• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
பிழம்பு

யாழ் மாநகரை கம்பீரமாக கட்டியெழுப்புவோம் – பிரதமர்

Recommended Posts

 
FB_IMG_1567851224152.jpg

“அழகிய கம்பீரமாக எழுந்து நிற்கும் நல்லூர் ஆலயம் போல் அனைவராலும் பேசப் படக்கூடிய புதியதொரு யாழ்ப்பாணம் நகரம் கட்டியெழுப்பப்படும்”

இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர கட்டடத்திற்கு இன்று (07) அடிக்கல் நாட்டிய போது இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

யாழ்ப்பாணம் மாநகர மண்டபத்திற்கு நாம் இன்று அடிக்கல் நாட்டியுள்ளோம். இது யாழ்ப்பாணத்திற்கு அழகிய மண்டபமாக இருக்கப் போகிறது. நல்லூர் ஆலயம் எந்தளவு அழகியதொரு கம்பீரமாக எழுந்து நிற்கின்றதோ அதேபோல் எல்லோராலும் பேசப்படக்கூடிய அழகான புதியதொரு யாழ்ப்பாணம் நகரத்தை கட்டியெழுப்பப்பும் மாபெரும் திட்டம் இது என்பதை நான் இந்த சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்கின்றேன்.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் என்னிடம் எப்போது கட்டடம் வரப்போகிறது. எப்பொழுது நிதி ஒதுக்கப்போகிறீர்கள்? எப்பொழுது இதை செய்யப்போகிறீர்கள்? என தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பார். என்னிடம் கேட்பார். அமைச்சிடம் கேட்பார். இப்படியாக யாழ் மாநகரத்தை கட்டியெழுப்பும் பணியில் அவரது பங்களிப்பு பாராட்ட வேண்டியதாகும் இவ்வாறானவர்கள் தான் எமக்கு கட்டாயமாக தேவையாகும்.

யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபம் அமைக்க இந்தியா நிதி உதவியளித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அதேபோல் சந்தைத் தொகுதியை அமைத்து வருகின்றோம். நெடுந்தூர பஸ் நிலையக் கட்டடம் அமைக்கப்படுகிறது. மேலும் பலாலி விமான நிலையத்தை நாம் யாழ்ப்பாணம் விமான நிலையம் என்கின்ற பெயரில் அபிருத்தி செய்து வருகின்றோம். முதலாவது கட்டமாக இந்தியாவுக்கு மாத்திரம் தான் விமான சேவை இடம்பெறும். ஆனாலும் காலக்கிரமத்தில் அது சர்தேச மட்டத்தில் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்யும் விமான நிலையமாக மாறும் என்பதை கூறிக்கொள்கின்றேன். இதன்மூலம் சுற்றுலாத்துறையும் அபிவிருத்தியடையும்.

சுற்றுலாப் பயணிகளை இந்த பிரதேசத்திற்கு ஈர்த்துக்கொள்வதற்கு குறிப்பாக தீவுப் பிரதேசங்களுக்கு ஈர்த்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும். அதற்கான மூலோபாயங்கள் என்ன என்பதை சிந்தித்து வருகின்றோம் அதற்கான திட்டங்களை உருவாக்கி வருகின்றோம். இதனை பிரதான சுற்றுலா வலயமாக்கவுள்ளோம்.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிருத்தி செய்துவருகிறோம் அத்துடன் சீமெந்து தொழிற்சாலையையும் மீள இயக்கவும் திட்டமிட்டுள்ளோம். புதிய தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளோம். கிளிநொச்சி, பூநகரியையயும் அபிவிருத்தி செய்யவுள்ளோம். அதுபோல் யாழ்ப்பாணத்தில் வர்த்தகம் தொழிற்முயற்சிகளையும் கட்டியெழுப்பவுள்ளோம் இதற்கென புதிய நிதியத்தை ஸ்தாபிக்கப்படும். – என்றார்.

