தமிழ் சிறி

‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில், யாழ்ப்பாணத்துக்கு... புதிய ரயில் சேவை ஆரம்பம்.

Recommended Posts

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D.jpg

‘ஸ்ரீதேவி  இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவை ஆரம்பம்.

‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்திற்கான புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து இன்று மாலை 3.55 மணிக்கு புறப்படும் ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளது.

அத்துடன், குறித்த ரயில் இரவு 10.16 காங்கேசன்துறையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டுஇ யாழ்ப்பாணத்தை வந்தடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 4.05 புறப்பட்டு கொழும்பு கோட்டையினை காலை 10.24 மணிக்கு ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ வந்தடையவுள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள எஸ் 13 பவர் மூலம் ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ ரயில் இயக்கப்படவுள்ளது.

இதேவேளைஇ ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ சேவையுடன் யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவைகள் 7 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஸ்ரீதேவி-இன்டர்சிட்டி-எ/

 

 

Share this post


Link to post
Share on other sites

1980 களில் என்றால் இந்த தொடரூந்தில் ❤️ இடம் பிடிக்க எந்த விலை கொடுத்தாவது பல  நண்பர்கள்(நண்பர்களுக்கு துணையாக நானும்) முண்டியடித்திருப்பர். இப்போது.....😪

Edited by tulpen

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, tulpen said:

1980 களில் என்றால் இந்த தொடரூந்தில் ❤️ இடம் பிடிக்க பல நண்பர்கள் முண்டியடித்திருப்பர். இப்போது.....😪

Bildergebnis für ஸà¯à®°à¯à®¤à¯à®µà®¿

 

இப்ப, மட்டும் என்னவாம்.... ❓
சரோஜாதேவி,  சாவித்திரி,   ஸ்ரீதேவி   ரசிகர்கள் இன்னும் இருக்கின்றார்கள். :)

ஆனால் ஒன்று... முந்தி மாதிரி,  ஓடும்...  ரயிலில் பாய்ந்து,
 "சீட்"   பிடிக்க முடியாத,   "கொண்டிஷனில்"  இருந்தாலும்,  :grin:
அவர்கள்,  "ஸ்ரீதேவி ரயிலில்"  💓....  "ரிக்கற்"  பதிவு பண்ணி,  
பயணம் செய்து, தமது ஆசையை.... தீர்த்துக் கொள்வார்கள். :)

Edited by தமிழ் சிறி
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, தமிழ் சிறி said:

கொழும்பு கோட்டையிலிருந்து இன்று மாலை 3.55 மணிக்கு புறப்படும் ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளது.

அத்துடன், குறித்த ரயில் இரவு 10.16 காங்கேசன்துறையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டுஇ யாழ்ப்பாணத்தை வந்தடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 4.05 புறப்பட்டு கொழும்பு கோட்டையினை காலை 10.24 மணிக்கு ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ வந்தடையவுள்ளது.

ஏழு மணிக்கே வெறிச்சோடும் வடக்கு.எப்படி இதில் பயணம் செய்யப் போகிறார்கள்.?

அதிகாலை 3 மணிக்கு ரொம்ப கஸ்டப்படப் போறாங்க.

வழிப்பறி செய்ய நல்ல வசதி.

சிறிதேவி பேயாக அலையுது.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, tulpen said:

1980 களில் என்றால் இந்த தொடரூந்தில் ❤️ இடம் பிடிக்க எந்த விலை கொடுத்தாவது பல  நண்பர்கள்(நண்பர்களுக்கு துணையாக நானும்) முண்டியடித்திருப்பர். இப்போது.....😪

இப்போதும் முண்டியடிப்பார்கள் தமிழர்கள் ரசிகர்கள் அல்லவா. ஆனாலும் துபாய்க்கு பயணம் போறவர்கள் அதில் ஏறக்கூடாது அது சிறீதேவிக்குப் பிடிக்காது. 😲

Share this post


Link to post
Share on other sites
48 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏழு மணிக்கே வெறிச்சோடும் வடக்கு.எப்படி இதில் பயணம் செய்யப் போகிறார்கள்.?

அதிகாலை 3 மணிக்கு ரொம்ப கஸ்டப்படப் போறாங்க.

வழிப்பறி செய்ய நல்ல வசதி.

சிறிதேவி பேயாக அலையுது.

3 அல்லது 4 மணித்தியால வேலைக்காக கொழும்பு செல்கின்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த சேவை இருக்க போகின்றது. கொழும்பில் 4 மணி நேரத்தில் முடியக் கூடிய வேலைக்கு கூட ஒரு நாளுக்கு மேல் அங்கு தங்கி இருக்க வேண்டி இருக்கு. அல்லது ஒரு நாளில் வேலை முடித்து திரும்பி வருவதெனில் ரூபா1500 இற்கு மேல் கொடுத்து ஒழுங்கான வசதிகளும் இல்லாத பேரூந்தில் ஏறி (சாரதியின் திமிர் பேச்சுகளையும் அடாவடித்தனமான போக்குகளையும் சகிச்சுக் கொண்டு) அதிகாலை கொழும்பில் இறங்கி எங்காவது தங்கி மதியம் வேலையை பார்த்து  மீண்டும் இரவு பயணித்து அடுத்த நாள் அதிகாலையில் தான் யாழ்ப்பாணம் சேர வேண்டி இருக்கும். இதனால் வீண் அலைச்சலும், நித்திரை குறைவும் ஏற்படுவதுடன் மோசமான விபத்துகளுக்கும் ஆளாகின்றனர்.

இந்த சேவையின் மூலம் 4 மணிக்கு யாழ்ப்பாணத்தில் ஏறி 10:16 இற்கு கொழும்பில் இறங்கி அலுவலை முடித்துக் கொண்டு 3:45 இற்கு கொழும்புக்கு ஏறி இரவு 10:25 இற்கு ஊர் போய் இரவுச் சாப்பாட்டை வீட்டிலேயே முடிச்சுக் கொண்டு வந்த களைப்பு தீர படுக்க முடியும். 3:45 இனை தவர விட்டால் அடுத்த ரயில் 6 மணி அளவில் இருக்கு என்று நினைக்கின்றேன்.

கொழும்பு - யாழ் வீதிப் போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்து பல மடங்கு பாதுகாப்பானது.

 • Like 3

Share this post


Link to post
Share on other sites
42 minutes ago, நிழலி said:

இந்த சேவையின் மூலம் 4 மணிக்கு யாழ்ப்பாணத்தில் ஏறி 10:16 இற்கு கொழும்பில் இறங்கி அலுவலை முடித்துக் கொண்டு 3:45 இற்கு கொழும்புக்கு ஏறி இரவு 10:25 இற்கு ஊர் போய் இரவுச் சாப்பாட்டை வீட்டிலேயே முடிச்சுக் கொண்டு வந்த களைப்பு தீர படுக்க முடியும். 3:45 இனை தவர விட்டால் அடுத்த ரயில் 6 மணி அளவில் இருக்கு என்று நினைக்கின்றேன்.

