரு முக்கியக் காரணம். ராமசாமி நாயக்கர் இந்தியாவில் பிராமண எதிர்ப்புச் செயல்பாட்டாளராகவும் பகுத்தறிவுவாதியாகவும் சமரசங்களற்ற கடுமையான பேச்சாளராகவும் அறியப்பட்டவர். காந்தியின் காங்கிரசில் இணைந்தவர். ஆனால், பிறகு மகாத்மாவின் பெரும் எதிரியாக மாறியவர். 1920களின் மத்தியில் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிய ராமசாமி நாயக்கரை அவருடைய தொண்டர்கள் மகத்தான மனிதன் என்ற பொருள்படும் 'பெரியார்' என்ற சொல்லால் அழைத்தனர். மகத்தான ஆத்மா என்ற காந்தியைக் குறிக்கும் சொல்லுக்கு, பதில் சொல்லும்வகையில் இந்தச் சொல் உருவாக்கப்பட்டதாகச் சொல்லலாம். பெரியார் ஒருபோதும் தேர்தலில் நிற்கவில்லையென்றாலும் நவீன தமிழ் அரசியலில் ஒரு அழுத்தமான தாக்கத்தை அவர் ஏற்படுத்தியிருக்கிறார். இவருடைய இயக்கத்திலிருந்து தோன்றிய கட்சிகளே 1960களில் இருந்து தமிழ்நாட்டை ஆட்சி செய்கின்றன. தேசிய அளவிலும் தமிழ்மொழிக்கு ஆதரவான அவரது குரலும் இந்தி திணிப்பிற்கான அவரது எதிர்ப்பும் 1947க்குப் பிந்தைய இந்தியாவின் மொழி பன்மைத்துவம் குறித்த பார்வையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஜாதி குறித்த இவரது பார்வையே, இந்தியக் குடியரசின் ஆரம்ப நாட்களில் இடஒதுக்கீட்டிற்குக் காரணமாக அமைந்தது. குடும்பத்தில் ஆணே பெரியவன் என போற்றப்பட்ட தேசத்தில், அந்த காலகட்டத்தில் மிக வலுவாக பெண்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர் பெரியார். பெண் விடுதலையைப் பற்றி பேசும்போது ஆண்களிடம் பொதுவாகத் தென்படும், மேலாதிக்க உணர்வின்றி அதைச் செய்தார். தங்களைத் தியாகம் செய்யும் பெண்களை கற்புக்கரசிகளாகப் போற்றும் சமஸ்கிருத புராணங்களின் முட்டாள்தனத்தை பெரியார் கேலிசெய்தார். பெண்கள் கல்வி கற்பதையும் காதல் திருமணம் செய்வதையும் அந்தத் திருமணம் ஒத்துவரவில்லையென்றால் விவாகரத்து செய்வதையும் பெண்களுக்குச் சொத்துரிமை அளிப்பதையும் பெரியார் ஆதரித்தார். இதையெல்லாம்விட. பெண்களின் பாலியல் தேர்வையும் கருவுருதல் குறித்த உரிமையையும் அவர் ஆதரித்தார். உரிமைகள் தங்களுக்கு தானாக வழங்கப்படுமென பெண்கள் வெறுமனே காத்திருக்கக்கூடாது என்றார் பெரியார். யார் இந்தப் பெரியார்: அவர் விட்டுச் சென்ற செல்வம் என்ன? காஷ்மீர் விவகாரம்: பெரியாரும் அண்ணாவும் சொன்னது என்ன? பெண்களுக்கு விடுதலை வேண்டுமென்றால் ஆண்மை அழிய வேண்டுமென ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் பெரியார். 'எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதார்களுக்கு சமத்துவம் கிடைக்குமா என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாய்விட்டாலும் கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம்." என்கிறார் அவர். பழங்கால வீராங்கனைகள், சக்திவாய்ந்த பெண் தெய்வங்கள், குறைந்த மகப்பேறு விகிதம் ஆகியவை ஏற்கனவே இருந்த ஒரு பிராந்தியத்தில் பெரியார் தன் கருத்தை முன்வைத்தார். இவரது கருத்துகள் 20ஆம் நூற்றாண்டில் வட இந்திய மாநிலங்களுக்கும் தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையிலான பிளவை இன்னும் ஆழமாக்கின. முரட்டுத்தனமான இந்த சிலை உடைப்பாளரை, கடுமையான நாவன்மை உடையவரை பற்றி நான் மேலும் மேலும் வாசிக்கும்போது என் மனதில் ஒரு கேள்வி எழுகிறது: இந்தியாவின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற ஆளுமைகள் இருந்திருந்தால், இந்தியப் பெண்கள் குடியரசு இன்னும் சிறப்பாக இருந்திருக்குமல்லவா? 'கடவுள் இல்லை... கடவுள் இல்லை... கடவுள் இல்லவே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்... கடவுளை பரப்பியவன் அயோக்கியன்... கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!' என்ற முழக்கங்களோடுதான் தன் சுயமரியாதைக் கூட்டங்களைத் துவங்குவதை பெரியார் பல தசாப்தங்களுக்கும் மேலாக வழக்கமாகக் கொண்டிருந்தார். கறுப்புச் சட்டை அணிந்து, வழுக்கைத் தலையுடன் பராமரிக்கப்படாத தாடியுடன் உள்ள பெரியாரின் அருகில் ஒரு நாய் அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்றைப் பார்த்தேன். பிராமணர்கள் நாய் தூய்மையில்லாதது எனக் கருதுவதால் அதனை அவர் தன் அருகில் வைத்திருந்திருக்கக்கூடும். பல வழிகளில் பெரியார் தீவிரமாகப் பேசியவர் என்றாலும், மக்களுக்குப் புரியாத, குழப்பமான மொழியில் பேசியவரில்லை. மதம் மற்றும் ஜாதியில் துவங்கி பகுத்தறிவுக்குப் புறம்பான எல்லாவற்றையும் அவர் கண்டித்தார். படத்தின் காப்புரிமைARUNKUMARSUBASUNDARAM காந்தி பிறந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு பெரியார் பிறந்தார். சென்னை மாகாணத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்திருந்த நெசவுத் தொழிலுக்குப் பேர்போன ஈரோட்டில் வளர்ந்தார். வர்த்தகர்களும் விவசாயிகளும் அடங்கிய அவரது ஜாதி, ஜாதிப் படிநிலையின்படி ஒரு இடைநிலைச் ஜாதி. வர்த்தகரான அவருடைய தந்தை, சற்று வசதியானவர் என்பது அவருக்கு பாதுகாப்பாக அமைந்தது. நல்ல வீடு, பணியாளர்கள் என்ற சூழலில் வளர்ந்த அவரால், கலகக்காரராக இருக்க முடிந்தது ஆச்சரியமல்ல. ஆரம்ப காலத்தில் பெரியாரின் தந்தை, அவருக்கு சமஸ்கிருத பாணியிலான வாழ்க்கை முறையைக் கற்றுக்கொடுக்க பல சாதுக்களையும் பிராமண குருக்களையும் நியமித்தார். ஆனால், அவர்களை பெரியார் கேள்விகளால் துளைத்தெடுத்தார். அவர்கள் வீட்டிற்கு வருவதை நிறுத்திக்கொண்டனர். அவர்களுடைய போதனைகள் இளம் வயதுப் பெரியாரை வசீகரிக்கவில்லை. ஆனாலும் இந்துக்களின் புனித நகரான காசிக்கு யாத்திரை செல்லுமளவுக்கு பெரியார் இந்துவாகத்தான் இருந்தார். இங்கே நடந்த சம்பவங்கள் அவரது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தன. அதைப் பற்றி அவர் தொடர்ந்து குறிப்பிட்டுவந்தார். பிராமணர்களுக்கு தன்னுடைய தந்தை பெரும் விருந்தளித்ததை எதிர்த்து