• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
புரட்சிகர தமிழ்தேசியன்

2036 இல் திசை காட்டி காட்ட போகும் உண்மையான வடக்கு திசை.!

Recommended Posts

2036 இல் காட்டப்போகும் உண்மையான வடக்கு திசை..!

Super-Earth_1200x630xt.jpg

கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என நான்கு திசையும் நமக்கு தெரியும். யாரையாவது நம் அருகில் அழைத்து திசையை காண்பிக்க சொன்னால் தத்ரூபமாக சொல்லிவிடுவார்கள்... இந்த திசை கிழக்கு இதற்கு எதிர் திசை மேற்கு என்றும், இந்த திசை வடக்கு இதற்கு எதிர் திசை தெற்கு என ..

ஆனால் நாம் சொல்லிக் கொடுத்திருக்கும் திசையும் காம்பஸ் காட்டும் திசையும் மாறுபடுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. பூமியில் நேரம் மற்றும் அதன் திசைகான அளவீட்டை 1676 ஆம் ஆண்டுமுதல் பின்பற்றப்படுகிறது. இது கிரீன்விச் தீர்க்க ரேகையை அடிப்படையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும் பூமியின் காந்தப்புலத்தின் வடக்கு திசைக்கும் காந்த முள் காட்டும் வடக்கு திசைக்கு வித்தியாசம் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அதாவது 360 வருடங்களுக்கு ஒருமுறை இந்தத் இசை துல்லியமாக காட்டும்... அதாவது காம்பஸ் கருவிகள் மிகத்துல்லியமாக 360 வருடங்களுக்கு ஒருமுறை வடக்கு திசையை காட்டும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதன் அடிப்படையில் பார்த்தால் வரும் 2036 ஆம் ஆண்டில் காம்பஸ் கருவி காட்டும் துல்லியமான வடக்கு திசையை பொறுத்துதான் மற்ற திசைகளும் அமையும். இந்தக்கருத்தை இங்கிலாந்தின் ஜியாலஜிக்கல் சர்வே அமைப்பு தெரிவித்து உள்ளது.

காந்தப்புல திசை வேறுபாடு என்பது வருடத்திற்கு 20 கிலோமீட்டர் மட்டுமே என்பதால் காம்பஸ் காட்டும் வடக்கு திசையில் எந்த ஒரு பெரிய மாற்றமும் இருக்காது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

https://tamil.asianetnews.com/life-style/real-north-side-will-determine-in-2036--pxo6gj

Share this post


Link to post
Share on other sites

கிழக்கு திசை பார்த்து, வாஸ்து பார்த்து... கட்டிய  வீடுகளை எல்லாம், 
மாற்றி அமைக்க வேணும் போலை இருக்கே...   😮

 • Haha 2

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, தமிழ் சிறி said:

கிழக்கு திசை பார்த்து, வாஸ்து பார்த்து... கட்டிய  வீடுகளை எல்லாம், 
மாற்றி அமைக்க வேணும் போலை இருக்கே...   😮

