• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

‘வேப்பிங்’ (Vaping) புகைத்தலால் அமெரிக்காவில் ஐவர் மரணம்!

Recommended Posts

‘வேப்பிங்’ (Vaping) புகைத்தலால் அமெரிக்காவில் ஐவர் மரணம்!

‘வேப்பிங்’ எனப்படும் புகைத்தலினால் அமெரிக்காவில் இது வரையில் 5 பேர் மரணமடைந்திருக்கிறார்கள் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சமீப காலங்களில் நூற்றுக்கணக்கானோர் சுவாசப் பை தொடர்பான வியாதிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களது வியாதிகளை சாதாரண தொற்று நோய்கள் எனக் கருதி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததனால் இறந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனவே கருதப்படுகிறது.

vaping-credit-reuters.jpg

சமீப காலங்களில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் பலர் இளைய வயதினர் எனவும் இஅவர்கள் எல்லோரிலும் காணப்பட்ட பொது அம்சம் இவர்கள் வபிங் என்ற புகைத்தலைச் செய்தவர்கள் என்றும் தெரிய வந்த போது இப் புகைத்தலின் பின்னணி பற்றி அமெரிக்க மருத்துவ சமூகம் ஆராய்தது.

மததிய சுகாதார திணைக்களை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின்படி சந்தையில் காணப்படும் புகைத்தல் கருவிகளில் பாவிக்கும் திரவங்களை ஆராய்ந்து பார்த்ததில் அவை எதிலும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் பதார்த்தங்கள் காணப்படவில்லை என அறியப்படுகிறது. இருப்பினும் நியூயோர்க்கில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ஈ-சிகரட் எனப்படும் புகைத்தல் கருவிகளில் பாவிக்கப்படும் சில திரவங்கள் கருப்புச் சந்தையில் விற்கப்படும் விட்டமின் ஈ (vitamin E) எண்ணை எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளியன்று கலிபோர்ணியா, மினெசோட்டா மாநிலங்களின் மருத்துவ அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி அங்கு இருவர் வேப்பிங் காரணமாக மரணமடைந்திருக்கிறார்கல எனவும் அவர்களில் ஒருவர் பாவித்த வேப்பிங் கருவியில் ரி.எச்.சி. (THC) எனப்படும் கஞ்சாவின் மூலப்பதார்த்தம் காணப்பட்டது என அறியப்படுகிறது.

மத்திய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் பேச்சாளர் இலியானா அறியாஸ் இன் கருத்துப்படி, இது வரை 450 வேப்பிங் தொடர்பான சுவாச நோய்களுக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிய வருகிறது.

வட கரோலைனா சுவாச நோய் மருத்துவர் டானியல் பொஃக்ஸ் இன் கருத்துப்படி, எண்ணை அல்லது கொழுப்புக் கலந்த பதார்த்தங்களை புகையாக உள்ளிழுக்கும்போது தொற்று நோய் அல்லாத நிமோனியா, (மருத்துவ உலகத்தில் லிபோயிட் நிமோனியா என அழைக்கப்படும்) ஏற்படக் காரணமாக அமையலாம் எனக் கூறுகிறார்.

நியூயோர்க் சுகாதாரத் திணைக்களத்தின் தரவுகளின்படி வேப்பிங் காரணமாக அனுமதிக்கப்பட்ட 34 நோயாளிகளில் அத்தனை பேரிலும் கஞ்சா தொடர்பான ‘விட்டமின் ஈ’ எண்ணை சம்பந்தப்பட்டிருந்தது எனத் தெரிய வருகிறது.

சருமத்தில் பூசப்படும் விட்டமின் ஈ பதார்த்தங்களால் ஆபத்து எதுவுமில்லை என்றும் அது சுவாசத்துடன் கலக்குப்போது தான் பிரச்சினை எனவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அறிகுறிகளாக, சுவாசிக்கக் கஷ்டப்படுவதும், நெஞ்சு வலியும் இருந்தனவென்று பல நோயாளிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் பலர் தொற்று நோயாளிகளாகத் தீர்மானிக்கப்பட்டு வேறு வழிகளில் சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பிலடெல்பியாவைச் சேர்ந்த 19 வயதுடைய கெவின் பொக்கிளேயர் சுவாசப்பை மாற்றத்திற்காகத் தற்போது ‘கோமா’ வில் வைக்கப்பட்டுள்ளார் என அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரெறோயிட் போன்ற மருந்துகளால் சிகிச்சையளிக்கப்பட்டுச் சிலர் குண்மாகியிருப்பிநும் சரியாந சிகிச்சை முறை என்னவென்பதை மருத்துவ சமூகம் இன்னும் விவாதித்துக்கொண்டுதான் இருக்கிறது.

