கிருபன்

“புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் என நான் கூறவில்லை.” - முரளிதரன்

Recommended Posts

“புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் என நான் கூறவில்லை.”

September 10, 2019

Muttiah-Muralitharan.jpg?resize=800%2C45

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என தான் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி, உண்மைக்கு புறம்பானது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவிக்கின்றார். தமிழன் என்ற விதத்தில் தாம் அச்சத்துடனேயே ஒரு காலப் பகுதியில் வாழ்ந்து வந்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியமை குறித்து முத்தையா முரளிதரனிடம் இதுகுறித்து கேட்டபோது, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறு கூறவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சிலருக்கு அச்சம் என்றால் என்னவென்று தெரியாது என கூறியிருந்த அவர், பாகிஸ்தானில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் போதும் தாம் அச்சத்துடன் இருந்ததாகவும், தனது வாழ்க்கையில் மிகவும் சிறந்ததொரு நாள் எது என்று கேட்டால், அது 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த ஆண்டு என்றும், இலங்கையில் காணப்பட்ட அச்ச சூழ்நிலை, இல்லாது செய்யப்பட்ட ஆண்டே அது எனவும் அவர் சுட்டிக்காட்டிருந்தார். எனினும்,  2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், இலங்கை மக்கள் மீண்டும் ஒரு அச்சத்துடனான சூழ்நிலையை சந்தித்துள்ளனர் என்றும் இதற்கு  நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமையே இதற்கான காரணம் எனவும் முத்தையா முரளிதரன் கூறுகின்றார். அவர் தெரிவித்தார்.

மேலும், இலங்கை மக்களுக்கு யார் சரியான பாதுகாப்பை வழங்குவார்களோ அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளதாக குறிப்பிட்ட அவர், அச்சமற்ற சூழ்நிலையை உருவாக்கும் தலைவர் ஒருவரே நாட்டிற்கு தேவை என முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டின் போது, தனது தலைவராக செயற்பட்ட அர்ஜுன ரணதுங்க என்ன கூறினாலும், அதனை தான் செய்ததாகவும், ஏனெனில், கிரிக்கெட்டில் அர்ஜுன ரணதுங்க தன்னை பாதுகாத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யக்கூட தயார் என சிலர் கூறியதை தான் கேட்டதாக தெரிவித்த அவர், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தால், நாட்டை ஆட்சி செய்வது யார் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில், எதிர்வரும் தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு அச்சமின்றியும், சந்தேகமின்றியும் வாழக்கூடிய சூழ்நிலையை யார் உருவாக்குகின்றார்களோ, அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

தான் பேசியதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து பல ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள முரளிதரன்  “தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் என தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.” என தெரிவித்தார். தனது கருத்தை சில ஊடகங்கள் திரித்து கூறியுள்ளதாக தெரிவித்த அவர், தனது உண்மையான நிலைப்பாட்டை புரிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

 

http://globaltamilnews.net/2019/130250/

Share this post


Link to post
Share on other sites

இவர் என்ன கமலஹாசன் போல கதைக்கிறார் 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, கிருபன் said:

என தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.” என தெரிவித்தார். தனது கருத்தை சில ஊடகங்கள் திரித்து கூறியுள்ளதாக தெரிவித்த அவர்,

காணாமல் போன பிள்ளைகளின்  தமிழ் தாய்மார்களின் போராட்டத்தை  பார்த்து  இதே முரளிதரன் தான்  இகழ்வாய் நக்கலாய் ஒரு பேட்டி கொடுத்தவர் 2013 களில் சனல் 4 uk ஊடகத்துக்கு அதுவும் மாறி சொன்னதுதானா ?

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, கிருபன் said:

தனது வாழ்க்கையில் மிகவும் சிறந்ததொரு நாள் எது என்று கேட்டால், அது 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த ஆண்டு என்றும், இலங்கையில் காணப்பட்ட அச்ச சூழ்நிலை, இல்லாது செய்யப்பட்ட ஆண்டே அது எனவும் அவர் சுட்டிக்காட்டிருந்தார்.

