• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
தமிழ் சிறி

‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில், யாழ்ப்பாணத்துக்கு... புதிய ரயில் சேவை ஆரம்பம்.

Recommended Posts

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D.jpg

‘ஸ்ரீதேவி  இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவை ஆரம்பம்.

‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்திற்கான புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து இன்று மாலை 3.55 மணிக்கு புறப்படும் ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளது.

அத்துடன், குறித்த ரயில் இரவு 10.16 காங்கேசன்துறையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டுஇ யாழ்ப்பாணத்தை வந்தடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 4.05 புறப்பட்டு கொழும்பு கோட்டையினை காலை 10.24 மணிக்கு ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ வந்தடையவுள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள எஸ் 13 பவர் மூலம் ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ ரயில் இயக்கப்படவுள்ளது.

இதேவேளைஇ ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ சேவையுடன் யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவைகள் 7 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஸ்ரீதேவி-இன்டர்சிட்டி-எ/

 

 

Share this post


Link to post
Share on other sites

1980 களில் என்றால் இந்த தொடரூந்தில் ❤️ இடம் பிடிக்க எந்த விலை கொடுத்தாவது பல  நண்பர்கள்(நண்பர்களுக்கு துணையாக நானும்) முண்டியடித்திருப்பர். இப்போது.....😪

Edited by tulpen

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, tulpen said:

1980 களில் என்றால் இந்த தொடரூந்தில் ❤️ இடம் பிடிக்க பல நண்பர்கள் முண்டியடித்திருப்பர். இப்போது.....😪

Bildergebnis für ஸà¯à®°à¯à®¤à¯à®µà®¿

 

இப்ப, மட்டும் என்னவாம்.... ❓
சரோஜாதேவி,  சாவித்திரி,   ஸ்ரீதேவி   ரசிகர்கள் இன்னும் இருக்கின்றார்கள். :)

ஆனால் ஒன்று... முந்தி மாதிரி,  ஓடும்...  ரயிலில் பாய்ந்து,
 "சீட்"   பிடிக்க முடியாத,   "கொண்டிஷனில்"  இருந்தாலும்,  :grin:
அவர்கள்,  "ஸ்ரீதேவி ரயிலில்"  💓....  "ரிக்கற்"  பதிவு பண்ணி,  
பயணம் செய்து, தமது ஆசையை.... தீர்த்துக் கொள்வார்கள். :)

Edited by தமிழ் சிறி
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, தமிழ் சிறி said:

கொழும்பு கோட்டையிலிருந்து இன்று மாலை 3.55 மணிக்கு புறப்படும் ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளது.

அத்துடன், குறித்த ரயில் இரவு 10.16 காங்கேசன்துறையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டுஇ யாழ்ப்பாணத்தை வந்தடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 4.05 புறப்பட்டு கொழும்பு கோட்டையினை காலை 10.24 மணிக்கு ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ வந்தடையவுள்ளது.

ஏழு மணிக்கே வெறிச்சோடும் வடக்கு.எப்படி இதில் பயணம் செய்யப் போகிறார்கள்.?

அதிகாலை 3 மணிக்கு ரொம்ப கஸ்டப்படப் போறாங்க.

வழிப்பறி செய்ய நல்ல வசதி.

சிறிதேவி பேயாக அலையுது.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, tulpen said:

1980 களில் என்றால் இந்த தொடரூந்தில் ❤️ இடம் பிடிக்க எந்த விலை கொடுத்தாவது பல  நண்பர்கள்(நண்பர்களுக்கு துணையாக நானும்) முண்டியடித்திருப்பர். இப்போது.....😪

இப்போதும் முண்டியடிப்பார்கள் தமிழர்கள் ரசிகர்கள் அல்லவா. ஆனாலும் துபாய்க்கு பயணம் போறவர்கள் அதில் ஏறக்கூடாது அது சிறீதேவிக்குப் பிடிக்காது. 😲

Share this post


Link to post
Share on other sites
48 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏழு மணிக்கே வெறிச்சோடும் வடக்கு.எப்படி இதில் பயணம் செய்யப் போகிறார்கள்.?

அதிகாலை 3 மணிக்கு ரொம்ப கஸ்டப்படப் போறாங்க.

வழிப்பறி செய்ய நல்ல வசதி.

சிறிதேவி பேயாக அலையுது.

3 அல்லது 4 மணித்தியால வேலைக்காக கொழும்பு செல்கின்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த சேவை இருக்க போகின்றது. கொழும்பில் 4 மணி நேரத்தில் முடியக் கூடிய வேலைக்கு கூட ஒரு நாளுக்கு மேல் அங்கு தங்கி இருக்க வேண்டி இருக்கு. அல்லது ஒரு நாளில் வேலை முடித்து திரும்பி வருவதெனில் ரூபா1500 இற்கு மேல் கொடுத்து ஒழுங்கான வசதிகளும் இல்லாத பேரூந்தில் ஏறி (சாரதியின் திமிர் பேச்சுகளையும் அடாவடித்தனமான போக்குகளையும் சகிச்சுக் கொண்டு) அதிகாலை கொழும்பில் இறங்கி எங்காவது தங்கி மதியம் வேலையை பார்த்து  மீண்டும் இரவு பயணித்து அடுத்த நாள் அதிகாலையில் தான் யாழ்ப்பாணம் சேர வேண்டி இருக்கும். இதனால் வீண் அலைச்சலும், நித்திரை குறைவும் ஏற்படுவதுடன் மோசமான விபத்துகளுக்கும் ஆளாகின்றனர்.

இந்த சேவையின் மூலம் 4 மணிக்கு யாழ்ப்பாணத்தில் ஏறி 10:16 இற்கு கொழும்பில் இறங்கி அலுவலை முடித்துக் கொண்டு 3:45 இற்கு கொழும்புக்கு ஏறி இரவு 10:25 இற்கு ஊர் போய் இரவுச் சாப்பாட்டை வீட்டிலேயே முடிச்சுக் கொண்டு வந்த களைப்பு தீர படுக்க முடியும். 3:45 இனை தவர விட்டால் அடுத்த ரயில் 6 மணி அளவில் இருக்கு என்று நினைக்கின்றேன்.

கொழும்பு - யாழ் வீதிப் போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்து பல மடங்கு பாதுகாப்பானது.

  • Like 3

Share this post


Link to post
Share on other sites
42 minutes ago, நிழலி said:

இந்த சேவையின் மூலம் 4 மணிக்கு யாழ்ப்பாணத்தில் ஏறி 10:16 இற்கு கொழும்பில் இறங்கி அலுவலை முடித்துக் கொண்டு 3:45 இற்கு கொழும்புக்கு ஏறி இரவு 10:25 இற்கு ஊர் போய் இரவுச் சாப்பாட்டை வீட்டிலேயே முடிச்சுக் கொண்டு வந்த களைப்பு தீர படுக்க முடியும். 3:45 இனை தவர விட்டால் அடுத்த ரயில் 6 மணி அளவில் இருக்கு என்று நினைக்கின்றேன்.

