Sign in to follow this  
ampanai

சந்திர இரவால் நெருங்கும் ஆபத்து.. மவுனம் சாதிக்கும் விக்ரம் லேண்டர்! : செப். 20க்குள் லேண்டரை செயல்பட வைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்

Recommended Posts

நிலவின் மேற்பரப்பில் விழுந்து கிடக்கும் விக்ரம் லேண்டருக்கு புதிய ஆபத்து காத்திருக்கிறது. செப்டம்பர் 21 முதல் நிலவில் கடும் குளிர் இரவு வர உள்ளது. இதில் விக்ரம் லேண்டர் சிக்கினால் மீண்டும் செயல்பட வாய்ப்பு இல்லை.எனவே அதற்குள் லேண்டருடன் தகவல் தொடர்பு ஏற்ப்டுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் கடுமையாக போராடி வருகின்றனர். லேண்டர் தொடர்பான முழு விவரங்களை இச்செய்தி குறிப்பில் காண்போம்.

*நிலவின் தென் துருவத்தில் சாய்ந்த நிலையில் விழுந்து கிடைக்கும் விக்ரம் லேண்டரை தட்டி எழுப்ப அத்தனை முயற்சிகளையும் முடிக்கிவிட்டுள்ளது இஸ்ரோ.

*லேண்டரை படமெடுத்து அனுப்பிய சந்திராயன் 2 விண்கலம் மூலமே அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

*பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்திற்கு தேவையான தினமும் ஏராளமான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

*அதே போன்று பெங்களூரு அருகே உள்ள பய்யாலாலு என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள 32 மீட்டர் ஆன்டெனா மூலமும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

*இந்த ஆன்டெனா சந்திராயன் 1 திட்டத்திற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். அதன் மூலம் லேண்டருடன் பேச இஸ்ரோ விஞ்ஞானிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

*விக்ரம் லேண்டர் 3 ட்ரான்ஸ்பாண்டர்கள் மற்றும் ஒரு ஆன்டெனாவை கொண்டது. அதன் மேற்பரப்பில் டூ வடிவில் இவை அமைந்துள்ளது. அதன் மூலம் தான் சிக்னலை பெற்று லேண்டர் பதிலளிக்க முடியும். ஆனால் தொடர்பு துண்டிக்கப்பட்டு 100 மணி நேரம் மேலாகியும் லேண்டரில் இருந்து இதுவரை சிக்னல் வரவில்லை.

* அது நல்ல நிலையில் உள்ளதா உடைந்து விட்டதா என்பது குறித்து இதுவரை இஸ்ரோ அறிவிக்காதது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. லேண்டரும் அதன் உள்ளே இருக்கும் ரோவரும் சந்திரனில் ஒரு பகல் பொழுதுக்கு மட்டுமே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

*சந்திரனில் ஒரு பகல் என்பது பூமியின் 14 பகலுக்கு சமம். பகல் பொழுதில் தமக்கு தேவையான ஆற்றலை சூரியனில் இருந்து பெற்றுக் கொள்ளும் வகையில் லேண்டருக்கு வெளியே தகடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

*அதன் படி சூரிய சக்தியை பெற்று லேண்டர் இயங்குவதற்கான 14 நாள் கெடுவில் இதுவரை 5 தினங்கள் முடிந்துவிட்டன. இன்னும் 9 தினங்கள் மட்டுமே உள்ளன.

*அதற்கு லேண்டர் தனக்கு தேவையான ஆற்றலை சூரியனில் இருந்து பெற்று இயங்குமா என்பதில் மர்மம் நீடிக்கிறது. அதன் பின் சந்திரனில் இரவு தொடங்கிவிடும். அது கடும் குளிர் இரவாக இருக்கக்கூடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

*குளிர் இரவில் லேண்டர் சிக்கினால் அது மீண்டும் செயல்படுவதற்கான வாய்ப்பே இல்லை. எனவே அதுவரை விஞ்ஞானிகளின் முயற்சி தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=525229

Share this post


Link to post
Share on other sites

சந்திரயான் 2: விக்ரம் லேண்டர் தொடர்பு ஏற்படுத்தப்படுவது சாத்தியமா? - மயில்சாமி அண்ணாதுரை விவரிக்கிறார்

இந்தியாவின் சந்திரயான் - 2 திட்டத்தின் கீழ் நிலவுக்கு அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் கருவி நிலவின் மேற்பகுதியில் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆனால், அந்தக் கருவியை மீண்டும் செயல்பட வைப்பது சாத்தியமா?

