Sign in to follow this  
ampanai

இதுதான் புதிய ஐபோன்

Recommended Posts

ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என மூன்று மொபைல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள்!

ஆப்பிளின் ஆன்லைன் கேமிங் சேவையான 'ஆர்கேட்' செப்டம்பர் 19 முதல் மக்களுக்கு கிடைக்கத்தொடங்கும். நூற்றுக்கணக்கான கேம் ஸ்டூடியோக்கள் தயாரித்த கேம்கள் மொத்தமாக மாதம் 4.99 டாலர் சந்தாவுக்கு கிடைக்கும். முதல் மாதம் ஃப்ரீ ட்ரையலாக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஆப்பிளின் டிவி ப்ளஸ் ஸ்ட்ரீமிங் சேவை நவம்பர் 1 முதல் கிடைக்கத்தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜேசன் மமூவா நடிப்பில் இருக்கும் ஆப்பிள் ஒரிஜினல் தொடரான 'சீ' ட்ரைலர் திரையிடப்பட்டது. இதற்கு பின் வாங்கும் ஒவ்வொரு ஆப்பிள் சாதனத்துடனும் ஒரு வருட சந்தா இலவசமாகவும் கிடைக்குமாம்.

$329 விலையில் விற்பனைக்கு வருகிறது 7th ஜென் ஐபாட். முந்தைய 6th ஜென் ஐபேட் இந்தியாவில் சுமார் 27,000 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது. இந்த 7th ஜென் ஐபேடும் கிட்டத்தட்ட அதே விலையில் விற்பனைக்கு வரும் என நம்பலாம்.

 

ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளேதான் ஆப்பிள் வாட்ச் 5-ன் ஸ்பெஷல்

ஆப்பிள் வாட்ச்சில் இருக்கும் குறிப்பிடத்தக்க வசதி ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளேதான். மேலும் இதன் பேட்டரி லைப் 18 மணி நேரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 100% மறுசுழற்சி செய்ப்பட்ட அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. GPS இருக்கும் மாடல் விலை $399 டாலர், செல்லுலர் மாடல் விலை $499 டாலர்.

 

‘ செல்ஃபி போதும் இனிமேல் ஸ்லோஃபி எடுங்க

இந்த வருடம் ரோமன் எண் முறையில் இருந்து மாறியிருக்கிறது ஆப்பிள். இந்த புதிய ஐபோனுக்கு ஐபோன் 11 என பெயரிட்டிருக்கிறது. அதே போல இந்த போனில் கேமரா அமைப்பு இதுவரை இல்லாத வகையில் முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 12MP வைடு மற்றும் 12MP அல்ட்ரா வைடு என இரண்டு கேமராக்கள் இதில் இருக்கின்றன. முன்புற கேமராவில் ஸ்லோ மோஷன் வீடியோக்களை எடுக்க முடியும் . இது வேறு எந்த போனிலும் இல்லாத ஒரு வசதி என்று ஆப்பிள் இதற்கு ஸ்லோஃபி என பெயரிட்டிருக்கிறது. இந்த கேமராக்கள் மூலமாக 60fps 4K வீடியோவை எடுக்க முடியும். இந்த போனில் A13 Bionic ப்ராஸசர் இருக்கிறது. இது தற்சமயம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் Snapdragon 855 ப்ராஸசரை விடவும் அதிக திறன் கொண்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை $699

 

ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் விலை நிலவரம்!

சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ட்ரிபிள் கேமரா, டால்பி அட்மாஸ் என மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் வெளியாகிறது ஐபோன் 11 ப்ரோ. $999 விலையில் ஐபோன் 11 ப்ரோவும், $1099 விலையில் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸும் விற்பனைக்கு வருமாம்!

 

 

புதிய ஐபோன்களின் இந்திய விலை நிலவரம்

ஐபோன் 11: 64,990 ரூபாய் ஐபோன் 11 ப்ரோ: 99,900 ரூபாய் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்: 1,09,900 ரூபாய் ஆப்பிள் டிவி ப்ளஸ் சேவை: மாதம் 99 ரூபாய்

