Sign in to follow this  
ampanai

சிங்களம், பௌத்தம், கொவிகம, ' வேட்பாளர் மாத்திரமே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும் ; வாசுதேவ

Recommended Posts

சிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமுடியும் என்று பழுத்த இடதுசாரி தலைவரான வாசுதேவ நாணயக்கார கூறியிருக்கிறார்.

சமூக ஊடகமொன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் அவரிடம் செய்தியாளர் சிங்கள பௌத்தர் ஒருவரினால் மாத்திரம் தான் ஜனாதிபதியாக வரமுடியுமா என்று கேட்டபோது அவர் சாதியையும் சேர்த்துக் குறிப்பிட்டு வேட்பாளர் கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தாலேயே வெற்றி கிட்டும் என்று குறிப்பிட்டார். 

ஆனால், உடனடியாகவே ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவானதன் மூலமாக சாதி அமைப்புமுறையை தகர்த்ததையும் நினைவுபடுத்த வாசுதேவ தவறவில்லை.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் கூட்டு எதிரணியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான வாசுதேவ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்சவை ஆதரிக்கிறார். 

பிரேமதாச ஜனாதிபதியாக வந்ததன் மூலமாக நியதியொன்று தகர்க்கப்பட்டபோதிலும், தலைமைத்துவ வரிசை என்று வரும்போது சிங்கள -- பௌத்த -- கொவிகம முக்கியஸ்தர்கள் முதன்மைப்படுத்தப்பட்டு நோக்கப்படும் போக்கு இன்னமும் நிலைத்திருக்கிறது. பிரேமதாச ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி நிலவிய காலத்து சூழ்நிலை அவசியப்படுத்திய தேவையின் காரணமாகவே   ஜனாதிபதியாக வந்தார்.என்றாலும் கூட அன்று ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருந்த உயர்சாதி உறுப்பினர்கள் எதிர்த்தார்கள்.

தற்போது சிங்கள -- பௌத்த -- கொவிகம சாதியத்தைச் சேர்ந்த ஒருவரே நாட்டின் தலைவராக வெற்றிபெற முடியும்.ஜனாதிபதியாக சிங்கள -- பௌத்த -- கொவிகம மாத்திரமே தெரிவுசெயயப்பட முடியும் என்ற மனநிலையே நாட்டில் நிலவுகிறது. ஜனாதிபதி பிரேமதாசவின் நியமனத்துடன் நாம் நிப்பிரபுத்துவத்தில் இருந்து வெளியே வந்தோம்.அதை மேலும் எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது குறித்து ஆராயவேண்டும் என்று வாசுதேவ கூறினார்.

கொழும்பில் சாதி முறைமை குறிப்பிட்ட அளவுக்கு  தவிர்க்கப்பட்டுவிட்டது என்பதை ஒத்துக்கொண்ட நாணயக்கார, வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் சாதிமுறைமை உறுதியானதாகவே இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

இன்று சஜித் பிரேமதாச முகங்கொடுக்கின்ற பிரச்சினை போன்றே அன்று அவரின் தந்தையார் ஜனாதிபதி வேட்பாளராக முயற்சித்ததை ஐக்கிய தேசிய கட்சிக்குள் உயர்மட்டத்தவரும் உயர்சாதியினர் என்று சொல்லப்படுகின்றவர்களும் கடுமையாக எதிர்த்தார்கள் என்று கூறிய அவர், தேசிய உடையின் தாக்கத்தையும் மக்களின் வாக்குகளைக் கவருவதில் அந்த உடைக்கு இருக்கும் ஆற்றலையும் பற்றி குறிப்பிடுகையில், " அந்த உடை மக்களின் அடையாளத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதால் தாக்கம் ஒன்றைக் கொணடிருக்கிறது.மக்கள் தனிப்பட்ட முறையில் தாங்கள் தேசிய உடையை அணிவதில் ஆர்வத்தைக் காட்டுவதில்லை என்ற போதிலும், தங்களது தலைவரின் ஊடாக தேசிய அடையாளம் வெளிக்காட்டப்படுவதை விரும்புகிறார்கள்" என்று விளக்கமளித்தார்.

சிங்கள பௌத்த தலைவர் ஒருவர்தான் நாட்டுக்கு தேவையா என்று நாணயக்காரவிடம் கேட்டபோது, " எமக்கு சிங்கள பௌத்த தலைவர் தேவையில்லை, சகல இனங்களையும் சேர்ந்த மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய  இலங்கைத் தலைவரே தேவை.எவ்வாறெனினும், சிங்கள பௌத்தர்களே நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையினராக இருப்பதால், தேரர்தல் ஒனறில் சிங்கள பௌத்தர்களின் முன்னிபந்தனை இல்லாமல் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புவது கஷ்டமான காரியமேயாகும்.எனவே, சிங்கள பௌத்த சக்திகளின் செல்வாக்கு இல்லாமல், முழு நாட்டினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர் ஒருவரைக் கொண்டுவருவது கஷ்டமானதேயாகும் " என்று பதிலளித்தார்.

