• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
ampanai

பௌத்த விகாரை வளாகத்தில் இந்து ஆலய மகா கும்பாபிசேகம் மட்டக்களப்பில் மத நல்லிணக்கம்

Recommended Posts

இனங்களுக்கிடையில் மத இன நல்லிணகத்தை ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த விகாரை விகாராதிபதி பட்ட பொல ஸ்ரீ குனானந்த நாயக்க தேரரின் ஆலோசனைக்கு அமைய  மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் ஜெயந்திபுரம் பௌத்த விகாரை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ கண் திருஷ்டி கணபதி  ஆலயத்தின் பிரதிஷ்டா மகாகும்பாபிஷேக விஞ்ஞாபனம் நிகழ்வு மிக சிறப்பாக நேற்று நடைபெற்றது.

கள்ளியங்காடு ஸ்ரீ ஆஞ்சநேய ஆலய பிரதம குரு சிவஞான திலகம் சிவஸ்ரீ உத்தம ஜெகதீஸ்வரக் குருக்கள் தலைமையில் விநாயர் வழிபாடுகளுடன் கிரிகைகள் ஆரம்பமாகி  தானிய வாசம் ,வாஸ்து சாந்தி ,,தூபி ஸ்தாபனம்  யாக பூஜைகள் இடம்பெற்று ஸ்ரீகண் திருஷ்டி கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு  இடம்பெற்றது.

விநாயர் வழிபாடுகளுடன் விசேட யாக பூஜைகளுடன்     கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீ கண் திருஷ்டி கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்  நிகழ்வுகள்  சிறப்பாக நடைபெற்றது.

IMG_6817.JPG

 

 

விநாயர் வழிபாடுகளுடன் விசேட யாக பூஜைகளுடன்     கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீ கண் திருஷ்டி கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்  நிகழ்வுகள்  அடியார்கள் புடை சூழ   அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன்  கோலாகலமாக நடைபெற்றது .

தொடர்ந்து பிரதான  கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மூல மூர்த்தியாகிய  கணபதிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது .பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன பிரதம குரு கள்ளியங்காடு ஸ்ரீ ஆஞ்சநேய ஆலய பிரதம குரு சிவஞான திலகம் சிவஸ்ரீ உத்தம ஜெகதீஸ்வரக் குருக்கள் தலைமையில்  நடைபெற்ற  மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன  நிகழ்வில் ஜெயந்திபுரம் கிராம  மக்கள்  கலந்து சிறப்பித்தனர் .

https://www.virakesari.lk/article/64348

IMG_6824.JPG

IMG_6857.JPG

IMG_6871.JPG

Share this post


Link to post
Share on other sites

"பௌத்த விகாரை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ கண் திருஷ்டி கணபதி  ஆலயத்தின்..."

 

நீண்ட கால அடிப்படையில் இதனால் சைவர்களுக்கு பாதிப்பு என நாம் எண்ணலாம்.

ஆனால், நிகழ்காலத்திற்கு உதவும். இது சைவத்தை அது சார்ந்த மொழி, கலாச்சாரத்தை இன்றுடன் அழிக்கப்படாமல் வைத்திற்குக்க உதவும். இன்று இருந்தால் தான் நாளை பற்றி எண்ணலாம்.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ampanai said:

நீண்ட கால அடிப்படையில் இதனால் சைவர்களுக்கு பாதிப்பு என நாம் எண்ணலாம்.

ஆனால், நிகழ்காலத்திற்கு உதவும். இது சைவத்தை அது சார்ந்த மொழி, கலாச்சாரத்தை இன்றுடன் அழிக்கப்படாமல் வைத்திற்குக்க உதவும். இன்று இருந்தால் தான் நாளை பற்றி எண்ணலாம்.

புத்த பெருமானைச் சைவர்களும், சைவக்கடவுளரை பெளத்தர்களும் வணங்கிக் கொண்டாடுவது, இலங்கையில் தொன்றுதொட்டு நடைபெற்றுவரும் நிகழ்வு. இன்று கேடுகெட்ட சில அரசியல்வாதிகள் தோற்றம்பெறும் வரையில், அவரவர் மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் இடையூறுகள் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை.

