Sign in to follow this  
ampanai

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு முன்வைக்கப்படும்

Recommended Posts

-எஸ்.நிதர்ஷன்

வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு முன்வைக்கப்படுமெனத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தி இயக்கத்தினர், இதற்காக ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவை தமிழ் மக்கள் ஆதரவிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அங்கு தொடர்ந்துரைத்த அவ்வியக்கத்தினர், தேசிய மக்கள் சக்தியால், நாட்டில் அனைத்து மக்களுக்குமான வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வரைபு ஜனாதிபதி தேர்தலுக்கு மட்டும் உருவாக்கவில்லையெனவும் இது இறுதியான வரைபல்ல எனவும் தெரிவித்தனர்.

நாட்டில், அனைத்து மாகாணங்களில் உள்ள மக்களுடன் பேசி அடிப்படை பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான திட்டங்களும் அந்த வரைபில் இணைத்துக் கொள்ளப்படுமெனத் தெரிவித்த அவர்கள் இறுதியாக. முழுமையான திட்டமாக அது மாற்றப்படுமெனவும் கூறினர்.

அரசியலில் 3ஆவது பாதை தேவை என்பதை யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களும் ஏற்கின்றார்களெனத் தெரிவித்த அவர்கள், அதற்காக முற்போக்கு சிந்தனை உள்ள தமிழ் மக்கள் எங்களுடன் கைகோர்க்க வேண்டுமெனவம் கூறினர்.

கோல்வேஸில் கூடிய கூட்டத்தைப் போன்று, யாழ்ப்பாணத்தில் மக்கள் அலை ஒன்றை திரட்ட உள்ளதாகத் தெரிவித்த அவர், அதில் தமது ஜனாதிபதி வேட்பாளர் மக்கள் முன்தோன்றி பேசுவாரெனவும் அவருடனும் மக்கள் பேச முடியுமெனவும் கூறினர்.

தலைவர் பேசுவதை மக்கள் கேட்க வேண்டுமெனவும் அதே போன்று மக்கள் பேசுவதை தலைவர் கேட்க வேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சுயநிர்ணய-உரிமையுடன்-கூடிய-தீர்வு-முன்வைக்கப்படும்/71-238070

Share this post

Link to post
Share on other sites
16 minutes ago, ampanai said:

வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு முன்வைக்கப்படுமெனத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தி இயக்கத்தினர், இதற்காக ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவை தமிழ் மக்கள் ஆதரவிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.

நல்ல தீர்வாக இருக்குதே?

சிங்களவர்களும் ஆதரிக்க வேண்டுமே?

Share this post

Link to post
Share on other sites

Capital FM 94.0 & 103.1

#கேபியிடம் கப்பல்கள் மற்றும் #வங்கிக் கணக்குகள் இருந்தமையினாலேயே தடுத்துவைக்கப்படவில்லை.

#உரிய ஆவணங்கள் இன்றி #கோட்டாபய ராஜபக்ஸவுக்கு திருட்டு #பாஸ்போர்ட் செய்ய ஒத்துழைப்பு வழங்கியதுரணில் விக்ரமசிங்கவே

#வடக்கிலுள்ள மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகளை ஹம்பாந்தோட்டையில் உள்ள மக்களும் எதிர்நோக்குகின்றனர்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப்பெற்று வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

ஊழலற்ற அரசியல்வாதியொருக்கே ஊழல்மிக்க அரசியல்வாதிகளுக்கு தண்டனை வழங்க முடியும்

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திசாநாயக்க பங்கேற்கு அதிகாரம்,(FULL
VIDEO)

හිටපු කොටි නායක කේ.පි ගාව නැව් හා බැ0කු ගිණුම් තිබුණ හින්දයි ඔහුව නිදහස් කරේ

ඒක ජාතියක මත තියෙන සැකෙන් ජාතික ආරක්ශාව හදන්න බැහැ

මුස්ලිම් දේශපාලකයන් ඔවුන්ගේ ජනතාව පෙන්නලා බිස්නස් කර්න්නේ

මේ කිසිම ආණ්ඩුවක් සි0හල ආණ්ඩුවක් නොවේ

ජනපති අපේක්ශක හා ජනතා විමුක්ති පෙරමුණේ නායක අනුරකුමාර දිසානායක සහභාගිවෙන අදිකාරම්

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, ampanai said:

வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு முன்வைக்கப்படுமெனத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தி இயக்கத்தினர், இதற்காக ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவை தமிழ் மக்கள் ஆதரவிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.

