• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

பலாலி விமான நிலையத்தை மதிப்பீடு செய்ய வருகிறது இந்திய தொழில்நுட்ப குழு

Recommended Posts

பலாலி விமான நிலையத்தை மதிப்பீடு செய்ய வருகிறது இந்திய தொழில்நுட்ப குழு

by in செய்திகள்

Palaly_Airport-300x200.jpg

 

பலாலி விமான நிலையத்தின் வசதிகள் தொடர்பான மதிப்பீடுகளைச் செய்வதற்கு, அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து  தொழில்நுட்பக் குழுவொன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளதாக, கொழும்பிலுள்ள அதிகாரிகளை மேற்கோள்காட்டி ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பலாலியில் இருந்து இந்திய நகரங்களுக்கு விமான சேவைகளை ஆரம்பிக்க சிறிலங்கா சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரசபை மும்முரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒக்ரோபர் நடுப்பகுதியில் விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையத்தில் இருந்து, கொச்சி, மும்பை, புதுடெல்லிக்கான சேவைகள் தொடங்கப்படவுள்ளன.

போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பலாலி விமான நிலையத்தின் வசதிகள் தொடர்பான மதிப்பீடுகளைச் செய்வதற்கு, அடுத்தவாரம் இந்தியாவில் இருந்து தொழில்நுட்பக் குழுவொன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளதாக, கொழும்பிலுள்ள அதிகாரிகளை தெரிவித்தனர்.

பலாலி விமான நிலையத்தை கூட்டாக அபிவிருததி செய்வதற்கு இந்தியாவிடம் இருந்து கொடை உதவிகள் கிடைப்பதற்கு சாத்தியங்கள் உள்ள போதிலும், அதுபற்றி கலந்துரையாடப்பட்ட போதிலும், எந்த அதிகாரபூர்வ உடன்பாடும் இதுவரை கையெழுத்திடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.puthinappalakai.net/2019/09/11/news/39963

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, கிருபன் said:

பலாலி விமான நிலையத்தில் இருந்து, கொச்சி, மும்பை, புதுடெல்லிக்கான சேவைகள் தொடங்கப்படவுள்ளன.

தமிழ்நாட்டு நகரங்களுக்கு இல்லையா?

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, putthan said:

தமிழ்நாட்டு நகரங்களுக்கு இல்லையா?

மோட்டு ஹிந்தியனுக்கு தான் விமான சேவை!

மோடி என்ன கொக்கா?

