Jump to content

Chandrayaan 2: நிலவில் தரையிறங்க சந்திராயன் 2 'தயார்'; பிரதமர் மோடி நேரலையில் பார்க்க உள்ளார்!


Recommended Posts

கடந்த ஜூலை 23 ஆம் தேதி, ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்டது.

 சந்திராயன் 2 விண்கலம், சனிக்கிழமை அதிகாலை 1:55 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள முதல் விண்கலம் சந்திராயன் 2 ஆகத்தான் இருக்கும். 

சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க தயாராக உள்ளது. சனிக்கிழமை அதிகாலை 1:30 மணி முதல் 2:30 மணிக்குள் அது நிலவைத் தொட ஆயத்தமுடன் உள்ளது. 

விக்ரம் லேண்டர், நிலவில் இறங்கியவுடன், ரோவர் பிரக்யான், நிலவின் மேற்பரப்பில் அதிகாலை 5:30 முதல் 6:30 மணிக்குள் வெளியேவரும் என்று இஸ்ரோ சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ரோவர் பிரக்யான், நிலவில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். நிலவின் வளங்கள், நிலவில் இருக்கும் நீர் உள்ளிட்டவை குறித்து ரோவர் ஆராயும். மிகவும் அதிக ரெசல்யூஷன் கொண்ட படங்களையும் அது எடுக்கும். 

சந்திராயன் 2 குறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன், “நாங்கள் மேற்கொண்டதிலேயே இதுதான் மிகவும் கடினமான திட்டம்” என்று கூறியுள்ளார். 

இஸ்ரோவின் கன்ட்ரோல் ரூமிலிருந்து சந்திராயன் 2, நிலவில் தரையிறங்குவதை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பள்ளிக் குழந்தைகள் நேரலையில் பார்க்க உள்ளனர். 

 

இதுவரை நிலவில் தரையிறங்கிய அனைத்து விண்கலங்களும் அதன் வட துருவத்தில்தான் லேண்ட் ஆகின. சந்திராயன் 2 மூலம் முதன்முறையாக தென் துருவத்தில் தடம் பதிக்க உள்ளது இந்தியா. 

 

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் பிறகு, நிலவில் விண்கலத்தைத் தரையிறக்கிய பெருமையை சந்திராயன் 2 மூலம் இந்தியாவும் பெரும். 

கடந்த ஜூலை 23 ஆம் தேதி, ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்டது. ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன் 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஜூலை 23 ஆம் தேதிக்கு முன்னரே, சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், லான்ச்சிற்கு 56 நிமிடங்களுக்கு முன்னர் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்துதான் மீண்டும் அது ஜூலை 23 அன்று திட்டமிடப்பட்டது. 

சந்திராயன் 2 திட்டத்திற்கு இஸ்ரோ ஒதுக்கியது சுமார் 1,000 கோடி ரூபாய்தான். இது அமெரிக்காவின் நாசா ஒதுக்கும் பட்ஜெட்டை விட 20 மடங்கு குறைவாகும். சமீபத்தில் வெளியான ‘அவெஞ்சர்ஸ்: எண்டுகேம்' படத்தின் பட்ஜெட்டைவிட இது குறைவானதாகும்.

https://www.ndtv.com/tamil/chandrayaan-2s-moon-landing-tonight-pm-modi-to-watch-live-2096470?pfrom=home-topscroll

Link to comment
Share on other sites

“பிறந்த குழந்தையை கையில் வைத்திருப்பது போல…”- சந்திராயன் 2 லேண்டிங் பற்றி இஸ்ரோ (ISRO) தலைவர்!

“பிறந்த குழந்தையை கையில் வைத்திருப்பது போல…”- சந்திராயன் 2 லேண்டிங் பற்றி இஸ்ரோ (ISRO) தலைவர்!

Bengaluru: 

சந்திராயன் 2 விண்கலம், சனிக்கிழமை அதிகாலை 1:55 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள முதல் விண்கலம் சந்திராயன் 2 ஆகத்தான் இருக்கும். சந்திராயன் 2-வின் லேண்டர் மற்றும் ரோவர் நிலவின் மேற்பரப்பில் மென்மையாக எந்தவித பாதிப்புமின்றி தரையிறங்க எடுத்துக் கொள்ள இருக்கும் ‘அந்த 15 நிமிடம்' என்பது இஸ்ரோ-வின் உச்சபட்ச விஞ்ஞானிகளுக்குக் கூட வயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயமாகத்தான் இருக்கும். 

