• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ampanai

வாக்குவேட்டைக்காக தமிழ் மக்களை பந்தாட இனி எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை

Recommended Posts

வாக்கு வேட்டைக்காக தமிழ் மக்களை பந்தாட இனி எவருக்கும் இடமளிக்கப் போவதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். நாட்டை ஆட்சி செய்த ஆட்சியில் இருக்கின்ற தலைவர்கள் தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றிவிட்டதாகவும், அதனால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், உண்மையாக செயற்படுகின்ற புதிய முகம் ஒன்று வந்தால், ஆதரவு வழங்க தயார் என்றும் அவர் தெரிவித்தார்.  என்றபிரைஸ் ஸ்ரீலங்கா யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கண்காட்சி கூடத்தை நேற்று பார்வையிட வந்த ஈ.சரவணபவன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

NW06.jpg
 
 

 
 

 

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தீர்வை வழங்குவதாக வாக்குறுதி அளித்து சர்வகட்சி மாநாட்டை நடாத்தி பின்னர் அதனை கலைத்துவிட்டு, காலத்தை வீணடித்தார். அதன்பின்னர், ஆட்சிக்கு வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவை அமைத்து காலத்தை வீணடித்தது. 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை ஒரிரு தினங்களில் உருவாக்க முடியுமாயின் ஏன் இனப்பிரச்சினைத் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்பை ஏன் உருவாக்க முடியாதென்றும் சரவணபவன் கேள்வி எழுப்பினார்.

வடமாகாணம் கல்வி சுகாதாரம், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் 9வது மாகாணமாகவே இன்னும் இருக்கின்றது. ஏனைய மாகாணங்களுக்குரிய அனைத்து விதமான அபிவிருத்திகளும் வந்து, ஏனைய மாகாணங்களுடன் சம அளவில் இருக்கக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டாலே, தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும்.

சகல விதத்திலும், பின்தங்கிய நிலையில் வடமாகாணம் உள்ளது. வடமாகாண சபைக்கும் உரிய அதிகாரமும், உரிய நிதியும் வழங்கப்பட்டிருந்தால், அதனூடாக மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுத்திருக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். என்றபிரைஸ் கண்காட்சி தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், அமைச்சர் மங்கள சமரவீரவுடன் முதல் நாள் கண்காட்சியைப் பார்வையிட வந்த போதும், என்னால், அவற்றை ஒழுங்காக அவதானிக்க முடியாமல் இருந்தது.

தற்போது மிக ஆறுதலாக ஒவ்வொரு கண்காட்சிக் கூடத்தைப் பார்வையிட்ட போது, ஒரு வெளிப்படைத் தன்மை காணக்கூடியதாக இருந்தது.

எமது மக்களை சரியான முறையில் இந்த கடன் திட்டம் சேருமாக இருந்தால், உரிய பலனை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து விசு கருணாநிதி, கே. அசோக்குமார், சுமித்தி தங்கராசா

http://www.thinakaran.lk/2019/09/10/உள்நாடு/40051/வாக்குவேட்டைக்காக-தமிழ்-மக்களை-பந்தாட-இனி-எவருக்கும்-இடமளிக்கப்-போவதில்லை

Share this post


Link to post
Share on other sites

இனி மைத்திரி என்னுடைய மகளின் பேர்த்டேக்கு வரமாட்டார்....அப்ப ஏன் தமிழர் வோட்டு போடவேணும்...

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, text

 

தமிழ் தேசிய கூட்டமைப்பையும்,  சேர்த்துதான்  சொல்லுகிறார் என்று மக்கள் கருதுகின்றார்கள்.

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

கூட்டமைப்பு மட்டும் தான் டமிழ்மக்களை புட்போலாக  விளையாடலாம் என்று சொல்லுகிறார்....

