• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
பிழம்பு

9/11 அமெரிக்கா இரட்டை கோபுரம் உண்மையில் விமானம் தாக்கித்தான் இடிந்ததா? - சதி பின்னணிகள்: விரிவான தகவல்கள்

Recommended Posts

 
9/11 இரட்டை கோபுரம் உண்மையில் விமானம் தாக்கித்தான் இடிந்ததா? - சதி பின்னணிகள்படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவில் செப்டம்பர் 11 ஆம் தேதி தாக்குதல் நடந்து 18 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால் சதி பின்னணிகள் இன்னும் மறந்து போய்விடவில்லை என்கிறார் மைக் ருடின்.

இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பிறகு எண்ணற்ற அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியிடப் பட்டுள்ளன. ஆனால் ஒரு அனுமானத்தில், ஒரு ஆவணத்தின் மீது சந்தேகம் எழுந்தால், ``பதில் அளிக்கப்படாத மற்றொரு கேள்விக்கு'' கவனம் மாறிவிடுகிறது.

9/11 தாக்குதலின் பின்னணி பற்றி இணையத்தில் சுழற்சியில் உள்ள மிகவும் பிரபலமான ஐந்து அறிக்கைகள் இங்கே தரப் பட்டுள்ளன.

கடத்தப்பட்ட விமானங்களை இடைமறிக்கத் தவறியது

கேள்வி: கடத்தப்பட்ட நான்கு விமானங்களில் ஒன்றைக்கூட, உலகின் வல்லமைமிக்க விமானப் படையால் ஏன் இடைமறிக்க முடியாமல் போனது?

சதி பின்னணி ஆய்வாளர்கள் கூறுவது: விமானங்களை இடைமறிக்க வேண்டாம் என்றும் கீழேயே இருக்குமாறும் அப்போதைய அமெரிக்கத் துணை அதிபர் டிக் செனே ராணுவத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த 9/11 தாக்குதலின் விளைவாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரின் போர் நடவடிக்கைகைள் ஆரம்பமாகின.படத்தின் காப்புரிமை Getty Images

அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கூறுவது: இது மிகவும் அசாதாரணமான, உள்ளே வன்முறையாளர்கள் உள்ள நிலையில் நடந்த பல விமானங்களின் கடத்தல், விமானத்தைக் கண்டுபிடிக்கும் டிரான்ஸ்பான்டர்கள் ஆப் செய்யப் பட்டிருந்தன அல்லது மாற்றப் பட்டிருந்தன.

இன்னும் சொல்லப் போனால், அன்றைக்கு அமெரிக்க விமானப் படைத் தளத்தில், வழக்கமான ராணுவப் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

விமானக் கட்டுப்பாட்டு அதிகாரி காலின் ஸ்காக்கின்ஸ் தொடர்ந்து ராணுவத்துடன் தொடர்பிலிருந்தார். பதில் கிடைப்பதில் குறைபாடு எதையும் அவர் உணரவில்லை. பயணிகள் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு (FAA) மற்றும் ராணுவ விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களுக்கு இடையில் தகவல் தொடர்பில் குறைபாடு மற்றும் குழப்பம் இருந்தது.

ராணுவத்தின் கருவிகளும் பழைய காலத்தைச் சேர்ந்தவையாகிவிட்டன, மறைமுகப் போர் அச்சுறுத்தலைக் கையாள்வதற்காகக் கடல் பரப்பின் மீது கண்காணிக்கும் வகையில் தான் அவை வடிவமைக்கப் பட்டிருந்தன.

இரட்டைக் கோபுரங்கள் தகர்ப்பு

கேள்வி: இரட்டைக் கோபுரங்களில் சில தளங்களில் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மட்டும் தீ எரிந்த பிறகு, அதன் காலடியிலேயே எப்படிச் சரிந்தது?

சதி பின்னணி ஆய்வாளர்கள் கூறுவது: கட்டுப்படுத்தப்பட்ட இடித்தல் செயல்பாடுகள் மூலம் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப் பட்டுள்ளன. அதிவிரைவாக நடந்த இடிப்புகளின் கோட்பாடுகளின்படி, ஒப்பீட்டளவில் மிகக் குறுகிய அவகாசம் எரிந்த தீ விபத்து சம்பவங்களில் (உலக வர்த்தக மையம் 2-ல் 56 நிமிடங்கள், உலக வர்த்தக மையம் 1-ல் 102 நிமிடங்கள்), இடிந்து விழுவதற்கு முன்னதாக குண்டுவெடிப்பு சப்தங்கள் கேட்டதாகவும், வன்முறைக்கான சில வெளிப்பாடுகளைப் பல தளங்களின் ஜன்னல்களில் இடிபாடுகளுக்குக் கீழே காண முடிந்தது என்றும் கூறுகிறார்கள்.

