Jump to content

"வெல்க தமிழ்" அனைத்துலகத் தமிழர்களின் ஐ.நா.வை நோக்கிய எழுச்சிப் பேரணி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கிலாந்து பேச்சுக்கு உதவந்திருக்கும் நிலையில் புலம்பெயர் தமிழர் இதை சரியான முறையில் பயன் படுத்தவேண்டும்,

இரத்ததையும்,உயிரையும் கொடுக்கிறார்கள் போராளிகள், புலம்பெயர் தமிழர் ஒருநாள் லீவினை கொடுக்க முன்வருமோமா? நல்ல கால அவகாசம் இருக்கிறது சிந்தியுங்கள் புலபெயர் தமிழரே.:lol:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

டென்மார்க்கில் இருந்து ஜெனிவா செல்லும் ”வெல்க தமிழ் ஏ231” விசேட விமானம்.

அனைத்துலக தமிழரின் ஜ நா வை நோக்கிய வெல்க தமிழ் அமைதிப் பேரணியில் கலந்து கொள்வதற்க்காக டென்மார்க்கின் 2 நகரங்களில் இருந்து விசேட விமானம் ”வெல்க தமிழ் ஏ231” ஜெனிவா செல்கின்றது. அமைதிப் பேரணி நடக்கவிருக்கும் யூன் மாதம் 11 ந் திகதி காலையில் தமிழீழ தமிழர்களின் நடைமுறை அரசை அனைத்துலகமே அங்கீகரியென உரத்துக்கூறவிருக்கும் 211 புலம்பெயர் தமிழர்களுடன் புறப்படும் ”வெல்க தமிழ் ஏ231” பேரணி முடிவடைந்ததும் ஜெனிவாவில் இருந்து மீண்டும் புறப்பட்டு அன்று இரவே டென்மார்க் நகரங்களை வந்தடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

டென்மார்க்கில் உள்ள தமிழ் அமைப்புக்கள் வியாபார நிறுவனங்களின் அனுசரனையுடன் போக்குவரத்து ஒழுங்கள் செயப்பட்டுள்ளது. ”வெல்க தமிழ் ஏ231” இல் 211 இருக்கைகள் மட்டும் இருப்பதால் மேலதிக மக்கள் செல்வதர்க்காக விசேட பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.

sankathi.

Link to comment
Share on other sites

இதில் கலந்துகொள்ளும் யாழ் நண்பர்கள் தங்கள் பெயர்களை இங்கே பதியலாமே.

Link to comment
Share on other sites

அனைத்துலக தமிழரின் ஜ நா வை நோக்கிய வெல்க தமிழ் அமைதிப் பேரணியில் கலந்து கொள்வதற்க்காக டென்மார்க்கின் 2 நகரங்களில் இருந்து விசேட விமானம் ”வெல்க தமிழ் ஏ231” ஜெனிவா செல்கின்றது.

velkatamila321.JPG

அமைதிப் பேரணி நடக்கவிருக்கும் யூன் மாதம் 11 ந் திகதி காலையில் தமிழீழ தமிழர்களின் நடைமுறை அரசை அனைத்துலகமே அங்கீகரியென உரத்துக் கூறவிருக்கும் 211 புலம்பெயர் தமிழர்களுடன் புறப்படும் ”வெல்க தமிழ் ஏ231” பேரணி முடிவடைந்ததும் ஜெனிவாவில் இருந்து மீண்டும் புறப்பட்டு அன்று இரவே டென்மார்க் நகரங்களை வந்தடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

டென்மார்க்கில் உள்ள தமிழ் அமைப்புக்கள் வியாபார நிறுவனங்களின் அனுசரனையுடன் போக்குவரத்து ஒழுங்கள் செயப்பட்டுள்ளது. ”வெல்க தமிழ் ஏ231” இல் 211 இருக்கைகள் மட்டும் இருப்பதால் மேலதிக மக்கள் செல்வதர்க்காக விசேட பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.