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நீங்கள் இண்டைக்கும் வேலைக்கு போகேல்லை????????? 
  • சும்மா சிவனே எண்டு இருந்த ஈழத்தமிழினத்துக்கு துவக்கு சுடப்பழக்கினதே நீங்கள் தானே? இப்ப பயங்கரவாதத்தை அழிப்பமாம். எங்கடை பிரச்சனையை தீர்த்து வையுங்கோ எண்டு கேட்டது ஒரு குற்றமா?
  • சொல்கிறேன் என்று குறை நினைக்க வேண்டாம். நீங்கள் மேலே கூறியது தமிழர்கள் மத்தியில் பொதுவாகவே உள்ள ஒருவகை கூட்டு-மனச்சிக்கல். 1. எல்லாரும் எமக்கெதிராகவே வேலை செய்கிறார்கள். 2. நாம்தான் உலகின் முதல் குடி 3. உலகில் எந்த இனத்தில் இருந்து அரிய கண்டுபிடிப்பு வந்தாலும் -அதை தமிழர்கள்தான் முதலில் கண்டு பிடித்தார்கள். 4. எமது பெருமை எமக்கே தெரியவில்லை. உலகமே சேர்ந்து எம்மை மூடி மறைக்கப்பார்கிறது. இப்படி புலம்பி கொண்டே இருப்பது. என்னை பொறுத்தவரை சிங்கள-பெளத்தம், பிரம்மணிய-இந்தியா இந்த இரெண்டும் மட்டுமே தமிழர் தொன்மையை மறைப்பதில் கங்கணம் கட்டி வேலை செய்வன. வேறு யாருக்கும் அந்த தேவை இல்லை. ஏனையவர்கள் எமது வரலாற்றையும் வந்து நேர்மையாக ஆராயவே செய்கிறார்கள். மொகஞ்சதாரோ, ஹரப்பாவை திராவிட நாகரீகம் என்று அடித்து சொன்னால் மட்டும் வெள்ளைகாரன் சொல்வது இனிக்கும். ஆனால் அதே வெள்ளைகாரன் கண்ணை மூடிக்கொண்டு அங்கோர்வாட் தமிழர் கட்டியது இல்லை எனக்கூற வில்லையானால் கசக்கும். உலகின் மிக சொற்பமான இனங்களே 3000 வருட தொல்லியல் ஆதாரமுடையன. நாம் அவற்றில் ஒன்று. நீங்கள் நம்பாத வெள்ளைகாரகள் நம்மை 5000 வருடம் பின்னே கொண்டு போகலாம் என்கிறார்கள். யுனெஸ்கோ ஆராய்ச்சி ஒன்று அடுத்த படிக்குப்போய், மதுரையில் ஒரு கிராமத்தில் போய் டி என் ஏ சாம்பிள் எடுத்து, ஆபிரிக்காவில் இருந்து வந்த மனி-அலையின் முதலாவது அலை நாம் என்கிறது. இந்த பெருமையை, ஆதிச்ச நல்லூரை, கீழடியை எல்லாம் மறந்து விட்டு நாம் எமது ஆதாரத்தை கம்போடியாவில் வேறு எவனதோ வீட்டில் போய் தேடினால் உலகம் கைகொட்டிச் சிரிக்காமல் வேறென்ன செய்யும்.  
  • உலகின் மிகப்ப;ழை;மையான தொழிலாகக் கருதப்படும் பாலியல் தொழில், பல நாடுகளில் சட்ட;ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், மற்றும் சில நாடுகளில் வரையறுக்கப்பட்ட வகையில் சட்ட ரீதியாக்கப்பட்டுள்ளது. நமது அயல்நாடான இந்தியாவில் இத்தொழில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அதேநேரம், பாலியல் தொழிலுக்கு பெயர் பெற்ற, சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்த்துள்ள மற்றும் அதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டும் ஆசிய நாடான தாய்லாந்தில் அது சட்ட விரோதமானதாகவே கருதப்படுகிறது. இலங்கையைப் பொறுத்த வரையில், பாலியல் தொழிலானது சட்டவாக்க கட்டுரை 360(சி) பிரிவின்படி, சட்டவிரோதமான தடை செய்யப்பட்ட தொழிலாகவே கருதப்படுகிறது. இத்தொழில் அயல்நாடுகளில் உள்ளதைவிட இலங்கையில் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கிறது. எனினும் ஏறத்தாழ 40,000 பெண்கள் இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், 30,000ற்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைகள் பதிவுசெய்யப்படுவதாகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அதேநேரம் ஐக்கியநாடுகள் அபிவிருத்திக்கூட்டம், ஐக்கியநாடுகள் சனத்தொகை நிதியம் என்பன வேறு சில நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய ஆய்வின் பிரகாரம் தயாரித்துள்ள 210 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், சீனா, மியன்மார், கம்போடியா ஆகிய நாடுகளில் பாலியல் தொழிலாளர்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்தால் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அநேகமான ஆசிய நாடுகள் பாலியல் தொழிலை தடை