இரட்டை கோபுரம்படத்தின் காப்புரிமை Getty Images

அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கூறுவது: தேசிய தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட் விரிவாக ஆய்வு நடத்தியதில், அந்த விமானங்கள் கட்டடத்தை இடித்து, ஆதாரமான தூண்களைச் சேதப்படுத்தி விட்டன என்றும் தீ தடுப்பு வசதிகளைத் துண்டித்துவிட்டன என்றும் கண்டறியப் பட்டுள்ளது.

சுமார் 10,000 கேளன்கள் அளவுக்கு விமான எரிபொருள் பல தளங்களில் தெரித்து விழுந்ததால், பரவலாக தீ பிடித்தது. 1,000 டிகிரி சென்டிகிரேடு வரையிலான வெப்பம் காரணமாகத் தளங்கள் அசைந்து கொடுத்தன, தூண்கள் வளைந்துவிட்டன, அதனால் ``வெடி சப்தம்'' ஏற்பட்டிருக்கிறது.

9/11 இரட்டை கோபுரம் உண்மையில் விமானம் தாக்கித்தான் இடிந்ததா? - சதி பின்னணிகள்படத்தின் காப்புரிமை Getty Images

தளங்களின் பளு கீழே இறங்கியதால், தூண்கள் வடிவமைக்கப்பட்ட திறனைக் காட்டிலும் அதிகமான எடையளவுக்கு நகரும் விசை தாக்கியுள்ளது. தளங்கள் இடிந்த போது இடிபாடுகள் ஜன்னல் வழியாக வீசி எறியப்பட்டுள்ளன.

கட்டுப்படுத்தப்பட்ட இடித்தல் நிகழ்வுகளின் போது கீழ்த் தளத்திலிருந்து மேல் நோக்கி இடிபடும். இங்கு மேலே இருந்து இடியத் தொடங்கியுள்ளது.

மனிதர்களைக் கொண்டு தேடுதல் பணி மேற்கொண்டபோதிலும், வெடிபொருள்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சுவர்கள் அல்லது தூண்களில் முன்கூட்டியே வெட்டுப் பள்ளங்கள் ஏதும் ஏற்படுத்தியதற்கான தடயங்களும் இல்லை. கட்டுப்படுத்தப்பட்ட இடித்தலில் இவ்வாறு வெட்டுப் பள்ளம் ஏற்படுத்துவது வழக்கம்.

பென்டகன் மீதான தாக்குதல்

கேள்வி: தொழில்முறையில் இல்லாத ஒரு பைலட், வர்த்தக ரீதியில் சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு விமானத்தைச் சிக்கலான வளைவுகளாக இயக்கி, உலகின் வல்லமை மிக்க ராணுவத்தின் தலைமையகத்தின் மீது எப்படி மோதச் செய்திருக்க முடியும்? கடத்தப்பட்டதாக முதலாவது தகவல் வெளியாகி 78 நிமிடங்களில், தடயங்கள் ஏதும் இல்லாமல் இதை எப்படிச் செய்திருக்க முடியும்?

நியூயார்க் 9/11 இரட்டை கோபுரத் தாக்குதல்படத்தின் காப்புரிமை JASON SCOTT/TEXTFILES

சதி பின்னணி ஆய்வாளர்கள் கூறுவது: கட்டடத்தின் மீது வர்த்தக சேவையிலிருந்த போயிங் 77 விமானம் மோதவில்லை. மாறாக, ஒரு சிறிய ஏவுகணை, ஒரு சிறிய விமானம் அல்லது ஆளில்லா விமானம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால் அமெரிக்க விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் விமானம் 77 தான் கட்டடத்தின் மீது மோதியது என்பதற்கான ஆதாரம் அழுத்தமாக உணரப்பட்டதால், அணுகுவதற்குக் கஷ்டமாக இருந்த வளைவு நெளிவான விமானப் பாதை பற்றிய கேள்விகளுக்குக் கவனம் திசை திருப்பப் பட்டது. அது அல்-கொய்த அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இல்லை, பென்டகனின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது என்ற வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன.

அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கூறுவது: சம்பவம் நடந்த இடத்திலிருந்து விமானத்தின் சிதறிய பாகங்களும், கருப்புப் பெட்டிகளும் மீட்கப் பட்டுள்ளன. அவை எப்.பி.ஐ. வசம் வைக்கப் பட்டுள்ளன.

9/11 இரட்டை கோபுர தாக்குதல்: அன்று நடந்து என்ன? - புகைப்படங்களின் சாட்சியம்படத்தின் காப்புரிமை Getty Images

ஆரம்பத்தில் வெளியான விடியோக்களில், சிதறிய பாகங்கள் அதிகம் காணப்படவில்லை என்றாலும், பின்னர் கிடைத்த விடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் விமானத்தின் பாகங்களும், விமானம் சென்ற பாதையும், உடைந்த விளக்குக் கம்பங்களும் தெரிய வந்துள்ளன.

விமான அலுவலர்கள் மற்றும் பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டு, நல்லமுறையில் டி.என்.ஏ. பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. பென்டகனை விமானம் தாக்கியதைப் பார்த்த சாட்சிகளும் உள்ளனர்.

நான்காவது விமானம் - யுனைடெட் விமானச்சேவை விமானம் 93

கேள்வி: தாக்குதல் நடந்தபெனிசில்வேனியா ஷான்ஸ்விலே இடம் அவ்வளவு சிறியதாக இருந்ததும், விமானத்தின் சிதறிய பாகங்கள் தென்படாமல் போனதும் ஏன்?

சதி பின்னணி ஆய்வாளர்கள் கூறுவது: யுனைடெட் ஏர்லைன் விமானம் 93 ஏவுகணையால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதனுடைய சிதறிய பாகங்கள் பெருமளவு பரப்பளவில் சிதறி விழுந்தன.

நியூயார்க் 9/11 இரட்டை கோபுரத் தாக்குதல்: இதுவரை காணாத புகைப்படங்கள்படத்தின் காப்புரிமை JASON SCOTT/TEXTFILES

அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கூறுவது: விமானத்தின் சிதறிய பாகங்களின் தெளிவான புகைப்படங்களும், விமானி அறையின் ஒலிப்பதிவுக் கருவியும் கிடைத்துள்ளன. விமானத்தில் பயணிகள் எதிர்ப்பில் ஈடுபட்டதாகவும், அதனால் கடத்தல்காரர்கள் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தினார்கள் என்பதும் அவற்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

20 நிமிடங்களுக்குப் பிறகு சடலங்கள் ஏதும் வராததால், பிரேதப் பரிசோதனையைத் தாம் நிறுத்திவிட்டதாக, உள்ளூர் பிரேத பரிசோதனையாளர் வால்லி மில்லர் கூறிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட அடிப்படையில் மற்றொரு வாதம் முன்வைக்கப் படுகிறது. அது விமான விபத்து என்று சீக்கிரம் தாம் தெரிந்து கொண்டதாகவும், பலியான பலருக்குப் பெரிய அளவில் இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டியிருக்கும் என்று நினைத்ததாகவும் கூட அவர் கூறியிருந்தார்.

9/11 இரட்டை கோபுரம் உண்மையில் விமானம் தாக்கித்தான் இடிந்ததா? - சதி பின்னணிகள்படத்தின் காப்புரிமை Getty Images

மேலும், வர்த்தக ரீதியிலான சேவையில் ஈடுபட்டிருந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்துமாறு விமானப் படைக்கு ராணுவம் ஒருபோதும் உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.

உலக வர்த்தக மைய கட்டடம் 7 இடிந்தது

கேள்வி: இரும்பு பிரேம்களைக் கொண்ட விண்ணை முட்டும் வேறு எந்தக் கட்டடமும் தீயின் காரணமாக இடிந்து விழாத போது, விமானத்தால் தாக்கப்படாத, விண்ணை முட்டும் அளவுக்கிருந்த கட்டடம் அவ்வளவு விரைவாக, சமச்சீராக எப்படி இடிந்திருக்கும்?