அவர்கள் இளையவர்களுக்கு விடுக்கும் கோரிக்கை – வேப்பிங் செய்யாதீர்கள்!

2006 இல் சிகரட் குடிப்பதை நிறுத்தவென அறிமுகப்படுத்தப்பட்ட ஈ-சிகரட்டுகளைப் பாவிக்கும் இளைய தலைமுறையினரின் (பெரும்பாலும் பாடசாலை மாணவர்கள்) எண்ணிக்கை 2018 இல் 3.6 மில்ல்யன் எனவும், அதற்கு முதல் வருடத்தில் 1.5 மில்லியன் எனவும் அறியப்படுகிறது.

http://marumoli.com/வேப்பிங்-vaping-புகைத்தலால்-அ/

Share this post


Link to post
Share on other sites

சுவாசப்பையில் ஒருவித எண்ணெய் திரவம் படிவதால் சுவாசப்பை தனது இயல்பான திறனை இழக்கின்றது. 

 

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்க வைத்தியர்கள் 'வேப்பிங்கை' கை விடுமாறு அறிவுறுத்தல்  

அதேவேளை இது எவ்வாறு  அனுமதிக்கப்பட்டது என்ற  கேள்வி முன்வைக்கப்படுகின்றது

 • The use of e-cigarettes is unsafe for kids, teens, and young adults.
 • Most e-cigarettes contain nicotine. Nicotine is highly addictive and can harm adolescent brain development, which continues into the early to mid-20s.1
 • E-cigarettes can contain other harmful substances besides nicotine.
 • Young people who use e-cigarettes may be more likely to smoke cigarettes in the future.

https://www.cdc.gov/tobacco/basic_information/e-cigarettes/Quick-Facts-on-the-Risks-of-E-cigarettes-for-Kids-Teens-and-Young-Adults.html

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்காவில் விரைவில் ஈ சிகரெட்டுக்கு தடை விதிக்க திட்டம்

ஈ சிகரெட்களுக்கு தடை விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் சமீப காலங்களில் நாடு முழுவதும் ஈ சிகரெட் பயன்படுத்துபவர்களில் கணிசமானோருக்கு நுரையீரல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டன.

இதற்கு இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், 450-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில் அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்ப், சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

அப்போது இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி பயிலும் மாணவ, மாணவிகளில் 25 சதவீதம் ஈ சிகரெட் பயன்படுத்துவது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், மக்கள் உடல் நலமற்றுப் போவதையும், இளைஞர்கள் பாதிக்கப்படுவதையும் அனுமதிக்க முடியாது என டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மெலானியா டிரம்பும், ஈ சிகரெட் தடையை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஈ சிகரெட் சாதாரண சிகரெட்டை விட குறைந்த பாதிப்பு உள்ளது என தங்களது அங்கீகாரம் ஏதுமின்றி விளம்பரப்படுத்திய ஜூல் லேப்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.

மேலும், பல்வேறு நறுமணங்களில் வருவன உள்பட ஈ சிகரெட்டை தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அந்த ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

https://www.polimernews.com/dnews/79613/அமெரிக்காவில்-விரைவில்-ஈசிகரெட்டுக்கு-தடை-விதிக்கதிட்டம்

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

அமெரிக்காவில் விரைவில் ஈ சிகரெட்டுக்கு தடை விதிக்க திட்டம்

மக்கள் பாவிக்கும் ஒரு பொருளை... சந்தைப் படுத்த முதல்,
அதன் நன்மை தீமைகளை ஆராய... மருத்துவ கழகங்களோ... சுகாதார அமைப்புகளோ....
பரிசோதனைக்கு உட்படுத்தாமல்... சந்தைப் படுத்த எப்படி  சாத்தியப் பட்டது. 