“திடீரென்று ஒருவர் பிறந்த பச்சிளம் குழந்தையை உங்கள் கையில் கொடுப்பது போன்றது. அந்த குழந்தையை பத்திரமாக நீங்கள் பிடித்திருக்க வேண்டுமல்லவா. அது அங்கும் இங்கும் நகரப் பார்க்கும். அதேபோலத்தான் சந்திராயன் 2-வில் இருக்கும் லேண்டரும். அது, அங்கும் இங்கும் அலைபாயும். ஆனால், அதை ஸ்திரமாக தரையிறக்க வேண்டும்” என்று இந்தியாவின் மிகப் பெரும் பெருமையாக கருதப்படும் சந்திராயன் 2 திட்டம் குறித்து விளக்குகிறார் இஸ்ரோ தலைவர் கே.சிவன். 

சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க தயாராக உள்ளது. சனிக்கிழமை அதிகாலை 1:30 மணி முதல் 2:30 மணிக்குள் அது நிலவைத் தொட ஆயத்தமுடன் உள்ளது. 

“இந்த லேண்டர் தரையிறங்குவதுதான் மிகவும் சிக்கலான விஷயம். அதை அடிக்கடி செய்வோருக்கே கடினமாகத்தான் இருக்கும். நாம் இப்போதுதான் முதன்முதலாக அதைச் செய்கிறோம். எனவே, லேண்டர் தரையிறங்கும் அந்த 15 நிமிடம் என்பது எங்களுக்கு டெரராகத்தான் இருக்கும்” என்று திட்டத்தின் சிக்கல்கள் குறித்து பகிர்ந்து கொண்டார் சிவன். 

இஸ்ரோவின் கன்ட்ரோல் ரூமிலிருந்து சந்திராயன் 2, நிலவில் தரையிறங்குவதை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பள்ளிக் குழந்தைகள் நேரலையில் பார்க்க உள்ளனர். 

இதுவரை நிலவில் தரையிறங்கிய அனைத்து விண்கலங்களும் அதன் வட துருவத்தில்தான் லேண்ட் ஆகின. சந்திராயன் 2 மூலம் முதன்முறையாக தென் துருவத்தில் தடம் பதிக்க உள்ளது இந்தியா. 

 

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் பிறகு, நிலவில் விண்கலத்தைத் தரையிறக்கிய பெருமையை சந்திராயன் 2 மூலம் இந்தியாவும் பெரும். 

கடந்த ஜூலை 23 ஆம் தேதி, ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்டது. ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன் 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஜூலை 23 ஆம் தேதிக்கு முன்னரே, சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், லான்ச்சிற்கு 56 நிமிடங்களுக்கு முன்னர் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்துதான் மீண்டும் அது ஜூலை 23 அன்று திட்டமிடப்பட்டது.

https://www.ndtv.com/tamil/chandrayaan-2-isro-chief-dr-k-sivan-explains-landing-on-moon-2096503?pfrom=home-tamil_bigstory

Link to comment
Share on other sites

மக்கள்திலகம் எம். ஜி. ஆர் உயிருடன் இருந்து இந்தியா சந்திரனுக்கு போவதை இதை போல காலேட்சேபம் செய்திருந்தால் எப்படி இருக்கும். அவரை ஆன்டி இந்தியன் என்று சொல்லியிருப்பாங்க. 

Link to comment
Share on other sites

Viewing the landing

So where can you watch the landing?
 
ISRO will broadcast updates on its website (isro.gov.in) from its headquarters in Bengaluru, where Indian President Narendra Modi will be watching. It will also appear on India's Press Information Bureau YouTube channel.
 