 

விக்ரம் லேண்டர் கருவி நிலவின் மேல் பகுதியில் கிடப்பது ஆர்பிட்டர் மூலம் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், இது தொடர்பாகத் தொழில்நுட்ப ரீதியாகப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

விக்ரம் லேண்டர் கருவி நிலவில் முழுதாக இருப்பது ஆர்பிட்டர் எடுத்த தெர்மல் இமேஜ் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. ஆனால் உண்மையில் அந்தப் படங்கள் எப்படி எடுக்கப்பட்டன?

 

"அந்தப் படங்கள் தெர்மல் இமேஜிங் முறையில் எடுக்கப்பட்டவை என எழுதப்படுகிறது. ஆனால் உண்மையில் அவை ஆப்டிகல் முறையில்தான் எடுக்கப்பட்டவை. நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டரில் இரண்டு கேமராக்கள் இருக்கின்றன. ஒன்று ஆர்பிட்டர் ஹை ரெசல்யூஷன் (OHRC) கேமரா. மற்றொன்று டெரைன் மேப்பிங் கேமரா. 30 சென்டிமீட்டர் ரெசல்யூஷன் கொண்ட உயர்தர படங்களை இந்த ஓஎச்ஆர்சி எடுக்கும். இது ஒரு வழக்கமான ஆனால், உயர்ந்தபட்ச ரெசல்யூஷனைக் கொண்ட கேமரா, அவ்வளவுதான். இந்த ஓஎச்ஆர்சி நிலவின் தரைப்பகுதியைப் படம் பிடிக்கும். அப்படித்தான் இந்த லேண்டர் கீழே இருப்பது தெரியவந்தது" என்கிறார் சந்திரயான் - 1 திட்டத்தின் முன்னாள் இயக்குநரான மயில்சாமி அண்ணாதுரை.

விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை ஆர்பிட்டரில் உள்ள கேமரா படம் எடுத்துவிட்டதாகக் கூறி சில படங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுவருகின்றன. உண்மையில் விக்ரம் லேண்டரின் மிகத் தெளிவான புகைப்படத்தைப் பெற வாய்ப்புள்ளதா?

"இல்லை. அந்தப் பகுதியில் சூரிய ஒளி நேரடியாக விழாது. சாய்வாகத்தான் விழும். நீங்கள் கூகுள் மேப்களில் பார்க்கும்போது அவை தெளிவாகத் தெரியக் காரணம், அவை சூரிய ஒளி நேரடியாக விழும்போது எடுக்கப்பட்டவை என்பதுதான். ஆனால், இங்கே சூரிய ஒளி சாய்வாகத்தான் விழும். அதனால், தெளிவில்லாத படம்தான் கிடைக்கும். அதாவது ஏற்கனவே எடுக்கப்பட்ட அந்தப் பகுதியின் படத்தில் எந்தப் பொருளும் இருக்காது. இப்போது அங்கே ஒரு பொருள் இருக்கிறது. அப்படித்தான் இது கண்டறியப்படுகிறது. இந்த ஆர்பிட்டர் நிலவிலிருந்து 100 கி.மீ தூரத்தில் சந்திரனைச் சுற்றிவருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்கிறார் மயில்சாமி.