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானதாக இருக்கக்கூடாது.ஆனால், பிரதானமாக அவர்களே பெரும்பான்மையினராக ஆதிக்கநிலையில் இருப்பதால் அவர்களின் கலாசாரத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டதாக இருக்கிறது.

சிங்கள பௌத்தர்கள் இந்த நாட்டின் பெரும்பான்மையினராக இருப்பதால், சிங்கள பௌத்தத்தின் மீது அதன் கலாசாரம் கட்டியெழுப்பப்பட்டிருப்பதால் அந்த நியமங்களை நாடு ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.ஆனால், அந்த காரணத்துக்காக இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குத்தான் சொந்தமானது என்று நாம் உரிமைகோரக்கூடாது என்றும் 80 வயதான நாணயக்கார கூறினார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோதாபய நியமிக்கப்படுவதை நாணயக்கார முன்னர் எதிர்த்துவந்தார். இப்போது அவரே வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.அது குறித்து கேட்டபோது கோதாபயவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர் மீதான தனது கண்டனப்பார்வை மாறிவிட்டது என்று பதிலளித்தார்.

https://www.virakesari.lk/article/64551

Share this post


Link to post
Share on other sites

எண்பது வயதிலும் கூட நெகிழ்ச்சியைக்காண முடியவில்லை. 

ஆனாலும் இவரின் கருத்துக்கள் இன்றைய நிகழ்கால சிங்களமும் அதன் அரசியல் தலைமைகளும் கூட 21ஆம் நூற்றாண்டிற்கு வரவும் இல்லை வரப்போவதும் இல்லை என்பதை காட்டுகின்றது. இவ்வாறான அரசியல் காலப்போக்கில் அடுத்த தலைமுறையால் தூக்கி எறியப்படும் காட்சிகள்  வெளிநாடுகளில் நடந்துள்ளன. இலங்கையில் கூட நடக்கலாம்.

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, ampanai said:

சிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும்

நம்மட சகோதஜாக்களிட்ட சாதி இல்லை என்று எங்கன்ட முற்போக்கு சிந்தனையாளர்கள் சொல்லிகொண்டு திரிஞ்சினம்...

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, putthan said:

நம்மட சகோதஜாக்களிட்ட சாதி இல்லை என்று எங்கன்ட முற்போக்கு சிந்தனையாளர்கள் சொல்லிகொண்டு திரிஞ்சினம்...