சதி பின்னணி ஆய்வாளர்கள் கூறுவது: உலக வர்த்தக மையம் கட்டடம் 7 கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடிமருந்துகள் மற்றும் தீயிடுதல் மூலமாக இடிக்கப் பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ``இழுத்து விடுங்கள்'' என்று அதன் உரிமையாளர் லார்ரி சில்வர்ஸ்டெயின் தொலைக்காட்சி நேர்காணலில் கூறியதன் மீது கவனம் இருந்தது. ஆனால், உண்மையில், தீயணைப்பு வீரர்களை வெளியே கொண்டு வருவது பற்றித் தான் அவர் அப்படிக் கூறியிருக்கிறார். (வெடிபொருள்களை வெடிக்கச் செய்வதற்கு, கட்டட இடிப்பு நிபுணர்கள் ``இழுத்து விடுங்கள்'' என்ற வார்த்தைகளை வழக்கமாகப் பயன்படுத்துவது இல்லை.

நியூயார்க் 9/11 இரட்டை கோபுரத் தாக்குதல்:படத்தின் காப்புரிமை JASON SCOTT/TEXTFILES

இப்போது அது இடிந்து விழுந்த வேகத்தின் மீது கவனம் செலுத்தப் படுகிறது. 2.25 விநாடிகளில், தடை ஏதுவுமின்றி மிக இயல்பாகக் கட்டடம் இடிந்து விழுந்துவிட்டது. வெடிபொருள்களால் மட்டும் தான் இவ்வளவு வேகமான, சமச்சீரான முறையில் இடித்துச் சரிய வைக்க முடியும் என்ற வாதம் முன்வைக்கப் படுகிறது.

அதிகாரப்பூர்வ தகவல் பற்றி சந்தேகம் கொண்டிருக்கும் சில விஞ்ஞானிகள், சம்பவ இடத்திலிருந்து நான்கு புழுதி மாதிரிகளைப் பரிசோதனை செய்து பார்த்தனர். சூடாகும் போது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தெர்மைட் பொருட்கள் அங்கே இருந்ததற்கான தடயங்கள் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். டன் கணக்கிலான தெர்மைட் பொருட்களும், வழக்கமான வெடிபொருள்களும் உலக வர்த்தக மையம் கட்டடம் 7-ன் உள்ளே மட்டுமின்றி, இரட்டைக் கோபுரத்தின் உள்ளும் துளையிட்டு வைக்கப் பட்டுள்ளன என்று அவர்கள் கூறுகின்றனர்.

அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கூறுவது: தேசிய தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட் மூன்று ஆண்டுகள் ஆய்வு செய்த பிறகு, கட்டுப்படுத்த முடியாத தீயினால் கட்டடம் இடிந்து விழுந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளது. அருகில் உள்ள வடக்கு கோபுரம் இடியத் தொடங்கியதும் இது தொடங்கியது. அந்தக் கட்டடத்தில் ஏழு மணி நேரம் தீ எரிந்தது.

அவசர நேரத்தில் தண்ணீர் தெளிக்கும் முறைமைக்குத் தண்ணீர் கொண்டு வரும் இணைப்புகள் துண்டிக்கப் பட்டுவிட்டன. வெடிபொருள்கள் இருந்ததற்கான தடயங்கள் எதுவும் காணப்படவில்லை. கட்டுப்படுத்தப்பட்ட இடித்தல் பணி நடக்கும்போது கேட்பதைப் போன்ற தொடர்ச்சியான மிகவும் பலமான சப்தம் எதுவும் பதிவாகவில்லை. மேலும், ``தெர்மைட் பொருட்கள்'' குறித்த சந்தேகத்துக்கு வேறு காரணமும் உள்ளது. அது பிரமர் சாயத்தின் ஒரு வகை தான். உலக வர்த்தக மையத்தில் 1,200,000 டன்கள் அளவுக்குக் கட்டுமானப் பொருட்கள் நொறுங்கிக் கிடந்தன. அவற்றில் (பெருமளவு என்று இல்லாவிட்டாலும்) பெரும்பாலான மினரல்கள் இருந்தன. புழுதிகளை மிக விரிவாக ஆய்வு செய்து பார்த்ததில், தெர்மைட் வெடிபொருட்கள் இருந்ததற்கான தடயங்கள் ஏதும் கிடையாது என்று அமெரிக்கப் புவியியல் சர்வே அமைப்பு அறிக்கையிலும் மற்றும் ஆர்.ஜே. லீ அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/global-49663989

