• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

ஒருவர் மீது ஒருவர் மோதி விபத்து.. 31 பேர் பலி.. 200 பேர் காயம்.. ஈராக்கில் இஸ்லாமிய விழாவில் சோகம்

Recommended Posts

Irad Ahusra Run: 31 people died and 200 injured in a stampede

ஒருவர் மீது ஒருவர் மோதி விபத்து.. 31 பேர் பலி.. 200 பேர் காயம்.. ஈராக்கில் இஸ்லாமிய விழாவில் சோகம்.

ஈராக்கில் அஷுரா விழா எனப்படும் இஸ்லாமிய விழா ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் பலியாகி உள்ளனர்.

ஈராக்கில் கர்பாலா பகுதியில் எல்லா வருடமும் அஷுரா விழா கொண்டாடப்படுவது வழக்கம். முகமது நபியின் பேரன் முகமது ஹுசைன் மரணத்தை இந்த விழாவில் நினைவு கூறுவார்கள். இவரின் மரணம்தான் இசுலாமியர்களின் சன்னி, ஷியா பிரிவின் பிளவிற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த அஷுரா விழாவில் ஈராக்கின் கர்பாலா பகுதியில் உள்ள ஹுசைன் மசூதியை நோக்கி மக்கள் எல்லோரும் வேகமாக ஓடுவார்கள். இதை ''துவாய்ரிஜ் ஓட்டம்'' என்று அழைக்கிறார்கள். 7ம் நூற்றாண்டில் இஸ்லாமிய அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நடந்த போரில் முகமது ஹுசைன் மரணம் அடைந்தார். இதை நினைவு கூறுவதற்காக இந்த ஓட்டம் இப்போது கடைபிடிக்கப்படுகிறது.

உலகம் முழுக்க ஷியா பிரிவை சேர்ந்த மக்கள் பலர் இந்த நிகழ்வில் எப்போதும் கலந்து கொள்வார்கள். இதில் ஹுசைன் மசூதியை நோக்கி மக்கள் எல்லோரும் கூட்டமாக ஓடுவார்கள். ஆயிரக்கணக்கில் மக்கள் இதில் ஓடுவார்கள் . இவர்கள் சிலர் குதிரைகளில் துரத்துக் கொண்டு வருவதும் சம்பிரதாயமாக கடைபிடிக்கப்படும்.

இந்த நிலையில் இன்று நடந்த அஷுரா விழாவில் 31 பேர் நெரிசலில் சிக்கி பலியானார்கள். ஓடும் போது மக்கள் ஒருவர் மீது ஒருவர் மோதி, குதிரை ஏறி மிதித்து 31 பேர் பலியானார்கள்.

மொத்தம் 200 பேர் காயம் காரணமாக இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுக்க பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் 2004ல் இந்த அஷுரா விழாவில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 140 பேர் பலியானார்கள். அதேபோல் பாக்தாத்தில் இதேபோல் கடந்த வருடம் நடந்த விழாவில் நெரிசலில் சிக்கி 965 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: https://tamil.oneindia.com/news/international/irad-ahusra-run-31-people-died-and-200-injured-in-a-stampe-362608.html

