• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல் உத்தரவு

Recommended Posts

பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல் உத்தரவு

 

 

1605327486palitha3

பிரதி அமைச்சர் பாலித்த தேவரப்பெரும உட்பட ஐவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மத்துகமை நீதிமன்ற நீதிவான் ஹேமமாலி ஹால்பன்தெனிய உத்தரவிட்டுள்ளார்.

மத்துகம பிரதேச தோட்டம் ஒன்றில் கண்காணியாக பணியாற்றிய 70 வயதான ஒருவர் கடந்த 21 ஆம் திகதி தொடம்கொடை தெபுவ நோர்வூட் தோட்ட குடியிருப்பில் உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த வயோதிபரின் சடலத்தை அந்த தோட்ட மயானத்தில் தகனம் செய்ய தோட்ட உரிமையாளர் அனுமதி அளிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் தோட்ட உரிமையாளர் தெபுவன பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தெபுவன பொலிஸார் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து தடையுத்தரவை பெற்றது.

சடலத்தை புதைக்க முடியாத இக்கட்டான நிலையில் உயிரிழந்த நபரின் உறவினர்கள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெருமவை தொடர்பு கொண்டு தங்களது நிலைமையை தெளிவுபடுத்தினர்.

அதனையடுத்து உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்ட பிரதியமைச்சர் குறித்த இடத்திற்கு வந்து உயிரிழந்த சடலத்தை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தார். அவரே இறுதிக் கிரியைகளையும் நடத்திச் வைத்தார்.

இதையடுத்து பொலிஸார் மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதி மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

Share this post


Link to post
Share on other sites

பாவம் இந்த மனிதர்!
ஒரு பிரேதத்தைக் கூட புதைக்க முடியலையா என்று ஆதங்கப்பட்டு மாட்டிகிட்டார்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, outdoor