இந்த தொடரூந்தில் ஏறவும் இறங்கவும் நிச்சயம் யாருடைய உதவி தேவை.

புதியவர்கள் தனியே போனால் அவலங்கள் காத்திருக்கும்.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த தொடரூந்தில் ஏறவும் இறங்கவும் நிச்சயம் யாருடைய உதவி தேவை.

புதியவர்கள் தனியே போனால் அவலங்கள் காத்திருக்கும்.

ஊருக்கு போகும் போது.... நமக்கென்று,  ஒரு சில உறவுகள் இருக்கும் தானே....
அவர்கள், எம்மை... ரயில் நிலையத்துக்கு வந்து, வரவேற்பார்கள் தானே...
அதுகும்... இல்லா விட்டால், ஊருக்கு போகும் ஆசையையே... வராது.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, நிழலி said:

கொழும்பு - யாழ் வீதிப் போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்து பல மடங்கு பாதுகாப்பானது.

உண்மைதான் பயணிகள் பாதுகாப்பு அதிகரிக்கும். ஆனால் பாதை கடப்பவர்களின் பாதுகாப்பு...??? முதலில் பாதுகாப்பான கடவைகளை நிர்மாணித்துவிட்டு எத்தனை ரயில்களை வேண்டுமானாலும் ஓட்டிச் சேவையை புரியட்டும். 

Share this post


Link to post
Share on other sites

சிறீதேவியின் விசிறி யாரோ.. சொறீலங்கா தொடருந்து துறையில் இருக்கினம் போல..

சிறீதேவியின் ரயில் பயணங்களில் இருந்து இந்த பயணத்தை எம்மவர்கள்.. இப்படி பாடி பாடி.. பயணிக்க வேண்டியான். அப்படியே.. இடையில... விபத்துகளில் மாணவர்களை... மாடுகளை பலியிட்டுப் பயணிக்க வேண்டியான்.

 

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ஈழப்பிரியன் said:

ஏழு மணிக்கே வெறிச்சோடும் வடக்கு.எப்படி இதில் பயணம் செய்யப் போகிறார்கள்.?

அதிகாலை 3 மணிக்கு ரொம்ப கஸ்டப்படப் போறாங்க.

வழிப்பறி செய்ய நல்ல வசதி.

சிறிதேவி பேயாக அலையுது.

நீங்கள் இதை பல தடைவை  இங்கை இதை எழுதுகிறீகள்.வடக்கில் எங்கை 7 மணிக்கு எல்லாம் வெறிச்சோடுது என்டு எனக்கு ஒருக்காச் சொல்லுங்கோ.போய்ப் பார்ப்போம்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, தமிழ் சிறி said:

‘ஸ்ரீதேவி  இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’

பெயரை  கேக்கவே ஒரே கிளுகிளுப்பாய் கிடக்கு...tw_yum:
அது சரி ஏன் ரயிலுக்கு ஸ்ரீதேவி எண்டு பெயர் வைச்சவங்கள்?
ஸ்ரீலங்கா தேவியாய் இருக்குமோ?

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் இதை பல தடைவை  இங்கை இதை எழுதுகிறீகள்.வடக்கில் எங்கை 7 மணிக்கு எல்லாம் வெறிச்சோடுது என்டு எனக்கு ஒருக்காச் சொல்லுங்கோ.போய்ப் பார்ப்போம்.

இப்படி கற்பனை கதைகளை கட்டி விடுவதில் எம்மவர் வல்லவர்.

41 minutes ago, குமாரசாமி said:

பெயரை  கேக்கவே ஒரே கிளுகிளுப்பாய் கிடக்கு...tw_yum:
அது சரி ஏன் ரயிலுக்கு ஸ்ரீதேவி எண்டு பெயர் வைச்சவங்கள்?
ஸ்ரீலங்கா தேவியாய் இருக்குமோ?

உங்களுக்கு சிறீதேவி எல்லாம் சரி வராது வேண்டும் என்கறால் சரோஜாதேவி என்று ஒரு புது சேவை தொடங்கலாம் 😁😁😁

5 hours ago, Paanch said:

உண்மைதான் பயணிகள் பாதுகாப்பு அதிகரிக்கும். ஆனால் பாதை கடப்பவர்களின் பாதுகாப்பு...??? முதலில் பாதுகாப்பான கடவைகளை நிர்மாணித்துவிட்டு எத்தனை ரயில்களை வேண்டுமானாலும் ஓட்டிச் சேவையை புரியட்டும். 

ஒழுங்காக பார்த்து கடந்தால் ஒரு பிரச்சினையும் வராது.

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, nedukkalapoovan said:

சிறீதேவியின் விசிறி யாரோ.. சொறீலங்கா தொடருந்து துறையில் இருக்கினம் போல..

சிறீதேவியின் ரயில் பயணங்களில் இருந்து இந்த பயணத்தை எம்மவர்கள்.. இப்படி பாடி பாடி.. பயணிக்க வேண்டியான். அப்படியே.. இடையில... விபத்துகளில் மாணவர்களை... மாடுகளை பலியிட்டுப் பயணிக்க வேண்டியான்.

 

சிங்களவனுக்கு சொறிலங்காவாது இருக்கு; எங்களுக்கு ஒரு பரப்பு நிலம் கூட இல்லை.அதே போல் சொறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியை பார்க்கும் போது அது நீண்டகாலம் சொறிலங்காவாக இராது.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, குமாரசாமி said:

அது சரி ஏன் ரயிலுக்கு ஸ்ரீதேவி எண்டு பெயர் வைச்சவங்கள்?

அர்ஜுனா ரணதுங்கட கனவுக்கன்னியோ தெரியல?

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Dash said:

 

உங்களுக்கு சிறீதேவி எல்லாம் சரி வராது வேண்டும் என்கறால் சரோஜாதேவி என்று ஒரு புது சேவை தொடங்கலாம் 😁😁😁

 

ஏன் நாங்கள் திரிஷா ரயில்,நயன்தாரா ரயில் பற்றி சிந்திக்கக்கூடாது? 😎

Share this post


Link to post
Share on other sites

நான் சொறிலங்கன்ட ட்ரைன்ல ஒருக்கா போனபிறகு போறதில்ல. அதுவும் இடைல ஒருதரம் அந்தப் பயணமும் எப்பிடி இருக்கு என்டு தெரிஞ்சுகொள்ள தான்.

ஒரே குலுக்கம். வசதி இல்லாத சீட்கள். தடிங் புடிங் ஊஊ என்டு ஒரே சத்தம்.  
நிறையபேர் பெரிய பொதிகளை தலைக்கு மேல ரக்ல வைச்சுட்டு படுறபாட்டை பாக்க நிம்மதியும் போய்டும். இடைல ஏறுற / இறங்குற ஆக்களிட தொந்தரவுகள் எக்கச்சக்கம். நிறைய சிங்கள ராணுவக் காடையர்கள் கூட பயணிப்பது. இப்பிடி நிறைய பிரச்சினைகள்.