எப்படி காசிக்குப் போனார், அங்கிருந்த பண்டிதர்கள் காசு பிடுங்குவது எப்படி தனக்கு வெறுப்பை ஏற்படுத்தியது, பிராமணரல்லாதாரிடம் அவர்கள் எவ்வளவு வெறுப்புடன் நடந்துகொண்டார்கள் என்பதையெல்லாம் அவர் தொடர்ந்து சொல்லிவந்தார். அவருடைய ஜாதியின் காரணமாக காசியிலிருந்த கடைகள் எதிலுமே அவருக்கு உணவு கிடைக்கவில்லை. ஒரு தருணத்தில் இறந்தவருக்காகப் படைக்கப்பட்ட இலையில் எஞ்சியிருந்தை உண்டு, பசியைத் தீர்த்துக்கொண்டார். பெரியார், அண்ணா பெயர்கள் மீண்டும் ஓங்கி ஒலிப்பதற்குக் காரணம் என்ன? அண்ணாவும் பெரியாரும் பிரிய மணியம்மைதான் காரணமா? எல்லோரும் கருதுவதைப்போல, இந்த அனுபவங்கள் உடனடியாக அவரது வாழ்வை மாற்றிவிடவில்லை. ஆனால், பிராமணர்களுக்கு எதிராக சிறிய நெருப்பொன்று அவருக்குள் பற்றி எரிய ஆரம்பித்தது. அந்த வயதில்தான் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தார். சுயமாகக் கற்க ஆரம்பித்தார். இந்த காலகட்டத்தில் நடந்த ஒரு முக்கியான நிகழ்வை கேம்பிரிட்ஜைச் சேர்ந்த தென்னிந்திய வரலாற்றாசிரியரான டேவிட் வாஷ்ப்ரூக் சுட்டிக்காட்டுகிறார். அதாவது, 1880களிலிருந்தே சென்னையிலிருந்த அறிவுஜீவிகள் இந்து நம்பிக்கைகளையும் சடங்குகளையும் நவீன அறிவியல் பார்வையுடன் இணைக்க முடியுமா என்று தீவிரமாக விவாதித்துவந்தனர். அந்த காலகட்டத்தில்தான் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிராக உருவெடுத்த அன்னி பெசன்டின் பிரம்மஞான இயக்கம் பிராமண இந்து மதத்திற்கு ஒரு அறிவியல் ரீதியான பார்வையைத் தந்தது. இது தென்னிந்தியாவில் இருந்த மேல் ஜாதி இந்துக்களுக்கு ஒரு வரமாக அமைந்தது. இனிமேல் அவர்கள் தங்களுடைய சடங்கு சம்பிரதாயங்களையும் ஜாதி அமைப்பையும் ஒரு நவீன பார்வையில் முன்வைத்து வாதாட முடியும். பெரியாரைப் பொறுத்தவரை, காப்பாற்றிக் கொள்ள அவருக்கென ஜாதிப் பெருமிதம் ஏதும் இல்லை. அதனால், பகுத்தறிவின் பாதையில் தீவிரமாக நடைபோட ஆரம்பித்தார் பெரியார். 'கடவுளோடு எனக்கு என்ன விரோதம்? அவரை நான் ஒரு முறைகூட சந்தித்ததில்லை என கேலியாக சொல்வார் பெரியார்' என்கிறார் பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிவரும் பேராசிரியர் ஏ.ஆர். வேங்கடாசலபதி. பெரியார் பகுத்தறிவுப் பாதையில் இயங்குவதற்கு அவருடைய பொருளாதாரச் சூழலும் உதவியது. பிரமணீயத்திற்கு எதிரான ஒரு மரபை நாம் ஏற்கனவே மகாவீரரிடமும் புத்தரிடமும் பார்த்திருக்கிறோம். அவர்கள், தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களில்லை. மாறாக, ஜாதி அடுக்கில் மேல்நிலையில் இருந்ததோடு, செல்வமும் கொண்டிருந்தவர்கள். இருந்தபோதும் இந்தியாவின் மிகப் பழமையான ஜாதிப் படிநிலையை எதிர்த்துப் போராட அவர்கள் முன்வந்தார்கள். தன் இருபதுகளிலும் முப்பதுகளிலும் பெரியார் தெருவில் இறங்கி கலகக்குரல் எழுப்புபவராக இல்லை. காசியிலிருந்து அவர் ஊர் திரும்பிய காலகட்டத்தில் உருவாகியிருந்த