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஆனால் பதில் சொல்லமாடீர்கள். உளறல், பணம், சோம்பு எண்டு அதற்ககு பின்னல் கோழைகள் மாதிரி ஒளித்துக்கொள்ள வேண்டாம்.
  • இது காணொளிகளின் காலம்     ஆர். அபிலாஷ் எழுத்துப் பதிவுகளின் காலம் முடிவுக்கு வருகிறது எனத்தோன்றுகிறது. அண்மையில் அதிஷாவிடம் பேசும் போது இதையேவலியுறுத்தினார், “நாமெல்லாம் பத்து வருஷம் லேட்டு” என்றார். காணொளிகள் அதிகம் பேரை போய்ச் சேர்கிறது என்பதை விட, அது அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே முக்கியம். அண்ணா, கலைஞர் இருவருமே, அவர்கள் வகுத்துக் கொண்டஎல்லைக்குள், நல்ல எழுத்தாளர்கள், ஆனால் மேடைப்பேச்சின்ஊடாகத் தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களுக்குப் பின்னால் தோன்றின சமூக ஆளுமைகளும்இப்படித்தான். பேசிப் பேசி ஒருவர் பிரதமரே ஆகி விட்டார். நிம்மிஅக்கா டிவியில் பேசி கவர்ந்தே நிதியமைச்சர் ஆனார். பேச்சுத்திறன் இல்லாததாலே மற்றொருவராக ஈடு கொடுக்கமுடியாமல், குற்றவுணர்வால் தன் கட்சியின் தலைமைப்பொறுப்பை ஏற்கவே மறுக்கிறார். எஸ்.ரா தன் பேச்சுத்திறனால்அடைந்த புகழ் எழுத்துக்குக் கிடைத்ததை விட பல மடங்குஅதிகம். மனுஷ்யபுத்திரன் என்றால் எல்லாருக்கும் தெரிய வந்ததுடிவியினாலே. உணர்ச்சிப்பிழம்பாகப் பேசும் பவா. செல்லத்துரையையும் குறிப்பிட வேண்டும். உப்புமா கிளறுவதைப்பற்றி அவர் பேசினால் கூட பல்லாயிரம் பேர் முகவாயில் கையைவைத்து அசந்து போய் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஜெயமோகன், சாரு உள்ளிட்ட வேறு பல நல்ல பேச்சாளர்களும்எழுத்துலகில் உண்டு. அவர்கள் கொத்தாய் காணொளிகளுக்குநகரும் தொலைவில் இல்லை.    எத்தனையோ சாமான்யர்கள் பத்து நிமிடங்கள் யுடியூபில் பேசிவி.ஐ.பிகள் ஆகி விடுகிறார்கள். இங்கு பிளாகும், பின்னர்பேஸ்புக்கும் சூறாவளியாய் சுழன்ற போது கூட சிறு சிறுகுழுக்களுக்கு உள்ளாகத்தான் நட்சத்திரங்கள் தோன்றினார்கள். ஒரு குறிப்பிட்ட குழுவில் பிரமுகராக இருப்பவர் மற்றொரு குழுவில்தெரியப்படாமல் இருப்பார்கள். இந்த பத்தி கட்டி பிரபலம்ஆவதெல்லாம் யுடியூபில் அதிகம் இல்லை. அங்கு ஒருவர் பிரபலம்என்றால் எல்லாருக்கும் தெரிந்திருக்கும் - அதாவது ஓரளவுக்குபரவலாக சமையல், கிசுகிசு, பேட்டி, செய்திகள்கவனிப்போருக்கு. கிட்டத்தட்ட டிவியைப் போலத்தான்.  இன்னொரு சுவாரஸ்யம் இந்த காணொளி பிரபலங்கள் ஏதாவதுஒரு துறையில் விபரம் தெரிந்த நிபுணர்களாக இருக்கவேண்டியதில்லை - பேஸ்புக்கில், பிளாகில் இது அவசியம், இல்லையென்றால் முட்டை வாங்க நேரிடும். ஆனால்காணொளியில் அந்த சரளம், ஒழுக்கு, உடல்மொழி, குரல், அதன்உயிர் தான் முக்கியம், தகவல் இரண்டாம் பட்சமே. சீண்டலாகக்கேள்வி கேட்பதை விடுத்து மதனுக்கு என்ன தெரியும்சொல்லுங்கள்; ரெண்டு நிமிட வீடியோ முடிவில் த்தூ த்தூ எனமுத்தாய்ப்பாக முடிப்பதை விட சூர்யா தேவிக்கு என்னத் தெரியும்சொல்லுங்கள். எந்தளவுக்கு நீங்கள் நிபுணத்துவம் இல்லாமல்சாதாரணமாக இருக்கிறீர்கள் அது உங்களுக்கு அனுகூலமாகும். நாம் முழுவதுமாக காணொளிப் பதிவுகளுக்கு நகரும் போதுபேஸ்புக்கில் உள்ள தகவல் நேர்த்தி, ஆழம் கூட இல்லாமல் ஆகும்என்பது வருத்தத்துக்குரியதே, ஆனால் ஒருவேளை ஆழமானபார்வை கொண்ட சிந்தனையாளர்கள் அங்கு போகும் போகும் ஒருமாற்றம் ஏற்படலாம்.   