அடிவரை தோண்டி அத்திவாரத்துடன் குறித்த டிகிரியில் திருப்பி விடலாம்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • வெளிநாட்டுப் பயணத்தைக் கட்டுப்படுத்தும் சீனா கொரனாவைரஸால் 106 பேர் உயிரிழந்துள்ளதுடன், அதன் மையமான மத்திய சீன நகரான வுஹானிலிருந்து தமது பிரஜைகளை வெளியேற்ற ஏனைய அரசாங்கங்கள் முயலுகையில், கொரனாவைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான எதிர்பாராத நடவடிக்கைகளை சீனா விரிவாக்கியுள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு பயணஞ் செய்வதை பிற்போடுமாறு இன்று வலியுறுத்தியுள்ளது. வுஹானிலுள்ள காட்டுவிலங்குச் சந்தையொன்றிலிருந்து கடந்த மாதம் பரவியதாக நிபுணர்களால் நம்பப்படும் குறித்த கொரனாவைரஸானது சீனா முழுவதும், டசின் கணக்கான ஏனைய நாடுகளிலும் எதிர்பாராத போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பரவியுள்ளது. அதிகம் போக்குவரத்து நிகழும் சந்திரப் புத்தாண்டு விடுமுறை வந்த நிலையில், கொரனாவைரஸைக் கட்டுப்படுத்தும் முகமாக ஆரம்பத்தில் வுஹானையும், மத்திய ஹுபூ மாகாணத்திலுள்ள ஏனைய நகரங்களையும் கடந்த வாரம் அதிகாரிகள் மூடியுள்ள நிலையில் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அங்கு சிக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து சர்வதேச, உள்ளூர் குழுச் சுற்றுப்பயணங்களை சீனா இடைநிறுத்தியிருந்ததுடன், நீண்ட தூர பஸ்கள் உள்ளடங்கலாக சீனாவுக்குள்ளுல் பரவலாக போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில், புதிதாக 26 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு இன்று அறிவித்துள்ள நிலையில், கொரனாவைரஸால் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 106ஆக அதிகரித்துள்ளது. புதிய இறப்புகளில் பெரும்பாலோனோர் வயது வந்தவர்கள் ஆவர். சீனத் தலைநகர் பெய்ஜிங், ஷங்காயிலும் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, உறுதிப்படுத்தப்பட்ட தொற்றல்களுக்கு உள்ளானோர் 4,515 என தேசிய சுகாதார ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ள நிலையில், இது நேற்றைய எண்ணிக்கையின் ஏறத்தாழ இரண்டு மடங்கு எண்ணிக்கையாகும். கைத்தொழிற்பேட்டையான 11 மில்லியன் பேரைக் கொண்டுள்ள வுஹானில் பல ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் சிக்கியுள்ள நிலையில், அங்குள்ள 650 ஜப்பானியர்களில் 200 பேரை வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானம் மூலம் இன்று மாலை வெளியேற்றுவதாக ஜப்பான் அறிவித்திருந்தது. இதேவேளை, ஐக்கிய அமெரிக்க இராஜங்கப் பணியாளர்கள், சில ஐக்கிய அமெரிக்கப் பிரஜைகளை ஏற்றிய விமானமொன்று ஐக்கிய அமெரிக்க வாடகை விமானமொன்று வுஹானிலிருந்து கலிபோர்னியாவை நோக்கி நாளை புறப்படவுள்ளது. http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/வளநடடப-பயணததக-கடடபபடததம-சன/50-244665
  • கெமர் அரசர்கள் இந்திய வழி வந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடையாது. அங்கோர் வட் கோயிலைக் கட்டிய இரண்டாம் சூரிய வர்மனின் முன்னோர்களின் பெயர்கள் சைவ/தமிழ் கலவையுடன் உள்ளதற்கான காரணம் சைவம் வைணவம் அங்கு பரப்பப் பட்டதனால் இருக்கலாம். கிமு 5ஆம் நூற்றாண்டிலிருந்து தென்னிந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் வர்த்தகத் தொடர்புகள் இருந்துள்ளன. கிபி 5ஆம் நூற்றாண்டில் பிராமணர்கள் மூலம் இந்து (வைணவம்) பரப்பப்பட்டுள்ளது. 9 - 10 ஆம் நூற்றாண்டுகளில் இந்திரவர்மன், யசோவர்மன், ராஜேந்திரவர்மன் போன்றோர் கட்டிய கோயில்கள் பெரும்பான்மையானவை சிவன் கோயில்கள். சைவ சமயம் ஒருவேளை தென்னிந்திய வர்த்தகர்களால் அங்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். அதன்பின் வந்த அரசர்கள் சிவபெருமானைக் கைவிட்டு இறுதியில் இரண்டாம் சூரியவர்மனின் கட்டிய அங்கோர் வட் விஷ்னு ஆலயம். இதுபோல்தான் பெரும்பாலான தமிழர்கள் குமரிக் கண்டம் என்ற மாயையை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எம் கண்முன்னே உள்ள ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி ஆதாரங்களே தமிழரின் 3000 ஆண்டு வரலாற்று உண்மையைக் கூற வல்லன. அகழ்வாராச்சிகள் ஒருநாள் முழுமைபெற்றால் தமிழை உரிமைகோரும் கடவுள்களும் கேள்விக்குள்ளாகலாம்.
  • மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்த திறைசேரி முறிகள் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை மீதான இரு நாட்கள் விவாதம் அடுத்த மாதம் 18ஆம் ,19 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்த திறைசேரி முறிகள் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை கடந்த வாரம் மத்திய வங்கியினால் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்ட போதிலும் சபாநாயகர் தடயவியல் கணக்கறிக்கையை சபையில் சமர்பிக்காது இருந்தார். எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்சியாக இது குறித்த கேள்வியை எழுப்பிய நிலையில் கணக்காய்வு அறிக்கையில் இணைப்புகள் இல்லாத அறிக்கையை சபைப்படுத்திய நிலையில் அது குறித்து எதிர்க்கட்சியினர் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் தடயவியல் கணக்கறிக்கையின் ஆங்கில பிரதி உள்ள நிலையில் தமிழ் மற்றும் சிங்கள பிரதிகளை கேட்டுள்ள நிலையில் அதனை விவாதத்திற்கு முதல் சபையில் சமர்ப்பிக்கவும் எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் அதற்கு முன்னர் ஆங்கில பிரதிகளை சபைப்படுத்தவும் சபாநாயகர் அறிவுரை வழங்கியுள்ளார். எவ்வாறு இருப்பினும் எதிர்வரும் 18ஆம்,19ஆம் திகதிகளில் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்த திறைசேரி முறிகள் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை மீதான இரு நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/74359
