• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

13 நாட்கள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார் முதல்வர் பழனிசாமி!

Recommended Posts

Capture-1-720x450.jpg

13 நாட்கள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார் முதல்வர் பழனிசாமி!

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, 13 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட குழு, நாளை (செவ்வாய்க் கிழமை) நாடு திரும்பவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

டுபாயில் இருந்து புறப்பட்டு நாளை அதிகாலை 2.40 மணிக்கு, அவர்கள் சென்னை திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒகஸ்ட் 28ஆம் திகதி முதல்வர் பழனிசாமி இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றார். அவருடன் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட குழுவும் சென்றது. 3 நாட்கள் லண்டனில் தங்கி இருந்த அவர், முதலீட்டாளர்களையும் தமிழ் அமைப்புகளை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, லண்டனில் இருந்து கடந்த 1ஆம் திகதி அமெரிக்கா சென்று, அங்கு பல்வேறு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் 5,050 கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் தொழில் தொடங்க 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு 7ஆம் திகதி இரவு டுபாய் சென்ற அவர், 2 நாட்கள் அங்கு தொழில்முனைவோர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், 13 நாட்கள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு நாளை, நாடு திரும்பவுள்ளார்.

http://athavannews.com/13-நாட்கள்-வெளிநாட்டு-பயணத/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • தாயே தமிழே வணங்குகிறோம்' - தமிழ்தாய்க்கு ஒரு புது வாழ்த்து.  
    • கரோனா படுமோசமாகச் சென்று கொண்டிருக்கிறது, இயல்புக்கான எதிர்காலம் கண்களுக்குத் தெரியவில்லை: உலகச் சுகாதார அமைப்பு எச்சரிக்கை   உலகம் முழுதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 32 லட்சத்து 35 ஆயிரத்து 760 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் இரண்டாம் அலை தொடங்கியுள்ளதையடுத்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை மொத்தம் 17 லட்சத்து 91 ஆயிரத்து 767 பேராக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 247 ஆக அதிகரிக்க, பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 79 ஆயிரத்து 483 ஆகி உள்ளது. இதனையடுத்து உலக நாடுகளும் அமெரிக்காவும் இந்தச் சூழ்நிலைகளை எதிர்கொள்ள போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவே கண்களுக்குத் தெரியும் எதிர்காலத்தில் உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கை இல்லை என்று உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. “வைரஸ் பரவல் படுமோசமாகி வருகிறது, எதிர்காலம் நிச்சயமற்று உள்ளது, இயல்பு நிலை திரும்புமா என்ற சந்தேகம் நாளுக்குநாள் வலுக்கிறது” என்று உலகச் சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் அச்சம் தெரிவித்துள்ளார். நாடுகள் வைரஸுக்கு எதிராக ஒரு பரந்துபட்ட ஒட்டுமொத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். புதிய தொற்றுக்களில் பாதி அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. இவரது கவலைக்குக் காரணம் புளோரிடாவில் ஒரேநாளில் 15,000த்துக்கும் அதிகமான புதிய கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதே. அடிப்படைகளை சரியாகக் கடைப்பிடிக்கவில்லையெனில் இந்த கரோனா பெருந்தொற்று ஒரே பாதையில் தான் பயணிக்கும். அதாவது இது மேன் மேலும் மோசமாகும், மோசமாகும் ,மோசமாகும் என்று கெப்ரியேசஸ் எச்சரித்துள்ளார். இதற்கிடையே வைரஸின் மூலம் தேடி உலகச் சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு சீனாவுக்குச் சென்றுள்ளனர். புளோரிடா மாகாண மக்கள் தொற்று நோய் நிபுணர் சிண்டி பிரின்ஸ் கூறும்போது, “எப்படியாவது இதனைக் கட்டுப்படுத்தி விடுவோம் என்றே உறுதியாக நம்பினோம். நாடு முயற்சிக்க வேண்டும், இதில் மனிதர்களின் நடத்தை முக்கியமானது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் சரியாக எதையும் கடைபிடிக்கவில்லை” என்று வருந்தியுள்ளார். சனிக்கிழமையன்று கரோனா மறுப்பாளர் அதிபர் ட்ரம்ப் முதல்முறையாக முகக்கவசம் அணிந்து வெளியே வந்தார். புளோரிடாவில் வால்ட் டிஸ்னி வேர்ல்டைத் திறந்ததால் ஒரே நாளில் 15,299 பேருக்கு கரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது. மொத்தம் 269,811 பாதிப்புகள் புளோரிடாவில் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் ஒரே நாளில் 28,000-த்திற்கும் அதிகமானோருக்குக் கரோனா பரவியுள்ளது. இதனையடுத்து உலகச் சுகாதார அமைப்பு கண்களுக்கு எட்டும் எதிர்காலத்தில் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளது. https://www.hindutamil.in/news/world/564327-us-grapples-with-pandemic-as-who-warns-no-return-to-normal-2.html    