Share this post


Link to post
Share on other sites

பரிசோதனைக்கு உட்படுத்தாமல்... சந்தைப் படுத்த எப்படி  சாத்தியப் பட்டது. 

பொதுவாக சோதனை செய்யப்பட்டு, அங்கீகாரம் பெற்று தான் சநதைக்கு வரும். 

ஆனால், இங்கே கள்ள சந்தையில் தயாரிக்கப்பட்ட சில இரசாயன பொருட்கள் கலக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது. 

குறிப்பு: கனடாவில் இதுவரை எவரும் இவ்வாறு பாதிக்கப்படவில்லை. ஆனால், சட்ட ரீதியாக பவிக்கப்படும் கஞ்சாவில் கள்ள சந்தை  பொருட்கள் கலக்கப்பட்டதால், ஒரு நிறுவனம் தனது விற்கும் உரிமையை இழக்கும் நிலையில் உள்ளது. 

டிஸ்கி : திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டையும் ஒழிக்க முடியாது.  

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, தமிழ் சிறி said:

மக்கள் பாவிக்கும் ஒரு பொருளை... சந்தைப் படுத்த முதல்,
அதன் நன்மை தீமைகளை ஆராய... மருத்துவ கழகங்களோ... சுகாதார அமைப்புகளோ....
பரிசோதனைக்கு உட்படுத்தாமல்... சந்தைப் படுத்த எப்படி  சாத்தியப் பட்டது. 

இஞ்சை சின்னப்பொடியள் எல்லாம் ஊதிக்கொண்டு திரியுதுகள்.

Bildergebnis für Vaping

அதுக்குள்ளை விதம் விதமாய் நறுமணங்கள வேறை சேர்த்திருக்காமெல்லே..

Bildergebnis für Vaping

 

Share this post


Link to post
Share on other sites

கரி கோச்சி இல இருந்து வார புகையை விட கூடுதல் புகை விடுவானுங்க 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

மாணவர்கள் மத்தியில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் புழக்கம் 77% அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். உடல்நலத்துக்கு கேடு விளைவிப்பதால் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

இதையடுத்து, எலக்ட்ரோனிக் சிகரெட்டில் உள்ள 400 வகையான பிராண்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இ-சிகரெட்டுகளை விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இ-சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இ-சிகரெட்கள் தடைக்கும், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் திட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்கர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526988

Share this post


Link to post
Share on other sites

பிரித்தானியாவில் சிகரெட் பெட்டிகள் எல்லாவற்றையும் மூடியே வைத்திருக்கவேண்டும் என்று சட்டம் வந்ததன் பின்னர்  பாவனையாளர்கள் குறைந்துவிட்டதாகக் கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

Share this post


Link to post
Share on other sites
On 9/13/2019 at 8:45 PM, குமாரசாமி said:

இஞ்சை சின்னப்பொடியள் எல்லாம் ஊதிக்கொண்டு திரியுதுகள்.

Bildergebnis für Vaping

அதுக்குள்ளை விதம் விதமாய் நறுமணங்கள வேறை சேர்த்திருக்காமெல்லே..

Bildergebnis für Vaping

 

ஊருக்கையும் வெளிநாட்டிலிருந்து வந்த இளசுகள் புகைவிட்டு சிலருக்கும் கொடுத்து ஊதிக்கொண்டிந்தார்கள்  நறுமணமாக இருந்தது என பொடியங்கள் சொல்லி திரிஞ்சானுகள் உன்மை நிலை தெரியாமல்

