ஏர் ரெல், ஜியா ஒரு பக்கம் கட் பண்ணிட்டான்.. சரி வி.பி.ன் வழியா உள்ள போனா 1500 பேர் லிஸ்ற் ரெடி என்டு சைபர் கிரைம் போலீஸ் ஒரு பக்கம் மிரட்டுறான் .. என்னடா சனநாயக நாடு இது..? 😢
தி ஹேக்: ஆசிய நாடான மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது இனப் படுகொலை செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மர் அரசின் ஆலோசகரான ஆன் சான் சூகி நேரில் ஆஜராகியுள்ளார்.
மியான்மரில் வசித்து வரும் ரோஹிங்யா முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக அறிவித்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளின்போது ரோஹிங்யா முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டனர். அதைத் தவிர 7.40 லட்சம் பேர் அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக இனப் படுகொலையில் ஈடுபட்டதாக மியான்மர் மீது புகார் கூறப்பட்டது. ஐ.நா. குழுவும் 'இது இனப் படுகொலை' என அறிவித்தது.
ஆப்பிரிக்க நாடான காம்பியா இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் மியான்மர் சார்பில் வாதிட அரசின் ஆலோசகரான ஆன் சான் சூகி நேரில் ஆஜராகி உள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சூகி மனித உரிமைக்காக போராடியவர் என்ற பெருமையை பெற்றிருந்தார். ரோஹிங்கா முஸ்லிம்கள் விவகாரத்தில் அவர் அமைதி காப்பதுடன் அதற்கு ஆதரவாக இருப்பதால் சர்வதேச அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்த வழக்கில் காம்பியா தரப்பில் வாதங்கள் துவங்கியுள்ளன. சூகி இன்று தன் வாதத்தை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://www.dinamalar.com/news_detail.asp?id=2431297
தமிழகத்தில் மணல் மாபியா போல, தண்ணீர் மாபியா அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட கோனாம்பேடு பகுதியில் ஏராளமான குளங்கள் மற்றும் நீர்நிலைகள் உள்ளன. இந்த நீர்நிலைகளில் தற்போது ஓரளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. ஆனால் இப்பகுதியில் உள்ள குளங்களில் சிலர் சட்டவிரோதமாக டேங்கர் லாரிகள் கொண்டு தண்ணீரை திருடி அதிக லாபத்துக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கான நீராதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இதையடுத்து நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படாமல் உள்ளன. எனவே கோனாம்பேடு பகுதிகளில் உள்ள குளங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுக்கவும், ஆக்கிர மிப்புக்களை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி கடந்த ஆண்டு அந்த கிராம பொது நல சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுதொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு அமல்படுத்தப்படாததால் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் முன்பு வந்த போது, தமிழகத்தில் மணல் மாபியா போல, தண்ணீர் மாபியா அதிகரித்து வருவதாகவும், தண்ணீரை தேக்கி வைக்க போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், தற்போது விழித்து கொள்ளவில்லை என்றால் எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=547836