Sign in to follow this  
தமிழ் சிறி

‘புலதிசி’ என்ற பெயரில், சொகுசு ரயில் சேவை ஆரம்பம்!

Recommended Posts

70341387_10157261517751327_2422988160607715328_o.jpg

‘புலதிசி’ என்ற பெயரில், சொகுசு ரயில் சேவை ஆரம்பம்!

‘புலதிசி’ எனும் பெயரில் சொகுசு ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கோட்டையிலிருந்து பொலன்னறுவைக்கு நேற்று(புதன்கிழமை) முதல் இந்த ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் இந்த பயணத்தில் இணைந்துகொண்டதோடு, அவர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மருதானை ரயில் நிலையம் வரை பயணித்தார்.

தினமும் பிற்பகல் 3.00 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் புகையிரதம் இரவு 7.45 மணிக்கு பொலன்னறுவையை சென்றடையும்.

மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு பொலன்னறுவையிலிருந்து மீண்டும் புறப்படும் ரயில் மு.ப. 9.06 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும்.

இந்த புதிய கடுகதி ரயில் பொலன்னறுவை, குருணாகல், மஹவ, கெக்கிராவ, ஹபரண, ஹிங்குரக்கொட ஆகிய புகையிரத நிலையங்களில் நிறுத்தப்படும்.

3-2.jpg

EEMBqpIUEAUgCcL.jpg

70774988_10157261517831327_2315519295653675008_n.jpg

http://athavannews.com/புலதிசி-என்ற-பெயரில்-சொக/

Share this post


Link to post
Share on other sites

சீன பணமும் இந்திய பணமும் 'முதலீடுகளை ' "விரும்பி" செய்கின்றன .

புத்திசாலி சிங்களம் !

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • தியாகி தீலீபனின் நினைவு தினம்   -க. அகரன் தியாகி திலீபனின் 32ஆவது நினைவு தினம் வவுனியா நகரசபை மண்டபத்தில், இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இதன்போது தியாகி திலீபன் தொடர்பான நினைவுரையை உலக தமிழர் தேசிய கட்சியின் செயலாளர்  யோகறாணி நிகழ்தியதுடன்,  ஈகை சுடரும் ஏற்றபட்டது. நிகழ்வில் அருட்தந்தை ஜோன்வோல், புதுக்குளம் பாடசாலை அதிபர் கணேஸ்வரன், வட மாகாண இலங்கை சமாதான நீதவான் சங்க தலைவர் ஜெயவிந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/வன்னி/தியாகி-தீலீபனின்-நினைவு-தினம்/72-238524
    • -சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மந்துவில் சந்தை வளாகத்தில், படுகொலை செய்யப்பட்ட பொது மக்களின் 20ஆம் ஆண்டு நினைவு தினம், மந்துவில் சந்தை வளாகத்தில், இன்று (15) அனுஷ்டிக்கப்பட்டது. வன்னி குரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.   http://www.tamilmirror.lk/வன்னி/நினைவு-தினம்/72-238509
    • -எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், கே.தயா, செல்வநாயகம் ரவிசாந் காணாமற்போனோர் அலுவலகத்தின் (Office on Missing Persons – OMP) யாழ்ப்பாண பிராந்திய பணியகத்தை அகற்றுவரையான தொடர் போராட்டத்தை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று நண்பகல் ஆரம்பித்தனர். யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்த்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அங்கிருந்து காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்குச் சென்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/OMP-அலுவலகத்துக்கு-எதிராக-போராட்டம்/71-238519
    • சம்பந்தர் ஐயாவை விக்கி அவர்கள் அழைத்தது - விக்கி அவர்களின் பெருந்தன்மையை காட்டுகின்றது.  சம்பந்தர் ஐயா வரவேண்டியது காலத்தின் கடமை. ஆனால், அவருக்குள் இருக்கும் அகந்தை இந்த விடயத்தில் வெல்லும் என எண்ணத்தோன்றுகின்றது. 
    • இது சட்டவிரோதமானது என்றால் அதை சட்டம் மூலம் எதிர்கொள்ளலாம். ஆனால், சிங்கள இராணுவ மற்றும் அரசியல் செல்வாக்குடன் மட்டுமே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதால் விளைவு சாதகமாக இருக்குமா என்பது சந்தேகமே.  இல்லை எமது அரசியல்வாதிகள் இதை ஒரு மக்களுக்கு பயன்தரும் முதலீட்டாக மாற்ற முடியுமா என ஆராயலாம். சூழலை இதன் மூலம் கிடைக்கும் வருவாயால் பாதுகாக்கலாமா ? மக்களுக்கு சிறந்த ஊதியம் கிடைக்க உறுதி செய்யலாமா ? எனவும் ஆராய்ந்து பார்க்கலாம்.