https://newuthayan.com/?p=5116

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

தேர்த்தல் நெருங்க "அடியடா பிடியாடா" என்பார்கள். தேர்த்தல் முடிய புத்தர் மூலைக்கு மூலை முளைத்துக்கொண்டே போவார்.( இப்போ அவதானித்து பார்த்தீர்கள் எனில் புத்தர் ஒரு நீண்ட break எடுப்பதை அவதானிக்கலாம். இவர்களின் அனுசரணை இல்லாமல் புத்தர் ஒரு அங்குலமும் நகர மாட்டார் என்பதையும் தமிழ் வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்)

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

திட்டங்களை தீட்டுவது நல்லதே, அதை நிறைவேற்ற நிதியை ஒதுக்கி பின்னர் அதை பெரு எதற்கும் திசை திருப்பாமல் இருக்கவேண்டும். திட்டம் முழுமையாக்கப்படல் வேண்டும். 

இப்படி பல திட்டங்கள் எழுத்துடனும் அரை வாசியிலும் இறந்து விட்டன.  

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

அதுக்கு நீங்கள் எழும்ப வேணுமே

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

 

ஒரு கட்டடம்

அடிக்கல் 1 Vs அடிக்கல் 2

டக்ளஸ் தேவானந்தா பசில் ராஜபக்சே கோஷ்டி Vs சம்பந்தன் ரணில் விக்கிரமசிங்கே கோஷ்டி

70193359_533047853903240_684265928658622

69766391_533046573903368_845639177945586

Share this post


Link to post
Share on other sites

அடிக்கல் நாட்ட ல்தி றந்துவைத்தல்  என்று அரசியலவாதிகளின் ஆடம்பர  பந்தா, பொன்னாடை போர்ததுதல் என்ற உதவாக்கரை சம்பிரதாயங்கள் நடைபெறாத  நாடுகளில் நாம் வாழ்வது குறித்து மகிழ்ச்சியடைவதுடன்  எமது நாட்டிலும் இதே போல் நடக்க வேண்டும் என்பது ஒரு கனவு. 

Edited by tulpen
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
53 minutes ago, tulpen said:

அடிக்கல் நாட்ட ல்தி றந்துவைத்தல்  என்று அரசியலவாதிகளின் ஆடம்பர  பந்தா, பொன்னாடை போர்ததுதல் என்ற உதவாக்கரை சம்பிரதாயங்கள் நடைபெறாத  நாடுகளில் நாம் வாழ்வது குறித்து மகிழ்ச்சியடைவதுடன்  எமது நாட்டிலும் இதே போல் நடக்க வேண்டும் என்பது ஒரு கனவு. 

ம்கும் எங்க நடக்க போகுது கிணறு முதல் கக்கூஸ் வரைக்கும் திறப்பு விழாவும் சாவீட்டு அரசியலும் 

Share this post


Link to post
Share on other sites
On 9/7/2019 at 8:30 PM, பிழம்பு said:

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் என்னிடம் எப்போது கட்டடம் வரப்போகிறது. எப்பொழுது நிதி ஒதுக்கப்போகிறீர்கள்? எப்பொழுது இதை செய்யப்போகிறீர்கள்? என தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பார்.

யாழ்நகர முதல்வர் பக்கா கேடி. நிதி கிடைச்சா சுமந்திரன் போல கொள்ளையடிக்கலாம் என்டு அலைஞ்சு திரிஞ்சிருப்பார்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 9/7/2019 at 5:00 PM, பிழம்பு said:

“அழகிய கம்பீரமாக எழுந்து நிற்கும் நல்லூர் ஆலயம் போல் அனைவராலும் பேசப் படக்கூடிய புதியதொரு யாழ்ப்பாணம் நகரம் கட்டியெழுப்பப்படும்”

அஹா.... நல்லூர் ஆலயத்தை  இவர்களா கட்டி எழுப்பினார்கள்
இத்தனை நாளும் இது தெரியாமல் இருந்த்திட்டேன்

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, tulpen said:

அடிக்கல் நாட்ட ல்தி றந்துவைத்தல்  என்று அரசியலவாதிகளின் ஆடம்பர  பந்தா, பொன்னாடை போர்ததுதல் என்ற உதவாக்கரை சம்பிரதாயங்கள் நடைபெறாத  நாடுகளில் நாம் வாழ்வது குறித்து மகிழ்ச்சியடைவதுடன்  எமது நாட்டிலும் இதே போல் நடக்க வேண்டும் என்பது ஒரு கனவு. 