Link to comment
Share on other sites

போராட்டத்தை அங்கீகரிக்கக் கோரி ஜெனிவாவில் தமிழர்கள் அமைதிப் பேரணி-

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்கக் கோரி புலம் பெயர் ஈழத் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள வெல்க தமிழ் அமைதிப் பேரணி எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் சுவிட்ஸர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெறவுள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழ் உறவுகள் ஆயிரக் கணக்கில் திரண்டு வந்து தாயகத்திலே தமது உறவுகள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை உலகறியச் செய்வதுடன் தமிழ் மக்களின் அபிலாசைகளையும் வெளிப்படுத்த உள்ளனர். தமக்கென தொன்மையானதொரு மொழி, பண்பாட்டுப் பாரம்பரியம், பூர்வீகத்

தாயகம், பொருண்மியக் கட்டுமானம் என ஐ.நா. சபையால் ஒரு தனிநாட்டுக்கென வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் தமிழ் மக்கள் தரப்பில் உள்ளன. ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னால் அந்நியர் இலங்கைத் தீவில் காலடி எடுத்து வைத்தபோது, தமிழ் சிங்கள இனங்கள் தனித்தனியான ஆட்சி அதிகாரங்களைக் கொண்டிருந்தமை வரலாற்றில் திட்டவட்டமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறைமையுள்ள மனிதர்களாக வாழ்ந்த தமிழர்கள் அந்நியர்கள் தமது சொந்த மண்ணில் காலூன்ற இலகுவில் அனுமதிக்கவில்லை. ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போரிட்ட அவர்கள் வெற்றி அல்லது வீரமரணம் என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தனர். சரணாகதி என்பது அவர்களது சரித்திரத்திலேயே இருக்கவில்லை. எனினும் அந்நியரின் சூழ்ச்சியும், ஒரு சில தமிழர்களின் காட்டிக்கொடுப்பும் தமிழ் மக்களின் இறைமை பறிபோகக் காரணமாயிற்று.

1948 ஆம் ஆண்டு, அந்நியர் இலங்கைத் தீவை விட்டு வெளியேறிய போதிலும், தமிழர்களின் இழந்த இறைமை மீளப் பெறப்படவில்லை. ஆரம்பத்தில் சிங்களத் தலைமைகளிடம் இறைமைக் கோரிக்கையை முன்வைத்திராத தமிழர்கள், தமது அரசியல் உரிமைகளை வழங்குமாறு மாத்திரமே கோரி வந்தனர். ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை, சுயாட்சி, மொழி உரிமை போன்ற ஜீவாதாரக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட போது, திட்டமிட்ட முறையில் தமிழ் தலைவர்கள் சிங்களத் தலைவர்களால் நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டபோது தமது உரிமைகளை நிலைநாட்டும் ஒரு வழியாக ஆயுதப் போராட்டத்தை தமிழர்கள் தெரிவு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இனவாத சிறிலங்கா அரசு பயங்கரவாத எதிர்ப்பு என்ற போர்வையில் கொடூர பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்ற மனிதநேயமற்ற சட்டங்களின் துணையுடன் நடாத்திய காட்டுத் தர்பாரில் தமிழ்த்தேசத்தின் ஆன்மா சிதைக்கப்பட்டது.

பெரும்பாலான தமிழர்கள் சொந்த நாட்டில் அகதிகளாக, கணிசமான தமிழர்கள் ஐரோப்பா, இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா பொன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்தார்கள். சொந்த மண்ணின் தொப்புள்கொடி உறவை அறுத்துவிட முடியாத இந்த மக்கள் தமது சொந்த நாட்டில் அன்றாடம் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் வேட்டையாடப்பட்டு வரும் தமது சகோதரர்களுக்காக தாம் வாழுகின்ற நாடுகளில் அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு குரல் கொடுத்து வந்தனர். தொடர்ந்து குரல் கொடுத்தும் வருகின்றனர். உள்நாட்டில் அரச பயங்கரவாதத்தின் கோர முகத்தைக் காட்டும் ஷ்ரீலங்கா அரசு வெளிநாடுகளில் புத்தரின் போதனைகளைக் கடைப்பிடிப்பதாக கபட நாடகம் ஆடி மேற்கொண்டுவரும் வஞ்சகப் பொய்ப் பிரசாரங்களை முறியடிக்கும் இராஜதந்திரிகளாக புலம்பெயர் தமிழர்கள் மாறிய போது, சிறிலங்கா அரசாலும் அதன் ஏவல் நாய்களாலும் அதனைச் சகித்துக்கொள்ள முடியவில்லை.

புலம் பெயர் தமிழர்களிடையே திட்டமிட்ட முறையில் பிளவுகளை ஏற்படுத்தி அதற்குத் தூபம் போட்டு வளர்க்கும் இந்த ஏவல் நாய்கள், தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தனித் தன்மையை, நியாயத்தை, அவசியத்தைக் கொச்சைப்படுத்தும் கீழ்த்தரமான பிரசாரங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை, புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் சிறிலங்காவின் மீது அவை ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறித்து நிற்பவையாக உள்ளன.