நிலவின் தரையில் கிடக்கும் லாண்டரைத் தொடர்பு கொண்ட தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. 2.1 கி.மீ. உயரத்திலிருந்து லாண்டர் கீழே விழுந்துவிட்ட நிலையில் இது சாத்தியமா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

"இந்த லாண்டர் கீழே விழவில்லையென்றே வைத்துக்கொள்வோம். ஆனால், இறங்க வேண்டிய இடத்திற்குப் பதிலாக வேறு ஒரு இடத்தில் இறங்கிவிட்டால்கூட அதனைத் தொடர்புகொள்வது இயலாமல் போகலாம். லாண்டரை நேரடியாக கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொடர்பு கொள்ள முடியாது. கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஆர்பிட்டரைத் தொடர்பு கொள்ள வேண்டும். ஆர்பிட்டர் சிக்னல்களை லாண்டருக்கு அனுப்பும். பிறகு லாண்டர் சிக்னல்களை ஆர்பிட்டருக்கு அனுப்பும். ஆர்பிட்டர் பூமிக்கு அனுப்பும். இதுதான் முறை.

இப்போது வேறு ஒரு இடத்தில் லாண்டர் இருப்பது தெரியவந்திருக்கிறது. அதனுடன் தொடர்புகொள்ள முடியுமா என்பதை இரண்டு, மூன்று காரணிகளை வைத்துத்தான் தீர்மானிக்க முடியும். அதாவது, அந்த லாண்டர் பவர் - ஆன் நிலையில் இருக்க வேண்டும். லாண்டர் ஆண்டனா தொடர்பு கொள்ளும் திசையை நோக்கி இருக்க வேண்டும். ஆண்டனாவோ, லாண்டரோ சேதமடைந்திருக்கக்கூடாது.

நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர், லாண்டர் கிடக்கும் இடத்திற்கு மேல் 5-10 நிமிடங்கள்தான் வரும். அதற்குள் தகவல் தொடர்பு கிடைத்தால் உண்டு" என விளக்குகிறார் மயில்சாமி அண்ணாதுரை.

லாண்டர் நிலவில் விழுந்துவிட்டாலும்கூட, எப்படியாவது அதனுடன் தொடர்பு கிடைத்துவிட வேண்டும் என்பதுதான் பலரது வேண்டுதலாக இருக்கிறது.

"இப்படிப் பல முறை நடந்திருக்கிறது. ஏதாவது ஒரு கிரகத்திற்கு ஒரு கருவியை அனுப்பினால், அந்தக் கருவி பத்திரமாக தரையிறங்கியிருக்கும். ஆனால், தொடர்பு இல்லாமல் போயிருக்கும். பிறகு சில நாட்கள் கழித்து தொடர்பு கிடைக்கும். இது செயற்கைக்கோள்களில் அடிக்கடி நடக்கும். பல முறை இந்தியா உட்பட பல நாடுகள் அனுப்பிய செயற்கைக்கோள்கள் சுற்றுவட்டப் பாதையில் நின்றவுடன் சமிக்ஞை எதையும் அனுப்பாது. ஆனால், சில நாட்கள் கழித்து சமிக்ஞை கிடைக்க ஆரம்பிக்கும். நாம் தொடர்ந்து அந்த செயற்கைக்கோளுக்கு சமிக்ஞையை அனுப்ப வேண்டும். அதைச் செயல்படவைக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். சில சமயங்களில் அதற்குப் பலன் கிடைத்திருக்கிறது. ஆனால், இதைப் பல காரணிகள் தீர்மானிக்கும்" என்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.

