Jump to content

ஒற்றை டெஸ்டில் பங்களாதேஷை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்


Recommended Posts

image_d7a069f095.jpg

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே சட்டோகிராமில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த ஒற்றை டெஸ்ட்டை ஆப்கானிஸ்தான் இன்று வென்றது.

இன்றைய ஐந்தாம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பங்களாதேஷ் 173 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்: 342/10 (துடுப்பாட்டம்: ரஹ்மட் ஷா 102, அஸ்கர் ஆப்கான் 92, ரஷீட் கான் 51, அஃப்ஸர் ஸஸாய் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஜியுல் இஸ்லாம் 4/116, ஷகிப் அல் ஹஸன் 2/64, நயீம் ஹஸன் 2/43)

பங்களாதேஷ்: 205/10 (துடுப்பாட்டம்: மொமினுல் ஹக் 52, மொஷாடெக் ஹொஸைன் ஆ.இ 48, லிட்டன் தாஸ் 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 5/55, மொஹமட் நபி 3/56)

ஆப்கானிஸ்தான்: 260/10 (துடுப்பாட்டம்: இப்ராஹிம் ஸட்ரான் 87, அஸ்கர் ஆப்கான் 50, அஃப்ஸர் ஸஸாய் ஆ.இ 48 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகிப் அல் ஹஸன் 3/58, மெஹிடி ஹஸன் மிராஸ் 2/35, நயீம் ஹஸன் 2/61, தஜியுல் இஸ்லாம் 2/86)

பங்களாதேஷ்: 173/10 (துடுப்பாட்டம்: ஷகிப் அல் ஹஸன் 44, ஷட்மன் இஸ்லாம் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 6/49, ஸகிர் கான் 3/59)

போட்டியின் நாயகன்: ரஷீட் கான்

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/ஒற்றை-டெஸ்டில்-பங்களாதேஷை-வீழ்த்தியது-ஆப்கானிஸ்தான்/44-238199

Link to comment
Share on other sites

ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தை வென்று வரலாற்று சாதனை

 

டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள ஓர் அணியை வெல்லவேண்டும் என்ற உத்வேகத்தில் விளையாடிய ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தை 173 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தது.

இதன்மூலம் 224 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை படைத்துள்ளது

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளும் எடுத்த ஆப்கானிஸ்தான் சுழல்பந்துவீச்சாளர் ரஷீத்கான் வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தார்.

இதுவரை அயர்லாந்து, இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளுடன் தலா ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான், மொத்தம் தான் விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sport-49637116

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷித் கான் சிறப்புமிக்க சாதனைகளை பதிவு செய்துள்ளார்.

September 10, 2019

rasithkhan.jpg?resize=624%2C351இளம் வயதில் அணித்தலைவராக பதவி ஏற்ற ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் சிறப்புமிக்க சாதனைகளை பதிவு செய்துள்ளார். பங்களாதேஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 224 ஓட்ட வித்தியாசத்தில் வென்று ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக செயற்பட்ட ரஷித் கான் இளம் வயதில் அணித்தலைவர் பொறுப்பை ஏற்ற நிலையில் இவ்வாறு சிறப்புமிக்க வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் இளம் வயதில் அணித்தலைவர் பொறுப்பை ஏற்ற வீரர் என்ற சாதனைப் படைத்த ரஷித் கான், அறிமுக போட்டியிலேயே வெற்றி பெற்ற அணித்தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மேலும் அணித்தலைவராக அறிமுகமான போட்டியிலேயே அரைசதம் அடித்ததுடன் 10 விக்கெட்டுக்கள் கைப்பற்றி முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளதுடன் ஆட்ட நாயகன் விருதையும் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

இதேவேளை டெஸ்ட் போட்டிகள் விளையாடும் 10 நாடுக்ளுக்கு எதிராக தோல்வியை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை பங்களாதேஸ் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது  #ரஷித்கான்  #சாதனை #ஆப்கானிஸ்தான்

 

http://globaltamilnews.net/2019/130252/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.