இந்த தொடரூந்தில் ஏறவும் இறங்கவும் நிச்சயம் யாருடைய உதவி தேவை.

புதியவர்கள் தனியே போனால் அவலங்கள் காத்திருக்கும்.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த தொடரூந்தில் ஏறவும் இறங்கவும் நிச்சயம் யாருடைய உதவி தேவை.

புதியவர்கள் தனியே போனால் அவலங்கள் காத்திருக்கும்.

ஊருக்கு போகும் போது.... நமக்கென்று,  ஒரு சில உறவுகள் இருக்கும் தானே....
அவர்கள், எம்மை... ரயில் நிலையத்துக்கு வந்து, வரவேற்பார்கள் தானே...
அதுகும்... இல்லா விட்டால், ஊருக்கு போகும் ஆசையையே... வராது.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, நிழலி said:

கொழும்பு - யாழ் வீதிப் போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்து பல மடங்கு பாதுகாப்பானது.

உண்மைதான் பயணிகள் பாதுகாப்பு அதிகரிக்கும். ஆனால் பாதை கடப்பவர்களின் பாதுகாப்பு...??? முதலில் பாதுகாப்பான கடவைகளை நிர்மாணித்துவிட்டு எத்தனை ரயில்களை வேண்டுமானாலும் ஓட்டிச் சேவையை புரியட்டும். 

Share this post


Link to post
Share on other sites

சிறீதேவியின் விசிறி யாரோ.. சொறீலங்கா தொடருந்து துறையில் இருக்கினம் போல..

சிறீதேவியின் ரயில் பயணங்களில் இருந்து இந்த பயணத்தை எம்மவர்கள்.. இப்படி பாடி பாடி.. பயணிக்க வேண்டியான். அப்படியே.. இடையில... விபத்துகளில் மாணவர்களை... மாடுகளை பலியிட்டுப் பயணிக்க வேண்டியான்.

 

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ஈழப்பிரியன் said:

ஏழு மணிக்கே வெறிச்சோடும் வடக்கு.எப்படி இதில் பயணம் செய்யப் போகிறார்கள்.?

அதிகாலை 3 மணிக்கு ரொம்ப கஸ்டப்படப் போறாங்க.

வழிப்பறி செய்ய நல்ல வசதி.

சிறிதேவி பேயாக அலையுது.

நீங்கள் இதை பல தடைவை  இங்கை இதை எழுதுகிறீகள்.வடக்கில் எங்கை 7 மணிக்கு எல்லாம் வெறிச்சோடுது என்டு எனக்கு ஒருக்காச் சொல்லுங்கோ.போய்ப் பார்ப்போம்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, தமிழ் சிறி said:

‘ஸ்ரீதேவி  இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’

பெயரை  கேக்கவே ஒரே கிளுகிளுப்பாய் கிடக்கு...tw_yum:
அது சரி ஏன் ரயிலுக்கு ஸ்ரீதேவி எண்டு பெயர் வைச்சவங்கள்?
ஸ்ரீலங்கா தேவியாய் இருக்குமோ?

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் இதை பல தடைவை  இங்கை இதை எழுதுகிறீகள்.வடக்கில் எங்கை 7 மணிக்கு எல்லாம் வெறிச்சோடுது என்டு எனக்கு ஒருக்காச் சொல்லுங்கோ.போய்ப் பார்ப்போம்.

இப்படி கற்பனை கதைகளை கட்டி விடுவதில் எம்மவர் வல்லவர்.

41 minutes ago, குமாரசாமி said:

பெயரை  கேக்கவே ஒரே கிளுகிளுப்பாய் கிடக்கு...tw_yum:
அது சரி ஏன் ரயிலுக்கு ஸ்ரீதேவி எண்டு பெயர் வைச்சவங்கள்?
ஸ்ரீலங்கா தேவியாய் இருக்குமோ?

உங்களுக்கு சிறீதேவி எல்லாம் சரி வராது வேண்டும் என்கறால் சரோஜாதேவி என்று ஒரு புது சேவை தொடங்கலாம் 😁😁😁

5 hours ago, Paanch said:

உண்மைதான் பயணிகள் பாதுகாப்பு அதிகரிக்கும். ஆனால் பாதை கடப்பவர்களின் பாதுகாப்பு...??? முதலில் பாதுகாப்பான கடவைகளை நிர்மாணித்துவிட்டு எத்தனை ரயில்களை வேண்டுமானாலும் ஓட்டிச் சேவையை புரியட்டும். 

ஒழுங்காக பார்த்து கடந்தால் ஒரு பிரச்சினையும் வராது.

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, nedukkalapoovan said:

சிறீதேவியின் விசிறி யாரோ.. சொறீலங்கா தொடருந்து துறையில் இருக்கினம் போல..

சிறீதேவியின் ரயில் பயணங்களில் இருந்து இந்த பயணத்தை எம்மவர்கள்.. இப்படி பாடி பாடி.. பயணிக்க வேண்டியான். அப்படியே.. இடையில... விபத்துகளில் மாணவர்களை... மாடுகளை பலியிட்டுப் பயணிக்க வேண்டியான்.

 

சிங்களவனுக்கு சொறிலங்காவாது இருக்கு; எங்களுக்கு ஒரு பரப்பு நிலம் கூட இல்லை.அதே போல் சொறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியை பார்க்கும் போது அது நீண்டகாலம் சொறிலங்காவாக இராது.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, குமாரசாமி said:

அது சரி ஏன் ரயிலுக்கு ஸ்ரீதேவி எண்டு பெயர் வைச்சவங்கள்?

அர்ஜுனா ரணதுங்கட கனவுக்கன்னியோ தெரியல?

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Dash said:

 

உங்களுக்கு சிறீதேவி எல்லாம் சரி வராது வேண்டும் என்கறால் சரோஜாதேவி என்று ஒரு புது சேவை தொடங்கலாம் 😁😁😁

 

ஏன் நாங்கள் திரிஷா ரயில்,நயன்தாரா ரயில் பற்றி சிந்திக்கக்கூடாது? 😎

Share this post


Link to post
Share on other sites

நான் சொறிலங்கன்ட ட்ரைன்ல ஒருக்கா போனபிறகு போறதில்ல. அதுவும் இடைல ஒருதரம் அந்தப் பயணமும் எப்பிடி இருக்கு என்டு தெரிஞ்சுகொள்ள தான்.

ஒரே குலுக்கம். வசதி இல்லாத சீட்கள். தடிங் புடிங் ஊஊ என்டு ஒரே சத்தம்.  
நிறையபேர் பெரிய பொதிகளை தலைக்கு மேல ரக்ல வைச்சுட்டு படுறபாட்டை பாக்க நிம்மதியும் போய்டும். இடைல ஏறுற / இறங்குற ஆக்களிட தொந்தரவுகள் எக்கச்சக்கம். நிறைய சிங்கள ராணுவக் காடையர்கள் கூட பயணிப்பது. இப்பிடி நிறைய பிரச்சினைகள்.