நிலவில் விழுந்துவிட்ட லாண்டருடன் தொடர்பை ஏற்படுத்த அடுத்த பதினான்கு நாட்கள் முயற்சிக்கப் போவதாக இஸ்ரோ தலைவர் சிவன் சொல்லியிருக்கிறார். "லாண்டரைப் பொறுத்தவரை சூரியன் தென்துருவப் பகுதிக்கு வரும் முதல் நாளில் தரையிறங்கும். நிலவில் ஒரு சூரிய நாள் என்பது பூமியில் 14 நாட்கள். இந்த பதினான்கு நாட்களுக்குப் பிறகு அங்கு சூரிய ஒளி இருக்காது. ஆகவே அந்த லாண்டர் செயல்படாது. அதனால்தான் பதினான்கு நாட்களுக்குள் அதைச் செயல்படவைக்க முயற்சிகள் நடக்கின்றன. அந்தப் பகுதி இருளாகிவிட்டால் அந்தக் கருவியின் சர்க்யூட்கள் அணைந்துவிடும். பிறகு எப்படி தொடர்புகொள்ள முடியும்? அந்தப் பகுதிக்கு மீண்டும் சூரிய ஒளி கிடைக்கும்போது சர்க்யூட் மறுபடியும் இயக்கத்தைத் தொடருமா என்பதையெல்லாம் நிச்சயமாக சொல்ல முடியாது" என விளக்கமளிக்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.

லாண்டர் நிலவில் தரையிறங்கி நான்கு நாட்கள் கடந்துவிட்ட நிலையில், லாண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகளை இஸ்ரோ தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.

இஸ்ரோவின் முதல் தலைவர் டாக்டர் விக்ரம் ஏ சாராபாயின் பெயர்சூட்டப்பட்ட இந்த லாண்டர், 1471 கிலோகிராம் எடையைக் கொண்டது. 14 நாட்கள் இயங்கக்கூடியது. இதிலிருந்து கிடைக்கும் சமிக்ஞைகள் பெங்களூருக்கு அருகில் உள்ள பயலாலுவில் உள்ள இந்தியன் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் மையத்தில் பெறப்பட்டு ஆராயப்படும். இந்த லாண்டர் நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டருடனும் தொடர்புகொள்ளும்.

இந்த லாண்டரில் பிரக்யான் என்ற உலவி வாகனமும் வைக்கப்பட்டிருந்தது. நிலவை நெருங்கியவுடன் மேன்ஸினஸ் சி மற்றும் சிம்பெலியஸ் என் என்ற இரு பள்ளத்தாக்குகளுக்கு நடுவில் உள்ள இடத்தில் வினாடிக்கு 2 மீட்டர் வேகத்தில் தரையிறங்கும்படி இது வடிவமைக்கப்பட்டிருந்தது.

https://www.bbc.com/tamil/science-49663994

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர்; ஐரோப்பிய விண்வெளி மையம் எச்சரிக்கை

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்- 2 விண்கலத்தை இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) கடந்த ஜூன் 22 ஆம் திகதி ெராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து, சந்திரனில் இருந்து 35 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்த விக்ரம் லேண்டர் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரை இறங்க முயன்றது. கீழ் நோக்கி வந்து கொண்டிருந்த விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது, அதற்கும் பெங்களூரிலுள்ள இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவ பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் கவனமாக தரை இறக்குவதுதான் சந்திரயான்- 2 திட்டத்தின் முக்கியமான பணி ஆகும். சமிக்ஞை மூலம், மெதுவாக தரை இறக்க விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில், விக்ரம் லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது.

விக்ரம் லேண்டரின் கதி என்ன ஆனது என்று தெரியாததால் அதை கண்டுபிடிக்கும் முயற்சியிலும், அதனுடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுட்டு வருகின்றனர். நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் எடுத்து அனுப்பிய தெர்மல் இமேஜ் மூலம் விக்ரம் லேண்டர் சேதம் அடையாமலும் ஒரு பக்கமாக சாய்வாக இருப்பதும் கண்டறியப்பட்டது.

விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து கிடக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆர்பிட்டர் உதவியுடன் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளது.

விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. லேண்டர் விழுந்துள்ள தென் துருவத்தில் சில பகுதிகள் கொஞ்சம் கூட சூரியனே படாத இடங்கள் ஆகும். இங்கு மிக மோசமான உறை நிலை காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தென் துருவம் முழுக்க ஐஸ் குவியல்கள் இருக்கும். சூரிய வெளிச்சம் படாத நிலவின் தென் துருவ பகுதியிலுள்ள பள்ளங்களில்100 மில்லியன் தொன் நீர் இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ள செய்தியில், விக்ரம் லேண்டர் ஆபத்தான இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சந்திரனின் தென் துருவப் பகுதிக்கு ஹெராக்கிள்ஸ் ரோபோடிக்கை அனுப்புவதற்கான பணிகளில் தயாராவதற்கு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தற்போது கனடா மற்றும் ஜப்பானிய விண்வெளி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

https://www.thinakaran.lk/2019/09/11/இந்தியா/40120/ஆபத்தான-இடத்தில்-விக்ரம்-லேண்டர்-ஐரோப்பிய-விண்வெளி-மையம்-எச்சரிக்கை

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • த.வி.பு தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பது உண்மை என்றால் இனி ஒரு போராட்டம் சாத்தியமில்லை. இங்க அரசியல் தலைமைகளே சரியில்லாதபோது ஆயுத போரை கனவிலும் நினைக்கமாட்டார்கள். தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை தான் மிஞ்சும்.
  • வன்னியில் குர்திஸ்போராளிகளுக்கு புலிகள் பயிற்சி; பிரபாகரனை பெருமைப்படுத்தும் குர்திஸ்தானியர் Posted on November 10, 2019 by செய்தியாளர் பூங்குன்றன்   குருதிஸ்தான் உணவக உரிமையாளர், தலைவர் பிரபாகரன் அவர்களையும் தமிழ்மொழியையும் போற்றிப் புகழுகிறார்…. நேற்று ஒரு மாறுதலுக்காக நானும் மகன் தமிழ்கோவும் குருதிஸ்தான் உணவகத்துக்கு சாப்பிடப் போயிருந்தோம். குளிர் அதிகாமாக இருந்தது. நாங்கள் சற்று நடுக்கத்துடன் இருந்தோம். ‘தலைவர் பிரபாகரன்’ பெயரை உச்சரியுங்கள் குளிர் கூதல் எல்லாம் வெருண்டு ஓடிவிடும் என்றார்….. தொடர்ந்து பேசுகையில் அவர் ஒரு குருதிஸ்தான் குடிமகன். பெயர் நீயூஸ்ராட் இனமானம் மிக்கவர். விடுதலைப் புலிகள் வன்னியில் வைத்து பலநூறு குருதிஸ்தான் போராளிகளுக்கு பயிற்சி வழங்கியதாகவும் அப்படிப் பயிற்சிபெற்ற போராளிகளை ‘வன்னியில் பயிற்சிபெற்றவர்’ என பெருமிதமாக தங்கள் சமூகம் அழைப்பதாகவும் சொன்னார். அவர்களில் பலர் தற்போது தளபதிகளாக இருப்பதாகவும் ‘பால்ராஜ் வியூகம்’ என்ற பாடம் கூட தங்கள் போராளிகளுக்கு கற்பிக்கப்படுபதாகவும் சொன்னார். தமிழ்மொழி மொழிகளின் தாய்…… தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழர்களுக்கு மட்டும் தலைவர் அல்ல ஒடுக்கபடும் அனைவருக்குமானவர். மாவீரர் நினைவு நிகழ்வுகளுக்கு குருதிஸ் மக்களையும் அழைக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேற்படி உணவகம் 803 மார்கம் வீதி ஸ்காபுறோவில் அமைந்திருக்கிறது. அருமையான சாப்பாடு. ஒரு மாறுதலை விரும்புபவர்கள் மேற்படி உணவகத்துக்கு செல்லாம். எழுதியவர் – திரு பகவத் சிங்கம் Thiru B Singam Posted in சிறப்புச் செய்திகள்Tagged குர்திஸ், குர்திஸ்தான், தமிழீழம், பிரபாகரன், விடுதலைப் புலிகள்
  • அரசாங்கம்- புலிகளுக்கு இடையிலான மோதலை சிங்கள, தமிழ் மோதலாக சித்தரித்தமை தவறு: நாமல் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான மோதலாக சித்தரிக்கப்பட்டமை பிழையான விடயமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளிவிவகார கொள்கை குறித்து முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கை, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் மத்தியிலான உறவுகள் குறித்து பிழையாக அர்த்தப்படுத்தப்பட்டதுடன் தலைவர்களிற்கும் பிழையான செய்தி தெரிவிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். இந்திய எல்லைக்கப்பால் உள்ள பிராந்திய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதில் இந்திய பிரதமர் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் இதனை