Additionally, National Geographic and Hotstar will provide live coverage from 11.30 p.m. Indian time (2 p.m. ET) on Friday, with the veteran NASA astronaut Jerry Linenger on air to share his expertise.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

70438076_2911704815558374_79328806338130

டிஸ்கி :

tenor.gif

 

Link to comment
Share on other sites

Chandrayaan 2: விக்ரம் லேண்டருடனான தொடர்பு இழப்பு: இஸ்ரோ

உங்களோடு நான் இருக்கிறேன்- பிரதமர் மோடி

இந்த நாடு உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறது. இந்த நாட்டுக்கும் மனித குலத்துக்கும் நீங்கள் மிகப் பெரிய பங்காற்றியுள்ளளீர்கள். உங்கள் முயற்சி தொடரும். உங்களோடு நாடன் இருக்கிறேன்- பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல்.

https://www.ndtv.com/tamil/chandrayaan-2-moon-mission-landing-live-updates-2096947?pfrom=home-topscroll

Link to comment
Share on other sites

ஊத்திக்கிச்சு போல... இரண்டை கிலோ மீற்றருக்கு கிட்ட போன பிறகு கேபிள் அறுந்துட்டுத்தாம் (Communication disconnected from Lander to ground)

மச்சி போத்தலை திற....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கனும் ரஷ்யனும் கைவிட்டதை இவையள் போய் என்னத்தை புடுங்கப்போயினமாம்?
நாய்க்கு ஏன் போர்த்தேங்காய்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரயான் -2 ன் தொடர்பு துண்டிப்பு : மோடியை கட்டித்தழுவி அழுத இஸ்ரோ தலைவர் சிவன்..! : காணொளி இணைப்பு

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் ஒரு கலமான விக்ரம், நிலவில் தரையிறங்க 2 கிலோ மீற்றர், தூரம் இருந்த நிலையில் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்த நிலையில் விஞ்ஞானிகள் பெறும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Tamil_News_large_2361610.jpg

இந்த நிகழ்வை பிரதமர் மோடி, இஸ்ரோ மையத்தில் இருந்து நேரடியாக பார்வையிட்டார். விக்ரம் உடனான தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்ற இந்நிலையில்,

சந்திரயான் 2 விண்கலத்துடனான தொடர்பு 5 சதவீதம் மட்டுமே இழந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

அத்தோடு விஞ்ஞானிகளிடம் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள் என தெரிவித்த பிரதமர் மோடி மேலும் தெரிவித்ததாவது,

"உங்களின் கனவுகளும், திட்டங்களும் என்னை விடவும் வலிமையானவை. உங்களை சந்தித்து உரையாட வந்த நான், உங்களிடம் இருந்து ஊக்கத்தை பெற்றுக் கொண்டேன் " என விஞ்ஞானிகளிடம் தெரிவித்தார்.

gallerye_091026616_2361610.jpg

நம்பிக்கையான வார்த்தைகளை பேசிய  பிரதமர் மோடியின் உரையை கேட்ட பெண் விஞ்ஞானிகள் சிலர் கண்ணீர் விட்டு அழுதனர்.

உரையை நிறைவு செய்து புறப்பட்ட மோடியை வழியனுப்ப சென்ற இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

https://www.virakesari.lk/article/64278

Link to comment
Share on other sites

எம் ஜி ஆரின் கலாட்சேபத்தின் அப்பவே சொன்னது தான்  நடந்திருக்கிறது. 150 மில்லியன. டொலரை  நாட்டு மக்களின் கல்வி வளரச்சிக்கு செலவழித்து இருக்கலாம். யானைத்தலையை மனித உடலில் ஒட்ட வைத்து உறுப்பு மாற்று சத்திர சிகிச்சையை முதலில் செய்தது இந்தியர்களே என்று மோடி அறிவியல் மகாநாட்டில்  பெருமை பேசிய இந்தியாவால்  ஒரு விண்கலத்தை சரியாக கையாள முடியாமல் போனது கவலைதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் சந்திரனுக்கு சாட்டலைற் அனுப்புறதையும் "சந்திராஸ்டமி" பார்த்துத்தான் செய்வார்கள் நடப்பது இந்த்துத்துவா ஆட்சி ஆர் எஸ் எஸ் சங்பரிவார் சொல்கேட்டு மாட்டு இறைச்சி திங்கிறவனை ஒரு கூட்டம் கொலை செய்து திரியுது. அதென்னண்ணா சந்திரன் நவக்கிரகங்களில் ஒரு குளிர்சியான கிரகம் இல்லையோ அதன் கொல்லைப்புறத்தில பொம்பிளையாள்கள் குளிச்சுக்கொண்டோ ஆலிங்கனம் பண்ணிக்கொண்டோ இருப்பார்கள் நீங்கள் அவங்கள் இருட்டுப்பகுதியில் இப்படி இருக்கேக்கை அதைப்பார்க்க கமராவும் கையுமா அலைந்தால் தெய்வக்குத்தம் ஆகிவிடாதா அதுதான் அப்பிடி ஆகிட்டுது.

