Sign in to follow this  
nunavilan

யாழ்ப்பாண மாநகரசபையின் புதிய கட்டடம் கட்டுவதற்கு இரண்டாம் தரம் அடிக்கல் நாட்டுவதற்கு உணவு மண்டப செலவு மட்டும் 2.7 மில்லியன் ரூபா என மதிப்பீடு செய்து இருக்கிறார்கள்

Recommended Posts

 
 
Image may contain: 1 person, standing, outdoor and text
இனமொன்றின் குரல்

யாழ்ப்பாண மாநகரசபையின் புதிய கட்டடம் கட்டுவதற்கு இரண்டாம் தரம் அடிக்கல் நாட்டுவதற்கு உணவு மண்டப செலவு மட்டும் 2.7 மில்லியன் ரூபா என மதிப்பீடு செய்து இருக்கிறார்கள் .. பந்தல் போட மட்டும் 16 லட்சம் ..மதிய உணவு ஒன்றின் பெறுமதி 2500 ரூபா.இந்த மதிய உணவு 150 பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது ..100 ரூபா பெறுமதியான சிற்றுண்டி 2200 பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கு என சொல்ல பட்டு இருக்கிறது ..மாநகர வரியிருப்பாளர்களை எப்படி எல்லாம் வஞ்சிக்கிறார்கள் ? பொது நிதியை அரச அதிகாரம் தங்களிடம் இருக்கும் துணிவில் வீண் விரயம் செய்கிறார்கள்

பசில் ராஜபக்சே காலத்தில் டக்ளஸ் தேவானந்தா , யோகேஸ்வரி பற்குணராஜா , ஆளுநர் சந்திரசிறி கோஷ்டி இதே அளவு பணத்தை செலவு செய்து முதலாவது அடிக்கல் நாட்டினார்கள் . கட்டடம் கட்டப்படவில்லை .இப்போது அதே கட்டத்திற்கு 2 ஆவது அடிக்கல் நட இப்படி செலவழிக்கிறார்கள்

இந்த ஆட்சியில் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் தனிப்பட்ட பாவனைக்கு 628,000 க்கு கணனி Apple MR924PA/A மாநகர சபை நிதியில் வாங்கி இருக்கிறார் ..வடமாகாணசபை முதல்வருக்கு உரிய வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துகிறார்..தனது வெளிநாட்டு பயணத்திற்கு மாநகரசபை பணத்தை பயன்படுத்த துடிக்கிறார் ..இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முதன் முதலில் முன் வைத்த பொது உறுப்பினர்களுக்கு கடல் கடந்த பயிற்சி என்கிற பெயரில் 10,000,000 ஒதுக்கி இருந்தார் . தங்களுக்கு படிகள் என்கிற பெயரில் இன்னுமொரு 10,000,000 ஒதுக்கினார் . முதலவர் உபசரனை செலவு என்கிற பெயரில் 500,000 ஒதுக்கி இருந்தார் ..மாநகரசபையின் மொத்த செலவினத்தில் 911,124,000 ரூபாயில் ஆடம்பர செலவுகளுக்கும் வெளிநாட்டு பயணங்களுக்கும் அதிகமாக ஒதுக்கப்பட்டு இருந்தது ..

இவளவு அசிங்கங்களை செய்து இந்த ஆர்னோல்ட் என்பவர் இதுவரை சாதித்தது என்ன ? சுமந்திரனுக்கும் UNP அமைச்சர்களுக்கும் அல்லக்கை வேலை பார்த்ததை தவிர வேறு எதையும் செய்யவில்லை .. சபைக்கு சொந்தமான சந்தைகள் இன்னமும் துர்நாற்றம் வீசுகின்றன .நூலகங்கள் போதிய கவனிப்பு இன்றி இருக்கின்றன . கணக்கறிக்கைகள் வெளிப்படை தன்மை பேணப்படுவது இல்லை .குளங்கள் தூர்வாரப்படவில்லை . வடிகாலமைப்பு பற்றி எந்த நடவடிக்கையும் இல்லை . பொதுசுகாதாரம் / குப்பை அகற்றல் என எதிலும் போதிய அக்கறை செலுத்தப்படவில்லை . இன்றைக்கும் யாழ்ப்பாண நகரம் துர்நாற்றம் வீசுகிறது ..கேட்பதற்கு ஆளில்லை