அவையளை இப்ப கண்டுபிடிக்க மாட்டீர்கள்!
அவையளை தேடின புர்க்காக்குள்ளை தான் தேடணும்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இந்துசமுத்திர பகுதியில்  சீனாவின் அணுவாயுத யுத்தக்கப்பல்கள் நடமாடியதை இந்திய கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்தியா டுடே தொலைக்காட்சி இந்த செய்தியை வெளியிட்டுள்ளதுடன் சீனாவின் கடற்படை கலங்களின் படங்களையும் வெளியிட்டுள்ளது. இந்திய கடற்படை தனது அமெரிக்க தயாரிப்பு பி81 நீர்மூழ்கி யுத்த வேவு விமானங்களையும் ஏனைய சாதனங்களையும் பயன்படுத்தி சீனாவின் கடற்படை கப்பலைக கண்காணித்துள்ளதுடன் படங்களை எடுத்துள்ளது. சீனாவின் ஜியான் -32 என்ற கடற்படை கப்பல் இந்து சமுத்திரத்தின் தென்பகுதி ஊடாக பயணித்த பின்னர் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்துள்ளது. இதனை இந்திய கடற்படையின் பி81 நீர்மூழ்கி எதிர்ப்பு யுத்த மற்றும் நீண்ட தூர கண்காணிப்பு விமானங்கள் படம்பிடித்துள்ளன. இந்த கண்காணிப்பு விமானங்கள் தொடர்ச்சியாக சீனாவின் கடற்படை கலங்களின் நடமாட்டங்களை கண்காணித்து வருகின்றன. தற்போது சீனாவின் ஏழு யுத்தகப்பல்கள் இந்து சமுத்திரத்தில் நடமாடுகின்றன என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளை தடுப்பு ஒத்திகையில் ஈடுபடுவதாக தெரிவித்து சீனா கடற்படை இந்த கப்பல்களை இந்துசமுத்திரத்தில் இயக்குகின்றது என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறான ஒரு கப்பலை அவதானித்துள்ளதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. எனினும் சீனா கடற்படையின் முக்கிய நோக்கம் இந்து சமுத்திரத்தில் தனது வலிமையை வெளிப்படுத்துவதே என தெரிவித்துள்ள இந்திய கடற்படை வட்டாரங்கள் இந்து சமுத்திர பகுதியில் சீனா தனது கடற்படையின் பிரசன்னத்தை விஸ்தரிக்க முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளன. தொலைதூர கடற்பகுதிகளிற்கு பயன்படுத்துவதற்காக சீனா தனது விமானந்தாங்கி கப்பலை உருவாக்கி வருகின்றது என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/64909
  • நன்றி குங்குமம் முத்தாரம் இரண்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சர்வதேச எலெக்ட்ரானிக் ஷோ ஒன்று நடந்தது. அதில் பல்வேறு நிறுவனங்களின் உயரதிகாரிகள் கலந்துகொண்டு தங்களின் வருங்காலத் திட்டங்களைப் பற்றிச் சொன்னார்கள். அப்போது ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி, ‘‘நாங்கள் மூன்று திரையுடன் கூடிய லேப்டாப்பை வடிவமைக்கப் போகிறோம்...’’ என்றார். இதைக்கேட்ட சிலர் அதிர்ச்சியடைந்து பாராட்டினாலும், பலர் நேரடியாகவே அவரை கேலி செய்தனர். இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமே இல்லை என்றனர். இந்நிலையில் மூன்று டிஸ்பிளேக்களைக் கொண்ட லேப்டாப் அடுத்த வருடம் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சில வருடங்களாகவே அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் லேப்டாப்புக்கு கூடுதல் திரையை எப்படி ஒட்ட வைக்கலாம் என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்து வந்தனர். அந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்று இரு திரைகளைக் கொண்ட லேப்டாப்பை வடிவமைத்தனர். அதற்கு ‘டூயோ’ என்று பெயர். ஆனால், மூன்று திரை இருந்தால் நன்றாக இருக்குமே... என வாடிக்கையாளர்களும், லேப்டாப் உற்பத்தி நிறுவனங்களும் விரும்பின. லேப்டாப்பின் திரையின் வலது புறத்தில் ஒன்றும், இடது புறத்தில் ஒன்றும் பொருத்தி சோதனை செய்தார்கள் விஞ்ஞானிகள். மூன்று திரைக்கும் ஒரேயொரு பிராசஸர், இயங்குதளம்தான். சோதனை வெற்றி பெறவே முத்திரை லேப்டாப்புக்கு ‘ட்ரையோ’ என்று பெயர் வைத்துவிட்டனர்.எடிட்டிங் துறையில் இருப்பவர்கள், கேம் பிரியர்கள், கலந்துரையாடல் நிகழ்வுகளில் புரொஜெக்‌ஷன் செய்பவர்கள் மற்றும் கல்விக்கூடங்களுக்கு முத்திரை லேப்டாப் பேருதவியாக இருக்கும். இதை மடித்து வைத்துக்கொள்ளவும் முடியும். அதனால் சுலபமாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். 1080 ரெசல்யூசனுடன் 14 இன்ச் மற்றும் 12.5 இன்ச் டிஸ்பிளேவில் இது கிடைக்கும். 2020க்குள் முத்திரை லேப்டாப் விற்பனைக்கு வந்துவிடும் என்று தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள். விலை நாற்பதாயிரம் ரூபாய்க்குள் இருக்கலாம். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526417
  • பெங்களூரு: கர்நாடகத்தில் கன்னட மொழியே முதன்மையானது என மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ தலைவருமான அமித்ஷா நேற்று முன்தினம் டிவிட்டரில்  விடுத்துள்ள செய்தியில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி  இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை  ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்,’ என கூறியுள்ளார். இந்தி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய அமித்ஷா, ‘‘நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும். அடுத்தாண்டு நாட்டின் பல பகுதிகளில் இந்தி தின நிகழ்ச்சிகளை நாம் நடத்துவோம்.   ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுடன் தங்கள் தாய்மொழியில் பேச வேண்டும். உடன் பணியாற்றுபவர்களிடமும் தாய்மொழியில் பேச வேண்டும். நான் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது, முதல் 10 நாட்களில் ஒரு கோப்பு கூட   இந்தியில் வரவில்லை. தற்போது 60 சதவீத கோப்புகள் இந்தியில் வருகின்றன,’’ என்றார். அமித்ஷாவின் இந்த கருத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராய் விஜயன், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி உட்பட பல தலைவர்கள் கடும் எதிர்ப்பு   தெரிவித்துள்ளனர். இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து செப்டம்பர் 20-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில், கர்நாடகத்தில் கன்னட மொழியே முதன்மையானது. அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளும் நாட்டில் சமமானவையே. கன்னட மொழிக்கு தரப்படும் முக்கியத்துவத்தில்  சமரசம் கிடையாது. கன்னட மொழி, கலாசாரத்தை ஊக்குவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526449
  • விரும்பியோ விரும்பாமலோ புதிய உலக ஒழுங்குக்கு ஏற்ப யதார்த்தமான அரசியல் காய் நகர்தலை தமிழர் தரப்பு செய்யவேண்டும்.அவன் வேண்டாம் இவன் வேண்டாம் என்று இருந்தால் ஆரும் உதவி இல்லாத ஈழ தமிழரை யார் காப்பது . ஒற்றுமையே பலம் அதுவே தமிழின் வளம்.