Jump to content

திருமாவளவனை தமிழ்த் தேசிய அரங்கிலிருந்து அகற்றும் முயற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவளவனை தமிழ்த் தேசிய அரங்கிலிருந்து அகற்றும் முயற்சி

கடந்த வார இறுதியில், சனி, ஞாயிறு தினங்களில் லண்டனில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார். லண்டனில் இயங்கும் ‘விம்பம்’ என்ற அமைப்பு இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருந்தது. முதல் நாள் நிகழ்ச்சி திருமாவளவன் எழுதிய ‘அமைப்பாய் திரள்வோம்’ என்ற நூல் அறிமுகவிழாவாக அவரை மையப்படுத்தியதாக அமைந்தது. அடுத்த நாள் லண்டன் பல்கலைகழக மண்டபம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்சியில் அவரது கட்சி எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி திருமாவளவன் உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சிகள் மற்றும் அவர் ஆற்றிய உரைகள் பற்றிப் பார்க்க முன்னர் திருமாவளவனின் அரசியலைச் சற்று நோக்குவோம். திருமாவளவன் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் போராடுவதற்கு அமைப்புக் கட்டிய ஒரு தமிழ்த் தேசியவாதி. தலைவர் பிரபாகரனையும், விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாடுகளையும் பார்த்து அதனால் உந்தப்பட்டு ‘விடுதலைச் சிறுத்தைகள்’ அமைப்பை உருவாக்கியதாக அவரே பலமுறை கூறியிருக்கிறார். ஒடுக்கப்படும் மக்களுக்காகப் போரடப் புறப்பட்டவர் என்ற வகையில் அவரது தலைமையை ஏற்று கணிசமானவர்கள் அவரைப் பின்தொடர்ந்திருந்தால் தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவும், சமூகமாற்றத்தை ஏற்படுத்துபவராகவும் அவர் அமைந்திருக்கக் கூடும். ஆனால் இயக்கமாக இயங்குவதிலிருந்து விலகி 1998 இல் தேர்தல் அரசியலுக்குள் அவர் கால்பதித்தார். கோட்டுபாட்டு அரசியலில் அவர் பெற்ற தோல்வி இந்த மாற்றத்திற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். இவ்விடயத்தில் அவரை மட்டும் குறைகூறுவதில் எவ்வித அர்த்தமில்லை. ஏனெனில் தமிழக சமூக அமைப்பு இன்றைக்கும் அவ்வாறுதான் இருக்கிறது. திருமாவளவன் லண்டன் பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கூறியதுபோன்று அவரது தலைமையை ஏற்றுச் செய்பட அறிவார்ந்த சமூகத்திலிருந்து ஒருவர்கூட முன்வரவில்லை. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் அவரது சாதியினரைத் தவிர்த்து வேறுயாரும் அவரது தலைமையை ஏற்கத் தயாராக இல்லை. பத்தாம் வகுப்பு சித்தியடையாதவர்களை வைத்தே கடந்த முப்பதுவருடமாகத் தான் அரசியல் செய்வதாக மேற்படி உரையில் அவர் வேதனையுடன் குறிப்பிட்டார். ஆனால் திருமாளவனை ஆதரிப்பதுபோலக் காட்டி தங்களை முற்போக்காளர்களாக நிலை நிறுத்த முனைபவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.
