Sign in to follow this  
உடையார்

யாழ் திரைப்படம்

Recommended Posts

 

https://www.youtube.com/watch?v=qOzX4RiPUXs

 

மிஷ்டிக் பிலிம்ஸ் சார்பில் யாழ் படத்தை தயாரித்து, கதை, திரைக்கதை,வசனம் எழுதி எம்.எஸ் ஆனந்த் இயக்கியுள்ளார்.

இலங்கையில் போர் உச்சத்தில் இருக்கும் போது கன்னி வெடிகளுக்கிடையே இரண்டு மணி நேரத்தில் நடக்கும் சம்பவவங்களின் மூன்று கதைகளின் கோர்வை தான்; யாழ் படத்தின் கதை.

முதலில் அப்பாவி அபலைப்; பெண்ணான நீலிமா ராணி கைக்குழந்தையுடன் இருக்கையில் சிங்கள ராணுவ வீரர் டேனியல்பாலாஜியின் விசாரணைப் பார்வையில் சிக்குகிறார். விடுதலைப் புலி தமிழ்செல்வி என்று நினைத்து நீலிமாவை துரத்த கன்னி வெடியில் காலை வைத்து விடுகிறார் டேனியல் பாலாஜி. இடத்தை விட்ட நகர முடியாமல் தவிக்கும் டேனியல் பாலாஜி நீலிமா ராணியை குழந்தையை காரணம் காட்டி மிரட்டுகிறார். நீலிமா ராணிக்கு உதவ வரும் முதியவரும் கன்னி வெடியில் சிக்கி இறக்கிறார். டேனியல் பாலாஜிக்கு காப்பாற்ற வரும் இன்னொரு சிங்கள ராணுவ வீரரை சந்தர்ப்பம் பார்த்து சுட்டுக் கொல்கிறார் நீலிமா ராணி. இறுதியில் டேனியல் பாலாஜியிடமிருந்து நீலிமா தப்பித்து குழந்தையை காப்பாற்றினாரா? என்பது முதல் கதை.

இரண்டாவது வினோத் காதலிக்கும் லீமா பாபு ஊரை விட்டு போவதை பார்த்து தானும் உடன் செல்ல உடைமைகளை எடுத்து வரும் வழியில் அனாதையாக இருக்கும் பேபி ரக்ஷனாவை பார்த்து விசாரிக்கிறார். பேபி ரக்ஷனா தன் தாயை காணவில்லை என்றும், அவரை தேடிக் கண்டு பிடித்து சேர்க்குமாறு கூற வேறு வழியின்றி குழந்தையை தன்னுடன் அழைத்துச் செல்கிறார் வினோத். வரும் வழியில் சிங்கள ராணுவத்தினரின் விசாரணை என்று நேரம் சென்று விட கடற்கரைக்கு வருவதற்குள் காதலி உட்பட அனைவரும் படகில் சென்று விடுகின்றனர். இறுதியில் வினோத் காதலியை தேடிச் சென்றாரா? பேபி ரக்ஷனாவை விட்டு விட்டுச் சென்றாரா? அல்லது பேபி ரக்ஷனாவை தாயுடன் சேர்த்து வைக்க முயன்றாரா? என்பதே மீதிக் கதை.

மூன்றாவதாக லண்டனிலிருந்து மிஷா கோஷல் தன் காதலன் சசிகுமாரை தேடி இலங்கைக்கு வருகிறார். நண்பர்கள் உதவியுடன் சசிகுமாரை சமாதனம் செய்து லண்டனுக்கு அழைத்துச் செல்ல நினைக்கும் மிஷாவின் பேச்சை கேட்காமல் சொந்த ஊரிலேயே இருக்கப் போவதாக சசிகுமார் கூறுகிறார். கன்னி வெடியில் இறந்த தாயின் ஆன்மா சாந்தியடைய வேண்டுமானால் நிலத்தில் இருக்கும் கன்னி வெடிகளை அகற்றிய பிறகே லண்டன் வருவதாக சசிகுமார் சொல்கிறார். இதனால் கோபமடையும் மிஷா கோஷல் என்ன செய்தார்? சசிகுமாரை சமாதனம் செய்து அழைத்துச் சென்றாரா? இல்லையா? என்பதே க்ளைமேக்ஸ்.

இந்த மூன்று கதைகளில் நடித்த வினோத் கிஷன், டேனியல் பாலாஜி, சசிகுமார், சுப்பிரமணி;, மிஷா கோஷல், நீலிமா ராணி, லீமா பாபு ஆகியோருடன் பேபி ரக்ஷனா சிறப்பாகவும், இயல்பாகவும் நடித்திருப்பது படத்தின் தத்ரூபமான காட்சிகளுக்கு மேலும் மெருகுட்டுகிறது.

