• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

யாழில் மரண தண்டனைக்கு ஆதரவளித்தோர் அதிகம்….

Recommended Posts

யாழில் மரண தண்டனைக்கு ஆதரவளித்தோர் அதிகம்….

September 11, 2019

1 Min Read

hangar.jpg?resize=650%2C330

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு சார்பாக வடக்கிலும் மக்கள் குரல் மேலெழுந்துள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பில் டிஜிட்டல் தொழிநுட்பத்தினூடாக மக்கள் கருத்துக் கணிப்பொன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற Enterprises Sri Lanka கண்காட்சி வளாகத்தில் இடம்பெற்றதுடன், அதில் பங்குபற்றிய 20,634 பேரில் 94.89% சதவீதத்தினர் ஜனாதிபதி அவர்களின் தீர்மானத்திற்கு சார்பாக வாக்களித்துள்ளனர்.

யாழ் மாவட்டம் முழுவதும் பரவியுள்ள சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் காரணமாக பிள்ளைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர்களின் ஒரேயொரு வேண்டுகோளாக அமைவது இந்த போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதேயாகும்.

இவ்விடயம் தொடர்பில் எந்தவொரு அரச தலைவரும் மேற்கொள்ளாத வகையில் தீர்மானங்களை மேற்கொண்டு அதிக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஜனாதிபதி அவர்களின் செயற்பாடுகளை இதன்போது பாராட்டிய அம்மக்கள், தமது பிள்ளைகளை நேசிக்கும் அனைத்து குடிமக்களும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக அணிதிரள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதேபோன்றதொரு செயற்திட்டம் அண்மையில் அநுராதபுரம் வலிசிங்க ஹரிச்சந்திர மைதானத்தில் இடம்பெற்ற Enterprises Sri Lanka கண்காட்சி வளாகத்திலும் இடம்பெற்றதுடன், அங்கு வருகைதந்த 27,168 பேரில் 94.77% சதவீதமானோர் போதைப்பொருளின் பிடியிலிருந்து நாட்டையும் எதிர்காலத் தலைமுறையையும் பாதுகாப்பதற்காக போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதி அவர்களின் தீர்மானத்திற்கு சார்பாகவே வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/2019/130324/

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, கிருபன் said:

அங்கு வருகைதந்த 27,168 பேரில் 94.77% சதவீதமானோர் போதைப்பொருளின் பிடியிலிருந்து நாட்டையும் எதிர்காலத் தலைமுறையையும் பாதுகாப்பதற்காக போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்