இத்தகைய பின்னணியில் தனது சாதிவாக்குகளை மூலதனமாக்கி பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் நிலைக்குத் திருமாவளவன் தள்ளப்பட்டுள்ளார். திருமாவளவன் இப்போது ‘அமைப்பாகத் திரளும்’ ஒருவர் அல்ல. தேர்தல் கூட்டுகள் மூலம் பேரம் பேசி ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் நிலைக்கு அவரது அரசியல் குறுகிவிட்டது. ஆகையால் அவரது உண்மையான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கும், வலிந்து ஏற்படுத்தவேண்டியிருக்கிற இந்திய அதிகாரங்களுடான உறவிற்கும் இடையிலிருந்து அவர் அல்லாடுவது தெரிகிறது. அவர்சார்ந்த சாதி வாக்குகளுக்காக அவரை தமது அணியில் வைத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் மறுபுறத்தில் அனைத்துத் தமிழர்களுக்குமான ஒரு தலைவர் என்ற நிலையில் அவரை வைத்திருக்க விரும்பாது. ஆனால் அவருடனான கூட்டு மூலம் தாங்கள் சாதிகடந்து செயற்படுவதாக காட்டுவதற்கு திமுக அதனை வாய்பாகப் பயன்படுத்தி வருகிறது. இனி புத்தக வெளியீடு விடயத்திற்கு வருவோம். தங்களைத் முற்போக்குகளாகவும் தலித்திய ஆதரவாளர்களாகவும் காட்டிக்கொள்ள விரும்புகிற ஒரு சிறு குழுவினர் திருமாவளவனை தங்கள் பக்கம் வைத்திருக்க எடுத்த முயற்சியே இப்புத்தக வெளியீடு. தன்னுடைய புத்தகம் லண்டனில் வெளியிடப்படுகிறது என்ற ஒன்றை மாத்திரம் கருத்தில் எடுத்த திருமாளவனுக்கு அதனை யார் வெளியிடுகிறார்கள் என்பது ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. காவிரி தொலைக்காட்சியில் நடைபெற்ற நேர்காணலில், இதுபற்றிக் கேட்கப்பட்டபோது அவரே இதனைத் தெரிவித்திருக்கிறார். லண்டனில் அவரைச் சந்தித்த தமிழ்ச் செயற்பாட்டாளர்களிடமும் இதனையே கூறியுள்ளார். இதுதான் ‘அமைப்பாய் திரள’ முற்பட்டவருக்கும், தேர்தல் கூட்டு மூலம் பதவிக் கதிரையை பிடிக்க முயல்பவருக்குமிடையிலான வேறுபாடு.
லண்டனில் திருமாளவன் முன்னர் கலந்து கொண்ட கூட்டங்களை ஒழுங்கு செய்தவர்கள், அவரது பயணத்திற்கு உதவியவர்கள். தங்க இடம் கொடுத்தவர்கள் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள். அவர்கள் இப்போது திருமாளவனை அழைத்து நிகழ்ச்சி நடத்தத் தயாராக இல்லை. கொங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்திருக்கும் அவரை தமிழ்த் தேசிய அரசியலில் உள்ளவர்கள் ஏற்க மறுப்பதில் ஆச்சரியமில்லை. இந்த இடைவெளியைத்தான் ‘விம்பம்’ அமைப்பு தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளது. இக்கூட்டங்களை ஏற்பாடு செய்தவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொள்வது ஒன்றும் சிரமமில்லை. திருமாவளவனை ஒரு தலித் இயக்த்தின் தலைவராகக் காட்டி அவரைத் தமிழ்த் தேசியத்திலிருந்து அந்நியப்படுத்த எடுத்த முயற்சிதான் இது. இருப்பினும் ‘விம்பம்’ எதிர்பார்த்தவாறு விடயங்கள் நடந்தேறவில்லை. திருமாவளவன் கலந்துகொண்ட இரண்டு நிகழ்ச்சிகளில் அவர் முடிந்தளவு தன்னைத் தமிழ்த் தேசியவாதியாக இனங்காட்ட முயற்சித்திருக்கிறார். தன்னை ஒரு தலித் கட்சி தலைவர் என அழைப்பதனையிட்டுக் கவலை கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார். கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தலைவர் பிரபாகரனின் புகழ் பாடியிருக்கிறார். கூட்டிக் கழித்துப்பார்த்தால், கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு சொந்தச் செலவில் சூனியம் வைத்த நிலைதான். இருந்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் உறவாடவும், அதை வைத்து இதர தலித் அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தவும் அவர்களுக்கு ஒரு கதவு திறக்கப்பட்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்தி அவர்கள் மேலும் முன்னேறலாம்.