செய்துள்ளதால், பாலியல் தொழிலாளர்கள், சட்டத்துக்கு புறம்பான வகையிலும், தலைமறைவாகவுமே இத்தொழிலில் ஈடுபடுவதால், எயிட்ஸ் மற்றும் வேறு பால்வினைத் தொற்றுகளுக்கும் அவர்கள் தள்ளப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் பொதுவாக பாலியல் தொழிலாளர்கள் விபசார விடுதிகள், நடன கிளப்புகள், உடல் பிடிப்பு நிலையங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், உல்லாச விடுதிகள் என்பவற்றை மையமாகக் கொண்டு இயங்குகின்றனர். பின்தங்கிய இடங்களில் சேரிப்புற வீடுகள், விடுதிகள், ஒதுக்குப்புறங்கள் என்பவற்றையும் இவர்கள் தமது தொழிலுக்காகக் பயன்படுத்துகின்றனர். வறுமை, ஏமாற்றங்கள், கணவரால் மற்றும் குடும்பத்தால் கைவிடப்பட்ட நிலை போன்ற பல்வேறு காரணங்களால் பெண்கள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ள போதிலும், வசதி வாய்ப்புகளுக்காகவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும், உல்லாசத்துக்காகவும், இத்தொழிலில் ஈடுபடும் பெண்களும் உள்ளனர். கிராமப்புறங்களிலும், பின்தங்கிய பகுதிகளிலுமிருந்து கொழும்பு போன்ற பெருநகரங்களுக்கு வறுமையின் நிமித்தம் தொழில் தேடி வரும் பெண்களும், தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளால் தமது வறுமையை சமாளிப்பதற்கும், குடும்பத்தை கொண்டு நடத்துவதற்கும் இத்தொழிலில் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதேநேரம் metropolitan Cities எனப்படும் கொழும்பு போன்ற பெருநகரங்களில் படித்த, தொழில் செய்யும், வசதியான இளம்பெண்கள் கூட உல்லாசத்துக்காகவும், மேலதிக வருமானத்துக்காவும் இத்தொழிலில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சிக்குரிய உண்மையாகும். போர்காலப்பகுதியில் கணவர்மாரை இழந்த பல பெண்கள், தமது குழந்தைகளை காப்பாற்றுவதற்கும் குடும்ப வறுமையை போக்குவதற்கும் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட துரதிஷ்டவசமான நிலையும் பல இடங்களில் இடம்பெற்றிருக்கின்றன. கணவரால் கைவிடப்பட்ட திருமணமான பெண்கள் மாத்திரமன்றி, திருமணமாகாத இளம் பெண்கள் கூட தமது குடும்ப சூழ்நிலைகள், வறுமை காரணமாக இத்தொழிலில் ஈடுபடுகின்றனர்.   கணவரை இழந்த பெண்ணொருவர் தனது 6 பிள்ளைகளை பராமரிப்பதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகக் கூறுகிறார். சாதாரண தொழில் மூலம் கிடைக்கும் மாத வருமானத்தில் தனது பிள்ளைகளையும் பராமரித்து, நாளாந்த செலவை ஈடுகட்ட முடியாததால், எவரது உதவிகளும் அற்ற நிலையில் இத்தொழிலில் ஈடுபட தான் நிர்பந்திக்கப்பட்டதாக கூறுகிறார். தம்மிடம் வரும் ஆண்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ள தாம், சமூகத்தில் உள்ள ஏனையவர்களின் கீழ்த்தரமான பார்வைக்கும், இழிசொற்களுக்கும ஆளாகியிருப்பது வேதனைக்குரிய விடயமென்றாலும், குடும்ப சூழ்நிலை காரணமாக தம்மால் இத்தொழிலிருந்து மீண்டு வர முடியாத நிலையில் இருப்பதாகக் கூறுகிறார்.     அதேபோல தன்னுடைய கணவரது வருமானம், பிள்ளைகளையும் குடும்பத்தையும் சமாளிக்கப் போதுமானதாக இல்லையாதலால், அவ;ருக்குத் தெரிந்தே இத்;தொ;ழிலில் ஈடுபடுவதாக 4 பிள்ளைகளின் தாயா;ரான மற்றொரு பெண் கூறுகிறார். மண்வீட்டில் கணவர் மற்;றும் பிள்;ளைக;ளுடன் வசிக்கும் இவர், தமக்கு வீடொன்றை பெற்றுத் தருவதற்கு யாராவது உதவு;வார்களா எனவும் கோரிக்கை விடுக்;கிறார்.   