சிங்கப்பூர் மக்கள் மாதிரி யாழ் மக்கள் 🙂 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • புதிய பரிமாணம் !   காணாமல் ஆக்­கப்­பட்டோர் விவ­காரம் புதிய பரி­மா­ணத்­துக்குள் பிர­வே­சித்திருக்­ கின்­றது. முடி­வின்றி தொடர்­கின்ற இந் தப் பிரச்­சி­னைக்குத் தீர்வுகாணப்­பட வேண்டும் என்­ப­தற்­கான போராட்­டங்கள் வருடக் கணக்­காகத் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. நிலை­மா­று­கால நீதியின் அடிப்­ப­டையில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு பொறுப்புக் கூறு­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட  காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­லகம் என்ற பொறி­முறை செயல் வல்­லமை அற்ற நிலையில் தேங்கி நிற்­கின்­றது. இத்­த­கைய பின்­ன­ணி­யில்தான் காணா மல் ஆக்­கப்­பட்டோர் விவ­காரம் புதிய பரி­ மா­ணத்­துக்குள் பிர­வே­சித்­தி­ருக்­கின்றது. காணாமல் போன­வர்கள் அனை­வரும் கொல்­லப்­பட்­டு விட்டார்கள் என்று இப் போது அர­சாங்­கத்­தினால் அறி­விக்­கப்­பட்­டுள் ளது. ஐ.நா.வின் இலங்­கைக்­கான இணைப்­பாளர் அனா சிங்­க­ருக்கும் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்­ ஷ­வுக்கும் இடை­யி­லான சந்­திப்­பின்­போது காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர் கள் பற்­றிய விடயம் பற்றி குறிப்­பிட்ட ஜனா­தி­பதி, அவர்கள் கொல்­லப்­பட்­டு­விட்­டனர் என கூறி­யி­ருந்தார். இதனை ஜனா­தி­பதி அலு­வ­லக செய்­திக்­கு­றிப்பு அதி­கா­ர­பூர்­வ­மாக வெளி­யிட்­டி­ருந்­தது. விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் அரச படை­க­ளுக்கும் இடை­யி­லான யுத்த மோதல்­க­ளின்­போது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமி­ழர் கள் காணாமல் போயுள்­ளார்கள். இவர்கள் அரச தரப்­பி­னரால் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ள­தாக பாதிக்­கப்­பட்ட குடும்­ பங்­களைச் சேர்ந்த­வர்­களும் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களும் குற்றம் சுமத் தியுள்­ளன. இந்த வகையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுக்­கான பொறுப்புக்கூறும் விட­யத்தில்  இலங்­கையில் ஆட்கள் காணாமல் ஆக்­கப்­பட்­டமை என்­பது மிகவும் பார­தூ­ர­மான ஒரு விட­ய­மா­கவும் தீர்வு காணப்­ப­டாத ஒரு விட­ய­மா­கவும் கரு­தப்­ப­டு­கின்­றது. காணாமல் போன­வர்கள் பல்­வேறு சந்­ தர்ப்­பங்­களில், காணாமல் ஆக்­கப்­பட்­டார் கள். இதனை இந்த விவ­காரம் குறித்த விசா­ர­ணை­களை நடத்­து­வ­தற்­காக அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட ஒன்­றுக்கும் மேற்­பட்ட ஆணைக்­கு­ழு­வி­ன­ரிடம் சாட்­சி­ய­ம­ளித்த பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களைச் சேர்ந்த உற­வி­னர்கள் ஆதா­ரங்­க­ளுடன் தெரி­வித்­தி­ருந்­தனர். உயிர்த்­து­டிப்பு கொண்ட எரியும் பிரச்­சினை இந்த விவ­காரம் குறித்து ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் விசேட கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. காணாமல் ஆக்கப்­ பட்­ட­வர்கள் தொடர்பில் அர­சாங்கம் பொறு ப்புக்கூற வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை இந்த விடயம் தொடர்பில் பிரே­ர­ணை­களை நிறை­வேற்றி அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளது. இந்த வகையில் இலங்­கையின் காணாமல் ஆக்­கப்­பட்டோர் விவ­காரம் ஓர் எரியும் பிரச்­சி­னை­யாக இன்னும் சர்­வ­தேச மட்­டத்தில் உயிர்த்­து­டிப்­புடன் தொடர்­கின்­றது. பொறுப்புக் கூறு­வ­தற்­கான பொறிமுறை­ களை உரு­வாக்கி உரிய நட­வ­டிக்­கைகளை மேற்­கொண்டு நிலை­மாறு கால நீதியை நிலை­நாட்­டு­மாறு ஐ.நா.வின் பிரே­ர­ணைகள் இலங்கை அர­சாங்­கத்தைப் பல தட­வை­களில் கோரி­யுள்­ளன. இந்தக் கோரிக்கை தொடர்­பி­லான ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் பிரே­ர­ணை­க­ளுக்கு இலங்கை அர­சாங்கம் அனு­ச­ரணை வழங்கி அவற்றை தீர்­மா­னங்­க­ளாக நிறை­வேற்­று­வ­தற்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது என்­பது பலரும் அறிந்த விடயம். பொறுப்புக் கூறு­வ­தற்­கான நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கு­ரிய பொறி­மு­றை­களை உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் கடந்த அர­சாங்க காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.  குறிப்­பாக காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் பொறுப்புக் கூறு­வ­தற்­காக காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­லகம் என்ற பொறி­மு­றையை உரு­வாக்கி அதற்­கான ஆள­ணி­களை நிய­மித்து மாகாண, மாவட்ட மட்­டங்­க­ளிலும் துணை அலு­வ­ல­கங்­களை அரசு உரு­வாக்கியிருந்­தது. ஆனாலும் அந்த அலு­வ­ல­கத்­தினால் நடத்­தப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்த விசா­ர­ணைகள் எதிர்­பார்த்த வகையில் நடத்­தப்­ப­ட­வில்லை. காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பா­ன பொறி­முறை உரு­வாக்­கத்தில் ஐ.