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • உபாதைக்குள்ளாகிய இஷாந்த் சர்மா நியூஸி. டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவாரா? By Mohammed Rishad -     தோள்பட்டை காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் நியூஸிலாந்து தொடரில் இருந்து விலகிய நிலையில், வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவும் கணுக்கால் காயம் காரணமாக நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ரஞ்சிக் கிண்ண போட்டியில் டெல்லி அணிக்காக இஷாந்த் சர்மா விளையாடினார். விதர்பா அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் பந்துவீசும் போது இஷாந்த் சர்மாவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வலி தாங்க முடியாத இஷாந்த் சர்மா பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார்.  அதன்பின் இஷாந்த் சர்மாவுக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்–ரே பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இஷாந்த் சர்மாவின் கணுக்கால் தசைநார் கிழிந்துள்ளது. ஆனால் எலும்பு முறிவு ஏதும் ஏற்படவில்லை.  இந்த தசைநார் கிழிவு சற்று தீவிரமானது என்பதால் குறைந்தபட்சம் 6 வாரங்கள் ஓய்வில் இருக்க இஷாந்த் சமாவுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.  இதனால் நியூஸிலாந்துக்கு எதிராகப் பெப்ரவரி 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மா பங்கேற்க வாய்ப்பில்லை என்று டெல்லி கிரிக்கெட் அமைப்பின் பொதுச்செயலாளர் வினோத் திஹாரா தெரிவித்துள்ளார். ஆனால், பிசிசிஐ விதிமுறைப்படி, பிசிசிஐ சார்பில் மருத்துவர்கள் குழு இஷாந்த் சர்மாவைப் பரிசோதித்து, ஸ்கேன், எக்ஸ்–ரே போன்ற ஆய்வுகளை மேற்கொள்வார்கள். அதன்பின் இறுதியாக பிசிசிஐயின் முடிவு அறிவிக்கப்படும்.  நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் இந்த காயத்தால் அவர் அணியில் இடம் பெறுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  இந்த நிலையில், இஷாந்த் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக டெஸ்ட் தொடருக்கு இளம் வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறலாம் என இந்திய கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://www.thepapare.com/ishant-sharma-suffers-ankle-injury-ahead-of-new-zealand-test-series-tamil/
  • ஷேன் வோர்னின் அணிக்கு பயிற்சியளிக்கும் சச்சின் டெண்டுல்கர்   By Mohammed Rishad -   ©Getty image   அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டுவதற்கான நல நிதி கிரிக்கெட் போட்டியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர்களான ரிக்கி பொண்டிங், ஷேன் வோர்ன் ஆகியோர் தலைமையில் இரு அணிகள் பெயரிடப்பட்டுள்ளன.  ரிக்கி பொண்டிங்கின் அணிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் கோர்ட்னி வோல்ஷ் பயிற்சியாளராகவும், ஷேன் வோர்ன் தலைமையிலான அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பேஷ் டி20 லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பாக எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி புஷ்பயர் கிரிக்கெட் பேஷ் என்ற பெயரில் இந்த கண்காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.  காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள தீயணைப்பு வீரர்கள், மீட்பு மற்றும் நிவாரண பணியாளர்கள், தன்னார்வலர்கள், அவசரகால பணியாளர்கள் ஆகியோரை அங்கீகரிக்கும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்படும். இந்தப் போட்டியின் மூலம் கிடைக்கும் டிக்கெட் கட்டணம் அனைத்தும் காட்டுத் தீயை அணைக்க உதவி வரும் ரெட் க்ரொஸ் அமைப்புக்கு வழங்கப்பட உள்ளது. இந்தப் போட்டியில் ரிக்கி பொண்டிங், ஷேன் வோர்ன், ஜஸ்டிங் லேங்கர், ஆடம் கில்கிறிஸ்ட், பிரட் லீ, ஷேன் வொட்ஸன், அலெக்ஸ் பிளாக்வெல், மைக்கல் கிளார்க் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர்;. இந்நிலையில் ரிக்கி பொண்டிங் அணிக்கு சச்சின் டெண்டுல்கரும், ஷேன் வோர்ன் அணிக்கு கோர்ட்னி வோல்ஷும் பயிற்சியாளர்களாகச் செயல்படுவார்கள் என்ற தகவலை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைவர் கெவின் ரொபர்ட்ஸ் வெளியிட்டுள்ளார்.  இதேவேளை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி கென் ரொபர்ட் கூறுகையில், “சச்சின் டெண்டுல்கர், கோர்ட்னி வோல்ஷ் இருவரின் பங்களிப்பையும் நாங்கள் மனமுவந்து வரவேற்கிறோம்.  இருவரும் மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவுஸ்திரேலிய மக்கள் இந்தப் போட்டியை நேரில் பார்க்க வந்து நிதியுதவி அளிக்க வேண்டும்” என தெரிவித்தார்.  அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உருவாகியுள்ள காட்டுத் தீயால் இதுவரை 29 பேர் பலியாகியுள்ளார்கள். 2,000 மக்கள் வீடுகளை இழந்துள்ளார்கள். இந்தக் காட்டுத் தீயில், 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் பலியாகின.  சுமார் 60 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு காட்டுத் தீக்கு இரையாகியுள்ளன. http://www.thepapare.com/sachin-tendulkar-courtney-walsh-to-coach-aussie-bushfire-relief-match-tamil/
  • மத்திய வங்கி மோசடிகள் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து இரண்டு நாள் விவாதம்!        by : Jeyachandran Vithushan மத்திய வங்கி பிணைமுறி ஊழல் மோசடிகள் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றில் இரண்டு நாள் விவாதம் இடம்பெறவுள்ளது. அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறும் முதல் நாடாளுமன்ற அமர்வின்போது இந்த விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பான தடயவியல் கணக்கறிக்கையை சபையில் சமர்பிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று நடவடிக்கை எடுத்திருந்தார். அந்தவகையில் இன்று (புதன்கிழமை) தடயவியல் கணக்காய்வு அறிக்கையின் பிரதியை தான் பெற்றுக்கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில் அடுத்த மாதம் இடம்பெரும் நாடாளுமன்ற அமர்வின்போது இந்த விவகாரம் குறித்து விவாதம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/மத்திய-வங்கி-மோசடிகள்-தொ/
  • பொருளாதார வளர்ச்சியைப் போலவே நல்வாழ்வும் முக்கியமானது: ஸ்ரேர்ஜன்   by : shiyani ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் போலவே அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரமும் முக்கியமாக இருக்க வேண்டும் என ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் தெரிவித்துள்ளார். மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போலவே மக்களின் நல்வாழ்வையும் மூலாதாரமாகக் கேச பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலமாக வெற்றிகரமான தேசமாக இருப்பதன் அர்த்தத்தை ஸ்கொட்லாந்து மறுவரையறை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவீடான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது மக்களின் வாழ்க்கைத் தரத்தை குறைத்து மதிப்பிடுவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஸ்ரேர்ஜன் மற்ற தலைவர்களுடன் இணைந்து நல்வாழ்வுக்கான நிகழ்ச்சிநிரலை ஊக்குவித்தார் ஐஸ்லாந்து பிரதமர் கத்ரின் ஜாகோப்ஸ்டோடிர் மற்றும் நியூசிலாந்து பிரதமர் ஜசிண்டா ஆர்டெர்ன் ஆகியோர் ஸ்ரேர்ஜனுடன் இணைந்து பாரம்பரிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவுகளுக்கு அருகில் புதிய சமூக குறிகாட்டிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். இன்று எடின்பெர்க்கில் இடம்பெறும் நல்வாழ்வு பொருளாதார கூட்டணி மாநாட்டில் பேசிய ஸ்ரேர்ஜன் இந்த பிரச்சினையை சமாளிப்பதில் ஸ்கொட்லாந்து பிரதான பங்கு வகிக்குமெனவும் அனைத்து பொருளாதாரக் கொள்கையின் குறிக்கோளும் நோக்கமும் கூட்டு நல்வாழ்வாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். http://athavannews.com/பொருளாதார-வளர்ச்சியைப்-ப/
  • 10 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த மெத்தியூஸ்     இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் எஞ்சலோ மெத்தியூஸ் தனது 10 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். போட்டியின் நான்காவது நாளான இன்று தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி தற்போது வரையில் 5 விக்கெட் இழப்பிற்கு 349 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது. போட்டியில் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வரும் ஏஞ்சலோ மெத்தியூஸ் 117 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 8 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார். போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்சில் 358 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி சிம்பாப்வேயின் தலைநகர் ஹராரேயில் இடம்பெற்று இடம்பெற்று வருகிறது.   http://tamil.adaderana.lk/news.php?nid=124836