சின்ன வயசில நானும் இப்ப்டித்தான் பொங்கலுக்கு முதல்நாள் அண்ணர் வாங்கித்தந்த ஈக்கில் வானத்தை சந்திரனுக்கு அனுப்புறன் பாரடா, ஆனால் என்ன கொஞ்சம் உயரம் பத்தாது அதால வேப்பமரத்திலை ஏறிப்போய் அங்க இருந்து பத்தவைக்கிறன் எனக்கூறி ஓன்று இரண்டு வானத்தை லவுன்ச் பண்ணினான், காத்தால எழுபி என்னுடைய அக்கா பையன் கேட்டான் மாமா சந்திரனுக்கு அனுப்பின வானம் என்னாச்சு என, இப்பதான் அனுப்பியிருக்கிறன் அடுத்த பொங்கலுக்குத்தான் ரிசல்ட் வரும் எனக்கூறியே பத்துப்பொங்கள் கடந்து அவனும் பெரியவனாக வளர்ந்து இப்ப அவன் தன்னுடைய அக்கா பையனுக்கு இந்த வேலையக்காட்டுறான்.

என்ன நான் ஈக்கில் வனம்தான் விட்டனான் இவர்கள் அதைவிடப் பெரிசாச்செய்து ஈயப்பேப்பரைச் சுத்தி கலர்புல்லாக்கி வானத்தில, வானம்விட்டுப் பொழுதைப்போக்குகிறார்கள். என்ன ஈக்கில் வானம் விடும் இந்தியப்பிரதமர் இஸ்ரோ எனும் வேப்பமரத்தில நின்று விடுகிறார் அதை, கணக்கில் அடங்கா அக்கா பிள்ளைகள் பாத்து வாயப்பிளந்துகொண்டு நிற்கிறார்கள்.

சந்திர கிராகணம்  நடந்தால் கோவில் நடை சாத்திவிட்டு அது முடிந்ததும் தீட்டுப்பட்டுடுது என கோவிலைக் கழுவும் கூட்டம் சிவனுன் தலையில் உள்ள சந்திரனுக்கு விண்கலம் அனுப்பினால் தெய்வக்குதம் ஆகும்தானே.

சரி ஒப்பிரேசன் சக்சஸ் அடிச்ச காசைப் பங்குபிரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2--720x450.jpg

சந்திரயான் 2 விண்கலம் 95 சதவீதம் வெற்றியளித்துள்ளது : இஸ்ரோ கருத்து!

ஆர்பிட்டர் கருவி நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் வலம் வருவதாகவும் அதன்மூலம் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும் எனவும் இதனால் சந்திரயான் 2 விண்கலம் 95 சதவீதம் வெற்றியளித்துள்ளதாகவும் இஸ்ரோ நிறுவனத்தின் அதிகாரி கூறியுள்ளார்.

சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த விண்கலம் நிலவில் தரையிறங்கியதா, இல்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரோ மையத்தின் அதிகாரியொருவர் மேற்குறிப்பிட்டவாறு  தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “லேண்டர் கருவி தகவல் தொடர்பை இழந்துவிட்ட பிறகு அதன் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அது மீண்டும் சிக்னல் தருமா? என்று உறுதியாக சொல்ல இயலாது.

என்றாலும் ஆர்பிட்டர் கருவி நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் வலம் வந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த கருவி மூலம் 95 சதவீத ஆய்வு பணிகளை மேற்கொள்ள முடியும்.

சந்திரயான்-2 திட்டத்தின் இலக்கில் 5 சதவீதம்தான் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சந்திரயான்-2 திட்டம் தோல்வி என்று சொல்ல முடியாது. சற்று பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது.