இக்கூட்டங்களில் திருமாவளவன் ஈழத்தமிழர்களுக்கு வழங்கிய அறிவுரையும் அவரை தமிழ்த் தேசியத்தளத்திலிருந்து ஒதுக்குவதற்கு உதவுவதாகவே அமைகிறது. இந்திய ஆளும்வர்க்கத்துக்கு ஆதரவாகவே ஈழத்தமிழர்கள் நடந்துகொள்ளவேண்டும் எனவும், பிரதமர் மோதி, பா.ஜ.க வின் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா ஆகியோருடன் தொடர்பாடல்களைப் பேணவேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார். உள்நாட்டில் மோதி அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து வெளியிடும் திருமாளவன், ஜம்மு – காஸ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்புரிமையை இரத்துச் செய்தமையை எதிர்ப்பதாகக் கூறுபவர், ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவதற்கு அதே அரசாங்கத்தை நாடுமாறு கூறுவது முரண்நகையாகவே அமைகிறது. தவிரவும் திருமாவளவனின் ஆலோசனைப்படி நடந்துகொள்வதாயின், ஈழத்தமிழர்கள் அழைத்து விழா எடுக்கவேண்டியவர் திருமாவளவன் அல்ல நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்று மோதிக்கு நெருக்கமானவர்களே என்பதில் அவர் உடன்படுவாரா?
திருமாவளவனை தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து பிரித்தெடுக்கும் முயற்சி பலவருடங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. 2007 ஒக்ரோபரில் பரிசில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களால் நடத்தப்பட்ட ‘தலித் மாநாடு’ என்ற கூட்டத்திற்கு திருமாவளவன் அழைக்கப்பட்டிருந்தார். முதலில் அந்த அழைப்பை ஏற்ற அவர் பின்னர் அவருக்கு வழங்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக அக்கூட்டத்தினைப் புறக்கணித்தார். மிகச்சிலரே கலந்துகொண்ட இக்கூட்டத்திற்கு முக்கியமளித்து பிபிசி தமிழ்ச்சேவை பெட்டக நிகழ்ச்சி ஒன்றை வழங்கியிருந்தது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய உறுப்பினரும், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ள துரை இரவிக்குமார், விடுதலைப்புலிகளைச் சாதிவாதிகளாகச் சித்தரித்து நேபாளத்திலிருந்து வெளியிடப்பட்ட Himal Magazine என்ற ஆங்கிலச் சஞ்சிகையில் ‘Castiest Tiger’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கம் ஒரு அரசுசாரா நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்த சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலிருந்த அகிலன் கதிர்காமர் என்பவர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபட்டுவருபவர் என்பது அனைவரும் அறிந்ததே. போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பரப்புரைக்காக உருவாக்கப்பட்ட Sri Lanka Democracy Forum என்ற அமைப்பிலிருந்த நிர்மலா, இராகவன் ஆகியோருடன் தொடர்புகளைப் பேணிவந்த அகிலன் இவர்கள் இருவரது செவ்விகளையும் 2009 போர் இறுதிக்காலத்தில் மேற்படி சஞ்சிகையில் பிரசுரித்திருந்தார். திருமாவளவன் லண்டனில் கலந்துகொண்ட முதல்நாள் கூட்டத்திற்கு இதே இராகவன் என்பவரே தலைமை தாங்கினார் என்பதிலிருந்த இந்த வலைப் பின்னல்களைஅறிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் இராகவன் என்பரையோ மேற்படி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த மற்றவர்களையோ தான் அறிந்திருக்கவில்லை என திருமாவளவன் கூறியிருக்கிறார். இது உண்மையானால் திருமாவளவனுக்குத் தெரியாமலே பின்னப்பட்ட வலையில் அவர் அறியாமலே விழுந்திருக்கிறார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

கோபி இரத்தினம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி விசுகு......!    😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களையும் ஈழப்பிரச்சனையையும் விடுதலைப்புலிகளையும் மையப்படுத்தி.. தமிழகத்தில் அரசியல் பிழைப்பு நடத்துவோரில் திருமாவும் ஒருவர். 