யாரோ ஜேவிபி கும்பலை அழிக்க முடிவு செஞ்சிருக்காங்க!

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

இலங்கை நாட்டில் ஒரு அரசியல் தீர்வு கிடைத்து நாடு முழுவதும் முன்னேற ஒரு புதிய சிந்தனை வேண்டும். அதை, ஐதேக , மற்றும் மகிந்த / சுதந்திர கட்சிகளிடம் எதிர்பார்க்க முடியாது. 

ஜேவிபி சிங்கள சாதாரண மக்களின் நலன் சார்ந்து செயல்பட எண்ணு ம் கட்சி. தமிழர்களும் இலங்கை என்ற ஒற்றையாட்சிக்குள் அதிகார பரவலை விரும்பும் மக்கள் என்ற கொள்களையில்,  ஜேவிபி உடன்  கை கோர்ப்பதால் என்ன நட்டம் / இலாபம் என ஆராய்வதில் தவறே இல்லை. மாறாக, காலத்தின் கட்டாயமும் கூட.    

Share this post

Link to post
Share on other sites
13 minutes ago, ampanai said:

தமிழனாகத் தன்னையே நம்பாத தமிழன் ஆண்டாண்டு தோறும் அடுத்தவனை நம்பியே அழிந்துகொண்டிருக்கின்றான்
இதுவும் கடந்து செல்லும் தமிழனின் விடுதலைப்பாதை

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, வாத்தியார் said:

தமிழனாகத் தன்னையே நம்பாத தமிழன் ஆண்டாண்டு தோறும் அடுத்தவனை நம்பியே அழிந்துகொண்டிருக்கின்றான்
இதுவும் கடந்து செல்லும் தமிழனின் விடுதலைப்பாதை

தமிழன் தன்னை நம்ப மீண்டும் ஒரு தலைமை தேவை.  

அது என்று வரும் என கூற முடியாத நிலையில், ' நிலம் இருந்தால் இனம் வாழும்' என்ற நிலையில் உள்ள எமது மக்கள் முதன்மை மூன்று சிங்கள அரசியல் கட்சிகளையும் ஜேவிபி யின் கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிடின் அவர்களுக்கே வாக்களிப்போம் என்பதும் ஒரு வழிமுறையே   

Share this post

Link to post
Share on other sites

மக்காள் , வயதின் நிமித்தம் நடுவில் சில பக்கங்கள் காணாமல் போவது இப்ப அடிக்கடி தெரிய வருகிறதென்றாலும் , வட- கிழக்கு இணைப்பை பிரிக்க வேண்டும் என்று நீதிமன்றில் வழக்குப் போட்டதே இந்த ஜேவிபி யினர் என்று மீதியிருக்கும் பக்கமொன்று சொல்கின்றது….
அது சரியெனின் இது என்ன விளையாட்டு இப்ப ,...

TNA , TULF , வரிசையில் JVP யும் மிளகாய் கொண்டு வருமாப் போல தெரியுது தமிழ் மக்களின் மண்டையை டார்கெட் பண்ணி……

என்ன செய்வோம் கச்சியேகம்பனே   !.!.!.....  

Share this post

Link to post
Share on other sites

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை !

இலக்கு மட்டுமே நிரந்தரமாக இருக்க வேண்டும். 

Share this post

Link to post
Share on other sites

வெல்லப்போவதில்லை என்பது நிச்சயம் என்பதால், தமிழர்கு தனிநாடு தருவோம் எண்டும் சொல்லி வாக்கு கேட்கலாம். 

வட கிழக்கை பிரிக்க வழக்குப் போட்டவர்களே, வடக்கு கிழக்கை இணைத்தா, பிரித்தா எமக்கு அதிகாரம் தரும் உத்தேசம்?

ஆட்சியில் பங்குதாரராக இருக்கும் போது ஏன் இந்த எண்ணம் இருக்கவில்லை ?

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

எந்த அரசியல் கட்சியையும் சாராத தமிழர் அமைப்புக்கள், ( அரசசார்பற்ற அமைப்புக்கள், பல்கலைக்கழகங்கள், ஊடகங்கள் ..) சகல சிங்கள அரசியல் கட்சிகளையும் ஒரே மேடையில் வைத்து எமது மக்கள் சார்பாக முக்கிய கேள்விகளை கேட்கலாம்.

அங்கே வட-கிழக்கு இணைப்பு பற்றி யார் என்ன சொல்கிறார்கள் என்பதை மக்கள் அறியலாம்.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this