இந்நிலையில் வாய்பேச முடியாத மற்றுமொரு பெண், கணவரது துன்புறுத்தல்களுக்கும், சித்திரவதைகளுக்கும் ஆளான நிலையில், தமது 3 பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாக, கண்ணீர்மல்க கண்களைத் துடைத்தபடி செய்கை மூலம் காண்பித்தார். திருமணமான பெண்கள் மாத்திரமன்றி, தமது காதலரால் ஏமாற்றப்பட்ட அல்லது தொழில் நிமித்தம் அழைத்துச் செல்லப்பட்டு முகவர்களால் ஏமாற்றப்பட்ட அல்லது பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட அல்லது பல்வேறு எதிர்பாராத துர்பாக்கிய சம்பவங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்ட இளம் பெண்கள் கூட செய்வதறியாத நிலையிலும், தமது வாழ்வாதாரத்துக்கான பணத்தை தேடிக்கொள்வதற்காகவும் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இது இவ்வாறு இருக்கையில், கொழும்பு போன்ற பெருநகரங்களில் படித்த, உயர்ந்த நிறுவனங்களில் தொழில் செய்யும் இளம் பெண்கள் சிலர் கூட, உல்லாசத்துக்காகவும், மேலதிக வருமானத்துக்காகவும், தமது ஆடம்பர வாழ்க்கைக்கான செலவுகளை ஈடுகட்டுவதற்காகவும், ஒரு பொழுதுபோக்கான விடயம் போல இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். தமது அலுவலக தொழில் நேரம் முடிந்த பின்னரும், வார இறுதி விடுமுறை நாட்களிலும் தமக்கான பெரும் பணக்கார வாடிக்கையாளர்களை தேடிக்கொள்ளும் இவர்கள், நடன கிளப்புகள், சொகுசு ஹோட்டல்கள், நட்சத்திர விடுதிகளில் அவர்களுடன் பொழுதைக் கழிப்பதன் மூலமாக ஆயிரக்கணக்கான ரூபாய்களை மாத்திரமல்ல சிலவேளைகளில் லட்சங்களில் கூட வருமானத்தை பெற்றுக்கொள்கின்றனர். இதனை அவர்கள் தமது சுகபோக வாழ்க்கைக்கும், ஆடம்பரத்துக்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இலங்கையில் பாலியல் தொழிலாளர்கள் ஏராளமாக உள்ள நிலையில், கலாசார மற்றும் மத அம்rசங்களின் அடிப்படையில் அவர்கள் கண்டனம் செய்யப்பட்டாலும், அவர்களது இருப்பை யாராலும் மறுக்க முடியாது. இலங்கையில் பாலியல் தொழில் சட்டவிரோதமான நடவடிக்கையாக கருதப்படும் நிலையில், கைது செய்யப்படும் பாலியல் தொழிலாளர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதோடு சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். எனவே இத்தொழிலை சட்ட ரீதியாக்குமாறும், பாலியல் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி, இத்தொழிலுக்கு அங்கீகாரத்தை வழங்குமாறும், சில நிறுவனங்களால் பல்வேறு கோரிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும், இலங்கையில் பாலியல் தொழில் இது வரை அங்கீகரிக்கப்படவில்லை என்பதே உண்மை. பாலியல் தொழில் காரணமாக, எயிட்ஸ் மற்றும் பால்வினைத் தொற்றுகள் பரவி வரும் நிலையில் அது சமூகத்தில் அபாயகரமான விளைவுகளை யும் ஏற்படுத்தியுள்ளது. அதுமாத்திரமன்றி ஆசிய கண்டத்தில், தொன்மையான கலாசார பாரம்பரியத்தைத் கொண்ட இலங்கையில் எமது மதம், ஒழுக்கநெறிகள், கட்டுக்கோப்புகளுக்கு அமைய அது கலாசார சீரழிவுகளையும், எதிர்கால இளம் சந்ததியினர் மத்தியில் பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும். இந்நிலையில் பாலியல் தொழில் இலங்கையில் சட்டரீதியாக்கப்படுமா, மற்றும் பாலியல் தொழிலாளர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுமா என்பது வினா மாத்திரமல்ல, விவாதத்திற் குரிய ஒரு விடயமுமாகும். கௌரி பிருந்தன் https://www.virakesari.lk/article/74023  
  • அண்மைக்காலங்களின் யாழ்களத்தில் ஒரு சிலரால் யுடியூப் கோமாளிகள் என மிக இலகுவாக நக்கலடித்து தங்களின் அதிமேதாவித்தனமான கருத்துக்களை முன்னிலைப்படுத்துகின்றார்கள். இன்றைய தொலைக்காட்சி  வானொலி ஊடகங்களே தங்கள் செய்திகளை யுடியூப்பில் தரவேற்றுவதில் ஆர்வம்  காட்டுகின்றார்கள்.அந்த அளவிற்கு யுடியூப் முக்கிய தளமாக உருவாகி விட்டது. அதை விட யுடியூப் தொலைக்காட்சி செய்தி ஒளிப்பதிவுகளும் நிறையவே வந்து கொண்டிருக்கின்றது.பல தொழில்நுட்ப செய்முறைகள் எல்லாம்  யுடியூப் மூலமாகவே அறிந்து கொள்ள முடிகின்றது.புத்தக படிப்பின் மூலம் தெரிந்து கொள்ள முடியாத எத்தனையோ விடயங்களை அறிந்து கொள்ள முடிகின்றது. ஒரு விடயத்தை இனங்காண முடியாவிடில் எல்லாம்  கோமாளித்தனமாகவே தெரியும்.. இனி பேசுவ...? 🤣🤣🤣