பாவம்... ஒரு தமிழனுக்காக, சிறை சென்ற.. சிங்கள அமைச்சர். ☹️

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • பகல் கனவு பலிக்காது வாய்மையே வெல்லும்       இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை எந்த சந்தர்ப்பத்திலும் அசைக்க முடியாது. எம்மை பலவீனப்படுத்தலாம் என சிலர் பகல் கனவு காண்கின்றனர். அவர்கள் கனவு காணட்டும். முன்வைத்த காலை பின்வைக்காது நாம் எமது பயணத்தை தொடர்கின்றோம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். நானுஓயா சமர்செட் ஈஸ்டல் தோட்டத்தில் இன்று (24) 50 தனி வீடுகளை அமைக்க அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 2002 இல் நுவரெலியாவிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தை கைப்பற்றுவதற்கு ஒருவர் முயற்சித்தார். அதன்போது இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு 2003 இல் எனக்கும், ஏனைய சிலருக்கும் எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த நபரால் வழக்கு தொடுக்கப்பட்டது. எனினும், 18 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு வெளியானது. அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன். எனவே, வாய்மையே வெல்லும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. ஐயா காலத்தில் பொதுச்செயலாளராக இருந்தவர் அவரின் முதுகில் குத்திவிட்டு காங்கிரஸிலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் ஏனைய ஐவர் சென்றனர். அண்மையில் கூட சிலர் கட்சி தாவினார்கள். ஆனால், எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை அசைக்க முடியாமல் போனது. காங்கிரஸையோ அதன் சொத்துகளையோ அசைக்க முடியாது என்பது பலமுறை உறுதியாகியுள்ளது. அப்படி நடக்கும் என கனவு காண்பவர்கள் தாராளமாக காணட்டும். நாம் எமது வேலைகளை செய்வோம். கடந்த ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகளை எடுத்துக்கொண்டால் வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளிலேயே அன்னத்துக்கு அதிகம் வாக்குகள் விழுந்தன. எனினும், ஐந்தாண்டுகள் நாம் அவர்களுடன் இருந்ததால் சிறுபான்மையினத்தவர்கள் இருவருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. நாம் எதிரணியில் இருந்தபோதும் மலையக மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்து ஆதரவு வழங்கினார்கள். எனவே, முன்வைத்த காலை பின்வைக்காது சமூகத்துக்கான எமது சேவைகள் தொடரும். மலையகத்துக்கு தனிப்பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான இடத்தை கண்காணிப்பதற்காக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன எதிர்வரும் 29 ஆம் திகதி அட்டனுக்கு வரவுள்ளார். அதேவேளை, நான் ஒருமையில் கதைப்பதாக ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நான் எனது மகன் உட்பட குடும்ப உறுப்பினர்களுடன் சாதாரணமாக வா, போ என்றே உரையாற்றுவேன். மக்களாகிய நீங்களும் என் சொந்தங்கள். அதன்காரணமாகவே உரிமையுடன் ஒருமையில் விளிக்கின்றேன் என்றார்.   http://tamil.adaderana.lk/news.php?nid=126041
    • மதுப்பழக்கம் அறவே இல்லை! டொனால்ட் ட்ரம்ப் தொடர்பில் வெளியான சில தகவல்கள்       S.P. Thas     அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்பிற்கு புகைப்பிடித்தல், போதை வஸ்துகளை பயன்படுக்காது என்றும் இதுவரை காலமும் அவரை போதைப் பொருட்களைப் பயன்படுத்தியது இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த ஜனவரியில் டொனால்ட் ட்ரம்பிற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது உயரம் 6 அடி 3 அடியாகவும் உடல் எடை 239 பவுன்ட்டாகவும் இருந்தது. இந்த உயரத்திற்கு ஏற்ற உடல் எடை என வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்திருந்தார். பொதுவாக காலை உணவை உண்ணும் பழக்கத்தை கொண்டிருக்காதவர் ட்ரம்ப். அவர் டீ, கோபி உள்ளிட்ட பானங்களையும் காலையில் அருந்த மாட்டாராம். சில நேரங்கள் மெக் டொனால்டின் மப்பின்களை உண்பது வழக்கம். பின்னர் முட்டைகளையும் உண்வாராம். வெண் பன்றி இறைச்சியில் செய்யப்பட்ட அமெரிக்க உணவில் குறைந்த அளவு கொழுப்பே இருக்கும். இந்த உணவு புற்றுநோயை எதிர்த்து போராடும் என கூறப்படுகிறது. இவரால் 14 முதல் 16 மணி நேரம் வரை உண்ணாமல் இருக்க முடியும். மதிய உணவில் மாட்டிறைச்சியை விரும்பி சாப்பிடுவார். இதை பிரவுன் பிரட்டில் வைத்து சாப்பிடுவார். அதோடு அவருக்கு துரித உணவு கடைகளான மெக் டொனால்ட், பர்கர் கிங், கேஎஃப்சியில் கிடைக்கும் உணவுகளும் மிகவும் பிடிக்கும். இரவு நேரத்தில் இரு பெரிய மாக்ஸ், மீன் சான்ட்விச், சிறிய சாக்லேட் ஷேக் ஆகியவற்றை உண்வார். அதன் மொத்த கலோரி 2,430 ஆகும். தனது வெள்ளை மாளிகையில் மெக் டொனால்டை உருவாக்கியுள்ளார். டிரம்ப் பீட்சா பிரியர். அவருக்கு சிக்கன் உணவு பிடிக்காது. குளிர்பானங்களை பொருத்தமட்டில் டயட் கோக்கை தினமும் 12 கேன்கள் குடிப்பாராம். மொறு மொறு ஸ்னாக்ஸ்தள் மிகவும் பிடிக்கும். உருளைகிழங்கு சிப்ஸை விரும்புவார். மது அருந்தும் பழக்கமில்லாதவர் டிரம்ப். வாழ்நாளில் ஒரு முறை கூட மது அருந்தியதே இல்லை. அதேபோல் புகைப்பிடித்தல், போதை வஸ்துகளையும் பயன்படுத்தாதவர். ஒரு முறை அவரது சகோதரருக்கு குடியால் பிரச்சினை ஏற்பட்ட போது குடிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தியது கூறப்படுகிறது. https://www.ibctamil.com/world/80/137708
    • அழிவின் விளிம்பில் சீனா- அனைத்தும் கையை மீறிவிட்டன! ஒப்புக் கொள்கிறேன்- துன்பத்தில் சீன ஜனாதிபதி     Sumithiran   கொரோனா வைரஸ் தொற்றுநோய் சீனாவில் நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில் இது சீனாவின் "மிகப்பெரிய பொது சுகாதார அவசரநிலை" என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார். COVID-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் என இரட்டை முயற்சிகளுக்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் பெய்ஜிங்கில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு சீனப் பிரதமர் லி கெக்கியாங் தலைமை தாங்கினார்.. இதில் உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறையினர் பங்கேற்றார்கள். இந்த கூட்டத்தில் பேசிய அதிபர் ஜி ஜின்பிங், கொரோனா வைரஸ் தொற்றுநோய் மிக வேகமாக பரவுகிறது, இதை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் மிகவும் கடினமாக உள்ளது. இது எங்களுக்கு ஒரு நெருக்கடி, இது ஒரு மிகப்பெரிய சோதனை. இந்த கொரோனா வைரஸ் தொற்று என்பதை சீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையாக அறிவிக்கிறேன்" என்றார். தொற்றுநோய் "தவிர்க்க முடியாமல் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று சீன அதிபர் ஜின்பிங் ஒப்புக் கொண்டார், ஆனால் அதன் விளைவுகள் "குறுகிய கால" மற்றும் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதேவேளை கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் மேலும் 97 பேர் இறந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (என்.எச்.சி) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.   https://www.ibctamil.com/world/80/137670?ref=ibctamil-recommendation
    • வாகனம் வைத்திருப்பவரகள் வசதியானவர்கள் இல்லை பெரும்பாலும் லீசிங்கில் வாங்கியவைதான்.தீ வைப்புக்கு காரனம் வன்மமும் வக்கிர புத்தியும்தான்.