போர் நல்ல முடிவாக அமைந்திருந்தால் அல்லது  தமிழ்மக்களுக்கு நல்ல தீர்வுகளுடன் முடிந்திருந்தால் தான் அது சிறந்தநாள்.
இது  கொடூரங்கள் கொலைகள் அழிவுகள் நிறைந்த மனித உரிமை மீறிய போர் முடிவு.
போர் முடிவடைந்து பத்து வருடங்களாகியும் இன்னும் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றனவே.இதைப்பற்றி எப்பவாவது உன் திரு திக்குவாயை திறந்திருக்கின்றாயா?
உலக ****** நீயும் ஒருவன்.
போர் நிறைவடைந்த நாள் சிறந்த நாள் என்றால் அதன் அர்த்தம் சிங்கள இராணுவத்தை எதிர்த்து போராடிய அனைவரும் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று தானே எடுத்துக்கொள்ள வேண்டும்.
 

Edited by நியானி
தணிக்கை
 • Like 3

Share this post


Link to post
Share on other sites

செம்புகள் தங்கள் ஆங்கில புலமையை காட்ட இங்கு செம்படிக்க வரலாம் .

இன்னும் அந்த தாய்மார்களின் பிரச்சனை தீரவில்லை மூடனே பிரச்சனை தீர்க்க வந்தவனிடம் கிரிக்கெட் விளையாடி காட்டினவன் இவனெல்லாம் ..............................

Share this post


Link to post
Share on other sites

முரளிதரன், தான் ஒரு மிக மோசமான சந்தர்ப்பவாதி என்பதை பலதரம் நிரூபித்துள்ள ஒரு கறுப்பாடு.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, Dash said:

இவர் என்ன கமலஹாசன் போல கதைக்கிறார் 

முற்றுமுழுதான சுயநலமிக்க முரளிதரனுடன் கமலை ஒப்பிடுவது முரளிதரனின் தரத்தை உயர்த்த மட்டுமே உதவும் 

Share this post


Link to post
Share on other sites

எனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் மார்கழி 27, 1995. மெல்பனில் அன்று  நடந்த கிரிக்கட் விளையாட்டில் சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் (ICC) விதிகளின் படி சொத்தி பந்து வீச்சினால் சாதனை படைக்க முயன்ற ஒருவனை சக்கர் (Chucker) என நடுவர் டரால் ஹேர் (Darrell Hair) அடையாளம் காட்டிய நாள். 

விதி மீறலை சரி செய்ய 5 பாகை விதியை 15 ஆக மாற்றிய சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் பின்னர் 2014 ஜூன் கூடத்தின் பின்னர்  சொத்தி பந்து வீச்சாளர்களை அகற்ற கடுமையான நிலைப்பாடே எடுக்கத்தொடங்கியது. அதனால் சயீத் அஜ்மல் போன்றோர் பிரச்சனைக்கு உள்ளாகினர். 

தமிழர் மீது நடந்த போர்க்குற்றங்களை மறுபவர்களையும் மறைப்பவர்களையும் யூதர்கள் (Holocaust Deniers) போன்று இன அழிப்பை நிராகரிப்போர் பட்டியலில் போடவேண்டும். அந்தவகையில் இன்று முத்தையா முரளிதரன் என்பவர் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் சபையின் அறிக்கையின் பின்னரும் மனித உரிமை மீரகளின் சூத்திரதாரிகளுக்கு ஆதரவும் அரசியல் நியாத்தன்மையும் வழங்குவதன் காரணமாக இன அழிப்பை நிராகரிப்போர் பட்டியலில் இணைக்கப்படுகிறார். #muttiahmuralitharan #warcrimesDeniar #tamilgenocidedenier

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

முரளிதரன் போன்ற அரசியல் அறிவற்றவர்களின் கருத்துக்கள் எம்மை பலவீனப்படுத்தும்- பிரபா கணேசன்

Sep 11, 20190

 
 

முரளிதரன் போன்ற அரசியல் அறிவற்றவர்களின் கருத்துக்கள் எம்மை பலவீனப்படுத்தும்- பிரபா கணேசன்