ஏ.கருப்பையா, எம்.நஷீர் ஆகிய இருவரின் ஒளிப்பதிவு இலங்கையில் நடக்கும் போரினால் அப்பாவி மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு அனாதைகளாகவும், அகதிகளாகவும் நடைப்பயணம் செல்வதையும், சிங்கள ராணுவத்தின் கெடுபிடி களையும், வானத்திலிருந்து விழும் குண்டு மழையிலிருந்து தப்பிக்க நினைக்கும் ஈழத் தமிழ் மக்கள் பதுங்கு குழிகளை தேடி ஒடுவதும், மூன்று வித பரிணாமங்களில் கதையை நகர்த்தி அச்சு அசலாக காட்சிக் கோணங்களில் தந்து அசத்தியிருக்கின்றனர்.
எஸ்.என் அருணகிரியின் இசையில் பாடல்கள் அனைத்தும் அற்புதமாக இருப்பதோடு அழகான வரிகள் கேட்க கேட்க தமிழின் இனிமை காதில் ஒலித்து மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- எம்.எஸ்.ஆனந்த். யாழ் என்ற இசைக்கருவியை உருவாக்கிய ஈழத் தமிழர்கள் தமிழர்களின் கலை, கலாச்சாரம்,பண்பாடு, சித்தாந்த கருத்துக்களை யாழ் மூலம் இசைத்து பல ஊர்களில் பரப்பி வந்ததால் அவர்களை பாணர்கள் என்று அழைக்கப்பட நாளடைவில் அந்த ஊருக்கு யாழ்ப்பாணம் என்ற பெயரும் வந்தது என்பதை முதல் பாட்டிலேயே வரைபடத்தின் மூலம் எடுத்துரைத்த விதமே கேட்கவும் பார்க்கவும் சிறப்பாக இருந்தது. அதன் பின் இலங்கையில் ஆரம்பம் முதல் இறுதி வரை இரண்டு மணி நேரத்தில் நடக்கும் கதையில் மூன்று வித கதைகள் தனித்தனியாக பயணித்து யாழ் இசைக்கருவியோடு நட்பு, காதல், வன்மம், செண்டி;மென்ட் கலந்து இன்னிசை விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ஆனந்த். வித்தியாசமான முயற்சியில் ஈழத் தமிழர்களின் பேச்சு, போராட்டங்கள், அவலங்கள், வாழ்வியலை யதார்த்தமாக மனதை தொடும்படி படம் பிடித்து தனித்தன்மையோடு இயக்கியிருக்கிறார் எம்.எஸ்.ஆனந்த். இதில் ஈழத் தமிழர்களை மையப்படுத்தி ஈழத்தமிழ் பாடலாசிரியர்கள் இயற்றிய பாடல்கள் இலங்கைத்தமிழில், இசையிலும், வசனத்திலும் கலந்திருப்பது செவிக்கு இனிமையாகவும், கண்களுக்கு இதமாகவும் இருக்கிறது.

மொத்தத்தில் அனைவரைவும் ஈர்த்து மனதை நெகிழச்செய்யும் தாழ் இந்த யாழ்.

 