இரவு பஸ் பயணம் மிகமிக வசதியானது. சீட் வசதியானது. குலுக்கம் மிக குறைவு. சத்தம் மிக குறைவு. பொதிகள் பிரச்சினை இல்லை. இடைல ஏறுற / இறங்குற ஆக்களிட தொந்தரவுகள் இல்லை. 7-8 மணிநேர பயணத்துல 5 மணிநேரமாவது நிம்மதியா நித்திரை கொள்ளலாம். வசதியான இடத்துல ஏறி, வசதியான இடத்துல இறங்கலாம். எல்லாத்துக்கும் மேல முயற்சி உள்ள சில தமிழனின் பொருளாதாரத்தை மேம்படுத்த என்னாலான மிகச்சிறு பங்களிப்பு என்ற திருப்பதி. இந்த பஸ்களில் பணிபுரியும் உதவியாளர்கள் பெரும்பாலும் பக்குவமற்றவர்கள் என்ற குறைபாடு இருந்தாலும் என்ன செய்வது நமது சகோதரன் தானே என்டு மனதைத் தேத்திக்கொள்வதுண்டு.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

பெயரை  கேக்கவே ஒரே கிளுகிளுப்பாய் கிடக்கு...tw_yum:
அது சரி ஏன் ரயிலுக்கு ஸ்ரீதேவி எண்டு பெயர் வைச்சவங்கள்?
ஸ்ரீலங்கா தேவியாய் இருக்குமோ?

சில வேளை சிறிலங்கா தேவி என்றால் ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள் என நினைத்து அரசாங்கம் ஶ்ரீ தேவி என பெயரை வச்சிருக்கலாம் தமிழ்ர்களும் ஶ்ரீ தேவி என்றால் வாயையும் சூ...... தையும் அடைக்கலாம் என நினைச்சிருக்கும் போல .

ஆனால் ஶ்ரீதேவியில் பலர் குந்தி போகத்தான் போறார்கள் ஐ மீன் பயணம் செய்யத்தான் போகிறார்கள் இதுக்குள்ள கதை வேற

1 hour ago, Rajesh said:

நான் சொறிலங்கன்ட ட்ரைன்ல ஒருக்கா போனபிறகு போறதில்ல. அதுவும் இடைல ஒருதரம் அந்தப் பயணமும் எப்பிடி இருக்கு என்டு தெரிஞ்சுகொள்ள தான்.

ஒரே குலுக்கம். வசதி இல்லாத சீட்கள். தடிங் புடிங் ஊஊ என்டு ஒரே சத்தம்.  
நிறையபேர் பெரிய பொதிகளை தலைக்கு மேல ரக்ல வைச்சுட்டு படுறபாட்டை பாக்க நிம்மதியும் போய்டும். இடைல ஏறுற / இறங்குற ஆக்களிட தொந்தரவுகள் எக்கச்சக்கம். நிறைய சிங்கள ராணுவக் காடையர்கள் கூட பயணிப்பது. இப்பிடி நிறைய பிரச்சினைகள்.

இரவு பஸ் பயணம் மிகமிக வசதியானது. சீட் வசதியானது. குலுக்கம் மிக குறைவு. சத்தம் மிக குறைவு. பொதிகள் பிரச்சினை இல்லை. இடைல ஏறுற / இறங்குற ஆக்களிட தொந்தரவுகள் இல்லை. 7-8 மணிநேர பயணத்துல 5 மணிநேரமாவது நிம்மதியா நித்திரை கொள்ளலாம். வசதியான இடத்துல ஏறி, வசதியான இடத்துல இறங்கலாம். எல்லாத்துக்கும் மேல முயற்சி உள்ள சில தமிழனின் பொருளாதாரத்தை மேம்படுத்த என்னாலான மிகச்சிறு பங்களிப்பு என்ற திருப்பதி. இந்த பஸ்களில் பணிபுரியும் உதவியாளர்கள் பெரும்பாலும் பக்குவமற்றவர்கள் என்ற குறைபாடு இருந்தாலும் என்ன செய்வது நமது சகோதரன் தானே என்டு மனதைத் தேத்திக்கொள்வதுண்டு.

இதை பலர் ஏற்றுக்கொள்வார்கள் சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் தற்போது நடக்கும் விபத்துக்களால் சிலர் பஸ்ஸில் போவதை தவிர்த்தே வருகிறார்கள்  எப்போதும் போட்டி 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 9/5/2019 at 3:00 PM, சுவைப்பிரியன் said:

நீங்கள் இதை பல தடைவை  இங்கை இதை எழுதுகிறீகள்.வடக்கில் எங்கை 7 மணிக்கு எல்லாம் வெறிச்சோடுது என்டு எனக்கு ஒருக்காச் சொல்லுங்கோ.போய்ப் பார்ப்போம்.

சுவை நீங்க கனதூரம் போகத் தேவையில்லை.

நல்லூர் திருவிழாவையே பாருங்கள்.முன்னர் 8-9 மணிவரை நடந்த திருவிழா 6-7 மணியாகவே இன்னமும் இருக்கிறது.7.30க்கே இந்த இடம் அமைதியாகிறது.

முன்னர் 11 மணிவரை ஓடிய பேரூந்துகள் இன்றுவரை விரைவாகவே(எத்தனை மணியென்று தெரியவில்லை)சேவையை முடித்துக் கொள்கின்றன.

2017 இல் இருமாதங்களாக நின்ற போது ஏற்பட்ட அனுபவங்களே.

மற்றபடி எமது மக்கள் சந்தோசமாக இருந்தால் உங்களைப் போலவே எனக்கும் சந்தோசம்.

இந்த நிலையில் சிறிதேவி புகைவண்டி ஊர் அடங்கிய பின்பே வந்து போகிறது என்பதே எனது ஆதங்கம்.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ஈழப்பிரியன் said:

சுவை நீங்க கனதூரம் போகத் தேவையில்லை.

நல்லூர் திருவிழாவையே பாருங்கள்.முன்னர் 8-9 மணிவரை நடந்த திருவிழா 6-7 மணியாகவே இன்னமும் இருக்கிறது.7.30க்கே இந்த இடம் அமைதியாகிறது.

முன்னர் 11 மணிவரை ஓடிய பேரூந்துகள் இன்றுவரை விரைவாகவே(எத்தனை மணியென்று தெரியவில்லை)சேவையை முடித்துக் கொள்கின்றன.

2017 இல் இருமாதங்களாக நின்ற போது ஏற்பட்ட அனுபவங்களே.

மற்றபடி எமது மக்கள் சந்தோசமாக இருந்தால் உங்களைப் போலவே எனக்கும் சந்தோசம்.

இந்த நிலையில் சிறிதேவி புகைவண்டி ஊர் அடங்கிய பின்பே வந்து போகிறது என்பதே எனது ஆதங்கம்.