தேசிய அலையிலும் அவர் ஈர்க்கப்படவில்லை. மாறாக, திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய குடும்பத் தொழிலை விருத்திசெய்து, அதனை கோயம்புத்தூரின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமாக மாற்றினார். அவருடைய நிர்வாகத் திறமையின் காரணமாக 1918ல் ஈரோடு நகராட்சியின் தலைவராகவும் தேர்வுசெய்யப்பட்டார். கேரளாவில் உள்ள கோட்டயம் தற்போது இந்தியாவின் மிகவும் முற்போக்கான இடங்களில் ஒன்று. எழுத்தறிவு விகிதம் இங்கே 90 சதவீதத்திற்கு மேல் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பே இது புகையிலை இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த மாவட்டத்தின் வைக்கம் நகரில் மிகப் பழமையான சிவன் கோவில் ஒன்று ஊரின் மையத்தில் அமைந்திருக்கின்றது. இந்தக் கோவிலை நம்பூதிரி பிராமணர்கள் நிர்வகித்துவந்தனர். நாற்பதை நெருங்கிக் கொண்டிருந்த பெரியாரை அந்தக் கோவிலுக்குச் செல்லும் சாலைகள்தான் அரசியலை நோக்கி நகர்த்தின. இந்த மகாதேவர் கோவிலுக்குள் மட்டுமல்ல, அந்தக் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளிலும் தாழ்த்தப்பட்டோர் நுழையக்கூடாது என நம்பூதிரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இது பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துவந்தது. திருவிதாங்கூர் மாகாணத்தில் 1920களின் துவக்கத்திலேயே கோவில்களில் நுழைய எல்லா இந்துக்களையும் அனுமதிக்க வேண்டுமெனக் கோரி தாழ்த்தப்பட்டோர் இயக்கங்கள் போராடிவந்தன. இல்லாவிட்டால் தாங்கள் கிறிஸ்தவ மதத்திற்கோ, இஸ்லாத்திற்கோ மாறிவிடுவதாக அவர்கள் கூறினர். இந்த இயக்கத்தின் மையப்புள்ளியாக வைக்கம் கோவில் உருவெடுத்தது. 1924வாக்கில் காந்தி இதில் ஈடுபட ஆரம்பித்தார். தீண்டாமை குறித்த ஒரு போராட்டத்தை முதன்முதலாக அவர் துவங்கியது அப்போதுதான். படத்தின் காப்புரிமைTWITTER அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் உயர் பதவிகளில் பிராமணரல்லாத வெகு சில தமிழ்த் தலைவர்களே இருந்தது காங்கிரஸ் கட்சிக்கு சங்கடத்தை உருவாக்கியிருந்தது. பிராமணர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் கட்சி என்ற பெயரை உடைக்க, புதிய தலைவர்களை அந்தக் கட்சித் தேடிக்கொண்டிருந்தது. செல்வம்மிக்க, தன்னம்பிக்கைமிக்க பெரியார், வைக்கம் போராட்டத்திற்கு சற்று முன்பாக கட்சியில் சேர்க்கப்பட்டார். வைக்கம் போராட்டத்தை வழிநடத்த அப்போது காங்கிரசிற்கு ஒரு பிராமணரல்லாத தலைவர் தேவைப்பட்டார். பெரியார் சரியாக அந்தப் பாத்திரத்தில் பொருந்தினார். மிகுந்த நம்பிக்கையுடனேயே தேசிய அரசியலில் ஈடுபட்டார் பெரியார். தன்னைப் போலவே இடைநிலைச் சாதியைச் சேர்ந்த காந்தி, பிராமண ஆதிக்கத்தில் உள்ள காங்கிரஸ் தலைமைக்கு எதிராக இருப்பார் எனக் கருதினார் பெரியார். தேசியவாதத்தையும் ஜாதிச் சமத்துவ நிலையையும் இணைக்க முடியும் என