• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

ஒருவர் மீது ஒருவர் மோதி விபத்து.. 31 பேர் பலி.. 200 பேர் காயம்.. ஈராக்கில் இஸ்லாமிய விழாவில் சோகம்

Recommended Posts

Irad Ahusra Run: 31 people died and 200 injured in a stampede

ஒருவர் மீது ஒருவர் மோதி விபத்து.. 31 பேர் பலி.. 200 பேர் காயம்.. ஈராக்கில் இஸ்லாமிய விழாவில் சோகம்.

ஈராக்கில் அஷுரா விழா எனப்படும் இஸ்லாமிய விழா ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் பலியாகி உள்ளனர்.

ஈராக்கில் கர்பாலா பகுதியில் எல்லா வருடமும் அஷுரா விழா கொண்டாடப்படுவது வழக்கம். முகமது நபியின் பேரன் முகமது ஹுசைன் மரணத்தை இந்த விழாவில் நினைவு கூறுவார்கள். இவரின் மரணம்தான் இசுலாமியர்களின் சன்னி, ஷியா பிரிவின் பிளவிற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த அஷுரா விழாவில் ஈராக்கின் கர்பாலா பகுதியில் உள்ள ஹுசைன் மசூதியை நோக்கி மக்கள் எல்லோரும் வேகமாக ஓடுவார்கள். இதை ''துவாய்ரிஜ் ஓட்டம்'' என்று அழைக்கிறார்கள். 7ம் நூற்றாண்டில் இஸ்லாமிய அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நடந்த போரில் முகமது ஹுசைன் மரணம் அடைந்தார். இதை நினைவு கூறுவதற்காக இந்த ஓட்டம் இப்போது கடைபிடிக்கப்படுகிறது.

உலகம் முழுக்க ஷியா பிரிவை சேர்ந்த மக்கள் பலர் இந்த நிகழ்வில் எப்போதும் கலந்து கொள்வார்கள். இதில் ஹுசைன் மசூதியை நோக்கி மக்கள் எல்லோரும் கூட்டமாக ஓடுவார்கள். ஆயிரக்கணக்கில் மக்கள் இதில் ஓடுவார்கள் . இவர்கள் சிலர் குதிரைகளில் துரத்துக் கொண்டு வருவதும் சம்பிரதாயமாக கடைபிடிக்கப்படும்.

இந்த நிலையில் இன்று நடந்த அஷுரா விழாவில் 31 பேர் நெரிசலில் சிக்கி பலியானார்கள். ஓடும் போது மக்கள் ஒருவர் மீது ஒருவர் மோதி, குதிரை ஏறி மிதித்து 31 பேர் பலியானார்கள்.

மொத்தம் 200 பேர் காயம் காரணமாக இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுக்க பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் 2004ல் இந்த அஷுரா விழாவில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 140 பேர் பலியானார்கள். அதேபோல் பாக்தாத்தில் இதேபோல் கடந்த வருடம் நடந்த விழாவில் நெரிசலில் சிக்கி 965 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: https://tamil.oneindia.com/news/international/irad-ahusra-run-31-people-died-and-200-injured-in-a-stampe-362608.html

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • 61 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிப்பு   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் இவர்களுக்கு விளக்கமறியல் இன்று (28) நீடிக்கப்பட்டுள்ளது. நுவரேலியாவில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில் 4 பெண்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.   -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-       http://tamil.adaderana.lk/news.php?nid=125081
  • கொரோனா வைரஸ் தாக்கம் - சீன எல்லையை மூடியது மொங்கோலியா!   சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து அந்நாட்டுடனான எல்லையை மொங்கோலியா மூடிவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொங்கோலியாவில் பாடசாலைகள், கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தங்கள் நாட்டில் பரவுவதைத் தடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.   கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து நாடுகளுமே தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்த வகையில் சீனாவின் அண்டை நாடான மொங்கோலியா தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் ஊடுருவிடக் கூடாது என்பதற்காக சீனாவுடான எல்லையை மூடிவிட்டது. இதனால், சீனாவில் இருந்து வரும் வாகனங்கள் மொங்கோலியாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இது தொடா்பாக அந்நாட்டு துணை பிரதமா் உல்சிசைகான் கூறியதாவது: சீனாவில் கொரோனா வைரஸுக்கு பலியாவோா் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும், பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. எனவே, சீனாவுடனான மொங்கோலியா எல்லையை மூட முடிவு செய்துள்ளோம். எனவே, அந்த எல்லை வழியாக மொங்கோலியாவில் இருந்து சீனா செல்லவும், சீனாவில் இருந்து மொங்கோலியா வருவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. இதுதவிர, மாா்ச் 2 ஆம் திகதி வரை மொங்கோலியாவில் பாடசாலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மக்கள் அதிக அளவில் கூடும் பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், வா்த்தக கூட்டங்கள், மாநாடு உள்ளிட்ட அனைத்துக்கும் இந்த தடை பொருந்தும் என்றாா் அவர். http://tamil.adaderana.lk/news.php?nid=125066
  • 'உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை'   நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் தனக்கு உத்தரவு பிறப்பிக்க அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சட்ட பூர்வமாக எந்தவொரு அதிகாரமும் இல்லையென சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார். குறித்த ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலமாக இன்று (28) அவர் இதனை அறிவித்துள்ளார். ஆணைக்குழு விசாரணைகள் நிறைவடையும் வரை அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் டி.கே.பி. தசநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்குமாறு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். அந்த ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு நேற்று (27) இது தொடர்பான அறிவித்தலை முன்வைத்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/உததரவ-பறபபகக-அதகரம-இலல/175-244663
  • கடத்தல் வழக்கு: ‘தலையீட்டுக்கு எதிராக சட்டநடவடிக்கை’     -சொர்ணகுமார் சொரூபன் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் இருந்து, முன்னால் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, கடற்படையின் முன்னால் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க ஆகியோரை விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதி ஆணைக்குழு பணிப்புரை வழங்கியிருப்பது சட்டவிரோதமானதெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இதற்கு எதிராக சட்டநடவடிக்கைக்குச் செல்லவுள்ளதாகவும் கூறினார். யாழ்ப்பாணத்தில், இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார் http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கடததல-வழகக-தலயடடகக-எதரக-சடடநடவடகக/71-244641
  • பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா.....!   😁