https://www.chennaicitynews.net/cinema/யாழ்-திரை-விமர்சனம்-64444/

https://www.youtube.com/watch?v=qOzX4RiPUXs

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • தலைவா, நீங்களோ, உங்கள் வம்சமோ, ஜனாதிபதியாக முடியாது என்பது நிதர்சனம் என்பதால், ஒரு சுவிஸ் அரசியல் வாதி அதனை மினக்கட்டு சொல்லப்போவதில்லை. அடுத்து, நீங்கள் தப்பித்தவறி ஜனாதிபதியாகி, நாட்டினை கொள்ளையடித்து, உங்கள் வம்சமே அடுத்த தலைவராக வரவேண்டும் என நடந்தால், சுவிஸ்காரர்கள் எதிர்த்தால், அதனை இனவாதம் என்று சொல்வீர்களா? ஒபாமா ஜனாதிபதி ஆகியது அவரது மிகச்சிறந்த பேச்சு வன்மை. ஒபாமா கென்யா வம்சாவளி அல்ல. அமெரிக்க வெள்ளை தாய்க்கும், கல்வி கற்க வந்த கென்யக்காரர் ஒருவருக்குமான சிலநாள் தொடர்பு. அவர் தாயின் வெள்ளைக் குடும்பத்தால் வளர்க்கப்பட்ட அமெரிக்க பிரஜை. தந்தை ஓடி விட்டார், கென்யாவுக்கு.  ஹிட்லர், வெள்ளைத்தோல், அவரது மிகச்சிறந்த பேச்சு வன்மை. நிக்ளோஸ்  வெள்ளைத்தோல்  
  • நான் தெளிவாக கூறியும் நீங்கள் தான் குழம்புகின்றீர்கள் அல்லது நடிக்கின்றீர்கள். எனவே மீண்டும் தெளிவாக கூறுகின்றேன்.  தமிழனாகிய எனது வம்சாவளியில் பிறந்த  எனது நான்காம் அல்லது ஐந்தாம் தலைமுறைப் பிள்ளை ஒன்று தமிழ் வம்சாவளி என்ற ஒரே காரணத்திற்காக சுவிற்சர்லாந்தின் ஜனாதிபதியாக முடியாது என்று இங்கு சுவிற்சர்லாந்தின்  ஒரு அரசியல் தலைவர் வெளிப்படையாக கூறுவரானால் இங்கு அது இனவாதமாகத் தான்  இங்கு உள்ள மக்களால்  பார்க்கப்படும். அது இனவாதம் தான்.  கெனிய நாட்டு வம்சாவளி ஒபாமா எப்படி அமெரிக்க ஜனாதிபதியானார்?  ஹங்கேரி வம்சாவளி நிகோலோஸ் சார்கோசி எப்படி பிரெஞ்ச் ஜனாதிபதியானார்?
  • எதிர்பார்த்த எதிர்வினைதான் வந்துள்ளது. நாம் மற்றவர்கள் எப்படிச் சிந்திப்பார்கள் என்று உய்த்தறியும்நுண்ணறிவையும் கொண்டுள்ளோம் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.😎 சாமானியர்கள்தான் இந்த உலகை வடிவமைக்கின்றார்கள் என்ற கருத்தியலை விதைத்து பெரும்பான்மையானவர்களை கோர்ப்பரேட் உலகம் அடிமையாக வைத்திருக்கின்றது என்று நாளை புலம்பக்கூடாது. இலுமினாட்டி, freemasons போன்ற அமைப்புக்களில் இருப்பவர்கள்தான் உலகை ஆளுகின்றார்கள் என்றும் நம்பக்கூடாது. ஆமா!
  • எல்லோரும் சிங்களவன் எப்படி எம்மை ஆளலாம் என்று புலிகளை ஆதரித்தார்களாம். சிலர் இயக்கத்திலும் இருந்தார்களாம். தமிழனை, தமிழனே ஆளவேண்டும் என்று சீமான் சொல்வது இனவாதமாம். நல்லா இருக்குது நியாயம், நியாமாரே.   அடேங்கப்பா விளக்கம் !! 500 வருசத்துக்கு முன்னம் வந்த தெலுங்கன் இன்னும் தமிழ் பேசி ஆளலாம். 72 வருசத்துக்கு முன்னம் ஆளத்தொடங்கிய சிங்களவன் தமிழ் இன்னும் பேசாததால், ஆளப்படாது. அதுதான் நம்ம இனவாத தத்துவம்.
  • கேள்வியிலேயே பதில் இருந்ததால் பதிலளிக்கவேண்டி இருந்திருக்கவில்லை! தெலுங்கு நாயக்கர்கள் 500 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆண்டார்கள் என்றாலும் அவர்களின் பரம்பரையினர் தமிழ்நாட்டில் பிறந்து தமிழர்களாக இனமாகவும் உணர்வாகவும் கொண்டுள்ளனர். அவர்களை தெலுங்கன் என்று சொல்லுவதுதான் நியாயம் என்றால் எங்கேபோய் முட்டிக்கொள்ள? இதைத்தான் கடைந்தெடுத்த இனவாதம் என்பது. சிங்களவன் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து தமிழரை தனக்கும் கீழானவர்கள் என்று சொல்கின்றான். சிங்களவனுக்கு தமிழும் தெரியாது (கொன்னைத் தமிழ் சேர்ப்ப்பில்லை), தமிழுணர்வும் கிடையாது. இது பச்சைப்புள்ளைக்கும் தெரியும் என்பதால் கேள்வி மப்பில் வந்ததாக்கும் என்று நினைத்திருந்தேன். இரண்டாம் தரமும் கேட்டதால் ஒன்றில் மப்பில்லை. அல்லது இரண்டு தரமும் மப்புத்தான்😜   இனங்களை பற்றி ஆராயவெளிக்கிட்டால் சிங்களவனை தமிழரின் பரம்பரையினர் என்றும் நிறுவலாம்.😀 தலைவர்  பிரபாகரனை மலையாளி என்றும் நிறுவலாம்.🤒