Jump to content

வடக்கில் மட்டும் மக்கள் கொல்லப்படவில்லை தெற்கிலும் ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டனர் ; பாட்டாளி சம்பிக்க ரணவக்க


Recommended Posts

இலங்கையில் வடக்கில் மட்டும் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை தெற்கிலும் ஏராளமான இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கை மக்கள் தங்களின் நாட்டிலேயே ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ நடை முறை சாத்தியமான முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என மேல் மாகாணம் மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

pattali_champika_ranawaka.jpg

யாழ்ப்பாணம் மாநகர சபை மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாநகர சபை மைதானத்தில் முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 யாழ்ப்பான மாநகர மண்டப கட்டிட நிர்மாணம் அரசியல் நோக்கம் கொண்டு செய்யப்படவில்லை.அதில் எவ்வித குறுகிய சிந்தனைகளும் இல்லை.நாம் ஆட்சிக்கு வந்தது முதல் அபிவிருத்தியை நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றோம்.இந்த கட்டிடத்தை அமைக்க வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க முன்னர் நான் இங்கு வந்திருந்தேன்.இங்குள்ள அதிகாரிகள் அனைவரையும் இணைத்து அவர்களின் கருத்துகள் அபிப்பிராயங்கள் எல்லாம் கேட்டே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எமது நாடு கடந்த காலங்களில் பல இன்னல்களை சந்தித்தது.நாட்டில் கிளர்ச்சி,உள்நாட்டு போர் காரணமாக பல பாதிப்புகளை சந்தித்தோம்.வடக்கில் மட்டும் மக்கள் கொன்றளிக்கப்படவில்லை.தெற்கிலும் 60 ஆயிரம் இளைஞர் யுவதிகள் கொன்றளிக்கப்பட்டனர்.இந்த பாதிப்புக்களினால் தமிழர்கள் அதிகமாக கனடாவிலும் சிங்களவர்கள் அதிகமாக அவுஸ்திரேலியாவிற்கும் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

எனவே நாட்டில் உள்ளவர்கள் புலபெயர் நாடுகளுக்கு தப்பித்து செல்லாது இங்கு வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.மக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்கு நடைமுறை சாத்தியமான விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.என்றார்.

https://www.virakesari.lk/article/64317

 

Link to comment
Share on other sites

வடக்கிலும் தெற்கிலும் ஏன் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள் என்பதை அறிய சம்பிக்கவுக்கு அறிவு போதாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெற்குப் படுகொலைகளுக்கு அப்போதே சர்வதேச விசாரணை வந்து சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால்.. தமிழர்கள் மீது ஒரு இனப்படுகொலையை தூண்டி விட ஆட்கள் இருந்திருக்கமாட்டார்கள். 

இப்போ எல்லாவற்றையும் ஒன்றாக்கி விசாரிக்க வேண்டும் என்பதையே இந்த ஒப்புதல் வாக்குமூலம் எடுத்துச் சொல்கிறது.

சர்வதேசம் இதனை செவிமடுத்து துரித கதியில் செயற்படனும்.. இல்லாவிட்டால்.. மனித இனப்படுகொலைகள்... இத்தீவில் தலைவிரித்தாடுவது தடுக்க முடியாததாக இருக்கும்.

காரணம் குற்றவாளிகளை சொறீலங்கா நீதித்துறையும்.. அரசும்.. இராணுவமும் பாதுகாத்து வருகின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வெறி....ஆள்பிடிப்பு வெறி....போதாக்குறைக்கு சுமந்துவும் சேர்ந்து தேவாரம் பாடுது..

Link to comment
Share on other sites

On 9/7/2019 at 5:26 PM, ampanai said:

இலங்கையில் வடக்கில் மட்டும் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை தெற்கிலும் ஏராளமான இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

வடக்கில் இருக்கிறவங்களை தெற்கில் இருக்கிறவங்க படுகொலை செய்தாங்கள். அதை போலவே தெற்கில் இருக்கிறவங்களை வடக்கில் இருக்கிறவங்க படுகொலை செய்யோணும் என்டு சம்பீக சொல்றார்.

Link to comment
Share on other sites

அட சம்பிக்க பரவாயில்லை போல கிடக்கு. முத்தையா முரளிதரன் திருவாய் மலர்ந்தருளியுள்ளதை கேட்டால்.......

" 2009 ல் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டநாளே எனது வாழ்வில் முக்கியமான நாள் " (இலட்சம் மக்களைக் கதற்க் கதறக் கொன்று ஆயிரம் புலிகளை அழித்த நாளில் அவர் பெற்ற சந்தோசம் பற்றி முத்தையா முரளீதரன் )

Image may contain: 1 person, closeup
Link to comment
Share on other sites

மிஸ்ட்டர் முரளி அரசியலில் குதிக்கும் நோக்கத்துடன் இவ்வாறு  தெரிவிக்கிறார் என தோன்றுகின்றது. 


சம்பிக்கவோ இரண்டு வேறான போராட்டங்களையும் ஒரே தராசில் போட்டு சமன் செய்ய எண்ணுகிறார். இவருக்கு போராட்ட வடிவங்கள், அவற்றை யார் எவ்வாறு அழித்தார்கள், இனப்படுகொலை மற்றும் தொடரும் இனவழிப்பு, என்ற விபரம் தெரிந்தும் அதை மறைக்கிறார். இவர் ஒரு இனவாத அரசியல் வாதி, வேறு எதை எதிர்பார்க்கலாம்?     

Link to comment
Share on other sites

On 9/7/2019 at 11:53 AM, nedukkalapoovan said:

.சர்வதேசம் இதனை செவிமடுத்து துரித கதியில் செயற்படனும்.. 

சர்வதேசத்துக்கு விலாசமே இல்லை. அதற்குள் அதற்கு நீங்கள் செவி கொடுத்து அது செவிமடுத்து பிறகு துரித கதியில் செயற்பட வேண்டும் என்றால் ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.