இரவு பஸ் பயணம் மிகமிக வசதியானது. சீட் வசதியானது. குலுக்கம் மிக குறைவு. சத்தம் மிக குறைவு. பொதிகள் பிரச்சினை இல்லை. இடைல ஏறுற / இறங்குற ஆக்களிட தொந்தரவுகள் இல்லை. 7-8 மணிநேர பயணத்துல 5 மணிநேரமாவது நிம்மதியா நித்திரை கொள்ளலாம். வசதியான இடத்துல ஏறி, வசதியான இடத்துல இறங்கலாம். எல்லாத்துக்கும் மேல முயற்சி உள்ள சில தமிழனின் பொருளாதாரத்தை மேம்படுத்த என்னாலான மிகச்சிறு பங்களிப்பு என்ற திருப்பதி. இந்த பஸ்களில் பணிபுரியும் உதவியாளர்கள் பெரும்பாலும் பக்குவமற்றவர்கள் என்ற குறைபாடு இருந்தாலும் என்ன செய்வது நமது சகோதரன் தானே என்டு மனதைத் தேத்திக்கொள்வதுண்டு.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

பெயரை  கேக்கவே ஒரே கிளுகிளுப்பாய் கிடக்கு...tw_yum:
அது சரி ஏன் ரயிலுக்கு ஸ்ரீதேவி எண்டு பெயர் வைச்சவங்கள்?
ஸ்ரீலங்கா தேவியாய் இருக்குமோ?

சில வேளை சிறிலங்கா தேவி என்றால் ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள் என நினைத்து அரசாங்கம் ஶ்ரீ தேவி என பெயரை வச்சிருக்கலாம் தமிழ்ர்களும் ஶ்ரீ தேவி என்றால் வாயையும் சூ...... தையும் அடைக்கலாம் என நினைச்சிருக்கும் போல .

ஆனால் ஶ்ரீதேவியில் பலர் குந்தி போகத்தான் போறார்கள் ஐ மீன் பயணம் செய்யத்தான் போகிறார்கள் இதுக்குள்ள கதை வேற

1 hour ago, Rajesh said:

நான் சொறிலங்கன்ட ட்ரைன்ல ஒருக்கா போனபிறகு போறதில்ல. அதுவும் இடைல ஒருதரம் அந்தப் பயணமும் எப்பிடி இருக்கு என்டு தெரிஞ்சுகொள்ள தான்.

ஒரே குலுக்கம். வசதி இல்லாத சீட்கள். தடிங் புடிங் ஊஊ என்டு ஒரே சத்தம்.  
நிறையபேர் பெரிய பொதிகளை தலைக்கு மேல ரக்ல வைச்சுட்டு படுறபாட்டை பாக்க நிம்மதியும் போய்டும். இடைல ஏறுற / இறங்குற ஆக்களிட தொந்தரவுகள் எக்கச்சக்கம். நிறைய சிங்கள ராணுவக் காடையர்கள் கூட பயணிப்பது. இப்பிடி நிறைய பிரச்சினைகள்.

இரவு பஸ் பயணம் மிகமிக வசதியானது. சீட் வசதியானது. குலுக்கம் மிக குறைவு. சத்தம் மிக குறைவு. பொதிகள் பிரச்சினை இல்லை. இடைல ஏறுற / இறங்குற ஆக்களிட தொந்தரவுகள் இல்லை. 7-8 மணிநேர பயணத்துல 5 மணிநேரமாவது நிம்மதியா நித்திரை கொள்ளலாம். வசதியான இடத்துல ஏறி, வசதியான இடத்துல இறங்கலாம். எல்லாத்துக்கும் மேல முயற்சி உள்ள சில தமிழனின் பொருளாதாரத்தை மேம்படுத்த என்னாலான மிகச்சிறு பங்களிப்பு என்ற திருப்பதி. இந்த பஸ்களில் பணிபுரியும் உதவியாளர்கள் பெரும்பாலும் பக்குவமற்றவர்கள் என்ற குறைபாடு இருந்தாலும் என்ன செய்வது நமது சகோதரன் தானே என்டு மனதைத் தேத்திக்கொள்வதுண்டு.

இதை பலர் ஏற்றுக்கொள்வார்கள் சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் தற்போது நடக்கும் விபத்துக்களால் சிலர் பஸ்ஸில் போவதை தவிர்த்தே வருகிறார்கள்  எப்போதும் போட்டி 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 9/5/2019 at 3:00 PM, சுவைப்பிரியன் said:

நீங்கள் இதை பல தடைவை  இங்கை இதை எழுதுகிறீகள்.வடக்கில் எங்கை 7 மணிக்கு எல்லாம் வெறிச்சோடுது என்டு எனக்கு ஒருக்காச் சொல்லுங்கோ.போய்ப் பார்ப்போம்.

சுவை நீங்க கனதூரம் போகத் தேவையில்லை.

நல்லூர் திருவிழாவையே பாருங்கள்.முன்னர் 8-9 மணிவரை நடந்த திருவிழா 6-7 மணியாகவே இன்னமும் இருக்கிறது.7.30க்கே இந்த இடம் அமைதியாகிறது.

முன்னர் 11 மணிவரை ஓடிய பேரூந்துகள் இன்றுவரை விரைவாகவே(எத்தனை மணியென்று தெரியவில்லை)சேவையை முடித்துக் கொள்கின்றன.

2017 இல் இருமாதங்களாக நின்ற போது ஏற்பட்ட அனுபவங்களே.

மற்றபடி எமது மக்கள் சந்தோசமாக இருந்தால் உங்களைப் போலவே எனக்கும் சந்தோசம்.

இந்த நிலையில் சிறிதேவி புகைவண்டி ஊர் அடங்கிய பின்பே வந்து போகிறது என்பதே எனது ஆதங்கம்.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ஈழப்பிரியன் said:

சுவை நீங்க கனதூரம் போகத் தேவையில்லை.

நல்லூர் திருவிழாவையே பாருங்கள்.முன்னர் 8-9 மணிவரை நடந்த திருவிழா 6-7 மணியாகவே இன்னமும் இருக்கிறது.7.30க்கே இந்த இடம் அமைதியாகிறது.

முன்னர் 11 மணிவரை ஓடிய பேரூந்துகள் இன்றுவரை விரைவாகவே(எத்தனை மணியென்று தெரியவில்லை)சேவையை முடித்துக் கொள்கின்றன.

2017 இல் இருமாதங்களாக நின்ற போது ஏற்பட்ட அனுபவங்களே.

மற்றபடி எமது மக்கள் சந்தோசமாக இருந்தால் உங்களைப் போலவே எனக்கும் சந்தோசம்.

இந்த நிலையில் சிறிதேவி புகைவண்டி ஊர் அடங்கிய பின்பே வந்து போகிறது என்பதே எனது ஆதங்கம்.