    • அறிகுறிகள் தோன்றிய நாளிலிருந்து 2 வாரங்களுக்கு கரோனா நோயாளிகளிடம் இருந்து மற்றவர்களுக்கு வைரஸ் பரவும்: நுரையீரல் நோய் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை    மதுரை கரோனா நோயிலிருந்து மீண்டாலும் அந்த நோயாளிகளிடம் இருந்து நோய் அறிகுறி தோன்றிய நாளிலிருந்து அடுத்த இரண்டு வாரங்களுக்கு ‘கரோனா’ தொற்று பரவும் வாய்ப்புள்ளதாக நுரையீரல் நோய் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ‘கரோனா’ தொற்று நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் அவரவர் தொந்தரவுகளுக்கான மருந்து மாத்திரைகளுடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சத்தான உணவுகள் சாப்பிட்டாலே இந்த நோயிலிருந்து நோயாளிகள் மிக எளிதாக மீண்டு விடுகின்றனர். அதனால், மதுரை மாநகராட்சிப்பகுதியில் தற்போது தொற்று உறுதி செய்யப்படும் நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு செல்ல விருப்பமில்லாமல் வீடுகளிலே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப்பெறுவதிலே ஆர்வப்படுகின்றனர். ஆனால், அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுவதை மருத்துவ நிபுணர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், நோயாளிகளே முடிவு செய்து விடக்கூடாது என்று நுரையீரல் மருத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்குின்றனர். அதுபோல், ஒரு நோயாளி ‘கரோனா’வில் இருந்து மீண்டாலும் அறிகுறி அறியப்பட்ட நாளில் இருந்து அடுத்த 2 வாரங்களுக்கு அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு வைரஸை பரவக்கூடும் அபாயம் இருப்பதால் அவர்கள் கண்டிப்பாக தோற்று உறுதி செய்யப்பட்ட அல்லது இருமல், காய்ச்சல், தொண்டை வலி, தொடர் தும்மல் உள்ளிட்ட அறிகுறி கண்டறியப்பட்ட நாளில் இருந்து 2 வாரம் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நுரையீரல் நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.இளம்பரிதி கூறியதாவது: அறிகுறி இல்லாத அல்லது காய்ச்சல், தொண்டை வலி, வறட்டு இருமல் மற்றும் உடல் வலி போன்ற லேசான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு வீட்டு பராமரிப்பில் மருத்துவக்குழு கண்காணிப்பில் சிகிச்சைப்பெறலாம். ஆனால், அவர்கள் உடல்நிலை திடீரென்று மோசமடைவதற்கான ஆபத்து மிகுந்த சுகாதாரத்துறை பட்டியலிடப்பட்ட எந்த நோய்களும் அவர்களுக்கு இருக்கக்கூடாது. கர்ப்பிணிப் பெண்களுக்கு அறிகுறியில்லாமல் கரோனா தொற்று நோய் இருந்தாலும் அவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சைப் பெறுவதே சிறந்தது. ஒரு நோயாளியை ஒரு மருத்துவர் நேரடியாக மதிப்பீடு செய்யாமல் வீட்டில் தனிமைப்படுத்தக்கூடாது. சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவை கட்டுக்குள் இருக்கும் நோயாளிகள் தேவைப்பட்டால் மருத்துவர் அனுமதியளித்தால் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சைப்பெறலாம். ஆனால், நோயாளியைப் பார்த்த பிறகு இந்த முடிவை மருத்துவர்கள் செய்ய வேண்டும். ஒரு நோயாளியை வீட்டு பராமரிப்புக்கு அனுமதித்தால் அவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் தேவையான பாராசிட்டமால் மாத்திரை, இருமல், சளி, தொண்டவலியை கட்டுப்படுத்தும் மருந்துகள், திரவ ஆகாரங்கள் போதுமான அளவு வைத்திருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகள் சாப்பிட வசதிகள் பெற்றிருக்க வேண்டும். Pulse Oximeter மருத்துவ உபகரணம் வீட்டு பராமரிப்பில் இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு மிக முக்கியத் தேவையானது. இது ஒரு நோயாளியின் ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவை கண்டுபிடிக்க உதவும். நோயாளியின் ரத்ததில் இருக்கும் ஆக்ஸிஜன் குறைவாக இருந்தால் அல்லது மூச்சுத் திணறல் இருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் கண்டிப்பாக சிகிச்சைப்பெற வேண்டும். ஒரு நோயாளி தனது அறிகுறிகளிலிருந்து மீண்டிருந்தாலும் அறிகுறிகள் தோன்றிய நாளிலிருந்து அவர்களிடம் இருந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மற்றவர்களுக்கு வைரஸ் பரவும் வாய்ப்புள்ளது. அதனால், அவர்கள் அந்த தனிமைப்படுத்தப்பட்ட சுகாதாரத்துறை நிர்ணயித்த வரை வெளியே வரக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். https://www.hindutamil.in/news/tamilnadu/564468-corona-pulmonologists-warn-of-spread-3.html