அண்மைக் காலமாக சர்வதேச சமூகம் வெளியிட்டு வரும் கருத்துகள் ஷ்ரீலங்கா அரசுக்கு அச்சத்தைத் தோற்றுவித்துள்ளன. சர்வதேச மன்னிப்புச் சபையால் உலகக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டியின் போது மேற்கொள்ளப்பட்ட பிரசாரம், சிறிலங்காவிற்கான நிதியுதவியை நிறுத்துமாறு மனித உரிமை கண்காணிப்பு மையம் ஜப்பான் அரசிடம் விடுத்த வேண்டுகோள், சிறிலங்காவிற்கான ஒரு தொகுதி நிதியை பிரித்தானியா நிறுத்தி வைத்துள்ளமை போன்ற விடயங்கள் சிறிலங்கா தொடர்பில் மாறிவரும் சர்வதேச சமூகத்தின் கருத்தைப் புலப்படுத்தி நிற்கிறது. இவை தவிர, ஷ்ரீலங்காவில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களும் இன்று சர்வதேச சமூகத்தின் கரிசனைக்குட்பட்ட விடயங்களாகிவிட்டன.

இத்தகைய சூழலில் புலம்பெயர் தமிழ் மக்களின் பணி இரட்டிப்பு வேகத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையுள்ளது. விடுதலையை விரைவு படுத்தும் தமது வரலாற்றுக் கடமையை அவர்கள் நிறைவேற்றியே ஆகவேண்டும். அதற்காக அவர்கள் தமது அன்றாட நிகழ்ச்சி நிரலில் நேரத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களால் நடாத்தப்பட்டு வரும் வீரம் செறிந்த போராட்டம் தீர்க்கமான காலகட்டத்தை எட்டியுள்ள இன்றைய சூழலில், புலம் பெயர் தமிழ் மக்களின் செயற்பாடென்பது காலத்தின் கட்டாயம் ஆகியுள்ளது. முள்ளை முள்ளால் எடுப்பதென்பதற்கு ஒப்ப சிறிலங்கா அரசினதும், அதன் அடி வருடிகளினதும் பொய்ப்பிரசாரங்கள் அடிப்படையில்லாதவை என்பதை நிரூபிப்பதற்கு, புலம் பெயர் தமிழ் மக்களுக்கு அரிய சந்தர்ப்பம் ஒன்று கிட்டியுள்ளது.

ஜெனீவா நகரில் நடைபெறும் பேரணியில் அணி அணியாகக் கலந்துகொண்டு, தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுப்பதனூடாக தமது துயரங்களுக்கெல்லாம் முடிவு கிடைக்கக்கூடிய ஒரு வாய்ப்பை அவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சர்வதேச அரங்கிலே சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள், தமிழர் விரோதப் போக்கு அநீதியான நடவடிக்கைகள் என்பன அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. மறுபுறம், தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயத்தன்மையை சர்வதேசம் ஓரளவு புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை தமிழ் மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினக்குரல்

Link to comment
Share on other sites

நாம் ஒன்றுபட்டு எழுச்சிகொள்ள மீண்டும் ஒரு சந்தர்பமாக இது உள்ளது. இலங்கை பேரினவாத அரசின் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை உலகிற்கு எடுத்துரைக்க முறண்பாடுகளை தாண்டி ஒன்றிணைவோம். இதனால் தினமும் அச்சத்துடன் வாழும் மக்களுக்கு ஒரு ஆறுதல் ஒளியாக பங்குகொள்ளும் ஒவ்வொருவரும் திகழ்வார்கள். உலகம் அரச பயங்கரவாதம் மனித உரிமை மீறல்கள் பற்றி சற்று கதைக்க தொடங்கியுள்ளது. இந்த சந்தர்பத்தில் எமது எழுச்சியானது மிகவும் பிரதானமானது. தாயகத்தில் அவலங்கள் என்றுமில்லாதவாறு அதிகரித்து விட்டது. பெரும் போர் ஒன்று தமிழர்கள் மேல் நிர்ப்பந்திக்கப்படுகின்றது. இதை எதிர்கொள்ள தாயக உறவுகள் அணிதிரண்டு நிற்கையில் நமது ஒன்றுபட்ட எழுச்சி அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் உறுதியை வலுவாக்கும். சுத்துமாத்துகள் செய்து இந்திய உட்பட பலநாடுகளின் ஆயுதங்கள் இலங்கைக்கு வந்த வண்ணம் உள்ளது. அரசுகளுக்கிடையில் இந்த பயங்கரவாத குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமையின் வெளிப்பாடாக இது உள்ளது. ஜே வி பி ஜப்பானின் உதவிக்கு நன்றி சொல்கிறது. ரம்புக்வெல இந்தியாவை மூத்த சகோதரனாகவும் பாகிஸ்தான் சீனாவை இளைய சகோதரனாகவும் உறவு கொண்டாடிக்கொண்டிருக்கின்றா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தமிழர்களின் நடைமுறை அரசை அனைத்துலகமே அங்கீகரி