 

 

பொதுவாகவே நகரப் புறம் தவிர்ந்த ஏனைய பகுதியில் இருக்கும் எம்  ஊர் மக்கள் இரவு 8 மணிக்கு முன் இரவுச் சாப்பாட்டை முடிச்சுக் கொண்டு 10 மணிக்கு முதல் படுக்கப் போகும் வழக்கத்தைக் கொண்டவர்கள். இதற்கு முக்கிய காரணங்கள் அடுத்த நாள் விடிய பாடசாலைக்கு போக வேண்டும், வேலைக்கு போக வேண்டும், தோட்டங்களுக்கு போக வேண்டும், கோயிலுக்கு போக வேண்டும் மற்றும் இன்னபிற விடிய வேலைகளுக்காக.. ஆனால் நகர்புறத்தில் இவை எல்லாம் கொஞ்சம் தாமதமாகவே இடம்பெறும்.

நான் கடந்து 3 வருடங்களாக தொடர்ந்து ஊர் போகின்றபடியால் அங்குள்ள இன்றைய வழக்கங்களை கொஞ்சம் அதிகமாக நுனிப்புல் மேய்ந்து இருக்கின்றேன். அப்படி மேய்ந்ததில் இரவு 9 மணிக்கும் யாழ் நகரப் பகுதி உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டு இருந்ததை அவதானித்துள்ளேன்.  கொழும்பு - யாழ் பேரூந்து வண்டி சேவை கூட 9 மணிக்கு பின் தான் பயணிக்க தொடங்குகின்றது (பண்ணை வீதிக்கருகில் 7:30 இற்கே ஆரம்பித்து பின் யாழ் டவுனுக்கு வந்து அங்கிருக்கும் பயணிகளை ஏற்ற 9 மணிக்கும் மேலாகின்றது), அதுவரைக்கும் அனேகமான உணவு விடுதிகள் தொடக்கம் பலசரக்கு கடைகள் வரை திறந்து இருக்கின்றன. முச்சக்கர வண்டிகள் ஓடித் திரிகின்றன. மொபைல் போன்கள் திருத்தும் கடைகள் அப்ப தான் பூட்டத் தொடங்குகின்றன.

நான் யாழ்ப்பாணத்தில் கொத்து ரொட்டி வாங்க கடைக்கு போனது இரவு 8:30. சாராயக் கடையும் திறந்து இருந்தது (கொத்து சாப்பிட முதல் குடிக்க வேண்டும் அல்லவா), என்னை பார்த்து விட்டு சித்தியின் மகன போனது இரவு 10 மணிக்கு...

இப்படிச் சொல்வதால் அங்கு எந்த அச்சமும் அச்சுறுத்தல்களும் கள்ளர் பயமும் வாள்வெட்டு அபாயங்களும் இல்லை என்பதல்ல. எல்லாம் இருக்கின்றன். சனம் வீட்டு கேட்டினை 8 மணிக்கே பூட்ட தொடங்குகின்றனர்.. ஆனால் புலம்பெயர் தமிழ் மீடியாக்கள் ஊதிப் பெருப்பித்து காட்டும் பிம்பத்தை போல அல்ல யாழ்ப்பாணமும் அதனை சுற்றியுள்ள இடங்களும் (கிளிநொச்சியில் கூட இரவு 9 மணிவரைக்கும் உயிர்ப்புடன் இருப்பதாக அறிய முடிகின்றது).

இந்த வருடமும் ஊர் போக கிளம்புகின்றேன்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ஈழப்பிரியன் said:

சுவை நீங்க கனதூரம் போகத் தேவையில்லை.

நல்லூர் திருவிழாவையே பாருங்கள்.முன்னர் 8-9 மணிவரை நடந்த திருவிழா 6-7 மணியாகவே இன்னமும் இருக்கிறது.7.30க்கே இந்த இடம் அமைதியாகிறது.

முன்னர் 11 மணிவரை ஓடிய பேரூந்துகள் இன்றுவரை விரைவாகவே(எத்தனை மணியென்று தெரியவில்லை)சேவையை முடித்துக் கொள்கின்றன.

2017 இல் இருமாதங்களாக நின்ற போது ஏற்பட்ட அனுபவங்களே.

மற்றபடி எமது மக்கள் சந்தோசமாக இருந்தால் உங்களைப் போலவே எனக்கும் சந்தோசம்.

இந்த நிலையில் சிறிதேவி புகைவண்டி ஊர் அடங்கிய பின்பே வந்து போகிறது என்பதே எனது ஆதங்கம்.

ஐயா,

முன்னமும் “பட பஸ்” என்று அர்தசாமத்தில் ஓடும் பஸ் இருந்ததுதானே?

நாம் பலர் 24/7 வாழக்கைக்கு பழகி விட்டு, ஊருக்குப் போனதும் ஊர் ஏதோ 7 மணிக்கே அடங்கி விடுவது போல ஒரு பிரமை ஏற்படுகிறது.

ஊரில் இப்போதும் மக்கள் சூரியனை பின்பற்றியே பெரிதும் தமது அலுவல்களை செய்கிறார்கள். 8 மணிக்கு அநேகமாக எல்லா வீடுகளிலும் சாப்பாடு ஆகிவிடும். இதுவே வெளிநாட்டில் எண்டால் 10 மணி.

நைற் சிப்ட் என்பது அங்கே மிக அரிதானது, எனவே 8 மணிக்கு அங்கே ஊரடங்குவது வழமையே. 

ஆனால், திருவிழாக்கள், பார்டிகள், இரவுக்காட்சிகள் எல்லாமும் இருக்கிறன.

இரவில் பயணம் செய்பவர்கள் அநேகமாக முன்கூட்டியே வீடு திரும்பும் ஏற்பாட்டுடனே வருகிறார்கள். 

இந்த ரெயிலில் போவோர்கூட, நாவற்குழி வர, தெரிஞ்ச ஓட்டோக்கு அல்லது நண்பனுக்கு ஒரு கோல் கொடுப்பர் - அவர்கள் ஸ்டேசனில் வந்து ஏற்றிக் கொள்வர்.

ஆனால் நிழலி சொன்னது போல இந்த சேவை - நல்லதொரு அம்சமே.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இன்னொரு விடயம். 

நானறிந்த வரையில் வெளிநாடு வந்த எல்லோருமே செலவழிக்கும் வேகத்தை அதிகப்படுத்தி உள்ளோம். தேவையில்லாமல் டிவியை ஓட விடுவது, வாகனத்தை ஸ்டார்ட்டில் விடுவது, நடக்கும் தூரத்துக்கு வாகனம் எடுப்பது, மின் குமிழிகளை அநியாயமா எரிய விடுவது, பகலில் செய்ய கூடிய விடயங்களை ( பார்டி, சிறு நிகழ்வுகள்) இரவில் விளக்கொளியில் செய்வது இப்படி.