 

 

பொதுவாகவே நகரப் புறம் தவிர்ந்த ஏனைய பகுதியில் இருக்கும் எம்  ஊர் மக்கள் இரவு 8 மணிக்கு முன் இரவுச் சாப்பாட்டை முடிச்சுக் கொண்டு 10 மணிக்கு முதல் படுக்கப் போகும் வழக்கத்தைக் கொண்டவர்கள். இதற்கு முக்கிய காரணங்கள் அடுத்த நாள் விடிய பாடசாலைக்கு போக வேண்டும், வேலைக்கு போக வேண்டும், தோட்டங்களுக்கு போக வேண்டும், கோயிலுக்கு போக வேண்டும் மற்றும் இன்னபிற விடிய வேலைகளுக்காக.. ஆனால் நகர்புறத்தில் இவை எல்லாம் கொஞ்சம் தாமதமாகவே இடம்பெறும்.

நான் கடந்து 3 வருடங்களாக தொடர்ந்து ஊர் போகின்றபடியால் அங்குள்ள இன்றைய வழக்கங்களை கொஞ்சம் அதிகமாக நுனிப்புல் மேய்ந்து இருக்கின்றேன். அப்படி மேய்ந்ததில் இரவு 9 மணிக்கும் யாழ் நகரப் பகுதி உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டு இருந்ததை அவதானித்துள்ளேன்.  கொழும்பு - யாழ் பேரூந்து வண்டி சேவை கூட 9 மணிக்கு பின் தான் பயணிக்க தொடங்குகின்றது (பண்ணை வீதிக்கருகில் 7:30 இற்கே ஆரம்பித்து பின் யாழ் டவுனுக்கு வந்து அங்கிருக்கும் பயணிகளை ஏற்ற 9 மணிக்கும் மேலாகின்றது), அதுவரைக்கும் அனேகமான உணவு விடுதிகள் தொடக்கம் பலசரக்கு கடைகள் வரை திறந்து இருக்கின்றன. முச்சக்கர வண்டிகள் ஓடித் திரிகின்றன. மொபைல் போன்கள் திருத்தும் கடைகள் அப்ப தான் பூட்டத் தொடங்குகின்றன.

நான் யாழ்ப்பாணத்தில் கொத்து ரொட்டி வாங்க கடைக்கு போனது இரவு 8:30. சாராயக் கடையும் திறந்து இருந்தது (கொத்து சாப்பிட முதல் குடிக்க வேண்டும் அல்லவா), என்னை பார்த்து விட்டு சித்தியின் மகன போனது இரவு 10 மணிக்கு...

இப்படிச் சொல்வதால் அங்கு எந்த அச்சமும் அச்சுறுத்தல்களும் கள்ளர் பயமும் வாள்வெட்டு அபாயங்களும் இல்லை என்பதல்ல. எல்லாம் இருக்கின்றன். சனம் வீட்டு கேட்டினை 8 மணிக்கே பூட்ட தொடங்குகின்றனர்.. ஆனால் புலம்பெயர் தமிழ் மீடியாக்கள் ஊதிப் பெருப்பித்து காட்டும் பிம்பத்தை போல அல்ல யாழ்ப்பாணமும் அதனை சுற்றியுள்ள இடங்களும் (கிளிநொச்சியில் கூட இரவு 9 மணிவரைக்கும் உயிர்ப்புடன் இருப்பதாக அறிய முடிகின்றது).

இந்த வருடமும் ஊர் போக கிளம்புகின்றேன்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ஈழப்பிரியன் said:

சுவை நீங்க கனதூரம் போகத் தேவையில்லை.

நல்லூர் திருவிழாவையே பாருங்கள்.முன்னர் 8-9 மணிவரை நடந்த திருவிழா 6-7 மணியாகவே இன்னமும் இருக்கிறது.7.30க்கே இந்த இடம் அமைதியாகிறது.

முன்னர் 11 மணிவரை ஓடிய பேரூந்துகள் இன்றுவரை விரைவாகவே(எத்தனை மணியென்று தெரியவில்லை)சேவையை முடித்துக் கொள்கின்றன.

2017 இல் இருமாதங்களாக நின்ற போது ஏற்பட்ட அனுபவங்களே.

மற்றபடி எமது மக்கள் சந்தோசமாக இருந்தால் உங்களைப் போலவே எனக்கும் சந்தோசம்.

இந்த நிலையில் சிறிதேவி புகைவண்டி ஊர் அடங்கிய பின்பே வந்து போகிறது என்பதே எனது ஆதங்கம்.

ஐயா,

முன்னமும் “பட பஸ்” என்று அர்தசாமத்தில் ஓடும் பஸ் இருந்ததுதானே?

நாம் பலர் 24/7 வாழக்கைக்கு பழகி விட்டு, ஊருக்குப் போனதும் ஊர் ஏதோ 7 மணிக்கே அடங்கி விடுவது போல ஒரு பிரமை ஏற்படுகிறது.

ஊரில் இப்போதும் மக்கள் சூரியனை பின்பற்றியே பெரிதும் தமது அலுவல்களை செய்கிறார்கள். 8 மணிக்கு அநேகமாக எல்லா வீடுகளிலும் சாப்பாடு ஆகிவிடும். இதுவே வெளிநாட்டில் எண்டால் 10 மணி.

நைற் சிப்ட் என்பது அங்கே மிக அரிதானது, எனவே 8 மணிக்கு அங்கே ஊரடங்குவது வழமையே. 

ஆனால், திருவிழாக்கள், பார்டிகள், இரவுக்காட்சிகள் எல்லாமும் இருக்கிறன.

இரவில் பயணம் செய்பவர்கள் அநேகமாக முன்கூட்டியே வீடு திரும்பும் ஏற்பாட்டுடனே வருகிறார்கள். 

இந்த ரெயிலில் போவோர்கூட, நாவற்குழி வர, தெரிஞ்ச ஓட்டோக்கு அல்லது நண்பனுக்கு ஒரு கோல் கொடுப்பர் - அவர்கள் ஸ்டேசனில் வந்து ஏற்றிக் கொள்வர்.

ஆனால் நிழலி சொன்னது போல இந்த சேவை - நல்லதொரு அம்சமே.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இன்னொரு விடயம். 

நானறிந்த வரையில் வெளிநாடு வந்த எல்லோருமே செலவழிக்கும் வேகத்தை அதிகப்படுத்தி உள்ளோம். தேவையில்லாமல் டிவியை ஓட விடுவது, வாகனத்தை ஸ்டார்ட்டில் விடுவது, நடக்கும் தூரத்துக்கு வாகனம் எடுப்பது, மின் குமிழிகளை அநியாயமா எரிய விடுவது, பகலில் செய்ய கூடிய விடயங்களை ( பார்டி, சிறு நிகழ்வுகள்) இரவில் விளக்கொளியில் செய்வது இப்படி.

ஆனால், பல ஆடம்பரங்கள் வந்த பின்பும், நுண்கடன் தொல்லைகளுக்குள்ளும் மக்கள் பெரிதும் அங்கே இன்னமும் சிக்கனமாகவே வாழ்கிறார்கள். குறிப்பாக யாழில்.

திருமண வைபவங்கள், ரிசப்சன் கூட பகலில்தான். 

களவு இல்லை என்பதல்ல, ஆனால் அது ஒரு பூதாகாரமான பிரச்சினை அல்ல. 