சுமந்திரன் போன்ற தமிழரசு தலைமைகளும் இவர்களை போன்றவர்களை தான் வளர்த்து விடுகின்றன . சுகிர்தன் , சயந்தன் , ஆர்னோல்ட் என எந்த சிந்தனையும் இல்லாத ஒரு முட்டாள் அடிமை கூட்டத்தை உருவாக்கி விட்டதன் பலன்கள் தான் இவை

 

Share this post


Link to post
Share on other sites

என்னப்பா... இது, அப்பலோவில்  ஜெயலலிதா,  70 லட்ச ரூபாய்க்கு சாப்பிட்ட,
இரண்டு இட்டலியை விட... அதிகமாக இருக்கு. 😮

தாய்... எட்டடி,  பாய்ந்தால், குட்டிகள்.... 16 அடி  பாயும் போலை இருக்கு. 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • தமிழக உள்ளூர் அரசியலில் புகுந்து சீமானுக்கு சொம்பு தூக்குவதற்காக எமக்கு ஏற்கனவே பல காலம் ஆதரவு த‍ந்த பல நல்ல உள்ளங்களை திட்டி அவர்களுக்கு துரோகி பட்டம் கொடுப்பது ஈழத்தமிழர்கள் நன்றி உணர்வு அற்றவர்கள் என்ற செய்தியையே உலகத்திற்கு கொடுக்கும்.  1987 ல் இருந்து இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த போது அதை இந்திய இராணுவத்திற்கு எதிராக வைகோ தமிழகத்தில் செய்த பரப்புரை தமிழக மக்களுக்கு  பல உண்மைகளை கொண்டு போய் சேர்த்த‍து. ஜோர்ஜ் பெர்னா்டோவை ஈழபோராட்டத்திற்கு ஆதரவாகியதில்அன்று ராஜ்யசபை உறுப்பினராக இருந்த வைகோவுக்கு பெரும் பங்கு உண்டு என்பதை எவரும் மறக்கமுடியாது.   இரு முறை யுத்த காலத்தில் உயிரைப்பணயம் வைத்து  இலங்கை சென்று புலிகளின் பிரதிநிதிகளை அவர் சந்தித்திருந்தார். புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன் என்று நீதிமன்றத்திலேயே தெரிவித்திருந்தார். அப்படிப்பட்ட வைகோ இன்று சீமானுக்கு சொம்பு தூக்கும் சில  ஈழத்தமிழர்களின் பார்வையில் ஒரு துரோகி. யாழில் கூட வைகோவை பெட்டி கோபாலு என்று மீம்ஸ் போட்டு தமது அநாகரிகத்தை சிலர் காட்டிகொண்டனர். வைகோவின் உள்ளூர் அரசியலலின் சரி தவறுகளுக்கு அப்பால் அவர் எமது போராட்டத்திற்கு செய்த பங்களிப்பு மிக பெறுமதியானது.சீமானுக்கு  இன்று சொம்பு தூக்கும் ஈழதமிழர்கள் வைகோவின் கால் தூசிக்கு சம‍மானவகள்.   1999 ல் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு தூக்கு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த போது  கட்சி வேறுபாடுகளை கடந்து பலர் அந்த கைதிகளுக்கு உதவினர். இதற்காகவே ஒரு நிதியம் ஆரம்பிக்கபட்டு  மிக பிரபல்யமான வழக்கறிஞரான ராம் ஜெற்மலானி மூலம் அந்த வழக்கு  உச்ச நீதி மன்றத்திற்கு அப்பீல் செய்யபடுவதற்கு  தமிழத்தில் இருந்த பல ஈழதமிழரின் போராட்டத்தில் கரிசனை கொண்டிருந்த ஆர்வலர்கள்  காரணமாக இருந்தார்கள்.  இதற்காக அன்றைய தமிழ் வானொலிகளில் எத்தனை  தமிழக ஆர்வலர்கள் அடிக்கடி தமது ஆதரவுகருத்துகளை பகிர்ந்தனர். அவர்களின் அந்த முயற்சியால்  அந்த 26 பேரில் 19 பேர் உச்ச நீதி மன்றதால் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு   துணை நின்ற  அனைவைருமே இன்று  நன்றி கெட்ட புலம்பெயர் முன்னாள்களால் துரோகிகளாக பட்டம் கொடுக்கபட்டுள்ளார்கள். ஒரே காரணம் இன்று அவர்கள் சீமானுடன் இல்லை என்பதற்காக.  1991 ன் பின்னரான  தடா /பொடா சட்டங்கள் மூலம் தமிழகத்தில் ஈழ ஆதரவு இறுக்கமாக தடை செய்யபட்ட காலத்தில் அதை மீறி  தமது உணர்வு காரணமாக ஈழத்திமிழருக்காக  போராட்டங்களை நடத்தி சிறை சென்ற  பலர் சீமான் என்ற ஒரு தனி நபருக்காக துரோகிபட்டம் கொடுக்கபட்டுள்ளார்கள்.  