Jump to content

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் – முரளிதரன் பேச்சு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Muttiah-Muralitharan.jpg

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் – முரளிதரன் பேச்சு

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப்புலிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது எனவும் ஆனால் அவர்கள் அப்பாவிகளை கொலை செய்தனர் என்றும் முரளிதரன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கொழும்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையை அரசியல் அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே ஆட்சிசெய்ய வேண்டும் எனவும் கிரிக்கெட் வீரர்களும் ஏனைய துறைசார் வல்லுனர்களும் நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிலர் வர்த்தகர்கள் மீதும் ஏனையவர்கள் மீதும் நம்பிக்கை வைக்கின்றனர். ஆனால் மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள அரசியல் ரீதியில் முடிவெடுக்கக் கூடிய ஒருவராலேயே தீர்க்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் சில விடயங்களை சாதித்த மக்களை பாதுகாக்ககூடிய ஒருவருக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உண்மையான தலைவர் முன்னுதாரணத்தின் மூலம் தலைமை தாங்குவார் எனவும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

சமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப்புலிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் அப்பாவிகளை கொலை செய்தனர் எனவும் முத்தையா அவர் கூறினார்.

2009இல் யுத்தம் முடிவிற்கு வந்த விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனவும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மேலும், அச்சம் என்பது பெரும் விடயம், நாங்கள் அச்சத்தில் பிடியின் வாழ்ந்துள்ளோம் என்றும் 1977 இல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எங்கள் வீடுகள் அழிக்கப்பட்டு எனது தந்தை தாக்கப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அனைவரும் இந்தியாவுக்கு சென்றனர். ஆனால் நாங்கள் செல்லவில்லை. நாங்கள் இங்கு வாழ விரும்பினோம். நான் இலங்கையன். இரு தரப்பும் தவறிழைத்தன. ஒரு கட்டத்தில் அரசாங்கம் தவறிழைத்தது. பின்னர் விடுதலைப் புலிகள் தவறிழைத்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/விடுதலைப்-புலிகள்-தோற்கட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

roflphotos-dot-com-photo-comments-201708

இப்புடி எல்லாம் கதைத்தால்தான்  சாப்பாடு என்டு சொல்லிட்டாங்க.! அப்போ நீங்க..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதிக்கு பஞ்ச் வசனம் ரெடி...ஒழுங்க்காகபந்து போடமுடியாத..மிரட்டி ப்பந்து போடும் ஒருவனால்....அரசியலில் வந்து வேறு என்ன கூறமுடியும்...

 

Link to comment
Share on other sites

மனிதன் தவறிழைப்பது இயல்பு, ஆனால் தவறே மனிதனாகவும் பிறந்துவிடுகிறது. 

Link to comment
Share on other sites

பெரிய கடத்தல் கேடியிடம் சிறிய கடத்தல் கேடி சிக்கியுள்ளது. கடத்தல் குடும்பங்களின் சங்கமம்.

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என தான் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி, உண்மைக்கு புறம்பானது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவிக்கின்றார்.

தமிழன் என்ற விதத்தில் தாம் அச்சத்துடனேயே ஒரு காலப் பகுதியில் வாழ்ந்து வந்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், முத்தையா முரளிதரனிடம் இதுகுறித்து கேட்டபோது, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறு கூறவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
 

 

கொழும்பில் ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சிலருக்கு அச்சம் என்றால் என்னவென்று தெரியாது என கூறியிருந்த அவர், பாகிஸ்தானில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் போதும் தாம் அச்சத்துடன் இருந்ததாக சுட்டிக்காட்டினார்.

மேலும், தனது வாழ்க்கையில் மிகவும் சிறந்ததொரு நாள் எது என்று கேட்டால், அது 2009ஆம் ஆண்டு (போர் நிறைவடைந்த ஆண்டு) என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் காணப்பட்ட அச்ச சூழ்நிலை, இல்லாது செய்யப்பட்ட ஆண்டே அது என அவர் சுட்டிக்காட்டிருந்தார்.

எனினும், இலங்கை மக்கள் மீண்டுமொரு அச்சத்துடனான சூழ்நிலையை சந்தித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இலங்கை மக்களுக்கு யார் சரியான பாதுகாப்பை வழங்குவார்களோ அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளதாக குறிப்பிட்ட அவர், அச்சமற்ற சூழ்நிலையை உருவாக்கும் தலைவர் ஒருவரே நாட்டிற்கு தேவை என முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டின் போது, தனது தலைவராக செயற்பட்ட அர்ஜுன ரணதுங்க என்ன கூறினாலும், அதனை தான் செய்ததாகவும், ஏனெனில், கிரிக்கெட்டில் அர்ஜுன ரணதுங்க தன்னை பாதுகாத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யக்கூட தயார் என சிலர் கூறியதை தான் கேட்டதாக தெரிவித்த அவர், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தால், நாட்டை ஆட்சி செய்வது யார் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், எதிர்வரும் தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு அச்சமின்றியும், சந்தேகமின்றியும் வாழக்கூடிய சூழ்நிலையை யார் உருவாக்குகின்றார்களோ, அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

 

’திரித்து கூறியுள்ளனர்’

முரளிதரன் பேசியதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து பிபிசி தமிழ் வினவிய போது, "தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் என தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை." என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது, தனது கருத்தை சில ஊடகங்கள் திரித்து கூறியுள்ளதாக தெரிவித்த அவர், தனது உண்மையான நிலைப்பாட்டை புரிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரே நாட்டு மக்கள் எந்தவித அச்சமும் இன்றி சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழ்நிலை இலங்கையில் உருவாகியதாகவே தான் கருத்து வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், நாட்டு மக்கள் மீண்டும் அச்சத்துடனான ஒரு சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமையே இதற்கான காரணம் என முத்தையா முரளிதரன் கூறுகின்றார்.