மக்களின் இயல்பு நிலையே அப்படித்தான்.

அடுத்த முறை கிழக்குக்கு போனால், ஆடி அமாவாசை நேரம் மட்டகளப்புக்கு போங்கள்.

நகர், கல்லடி போன்ற இடங்களில் மாரி, காளி கோயில்கள் வருடாந்த பூசை, தீ மிதி என இரவிரவாக ஒரே அமர்களப்படும்.

அடுத்து மாமாங்க திருவிழா இராபவனி, கீரைப்புட்டு, கடைகள் என 2 கிழமை ஒரே கொண்டாட்டம்.

போன தடவை சூரன் போரன்று கசூரினா பீச்சில் இருந்து 7 மணிக்கு வெளிகிட்டேன், ஒவ்வொரு ஊரிலும் சூரனைப் பார்த்து, நண்பரின் சண்டிலிப்பாய் இல்லத்துக்கு வர 2 மணி நேரம் எடுத்தது. அவ்வளவு நெரிசல்.

Share this post


Link to post
Share on other sites
On 9/8/2019 at 2:47 PM, ஈழப்பிரியன் said:

சுவை நீங்க கனதூரம் போகத் தேவையில்லை.

நல்லூர் திருவிழாவையே பாருங்கள்.முன்னர் 8-9 மணிவரை நடந்த திருவிழா 6-7 மணியாகவே இன்னமும் இருக்கிறது.7.30க்கே இந்த இடம் அமைதியாகிறது.

முன்னர் 11 மணிவரை ஓடிய பேரூந்துகள் இன்றுவரை விரைவாகவே(எத்தனை மணியென்று தெரியவில்லை)சேவையை முடித்துக் கொள்கின்றன.

2017 இல் இருமாதங்களாக நின்ற போது ஏற்பட்ட அனுபவங்களே.

மற்றபடி எமது மக்கள் சந்தோசமாக இருந்தால் உங்களைப் போலவே எனக்கும் சந்தோசம்.

இந்த நிலையில் சிறிதேவி புகைவண்டி ஊர் அடங்கிய பின்பே வந்து போகிறது என்பதே எனது ஆதங்கம்.