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • உங்களுக்கு தெரிஞ்சது மட்டும்தான் உண்மை என்று நினைக்காமல் முதல்ல நீங்களெல்லோ எல்லாத்தையும் கருத்துல எடுத்து கருத்தெழுதியிருக்கோணும். வைத்தியர்களோ பொறியலாளர்களோ வேலை செய்யும் நேரத்தில வெளிவேலை செய்ய ஏலா. ஆனா அப்பிடி சட்டவிரோதமான செய்றாக்களை நீங்க பாத்திருக்கலாம். ஆனா இவர்கள் தங்கட வசதிக்கேற்ப ஏனைய நேரங்களில வெளிவேலைகளை பிளான் பண்ணலாம். ஆனா புறபஸ்ஸர் மாணவர்களை இரவுல வந்து சந்திங்கோ என்று சொல்லேலா. நீதிமன்று மாணவர் வசதி பார்த்து வழக்குத் தவணை கொடுக்காது. பிறகு இவர் மாணவர்களை அம்போ என்று விட்டுட்டு கோட்டிலதான் குடியிருப்பார்.  
  • வேற யார் சேர்த்துக்கொள்ள போக்கினம்? புதுசா ஒரு கட்சியை தொடங்கலாம்.
  • பிறி­தொரு கட்­டத்தை நோக்கி  நகர்த்­தப்­பட்­டுள்­ள சுவிஸ் தூத­ரக பெண் அதி­காரி விவ­காரம் (எம். எப்.எம். பஸீர்)  கைது செய்­யப்­பட்டு   பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள சுவிட்சர்­லாந்து தூத­ர­கத்தின் விசா பிரிவின் சிரேஷ்ட குடி­வ­ரவு, குடி­ய­கல்வு அதி­காரி  கானியா பெனிஸ்ர் பிரான்சிஸ் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் தொலை­பேசி இலக்­கங்­களை மையப்­ப­டுத்­திய பிறி­தொரு கட்­டத்தை நோக்கி  நகர்த்­தப்­பட்­டுள்­ளன.   குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்தின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர்  மெரில் ரஞ்­சனின் கீழ்  மனித படு­கொ­லைகள்  தொடர்­பான  விசா­ரணை பிரிவின் பொறுப்­ப­தி­காரி  பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரஞ்சத் முன­சிங்க, பொலிஸ் பரி­சோ­தகர் .இக்பால்  உள்­ளிட்டோர்  கொழும்பு  பிர­தான நீதி­வான  லங்கா ஜய­ரத்­ன­விற்கு  மேல­திக  விசா­ரணை அறிக்­கை­யொன்றின் ஊடாக  இதனை  வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். கானியா பெனிஸ்டர்  விவ­காரம் குறித்த   வழக்கு விசா­ரணை  நேற்று  கொழும்பு  பிர­தான நீதிவான்  லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.  இதன்­போது தற்­போது   சுவிட்­ஸர்­லாந்­துக்கு  அடைக்­கலம் தேடிச்­சென்­றுள்ள   சி. ஐ. டியின்   சமூக  கொள்ளை  குறித்த விசா­ரணை  பிரிவின் முன்னாள் பொறுப்­ப­தி­காரி   நிஷாந்த சில்­வா­விற்கு  கடந்த  2019  நவம்பர் 19ஆம் திகதி  இந்த விவ­கா­ரத்தின்  சந்­தேக நப­ரான சுவிஸ் தூத­ரக   பெண் அதி­காரி  கானியா  பெனிஸ்டர் பிரன்சிஸ் ஆறு  தொலை­பேசி  அழைப்­புக்­களை எடுத்­துள்­ள­தாக   விசா­ரணை  அதி­கா­ரிகள்  நீதி­மன்­றுக்கு  அறி­வித்­துள்­ளனர்.   இது தொடர்­பாக சி.ஐ. டி  தனது  விசா­ர­ணை­களில்  வெளிப்­ப­டுத்­தப்­பட்ட மேல­திக விட­யங்­களை விசேட  மேல­திக அறிக்கை ஊடாக  நீதி­மன்­றுக்கு  அறி­வித்­தது.  ' சந்­தேக  நப­ரான   கானியா பெனிஸ்டர் என்­பவர் பயன்­ப­டுத்­திய  தொலை­பேசி சிம் அட்டை தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டன. அந்த சிம் அட்­டை­யா­னது  லக்னா தரிந்து பர­ன­மான்ன  என்­ப­வரின்  பெயரில்  பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது. குறித்த நபர் தற்­போது  ஒஜோன் பிரேன்ஸ் பசே  எனும்  தனியார்  ஊடக    நிறு­வ­ன­மொன்றில் சேவை­யாற்­று­கின்றார். அவரை சி.