நிலவின் அனைத்து பகுதியையும் ஆர்பிட்டரில் உள்ள அதிநவீன ஒளிப்பட கருவிகள் படம் பிடித்து அனுப்பும். அந்த படங்களின் அடிப்படையில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

http://athavannews.com/சந்திரயான்-2-விண்கலம்-95-சதவ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

à®à®©à¯à®© à®à®°à®£à¯à®à¯

நாசாவின் கருவியை ஏன் அனுப்பினீர்கள்.. உருவான சர்ச்சை.. விக்ரம் லேண்டர் மாயமானதில் தொடரும் மர்மம்!

சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் மாயமானது தொடர்பாக நிறைய சர்ச்சைகளும், மர்மங்களும் நிலவி வருகிறது.

சந்திரயான் 2 திட்டம் வெற்றிக்கு மிக மிக அருகில் சென்று சறுக்கி உள்ளது. மிக அருகில் என்றால், 2.1 கிமீ!. ஆம் சந்திரயான் 2வின் விக்ரம் லேண்டர் நிலவிற்கு அருகில் 2.1 கிமீ தூரம் வரை சென்றது.

ஆனால் கடையில் ஏற்பட்ட தொலைத்தொடர்பு கோளாறு காரணமாக சந்திரயான் 2 உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விக்ரம் 2 லேண்டர் எங்கே சென்றது என்றும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. சந்திரயான் 2ல் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் இருந்தது.

இந்த ரோவர் மற்றும் லேண்டர் இல்லாமல் வேறு 10 பொருட்களையும் சந்திரயான் 2 நிலவிற்கு கொண்டு சென்றது. சந்திரயான் 2 ஐரோப்பாவில் இருந்து மூன்று, அமெரிக்கா மற்றும் பல்கேரியாவில் இருந்து இரண்டு கருவிகளை நிலவிற்கு கொண்டு சென்றது. இவை எல்லாம் நிலையில் தரையிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நாà®à®¾à®µà®¿à®©à¯ பà¯à®°à¯à®³à¯

ஆனால் அதில் இஸ்ரோ சறுக்கி உள்ளது. அதேபோல் இதில் நாசாவில் இருந்து சந்திரயான் 2 எல்ஆர்ஏ எனப்படும் (Laser Retroreflector Array (LRA)) கருவியை நிலவிற்கு கொண்டு சென்றது. நிலவில் நாசாவின் Laser Retroreflector Array (LRA) கருவி ஏற்கனவே சில இருக்கிறது. இது பூமிக்கும் நிலவிற்கு இடையில் உள்ள தூரத்தை கணக்கிட உதவும்.

à®à®±à¯à®à¯à®à®²à¯

நாசாவின் அப்போலோ மூலம் ஏற்கனவே Laser Retroreflector Array (LRA) கருவிகள் சில நிலவில் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது இஸ்ரோ மூலம் மீண்டும் அந்த கருவிகள் அனுப்பப்பட்டது. ஆனால் இதை இஸ்ரோ நிலவில் டெலிவரி செய்ய முடியாமல் சறுக்கி உள்ளது.

à®à®©à¯à®© à®à®°à¯à®à¯à®à¯

ஆனால் இதை வைத்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அதன்படி இஸ்ரோ சந்திரயான் 2 போன்ற பெரிய திட்டங்களை செய்யும் போது அந்நிய நாட்டு பே லோட்களை கொண்டு செல்ல கூடாது. அப்படி கொண்டு செல்வது அந்த மிஷனுக்கே ஆபத்தாக முடியும்.
மாறà¯à®±à®®à¯

நாம் ஒரு குறிக்கோளுடன் கருவிகளை உருவாக்கி இருப்போம். மற்றவர்கள் வேறு மாதிரி கருவிகளை உருவாக்கி இருப்பார்கள். அப்படி இருக்கும்பட்சத்தில் நாசா போன்ற நிறுவனத்தின் கருவிகளை சந்திரயான் உடன் அனுப்புவது என்பது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இரண்டுக்கும் அது பிரச்சனை ஆகும்
à®à®©à¯à®© à®à¯à®²à®¿à®µà®°à®¿

இப்போது அந்த நாசாவின் கருவியையும் டெலிவரி செய்ய முடியாத இல்லை ஏற்பட்டுள்ளது, என்று கூறியுள்ளனர். விக்ரம் லேண்டர் எங்கே சென்றது என்ற மர்மம் இப்போதும் நீடித்து வருகிறது. அதனுள் இருந்த நாசாவின் கருவிகளுக்கும். பிரக்யான் ரோவருக்கும் என்ன நடந்தது என்பதும் பெரிய புதிராக உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/chandrayaan-2-why-isro-used-nasa-s-payload-new-controversy-362332.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people standing

 

Image may contain: 2 people, people smiling, text

Image may contain: one or more people, horse, sky and outdoor

இஸ்ரோ 1981 : செயற்கைக்கோளை ஏவுதளத்திற்கு கொண்டு செல்லக்கூட முறையான வாகன வசதி இல்லை.