Share this post


Link to post
Share on other sites

புகைத்தல் கூட ஒரு மூடத்தனம் தான். ஆனால், புகைத்தலுடன் சோதிடத்தையும் சேர்த்திருந்தால் நாலு பேர் பயனடைந்திருப்பார்கள்  🙂 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • அமெரிக்க அதிபர் டிரம்ப் 24-25 தேதிகளில் வரவிருப்பதையொட்டி,குண்டு துளைக்காத the beast கார் இந்தியா வருகிறது. இக்கார் அதிபருக்காக தனிச்சிறப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் ஜன்னல்கள் கண்ணாடி மற்றும் பாலி கார்பனோட்டால் செய்யப்பட்ட 5 அடுக்குகள் கொண்டவை. இவை குண்டு துளைக்காமல் தாங்கக்கூடியவை. கார் ஓட்டுனரின் ஜன்னல் மட்டும் 3 அங்குலம் அளவுக்குத் திறக்கக்கூடியது. இந்த காரில் துப்பாக்கித் தோட்டாக்கள், கண்ணீர் புகைக்குண்டுகள், ரத்த பைகள் இணைக்கப்பட்டுள்ளன. தீ எதிர்ப்பு சாதனங்களும் ஸ்மோக் ஸ்க்ரீன் டிஸ்பென்சர்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டுனர் பகுதியில் தகவல் தொடர்பு சாதனங்களும் ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட்டுள்ளன. அமெரிக்க ரகசிய சேவை பிரிவின் பயிற்சி பெற்ற கார் ஓட்டுனர் எத்தகைய சவாலான சூழ்நிலைகளிலும் காரை ஓட்ட முடியும். அவசரமாக தப்புவற்குரிய பயிற்சிகளும் 180 டிகிரி வேகத்தில் காரை திருப்பவும் ஓட்டுனருக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/100959/இந்தியா-வரும்-அமெரிக்கஅதிபரின்-அதிநவீனவசதிகளுடைய-கார்
  • தீவிரவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க சட்டத்தைக் கடுமையாக்கும்படி பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான FATF வலியுறுத்தியுள்ளது. பாரீசில் நடைபெற்று வரும் கூட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. FATF அளித்திருந்த 27 பரிந்துரைகளில் 14 அம்சங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், தீவிரவாதக் குழுக்களுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க பாகிஸ்தான் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் குறித்து FATF முடிவெடுக்க உள்ள நிலையில், அந்நாட்டிற்கு விதிக்கப்பட்ட சாம்பல் பட்டியல் நீடிக்கும் என்றே தற்போதைய சூழ்நிலை உணர்த்துகிறது. https://www.polimernews.com/dnews/100977/தீவிரவாதிகளுக்கு-நிதிகிடைக்காதிருக்க-சட்டத்தைகடுமையாக்க-பாகிஸ்தானுக்கு-FATF--வலியுறுத்தல்
  • அரச நிறுவனங்களினல் 180 நாட்கள் பூர்த்தி செய்த மற்றும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் வேலையில் அமர்த்தப்பட்ட காரியாலய உதவியாளகர்கள் , சாரதிகள் நிரத்தர பணியில் அமர்த்தப்படவுள்ளனர். இன்று இடம் பெற்ற கலந்துரையாடலின் போது பொது நிர்வாக அமைச்சு இது குறித்த தீர்மாத்தினை நடைமுறைபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/75964              
  • (என்.ஜி.இராதாகிருஷ்னண்) பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷனின் ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக பணியாற்றிய மேல் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இராஜேந்திரன் அக்கட்சியிலிருந்து வெளியேறி ' கொழும்பு மாவட்ட தமிழர் மகாசபை ' என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். இக்கட்சியின் அறிமுக ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை கொழும்பு - பிரைட்டன் ஹோட்டலில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷனுடன் இனி எவ்வித பேச்சுவார்த்தையோ அல்லது சமாதான நோக்கோ இல்லை எனவும் அதே வேளை பிரபாகணேஷனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக இந்த ஊடக சந்திப்பில் மேல் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இராஜேந்திரன் தெரிவித்தார். அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில், நான் இரு தடவைகள் நகரசபை உறுப்பினராகவும், மேல் மாகாணசபை உறுப்பினராகவும் இருந்துள்ளேன். மனோ கணேஷன் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து அமைச்சரவை அமைச்சராக இருந்த போதிலும் கொழும்பு மாவட்ட மக்களுக்காக என்ன செய்திருக்கிறார் ? மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்துக்கு சிறந்ததொரு