ஐ.நாவை நோக்கிய தமிழர் பேரணி

'உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே" என்பர் தொல்காப்பியனார். இந்த உலகம் ஆங்கிலத்தில் 'எலீற்" எனக்கூறப்படும் உயர்ந்தோர் குழாம். அதாவது வலியவர்களின் குழுமம். வரலாற்றில் போராட்டங்களின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்தியவர்களே இந்த குழுமத்தில் அங்கத்துவம் பெறுகின்றனர்.

ஜக்கிய நாடுகள் அமைப்பில் அரசுகள் மாத்திரமே அங்கத்துவம் பெறும் தகுதியை பெற்றவர்கள் என இவ் அமைப்பின் சாசனம் கூறுகின்றது. அந்த அரசு சமாதானத்தை விரும்பும் அரசாகவும், சாசனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கடப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் ஆற்றலையும் விருப்பையும் கொண்டதாகவும் இருக்கவேண்டும் எனக் கூறப்படுகின்றது. இவ்வாறான அரசுகளுக்கு அங்கத்துவத்திற்கான வாசல் திறக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் சபையின் பரப்புரையின்பேரில் பொதுச்சபையின் முடிவின் பிரகாரம் இந்த அங்கீகாரம் அரங்கேற்றப்படும்.

"Membership in the United Nations is open to all other peace-loving states which accept the obligations contained in the present charter and, in the judgment of the organization, are able and willing to carry out these obligations.

The admission of any such state to membership in the United Nations will be effected by a decision of the General Assembly upon the recommendation of the Security Council."

Article 4,Chapter 2, United Nations Charter

அரசு, அரசு என குறிப்பதன் மூலம் தேசம் ஒன்று அங்கத்துவம் பெறவேண்டின் அது அரசாகவேண்டும்.

மானிட வரலாறு சாராம்சத்தில் முற்போக்கானது. விடுதலையை நோக்கியது. இதற்காக மனிதன் போராடி வருகின்றான்.

'இந்த உலகில் அநீதியும் அடிமைத்தனமும் இருக்கும்வரை, சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும்வரை, விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி"

- தமிழீழத் தேசியத்தலைவர் திரு. வே. பிரபாகரன்.

காலம் காலமாக யுத்தங்களும் அழிவுகளும் ஏற்பட்டபோதும் சென்ற நூற்றாண்டில் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய இரண்டு உலக மகாயுத்தங்களால் உலுப்பப்பட்ட உலகம் அதிலும் கிட்லரின் காலடியில் நசுங்கிய ஜரோப்பா, அந்த யுத்தத்தின் மூலம் வல்லரசுகளான அமெரிக்கா, சோவியத் றஸ்சியா, இவற்றில் வெற்றி பெற்ரோரே 1945 ஆம் ஆண்டில் ஜ.நா அமைப்பை ஏற்படுத்தி அதில் அங்கத்துவம் பெறுவதற்கான விதிமுறைகளையும் வகுத்தனர். 1945 இல் 51 அரசுகளை அங்கத்துவர்களாகக் கொண்டிருந்த இந்த அமைப்பு சென்ற ஆண்டு அங்கத்துவம் பெற்ற ஆழவெநநெபசழ உடன் 192 ஆக வீக்கம் பெற்றுள்ளது.

இந்த வீக்கம் இரண்டு காலகட்டங்களில் இடம் பெற்றது. 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் இடம்பெற்ற ஏகாதிபத்தியத்தில் இருந்து இன்று மூன்றாம் உலகம் என குறிப்பிடப்படும் பல நாடுகள் சென்ற நூற்றான்டின் 50 களிலும் 60 களிலும் விடுதலை பெற்று அரசுகளாக அகங்கீகரிக்கப் பட்டது முதலாவது காலகட்டம். இரண்டாம் உலக யுத்தத்தின் உடன் நிகழ்வான பனிப்போர் 1991 இல் முடிவுக்கு வந்தபோது சோவியத்தில் இருந்தும், அதன் ஆதிக்கத்துள் இருந்த யூகோசிலாவியா, செக்கோசிலாவியா என்பவற்றின் உடைவுகளில் புதிய அரசுகள் அங்கீகாரம் பெற்றமை இரண்டாவது கட்டம். இவற்றின் இடையே இடம் பெற்ற ஜரிஸ் மக்களின் போராட்டம், வீரம் விழைத்த வியட்னாமியரின் போராட்டம், எறிற்ரிய மக்களின் போராட்டம் என்பன தனித்துவம் வாய்ந்தவை.