இஸ்ரோ 2017 - 2019 : வணிக ரீதியாக மட்டும் பல நாடுகளை சேர்ந்த 239 செயற்கை‌க்கோள்கள் இஸ்ரோ மூலம் விண்ணில் ஏவப்பட்டு, அதன் மூலம் 6 ஆயிரத்து 289 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

இஸ்ரோ மூலம் கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பங்குதான் இந்திய அரசு இஸ்ரோவின் ஆராய்ச்சிக்கு கொடுக்கிறது.

சமீப ஆண்டுகளில் இஸ்ரோ மூலம் இந்திய அரசிற்கு வருவாய்தான் கிடைக்கிறது. மக்களின் வரிப்பணத்தை வீணாக்கலாமா என கேட்கும் அதிபுத்திசாலிகளுக்கு தன் வருவாய் மூலம் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது ISRO .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில ஒரு  முதுமொழி  இருக்கு

விரலுக்கேத்த  வீக்கம்  வேணும்  என்று

தனது  மக்களில்  முக்கால்வாசி  மக்களுக்கு மலசல  கூடமே  இல்லாத  தேசம்

வல்லரசு கனவு கண்டால்.....??

தமிழக அரசியல்வாதிகள்

தண்ணீர்  நீராவியாகாமல்  தடுக்க

தட்டுக்களை நீர்  மேல்  போட்டது  போலத்தான் இதுவும்..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நரி ஊளை இட்டாச்சு சக்ஸஸ்..👍

70222678_2912696268792562_72150520723438

Link to comment
Share on other sites

இந்தியா தோற்கலாம் ஆனாலும் தமிழகம் வென்றுள்ளது, 

அடுத்த தலைமுறை தமிழக விஞ்ஞானிகள் கனவு காணட்டும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் இதனை ஹிந்தியாவின் தோல்வியா பார்த்தாலும்.. இதன் தலைமை விஞ்ஞானி சிவன் ( https://en.wikipedia.org/wiki/Kailasavadivoo_Sivan ).. கன்னியகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி மகன்.. தமிழன். தமிழில் கல்வி கற்ற தமிழன். அந்த வகையில் ஒரு தமிழனின் முயற்சியும் இதில் முழுமையாக வெற்றியடையவில்லை என்ற கவலை உண்டு. ஆனாலும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

Sivan is son of a farmer and studied in a Tamil medium Government school in Mela Sarakkalvilai Village and later in Vallankumaranvilai in Kanyakumari district. He is the first graduate from his family.[6] Later Sivan graduated with a bachelor's degree in engineering from Madras Institute of Technology in 1980. He then got a master's degree in aerospace engineering from Indian Institute of Science, Bangalore in 1982, and started working in ISRO.[citation needed] He earned a doctoral degree in aerospace engineering from Indian Institute of Technology, Bombay in 2006. He is a Fellow of the Indian National Academy of Engineering, the Aeronautical Society of India and the Systems Society of India.[ci

இந்த முயற்சி அமெரிக்கா நிலவுக்கு ஒரு விண்கலத்தை அனுப்ப செலவழிக்கும் செலவில் ஐந்தில் ஒரு பங்குதான். அந்த வகையில்.. அந்தத் தமிழர் நாட்டின் செலவீனங்களுக்கான வாய்ப்பையும் கவனத்தில் கொண்டுள்ளார்.

ஏதோ வெள்ளையர்களால் தான் விஞ்ஞானத்தில் சாதிக்க முடியும் குறிப்பாக.. விண்வெளியில் சாதிக்க முடியும் என்பதையும் தாண்டி வசதி இருந்தால்.. தமிழனும் சாதிப்பான் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. 