 

Share this post


Link to post
Share on other sites

எனக்கென்னவோ.... இது, இறால்  போட்டு... சுறா பிடிக்கிற மாதிரி இருக்கு.
நாளைக்கு சைவ கோவிலுக்குள், ஒரு மூலையில்  புத்தரை வைத்து மத நல்லிணக்கம் செய்வம்  என்று,
புத்த பிக்குமார் ஆரம்பித்தால்.... அதனை தடுக்க முடியாமல், போகும்.
கதிர்காம கந்தனுக்கு நடந்த மாதிரி, மூலக்  கடவுளை ´...  ஒரு மூலையில்  இருத்தி விடுவார்கள். :grin:

சிங்களவன் லேசுப்  பட் ட ஆள் இல்லை. அவன் செய்யும் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும்,
பெரிய காரண, காரியங்கள் இருக்கும். சூதனமாக  நடந்து கொள்ளுங்கோ.....

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

கண்டி தலதாமாளிகளியில் சம முக்கியத்துவம் கொடுத்து சர்ச்சும், கோவிலும், மசூதியும் கட்டும் போது தான் உண்மையான மத நல்லிணக்கத்துக்கு முதற்படியாக அமையும்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

முதன்மை மதமாக பௌத்தம் ஒரு பல்லின மத சமூக நாட்டில் இருப்பதே இந்த நாட்டின் சாபக்கேடுகளில் ஒன்று. இருந்தாலும் இந்த முயற்சி  பாராட்டுக்குரியதே.

Share this post


Link to post
Share on other sites

மதம்பிடித்தால் அந்த மதத்தால் ஆட்கொண்ட மனிதர்கள் செய்வது என்னவென்று அவர்களுக்கே தெரியாது. மதம்கொண்ட யானைபோல் செயற்பட்டு மனிதவாழ்வையே  நாசம் செய்துவிடுவார்கள். அதனால்தான் எம் முன்னோர்கள் சைவத்தை மதம் என்று பெயரிட்டு அழைக்காது சைவ சமயம் என்று அழைத்தார்களோ.?  

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

ஐயர் புத்தருக்கு அபிசேகம் செய்திருக்க வேணும்....

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, putthan said:

ஐயர் புத்தருக்கு அபிசேகம் செய்திருக்க வேணும்....

ஐயர் பிராமண குலவழி வந்தவராக இருந்தால் வரும்படி இல்லாமல் செய்யமாட்டார். :shocked:

Share this post


Link to post
Share on other sites
59 minutes ago, Paanch said:

ஐயர் பிராமண குலவழி வந்தவராக இருந்தால் வரும்படி இல்லாமல் செய்யமாட்டார். :shocked:

அதுதான் அவையள் புத்தரை தூக்கிபிடிக்கவில்லை என்று நினைக்கிறன்

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, putthan said:

அதுதான் அவையள் புத்தரை தூக்கிபிடிக்கவில்லை என்று நினைக்கிறன்

பாவம் புத்தர். 😢

அவரைத் திருப்பதிக்குக் கொண்டுசென்று பிரதிட்டை செய்தால் என்ன....? :100_pray:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • Fletcher, R., Evans, D., Pottier, C., & Rachna, C. (2015). Angkor Wat: An introduction. Antiquity.  Briggs, L.P. 1999 [1951]. The ancient Khmer Empire. Bangkok: White Lotus. Evans, D.H., Pottier, C., Fletcher, R.J., Hensley, S., Tapley, I., Milne, A. & Barbetti, M.. 2007. A comprehensive archaeological map of the world's largest pre-industrial settlement complex at Angkor, Cambodia. Proceedings of the National Academy of Sciences of the USA 104. Higham, C. 2001. The civilisation of Angkor. London: Weidenfeld & Nicolson. Maxwell, S.T. 2008. The stele inscription of Preah Khan, Angkor: text with translation and commentary. UDAYA, Journal of Khmer Studies 8: 1–114   மேலே உள்ளவை சில ஆய்வுத்தாள்களும், ஆய்வின் பேறாக வந்த புத்தகங்களும். நான் மேலே சொன்ன அத்தனை கருத்துக்களுக்கும் இவற்றில் ஆதாரம் உண்டு. தெய்வநாயகம் ஐயாவின் வீடியோவை பார்தால் தெரியும் அவர் என்ன சொல்கிறார் என்பது. நான் மேலே கூறியவற்றில் ஒன்றைத்தானும் அவர் மறுக்கவில்லை. இந்த காணொளியில் ஒரு இடத்தில்தானும் அவர் கம்போடியாவையோ, கெமர் பேரரசையோ, சூர்ய வர்மனையையோ பற்றி ஒரு வார்தைதானும் பேசவில்லை. ரஜேந்திரன் மட்டுமே இந்தியாவின் ஒற்றை சக்கரவர்தி என்கிறார் ஐயா. உண்மை. கடாரம் (தற்போதைய மலேசியாவின் கெடாய்), ஜாவா, சுமாத்திரா எங்கும் சோழ ஆதிக்கம் நிறைந்தது என்கிறார். இதைதான் நான் முன்பே அமெரிக்காவுடன் சோழரை ஒப்பிட்டு எழுதினேன். தெற்காசியா எங்கினும் சோழ chambers of trade இருந்தது என்றும் எழுதினேன். இதையே சொல்லும் ஐயா, இதே போல் ரோமில் தமிழர் குடியிருப்பு இருந்தது என்கிறார். தாய்லாந்திலும் சோழ பாதிப்பு இருந்தது என்கிறார் ஆனால், சீயம் மன்னர்கள் தமிழர்கள் என பேய் கதை கதைக்கவில்லை. ரஜேந்திரன் 1014 அரியணை ஏறும் போது, கெமர் அரசு தமிழ் அரசாக இருந்ததா? 1044 ரஜேந்திரன் இறக்கும் போதாவது இருந்தததா? இல்லை? ஏன்? ஏனென்றால் கோல்கொண்டா, கங்கை, கடாரம், ஈழம் என பட்டியலிட்ட ராஜேந்திரனின் மெய்கீர்தியில் மருந்துக்குதானும் அங்கவோர்ட் இல்லை. இன்னுமொன்றையும் நினைவில் கொள்ளுங்கள். இப்போ KFC மெக்டொனால்ட்ஸ் கடை இருக்கும் நாடுகள் எல்லாம் அமெரிக்கா ஆட்சிக்குட்பட்ட நாடுகள் இல்லையே? அது போலத்தான் சோழர் பொற்காலத்தில் தமிழர் கலாசாரமும், மதமும், வாழ்வியலும். தெற்காசிய அரசகுடிகள் சோழனை கொப்பி அடிப்பதை ஒரு வழமையாக கொண்டிருந்தனர். கடலோர அரசுகள் திறையும் கூட செலுத்தினர். ஆனால் இதை வைத்து இவை எல்லாம் தமிழ் அரசுகள் என நிறுவுவது சுத்த பைத்தியக்காரத்தனம்.    
  • இந்த 40 லட்சத்தில் ந்ம்ம தமிழாக்க ள்  இல்லை..ஏனெனில் இபா ஒருமாதமாக நடக்கிற தமிழர் மரபுரிமை நாள் விழாக்களை பார்த்தால் புரியும்....இங்கு தமிழனுக்குப் பஞ்சமா....அப்படியா ..தாங்கமுடியவில்லை அய்யா....வெள்ளையும் கறுவலும் யோசிக்கும் ஏன் இவன்கள் அகதியாய் வந்தவர்கள் என்று....போட்டோகாரரின் மஜிக் விளையாட்டுக்கள் வேற லெவெல்.....இப்படி ஆடம்பரமாக இவ்விழாக்கள் செய்வதனால் விழாவின் குறிக்கோளே அழிந்துபோகும்....நாட்டிய ஆசிரியைகளும் கல்லா கட்டுவ்தும் அமோகம்...முக இழுப்புச் செய்பவரும்...சாறீ, அலங்கார வேலை செய்பவருக்கும்...இந்தவிழா அத்தியாவசியமாயிருக்கும் ..மற்றும்பபடி தமிழுக்கு அல்ல...        