  • மேலே காணொளியில் பேசுபவர், முனைவர்.கோ.தெய்வநாயகம் அவர்கள், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாரக பணியாற்றியவர். இன்னொரு காணொளியும் இருக்கு..!    
  • சீனாவிலுள்ள தமது பிரஜைகளை வெளியேற்ற சர்வதேச நாடுகள் திட்டம்! வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனப் பகுதிகளிலிருந்து இராஜதந்திரிகளையும், தமது குடிமக்களையும் வெளியேற்ற உலகெங்கிலும் உள்ள நாடுகள் திட்டமிட்டுள்ளன. அதன்படி பிரான்ஸ், வடகொரியா, ஜப்பான், கஸகஸ்தான், ஜேர்மனி, மொராக்கோ, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ரஷ்யா, மியன்மார் மற்றும் நெதர்லாந்து அரசாங்கங்களே இவ்வாறு தனது நாட்டு பிரஜைகளையும், இராஜதந்திரிகளையும் சீனாவிலிருந்து நாட்டுக்கு அழைத்துவர இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. பிரான்ஸ்  வுஹானிலிருந்து தமது நாட்டினை கொண்டுவர பிரான்சின் முதல் விமானம் புதன்கிழமை பாரிஸிலிருந்து புறப்பட்டு, மறுநாள் சீனாவிலிருந்து தமது பிரஜைகளுடன் நாடு திரும்பும். இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்படும் அனைவரையும் தனிமைப்படுத்தி பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பின்னர் இரண்டாவது விமானம் ஒன்றையும் சீனாவுக்கு அனுப்பி தமது பிரஜைகளை வரவழைக்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. எனினும் இதற்கான உறுதியான திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. தென்கொரியா  தென்கொரியா தனது பிரஜைகளை வுஹானிலிருந்து அழைத்துவர விசேட விமானங்களை இந்த வாரம் அனுப்ப திட்டமிட்டுள்ளது. ஜப்பான்  இன்றிரவு ஜப்பான் தமது நாட்டு பிரஜைகளை அழைத்துவர வுஹானுக்கு ஒரு சிறப்பு விமானத்தை அனுப்பவுள்ளது. இந்த விமானத்தில் சுமார் 200 பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர முடியும். எனினும் சுமார் 650 பேர் வரை நாடு திரும்புவார்கள் என்றும் ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதனால் டொக்கியோ புதன்கிழமைக்கு முன்னதாக வுஹானுக்கு அதிக விமானங்களை அனுப்ப ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறு அழைத்து வரப்படுபவர்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகள்ளானவர்கள் டோக்கியோவின் ஹனெடா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது வைத்தியசாலைக்கு அனுப்பப்படுவார்கள். அதே நேரத்தில் வைரஸ் அறிகுறிகள் இல்லாதவர்கள் வீட்டிற்கு செல்லலாம். எனினும் அவர்களுக்கும் ஆலோசனை வழங்கப்படும். கஸகஸ்தான் : தமது நாட்டைச் சேர்ந்த 98 மாணவர்களை வுஹான் நகரத்தை விட்டு வெளியேற்ற அனுமதிக்குமாறு பீஜிங்கிற்கு கஸகஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளதாக அந் நாட்டு வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். ஜேர்மனி :சீனாவின், வுஹான் நகரில் வாழும் தமது நாட்டைச் சேர்ந்த 90 பேரை வெளியேற்றும் நடவடிக்கையை ஜேர்மனி ஆரம்பித்துள்ளது. மொராக்கோ வுஹான் பகுதியில் பெரும்பாலும் மாணவர்களை உள்ளடக்கிய 100 தமது நாட்டுப் பிரஜைகளை வெளியேற்ற மொராக்கோ அரசாங்கம் ஸ்பெயின், சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. அமெரிக்கா அமெரிக்க வெளிவிவகார அமைச்சு தனது வுஹான் தூதரகத்தின் உதவியுடன் தமது பிரஜைகளை அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பல அமெரிக்கர்கள் ஜனவரி 28 திகதி வுஹானிலிருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு அழைத்து வரப்படவுமுள்னர். பிரிட்டன் பிரிட்டன் மற்றும் ஏனைய வெளிநாட்டு பிரஜைகளை வுஹானை விட்டு வெளியேற உதவும் திட்டம் தொடர்பில் பங்காளி நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. கனடா வுஹான் பகுதியில் உள்ள 167 பிரஜைகளை தமது நாட்டுக்கு கொண்டுவருதற்கான நடவடிக்கையை கனடாக எடுத்துள்ளது. இதுதவிற மேலும் எட்டு பேர் சீனாவில் உள்ள கனட தூதரக உதவியை நாடியுள்ளனர், ரஷ்யா ஹூபே மாகாணத்திலுள்ள தனது நாட்டினை அழைத்துவருவதற்கு சீனாவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரஷ்யாவில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. நெதர்லாந்து நெதர்லாந்து அரசாங்கம் வுஹானில் உள்ள தனது நாட்டின் 20 பிரஜைகளை அழைத்துவருவதற்கான மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றது. மியன்மார் மியான்மாமர் அரசாங்கம் வுஹானில் உள்ள தமது நாட்டைச் சேர்ந்த 60 மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தயுள்ளது. எனினும் குறித்த மாணவர்களை 14 நாட்களுக்கு பின்னர் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையையும்  மியன்மார் எடுத்துள்ளது. வெடிப்பின் மையப் புள்ளியாகவும், 11 மில்லியனுக்கும் அதிகமான சனத் தொகையை கொண்டதுடதுமான ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவே தற்போதும் உள்ளது. https://www.virakesari.lk/article/74360