Sign in to follow this  
பிழம்பு

பிரிட்டன் விசாவில் அதிரடி மாற்றம் - இந்திய மாணவர்களுக்கு ஜாக்பாட்டா?

Recommended Posts

 
பிரதமர் போரிஸ் ஜான்சன்படத்தின் காப்புரிமை Getty Images

பிரிட்டனில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் பல புதிய பரிந்துரைகளை அறிவித்துள்ளது.

பிரிட்டனில் தங்கி படிக்கும் பல உலக நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படித்து பட்டம் பெற்றபின், இரண்டு ஆண்டுகள்வரை பிரிட்டனில் தங்கி வேலை தேடி கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், 2012ஆம் பிரிட்டன் உள்துறை செயலராக இருந்த தெரீசா மே எடுத்த முக்கிய முடிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தெரீசா மே காலத்தில், ஒரு வெளிநாட்டு மாணவர் பிரிட்டனில் படித்து பட்டம் பெற்றபிறகு 4 மாதங்களுக்குள் சொந்த நாட்டுக்கு திரும்பிவிட வேண்டும். தற்போது, அந்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

புதிதாக பிரதமராக பதவியேற்றுள்ள போரிஸ் ஜான்சன், மாணவர்கள் பிரிட்டனில் வேலைவாய்ப்பை தொடங்கவும், முழு திறனை வெளிப்படுத்தவும் இந்த மாற்றம் உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

ஆனால், அரசின் இந்த முடிவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மைக்ரேஷன் வாட்ச் என்ற பிரசார குழு, அரசின் நடவடிக்கை பிற்போக்கானது என சாடியுள்ளது.

யாருக்கெல்லாம் இந்த உத்தரவு பொருந்தும்?

பிரிட்டனில் அடுத்த ஆண்டு முதல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேற்பட்ட படிப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.

பிரிட்டன் விசா - இந்தியா மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்படத்தின் காப்புரிமை Peter Dench

மேலும், கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் குடியேற்றத்துக்கான ஆவணங்களை சரியாக வைத்திருத்தல் அவசியம்.

பிரிட்டன் அரசின் இந்த அறிவிப்பு, யுகே பயோபேங்கின் 200 மில்லியன் பவுண்ட் மதிப்பு கொண்ட மரபியல் திட்டத்தின் தொடக்கத்துடன் ஒத்துப் போகிறது. சுமார் 5 லட்சம் பிரித்தானியர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் மற்றும் மாதிரிகளை இந்த யுகே பயோபேங்க் கொண்டுள்ளது.

பல ஆண்டு காலமாக சேகரிக்கப்பட்ட இந்த தரவுகளை உலகிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் தற்போது பயன்படுத்தி கொண்டு நோய்களுக்கான புதிய சிகிச்சைகளை கண்டுபிடிக்கலாம்.

பிரதமர் போரிஸ் ஜான்சன் என்ன சொல்கிறார்?

சர்வதேச ஒத்துழைப்பின் மையமாகப் பிரிட்டன் இருந்திருக்கிறது என்பதற்கு பெருமைமிகு வரலாறு இருக்கிறது என்று குறிப்பிட்ட ஜான்சன், உலகிலேயே மிகப்பெரிய மரபியல் ஆய்வு திட்டத்துக்காகச் சர்வதேச நிபுணர்களை நாங்கள் ஒன்றிணைக்கிறோம் என்றும், இத்திட்டம் அச்சுறுத்தும் நோய்களிலிருந்து மக்களின் உயிரை காக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜான்சன்படத்தின் காப்புரிமை Matt Cardy

கூடுதலாக, பிரிட்டன் அரசின் இந்நடவடிக்கை உலகளாவிய பார்வை என்றுஉள்துறை செயலர் பிரித்தி பட்டேல் கூறியுள்ளார்.

பிரிட்டன் அரசின் தற்போதைய அறிவிப்பின்கீழ், மாணவர்களின் எண்ணிக்கையில் எவ்வித கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. அதேபோல், மாணவர்கள் எவ்விதமான வேலையும் தேடிக் கொள்ளலாம்.

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் தெரீசா மே உள்துறை அமைச்சராக இருந்தபோது இந்த கட்டுப்பாடுகளை கொண்டு வந்த போது, குடியேற்றம் விதிகள் தொடர்பாக ஒர் எதிர்ப்பு சூழல் நிலவுவதாகவும், ஒட்டுமொத்த குடியேற்றத்தின் அளவை சில ஆயிரங்களாக குறைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

https://www.bbc.com/tamil/global-49659291

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, பிழம்பு said:

பிரிட்டனில் தங்கி படிக்கும் பல உலக நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படித்து பட்டம் பெற்றபின், இரண்டு ஆண்டுகள்வரை பிரிட்டனில் தங்கி வேலை தேடி கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.