இருந்த போதும் இந்த ஜ.நா அமைப்பு தோற்றம் பெறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அரசுகளாக விளங்கிய பல தேசங்கள் இந்த அமைப்பின் தோற்றத்திற்கான நிகழ்வுகளாலும் அதற்கு முன்னர் இடம் பெற்ற ஏகாதிபத்தியங்களால் குடியேற்ற நாடுகளாக்கப்பட்டமையாலும் அரசு என்ற அந்தஸ்தை இழந்து விட்டன.

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இவ்வாறான அரசு அற்ற தேசங்கள் இன்றைய மூன்றாம் உலகால் விழுங்கப்பட்டுள்ளன என்றும் இத்தேசங்களை நான்காம் உலகம் என்றும், இந்த நான்காம் உலகின் மீது மூன்றாம் உலகம் புவியல் ரீதியிலான யுத்தம் ஒன்றை பிரகடனம் செய்துள்ளது என்றும் இந்த யுத்தத்தில் முதலாம் உலகமும் இரண்டாம் உலகமும் மூன்றாம் உலகிற்கு உதவுகின்றன எனவும் Nietschmann என்னும் அறிஞர் கூறுகின்றார்.

இதனால்தான் இருபத்தியோராம் நூற்றாண்டு தேசிய இனங்களின் நூற்றாண்டு என மானிடவியலாளர்களால் குறிப்பிடப்படுகின்றது.

உதாரணமாக 1505 இல் போத்துக்கேயர் இலங்கைத் தீவில் நுழைந்தபோது அங்கு மூன்று அரசுகள் இருந்தன. இதில் தீவின் வடகிழக்கில் தமிழ் அரசு இருந்தது. நிர்வாக வசதிக்காக பிரித்தானியர் 1833 இல் இவ் அரசை சிங்களத்துடன் இணைத்தனர். தமிழரின் அரசு மதத்தால், மொழியால். பழக்க வழக்கங்களால் சிங்கள அரசில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்கிறார் பிரித்தானிய அதிகாரியான Sir Hugh Cleghorn -1879.

ஆட்புல ஒருமைப்பாடு (Terrritorial integrity) இறைமை (Sov'ereignty) என்ற பெயரில் சிங்கள அரசால் தமிழர் தேசத்தின்மீது நடத்தப்படும் புவியல் யுத்தத்தின் மூலமும் அன்னியதேசம் ஒன்றின்மீதான வான்வழித்தாக்குதல்களின் மூலமும் புலப்படுத்தப்படுவது என்ன?

தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் இன்று நடைமுறை அரசு ஒன்றை உருவாக்கியுள்ளது. தமிழ் ஈழமக்கள் சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலும், தேசிய ஆளுமையாலும், இழந்த இறைமையை மீட்டல், தாமாகப் பெற்ற இறைமை, என்னும் தகுதிகளால் அரசுக்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இது முற்போக்கானது.

விடுதலை என்னும் உயரிய மானிட இலட்சியத்தை போராட்ட இலட்சியமாக வரித்துக்கொண்டுள்ளது. சிங்கள அரசை அங்கீகரிக்கின்றது. சிங்கள அரசுடன் சமாதானமாக வாழ்வதற்கான ஆற்றலையும் விருப்பையும் கொண்டுள்ளது. ஒன்றே உலகம் என்ற மானிடத்தின் உன்னதமான பயணத்திற்கு தகுதியான நனிநாகரிகம் கொண்டுள்ளது. நடைமுறை அரசை கொண்டுள்ளதால் ஜ.நா சாசனத்தில் கூறப்பட்டுள்ள கடப்பாடுகளை கடைப்பிடிக்கும் ஆற்றலையும் இவ் நடைமுறை அரசு பெற்றுள்ளது.

அனைத்துலகும் தமிழீழத் தமிழர்களின் நடைமுறை அரசை அங்கீகரிப்பதன் மூலம் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர முன்வந்திட வேண்டும் என்பதே தமிழர்களின் தாகம். திறந்திருக்கும் வாசலால் தமிழீழத்தை அரவணைத்துக்கொள்ளுங்கள்.

இணைப்பு: அனைத்துலகத் தமிழர்களின் ஐ.நா.வை நோக்கிய எழுச்சிப் பேரணி

ம.தனபாலசிங்கம்

சிட்னி, அவுஸ்திரேலியா

03-06-2007

http://www.tamilnaatham.com/articles/2007/...bal20070606.htm

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.