நன்றி பிரியன் உங்கள் பதிலுக்கு.நான் வருடத்திற்க்கு 3 மாதம் மட்டில் ஊரில் நிற்ப்பவன்.அதனால் தான் உங்களின் கருத்து என்னை குடைந்து கொன்டிருந்தது.மற்றும் படி உங்களுடன் முரன்படும் நோக்கம் எனக்கு இல்லை. உங்களின் நிலைப்பாட்டுக்கு மேலை நிழழியும் கோசானும் பதில் கோடுத்திருக்கிறாகள்.அது தான எனது பதிலும்.மீண்டும் நன்றி.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • இந்த படத்தை ஏன் இந்த திரியில் தரவேற்ற முடியவில்லை..? 😢
    • மாட்டு தலைமை மன்னிக்கவேண்டும் மாற்று தலைமைகளுக்கிடையில் வேட்டியை உருவி அடிபாடு..! https://i.postimg.cc/YqmZN7d4/mj.png    போினவாதிகளுக்கு நன்மையளித்து தமிழ் மக்களை பிாிக்கும் செயற்பாட்டை மேற்கொள்வது நாங்களா ? தமிழ் தேசிய மக்கள் முன்னணியா ? இந்த சம்பவம் தற்செயலாக நடந்த ஒரு சம்பவமல்ல. ஒருவா் அல்லது பலாின் வழிநடத்தலில் நடக்கின்றது.அந்த சந்தேகம் எனக்கு உள்ளது. மேற்கண்டவாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மீது வட மாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஊடகவியலாளா் சந்திப்பு என தானே ஒரு அறிக்கையை எழுதி வெளியிட்டுள்ளாா். ஊடகவியலாளர்:- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நீங்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் தமிழ் மக்களை ஏமாற்றி முடக்குவதற்கு ஈ.பீ.ஆர்.எல்.எப். கட்சியை இணைந்துள்ளதாக கூறுகின்றனரே ? உங்கள் கருத்தென்ன ? பதில்:- யார் இந்தத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் ? அந்தப் பழைய தமிழ் காங்கிரஸ் சின்னத்தில் பயணிப்பவர்களைத் தானே நீங்கள் கூறுகின்றீர்கள் ? ஊடகவியலாளர்:- ஒம். பதில்:- அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியினர் தமது யாப்பை மாற்றி விட்டார்களா ? எனக்குத் தெரிந்தவரையில் ஒற்றையாட்சிக்குள் ஐம்பதுக்கு ஐம்பது என்றுதான் ஜீ.ஜீ. கூறிவந்தார். இப்போதைய முன்னணியினர் அதனை மாற்றிவிட்டார்களா ?அப்படியானால் என்னவென்று ? இப்பொழுது அவர்கள் சமஷ்டி என்று மாற்றியிருந்தால் ஜீ.ஜீ. தனது கட்சியில் இருந்த தந்தை செல்வாவிடம் மண்டியிட்டதாக அர்த்தமாகும். தனித்தமிழ் ஈழம் என்று மாற்றியிருந்தால் அவர் சி.சுந்தரலிங்கம், வி.நவரத்தினம் ஆகியோரின் கருத்துக்களை ஏற்றதாக முடியும். ஜீ.ஜீ. சிங்களவரிடம் மண்டியிட்டாலும் இன்னொரு தமிழரிடம் மண்டியிடமாட்டாரே.! எனக்குத் தெரிந்த வரையில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இன்று வரையில் ஒற்றையாட்சிக்கு உள்பட்ட ஒரு கட்சி தான்.! அவ்வாறான கட்சியின் சின்னத்தையும் பதிவையும் தொடர்ந்து பாவிக்கும் முன்னணியினர் எவ்வாறு மற்றவர்களை தமிழ் மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சிக்குள் முடக்க எத்தனிக்கின்றார்கள் என்று கூறலாம் ? நாங்கள் கேட்பது சமஷ்டி.இது எல்லோருக்குந் தெரிந்த விடயம். நாங்கள் ஒற்றையாட்சிக்குள் மக்களைக் கொண்டு செல்ல எத்தனிக்கின்றோம் என்றால் எமக்கும் மத்திய அரசுகளுக்கும் இடையில் ஏதோவொரு களவான இணக்கப்பாடு இருப்பதாகக் கூறுகின்றார்களா ? ஊடகவியலாளர்:- ஒம். அவ்வாறுதான் கூறுகின்றார்கள் ! பதில்:- சரி ! எங்களுக்கு அவ்வாறான உறவு இருப்பதானால் நாங்கள் தமிழ் மக்களிடையே ஒற்றுமையை உண்டு பண்ண எத்தனித்திருக்க மாட்டோம் அல்லவா ? ஊடகவியலாளர்:- விளங்கவில்லை.! பதில்:- அதாவது நாங்கள் மத்திய அரசுகளுடன் களவான உறவு வைத்திருப்பது உண்மையானால் நாங்கள் என்ன செய்வோம் ? எந்தத் தருணத்திலும் தமிழ் மக்களோ மக்கட் தலைவர்களோ ஒன்று சேர விடாது தடுப்போம் அல்லவா ? அதாவது தமிழ் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுவதால் மத்திய அரசுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பைத் தடுப்போம் அல்லவா ? ஊடகவியலாளர்:- ஒம். பதில்:- நாம் அப்படியொன்றும் செய்யவில்லையே ! இன்றும் நாங்கள் தமிழர் ஒற்றுமைக்காக கஜேந்திரகுமாரை எங்களுடன் சேருமாறுதானே கூறிவருகின்றோம் ? அவரின் மூன்று தலைமுறையினரைத் தெரிந்த என்னால் என் மகனுடன் இறுதிச் சட்டப் பரீட்சை செய்த மற்றும் என் நண்பர் தர்மராஜா தன் மகன் போல் அரவணைத்த கஜேந்திரகுமாரை விமர்சிப்பது எனக்கு சங்கடமாக இருக்கின்றது. ஆனால் உண்மைகளை வெளியிட வேண்டிய தருணம் வந்துவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை முதலில் 2009ல் இருந்து குலைத்தவர் யார் ? தமிழ் மக்கள் பேரவையின் ஒற்றுமையைக் குலைத்து அதன் முக்கியத்துவத்தை மழுங்கச் செய்தவர் யார் ? பல்கலைக்கழகத்தில் ஆறு கட்சிகள் சேர்ந்து தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஆவணப்படுத்த எத்தனித்தபோது அதன் ஒற்றுமையைக் குலைத்தது யார் ? காணாமற்போனோரின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து தமக்குள் ஒரு ஐக்கியத்தைத் தேடியபோது தம் கட்சிக்கென வேறு ஒரு அலகை உண்டு பண்ணி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை இரண்டு அணிகளாகப் பிரித்து அவர்கள் போராட்டத்தை திட்டமிட்டு மழுங்கடிப்பவர் யார் ? போரில் உயிர்   நீத்தவர்களுக்காக தமிழர் அனைவரும் உணர்வெழுச்சியுடன் பங்குகொள்ளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில்தாம் மட்டும் வேறான இடத்தில் தமது நிகழ்வை நிகழ்த்தி பிரிவினையை வளர்ப்போர் யார் ? ஈ.பீ.ஆர்.எல்.எப். உடன் கூட்டுச் சேருவதாகக் கூறி காலத்தைக்கடத்தி அவர்கள் கூட்டைச் சிதைத்தவர்கள் யார் ? எமது இரண்டாவது “எழுக தமிழ்” நிகழ்வை எப்படியாவது குலைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒற்றுமையைச் சிதைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியவர்கள் யார் ? தமது கொள்கை ஒற்றையாட்சியா, சமஷ்டியா, தனி நாடா என்பதை வெளிப்படுத்தாமல் ஒற்றையாட்சி காங்கிரஸ் சின்னத்தையும் கட்சியையும் தொடர்ந்து பாவித்து வருபவர்கள் யார் ? இந்தியா வழி நடத்துகின்றது என்று மற்றக் கட்சிகளை கண்டித்துக் கொண்டு இரவில் ஜெட் விங்ஸில் சீனப் பிரதிநிதிகளைக் களவாகக் கண்டு வந்தவர்கள் யார் ? கோத்தாபய பாதுகாப்பு செயலாளராக இருந்த போது தமது சகோதரனை விடுவிக்க கோத்தாபயவுடன் களவான ஒப்பந்தங்களில் ஈடுபட்டவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் ? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் விரக்தி கொண்ட மக்களை அவர்கள் நேசித்த தமிழ் மக்கள் பேரவை மூலம் தமக்கு ஆதரவைப் பெற தமிழ் தேசிய பேரவை என்ற ஒன்றை உருவாக்கி தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவான மக்களின் வாக்குகளை 2018ல் ஏமாற்றிப் பெற்றவர்கள் யார் ? பேசுவது முன்னணி,தஞ்சமடைவது காங்கிரஸ் என்ற ரீதியில் தம்மை ஒற்றையாட்சிக் காங்கிரசினுள் இணைத்து வைத்து அரசுக்கு ஒற்றையாட்சி என்ற தலையையும் தமிழ் மக்களுக்கு இன்னொரு முகமாக வாலையும் விலாங்கு மீன் போலக் காட்டும் கட்சி எந்தக் கட்சி ? ஈ.