தமிழ் சிறி

மனைவி தூங்குவதற்காக, 6 மணி நேரம் விமானத்தில் நின்று கொண்டே பயணித்த கணவர்!

Recommended Posts

View image on Twitter

மனைவி தூங்குவதற்காக,  6 மணி நேரம் விமானத்தில் நின்று கொண்டே பயணித்த கணவர்!

மனைவிக்காக விமானத்தில் சுமார் 6 மணி நேரம் நின்று கொண்டே பயணித்த கணவரின் புகைப்படம் வைரலாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகும். பெரும்பாலும் அவை சினிமா நடிகர், நடிகையரின் புகைப்படங்களாகவோ, அல்லது விலங்குகள், குழந்தைகள் சேட்டை செய்யும் புகைப்படங்களாகவோ, வீடியோக்களாகவோ தான் இருக்கும்.

ஆனால் தற்போது வைரலாகியுள்ள புகைப்படம், மனிதநேயத்தையும், கணவன் - மனைவி இடையேயான காதலை சொல்லும் வகையில் அமைந்துள்ளது. சம்பந்தப்பட்ட அந்த புகைப்படத்தில் ஒரு ஆண் விமானத்தில் நின்றபடி இருக்கிறார். அவருக்கு அருகில் ஒரு பெண் இருக்கையில் படுத்து உறங்குகிறார்.

இந்த புகைப்படத்தை கோர்ட்னி லீ ஜான்சன் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இந்த நபர் தனது மனைவி உறங்க வேண்டும் என்பதற்காக, 6 மணி நேரம் நின்றுகொண்டே விமானத்தில் பயணித்தார். இது தான் காதல்", என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் டிவிட்டரில் வைரலாக பரவி வருகிறது. அந்த ஆண் தனது மனைவி மீது வைத்திருக்கும் காதலை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுவல்லவோ காதல் என புகழ்ந்து தள்ளுகின்றனர்.

ஆனால் சிலர் உறங்கும் அந்த பெண்ணை சுயநலவாதி என திட்டி தீர்க்கின்றனர். அவர் நினைத்திருந்தால், தனது கணவரின் தோள் மீது சாய்ந்துபடுத்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யாமல், தனது கணவரை நிற்க வைத்துவிட்டார் என சாடுகிறார்கள்.

டைட்டானிக் படத்தில் ஜாக், ரோஸ் க்ளைமாக்ஸ் புகைப்படத்தை பதிவிட்டு, அந்த பெண்ணை சுயநலவாதி என குறிப்பிட்டுள்ளார் ஒருவர். இப்படி பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவிக்கும் அளவுக்கு உலகம் முழுவதும் சுற்றி வருகிறது அந்த புகைப்படம்.

மனà¯à®µà®¿à®¯à®¿à®©à¯ பாà®à®®à¯

பாவம் இப்படி பிளைட்டில் கூட படுத்துக் கொண்டே வரும் அளவிற்கு, அப்பெண்ணிற்கு என்ன உடல்நலப் பிரச்சினை எனத் தெரியவில்லை. மனைவிக்காக ஒரு கணவர் ஆறு மணி நேரம் நின்று கொண்டே பயணிக்கிறார் என்றால், எந்தளவுக்கு அப்பெண் தன் கணவருக்கு பாசத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்றும் சிலர் அப்பெண்ணைப் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/india/man-stands-for-6-hours-in-flight-for-his-wife-picture-goes-viral-362616.html

Share this post


Link to post
Share on other sites

உண்மை தான் சில நேரங்களில் மனைவி நிம்மதியாக தூங்குவது எங்களுக்கு டபிள் நிம்மதி. 🤣

 • Haha 5

Share this post


Link to post
Share on other sites

கணவன் நின்றால்தான் காதலும் நிக்கும் போலுள்ளது . நிக்கட்டும்....நிக்கட்டும்.....!   😂

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

mh.png

ஆளையும் முக அமைப்பை பார்த்தால் அப்படி தெரியவில்லை தோழர் .. எனக்கு என்னவோ  "உட்காரும் இடத்தில் கட்டிணே.!" என்ட தலைவரின்ட பகிடிதான் நினைவிற்கு வருகுது..  😄

 

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, tulpen said:

உண்மை தான் சில நேரங்களில் மனைவி நிம்மதியாக தூங்குவது எங்களுக்கு டபிள் நிம்மதி. 🤣

தூங்கவைக்க முயற்சித்து தோற்றவர்களுக்கு தெரியும் அதன் வேதனை. இவர் கொடுத்து வைத்தவர் எழுப்பி வேற நிக்கிறார் அதுவும் பிளைட்டுக்குள். காணக்கண் ஆயிரம் வேண்டும் காண். 

🤪

Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, தமிழ் சிறி said:

View image on Twitter

மனைவி தூங்குவதற்காக,  6 மணி நேரம் விமானத்தில் நின்று கொண்டே பயணித்த கணவர்!