ஐ.டி.க்கு அழைத்து   விசா­ரணை செய்து  வாக்கு மூலம் பதிவு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அவ­ரது   வாக்­கு­மூ­லத்தில்  தனது பெயரில் பெற்றுக் கொண்ட  குறித்த சிம் அட்­டையை   கடந்த  2011ஆம் ஆண்டு சிலோன் டுடே பத்­தி­ரி­கையில்  கட­மை­யாற்­றிய தரிஷா  பெஸ்­டியன் என்­ப­வ­ருக்கு  வழங்­கி­ய­தாக   தெரி­வித்­துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஆகும் போது தரிஷா பெஸ்­டியன்  சன்டே ஒப்­ஸவர் பத்­தி­ரி­கையின் ஆசி­ரி­ய­ராக இருந்­துள்ளார். இத­னை­ய­டுத்து தரிஷா பெஸ்­டி­யனின் தொலை­பேசி அழைப்பு விபர பட்­டியல் பெறப்­பட்டு  விசா­ரணை செய்­யப்­பட்­டது. இதன்­போது லேக் ஹவுஸ் நிறு­வ­னத்தின்  தலை­வ­ராக கட­மை­யாற்­றிய   ஊட­க­வி­ய­லாளர் கிரி­ஷாந்த குரேவின்  தொலை­பேசி  இலக்­கத்­திற்கு தரி­ஸாவால் 21  அழைப்­புக்கள்  எடுக்­கப்­பட்­டுள்­ளன. அதே­போன்று  2019 நவம்பர் 19ஆம் திகதி  தற்­போது   பணி இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டுள்ள குற்­றப்­பு­ல­னாய்வு  திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர்  ஷானி அபே­சே­க­ரவின் தொலை­பேசி இலக்­கத்­திற்கு லேக்­ஹவுஸ்  நிறு­வ­னத்தின்  முன்னாள் தலைவர் கிரி­ஸாந்த குரே    அழைப்­பொன்றெ ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் அந்த அழைப்­பா­னது  9  நிமி­டங்கள்  12 வினா­டிகள்  வரை  நீடித்­துள்­ளன. அதே வேளை  தற்­போது  வெளி­நட்டில் உள்ள  சி.ஐ. டியின் முன்னாள் பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த சில்வா  சுவிட்­ஸர்­லாந்­துக்கு செல்ல முன்­னைய தினம் இரவு 9.30 ற்கு  முன்னாள்  சி. ஐ. டி  பணிப்­பாளர்  ஷானி அபே­சே­ர­வுக்கு  தொலை­பே­சியில்  தொடர்­பு­கொண்­டுள்ளார்.  இதே வேளை   லக்னா  தரிந்து   பர­ன­மான்ன  என்­பவர் சி. ஐ. டி க்கு அளித்­துள்ள வாக்­கு­மூ­லத்தின் பிர­காரம் சண்டே ஒப்­ஸேவர் பத்­தி­ரி­கையின் ஆசி­ரி­ய­ராக இருந்த  தரிஷா பெஸ்­டியன் கடந்த  2019 டிசெம்பர் 22ஆம் திகதி  சுவிட்­ஸர்­லாந்­துக்கு  பய­ண­மா­கி­யுள்­ள­தா­கவும், தொலை­பேசி செய­லி­ழந்­துள்­ள­தா­கவும் அவர் தொரி­வித்தார். எவ்­வா­றா­யினும்   தரிஷா பெஸ்­டி­ய­னுக்கு  இறு­தி­யாக உள்­வந்த அழைப்பு  டிசெம்பர் 22ஆம் திகதி  பிற்­பகல் 02. 36க்கு  இவ்­வ­ழக்கின்   சந்­தேக  நப­ரான  கானியா  பெனிஸ்டர் என்­ப­வ­ரினால்  எடுக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அழைப்­பா­னது 108 செக்­கன்கள் நீடித்­தன. இந்­நி­லையில் லேக் ஹவுஸ்' முன்னாள் தலைவர் கிரி­ஸாந்த குரேவும் கடந்த டிசம்­பவர் 25ஆம் திகதி   மலே­சி­யா­வுக்கு   வெளி­யேறி சென்­றுள்­ள­தாக குடி­வ­ரவு , குடி­ய­கல்வு  திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. இவ்­வா­றான  பின்­ன­ணியில் குற்­றப்­பு­ல­னாய்வு  பிரிவின் முன்னாள் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர்   