இந்த நிலையில், இலங்கையின் பாதுகாப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கூறிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், அவ்வாறான தலைவர் ஒருவரே நாட்டிற்கு தேவை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்னை  உணராத ஒரு அடிமைக்கு  அன்று  பொன்னாளே.....

 

Link to comment
Share on other sites

பிரபல்யம் என்பது ஆட்சி செய்வதற்கான தகைமையல்ல - மாலிங்க

எனக்கு அரசியல் தொடர்பில் எதுவும் தெரியாது. பிரபல்யம் என்பது ஆட்சி செய்வதற்கான தகைமையல்ல. நிருவாகத்திற்கும் பிரபல்யத்திற்கும் இடையில் வித்தியாசமுள்ளது. நான் அந்த வித்தியாசத்தை அறிந்துள்ளேன் என இலங்கை அணியின் இருபதுக்கு - 20 அணித் தலைவர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.

 

இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

அவர் ஊடகவியலாளரின் கேள்விக்கு மேலும் பதிலலிக்கையில்.

முரளி தொடர்புபட்டமை குறித்து ஏதேனும் கருத்துள்ளதா ?

எனக்கு அரசியல் தொடர்பில் எதுவும் தெரியாது. எனக்கு கிரிக்கெட் தொடர்பிலேயே தெரியும். கிரிக்கெட் தொடர்பில் ஏதேனும் வினாவினால் என்னால் பதிலளிக்க முடியும். அது முரளியின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கக்கூடும். வியத்மக குறித்து நீங்கள் கூறும் வரை எனக்கு என்னவென்று தெரியாது. முரளி சேர்ந்திருந்தால் அது தனிப்பிட்ட விருப்பமாக இருக்கும். 

கிரிக்கெட் வீரர்களும் தற்போது அரசியல்வாதிகளாக மாறுகின்றனர். பாகிஸ்தானிலும் அவ்வாறு . நீங்கள் பிரபலமானவர்  உங்களுக்கு எண்ணமில்லையா ?

நான் கிரிக்கெட் விளையாட்டில் மாத்திரமே பிரபலமானவன். கிரிக்கெட் விளையாட்டில் நான் முடிந்தவரை செய்வேன். பிரபல்யம் என்பது ஆட்சிசெய்வதற்கான தகைமையல்ல. பிரபல்யம் என்பது மக்களின் விருப்பமாகும். எனினும் ஆட்சியென்பது நிருவாகம் ஆகும். நிருவாகத்திற்கும் பிரபல்யத்திற்கும் இடையில் வித்தியாசமுள்ளது. நான் அந்த வித்தியாசத்தை அறிந்துள்ளேன். என பதிலளித்துள்ளார்

https://www.virakesari.lk/article/64468

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

கோத்தாவின் எதிர்பார்ப்பில், மண் அள்ளிக் கொட்டிய முரளிதரன்.

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட மாநாட்டில், 
சிறிலங்காவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் வெளியிட்டுள்ள கருத்து, 
கோத்தா தரப்புக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 😂
- எஸ் தீபன்.-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவன் எமது பக்கம் ஒரு போதும் கதைப்பது கிடையாது எதிர்கால கதிர்காமர்  உண்மையில் தமிழ் இரத்தம் ஓடுதா என்று dna டெஸ்ட் எடுக்கணும் .

2013 களில் யாழில்  tna வெண்டு மமதையில் இருந்த காலம் திடிரென்று வெள்ளையின அதிகாரிகள் பாதுகாப்பு படைகள் பரபரப்பு சகிதம் அதுவரை tnaக்கு தெரியாத எமக்கே அதுவரை தெரியாத அகதிகொட்டகைகளின் உள்ளே அப்போதைய uk பிரதமமந்திரி சாவகாசமாய் மொழி பெயர்பாலருடன் அந்த பாதிக்க பட்ட தமிழ் மக்களின் குறைகளை செவி மடுத்து கொண்டு இருந்தார் இந்த எதிர் பார்க்காத  சதுரங்க காய் நகர்த்தலை இலங்கை இனவாத அரசு கையாள உடனடி அடிமையாக கூவ அனுப்ப பட்டவர் இந்த முத்தையா முரளி எனும் அடிமை அவர் கொடுத்த காசுக்கு மேலேயே கூவினர் எப்படி ஒரு முப்பது நாப்பது தமிழ் பொம்பிளையள் அழுவதை வைத்து இலங்கையில் இனவழிப்பு நடந்தது என்று கமரூன் பொய் சொல்கிறார் என்று இங்கிலாந்து தொலைக்காட்ட்சி  சனல் 4 வுக்கு பேட்டியளித்தார் அதுமட்டுமா கேமரூனுக்கு ஒன்றும் தெரியாது என்று ஏகத்துக்கு போட்டு தாக்கினார் . கீழே முரளியின் பித்தலாட்டம் 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.