Sign in to follow this  
புரட்சிகர தமிழ்தேசியன்

ஊரான் காசில் பேரு வாங்கும் உதயநிதி ஸ்ராலின்.!

Recommended Posts

ஊரார் காசில் பேரு வாங்கும் உதயநிதி ஸ்டாலின்...!! அப்பாவையே மிஞ்சிட்டார் என்று அலறும் உபிக்கள்...!!

mk-udhaya-jpg_1200x630xt.jpg

தன் அதிரடி திட்டங்கள் மூலம், தந்தையைப்போலவே தொண்டர்கள் செலவில்  ஒசியில் பெயரெடுக்கிறார் வாரிசுத்தலைவர் என்ற விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறார் உதயநிதி.

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியை எப்படியாவது வீழ்ந்த வேண்டும் என்று வியூகம் வகுத்து நமக்கு நாமே  திட்டம் தொடங்கி தமிழகம் முழுவதற்கும் டூர் சென்றார் ஸ்டாலின்.  ஆனால் எதிர்பார்த்தபடி தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை.  மாறாக கட்சி தொண்டர்களின் காசைக் கரியாக்கி அரசியலில் தன் இருப்பை தக்கவைத்துக் கொண்டதுதான் மிச்சம் என்று எதிர்கட்சிகளால் அப்போது  விமர்சிக்கப்பட்டார்.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் திமுக இல்லை, அதனால் கட்சி தொண்டர்களுக்கு வருமானமும் இல்லை. ஆனாலும் பொதுக்கூட்டம், தேர்தல் பிரச்சாரம், ஆர்பாட்டம், போராட்டம் என அனைத்திற்கும்  மாவட்டச் செயலாளர்கள் முதல் வட்டச்செயலாளர்கள் வரை  நிதி திரட்டி ஆள் கூட்டி செலவு  செய்ய வேண்டும் என்பது தலைமையின் உத்தரவு.

இதனால் கட்சி தொண்டர்கள் கை காசுப்போட்டு செலவு செய்து  செலவு செய்து நொந்து நூடுல்ஸ்ஸாகி போயுள்ளனர். இந்த நிலையில் தனக்கடுத்து கட்சியில் முக்கிய தலைவராக தன் மகன் உதயநிதியை உருவாக்கும் வேலையில் இறங்கியுள்ள ஸ்டாலின்.

கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இல்லாமலிருந்த உதய்க்கு , தனக்கு தளபதி என்று பெயர் வாங்கிக்கொடுத்த திமுக இளைஞரணி செயலாளர் பதிவியையே வாரி வழங்கினார். பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றி வரும் வகையில் அவருக்கும் ஒரு டூர் பிளான் ஏற்பாடு செய்துள்ளாராம் ஸ்டாலின்.

தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதைப்போல  இளைஞரணி செயலாளர் பொறுப்பேற்ற கையோடு இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து பீதியை கிளப்பினார் உதய்,

அதாவது தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் நீர் நிலைகள் உள்ளது இவற்றில் அரசு தூர்வாரத நீர் நிலைகளை திமுக இளைஞர் அணியினர் தூர்வாரி சீரமைப்பர் என்பதுதான் அந்த அறிவிப்பு. இத்திட்டத்தின் மூலம் இளைஞர்கள் புது ஊக்கம் பெறுவர் என்றும் எக்ஸ்ட்ரா பிட் போட்டார் உதய்.

பதவிக்கு ஆசைபட்டு லட்சக் கணக்கில் பணத்தை செலவு செய்து பொறுப்புக்கு வந்த பொறுப்பாளர்களுக்கும் புது ஆப்புதான் இந்த அறிவிப்பு.  இளைஞர் அணி நிர்வாகிகள் கையில் கழுத்தில் இருந்ததையெல்லாம் அடகு வைத்து "பொக்லைன், புல்டேசர்" என வாடகைக்கு எடுத்து குளத்தை தூர்வாரினால்,  நம்ம உதய் சார் சினிமா சூட்டிங்குக்கு போற கணக்கா, வெள்ளையும் சொள்ளையுமா ஊர் மக்கள் மத்தியில் போய் குளத்தை திறந்து வைத்து போட்டோக்கு போஸ் கொடுக்கிறார் என்பதுதான் அடிமட்ட உபிக்களின் குமுறல்.

https://tamil.asianetnews.com/politics/dmk-youth-wing-secretary-udhayanidhi-also-seeking-fame-by-cadets-expenture-pxlrsk

Share this post


Link to post
Share on other sites
20 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஊரார் காசில் பேரு வாங்கும் உதயநிதி ஸ்டாலின்...!! அப்பாவையே மிஞ்சிட்டார் என்று அலறும் உபிக்கள்...!!