தலைமைத்துவம் இல்லாமலிருந்ததன் காரணமாகவே நாம் அவரைத் தெரிவு செய்தோம். அதன் பின்னர் 2001 - 2009 வரை அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2010 ஆம் ஆண்டு கொழும்பு மாவட்டத்தைக் கைவிட்டு கண்டிக்குச் சென்று அங்கு தோல்வியடைந்தால் மீண்டும் கொழும்பிற்கே வந்தார். அதன் போது கூட தொகுதி அமைப்பாளர்களும், நகரசபை உறுப்பினர்களும் அவருடன் கைகோர்த்து செயற்பட்டோம். இவரது தம்பியான பிரபாகணேஷனையும் நாமே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்தோம். எனினும் முன்று மாதங்களின் பின்னர் அவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கொண்டார். கண்டி மாவட்டத்தில் அவர் தோல்வியடைந்து திரும்பிய போது கொழும்பில் வெற்றி பெருவதற்கான அனைத்து செயற்பாடுகளையும் நாம் முன்னின்று செயற்படுத்தினோம். அதன் மூலம் அவர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட போதிலும் மக்களுக்கு எந்த சேவையும் செய்யவில்லை. தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் கூட நிறைவேற்றப்படவில்லை. இதன் காரணமாகவே நாம் கொழும்பு மாவட்ட தமிழர் மகாசபை என்ற கட்சியை உருவாக்கியிருக்கியிருக்கின்றோம். கொழும்பு மாவட்ட தமிழர்களின் அபிலாஷைகளை சமூக அக்கறையுடன் நிறைவேற்றுவதும் தாழ்வாக வாழும் தமிழர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு உரிய தீர்வு காணுதல் , கொழும்பு மாவட்டத்துக்குள் வசிக்கும் அனைத்து மாவட்ட தமிழர்களையும் ஓரணியில் ஐக்கியப்படுத்தி அதன் மூலம் ஆக்கபூர்வமான  பணிகளை முன்னெடுத்தல் , தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு தமிழ் மக்களின் நிலையை சீர்தூக்கி செயற்படாமல் தமது காரியங்களைப் பார்க்கும் தலைமைத்துவத்தை ஓரங்கட்டுதல் , கொழும்பு மாவட்டத்தில் உள்ள புத்தி ஜீவிகள் , வர்த்தகத்துறையினர், அரச மற்றும் தனியார்துறை ஊழியர்கள் , கலைஞர்கள் , சிறுதொழில் புரிபவர்கள் , அன்றாட உழைப்பில் வாழும் அனைவருடனும் மற்றும் அதிருப்தி அடைந்துள்ள ஏனைய அரசியல் கட்சிகளின் அமைப்பாளர்களையும் இணைத்து கொழும்பில் ஒரு புதிய சக்தியைப் பலப்படுத்தல். ஏனைய இன மக்களுடன் நல்லிணக்கத்துடனும் மற்றும் தேசிய அரசியலில் உள்ள பிரதான கட்சிகளுடன் நல்லுறவை ஏற்படுத்தி தமிழ் சமூக மறுமலர்ச்சிக்கு பாலமாக செயற்படுதல். ' என்பனவாகும் என்றார். https://www.virakesari.lk/article/75982
  • முதலீட்டுக்கு மிகப் பொருத்தமான நாடாக இலங்கையை மாற்றுவதே தனது இலக்காகுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். சுற்றாடலை பாதுகாத்து, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான பொறிமுறையொன்றுக்கு சட்ட ரீதியான பின்புலத்தை உருவாக்க வேண்டுமெனவும் சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள், ஒழுங்குவிதிகளில் நடைமுறைக்கேற்றவாறு திருத்தங்களை மேற்கொள்வதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றினைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். சுற்றாடலை பாதுகாப்பதோடு மக்களுக்கு பயனளிக்கக்கூடிய முறைமைகளை அறிமுகப்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். அனுமதிப் பத்திரங்கள் வழங்கும்போது ஏற்படும் காலதாமங்களை இயன்றளவு குறைத்துக்கொள்வதோடு, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டார். பல வருடங்களுக்கு முன்னர் அனுமதி கோரியுள்ள வட மாகாண நீரியல் பூங்கா சார்ந்த செயற்திட்டங்களுக்கு இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை. அது பற்றிய அவதானத்தை செலுத்தியுள்ள ஜனாதிபதி, உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாப்பதோடு குறித்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார். அதன்மூலம் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கமுடியுமென்றும், பிரச்சினைகளை தீர்த்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த சிறந்த வழிமுறையாக அமையுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியது சுற்றாடலை பாதுகாப்பதற்கு மாத்திரமன்றி மனிதர்களை வாழ வைப்பதை இலக்காகக் கொண்டே என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்         https://www.virakesari.lk/article/75946