  • நான் மேலே எழுதிய பொது இந்த கருத்தை வாசித்து இருக்கவில்லை  உங்கள் கருத்தை முதல் பக்கத்தில் பார்த்தவுடன் அதுக்கு பதில் எழுதி இணைத்த்துவிட்டு  மேல் நோக்கி பார்க்கும்போது இதை நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் ........... பல்லவர்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்லுவது  ஆரியர்கள்தான் இந்தியாவின் ஆதிக்குடிகள்  என்று சொல்லுவது போல் ஆகும். பல்லவர்கள் தமிழ்மொழியை மட்டும் உள்வாங்கி இருக்கவில்லை என்பதுதான் நாம் காணக்கூடியது  எங்கு எங்கு எல்லாம் அரசுஅமைத்தார்களோ அங்கு இருந்த மொழிகளை முதன்மை கொண்டார்கள் என்பதுதான் உண்மை  இப்போது நாம் கீழடிக்கு சென்றால் ... அல்லது சேர பேரசின் வரலாறுக்கு சென்றால் தென் இந்தியாவில் தமிழர் தாண்டி இன்னொருவர் கி மு  1000 -கி பி 300 வரை இருந்து இருக்க வாய்ப்பில்லை  சம்ஸ்கிருதம்   பின்னாளின்  விஜயநகர ஊடாக பல்லலர்களிடம் வந்திருக்கலாம் என்பதிலும் விட சம்ஸ்கிருத மொழியையே பல்லவர்கள்தான்  உருவாக்கி இருக்கலாம் என்றுதான் தனிப்பட நான் நம்புகிறேன் இவர்கள் ஆந்திர பகுதியில் ஒரு தனித்த குழுமமாக  நெடும்காலம் வாழ்ந்தும் இருந்து இருக்கலாம் சம்ஸ்கிருதம்  தென் இந்தியாவில் இருந்து  மேல்நோக்கி சென்றது என்பதுதான் சாத்தியமானது.  கிரந்தம் தமிழ் மொழியின் பிரிவுதான் இது இப்போதும்  தமிழ் நாட்டு எல்லையோடுதான் இருக்கிறது  இவர்களுடைய எழுத்த்து வடிவம்தான் வேறு தவிர  ஒலி வடிவம் தமிழ்தான்  கிரந்தம் பற்றிய  தெளிவான ஆய்வு பல முடிச்சுக்களை அவிழ்க்கும் காரணம்   மலையாளம் ... சிங்களம் .... தெலுங்கு ...... தாய் (தாய்லாந்து)  ஜவானிஷ் (இந்தோனேசிய) திகளாரி (திகார்)  போன்ற எல்லா மொழிகளும் எழுத்துருவை கிரந்தத்தில் இருந்தே பெற்று இறுக்கின்றன.  வெற்றி வேல்.....   வீர வேல்..... எல்லாம் தமிழ் எங்கும் தமிழ்  என்பது எனது எண்ணம் இல்லை  ........ நான் நீண்ட நாள்களாக இவை பற்றி மிகவும்  ஆவலுடன் வாசித்து அறிந்து வருகிறேன்  ... தமிழ் மொழிமன்னர்கள் அரசுகள் பற்றி அறிவதில்  ஆர்வம் உண்டு. நீங்கள் தெளிவாக  எழுத்துவதால்தான் உங்களுடன் இதுபற்றி பதில் எழுத விரும்பினேன். எங்கள் யாரிடமும் எந்த ஆதாரமும் இப்போது கையில் இல்லை  சாத்தியமானது  சாத்தியம் இல்லாதது  என்ற நிலைப்பாட்டில் எங்கள் எண்ணங்களை வடிவமைக்கிறோம் என்றுதான் எண்ணுகிறேன்.  இங்கு மேலேயும் சிலர் அங்கு தமிளுமில்லை  ஒன்றும் இல்லை என்று எழுந்த மாத்திரத்தில்தான் எழுதுகிறார்கள்  அது எமது  அரசியல் பற்றி எழுதுவது என்றால் தங்களை நியாவாதிகள்  நடுநிலையாளர்கள்  என்று தங்களுக்குள்ளேயே ஒரு பெருமிதம் கொண்டவர்கள்  எழுத தொடங்கும்போது    புலிகளும் கல்விமான்கள்  கவரிமான்கள் கஸ்தூரிமான்களை சுட்டார்கள் என்று தொடங்குவதுபோல. புலிகள் சுட்ட நாலு மான்களின் பெயரை எழுதுங்கள்  அவர்கள் என்ன மான்கள் என்று பாப்போம் என்றால் எழுத மாடார்கள்.  அங்கோர்வார்டு கோவில் பல்லவர்களின் வடிவைப்பு என்பதை ஆர்க்கிடெக்ட் (மற்றும் வரலாறு) தெரிந்த எவனும் மறுக்க மாட்டான்  மறுக்கவும் முடியாது ......... எப்படி? என்பதுதான் தெளிவற்றது