பொதுவாக மேற்குலகத்தில் மண்வெட்டியுடன் அரசியல்வாதிகள் காட்சி தருவார்கள். 

2019-0318-federal-courthouse-groundbreaking-1024x576.jpg

 

Share this post


Link to post
Share on other sites

அடிக்கல் நாட்டு வைபவத்திற்கு 27 லட்சம் செலவாம் ,ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு சாப்பாட்டின் விலை 2500 கிட்ட ( தகவல் உறுதிபடுத்தப்பட்டது இல்லை) 

Share this post


Link to post
Share on other sites

கல்முனையை பறித்து முசுலிமிடம் கொடுத்தாயிற்று...இப்ப யாழ்ப்பாணத்தையும் பறித்து பிரிக்க ரெடி..பதவி ஆசை பிடித்த  ..காட்டெரி இது..

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா மார்ச் 6 -7 கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் 6 ஆம் 7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இம்முறை இந்த திருவிழாவில்சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் வரையில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து 3,000 பக்தர்களும், இலங்கையில் இருந்து 7,000 பக்தர்களும் இந்த புனித தேவாலய திருவிழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை கடற்படை ஊடக போச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பக்தர்களின் வசதி கருதி போக்குவரத்து தண்ணீர் உள்ளிட்ட சகல அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதேவேளை கொரோனா(கொவிட் 19) வைரஸ் தொடர்பாகவும் இதில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இது தொடர்பில் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. பக்தர்கள் புறப்படும் இடத்திலும் திரும்பி வரும் பொழுதும் கொரோனா வைரஸ் குறித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார். கச்சதீவு புனித தேவாலய ஆராதனைகள் தொடர்பில் வடக்கு செயலகம் சம்பந்தப்பட்ட பிரிவினருடன் தொடர்புகொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த கடற்படைப் பேச்சாளர் கடற்படை கொண்டுள்ள கப்பல் மற்றும் படகுகளை இதற்காக பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். -(3)   http://www.samakalam.com/செய்திகள்/கச்சத்தீவு-புனித-அந்தோனி/
  • மன்னித்துக் கொள்ளுங்கோநான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை . இது எங்களுக்கு பக்கத்து ஊர் தான். பொதுவாக மயானத்துக்கு பக்கத்தில் யாரும் குடியிருப்பதில்லை. ஆனால் இவர்களுக்கு வேறு இடத்தில் காணி வாங்க அருகில் உள்ள உயர் சாதி என்று சொல்லப்படுபவர்கள் விடவில்லை . இந்த மயானப்பிரச்சினைநீண்ட காலமாக இருக்கிறது.இந்த மயானம்நாலைந்து கிராமங்களுக்கு பொதுவானது. இது இன்னுமொரு கிராமத்தினருக்கும் மயானத்துக்கு அருகில் உள்ளவர்களுக்குமான பிரச்சினை.இதை தீர்ப்பது என்றால் அவர்களுக்கு வேறு இடத்தில் காணி கொடுப்பது தான். மேலும் இறந்தவர் அதே சாதியை சேர்ந்தவர் இல்லை
  • மிலேனியம் ஒப்பந்தத்தில் இனி கையொப்பமிடப் போவதில்லை February 28, 2020   அமெரிக்காவின் மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் ((Millennium Challenge Corporation – MCC) நிறுவனத்துடன், இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடவிருந்த ஒப்பந்தத்தில், இனி கையொப்பமிடப் போவதில்லை என அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நேற்றையதினம் (27) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இந்த ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கைபயின் பிரகாரமே இந்தத் தீர்மானத்துக்கு அரசாங்கம் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்றையதினம் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த ஒப்பந்தத்தினூடாக, மீளப் பெறப்படாத வகையில், 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (85 பில்லியன் ரூபாய்) நிதி உதவி கிடைக்கப்பெற இருந்ததாகவும் இது, 447.