பி.ஆர்.எல்.எப்.ஐ. வெளியேற்று இல்லையேல் நாங்கள் உங்கள் கூட்டில் இணையமாட்டோம் என்று எங்களுடன் இன்றுவரையில் அடம் பிடிப்பவர்கள் யார் ? தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெற்கில் சோரம் போன நிலையில் தமிழர் அரசியலை கொண்டு செல்ல வலுவானதொரு அரசியல் கூட்டு உருவாகும் போது தமிழ் தேசிய நலன் கருதி தாமும் கைகொடுத்து இணையாமல் மக்களுக்கு துரோகம் செய்பவர்கள் யார் ? ஆகவே தமிழ் மக்களின் ஒற்றுமையை இதுவரையில் திட்டம் போட்டுக் குலைத்து வருபவர்கள் யார் என்று நான் உங்களுக்குக் கூறத்தேவையில்லை. நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகின்றேன். தமிழ் மக்களின் பிளவு அல்லது ஒற்றுமையின்மை யாருக்கு நன்மை அளிக்கும் ? ஊடகவியலாளர்:- அரசுக்கும், பேரினவாதிகளுக்கும்! பதில்:- சரியாகச் சொன்னீர்கள் ! அரசுக்கும் பேரினவாதிகளுக்கும் நன்மை அளிப்பதற்காக இவ்வாறான செயல்களில் தொடர்ந்து ஒரு கட்சி ஈடுபட்டு வருகின்றதென்றால் தமிழ் மக்களை ஏமாற்றி வருவது நாங்களா ? அவர்களா ?. அத்துடன் இத்தனை தரம் தமிழ் மக்களைப் பிரித்துப் பிரித்து செயல்ப்பட்டமை தற்செயலாக நடந்த நிகழ்வுகளாக இருக்க முடியாது. யாரோ ஒருவரின் அல்லது பலரின் வழி நடத்தலில்த்தான் இவர்கள் இவ்வாறு நடக்கின்றார்கள் என்பது எனது சந்தேகம். எனது சந்தேகம் பிழையென்றால் இப்பொழுதாவது ஒற்றுமையை குலைக்கும், சிதைக்கும் சிந்தனைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒற்றுமையின் பேரில் எம்முடன் சேர்ந்து பயணிக்கச் சொல்லுங்கள் காங்கிரஸாரை. https://jaffnazone.com/news/15951
    • வட மாகாண முன்னாள் முதல்வர் க.வி. விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் கிளிநொச்சியில் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் சிறந்த சமூக மற்றும் கல்விச் சேவையாளருமான இரட்ணகுமாரை தேர்தலில் களமிறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் முக்கிய தளபதிகள், பொறுப்பாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்தமை மற்றும் தன்னலமற்ற கல்விச் சேவையினை ஆற்றியமையால், பெருமளவு மக்களின் ஆதரவை இவர் பெற்றவர் எனச் சிறப்பிக்கப்படுகின்றது. காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை போன்ற நிறுவனங்களிலும் இவர் கல்வி கற்பித்துள்ளார். மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சியைப் பெற்றதுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப்பட்டத்தையும் பெற்றுள்ளார். அத்துடன் கல்வித்துறையில் டிப்ளோமா பட்டத்தையும் முதுகல்விமாணி பட்டத்தையும் பெற்ற இவர், கல்வி கற்ற காலங்களில் மாணவத் தலைவராகவும் செயற்பட்டார். சிறந்த கணித ஆசிரியராகவும் நிர்வாகத்திறன் கொண்ட அதிபராகவும் வன்னியில் அறியப்பட்டுள்ளார். வவுனியா கண்ணாதிட்டி றோ.க.த.க பாடசாலையில் முதன் முதலில் ஆசிரியர் நியமனம் பெற்றதுடன், வவுனியா பாவைக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் அதிபராகவும் முதன் முதலில் பணியாற்றினார். தர்மக்கேணி அ.த.க பாடசாலை, கலைவெட்டித்திடல் நாகேஸ்வரா வித்தியாலயம், கிளி இராமநாதபுரம் மகா வித்தியாலயம், கிளிநொச்சி மத்திய கல்லூரிகளில் அதிபராக கடமையாற்றியதுடன் கிளிநொச்சி வலயத்தில் மாணவர் அபிவிருத்திப் பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். அத்துடன் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அதிபராகவும் பணியாற்றினார். ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி மற்றும் பிற்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களுக்கான உதவிகளை பெற்றுக் கொடுத்தல் என்பனவற்றில் ஈடுபாடு கொண்ட இவர், போர்க் காலத்தில் மக்களுக்கான இடர் தேவைகளை புரிவதிலும் முன் நின்று பங்களித்துள்ளார். 1996ஆம் ஆண்டு இடப்பெயர்வு காலத்திலும் காடுகளில் அல்லல்பட்ட மக்களுக்கு பல்வேறு தொண்டுகளை புரிந்து மக்களின் அபிமானத்தை பெற்றவர். முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் 2008ஆம் ஆண்டு துவக்கம், கிளிநொச்சி மத்திய கல்லூரியை இடம்பெயர் காலத்திலும் தொடர்ச்சியாக இயங்க வைத்தார். அத்துடன் இறுதிப்போர் வரையில் மக்களுடன் மக்களாக சென்று தொடர்ச்சியாக கல்விப் பணியையும் போரால் அவதிப்பட்ட மக்களுக்கு பல்வேறு தொண்டுகளையும் புரிந்தார். அத்துடன் 2009 போருக்குப் பின்னர், முள்வேலி முகாங்களில் தொடர்ந்து தங்கியிருந்து போரால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்காக சேவையை ஆற்றினார். அருணாசலம் முகாமின் 33ஆவது பாடசாலையின் அதிபராக பணியாற்றிய இவர், மீள்குடியேற்றத்தின்போது கிளிநொச்சி மத்திய கல்லூரியை மீளத் தொடக்கி தன் அரும்பணிகளைப் புரிந்தார். 2009 தொடக்கம் 2011 வரையான காலத்தில், கிளிநொச்சி மத்திய கல்லூரி உயர்தரத்தில் கணித விஞ்ஞானப் பிரிவுகளில் சிறந்த பெறுபேறுகளை எட்டும் சாதனைகளுக்கு ஏதுவான பணிகளையும் மேற்கொண்டார். போராளிகளுக்கும் இவருக்குமான நெருக்கத்தையும் போராட்ட காலத்தில் ஆற்றிய பங்களிப்புக்களாலும் அக் காலத்தில் அரசியல் ஆதிக்கம் செலுத்தியவர்களால் இவர் பதவி வழியாக நிந்திக்கப்பட்டதுடன் கிளிநொச்சியில் தமிழ் தேசியத்தை காப்பவர்கள் என கூறிக் கொள்பவர்களும் இவரது நிர்வாக மற்றும் தலைமைத்துவ ஆற்றலைக் கண்டு, அரசியல் பதவிகளை வழங்க நேரிடும் என அஞ்சி, இவர்மீது ஓர வஞ்சனைகளை மேற்கொண்டார்கள். போராட்டத்திற்கு பெரும் பங்களிப்பை நல்கி, தமிழ் தேசியம் மீது தன்னலமற்ற பற்றுக் கொண்டு, சிறந்த நிர்வாக மற்றும் தலைமைத்துவ ஆற்றல் கொண்ட திரு இரட்ணகுமாரை தமிழ் மக்கள் கூட்டணி தேர்தலில் இறக்க தீர்மானித்திருப்பது கிளிநொச்சியில் போட்டியிடவுள்ள ஏனைய நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. http://thamilkural.net/?p=28677
