• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு மத்திய அரசு விருது

Recommended Posts

meenachi.jpg

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு மத்திய அரசு விருது

சிறந்த தூய்மை பராமரிப்பு சின்னத்திற்கான‌ 2ஆவது இடத்திற்கான விருதை மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சிறந்த தூய்மை பராமரிப்பிற்கான இடங்களுக்கு ஜல் சக்தி அமைச்சகம் விருதுகளை வழங்கியது.

அதில், தூய்மை பராமரிப்புகளுக்கான இரண்டாவது இ‌டமாக மீனாட்சியம்மன் ஆலயம் தேர்வு செய்யப்பட்டு, மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தைச் சுற்றி தூய்மையாக வைத்திருப்பதற்காக 25 கழிவறைகள், குப்பைகளை பிரித்து சேகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகள், சுழற்சி முறையில் சுகாதாரப் பணியாளர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு ‌நடவடிக்கைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜம்மு- காஷ்மீரிலுள்ள வைஷ்னோ தேவி ஆலயம், சிறந்த தூய்மை பராமரிப்பு சின்னத்திற்கான‌ முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மதுரை-மீனாட்சி-அம்மன்-ஆல/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இலங்கைக்கு மலேசிய அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு இலங்கை உள்ளிட்ட 13 நாடுகள், தங்களது நாட்டுக்கு அனுப்பிவைத்த பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய 150 கொள்கலன்களை, மீள அனுப்பிவைக்க உள்ளதாக மலேசியா தெரிவித்துள்ளது. தமது நாட்டை கழிவுகளை வெளியேற்றும் இடமாக்குவதற்கு சில நாடுகள் மேற்கொள்ளும் முயற்சி கனவு மாத்திரமே என அந்த நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் யெவோ பீ யின் தெரிவித்துள்ளார். பிளாஸ்ரிக் பொருட்கள் ஏற்றுமதியை சீனா கடந்த 2018ஆம் ஆண்டு நிறுத்தியதை அடுத்து அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் இருந்து தமது நாட்டுக்கு கழிவுகள் வர தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய 3737 மெற்றிக் டொன் பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய 150 கொள்கலன்களில் பிரான்ஸூக்கு சொந்தமான 43 கொள்கலன்கள், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்துககு சொந்தமான 42 கொள்கலன்கள், அமெரிக்காவுக்கு சொந்தமான 11 கொள்கலன்களும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் எஞ்சிய கொள்கலன்கள் இலங்கை, ஜப்பான், சிங்கப்பூர், போர்த்துக்கல், லித்துவெனியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளால் அனுப்பபட்டதாக மலேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே குறித்த பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய 150 கொள்கலன்களை, அந்தந்த நாடுகளுக்கு மீள அனுப்பிவைக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். http://athavannews.com/இலங்கைக்கு-மலேசிய-அரசாங்/
  • கடன் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தினர் – யாழில் சம்பவம் யாழ்ப்பாணத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளனர். இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தென்மராட்சி, மட்டுவில் சந்திரபுரம் வடக்கு செல்லப்பிள்ளையார் கோயிலடியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், அவரது மகள், மகளின் கணவர் ஆகிய மூவர் நஞ்சருந்தி உயிரை மாய்க்க முற்பட்டுள்ளனர். இதன்போது தாயார் உயிரிழந்த நிலையில், அவரது மகளும் மருமகனும் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் நவரத்தினம் விமலேஸ்வரி (வயது-65) என்ற தாயார் உயிரிழந்துள்ளார். அவரது மகள் சிவலக்சன் கீர்த்திகா (வயது-35), மருமகன் சிவபாலன் சிவலக்சன் (வயது-35) ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிக வட்டிக்கு வாங்கிய கடனால் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாகவே இவர்கள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனரென பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/கடன்-தொல்லையால்-தற்கொலைக/
  • லக்‌ஷ்மன் கதிர்காமர் கொலை விவகாரம்: புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு சிறை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமரின் கொலை சம்பவம் தொடர்பாக  விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஜேர்மனின் ஸ்டட்காரர்ட் ( Stuttgart) நகரில் அமைந்துள்ள நீதிமன்றத்தினால் இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜி.நவநீதன் என்ற குறித்த சந்தேகநபருக்கே  ஜேர்மன் சட்டத்தின் பிரகாரம் ஆறு வருடங்களும் 10 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வெளிவிகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் இருந்த இடம் குறித்து, விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தகவல் வழங்கியதாகவே இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த  2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி, முன்னாள் வெளிவிகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் கொழும்பில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இருந்த சந்தர்ப்பத்தில், துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/லக்‌ஷ்மன்-கதிர்காமரின்-க/
  • முள்ளிவாய்க்கால் பகுதியில் நிரந்தர படை முகாம்கள் அமைக்க இராணுவம் திட்டம்..! 2ம் தடவையாகவும் நிராகரித்த மக்கள். முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் 4 இடங் களில் உள்ள இராணுவ முகாம்களை நிரந்தரமாக்க 96 ஏக்கர் நிலத்தை வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது.முள்ளிவாய்க்கால் , வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதியில் ஏற்கனவே உள்ள படை முகாம்கள் அமைந்துள்ள 96 ஏக்கர் நிலத்தையும் படையினருக்கு வழங்குமாறு கடந்த ஆட்சியில் கோரப்பட்ட சமயம் அதற்கான அனுமதி அப்போது மறுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது புதிய அரசின் காலத்தில் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் பிரதேச செயலக மண்டபத்தில் மாவட்ட அபிவிருத்தி தலைவர் கனகரட்னம் தலமையில் இடம்பெற்றது. இதன்போதே   குறித்த விடயம் சமர்ப்பிக்கப் பட்டிருந்த நிலையில் குறித்த 96 ஏக்கரில் 10 பேருக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலமும் உள்ளது .இதனால் குறித்த நிலத்தை வழங்க முடியாது என தீர்மானம் எட்டப்பட்டது. https://jaffnazone.com/news/15516