Jump to content

பாகிஸ்தானுக்கு தண்ணி காட்ட வருகிறது ஐ.என்.எஸ். காண்டேரி.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானுக்கு தண்ணி காட்ட வருகிறது ஐஎன்எஸ் கண்டேரி போர் கப்பல்...!! கடல் பரப்பில் பிரம்மோஸ் ஏவுகணைகளை தாங்கி நிற்கப்போகிறது...!!

sub-marin4-jpg_1200x630xt.jpg

இந்திய கப்பற்படையை வலிமை படுத்தும் நோக்கில் எதிரிநாட்டு ரேடார் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு ஊடுருவும் ஆற்றல் கொண்ட ஐஎன்எஸ் கண்டேரி என்ற போர்கப்பல் வரும் 28 ஆம் தேதி கப்பற் படையில் இணைக்கப்பட உள்ளது.

ஸ்கார்ப்பின் ரக நீர் மூழ்கி கப்பல்கள் பிரான்ஸ் நாட்டின் வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டவையாகும், இந்த ரகத்தில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் கல்வாரி என்ற கப்பல் ஏற்கனவே  இந்திய கப்பல் படையில் இடம்பெற்றுள்ளது. இந்த கப்பல் சுமார் 1565 டன் எடை கொண்டவையாகும்

மேலும் ஏழு கார்ப்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் கட்டுமான பணியில் இருந்து வருகிறது. நீரின் பரப்பில் 20 கிலோ மீட்டர் வேகம் முதல்  37 கிலோ மீட்டர் வேகத்திலும்  நீருக்கடியில் சுமார் 55 கிலோமீட்டர் வேகத்திலும் சீறிப்பாயும் ஆற்றல் கொண்டவையாகும். தொடர்ந்து 5 நாட்களுக்கு சுமார் 350 மீட்டர் ஆழத்தில் கிட்டதட்ட 12 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பயணித்து ரோந்துப் பணியை மேற்கொள்ளும் அற்றல் கொண்டவை இந்த கார்ப்பீன்.

8 ஆதிகாரிகளும் 37 மாலுமிகளும் இந்த கப்பலில் இடம் பெற்றிருப்பர். நீருக்கடியில் பயன்படுத்தக்கூடிய எஸ்யூடி ரக  குண்டுகள்,  மற்றும் எதிரிநாட்டு கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய ரேடார் மற்றும் அகச்சிவப்பு கதிர்களால் கண்டுபிடிக்கப்பட முடியாத வல்லமை கொண்ட ஏவுகணைகள் இக் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன. இதே போன்று நவீன  ரேடார் உள்ளிட்ட தொழில்நுட்பங்களின்  கண்ணில் மண்ணைத் தூவும் வகையில், இப்போர் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒலியின் வேகத்தை விஞ்சும் பிரம்மோஸ் ஏவுகணைகளும், பராக் ரக ஏவுகணைகளும் இந்த கப்பல்களில் பிரதானமாக இடம்பெற்றுள்ளன.  2 ஹெலிகாப்டர்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்டதாகவும்  இக்கப்பல் உள்ளன.

https://tamil.asianetnews.com/world/navy-second-scorpene-class-submarine-will-be-commissioned-pxm9ic

டிஸ்கி :

"பாகிஸ்தானுக்கு தண்ணி காட்ட.."

chennai-1.jpg

Link to comment
Share on other sites

@ புரட்சிகர தமிழ்தேசியன், பகிர்விற்கு நன்றி...

நல்லா தண்ணி காட்டிறீங்க போங்க !!!😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அருள்மொழிவர்மன் said:

@ புரட்சிகர தமிழ்தேசியன், பகிர்விற்கு நன்றி...

நல்லா தண்ணி காட்டிறீங்க போங்க !!!😆

தமிழன் அல்லவா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஒரு மேட்டரா. எத்தனை வருசமா ஆந்திராவும், கேரளாவும், கர்நாடஹாவும் தமிழ் நாட்டுக்கு தண்ணி காட்டுறாங்க. 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.