    • இணையத்தில் இல்லாத சமூக வலைதளங்களா... இப்பொடியாரு யாழ் தளத்தை உருவாக்கி செம்மொழியான நம் மொழிக்கு தனித்த மாண்பினை கொடுத்து உலக தமிழரை  ஒன்றினைத்து தமிழில் நற் கருத்துக்களை பகிர வாய்ப்பு தந்த நிர்கவாக பொறுப்பளார்களுக்கும் உறுப்பினர்களாக,வாசகர்களாக,கருத்துக்கள் (ம) தகவல்கள் பகிரும் உள்ளங்களுக்கும் இத்தளத்தை உருவாக்கிய உரிமத்தாருக்கும் நனி நன்றிகள் (ம) வாழ்த்துக்கள்....   வானளவு இத்தளம் அறியப்பட உறுதுணையாக வளர்த்துங்கள்..... அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம் நான் காணும் சமூகத்தால் தோன்றும் எண்ணங்களை கிருக்குபவன் சிந்தை உள்ளவரை என்னில் உண்டான எண்ணங்கள் இங்கு தலைப்பாகும் என் தலைப்பினை கொஞ்சம் விரும்பிவிர்களா ? மிஞ்சும் அளவு வெறுப்பிர்களா ? கஞ்சம் என நகைப்பிர்களா ? எதுவும் தெரியாது! எதர்ச்சியாக மனித உள்ளம் எதையும் வெளிக்காட்டும் இத்தளத்தில் என் பதிவின் தலைப்பும் எதிர்பாராமல் தலைக்காட்டும் என நம்பிக்கையுடன் தாழ்மையாக தெரிவித்துக்கொள்கிறான் கேளிக்கை செய்யாது கேள்வியாக என்னிடம் சிந்திக்க வையுங்கள்...
    • செம்மொழியான தமிழின் வளர்ச்சி மத்திய, மாநில அரசுகளால் அடியோடு அலட்சியப்படுத்துகின்றன, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில், மூத்த ஆய்வறிஞர் ஒருவர் கூட இல்லாதிருப்பதையும், புதிதாக நியமிக்கப்பட வேண்டிய 150 பணியிடங்கள் காலியாகவே இருப்பதையும் மாநில முதல்வர் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ”உலக நாடுகள் எங்கும் பயணம் செல்லும் பிரதமர், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரையும், உலகத்தையே உறவாகக் கொண்ட கணியன் பூங்குன்றனாரையும், மேற்கோள் காட்டுகிறார். மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வள்ளுவர் குறளைத் தேடித்தேடி மேற்கோள் காட்டுகிறார். இதைச் சொல்லி சிலாகித்துக் கொள்ளும் சிலர், 'பார்த்தீர்களா பாஜகவின் தமிழ்ப்பற்றை' என்று வாய் ஜாலம் காட்டுகிறார்கள். இந்தப் பற்று வெறும் சொல்லில் தான் இருக்கிறதே தவிர, செயலில் கிஞ்சிற்றும் இல்லை என்பதை நிரூபிக்கிறது ஒரு தகவல். இந்தியாவின் செம்மொழிப் பட்டியலில் உள்ள தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளை விட சமஸ்கிருதத்திற்கு மட்டும் 22 மடங்கு அதிகமாக மத்திய அரசு நிதி ஒதுக்கி இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தமிழ் மொழியையும் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் மத்திய பாஜக அரசு எந்த அளவுக்குப் புறக்கணிக்கிறது என்பதை இதன் மூலம் உணரமுடிகிறது. நாடாளுமன்றத்தில் சமஸ்கிருத வளர்ச்சி குறித்து பாஜக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல் அளித்துள்ள பதிலை படிக்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக டெல்லியில் தேசிய சம்ஸ்கிருத மையம் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதற்கு, 2019-20-ல் ரூ.231.15 கோடி, 2018-19-ல் ரூ.214.38 கோடி, 2017-18-ல் ரூ.198.31 கோடி என கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.643.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார். சமஸ்கிருதத்தை வளர்ப்பது தான் அவர்களது நோக்கமும் இலக்குமாக இருக்குமானால் அதனை நாம் குறைசொல்லவில்லை. இந்தியாவில் சமஸ்கிருதம் மட்டும் தான் இருக்கிறதா? பல கோடி மக்கள் பேசும் மொழிகள், அரசியல் சட்டம் அங்கீகரித்த மொழிகள் என எத்தனையோ மொழிகள் இந்தியாவில் இருக்க, புழக்கத்தில் வெகுவாகச் சுருங்கிவிட்ட சமஸ்கிருதத்துக்கு மட்டும் சிம்மாசனம் என்றால், வேறு மொழி பேசுபவர்களை இவர்கள் இந்தியர்களாக ஏன் மனிதர்களாகவே மதிக்கத் தயாராக இல்லையா? எப்போது பிறந்தது என்று கண்டறிய முடியாத பழமை வாய்ந்ததாம் எம் உயர் தனிச் செம்மொழி, தமிழ் மொழி. அச்செம்மொழி, இந்த மத்திய அரசால் எப்படி நடத்தப்படுகிறது? அதனை வளர்க்க எவ்வளவு தொகை ஒதுக்கி இருக்கிறார்கள்? அந்தக் கணக்கை பார்த்தால், தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் மலையளவு வேறுபாடு இருப்பதைக் காணலாம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு 2017-18-ல் ரூ.10.59 கோடி, 2018-19-ல் ரூ.4.65 கோடி, 2019-20-ல் ரூ.7.7 கோடி என கடந்த 3 ஆண்டுகளில் வெறும் ரூ. 22.94 மட்டுமே,ஏனோ தானோ ஒதுக்கீடாகச் செய்யப்பட்டிருக்கிறது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமானது தன்னாட்சி அதிகாரம் பெற்றது. இதன் நிர்வாகக் குழுவின் தலைவராக தமிழக முதலமைச்சர் இருக்கிறார். இப்படி ஒரு பதவி இருக்கிறது என்பது அவருக்குத் தெரியுமா? தெரிந்தும் தமிழைத் தாழ்த்தி வருவதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா? அல்லது 'சமஸ்கிருத வளர்ச்சிக்கான விருதையும் பெறுவதற்கான முயற்சியில் இருக்கிறாரா?' எனத் தெரியவில்லை. தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியையோ, ஜிஎஸ்டி வரி மூலமாக வர வேண்டிய தொகையையோ வாங்குவதற்கு துப்பு இல்லாமல் வெறுமனே விழாக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தாய்த் தமிழுக்காக நிதி ஒதுக்கீடு வாங்கித் தருவதில் முனைப்புக் காட்டுவார் என எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் தமிழைவிட முக்கியமான காரியங்கள் அவருக்கு ஏராளமாக இருக்கின்றன. தமிழை விட சமஸ்கிருதத்துக்கு 22 மடங்கு நிதி ஒதுக்கீடு செய்ததன் மூலம், மத்தியில் தமிழ் மொழிக்கு எதிரான அரசு ஆட்சியில் இருக்கிறது என்பதை உணர்ந்து , மொழி உரிமையைக் காப்பாற்றி, பெற வேண்டிய நியாயமான நிதி ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான முதுகெலும்பு இல்லாத மாநில அரசாக எடப்பாடி அரசு இருக்கிறது என்பதும் தெளிவாகிறது. செம்மொழியான தமிழின் வளர்ச்சி மத்திய, மாநில அரசுகளால் அடியோடு அலட்சியப் படுத்தப் பட்டிருப்பதை தெளிவாக உணர முடிகிறது. செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில், மூத்த ஆய்வறிஞர் ஒருவர் கூட இல்லாதிருப்பதையும், புதிதாக நியமிக்கப்பட வேண்டிய 150 பணியிடங்கள் காலியாகவே இருப்பதையும் இதுதொடர்பாக நாளேடுகளில் வெளியாகி உள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கலைஞரால் நமது தாய்மொழியாம் தமிழுக்குப் பெற்றுத் தரப்பட்ட செம்மொழித் தகுதியும், அதற்கான பயன்களும் மத்திய, மாநில அரசுகளின் ஓரவஞ்சனையால் சிதைக்கப்பட்டு வருவது தமிழுக்கும், தமிழர்களுக்கும் மட்டும் செய்யும் துரோகம் மட்டுமல்ல, பல கோடிக்கணக்கான உலகத்தமிழர் நெஞ்சில் வேல்பாய்ச்சும் விபரீதம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு உரிய நிதியை முழுமையாக ஒதுக்கி, ஆய்வறிஞர்களை நியமித்து, காலிப்பணியிடங்களை நிரப்பி, செம்மொழித் தமிழின் வளர்ச்சி செம்மையாக நடைபெற வழிவகுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். https://www.hindutamil.in/news/tamilnadu/540224-classical-development-rs-22-crores-allocated-to-tamils-in-3-years-rs-643-crores-allocated-to-sanskrit-is-this-the-bjp-s-lack-of-tamil-stalin-3.html