Jump to content

'' இனியும் உன்னை விடுவோமோ...?? ''


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீயும் நானும் எதிரியடா- உனை

நீண்டு வளர விட மாட்டேண்டா

அல்லும் பகலும் அறுப்பேண்டா- உன்

அத்தி வாரம் உடைப்பேண்டா...

பாட்டன் ஆண்ட தேசமதை

பறிக்க நீயும் வந்தாயோ...??

வெட்டி பயல்கள் நாமோட - உன்னை

வெட்டி எறியாமல் விடுவேமோ...??

இல்லை நெஞ்சில் துணிவென்றோ

எண்ணியே நீயும் வந்தாயோ

அன்னியா உன்னை ஆண்டிடவே

அகில தமிழர் விடுவாரோ...??

கொள்ளி கட்டை ஏந்தியே- எங்கள்

கோட்டையை எரிக்க வந்தாயோ...??

இத்தனை துணிவு உனக்கென்றால்

இனியும் உன்னை விடுவோமோ...??

- வன்னி மைந்தன் -

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிகாலை ஆத்திரத்திற்கு காரணகர்ததா தெரியும்..

இன்றைய சினத்திற்கு என்ன காரணம்..

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அதிகாலை ஆத்திரத்திற்கு காரணகர்ததா தெரியும்..

இன்றைய சினத்திற்கு என்ன காரணம்..

காரணம் புரிந்த

கவியாரே கேட்டால்

இனியென்ன விளக்கம்

இங்கது உரைப்பேன்....???

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.