பிரித்தானியாவின் தலைமை (விஞ்ஞான கழகத்தின் தலைமை விஞ்ஞானி) விஞ்ஞானியாக உள்ளவரும் தமிழகத் தமிழர். 

Link to comment
Share on other sites

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நரி ஊளை இட்டாச்சு சக்ஸஸ்..👍

70222678_2912696268792562_72150520723438

அறிவு, புத்தி இவை இல்லாதவனும் தலைவனாகலாம் என்பதை வெளிப்படுத்தி நிற்கிறது இந்தப் பின்னூட்டம்.

இந்த அதிபரின் கையில் அறிவுரேகையையே காணவில்லை. புத்திரேகை பள்ளத்தில் விழுந்துள்ளது. :shocked: 🤣

Link to comment
Share on other sites

இந்தியாவின் இந்த முயற்சியை தோல்வி என்று கருத எதுவும் இல்லை. ஆனால் இந்தியா  பணவிசயத்தில்  முன்னுரிமை கொடுக்கவேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்கு. அடிப்படை வசதிகளற்ற மக்கள் வாழ்வு கேள்விக்குறியாக இருக்கும் போது நிலவுக்கு சென்று என்னத்தை புடுங்குவது ?  இந்திய வல்லரசு கனவு என்பதே ஒருவர் மீது ஒருவர் ஏறிநின்று காண்பது போன்றது. அடித்தட்டில் உள்ளவன் நசுங்கி சாகவேண்டியதுதான். இந்த முயற்சியும் அப்படியான ஒரு கனவுக்குள் தான் அடங்கும். 

Link to comment
Share on other sites

சந்திரயான் 2 மூலம் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறங்க இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிகளுக்கு நாசா பாராட்டு

சந்திரயான் 2 மூலம் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறங்க இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிகளுக்கு நாசா பாராட்டு தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் இந்த முயற்சியால் நாசாவுக்கு ஊக்கமளித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சூரிய மண்டலத்தை ஒன்றாக ஆராய்வதற்கான எதிர்கால வாய்ப்புகளை எதிர்பார்த்திருப்பதாகவும் நாசா அறிவித்துள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=524285

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்.. முதல் கட்ட தேர்வை நிறைவு செய்தது விமான படை.!

iaf333-1567911501.jpg

ரெல்லி: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக விண்ணுக்கு அனுப்பப்படும் வீரர்களுக்கான முதல் கட்ட தேர்வை நடத்தி முடித்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை மேற்கொள்ள இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்கு ககன்யான் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.

இதை மத்திய அரசு அறிவித்த பிறகு 2022-ஆம் ஆண்டு நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் இஸ்ரோ தீவிரமாகியுள்ளது. இதற்காக ரூ 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. இதற்காக ரஷ்யா, பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதற்காக முதலில் 2 ஆளில்லா விண்கலங்களும் மனிதர்களை கொண்டு செல்லும் ஒரு விண்கலமும் தயாரிக்கப்படவுள்ளன. அவ்வாறு தயாரிக்கப்பட்ட பிறகு இரண்டு முறை ஆளில்லா விண்கலன்களை விண்ணுக்கு அனுப்பி ஆய்வு செய்யப்படும்.

பின்னர் வீரர்களுக்காக தயாரிக்கப்பட்ட விண்கலம் அனுப்பப்படும். இதற்காக இந்திய விமான படை முதல்கட்ட தேர்வை நடத்தியுள்ளது. கடுமையான உடல் திறன், பரிசோதனை, ஆய்வகப் பரிசோதனைகள், கதிர்வீச்சு பரிசோதனைகள், மருத்துவ பரிசோதனை, மனதிடத்திற்கான சோதனைகள் ஆகியவற்றின் மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இத்தனை தேர்வுகளில் தேர்ச்சியாகும் 2 முதல் 3 வீரர்கள் ககன்யான் திட்டத்துக்கு தேர்வு செய்வர் என கூறப்பட்டுள்ளது.

https://tamil.oneindia.com/news/delhi/indian-air-force-completes-first-level-of-selection-for-gaganyan-mission-362370.html

டிஸ்கி:

49184685_283141612400673_199745831434190

வேணாம் பிலிப்சு.! யார் பெத்த பிள்ளையோ.! ☺️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.