Sign in to follow this  
தமிழ் சிறி

சுமத்ரா காட்டுத் தீ தொடர்ந்தால், சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படலாம் என அச்சம்!

Recommended Posts

Sumatra_fires-720x450.jpg

சுமத்ரா காட்டுத் தீ தொடர்ந்தால், சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படலாம் என அச்சம்!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ தொடர்ந்தால், சிங்கப்பூரிலும் அது தாக்கம் செலுத்தலாம் என்று சிங்கப்பூரின் தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக அங்கு மிதமான புகைமூட்டம் ஏற்படலாம் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. சுமத்ரா தீவுகளில் சுமார் 380 காட்டுத் தீச் சம்பவங்கள் பதிவானதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

புகைமூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மலாக்கா நீரிணையைக் கடந்து மலேசியாவின் மேற்குப் பகுதிகளில் திரண்டுள்ளது. இந்தநிலையில், அடுத்த சில மணிநேரங்களில் காற்றின் வேகம் மிதமாக இருக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வழக்கமான நடவடிக்கைகளைத் தொடரலாம் என்று தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும் உடல்நலமற்றோர் குறிப்பாக முதியோர், சிறார்கள், இதய நோய், நுரையீரல் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோர் மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, மலேசியாவில் தாக்கம் செலுத்தியுள்ள புகைமூட்டம் இந்த மாத இறுதிக்குள் கிரமமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய அரசாங்கம் காட்டுத் தீச்சம்பவங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தயாராக இருப்பதாக எரிவாயு, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுப்புறம், பருவநிலை மாற்றம் தொடர்பான அமைச்சர் இயோ பீ யின் (Yeo Bee Yin) தெரிவித்தார்.

புகைமூட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வுகாண, கடந்த மாதம் ஏனைய நாடுகளைச் சந்தித்து மலேசிய அரசாங்கம் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டது.

இந்தோனேசியாவுக்கான மலேசியத் தூதுவர் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தோனேசியாவின் அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்துக் காட்டுத் தீச்சம்பவங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் அவசியத்தை வலியுறுத்துவார் என அமைச்சர் இயோ குறிப்பிட்டார்.

அதேவேளை, புகைமூட்டம் அதிகமாக இருக்கும் பிராந்தியங்களில் செயற்கை மழையை ஏற்படுத்தி தற்காலிகமாக நிவாரணம் அளிக்க மலேசிய அரசாங்கம் தயாராக இருக்கிறது எனவும் அவர் கூறினார்.

http://athavannews.com/சுமத்ரா-காட்டுத்-தீ-தொடர/

Share this post


Link to post
Share on other sites

இந்தோனேஷிய காட்டுத் தீயினால் அண்டை நாடுகளை சூழ்ந்த கரும்புகை

இந்தோனேசியாவில் சுமத்ரா, கலிமந்தன் மற்றும் போர்னியோ உள்ளிட்ட தீவுகளில், கடந்த சில நாட்களாக கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து கடுமையான காற்று மாசு நீடிக்கிறது. காற்று மாசு காரணமாக 400 பாடசாலைகள் மூடப்பட்டடுள்ளன.

10 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் காற்று மாசு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வான்வழிப் பயணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒருமாதமாக நிகழும் காட்டுத் தீயை அணைக்க சுமார் 9,000 இராணுவ வீரர்களை இந்தோனேசியா அனுப்பியுள்ளது. சுமார் 239 மில்லியன் தண்ணீர் இதுவரை காட்டுத் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதுவரை 5,062 தீ விபத்து ஏற்பட்ட பகுதிகள் கண்டறிப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தோனிஷியாவில் பற்றி எரியும் தீயின் தாக்கம், அதன் அண்டை நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூரிலும் கரும்புகை சூழ்ந்துள்ளது.

மலேசியாவுக்கு உட்பட்ட 16 மாநிலங்களில் 11 மாநிலங்களின் காற்றின் தரக்குறியீடு 101 முதல் 200 ஆக குறைந்து மிகமோசமான நிலையை உணர்த்தி வருகிறது. 

https://www.virakesari.lk/article/64622

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • தியாகி தீலீபனின் நினைவு தினம்   -க. அகரன் தியாகி திலீபனின் 32ஆவது நினைவு தினம் வவுனியா நகரசபை மண்டபத்தில், இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இதன்போது தியாகி திலீபன் தொடர்பான நினைவுரையை உலக தமிழர் தேசிய கட்சியின் செயலாளர்  யோகறாணி நிகழ்தியதுடன்,  ஈகை சுடரும் ஏற்றபட்டது. நிகழ்வில் அருட்தந்தை ஜோன்வோல், புதுக்குளம் பாடசாலை அதிபர் கணேஸ்வரன், வட மாகாண இலங்கை சமாதான நீதவான் சங்க தலைவர் ஜெயவிந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/வன்னி/தியாகி-தீலீபனின்-நினைவு-தினம்/72-238524
    • -சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மந்துவில் சந்தை வளாகத்தில், படுகொலை செய்யப்பட்ட பொது மக்களின் 20ஆம் ஆண்டு நினைவு தினம், மந்துவில் சந்தை வளாகத்தில், இன்று (15) அனுஷ்டிக்கப்பட்டது. வன்னி குரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.   http://www.tamilmirror.lk/வன்னி/நினைவு-தினம்/72-238509
    • -எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், கே.தயா, செல்வநாயகம் ரவிசாந் காணாமற்போனோர் அலுவலகத்தின் (Office on Missing Persons – OMP) யாழ்ப்பாண பிராந்திய பணியகத்தை அகற்றுவரையான தொடர் போராட்டத்தை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று நண்பகல் ஆரம்பித்தனர். யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்த்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அங்கிருந்து காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்குச் சென்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/OMP-அலுவலகத்துக்கு-எதிராக-போராட்டம்/71-238519
    • சம்பந்தர் ஐயாவை விக்கி அவர்கள் அழைத்தது - விக்கி அவர்களின் பெருந்தன்மையை காட்டுகின்றது.  சம்பந்தர் ஐயா வரவேண்டியது காலத்தின் கடமை. ஆனால், அவருக்குள் இருக்கும் அகந்தை இந்த விடயத்தில் வெல்லும் என எண்ணத்தோன்றுகின்றது. 
    • இது சட்டவிரோதமானது என்றால் அதை சட்டம் மூலம் எதிர்கொள்ளலாம். ஆனால், சிங்கள இராணுவ மற்றும் அரசியல் செல்வாக்குடன் மட்டுமே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதால் விளைவு சாதகமாக இருக்குமா என்பது சந்தேகமே.  இல்லை எமது அரசியல்வாதிகள் இதை ஒரு மக்களுக்கு பயன்தரும் முதலீட்டாக மாற்ற முடியுமா என ஆராயலாம். சூழலை இதன் மூலம் கிடைக்கும் வருவாயால் பாதுகாக்கலாமா ? மக்களுக்கு சிறந்த ஊதியம் கிடைக்க உறுதி செய்யலாமா ? எனவும் ஆராய்ந்து பார்க்கலாம்.