ஆனால், பல ஆடம்பரங்கள் வந்த பின்பும், நுண்கடன் தொல்லைகளுக்குள்ளும் மக்கள் பெரிதும் அங்கே இன்னமும் சிக்கனமாகவே வாழ்கிறார்கள். குறிப்பாக யாழில்.

திருமண வைபவங்கள், ரிசப்சன் கூட பகலில்தான். 

களவு இல்லை என்பதல்ல, ஆனால் அது ஒரு பூதாகாரமான பிரச்சினை அல்ல. 

மக்களின் இயல்பு நிலையே அப்படித்தான்.

அடுத்த முறை கிழக்குக்கு போனால், ஆடி அமாவாசை நேரம் மட்டகளப்புக்கு போங்கள்.

நகர், கல்லடி போன்ற இடங்களில் மாரி, காளி கோயில்கள் வருடாந்த பூசை, தீ மிதி என இரவிரவாக ஒரே அமர்களப்படும்.

அடுத்து மாமாங்க திருவிழா இராபவனி, கீரைப்புட்டு, கடைகள் என 2 கிழமை ஒரே கொண்டாட்டம்.

போன தடவை சூரன் போரன்று கசூரினா பீச்சில் இருந்து 7 மணிக்கு வெளிகிட்டேன், ஒவ்வொரு ஊரிலும் சூரனைப் பார்த்து, நண்பரின் சண்டிலிப்பாய் இல்லத்துக்கு வர 2 மணி நேரம் எடுத்தது. அவ்வளவு நெரிசல்.

Share this post


Link to post
Share on other sites
On 9/8/2019 at 2:47 PM, ஈழப்பிரியன் said:

சுவை நீங்க கனதூரம் போகத் தேவையில்லை.

நல்லூர் திருவிழாவையே பாருங்கள்.முன்னர் 8-9 மணிவரை நடந்த திருவிழா 6-7 மணியாகவே இன்னமும் இருக்கிறது.7.30க்கே இந்த இடம் அமைதியாகிறது.

முன்னர் 11 மணிவரை ஓடிய பேரூந்துகள் இன்றுவரை விரைவாகவே(எத்தனை மணியென்று தெரியவில்லை)சேவையை முடித்துக் கொள்கின்றன.

2017 இல் இருமாதங்களாக நின்ற போது ஏற்பட்ட அனுபவங்களே.

மற்றபடி எமது மக்கள் சந்தோசமாக இருந்தால் உங்களைப் போலவே எனக்கும் சந்தோசம்.

இந்த நிலையில் சிறிதேவி புகைவண்டி ஊர் அடங்கிய பின்பே வந்து போகிறது என்பதே எனது ஆதங்கம்.