முத்தையா முரளிதரன் போன்றவர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்து செல்வதன் ஊடாக தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவு அதிகரிக்க முடியாது. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியே தனது சந்தோசமான நாள் என்று அவர் சொல்லியிப்பாராயின் அது உலகத் தமிழர்களுக்கு விரோதமான சொல்லாகும். மக்கள் மத்தியில் தமிழ் தேசிய தலைவராக கருதப்படும் பிரபாகரனை கொச்சைப்படுத்துபவரை எந்தவொரு தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.அதே நேரத்தில் கடந்த காலங்களை மறந்து சிங்கள மக்கள் ஏகோபீத்து ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தலைவரான மஹிந்த ராஜபக்ஷவுடனாலேயே எமது மக்களுக்கான தீர்வு ஏற்படுமாயின் அது சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அதன் அடிப்டையிலேயே நாம் எமது ஆதரவினை இவ்வாறான தலைமைக்கு ஆதரவளிக்க எதிர்ப்பார்த்துள்ளோம் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குகளாலேயே நாம் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை உள்ளது. அவர் தெளிவான முறையில் எமது தமிழ் மக்களுடன் பயணிக்க தயாராக உள்ளார் என்பது அவருடனான சந்திப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே நாம் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கின்றோம்.தமிழ் மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குகளை வீணடிக்கும் விதத்தில் கருத்துக்களை தெரிவிப்பவர்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று நாம் கடந்த ஐந்து வருட காலத்தில் இடம்பெற்ற அபிவிருத்திகளையோ அல்லது தமிழ் மக்களுக்கு கிடைக்கப் பெற்ற அரசியல் மாற்றங்களையோ பெற முடியவில்லை.

இருப்பினும் இன்று பெரும்பான்மையின மக்கள் மத்தியில் அதி கூடிய ஆதரவினை பெற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் ஊடாக புதிய பாதையை வகுக்க தயாராக உள்ள நிலையில் முத்தையா முரளிதரன் போன்றவர்களில் தகுதி மீறிய வார்த்தை பிரயோகங்களை முற்றிலும் எதிர்க்கின்றோம். இவர் போன்றவர்களுக்கு தமிழர்கள் மத்தியில் எவ்வித ஆதரவும் இல்லை. மாறாக தமிழர் என்ற அடையாளத்தை கூட இவர் கடந்த காலங்களில் காண்பித்ததும் இல்லை. இவரது வார்த்தைகளை நம்பி ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ களம் இறங்குவாரேயாயின் இது நகைப்புக்கு இடமான விடயமாகும். இவரைப் போன்று காலாவதியான சில தமிழ் அரசியல்வாதிகளையும் இவர் அனைத்துக் கொண்டு செல்வாராயின் நாம் இந்த பயணத்தில் சங்கமிக்க தயாராக இல்லை.நாம் இன்று புதிய பாதையை உருவாக்குவதற்காக நேர்மையான முறையிலே பழையவற்றை களைந்து புதிய பாதையில் பயணத்தை ஆரம்பித்துக் கொண்டிருக்கும் பொழுது, முத்தையா முரளிதரன் போன்ற அரசியல் அறிவற்றவர்களின் கருத்துக்கள் எம்மை பலவீனப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.(15)

 

 

http://www.samakalam.com/செய்திகள்/முரளிதரன்-போன்ற-அரசியல்/

Share this post


Link to post
Share on other sites

முர‌ளி த‌ர‌ன் ந‌ல்ல‌ ம‌னித‌ர் , அவ‌ர் த‌மிழ‌ன் என்ர‌ முறையில் சிங்க‌ள‌வ‌ன் அவ‌ர‌ பின்னுக்கு நின்று இய‌க்கின‌ம் , 

முர‌ளித‌ர‌னின் அடி ம‌ன‌சுக்கு தெரியும் முர‌ட்டு சிங்க‌ள‌வ‌ங்க‌ள் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர்க‌ள் என்று , 

முர‌ளி த‌மிழ் பெண்னை திரும‌ண‌ம் செய்து த‌மிழ் வாழ்க்கை வாழ‌வே விரும்பினார் , மகிந்தா கூட்ட‌ம் தான் முர‌ளித‌ர‌னை அர‌சிய‌லுக்குள் இழுத்து விட‌ பார்க்கின‌ம் / 