இந்திய தளத்தில் எழுவர் விடுதலைக்கே ஒரு உருப்படியான வேலைத்திட்டம் செய்ய லாய்க்கில்லாதவர்கள்.. காஷ்மீர்.. ஈழம் பிரச்சனைகளில் வெட்டிக்கிழிப்பர் என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனத்திலும் முட்டாள் தனம்.

ஆனால்.. இவர்களின் காலத்திற்கு ஏற்றாற் போன்ற வேசங்களை மக்கள் புரிந்து கொள்வதும்.. இவர்களின் அரசியல் சித்தாந்தத்தை விளங்கிக் கொள்வதும்.. மக்கள் இவர்களை நம்பி ஏமாறுவதில் இருந்து ஏமாற்றப்படுவதில் இருந்து அவர்களை தப்பிக்க வைக்கும். 

அந்த வகையில்.. இந்த வெளிவேசக்காரர்களின் அரசியல் சித்து விளையாட்டுக்களை இட்டு மக்கள் சுதந்திரமாக தம் கருத்துக்களை பதிவு செய்து இவர்களுக்கே இவர்களின் நிலையற்ற தன்மையை உணர வைப்பது அவசியம். மாறாக இவர்களுக்கு வாக்குப்போட்டு மக்கள் தம் தலையில் தாமே மண்வாரிப் போட்டுக்கொள்ளக் கூடாது.

தமிழக சினிமாவில் பலரும்.. தமிழக அரசியலில் பலரும்.. ஈழத்தமிழர்களையும் புலம்பெயர் தமிழர்களையும் தமது வியாபாரத்தின் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அது சினிமா வியாபாரம் ஆகட்டும்.. அரசியல் வியாபாரம் ஆகட்டும் அவ்வளவே.

ஒரு சிலரே இன உணர்வோடு ஈழத்தமிழர்களை அணுகி வருகின்றனர். 

இந்தப் புரிதல் ஈழத்தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் தெளிவாவது அவசியம். ஏமாற்றங்களை எதிர்காலத்தில் தவிர்க்க. 

அதேவேளை தமிழகத்தின் நேச சக்திகளோடு ஈழத்தமிழனம் தொடர்புகளை இன்னும் பலப்படுத்திக் கொள்வது அவசியம். வேசக்காரர்களை தவிர்த்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Anbu_Thozi_Thirumaa.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
    • "காதல் & காமம்" [காதல் ஈவு, இரக்கம் சார்ந்தது. காமம் இச்சை, இம்சை சார்ந்தது.]   காதல் கை கொடுக்கும். காமம் கை விடும். காதல் குறுகுறுப்பு. காமம் கிளுகிளுப்பு. காதல் ஏற்றம் தரும். காமம் ஏமாற்றம் தரும். காதல் வயல்வெளி. காமம் புதைகுழி. காதல் பாசவலை. காமம் நாச வேலை. காதலில் காமம் அடங்கும். காமத்தில் காதல் முடங்கும். காதலில் 'நீயும் நானும்' இருக்கும். காமத்தில் 'நீயா நானா' இருக்கும்   ஆனால் காதல் நிலைக்க காமமும் கூட்டுச் சேரவேண்டும்  ஊடலும் கூடலும் அதற்கு ஒரு உதாரணம் 
    • காக்கா விடம் இருந்து நரி பறித்த  அதே வடையை தான் என்று வேறு சத்தியம் பண்ணியவர் 😃
    • வெள்ளம் வந்த பின்...  @ராசவன்னியன் னின், சிலமன் ஒன்றையும் காணவில்லை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.