காணொளி என்பது படிக்க விருப்பமற்றவர்களுக்கான ஊடகம், அதனாலே நிறைய பேரிடம் போய் சேர்கிறது என ஒரு பார்வைஉண்டு. ஆனால் பல லட்சம் பேர் படிக்கிற பரபரப்புக்கட்டுரைகளும் உண்டு என அனுபவத்திலே கண்டிருக்கிறேன். நிறைய பேர்களைப் போய் சேர்ப்பதில் டிவீட்டும் சளைத்ததில்லை. ஆனால் காணொளியின் சிறப்பு அது ஏற்படுத்தும் தாக்கம் - எப்படிவிளக்குவதெனத் தெரியவில்லை, மற்ற வடிவங்களை விட இதுஅந்தரங்கமாக, உணர்வுரீதியாக நெருக்கமாக இருக்கிறது. நான்எழுதிய கட்டுரைகளை நினைவில் வைத்திருப்போர் உண்டு, ஆனால் பேசும் போது அதைவிட பல ஆயிரம் பேர் உணர்வுஉணர்வுரீதியாகத் தாக்கம் பெற்று மனம் நெகிழ்ந்து என்னிடம்வந்து பேசுகிறார்கள். நான் முன்பு விஜய் டிவியில் ஒரு விவாதநிகழ்ச்சியில் (“பெரிதினும் பெரிது கேள்”) சிறப்பு விருந்தினராகசென்று போட்டியாளர்களை மதிப்பீடு செய்தேன். அப்போது அங்குபோட்டியிட்ட ஒரு இளைஞன் பின்பு கல்லூரியில் என்னிடம்மாணவனாக வந்து சேர்ந்து முதல் நாளே தன்னை அந்தநிகழ்ச்சியைக் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தினான். மற்றொருமாணவன் பள்ளியில் படிக்கும் போது நான் அங்கு பேசச்சென்றிருந்தேன். அவனும் கல்லூரி வந்த பின் அதை மறக்காமல்குறிப்பிட்டு என்னிடம் நட்பானான். அண்மையில் நான் லைவ்வில்இருமுறை பேசிய போது கிடைத்த உணர்ச்சிகரமான ஆதரவும்இப்படியானதே.  இதற்கு ஒரு மரபான காரணம் உண்டு: பேச்சின் தாக்கம் கிட்டத்தட்ட சினிமாவைப் போல. நமதுசங்கக்கவிதைகளும் கூட நாடக அரங்கப் பிரதிகளே, தலைவன்என், தலைவி, தோழி இவர்கள் திரும்ப திரும்ப தோன்றக்காரணம்இதுவே  ஒரு பார்வை உண்டு. அதன் பிறகு காப்பியங்களும்பக்தர்களால் வீட்டில் வைத்து பாடப்பட்டன. அதன் பிறகு பலவிதகவிதை வடிவங்கள் கவிதை ஒழுங்குடனே தோன்றின - பாரதி, பாரதிதாசன், வானம்பாடி கவிஞர்கள் வரை. காஸெட் வந்து வீடுவீடாய் சினிமா பாடல்கள் போன பின்னர் இந்த கவிதைகளுக்கு, இசைப்பாடல்களுக்கு இடமில்லாமல் போயின. அதன் பின், தமிழர்களுக்கு கவிதை என்றாலே சினிமாப் பாட்டுத்தான். கவிதைக்கு நிகழ்த்து வடிவங்களுக்குமான தொடர்பைக்குறிக்கவே இவ்வளவும் சொன்னேன் - அதுதான் இப்போதுயுடியூபில் வந்து நிற்கிறது. நம்மைப் போன்ற சிறுபான்மையினர்தாம் ஒரு பிரதியை வாழ்வின் நிகழ்த்தலில், நாடகீயத்தில் இருந்துவிடுவித்து வைத்து படிப்பவர்களாக இருந்து வருகிறோம். வெகுமக்களின் மரபு பல்லாயிரம் வருடங்களாகவே இதற்குநேர்மாறானது. ஒரு சிறிய செய்தியைக் கூட ஒரு செய்திக்காட்சியாக அல்லாமல் ஒருவர் அந்தரங்க தொனியில்முன்வைப்பதை, விவாதிப்பதை விரும்பும் மனம் ரொம்பப் பழையது, பல்லாயிரம் ஆண்டு பழையது. சங்கப்பாடல்களை நாடகமாய்கண்டு களித்த அரை-பழங்குடியினருக்கும் வேறுபல செய்திகளைவாழ்க்கைப்பதிவுகளை அதே போல அந்தரங்கமாய்நிகழ்த்தப்பட்டு காணும் யுடியூப் பயனர்களுக்கும் பெரியவித்தியாசங்கள் இல்லை. இத்தனை ஆயிரம் வருடங்களாக நாம்அப்படியே இருக்கிறோம்!    http://thiruttusavi.blogspot.com/2020/08/blog-post_70.html    
  • உங்களின் உளறலைத் தானே சொல்கிறீர்கள். டக்கி.. காவடி இன்னும் கனகாலத்துக்கு எடுபடாது. 
  • எனக்கும் குழப்பம் இருந்தது. குருபரனைப் பற்றித் தெரியும். ஆனால் மணிவண்ணனைப் பற்றி அதிகம் தெரியாது.
  • வாழ்த்தி வணங்கி செல்வதில் பிரச்சினை இல்லை. சத்தியப்பிரமாணம், உறுதிப்பிரமணம் எண்டு மக்களை ஏமாத்தக்கூடாது. பின்னர் சிங்களத்திடம் உறுதிப்பிரமணம். நல்ல இருக்குது உங்கட தமிழ் தேசியம்.