ஷானி அபே­சே­க­ர­விடம்  விசா­ர­ணை­களை  முன்­னெ­டுக்க  நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி  அவ­ரிடம் வாக்­கு­மூலம் ஒன்­றினை  பதிவு செய்துக் கொள்ள அவரை  நாளை  23ஆம் திகதி   குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்தின் ஆஜ­ராக  பொரளை  பொலிஸார் ஊடாக   அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது ' என   சி. ஐ. டி  இந்த விவ­கா­ரத்தின் விசா­ரணை நிலைமை தொடர்பில் கொழும்பு பிர­தான நீதவான் லங்கா ஜய­ரத்­னவை தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது. இதே­வேளை   பொய்­யான தக­வல்­களை வழங்கி தேசத்தை அசௌ­க­ரி­யத்­திற்கு உட்­ப­டுத்­தி­யமை தொடர்­பி­லான  குற்­றச்­சாட்­டுக்­குள்­ளா­கி­யுள்ள  சுவிஸ் தூத­க­ரத்தின்  சிரேஷ்ட   குடி­வ­ரவு குடி­ய­கல்வு  அதி­காரி  கானியா  பெனிஸ்டர்  பிரான்­சிசின்  தொலை­பேசி  நீதி­மன்ற  பொறுப்பில் இருந்த நிலையில்  அதனை   அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ள­ருக்கு அனுப்பி  அறிக்கை பெற   கொழும்பு பிர­தான நீத­வான  லங்கா ஜய­ரத்ன  உத்­த­ரவு  பிறப்­பித்தார். முன்­னைய    வழக்கு தவ­ணையின் போது   கானியா சார்பில் மன்றில் ஆஜ­ரா­கிய   சிரேஷ்ட சட்­டத்­த­ரணி உபுல்  கும­ரப்­பெ­ரும  குறித்த தொலை­பே­சியில்  தூத­க­ரத்தின் உத்­தி­யோ­க­பூர்வ தொடர்­பாடல்  தக­வல்கள்  அடங்­கி­யுள்­ளதால் அந்த தொலை­பேசி   1996ஆம் ஆண்டின் 9ம் இலக்க  தூத­ரக   சிறப்­பு­ரிமை சட்­டத்தின் 38(2) அத்­தி­யா­யத்தின் கீழ்  பாது­காப்பு பெறு­வ­தாக   வாதம்  முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அதனால்   அந்த தொலை­பே­சியை   பகுப்­பாய்­வுக்கு அனுப்­பு­வது சட்­ட­வி­ரோ­த­மா­னது என    கானி­யாவின் சட்­டத்­த­ரணி  வாதம் முன்­வைத்­தி­ருந்தார். எனினும் அந்த வாதத்தை நிரா­க­ரித்த கொழும்பு பிர­தான நீதவான் லங்கா ஜய­ரத்ன நேற்று தொலை­பே­சியை   இர­சா­யன பகுப்­பாய்­விற்கு அனுப்ப உத்­த­ர­விட்டார். '  சந்­தேக நபரின் தொலைப்­பேசி   அவ­ரது பெயரில்  பதிவு செய்­யப்­ப­ட­வில்லை.   அத்­துடன் அது   தூத­ர­கத்­தினால் வழங்­கப்­ப­ட­வு­மில்லை. எனவே  அந்த  தொலை­பே­சியை பகுப்­பாய்வு செய்ய  1996ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க தூத­ரக சிறப்­பு­ரிமை  சட்­டத்தின் 38(2) அத்­தி­யா­யத்தின் கீழ் எத்­த­டை­களும்  உள்­ள­தாக தோன்­ற­வில்லை. எனவே   சந்தேக நபர்    தரப்பின் வாதத்தை நிராகரிக்கின்றேன்.   தொலைபேசியை  அரச  இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் அதன் அறிக்கையை  சட்டமாதிபருக்கு கையளிக்கவும்  அரச  இரசாயன  பகுப்பாய்வாளருக்கு உத்தரவிடுகின்றேன்.'  என நீதிவான்  லங்கா ஜயரத்ன   அறிவித்தார்.   நேற்றைய  தினம்   இந்த  வழக்கு விசாரணைகளின் போது விசாரணையாளர்களான  சி . ஐ. டி யினருடன்  சிரேஷ்ட அரச சட்டவாதிகளான  ஜனக பண்டார , லக்மினி  கிரியாகம , ஆகியோர் ஆஜரானதுடன்  சந்தேக நபர் சார்பில் சிரேஷ்ட  சட்டத்தரணி  உபுல் குமரப்பெரும முன்னிலையானார். வழக்கு விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதிக்கு  ஒத்திவைக்கப்பட்டன.   https://www.virakesari.lk/article/73790