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியாகவும் 32.5 மில்லியன் டொலர்கள் சேவையாகவும் வழங்கப்படவிருந்தன. இந்த நிதியுதவியானது, பிரதான இரு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காகவே வழங்கப்படவிருந்த போதிலும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு பொருளாதாரச் சுதந்திரம், நியாயமான நிர்வாகம், பொதுமக்களுக்கான முதலீடுகள் போன்ற சில நிபந்தனைகள் உள்ளதனால் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதால், இலங்கையின் இறையாண்மைக்குப் பிரச்சினைகள் ஏற்படுவதாக இது பற்றி ஆராய்ந்த குழு, தனது இடைக்கால அறிக்கையில், சுட்டிக்காட்டியுள்ளது. இதனால், இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லை என அரசாங்கம் முடிவெடுத்துள்ளதென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்  #மிலேனியம்  #ஒப்பந்தம்  #கையொப்பம்  #பந்துலகுணவர்தன   http://globaltamilnews.net/2020/137589/
  • வல்லை மண்டான் மயானத்தில் உடலம் தகனம் February 27, 2020 புத்தூர் மேற்கு சிறுப்பிட்டி கலைமதி கிந்துபிட்டி மாயனத்தில் உடலை தகனம் செய்ய வந்தவர்களை வல்லை மண்டான் மயானத்தில் தகனம் செய்யுமாறு மல்லாகம் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது. சிறுப்பிட்டியை சேர்ந்த ஒருவர் இயற்கை எய்திய நிலையில் அவரின் பூதவுடலை கிந்து பிட்டி மயானத்தில் தகனம் செய்ய உறவினர்கள் முயற்சித்த போது , குறித்த மாயனத்தை சூழவுள்ள மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து  காவல்துறையினர்  , காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் இரு தரப்பினரிடமும் காவல்துறையினர் பேச்சுக்களை நடாத்திய போதிலும் இரு தரப்பினரும் ஒரு நிலைப்பாட்டிற்கு வராத நிலையில் இரு தரப்பினை சேர்ந்த நால்வரை மல்லாகம் நீதிவானிடம் அழைத்து சென்றிருந்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த நீதிவான் , சடலத்தை எரிக்க விடாது எதிர்ப்பு தெரிவித்த தரப்பினரை சேர்ந்த நால்வரையும் கைது செய்ய உத்தரவிட்ட நீதிவான் , சடலத்தை எரியூட்ட வந்த தரப்பினரை வேறு மயானத்தில் தகனம் செய்யுமாறு கட்டளை பிறப்பித்தார். அதனை அடுத்து மயானத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் உடலத்தை தகனம் செய்ய வந்திருந்தவர்கள் சுமார் நான்கரை மணித்தியாலம் காத்திருந்த நிலையில் , நீதிமன்ற கட்டளையை அடுத்து வல்லையில் உள்ள மண்டான் மயானத்தில் உடலத்தை தகனம் செய்ய கொண்டு சென்று உடலத்தை தகனம் செய்தனர். குறித்த சுடலையில் தகனம் செய்ய கூடாது என சூடலையை சூழவுள்ள மக்கள் கடந்த 2017ஆம் ஆண்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் சுடலையில் உடலத்தை தகனம் செய்து வரும் தரப்பினர் அதற்கு ஆட்சேபனை தெரிவித்த நிலையில் இரண்டு வருட காலமாக நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து கடந்த நவம்பர் மாதம் 08ஆம் திகதி , “மயானத்தைச் சுற்றி மதில் அமைத்து சடலங்களை அங்கு எதியூட்ட முடியும். அதனை எதிர்த்தரப்புத் தடுக்க முடியாது. அங்கு குழப்பம் விளைவித்தாலோ மதிலை உடைத்து அத்துமீறினாலோ அந்த தரப்புக்கு எதிராக காவல்துறையினர்  உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று மல்லாகம் நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது #வல்லை   #உடலம் #தகனம்  #சிறுப்பிட்டி  #கிந்துபிட்டிமாயனம்   http://globaltamilnews.net/2020/137579/
  • வாவ்......இந்த ஆங்கிலப்பாடல் எந்த முட்டாளுக்கும் ஈஸியா விளங்கும்.....எனக்கே விளங்கிட்டுது.....!   😇