Sign in to follow this  
ampanai

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்

Recommended Posts

156799163279021.jpg

 

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் நடாலுடன், ரஷ்ய வீரர் மெட்வதேவ் மோதினார்.

நான்கு மணி 50 நிமிடம் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் இரு வீரர்களும் சமபலத்துடன் விளையாடினர். இருவரும் தலா 2 செட்களை வென்ற 5வது செட்டை நடால் கடுமையாகப் போராடி கைப்பற்றினார். இறுதியில் 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்றார்.

நடாலுக்கு வெற்றிக் கோப்பையுடன் 3.85 மில்லியன் டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. அவருடன் மோதிய மெட்வதேவ் 1.9 மில்லியன் டாலர் பரிசுத்தொகையைப் பெற்றார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 19வது முறையாக நடால் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

https://www.polimernews.com/dnews/79021/அமெரிக்க-ஓபன்-டென்னிஸ்போட்டியில்-சாம்பியன்பட்டம்-வென்றார்-ரஃபேல்நடால்

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • நன்றி குங்குமம் முத்தாரம் இரண்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சர்வதேச எலெக்ட்ரானிக் ஷோ ஒன்று நடந்தது. அதில் பல்வேறு நிறுவனங்களின் உயரதிகாரிகள் கலந்துகொண்டு தங்களின் வருங்காலத் திட்டங்களைப் பற்றிச் சொன்னார்கள். அப்போது ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி, ‘‘நாங்கள் மூன்று திரையுடன் கூடிய லேப்டாப்பை வடிவமைக்கப் போகிறோம்...’’ என்றார். இதைக்கேட்ட சிலர் அதிர்ச்சியடைந்து பாராட்டினாலும், பலர் நேரடியாகவே அவரை கேலி செய்தனர். இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமே இல்லை என்றனர். இந்நிலையில் மூன்று டிஸ்பிளேக்களைக் கொண்ட லேப்டாப் அடுத்த வருடம் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சில வருடங்களாகவே அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் லேப்டாப்புக்கு கூடுதல் திரையை எப்படி ஒட்ட வைக்கலாம் என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்து வந்தனர். அந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்று இரு திரைகளைக் கொண்ட லேப்டாப்பை வடிவமைத்தனர். அதற்கு ‘டூயோ’ என்று பெயர். ஆனால், மூன்று திரை இருந்தால் நன்றாக இருக்குமே... என வாடிக்கையாளர்களும், லேப்டாப் உற்பத்தி நிறுவனங்களும் விரும்பின. லேப்டாப்பின் திரையின் வலது புறத்தில் ஒன்றும், இடது புறத்தில் ஒன்றும் பொருத்தி சோதனை செய்தார்கள் விஞ்ஞானிகள். மூன்று திரைக்கும் ஒரேயொரு பிராசஸர், இயங்குதளம்தான். சோதனை வெற்றி பெறவே முத்திரை லேப்டாப்புக்கு ‘ட்ரையோ’ என்று பெயர் வைத்துவிட்டனர்.எடிட்டிங் துறையில் இருப்பவர்கள், கேம் பிரியர்கள், கலந்துரையாடல் நிகழ்வுகளில் புரொஜெக்‌ஷன் செய்பவர்கள் மற்றும் கல்விக்கூடங்களுக்கு முத்திரை லேப்டாப் பேருதவியாக இருக்கும். இதை மடித்து வைத்துக்கொள்ளவும் முடியும். அதனால் சுலபமாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். 1080 ரெசல்யூசனுடன் 14 இன்ச் மற்றும் 12.5 இன்ச் டிஸ்பிளேவில் இது கிடைக்கும். 2020க்குள் முத்திரை லேப்டாப் விற்பனைக்கு வந்துவிடும் என்று தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள். விலை நாற்பதாயிரம் ரூபாய்க்குள் இருக்கலாம். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526417
    • பெங்களூரு: கர்நாடகத்தில் கன்னட மொழியே முதன்மையானது என மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ தலைவருமான அமித்ஷா நேற்று முன்தினம் டிவிட்டரில்  விடுத்துள்ள செய்தியில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி  இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை  ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்,’ என கூறியுள்ளார். இந்தி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய அமித்ஷா, ‘‘நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும். அடுத்தாண்டு நாட்டின் பல பகுதிகளில் இந்தி தின நிகழ்ச்சிகளை நாம் நடத்துவோம்.   ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுடன் தங்கள் தாய்மொழியில் பேச வேண்டும். உடன் பணியாற்றுபவர்களிடமும் தாய்மொழியில் பேச வேண்டும். நான் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது, முதல் 10 நாட்களில் ஒரு கோப்பு கூட   இந்தியில் வரவில்லை. தற்போது 60 சதவீத கோப்புகள் இந்தியில் வருகின்றன,’’ என்றார். அமித்ஷாவின் இந்த கருத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராய் விஜயன், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி உட்பட பல தலைவர்கள் கடும் எதிர்ப்பு   தெரிவித்துள்ளனர். இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து செப்டம்பர் 20-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில், கர்நாடகத்தில் கன்னட மொழியே முதன்மையானது. அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளும் நாட்டில் சமமானவையே. கன்னட மொழிக்கு தரப்படும் முக்கியத்துவத்தில்  சமரசம் கிடையாது. கன்னட மொழி, கலாசாரத்தை ஊக்குவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526449
    • விரும்பியோ விரும்பாமலோ புதிய உலக ஒழுங்குக்கு ஏற்ப யதார்த்தமான அரசியல் காய் நகர்தலை தமிழர் தரப்பு செய்யவேண்டும்.அவன் வேண்டாம் இவன் வேண்டாம் என்று இருந்தால் ஆரும் உதவி இல்லாத ஈழ தமிழரை யார் காப்பது . ஒற்றுமையே பலம் அதுவே தமிழின் வளம்.
    • தமிழ் மக்கள் தாயகத்தில் பலவேறு பிரச்சினைளுக்கு முகம்கொடுத்த உள்ளார்கள். போர்க்குற்ற விசாரணை, காணி வேண்டும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், மத சுதந்திரம், குடியேற்றம், வேலை வாய்ப்பு, கல்வி, மொழி என அடுக்கியவண்ணம் போகலாம். இன்றைய தமிழ் அரசியல் தலைமைகள் இந்த பிரச்சனைகளுக்கு என்ன அரசியல் தீர்வு என்றோ இல்லை இதுதான் அரசியல் தீர்விற்கான பாதை என்றோ ஒரு தெளிவான நிலையில் இல்லை; ஒற்றுமையும் இல்லை. இங்கே இன்றைய இருப்பை தக்க வைத்தால் மட்டுமே நாளை பற்றி நாம் எதையும் யோசிக்க முடியும் என்ற அவசர நிலை. அதற்கு, வடக்கும் கிழக்கும்  இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு, அதுசார்ந்த இந்தியாவின் உறுதிமொழி அடிப்படையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.    வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு இந்தியாவை நம்பி பயனில்லை என்றால், வேறு என்ன தெரிவுகள் உள்ளன?