-----

பதவிக்கு ஆசைபட்டு லட்சக் கணக்கில் பணத்தை செலவு செய்து பொறுப்புக்கு வந்த பொறுப்பாளர்களுக்கும் புது ஆப்புதான் இந்த அறிவிப்பு.  இளைஞர் அணி நிர்வாகிகள் கையில் கழுத்தில் இருந்ததையெல்லாம் அடகு வைத்து "பொக்லைன், புல்டேசர்" என வாடகைக்கு எடுத்து குளத்தை தூர்வாரினால்,  நம்ம உதய் சார் சினிமா சூட்டிங்குக்கு போற கணக்கா, வெள்ளையும் சொள்ளையுமா ஊர் மக்கள் மத்தியில் போய் குளத்தை திறந்து வைத்து போட்டோக்கு போஸ் கொடுக்கிறார் என்பதுதான் அடிமட்ட உபிக்களின் குமுறல்.

பெரியப்பா  அழகிரி,  சின்னம்மா கனிமொழியையே..... ஓரம் கட்டி வைத்து விட்டார்களாம்.
உடன் பிறப்புகள்  எம்மாத்திரம். இப்பிடியே... புலம்பிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.  :grin:

Edited by தமிழ் சிறி
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • அரசு எனும் முறையில் இந்தியா செய்வது எந்த வகையிலும் நியாயமல்ல. காஷ்மீர் இந்தியாவின் பகுதியல்ல அதற்கு இந்தியா உரிமை கோருவதற்கு. உங்களை போல் பிஜேபி ஆதரவு மனப்பான்மையுள்ளவர்களுக்கு மட்டுமே இந்தியா செய்வது சரியாக தெரியும். (என்ன தான் நீங்கள் மறுத்தாலும் நீங்கள் பிஜேபி ஆதரவாளர் என்பதை பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளீர்கள்).
  • புதிதாய் நாட்டிற்கு வருபவர்கள் மொழி கற்கும்பொழுது, அங்கே காவல்துறை அதிகாரியையும் காணும் சந்தர்ப்பம் கிடைக்கலாம். அப்படி ஒரு நிகழ்வு நடக்கும் பொழுது பலரும் அதிக கவனத்தை  அந்த நிகழ்வில் செலுத்துவதில்லை. தேவை வரும்பொழுது மட்டுமே தேடிப்போவதும் அப்பொழுது தவறுகளை செய்வதும் பொதுவாக திட்டாமிடாதவர்கள் செய்யும் தவறு.  சில இடங்களில் பொதுவாக தென் கிழக்கு நாடுகளில் பெண்கள் ஆண்களுக்கு சம உரிமை இல்லாதவர்கள் என்ற கருத்து உள்ளது. அதனால். பெண்கள் உரிமை பற்றியும், அவர்கள் ஆண்கள் துணை இன்றி வாழ முடியும் என்ற ஆலோசனையும் வழங்கப்படலாம். ஆனாலும், பலருக்கும் இந்த சிந்தனை பற்றிய தேவை அப்பொழுது பெரிதாக இருக்காது. காரணம் ஆசை அறுபது நாளும் மோகம் முப்பது நாளும் கடந்து சென்று இருக்காது.  பொருளாதார தேவைகள் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளரும். ஆசைகளும் தேவைகளும் ; அவசியம் இல்லாத வாங்கலும் நடக்கும். நாளடைவில் கடன் சுமை கூடி அது கல்லானும் துணை புல்லானாலும் துணை என்பதில் இருந்து தடம் புரள ஆரம்பிக்கும். ஒருவர் மட்டும் சிக்கனம் என்ற பொருளாதார கொள்கையை அமுல்படுத்த முடியாத நிலை உருவாகும்.    புதிய பழைய நண்பர்கள் மதீப்பீட்டுக்களை செய்ய ஆரம்பிப்பார்கள். வீடு இன்றும் வாங்கவில்லையா?  மகிழூந்து புதிதாக வாங்கவில்லையா?  விடுமுறைக்கு போர போராவிற்கு போகவில்லையா என கேட்ப்பார்கள். இதுவும் ஒரு வித 'ஆலோசனை ' தான்.  