தமிழக அரசியல் என்பது அவர்களுக்கானது அவர்களுக்குள் ஆயிரம் முரண் இருக்கும்.அதில் சரி இருக்கும் தவறு இருக்கும்  அதில் தலையிட்டு துரோகிப ட்டம் கொடுப்பது எவ்வளவு அநாகரிகமானது என்பது இவர்களுக்கு தெரியவில்லை. அவ்வாறு பட்டம் கொடுக்க சீமானை ஆதரிக்கும்(அவர்களின் பாசையில் சொம்பு தூக்கும்)ஈழத்தமிழருக்கு என்ன தகுதி உள்ளது என்பதை அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை.   யுத்தம் நடந்த காலப்பகுதியில் தமிழகத்தில் இருந்து பல காலமாக எமக்கு ஆதரவளித்த உணர்வாளர்களுக்கும் அங்கு அவர்களது நாட்டு அரசியல் என்று உள்ளது.  அதில் அவர்கள் ஒவ்வொருவரதும் கருத்துக்கள. மாறுபடலாம். அவர்கள் நாட்டு அரசியலில்  திமுகவை ஆதரிக்கலாம் அல்லது அதிமுகவை ஆதரிக்கலாம். அல்லது ஏன் காங்கிரசை பாஜகவை கூட ஆதரிக்கலாம். அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. அதறகாக அவர்கள் எமக்கு செயத பல  உதவிகளை மறந்து  துரோகிபட்டம் கொடுக்கும் இந்த நன்றி கெட்ட  கூட்டம் அதன் மூலம் தாயகத்தில் வாழும் மக்களுக்கு  எந்த நன்மையும் செய்யப்போவதில்லை.   நல்ல காலம் தாயகத்தில் வாழும் மக்கள் இந்த விடயத்தில் மிகவும் தெளிவாக உள்ளனர்.     
    • உலக ஊடகங்கள் ஒரு 6 நிறுவனக்களிடம் அகப்பட்டு சிதைந்து வருகிறது.  ஓரு நல்ல மக்களாட்சிக்கு தேவை சுதந்திர ஊடகங்கள்.  சுய சிந்தனை உள்ள சுதந்திர   பத்திரிகையாளரின் தொழில் ஆபத்தான தொழிலாக இந்த காலத்தில் உள்ளது.  மாற்று ஊடகங்கள் இருந்தாலும் மக்கள் விட்டில் பூச்சிகள் போல் பெரிய செட் போட்டு பின்னுக்கு குழந்தை விளையாட்டு கிராபிக்ஸ் போட்டால் தான் கவனிப்பார்கள். Even Vijay TV is owned by Fox!
    • என்ன செய்யிறது, இதுவும் கடந்து போகும் , போராடடத்தை மல்லினபடுத்துவர்க்கு  இந்தியாவின்  சவுத் புளொக் ஆடும் நாடகம், இதை விளங்கிக்கொள்ளாமல் எம்மவர்களும்   
    • அதை தான் நான் குறிப்பிட்டேன். ஒரு புறம் பாரிய அர்பணிப்போடும் திறமையான யுத்த தந்திரங்களுடனும் வீரத்துடனும்   புலிககளின் தளபதிகள, போராளிகள்  போரிட்டு ஏற்படுத்திய வலு சமநிலையை ஏற்படுத்த  புலிகளின் அரசியல் துறை என்பது   சர்வதேச அரசியலை மிக மோசமாக கையாண்டது. மேற்குலகில் நட்பு சக்திகளை கட்டி எழுப்ப எந்த நடவடிக்கைகளும் எடுக்க வில்லை. காப்பாற்றகூடிய சக்திகொண்ட ராஜ தந்திரியான அன்ரன் பாலசிங்கத்தை இழந்த‍து புலிகளுக்கு பேரிழப்பு என்றே கூறவேண்டும்.  இறுதி போரின் தோல்விக்கும் பேரழிவுகும் இது பாரிய காரணமாக இருந்த‍து.  இறுதி கட்ட‍த்தில் இந்தியாவை கையாள ராஜிவ் கொலை தொடர்பான சில கருத்துகளை திரு அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த‍தை புலிகள் அங்கீகரிக்கவில்லை.