2004ம் ஆண்டு முர‌ளித‌ர‌ன் வ‌ன்னிக்கு வ‌ந்து எம‌து ம‌க்க‌ளை ச‌ந்திச்சு அவ‌ர்க‌ளுட‌ன் புகைப்ப‌ட‌ம் எடுத்த‌து எல்லாம் க‌ட‌ந்த‌ கால‌ வ‌ர‌லாறு , 
அப்போது முர‌ளித‌ர‌ன் கோமாவில் இருக்க‌ வில்லை த‌மிழ‌ன‌கா இருந்த‌ ப‌டியால் தான் வ‌ன்னிக்கு வ‌ந்தார் , இப்போது அவ‌ர‌ ம‌கிந்தா கூட்ட‌ம் இப்ப‌டி பேச‌ வைக்குது , ஒரு நாள் இதுக்கு க‌ண்டிப்பாய் வ‌ருத்த‌ம் தெரிவிப்பார் இப்ப‌டி சொன்ன‌துக்கு , 2004ம் ஆண்டு த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வாய்  பேட்டி குடுத்த‌வ‌ர் ஊட‌க‌த்துக்கு வ‌ன்னியில் வைச்சு , அந்த‌ பேட்டிக்கு சிங்க‌ள‌ காட்டு மிராண்டி கூட்ட‌ம் முர‌ளித‌ர‌னுக்கு எதிர்ப்பு தெரிவிச்ச‌வை 😉

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • தியாகி தீலீபனின் நினைவு தினம்   -க. அகரன் தியாகி திலீபனின் 32ஆவது நினைவு தினம் வவுனியா நகரசபை மண்டபத்தில், இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இதன்போது தியாகி திலீபன் தொடர்பான நினைவுரையை உலக தமிழர் தேசிய கட்சியின் செயலாளர்  யோகறாணி நிகழ்தியதுடன்,  ஈகை சுடரும் ஏற்றபட்டது. நிகழ்வில் அருட்தந்தை ஜோன்வோல், புதுக்குளம் பாடசாலை அதிபர் கணேஸ்வரன், வட மாகாண இலங்கை சமாதான நீதவான் சங்க தலைவர் ஜெயவிந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/வன்னி/தியாகி-தீலீபனின்-நினைவு-தினம்/72-238524
  • -சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மந்துவில் சந்தை வளாகத்தில், படுகொலை செய்யப்பட்ட பொது மக்களின் 20ஆம் ஆண்டு நினைவு தினம், மந்துவில் சந்தை வளாகத்தில், இன்று (15) அனுஷ்டிக்கப்பட்டது. வன்னி குரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.   http://www.tamilmirror.lk/வன்னி/நினைவு-தினம்/72-238509
  • -எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், கே.தயா, செல்வநாயகம் ரவிசாந் காணாமற்போனோர் அலுவலகத்தின் (Office on Missing Persons – OMP) யாழ்ப்பாண பிராந்திய பணியகத்தை அகற்றுவரையான தொடர் போராட்டத்தை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று நண்பகல் ஆரம்பித்தனர். யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்த்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அங்கிருந்து காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்குச் சென்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/OMP-அலுவலகத்துக்கு-எதிராக-போராட்டம்/71-238519
  • சம்பந்தர் ஐயாவை விக்கி அவர்கள் அழைத்தது - விக்கி அவர்களின் பெருந்தன்மையை காட்டுகின்றது.  சம்பந்தர் ஐயா வரவேண்டியது காலத்தின் கடமை. ஆனால், அவருக்குள் இருக்கும் அகந்தை இந்த விடயத்தில் வெல்லும் என எண்ணத்தோன்றுகின்றது. 
  • இது சட்டவிரோதமானது என்றால் அதை சட்டம் மூலம் எதிர்கொள்ளலாம். ஆனால், சிங்கள இராணுவ மற்றும் அரசியல் செல்வாக்குடன் மட்டுமே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதால் விளைவு சாதகமாக இருக்குமா என்பது சந்தேகமே.  இல்லை எமது அரசியல்வாதிகள் இதை ஒரு மக்களுக்கு பயன்தரும் முதலீட்டாக மாற்ற முடியுமா என ஆராயலாம். சூழலை இதன் மூலம் கிடைக்கும் வருவாயால் பாதுகாக்கலாமா ? மக்களுக்கு சிறந்த ஊதியம் கிடைக்க உறுதி செய்யலாமா ? எனவும் ஆராய்ந்து பார்க்கலாம்.