எனக்கு உப்புடியொரு நிலமை வருமெண்டால்......மடியிலை படுத்தி தாலாட்டுப்பாடி நித்திரையாக்கியிருப்பன்.😎

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
19 minutes ago, குமாரசாமி said:

எனக்கு உப்புடியொரு நிலமை வருமெண்டால்......மடியிலை படுத்தி தாலாட்டுப்பாடி நித்திரையாக்கியிருப்பன்.😎

தாத்தா உங்க‌ட‌ இள‌மைக் கால‌ம் முடிஞ்சு போச்சு , இனி இப்ப‌டி எல்லாம் யோசிக்க‌ கூடாது ஹா ஹா 😁😂 /

Share this post


Link to post
Share on other sites

சிங்கன் லாண்டிங், டேக் ஓப் நேரம் ஸ்டாண்டிங்கிலேயே பெல்ட் போட்டிருப்பாரோ?

Share this post


Link to post
Share on other sites
On 9/12/2019 at 1:12 AM, பையன்26 said:

தாத்தா உங்க‌ட‌ இள‌மைக் கால‌ம் முடிஞ்சு போச்சு , இனி இப்ப‌டி எல்லாம் யோசிக்க‌ கூடாது ஹா ஹா 😁😂 /

தம்பியருக்கு என்னைப்பற்றி ஒழுங்காய் தெரியேல்லை😂

 • Haha 2

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, குமாரசாமி said:

தம்பியருக்கு என்னைப்பற்றி ஒழுங்காய் தெரியேல்லை😂

பாவம் அவர்

குழந்தையண்ணா😋

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • நான் இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேண்டும்.. நாங்கள் இங்கே எழுதிக்கொண்டு இருக்கும் நேரத்தில் அந்த பெண் அல்லது அவரைப்போல இன்னும் பலர் எவ்வளவு உடல் உளதாக்கங்களை அனுபவிப்பார்களோ தெரியாது ..  சூழவுள்ளோர் அனுசரணையாக இல்லாவிட்டால் எந்தவித முடிவுகளை எடுப்பார்கள் எனவும் தெரியாது..ஏனெனில் நடந்த சம்பவத்தையே மாற்றி கதைக்கும் பலர் எங்களில் இன்னமும் இருக்கிறார்கள்.. இந்த மாதிரி செயல்களை தடுக்க வழி செய்யாவிடில்  இந்த செய்தியும் பத்தோடு பதினென்றாகவே முடியும் ..      
  • தவறு யாருடையது என்று இறந்தவர் வந்து கூறப்போவதில்லை.. இந்த செய்தியை பார்த்த பின்பு கொலை செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர், அவர் செய்தது சரிதான் என கூறினாலும் கூறும் சமூகம் இது.. கொலை செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராயின் அவரது உறவினர்கள் நண்பர்கள், அவரை திருத்த வழி செய்தார்களா? இப்பொழுது இறந்த பெண்ணை, மரியாதை இல்லாமல் தூற்றி என்ன பிரயோசனம்?
  • கனடாவின் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் வெளிநாட்டு மாணவர்களை அதிகம் விரும்புகின்றன எனவும் அதற்கு கனடிய அரசாங்கமும் ஒத்துழைப்பு வழங்குகிறது என்றும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். கனடாவிற்குப் படையெடுக்கும் சர்வதேச மாணவர்கள் இதுவரையில் கனடா அனுமதிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பெரும் பங்கானவர்கள் சீனா, இந்தியாவிலிருந்தே வருகின்றார்கள். பண வசதிகளும் ஏற்கெனவே இங்கு வதிகின்ற புலம்பெயர் சமூகங்களும் (Diaspora) இதற்கு ஒரு காரணம். இப்படி வருபவர்கள் சில குறிப்பிட்ட பெரு நகரங்களின் ஸ்தாபனங்களில் கல்வி கற்பதும், அந்நகரங்களில் வாழ்வதும் இதர நகரங்களின் பொருளாதார, அரசியல் சமநிலைகளைப் பாதிக்கின்றனவென்பது கொள்கைவகுப்பாளரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அட்லாண்டிக் மாகாணங்கள் எனப்படும் நோவா ஸ்கோஷியா, நியூ பிறவுண்விக், பிறின்ஸ் எட்வார்ட் ஐலண்ட் என்பவற்றின் குடிசனத் தொகை குறைவாக இருப்பதும் அங்குள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போதாமையும் அவற்றின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. குடிசனக் குறைவால் பொருளாதாரம் பாதிக்கப்படும்போது அம்மாகாணங்களுக்கு மத்திய அரசு தன் வருடாந்த கொடுப்பனவை (transfer payments) அதிகரிக்க வேண்டும். (பணக்கார மாகாணங்களிலிருந்து பெறப்படும் வரிப்பணத்தை ஏழை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிப்பது கனடாவின் வழமை) கனடா தற்போது திட்டமிட்டுக்கொண்டிருக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் பின்னால் பல நோக்கங்களிருக்கிறது என முற்பகுதியில் பார்த்தோம். அதில் முக்கியமானது எதிர்காலத்தில் அதிகளவு துறை சார் வல்லுனர்களினதும் (professionals), தொழில் வல்லுனர்களினதும் (skilled workers) தேவை இருக்கப்போகிறது. கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இவர்களை ‘உற்பத்தியாக்க வேண்டும்’. ஆனால் உள்நாட்டு மாணவர்கள் மேற்படிப்பை முடிப்பது குறைவாகி வருகிறது. எனவே வெளிநாட்டு மாணவர்களை எடுத்து அவர்கள் பட்டம் பெற்றதும் இங்கேயே அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவது என்பது முதலாவது திட்டம். இரண்டாவதாக, வறுமைப்பட்ட மாகாணங்களுக்கு புதிய குடிவரவாளர்களோ, வெளிநாட்டு மாணவர்களோ செல்வதில்லை என்றொரு குறைபாடுண்டு. இதை நிவர்த்தி செய்ய வெளிநாடுகளிலிருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களையும், புதிய குடிவரவாளர்களையும் இம் மாகாணங்களுக்கு அனுப்புவது. மத்திய அரசின் மூன்றாவது திட்டம், தனியே இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து மட்டும் மாணவர்களை எடுக்காமல் உலகின் இதர நாடுகளிலுமிருந்தும் மாணவர்களை எடுப்பதன் மூலம் நாட்டின் எதிர்காலக் குடிமக்களாக அவர்கள் மாறும்போது உண்மையான பல்கலாச்சார நடாகக் கனடா பரிணமிக்கும் என்பது. மேற்சொன்ன திட்டங்களுக்கமைய, கனடா தனது ஆட் சேர்ப்பு முயற்சிகளை மெக்சிக்கோ, கொலம்பியா, பிறேசில், வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, மொரோக்கோ, துருக்கி, பிரான்ஸ், யூக்கிறெயின் ஆகிய நாடுகளுக்கு விஸ்தரிக்க ஏற்பாடு செய்து வருகின்றது. இதற்கான செலவீனமாக 2019 இன் வரவு செலவுத் திட்டத்தில் $147.9 மில்லியன் டாலர்களை அடுத்த ஐந்து வருடங்களுக்கும், தொடர்ந்து வருடா வருடம் $8 மில்லியன்களையும் ஒதுக்கியுள்ளது. கனடாவின் மாகாணங்கள், பிரதேசங்கள், அமைப்புகள், கல்வி ஸ்தாபனங்கள் ஆகியன இத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஆலோசனைகளை வழங்கும். “எங்கள் சர்வதேச மாணவர்களைப் பயிற்றுவிக்கும் திட்டத்தின் மூலம் அவர்கள் கனடாவில் குடியேறுவதன் மூலம் எமது பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவார்கள் அல்லது தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச் சென்று எங்கள் தொழில்நுட்பம், கனடிய விழுமியங்கள் போன்றவற்றைப் பரப்புவதற்குத் தூதுவர்களாகச் செயற்படுவார்கள்” எனக் கனடிய சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜிம் கார் தெரிவித்தார். சர்வதேச மாணவர்களை உள்வாங்கும் முயற்சிகளுக்குப் பல நாடுகளும் முண்டியடித்துக்கொண்டு போட்டி போடுகின்றன. அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி, நியூ சீலந்து, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, மலேசியா போன்றவை இவற்றில் சில. சில நாடுகள் வெளிநாட்டு மாணவர்களுக்குப் புலமைப் பரிசில்களையும், இலவச போதனைகளையும் அளிக்கிறார்கள். சர்வதேச மாணவர்களை அனுமதிப்பதன் மூலம் தற்போதுள்ள துறைசார் பணிகளுக்கு இருக்கும் ஆட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம் என்பது கொள்கை வகுப்பாளரின் கருத்து. புதிய பொருளாதாரம் புதிய கல்வியை அடிப்படையாகக் கொண்ட விற்பன்னர்களைத் தேடி நிற்கின்றது. கனடாவின் அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சி அதன் குடிவரவிலேயே தங்கியுள்ளது எனக் கனடிய குடிவரவு அமைச்சர் கூறினார். இப்பின்னணியில் பார்க்கும்போது, 2018 இல் 53,700 சர்வதேச மானவர்கள் கனடாவின் புதிய குடிமக்களாக வந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியப்படும் விடயமல்ல. 2022 இற்கான 475,000 சர்வதேச மாணவர்களை உள்வாங்கும் கனடிய திட்டம் 2019 இலேயே 494,000 த்தைத் தாண்டிவிட்டது. இருப்பினும் மேலதிக சர்வதேச மாணவர்களைக் கனடா எதிர்பார்க்கிறது.       http://marumoli.com/கனடாவெளிநாட்டு-மாணவர்க-2/செய்திகள்/news/canada-கனடா/?fbclid=IwAR1KaEFCiKRdfr5Qk8GuN4GWKOQ_Wy2ec5bW8Mqi_yEDxmOAYMBMKxRsVoE