பொருளாதார பின்தங்கிய நாடுகளில் இருந்து மேற்குலகம் நோக்கிய கல்வி கற்கும் துறை பல பில்லியன்கள் டாலர்கள் பெறுமதி கொண்டவை. 

இன்று, சீன மாணவர்களையும் இஸ்லாமிய மாணவர்களையும் தவிர்க்க விரும்புகிறார்கள். 

அத்துடன், வேலை வாய்ப்பையும் கொடுப்பது புதிய யுக்தி. காரணம், சரியும் சனத்தொகை, கல்விகற்ற மற்றும் குற்ற வழக்குகள் இல்லாதவர்கள் - நாட்டின் பொருளாதார வளர்ப்பிற்கு உதவும்   !

Share this post


Link to post
Share on other sites
On 9/11/2019 at 4:36 PM, பிழம்பு said:

பிரிட்டனில் தங்கி படிக்கும் பல உலக நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படித்து பட்டம் பெற்றபின், இரண்டு ஆண்டுகள்வரை பிரிட்டனில் தங்கி வேலை தேடி கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.

எங்கடை சிலோன் பொடியளுக்கு எல்லாம் ஒண்டுதான்.படிக்கவெண்டு வந்திட்டு அகதியாய் வந்து சிற்றிசன் எடுத்த பெட்டை மடக்கி விசா எடுத்துட்டு லண்டனிலையே இறுகிடுவாங்கள் கண்டியளோ 😎

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • தியாகி தீலீபனின் நினைவு தினம்   -க. அகரன் தியாகி திலீபனின் 32ஆவது நினைவு தினம் வவுனியா நகரசபை மண்டபத்தில், இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இதன்போது தியாகி திலீபன் தொடர்பான நினைவுரையை உலக தமிழர் தேசிய கட்சியின் செயலாளர்  யோகறாணி நிகழ்தியதுடன்,  ஈகை சுடரும் ஏற்றபட்டது. நிகழ்வில் அருட்தந்தை ஜோன்வோல், புதுக்குளம் பாடசாலை அதிபர் கணேஸ்வரன், வட மாகாண இலங்கை சமாதான நீதவான் சங்க தலைவர் ஜெயவிந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/வன்னி/தியாகி-தீலீபனின்-நினைவு-தினம்/72-238524
    • -சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மந்துவில் சந்தை வளாகத்தில், படுகொலை செய்யப்பட்ட பொது மக்களின் 20ஆம் ஆண்டு நினைவு தினம், மந்துவில் சந்தை வளாகத்தில், இன்று (15) அனுஷ்டிக்கப்பட்டது. வன்னி குரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.   http://www.tamilmirror.lk/வன்னி/நினைவு-தினம்/72-238509
    • -எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், கே.தயா, செல்வநாயகம் ரவிசாந் காணாமற்போனோர் அலுவலகத்தின் (Office on Missing Persons – OMP) யாழ்ப்பாண பிராந்திய பணியகத்தை அகற்றுவரையான தொடர் போராட்டத்தை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று நண்பகல் ஆரம்பித்தனர். யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்த்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அங்கிருந்து காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்குச் சென்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/OMP-அலுவலகத்துக்கு-எதிராக-போராட்டம்/71-238519
    • சம்பந்தர் ஐயாவை விக்கி அவர்கள் அழைத்தது - விக்கி அவர்களின் பெருந்தன்மையை காட்டுகின்றது.  சம்பந்தர் ஐயா வரவேண்டியது காலத்தின் கடமை. ஆனால், அவருக்குள் இருக்கும் அகந்தை இந்த விடயத்தில் வெல்லும் என எண்ணத்தோன்றுகின்றது. 
    • இது சட்டவிரோதமானது என்றால் அதை சட்டம் மூலம் எதிர்கொள்ளலாம். ஆனால், சிங்கள இராணுவ மற்றும் அரசியல் செல்வாக்குடன் மட்டுமே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதால் விளைவு சாதகமாக இருக்குமா என்பது சந்தேகமே.  இல்லை எமது அரசியல்வாதிகள் இதை ஒரு மக்களுக்கு பயன்தரும் முதலீட்டாக மாற்ற முடியுமா என ஆராயலாம். சூழலை இதன் மூலம் கிடைக்கும் வருவாயால் பாதுகாக்கலாமா ? மக்களுக்கு சிறந்த ஊதியம் கிடைக்க உறுதி செய்யலாமா ? எனவும் ஆராய்ந்து பார்க்கலாம்.