நன்றி பிரியன் உங்கள் பதிலுக்கு.நான் வருடத்திற்க்கு 3 மாதம் மட்டில் ஊரில் நிற்ப்பவன்.அதனால் தான் உங்களின் கருத்து என்னை குடைந்து கொன்டிருந்தது.மற்றும் படி உங்களுடன் முரன்படும் நோக்கம் எனக்கு இல்லை. உங்களின் நிலைப்பாட்டுக்கு மேலை நிழழியும் கோசானும் பதில் கோடுத்திருக்கிறாகள்.அது தான எனது பதிலும்.மீண்டும் நன்றி.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • எம்.எம்.எம்.நூறுல்ஹக்  சாய்ந்தமருது - 05 நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத்தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான எட்டாவது தேர்தல் எதிர்வரும் 2019 நவம்பர் 16இல் நடைபெறவிருப்பது நாமறிந்ததே. இத்தேர்தலில் தீவு முழுவதிலிருந்தும் கடந்த 2018 ஆம் வருடத்திற்கான தேருநர் இடப்பின் பிரகாரம் 15,992,096 பேர் வாக்காளிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர்.   இது கடந்த 2018 பெப்ரவரி 10ஆந் திகதி நமது நாட்டில் அமைந்துள்ள 341 உள்ளுராட்சி மன்றங்களில் 340 சபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் நாடு பூராகவும் 15,742,371 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று காணப்பட்டனர். (அன்று நடைபெறாது தடுபட்டுப் போன எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் கடந்த 11 ஒக்டோபர் 2019 இல் நடைபெற்றது தெரிந்ததே). நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்தவர்களை விட 249,725 பேர் இம்முறை புதிதாக வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   கடந்த 2010 ஜனவரி 26 இல் நடைபெற்ற ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலில் மொத்த வாக்காளர்களில் 74.49 வீதமனோர் மாத்திரமே தமது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். அதுவும் யுத்த வெற்றியை அடுத்து நடைபெற்ற தேர்தலாக இது இருந்த நிலையில் என்பது நமது கவனங்களுக்குரியது. அது மட்டுமன்றி ஆட்சி மாற்றம் வேண்டும் குடும்ப ஆட்சியின் வலிமை அகற்றப்படல் வேண்டுமென பாரிய பரப்புரைக்கு மத்தியில் இலங்கையின் 7வது செயலாற்று அதிகாரமுடைய ஐனாதிபதித் தேர்தல் கடந்த 08 ஜனவரி 2015இல் நடைபெற்றது. அதில் கூட அன்று வாக்காளிக்கத் தகுதி பெற்றிருந்தவர்களில் 81.52 வீதமானவர்கள் தான் தமது வாக்கை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி இருப்பதையும் பார்க்கின்றோம். அதே நேரம் 2018இல் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில்கூட 80.20 வீதமானோர்தான் வாக்களித்திருந்தனர். ஆகவே இம்முறை நடைபெறவிருக்கின்ற எட்டாவது செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலில் 82 வீதத்திற்குள்ளதான் மொத்த வாக்குகள் பதிவு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.   எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதித் தேர்தலில் வெல்லப் போவது யார் என்பது குறித்து பலரும் பலவிதமான எதிர்வு கூறல்களை முன்வைத்து வருவதும் நாமறிந்ததே. எனது பார்வையின் அனுமானத்தையும் இது விடயத்தில் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் அடிப்படையாகும். மாறாக இது உறுதிப்படுத்தப்பட்ட கருத்துக்களின் ஆதாரப்படுத்தலாக எழுதப்படுகின்ற ஆக்கமல்ல. நான் அவதானித்தவற்றின் எடுகோலை முன்னிறுத்தி> கணித்து ஆற்றுப்படுத்தும் ஒரு கட்டுரையே இதுவாகும். சிலவேளை இதில் தெரிவிக்கப்படும் எதிர்வு கூறலுக்கு நேர் எதிரான முடிவுகளையோ> சரியொத்த பெறுபேறுகளையோ நாம் சந்திக்கவும் வாய்ப்பு இருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.   எது எவ்வாறு இருந்தாலும் நடைபெறவிருக்கின்ற எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரான சில பின்ணணிகளை நமது ஞாபகத்துக்கு கொண்டு வருவது இத்தேர்தலை நிறுத்துப் பார்ப்பதற்கு அணுகூலமாக அமைய முடியும். கடந்த 2010 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த 6,015,934 (57.88%) வாக்குகளைப் பெற்று, 1,842,749 அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். நமது நாட்டில் அமைந்துள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமையப் பெற்றிருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களும் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள நுவரெலியா ஆகிய மாவட்டமும் மொத்தம் 6 மாவட்டங்களில் தோல்வியுற்ற நிலையில்தான் இந்த வெற்றியை தன்வசமாக்கிக் கொண்டார். இது சிங்கள மக்களின் அதிகரித்த வசீகரிப்பு இவர் உட்படுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்தவர் என்ற அடையாளம்வழங்கிய மாபெரும் பரிசாகும். அதேநேரம் யுத்த காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை எதிர்த்து போட்டியிட்டு இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.   கடந்த 2010 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த பெற்ற மொத்த வாக்குகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து கிடைத்த மொத்த வாக்குகள் 345,221 ஆகும். இதனை அவர் பெற்ற மொத்த வாக்குகளிலிருந்து கழித்தால் 5,670,713 வாக்குகள் சிங்கள மக்களை பெருவாரியாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலும் இருந்து பெற்றதாகும். அதேநேரம் சரத் பொன்சேகா பெற்ற 4,173,185 மொத்த வாக்குகளிலிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து பெற்ற 684,944 வாக்குகளை கழித்தால் வரும் 3,448,241 வாக்குகளே சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டத்திலிருந்து அவரால் பெற முடிந்திருக்கிறது.   பொன்சேகா வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து மஹிந்தவை விட அரைப்பகுதிக்கு மேல் பெற்றிருந்தும் அவரால் வெல்ல முடியவில்லை. இது எதனை நமக்குச் செய்தியாகத் தருகிறது என்றால், இந்த 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்து சிறுபான்மை மக்களான தமிழர், முஸ்லிம்களின் அதிகரித்த ஆதரவு என்பது சிங்கள மக்களின் அதிகரித்த ஆதரவு இல்லாதபோது பயனில்லை என்பதைத்தான்.   இதனை அடுத்து 2010 ஏப்ரல் 8ஆந் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4,846,388 (60.33%) வாக்குகளைப் பெற்று மாவட்ட ரீதியாக 127 ஆசனங்களையும் தேசியப்பட்டியலில் இருந்து 17 ஆசனங்களுமாக மொத்தம் 144 நாடாளுமன்ற உறுப்பினர்களை உரித்தாக்கி கொன்டது. இதில் ஐ.தே.முன்னணி 2,357,057 (29.34%) வாக்குகளைப் பெற்று மாவட்ட ரீதியாக 51ம் தேசிய பட்டியலில் 9மாக மொத்தம் 60 பாராளுமன்ற உறுப்பினர்களையே பெற்றெடுக்க முடிந்திருக்கிறது. இது மஹிந்தவின் மக்கள் செல்வாக்குக்கு முன்னால் ஐக்கிய தேசிய முன்னணி மிகவும் பலவீனப்பட்டிருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது.   