இந்த பிரச்சனைகளுக்குள் மூன்றாம் தரப்பினர் புகுந்து விட்டால் நிலைமை கை மீறி போகும்  நிலைமை இலகுவில் உருவாகிவிடும். ஆரம்பத்தில் இலவச ஆலோசனைகள் தரப்படும். பின்னர் அது பிரிவு, விவாகரத்து என வந்துவிட்டால், சட்டத்தரணிகள்,  இரவுபகலாய் உழைத்தது எல்லாவற்றையும் சுரண்ட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த நிலைக்குள் சென்றுவிட்ட பலராலும் மீள முடிவதில்லை. மன நோயாளிகாக மாறுபவர்களும் உண்டு. வேலைகளை இழந்து போதைக்கு அடிமைபடுபவர்களும் உண்டு, தற்கொலை செய்ப்பவர்களும் உண்டு 😞  நாம் எதற்ககாக புலம்பெயர்ந்தோம், எதற்காக ஓன்றிணைந்தோம், எதை சாதிக்க விரும்பினோம் என்ற குறிக்கோளை நாளும் மறக்காமல் இருந்தால் வாழ்க்கை மகிச்சியாக இருக்கும்.   விட்டுக்கொடுத்து வாழுதல் என்பது ஒரு தாரக மந்திரம்.  மேற்குலக  நாட்டில் பிறந்து வாழ்பவர்கள் இந்த சிக்கல்களுக்குள் மாட்டுப்படுவது ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கலாம். காரணம், அவர்கள் இதில் நன்றாகவே பட்டு கொஞ்சம் தெளிந்தவர்களாக இருப்பார்கள். சூடு கண்டால்  பூனை அடுப்பங்கரையை நாடாது தானே. 
  • கல்வியும் ஒரு வியாபாரமே. ஐம்பதினாயிரம் கொடுத்து தமது பிள்ளையை இந்த கல்லூரியில் சேர்க்க விரும்பியது பெற்றோரின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றது. தமது பிள்ளை இங்கே படித்தால் சிறப்பு என்பது அவர்களின் ஆசையாக இருந்துள்ளது.    ஆனால், நன்கொடை என்பது நீண்ட காலமாக உள்ள ஒன்று.  இந்த கைதை தடுக்கவும் இவரை  பாதுகாக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. யாழில் இல்லாமல் பருத்தித்துறையில் தடுப்பக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  இப்படியான விடயத்தில் இந்த அதிபர்  கைதானது ஒரு பாடமாக அமையட்டும். இவ்வாறான நிலமை வேறு தமிழ் பாடசாலைகளில் நடக்காமல் இருந்தால்  மகிழ்ச்சியே!  
  • இப்போது இந்தியாவுக்கு நிகராக சளைக்காமல் வளர்ந்திருக்கிறோம். எல்லா வகையிலும்....🙄 நேற்றுவரைக்கும் காதும் காதும் வச்சமாதிரி நடந்த சங்கதிகள் இன்று இயல்பாக நடக்கிறது. நாங்கள் அங்கு வாழ்ந்த காலத்தில் வறுமை இருந்தது அதே நேரம் நேர்மையும் இருந்தது. நாடு என்று ஆசையாக சென்ற பகுதிகளில் எல்லாம் ஊழல்கள் பல வடிவங்களில் நேர்மைக்கு வாழ்வில்லை என்பதை கண்கூடாக பார்த்தபின்னர் மனதில் வெறுப்பு மண்டுவதை தவிர்க்கமுடியவில்லை.
  • ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட வேண்டிய விடயம். பிற மொழிகளிலும் ஒரு காப்பகமும் தேவை   கீழடி என்ற பெயர் எப்படி வந்தது என்று ஆய்வுசெய்யவேண்டும், எந்த நகரம் மண்ணுக்குள் போனதை அங்குள்ள மனிதர்கள் அறிந்துதான் இந்த பெயரை சூட்டியிர்ருக்கலாம்..