அவர் கருதினார். ஆனால், வைக்கம் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளைத் திறந்துவிட்டால் போதும் என்பதுதான் காந்தியின் பார்வையாக இருந்தது. கோவிலுக்குள் அனைவரையும் அனுமதிக்க வேண்டுமென்ற போராட்டக்காரர்களின் கோரிக்கையை பெரியார் ஆதரித்தார். இந்தப் போராட்டத்தில் அவர் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் சிறையில் இருக்கும்போது காந்தி, நம்பூதிரி பிராமணர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தாழ்த்தப்பட்ட ஜாதியினர் 'அவர்களுக்கு விதிக்கப்பட்ட கர்மாவை அனுபவிக்கின்றனர்' என அங்கிருந்த பிராமணர்களில் ஒருவர் சொன்னார். காந்தி அதை ஏற்றுக்கொண்டார். ஆனாலும், "கடவுளின் இடத்தை எடுத்துக்கொண்டு, அவர்களது தண்டனையை அதிகரிக்க நாம் யார்?" என்று கேள்வியெழுப்பினார். 1925ல் திருவிதாங்கூரின் புதிய மகாராணி ஒரு ஏற்பாட்டிற்கு வந்தார். அதாவது, கோவிலைச் சுற்றியுள்ள சாலைகள் சிலவற்றில் எல்லோரும் செல்லலாம். ஆனால், பிரதான வாயிலுக்குள் பிராமணர்கள் மட்டுமே செல்லலாம் என்பதுதான் அந்த ஏற்பாடு. 1936வரை ஒடுக்கப்பட்ட ஜாதியினர் கோவிலுக்குள் நுழைந்து வழிபாடு நடத்த அனுமதிக்கப்படவில்லை. வைக்கத்தின் ஆச்சாரக் கோட்டையில் ஒரு ஓட்டையை ஏற்படுத்தியதால், காங்கிரசைப் பொறுத்தவரை வைக்கம் சத்தியாகிரகம் ஒருவகையில் வெற்றிதான். ஆனால், பெரியாரைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய ஏமாற்று வேலை. காந்தி, ஒடுக்கப்பட்ட ஜாதியினரை விற்றுவிட்டார் எனக் கருதினார் பெரியார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரசை விட்டு விலகினார். காந்தியை அவர் மன்னிக்கவேயில்லை. தன் குடும்பச் சொத்தைவைத்து சுய மரியாதை இயக்கத்தை துவங்கினார். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட திராவிட மொழிகளைப் பேசும் தென்னிந்தியாதான் அவரது களமாக இருந்தது. அவருடைய செயல் திட்டங்கள் பல சமயங்களில் காந்தியின் செயல்திட்டங்களுக்கு மாறானதாக இருந்தது. (தொடரும்) (கட்டுரையாளர் புகழ்பெற்ற இந்திய வரலாற்றாசிரியர். லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் இயக்குனர். அரசியல் துறை பேராசிரியர். நவீன இந்தியாவை உருவாக்கிய மகத்தான ஐம்பது ஆளுமைகளின் வரலாற்றைச் சொல்லும் இவருடைய Incarnations: India in 50 Lives புத்தகத்தில் பெரியார் குறித்து எழுதப்பட்ட, Sniper of the sacred Cow கட்டுரை பெரியாரின் பிறந்த நாளை ஒட்டி தமிழில் இங்கே வழங்கப்படுகிறது. Allen Lane ஆங்கில நூலை வெளியிட்டது. இந்தப் புத்தகத்தை தமிழில் சந்தியா பதிப்பகம் வெளியிடுகிறது. இந்தக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு: முரளிதரன் காசி விஸ்வநாதன்) https://www.bbc.com/tamil/india-49718507
  • தமிழீழத்தில் பெட்ரோல் இல்லாமலே குண்டு போட்ட இடமெல்லாம் பத்தி எரிந்ததாக வந்த கதை எல்லாம் வெறும் வதந்திகள் தானா?