கடந்த 2015 ஜனவரி 8 ஆந் திகதி நடைபெற்ற நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு நடைபெற்ற 7 வது தேர்தலில் மைத்திரி பெற்ற மொத்த வாக்குகள் 6,217,162 (51.28%) ஆகும். இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து கிடைத்த 978,111 வாக்குகளை கழித்தால் ஏனைய சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 5,239,051 வாக்குகளையே மைத்திரியால் பெற முடிந்திருக்கிறது. அதேநேரம் மஹிந்த சிங்கள மக்களை பெருவாரியாகக் கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 5,544,490 வாக்குகளையும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து 223,600 வாக்குகளையும் பெற்று மொத்தமாக 5,768,090 (47.58%) வீதமான வாக்குகளை பெற்றிருக்கின்றார். ஆயின் ஒப்பீட்டளவில் மைத்திரியை விடவும் சிங்கள மக்களின் வசீக்கரிப்புக்கும் பற்றுக்கும் அதிக கவனத்தை பெற்றவராக மஹிந்த ஆகுகின்றார்.   யுத்த வெற்றிக்கு எத்தனை பேர் உரிமை கோரிய போதிலும் அது மஹிந்தவுக்கு எழுதிக் கொடுத்த உரிமை போன்றுதான் சிங்கள மக்களின் பெரும்பாலானவர்களின் மனோபாவம் அமைந்து காணப்படுகின்றது. இதனால்தான் ஏழாவது ஜனதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் எதிர் கொண்ட பொதுத் தேர்தலில் வீழ்ந்து விடாது நிமிர்ந்து நிற்கும் நிலையை எய்துகின்றார். அதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்குள் அவரது ஆளுமையும் செல்வாக்கும் தளர்ந்து விடாது ஓர் உறுதியான தடத்தைப் பெறுகின்றார். ஐக்கிய தேசிய முன்னணி 5,098,916 (45.66%) வீத வாக்குகளைப் பெற்று மொத்தமாக 106 ஆசனங்களை தன்வசமாக்கிய போதிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4,732,664 (42.38%) வீத வாக்குகளைப் பெற்று மொத்தமாக 95 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்கின்றது இதற்கு சார்பானவராக ஐனாதிபதி மைத்திரி இருந்தும் வெற்றி பெற்ற எம்.பிக்களில் பெரும் பகுதியினர் மஹிந்த அணியென பிரிந்தும் அவரோடு ஒட்டிக் கொண்டனர்.   இத்தேர்தலில்கூட சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 7 மாவட்டங்களை வென்று, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 10 மாவட்டங்களிலிருந்தும் பெற்ற வாக்குகள் 4,534,361 ஆகும். வடக்கு, கிழக்கில் கிடைத்த வாக்குகள் 198,303 சேர்த்தால் 4,732,664 ஆகும். அதேநேரம் ஐ.தே.முன்னணி வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள 17 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் பெற்ற வாக்குகள் 4,772,360 ஆகும். வடக்கு, கிழக்கில் கிடைத்த 326,548யையும் சேர்த்தால் மொத்தமாக 5,098.916 வாக்குகளாகும்.   இது ஐனாதிபதியாக மைத்திரி இருந்தும் அவர் பக்கம் சாய்ந்து கொள்ளாது மஹிந்த பக்கம் சார்பு நிலைப்பாட்டை எடுப்பது கூட அவரின் ஆளுமையாகவே அமைகின்றது. இந்தப் பலம் ஒரு தனிக் கட்சியை ஸ்தாபிக்கும் கட்டமைப்பை உருவாக்கும் பக்கம் திரும்புகின்றது. இதுவலிமையான காலூன்றலை மஹிந்தவிற்கு கைகோர்த்து இருப்பதையும், குறுகிய காலத்திற்குள் செல்வாக்குள்ள ஒரு கட்சியாக அதனை வளர்த்தெடுப்பதற்கு வாய்ப்பளித்து, உறுதி செய்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் அவர் பெற்றிருக்கின்றார்.   கடந்த 2018 பெப்ரவரி 10ஆந் திகதி நமது நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் 341 உள்ளுராட்சி மன்றங்களில் 340க்கு தேர்தல் நடைபெற்றது. காலி மாவட்டத்தில் அமைந்துள்ள எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனு தொடர்பிலான வழக்கின் காரணமாக இதற்கு மட்டும் அன்று தேர்தல் நடைபெறவில்லை. ஆயினும் அண்மைய நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக கடந்த 11 ஒக்டோபர் 2019இல் அதற்கான தேர்தலும் நடந்து முடிந்தது. இதன் பெறுபேறுகள் பின்வருமாறு காணப்படுகின்றது.   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 5,030,209 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து இக்கட்சிக்கு கிடைத்திருக்கும் 142,598 வாக்குகளை கழித்தால், இம்மாகாணங்களுக்கு வெளியே அமைந்திருக்கும் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 4,887,611 வாக்குகளை பெற்றிருக்கிறது. அதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் திருமலை மாவட்டம் உள்ளடங்களாக மொத்தம் 16 மாவட்டங்களை இக்கட்சி கைப்பற்றியது.   ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எந்த மாவட்டங்களையும் வெற்றி பெறாது 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 1,502,507 வாக்குகளைப் பெற்றது. இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களி லிருந்து இக்கட்சிகளுக்கு கிடைத்த 167,428 வாக்குகளை கழித்தால் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலிருந்தும் பெற்ற மொத்த வாக்குகள் 1,335,079 ஆகும்.   ஐக்கிய தேசிய கட்சி இத்தேர்தலில் மொத்தமாக பெற்ற 3,650,733 வாக்குகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் கிடைத்த 262,746 வாக்குகளைக் கழித்தால், ஏனைய 17 சிங்கள மக்களை அதிகரிப்பாக கொண்டிருக்கும் தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் கிடைத்த வாக்குகள் 3,387,987 ஆகும். நூவரெலியா, திகாமடுல்ல பதுளை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.   ஜே.வி.பி 713,367 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 18,246 பெற்ற வாக்குகளைக் கழித்தால் 695,121 வாக்குகளை சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலிருந்து பெற்றது.   உள்ளுராட்சி மன்றத் தேர்தலைப் பொறுத்தவரை மொத்தமாக பொது ஐன பெரமுன 16 மாவட்டங்கள், ஐக்கிய தேசிய கட்சி 3 மாவட்டங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 மாவட்டங்கள் என வெற்றி பெற்றிருக்கின்றன. இதில் நாம் கவனிக்க வேண்டி விடயம் யாதெனில், சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள 17 மாவட்டங்களிலும் ஐ.தே.கட்சியை விட மஹிந்த தரப்பை அங்கீகரிக்கும் பாங்கினையாகும். இந்த வித்தியாசத்தை அக்கட்சிகள் பெற்ற வாக்குகளில் காணலாம்.   பொதுஜன பெரமுன 4,887,611 வாக்குகளை பெற்றிருக்கும் அதேவேளை ஐ.தே.கட்சி 3,387,987 வாக்குகளை அடைந்திருக்கிறது. இவ்விரு கட்சிகளுக்கிடையில் காணப்படும் வித்தியாசம் 1,499,624 ஆகும். இதனோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெற்றிருக்கும் (17 மாவட்டங்களில்) 1,335,079 வாக்குகளையும் கூட்டினால் 2,834.703ஆக உயர்வு பெறுவதைப் பார்க்கலாம்.   நமது நாட்டில் காணப்படும் 341 உள்ளுராட்சி மன்றங்களில் தேர்தல் முடிவுகளை கூட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, பின்வரும் பெறுபேறுகளை அவதானிக்கலாம். பொதுஐன பெரமுன 5,030,209 (40.51%) ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி 1,502,507 (12.10%) ஐக்கிய தேசிய கட்சி 3,650,733 (29.40%) இதர கட்சிகள் 1,517,503 (12.22%) ஜேவி.பி 713,367 (5.74%) பெற்றிருந்தன. இத்தேர்தலில் மொத்தமாக வாக்களித்தோர் 12,625,886 (80.20%)ஆகும். நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 211,567 ஆகும். செல்லுபடியான வாக்குகள் 12,414,319 ஆகும் அளிக்கப்படாத வாக்குகள் 3,116,485 (19.79%) ஆகும்.   