தாங்களும் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்களின் ஆணையை ஏற்றுக்கொண்டமைக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ, இலங்கையில் ஸ்திரமான அரசாங்கம் அமைவது இந்தியாவிற்கும் சிறந்த விடயம் என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தமிழ்நாடு அரசியல்வாதிகளில் சிலர் தங்கள் தனிப்பட்ட நலன்களிற்காக இலங்கை விவகாரத்தை பயன்படுத்துகின்றனர் என நாமல் ராஜபக்ஷ மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். அவர்கள் இலங்கை தமிழர்களுக்காக என்ன செய்துவிட்டார்கள் என கேள்வியெழுப்பியுள்ள அவர், இந்த அரசியல்வாதிகள் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு ஏதாவது செய்துள்ளார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை 30 வருடங்களாக யுத்தத்தில் ஈடுபட்டிருந்தது என்றும் தாங்கள் விடுதலைப்புலிகளிற்கு எதிராக போராடியபோதிலும் துரதிஸ்டவசமாக இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் எதிரான மோதல் சிங்களவர்களிற்கும் தமிழர்களிற்கும் எதிரான மோதலாக சித்தரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள நாமல், இது முற்றிலும் பிழையானது எனவும் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/அரசாங்கம்-புலிகளுக்கு-இ/
  • தமிழில் தேசிய கீதம் இசைக்க தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை! தேசிய கீதத்தினை சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் தேசிய கீதம் இனிவரும் காலங்களில் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிருந்தன. எனினும் குறித்த தகவல்களில் உண்மை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்றின் ஊடாகவே நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இந்த தகவலினை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘புதிய ஜனாதிபதி தமிழில் தேசிய கீதம் பாடுவதை தடை செய்து எந்தவொரு பணிப்புரையும் விடுக்கவில்லை என வாசுதேவ நாணயக்கார எம்பி என்னிடம், ‘என்ன இது, வாசு?’ என சற்றுமுன் அவரிடம் நான் கேட்ட போது தெரிவித்தார்.’ எனக் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/தமிழில்-தேசிய-கீதம்-இசைக/
  • புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் 6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முன்பாக அவர்கள் இன்று (வியாழக்கிழமை) பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி 6 மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் விபரம், மேல் மாகாணம் – டொக்டர் சீதா அரபேபொல மத்திய மாகாணம் – லலித் யு கமகே ஊவா மாகாணம் – ராஜா கொல்லூரே தென் மாகாணம் – டொக்டர் வில்லி கமகே வடமேல் மாகாண – ஏ.ஜே.எம் முஸம்மில் சப்ரகமுவ மாகாணம் – டிகிரி கொப்பேகடுவ 6 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளபோதிலும் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்படவில்லையென்பது சுட்டிக்காட்டத்தக்கது. வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் உட்பட அனைத்து ஆளுநர்களையும் தங்கள் பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று அறிவுறுத்தல் விடுத்திருந்தார். இதனையடுத்து வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து ஆளுநர்களும் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தனர். அந்தவகையில் மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், மத்திய மாகாண ஆளுநர் ரஜித கீர்த்தி தென்னகோன், ஊவா மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன, தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர, கிழக்கு மாகாண ஆளுநர் விஜயலால் டி சில்வா, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, வடமேல் மாகாண ஆளுநர்பசேல ஜயரத்ன சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க ஆகியோர் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/புதிய-ஆளுநர்கள்-பதவிப்-ப/