இராணுவ கட்டமைப்பில் மாற்றம் – முன்னாள் புலனாய்வு பணிப்பாளருக்கு நேர்ந்த கதி

Maj-Gen-Shavendra-Silva-300x200.jpg

சிறிலங்கா இராணுவத் தளபதியாக, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா பொறுப்பேற்றதை அடுத்து, இராணுவக் கட்டமைப்பில் அதிரடியாக பல உள்ளக மாற்றங்களைச் செய்து வருகிறார்.

இதற்கமைய, 53 ஆவது டிவிசனில் இருந்த மேஜர் ஜெனரல் அதுல கொடிப்பிலி, இராணுவத் தலைமையக பொது அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு இராணுவத் தலைமையக தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் துஷான் ராஜகுரு, கொழும்பு இராணுவத் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இராணுவத் தலைமையக பொது அதிகாரியாக இருந்த, மேஜர் ஜெனரல் ஜயந்த செனிவிரத்ன, முல்லைத்தீவு இராணுவத் தலைமையக தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல், பிஜே கமகே 53 ஆவது டிவிசனின் தளபதியாகவும், இராணுவ காலாட்படை பயிற்சி பாடசாலை தளபதியாக பிரிகேடியர் திலக் ஹங்கிலிபொலவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிரிகேடியர் சூல கொடிதுவக்கு, 53 ஆவது டிவிசனின் பிரதி கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிகேடியர் நிவுன்ஹெல்ல  பணியாளர் பணிப்பாளராகவும், பிரிகெடியர் ஜயநாத் ஜயவீர இராணுவத் தலைமை அதிகாரி பணியகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சூல கொடிதுவக்கு, 53 ஆவது டிவிசனின் இரண்டாவது கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமை, அவர் பதவியிறக்க நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை காட்டுவதாக தகவல்கள் கூறுகின்றன.

http://www.puthinappalakai.net/2019/09/11/news/39959