கடந்த பல தேர்தலில் வாக்களிப்பு வீதத்தை நோக்கும் போது இம்முறை 81 அல்லது 82 வீதமானோர் வாக்களிப்பார்கள் என எதிர் பார்க்கலாம். உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகளை வைத்து ஏனைய தேர்தல்களின் முடிவு எவ்வாறு அமையும் என்ற கணிப்பீட்டை செய்யக் கூடாது என்கின்ற பொதுநியதியை மறுக்கக் கூடாது என்பதை நான் கவனத்தில் கொள்ளாமலில்லை. ஆனால் இத்தேர்தலில் இறுதியாகவும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வந்ததன் பின்னரும், முன்னைய உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடந்து சுமார் 20 மாதங்களின் பின் நடைபெற்ற எல்பிட்டிய தேர்தல் முடிவும் நமது கவனத்தை ஈர்க்கின்றது.   ஏனெனில், சஜித் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு செய்யப்பட்டும், அவருக்கே அதிகரித்த ஆதரவுத் தளம் பெருகிக் கொண்டிருக்கிறது என்கின்ற பரப்புரைக்குமத்தியில், எல்பிட்டி பகுதி மஹிந்தவின் கோட்டை தானே எனச் சொல்லி இந்த வெற்றி நடை பெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தாக்கத்தைச் செலுத்தாது என சொல்வது பொருத்தமாகப் படவில்லை. உண்மையில் கோட்டை என நம்பப்படுவதில் உடைப்பு நிகழாது எப்படி வெற்றி அலைவீசும் என்ற கேள்வியும் எழுப்பப்படாது விடலாமா?   இன்று மஹிந்தவின் கடந்த கால அரசாங்கத்தின் போது சாட்டப்படும் குடும்ப ஆட்சி, நாட்டை விற்றல், ஊழல், மக்கள் அழிப்பு, வெள்ளை வேன் கலாசாரம் என்ற கருத்தாடல்கள் 2015 களிலிருந்து கூறப்பட்டு வந்த தொடர்கதையாடலுக்கு மத்தியில் அவர் மீண்டெழுந்து எழுச்சி பெற்று வருவதையே தேர்தல் முடிவுகள் திட்டவட்டமாக நமக்கு அறிவிப்பு செய்கின்றது. அது மட்டுமன்றி, நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு சுமார் 32 மாத ஆட்சியின் பின்னர் ஐ.தே.கட்சியினர் பலத்த தோல்வியை அடைந்திருக்கின்றனர் எனில், அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற கேள்வி அர்த்தம் அற்றதாகாது. இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகள் இம்முறை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலிலும் தாக்கம் செலுத்தக் கூடும்.   அந்த அடிப்படையில் இதன் பெறுபேறுகளை பின்வருமாறு பார்க்கலாம். பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றின் இணைவு ரீதியாக முறையே 40.51, 12,10 சேர்த்து52.51% வீதத்தை குறித்துக் காட்டும். ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 29.40ம் இதர கட்சிகள் பெற்ற 12.22ம் இணைந்தால் 41.62% வீதத்தையே சுட்டுகிறது. ஜே.வி.பி.5.74% வீதம் தனிமைப்படுகிறது.   கடந்த 2015இல்மைத்திரியை ஜனாதிபதியாக்குவதில் வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் தான் மஹிந்த பெற்ற சிங்கள மக்களின் வாக்குக்கு மைத்திரியை சமம்படுத்தியது என்றால் அவரது வெற்றிக்கு ஜே.வி.பி.யினரின் வாக்கே உயர்த்தியது என்பதில் சந்தேகமில்னை ஏனெனில் அத்தேர்தலை அடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் இக்கட்சி 543,944 (4.87%) பெற்றிருக்கும் வாக்கு உறுதி செய்கின்றது.   ஆகவே, இம்முறை ஜே.வி.பி.போட்டியிலிருந்து முற்றாக விலகியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி  மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாக்காளர்களின் பெரும்பாலானவர்கள் சஜித்தை ஆதரிக்கும் நிலை தோன்றாத வரை மஹிந்தவின் அணி வேட்பாளர் கோட்டாவை தோற்கடித்துவிடலாம் என்று நம்புவது சரியான அபிப்பிராயமாக இராது.    பொறுத்திருந்து பார்ப்போம் பெற்றியாளர் யாரென்று? https://www.madawalaenews.com/2019/11/huh_99.html
  • #எழுதியவர் யாரோ..(மூலம் பேஸ்புக்) "அடி பாதகத்திகளா என்னாடி இப்புடி போட்டு வச்சுருக்கேங்க...?" சுற்றி கூடிநின்ற கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு கத்தினாள் அந்த கிழவி. ரோட்டோரமாய் வீட்டு வாசலில் கிடத்தப்பட்டிருந்து ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாளின் உடல். எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து போன திருப்தியில் உறங்குவோமே அப்படி இறந்திருந் தாள். சுற்றிலும் சிலர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.. மகனும் மருமகளும் பேத்தியும் செய்வதறியாமல் விழித்துக்கொண்டு நின்றனர். "எப்ப செத்துச்சு "_ அந்த கிழவி. "இப்பத்தேன் ஆசுபத்திரிக்கு கொண்டு போற வழிலேயே முடிஞ்ச்சு. " "நெஞ்சுவலி.' "அடக்கொடுமையே.." "நாங்க இந்த வீட்டுக்கு குடிவந்து ஒரு வாரந்தேன் ஆகுது.. அதுக்குள்ள அத்தை இப்பிடி.." அழுகை பேச்சை வர விடவில்லை. அந்தப்பெண் அழுகிறாள். "அதுக்குன்னு இப்படி ரோட்லயா" "இல்லம்மா வீடு சின்ன வீடு அதனால..பந்தக்காரனுக்கும் ஐஸ் பெட்டிக்கும் சொல்லிருக்கு" "நல்லா இலுக்கு நீங்க சொல்றது.." சலித்துக் கொள்கிறாள். "ஒரு கருதறுப்பு சனம் நின்னு இப்படி பாத்துட்டிருக்கீகளே..!" "ஆம்பளயாளுகளெல்லாம் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க' கையில் உள்ள வயர் பையை ஓரத்தில் வைத்தாள். மாத்திரை களை உள்ளே திணித்தாள்.பின்பு ஏதோ ஞாபகம் வந்தவளாய் அதில் உள்ள பர்ஸை மட்டும் எடுத்து இடுப்பில் சொருகி கொண்டாள்.யதார்த்ததின் ஊசி குத்தியிருக்கும் போல.... கையில் உள்ள பிளாஸ்டிக் வளையல்களை மேலே ஏற்றி விட்டுக்கொண்டாள். "பொம்பளயாளுக கூட நின்னு சீலய சுத்திப் பிடிங்க." விறுவிறுவென்று பிரேதத்தை சுத்தப்படுத்தினாள்.அதன் கண்களை சரியாக மூடி வாயை நேராக்கினாள். புதுப்புடவை மாற்றினாள். கூட்டம் கண்களை அகல விரித்துப் பார்த்து கொண்டிருந்தது. அதற்குள் ஐஸ் பெட்டி வந்துவிட்டிருந்தது. "கொஞ்சம் மஞ்சப்பொடி கொண்டாங்க." முகத்திலிருந்து பாதம்வரை முழுவதும் பூசி விட்டாள்." மனுஷ மக்கனு எதுக்கு இருக்கோம்யா இந்த பூமிக்குள்ள" ஏதோ சொல்லிக்கொண்டே பிணத்தை அலங்கரிக்கிறாள்திருமாங்கல்யத்தை எடுத்து மாராப்பின் மேல் எடுத்து விடுகிறாள்..அர்ப்பணிப்பின் அழகிய ஒளி அங்கு நிறைகிறது. குங்குமம் இட்டு பூச்சூட்டி விடுகிறாள். பிணம் ஐஸ் பெட்டியில் ஏற்றப்பட்டது. "வாசப்படில தேங்கா ஓடச்சு சூடம் பத்தி பொருத்தி சாமி கும்பிடுங்க." கொஞ்சம் கொஞ்சமாகஅழுகை சத்தம் கூட ஆரம்பித்திருந்தது "மாகராசிய நல்ல மொரைல போய் அடக்கம் பண்ணுங்கப்பா" சொல்லிக்கொண்டே கிளம்புகிறாள் கிழவி. இறந்தவரின் மகன் ஓடி வந்து, "ரெம்ப நன்றிம்மா" "போய்யா போ.நன்றியாம் நன்றி. யாராருக்கு எவரெவரோ. ஆண்டவென் எல்லாருக்கும் ஒரு எடத்தை பத்திரமா வச்சிருக்யான்.. என்ன நாம போறதுதே கொஞ்சம் முன்ன பின்ன.. சொல்லிக்கொண்டே கிளம்பி விட்டாள். இல்லையென்றான ஒரு இடத்திலும் இருப்பின் முகம் அவளுக்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தினருக்கு இப்பொழுது தான் கிழவியின் மீது மதிப்பும்.தங்கள் மீது குற்ற உணர்ச்சியும் கூட ஆரம்பித்தது "யாருப்பா கிழவி" "யாரோ.. தெர்லயேப்பா..வெளியூர் போல"' ஒரு குரல் இப்படிப்பட்ட மனிதர்களைத்தான் நாம் கவனிக்காமலேயே கடந்து விடுகிறோம் ❤️❤️