  • “ சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துப் பேசுபவர்கள் முட்டாள்களின் வாரிசுகள் ” - ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “ சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துப் பேசுபவர்கள்  முட்டாள்களின் வாரிசுகள் ” என  காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஆர்வலரான கிரேட்டா தன்பர்க்கை விமர்சித்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் டாவோஸ் 2020 உலக பொருளாதார மாநாட்டில் ஐம்பதாவது கூட்டத்தில் புவி வெப்பமயமாதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், நம் வீடு (புவி) இன்னும் எரிந்துகொண்டுதான் உள்ளது. நாங்கள் சுற்றுச்சூழலைக் காக்கப் போராடி வருகிறோம். ஆனால், இதுவரை அதற்குத் தேவையான எந்த நடவடிக்கையும் உலக நாடுகள் செய்ததாகத் தெரியவில்லை. நாம் பெரிய பிரச்சினையை எதிர்கொள்ளவுள்ளோம். காலநிலை  மாற்றத்தை ஒரு முக்கியப் பிரச்னையாக நாம் கருதாதவரை இதற்கு எந்த ஒரு முடிவும் கிடைக்கப்போவதில்லை. இப்போது காலநிலையும்  சுற்றுச்சூழலுமே உலகின் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. மரங்கள் நட்டால் மட்டும் சுற்றுச்சூழல் பாதிப்பு சரியாகாது. அதற்காக நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டும். உலகத் தலைவர்கள், சுற்றுச்சூழலைக் காக்க நடவடிக்கை எடுப்பதாக வெற்று வார்த்தைகளையும் பொய்யான சத்தியங்களையும் மட்டுமே செய்து வருகின்றனர். இதுபற்றி குழந்தைகள் கவலைப்படவேண்டாம் எனக் கூறுகிறார்கள். ஆனால், இன்று சுற்றுச்சூழல் தொடர்பான இளைஞர்களின் குரல் உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது” என்று பேசியிருந்தார். இந்த நிலையில், நேற்று அதே டாவோஸ் 2020 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மாநாட்டில் மக்கள் கூட்டத்தின் நடுவில் அமர்ந்திருந்த கிரேட்டா தன்பெர்க்கையும் அவரது கருத்துகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.  நிகழ்ச்சியில் பேசிய அவர், ``அழிவின் வற்றாத தீர்க்கதரிசிகள் கூறும் பேரழிவு பற்றிய கணிப்புகளை நாம் நிராகரிக்க வேண்டும். மக்கள் தொகையால் நெருக்கடி ஏற்படும், வெகுஜன மக்கள் பட்டினியால் வாடுவார்கள்; விரைவில் எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் எனப் பல அறிவியலாளர்கள் எச்சரித்தனர். ஆனால், அவர்களின் கணிப்பு அனைத்தும் முற்றிலும் தவறாகவே இருந்தது. நம் வீடு எரிந்துகொண்டிருப்பதாக கிரேட்டா தன்பெர்க் கூறும் எச்சரிக்கையைக் கேட்க எனக்கு நேரமில்லை. அளவுக்கு அதிகமான புவி வெப்ப மயமாதல் மற்றும் பிற சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துப் பேசுபவர்கள் நேற்றைய முட்டாள்களின் வாரிசுகளாகவே இருக்க முடியும்” எனப் பேசியுள்ளார். இதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது.   https://www.virakesari.lk/article/73806