https://www.vikatan.com/technology/tech-news/apple-event-2019-live-updates

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • சிங்கள அரசியல்வாதிகளை அரசியலால் வெல்லும் திறமை இல்லாத தலைவர்கள் அரசியலில் இருந்து விலகி வேண்டும் இல்லை விலக்கப்பட வேண்டும்.   
    • சுப்பிரமணியன் சுவாமி உட்பட பல தமிழின கொலையாளிகள் ஒன்று கூடிய வைபவம்.  அக்கா கனிமொழியும் கலந்து வாழ்த்தி இருப்பா என்று நினைத்தேன், படத்தை காணவில்லை. 
    • கடஞ்சா, 1. நான் ஒருபோதும் விக்கிபீடியாவை நம்பகமான source ஆக கருதுவதில்லை. ஒன்றில் எழுத்தில் வந்த புத்தகங்களில் இருந்து அல்லது, நான் மேலே காட்டிய நம்பகமான தளங்களை போல தளங்களில் இருந்து தகவல்களை மேற்கோள் காட்டும் போதுதான் ஒரு கருத்தை ஆமோதிக்க முடியும். இதை சொல்லுவதற்கு மன்னிக்கவும், ஆனால் இந்த விடயத்தில் நீங்கள் ஒரு தடவை இந்தியாவின் “பூர்வீக குடிகள்” அணுகுமுறை மாற்றம் பற்றி சொல்லும் போது, அது உங்கள் நண்பர்கள் வாயிலாக கேட்டதாக சொல்கிறீர்கள். இன்னொரு சந்தர்பத்தில் பாகிஸ்தான் வரலாறு பற்றி எழுதும் போதும் பாகிஸ்தானிய நண்பர்கள் கூறியதாக எழுதினீர்கள். இப்போ ஒரு slide show வை முன்வைக்கிறீர்கள். இந்த உலகில், குறிப்பாக இண்டெர்நேட் கண்டுபிடித்தபின் பொய்யான வரலாறும், அரைகுறையான வரலாறுமே எங்கும் வியாபித்துக் கிடக்கிறது. இந்த நிலையில், உங்கள் கருத்தை ஏற்க நான் தயங்க பிரதான காரணம் - உங்கள் கருத்து தரமான ஆதாரங்களால் நிறுவப்படவில்லை. 2. பாகிஸ்தான் பிரிவினையில், ஜின்னா 1937 பின்பே அதிக அக்கறை எடுத்தார் என்பதை நாம் எல்லாரும் ஒத்துகொள்கிறோம். 1933 ற்கு முன் முஸ்லீம்களுக்கு ஒரு தனிநாடு எனும் கொள்கை வலிமையாக முன்வைக்கப்பட்டதா? என்றால் பதில் இல்லை என்பதே. அலியின் பிரகடனத்தை ஆமோதித்து ஒப்பமிடவே 3 பேர் இல்லாத நிலையே காணப்பட்டது. அதற்கு முன் எங்கோ ஒரு சிலர் முஸ்லீம்களுக்கு ஒரு தனிநாடு என்பதை பற்றி சிலாகித்து இருக்கலாம். கோரிக்கையாகவும் முன்வைத்திருக்கலாம், ஆனால் 1940 வரை அது முஸ்லீம்களை பிரதிநிதிதுவம் செய்தவர்களின் கொள்கையாக இருக்கவில்லை. கூடவும் இக்பால் கேட்ட கூட்டாட்சி, அலி கேட்ட பாகிஸ்தானில் இருந்து வேறுபட்டது. அலிகேட்ட பாகிஸ்தான் ஜின்னா அடைந்த பாகிஸ்தானில் இருந்து வேறுபட்டது. ஆனால் முஸ்லீம்களிற்கெனெ ஒரு தனிநாடு என்பதை முதன்முதலில் ஒரு கொள்கையாக பிரகடனப்படுத்தி, அதை வட்ட மேசையில் சமர்பித்து, புதியநாட்டுக்கு பாக்(கி)ஸ்தான் எனப் பெயரும் சூட்டியவர் அலி. 
    • எம்மவர்கள் பலர் இப்போதெல்லாம் புதுமை என்று கூறிக்கொண்டு பல கோமாளித்தனங்களைச் செய்கின்றனர். இதுபோன்ற ஒன்று தான் இதுவும். தாலி கட்டுவது என்பதே விசர் வேலை. இதில் ஆணுக்கும் கட்டுவது ????? சடங்குகள் இன்றி தமிழ்முறைப்படி இவர்கள் திருமணம் செய்திருந்தால் வாழ்த்தலாம், பாராட்டலாம்.   கேரள இனத்தவரின் சடங்குகளில் ஆணும் பெண்ணும் கழுத்துக்கு நகை அணிவிப்பது உண்டு. அதை பார்த்தும் இவர்கள் செய்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரை தேவையற்ற விடயமும் எம் அங்கலாய்ப்பும்
    • இந்த மாப்பிள்ளை யாழ்கள உறவாம்? யாரென்று தெரியவில்லை ஆனாலும், அவர் இதை விளம்பரப்படுத்தி செய்யாத போது, இதை நாமும் ஒரு தனிப்பட்ட விடயமாக கடந்து செல்வதுதானே கண்ணியமான அணுகுமுறை? இதை சிலாகிப்பதில் ஏதும் பொது நலனிருப்பதாக தெரியவில்லை. பிக்பாசில் மூன்றாம் நபர்களின் தனிமனித விடுப்பு வேண்டாம் என்று கருத்தாடலை தடை செய்யும் நாம், இன்னொரு கள உறவின் தனிப்பட்ட விடயத்தில் மூக்கை நுழைப்பானேன்? அவர் இதைதான் ஒரு புரட்சியாக செய்வதாயோ அல்லது எல்லோரும் இப்படி செய்யுங்கள் என்றோ கூறவில்லையே? சொல்லப்போனால் ஏன் இப்படி செய்தார்கள் என்பதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊகம் மட்டுமே சொல்கிறோம். அவர்களுக்கு ஒரு காரணம் இருக்கும். அதை அவர்கள் மட்டுமே அறிந்தால் போதும். ஊரில் கதைக்க பிரச்சினையா இல்லை. டேப்லாயிட் பத்திரிகைகள் போல தனிமனித வாழகையில் மூக்கை நுழைக்கும், கருத்து சொல்லும் அருவருப்பான பழக்கத்தை முடிந்தளவு தவிர்ப்போம் என்பதே என் வேண்டுகோள்.