நா. அறி­வித்­தி­ருந்­த­வாறு பாதிக்­கப்­பட்ட மக்­களின் பங்­க­ளிப்பு இல்­லா­ம­லேயே அதற்­கான அலு­வ­லகம் உரு­வாக்­கப்­பட்­டது. தன்­னிச்சைப் போக்­கி­லான இந்த நட­வ­டிக்­கையை பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களும், சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களும் வன்­மை­யாகக் கண்­டித்­தி­ருந்­தன. அரசு உரு­வாக்­கி­யுள்ள அலு­வ­ல­கத்தில் நம்­பிக்கை யில்லை என தெரி­வித்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் ஆர்ப்­பாட்­டங்­களின் ஊடாகத் தமது எதிர்ப்பை  பல தட­வைகள் வெளி­யிட்­டி­ருந்­தனர்.   ஆனால் எதிர்ப்­பு­க­ளுக்கு மத்­தி­யிலும் அந்த அலு­வ­லகம் உரு­வாக்­கப்­பட்­டது. அந்த வகையில் யாழ்ப்­பா­ணத்தில் அமைந்த அலு­வ­ல­கத்தைத் திறந்து வைக்கும் நிகழ்­வுக்கு எதி­ரான எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களை முறி­ய­டிக்கும் வகையில் அதி­காலைப் பொழுதில் பார்­வை­யா­ளர்கள், பங்­க­ாளர்­க­ளான காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்­களின் பங்­க­ளிப்பின்றி இர­க­சி­ய­மாக அதி­கா­ரிகள் சென்று அதனை வைப­வ­ரீ­தி­யாகத் திறந்­து­விட்டு கத­வு­களைப் பூட்­டி­விட்டுச் சென்­றார்கள். அர்த்­த­மில்­லா­தது.... இத்­த­கைய திறப்பு விழா நிகழ்வைத் தொடர்ந்து யாழ். செய­ல­கத்தில் காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தைச் சேர்ந்த அதி­கா­ரி­க­ளுக்கும் காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வு­க­ளுக்குமிடையில் ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்த சந்­திப்பில் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தரப்பிலிருந்து கார­சா­ர­மான கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன.   அர­சாங்­கத்­தினால் உரு­வாக்­கப்­பட்ட காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­லகம், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் முன்­னைய விசா­ர­ணை­களைப் போலல்­லாமல் விரி­வான முறையில் நம்­பிக்­கைக்குரிய வகையில் விசா­ர­ணைகளை நடத்தும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட போதி லும் அத்­த­கைய செயற்­பா­டு­களை அதி­கா­ரி­க­ளினால் முன்­னெ­டுக்க முடி­ய­வில்லை. மாறாக முன்­னைய ஆணைக்­கு­ழுக்­க ளைப் போலல்­லாமல் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உண்­மையில் என்ன நடந்­தது, அவர்கள் என்­ன­வா­னார்கள் என்­பதைக் கண்­ட­றி­வ­தற்­கான விசா­ர­ணை­களை நியா­ய­மா­கவும் சுதந்­தி­ர­மா­கவும் இந்த அலு­வ­லகம் நடத்தி ஆட்கள் காணாமல் ஆக்­கப்­பட்­ட­மைக்கு நீதி­யையும் நியா­யத்­தையும் இந்த அலு­வ­லகம் பெற்­றுத்­தரும் என்ற நம்­பிக்­கையை முதலில் ஏற்­ப­டுத்த வேண்­டிய நிர்ப்­பந்­தத்­துக்கு ஆளா­கி­யது. இந்த நம்­பிக்­கை­யூட்டும் நட­வ­டிக்­கையை விழிப்­பு­ணர்வு செயற்­பாடு என்ற பெயரில் ஒரு பிர­சார நட­வ­டிக்­கை­யா­கவே அந்த அலு­வ­ல­கத்தைச் சேர்ந்த அதி­கா­ரிகள் மாவட்­டந்­தோறும் மேற்­கொண்­டி­ருந்­தனர். ஆனால் அந்த நட­வ­டிக்­கைகள் வெற்­றி­பெ­று­வ­தற்குப் பதி­லாக அந்த அலு­வ­ல­கத்­துக்கு எதி­ரான எதிர்ப்­பு­ணர்வை அதி­கப்­ப­டுத்­து­வ­தற்கே வழி வகுத்­தி­ருந்­தது. காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் பற்­றிய விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­ப­டு­கின்ற உண்­மைகள் வெளிப்­ப­டுத்­தப்­படமாட்டாது. அந்தத் தக­வல்கள் ஆட்­களைக் காணாமல் ஆக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ரான நீதி­மன்ற விசா­ர­ணை­க­ளுக்குப் பயன்­ப­டுத்தப்பட­மாட்­டாது. விசா­ர­ணை­களின் மூலம் காணாமல் ஆக்­கப்­பட்ட ஒருவர் கண்­ட­றி­யப்­பட்டால், அவர் இருக்­கின்ற இடமும் வெளிப்­ப­டுத்தப்பட­மாட்­டாது. ஆனால் காணாமல் போயுள்­ள­வர்­க­ளுக்கு மரணச் சான்­றி­த­ழுடன், இழப்­பீட்டுக் கொடுப்­ப­னவும் வழங்­கப்­படும். - இதுவே காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான அலு­வ­ல­கத்தின் செயற்­பா­டு­க­ளாக அமைந்­திருக்கும் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­ல­கத்தின் இத்­த­கைய செயற்­பா­டுகள் தங்­க­ளுக்குத் தேவையில்லை. தங்­க­ளுக்கு இழப்­பீட்டுக் கொடுப்­ப­ன­விலும் பார்க்க காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை யார் காணாமல் போகச் செய்­தார்கள் என்ற உண்மை நிலைமையைக் கண்­ட­றிந்து தெரி­விக்­க வேண்டும். அதற்குக் கார­ண­மா­ன­வர்கள், பொறுப்­பா­ன­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்தி, தங்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட வேண்டும் என்­பதே தமது கோரிக்கை என்றே பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தெரி­வித்து வரு­கின்­றனர். இதனால் ஐ.நா. பிரே­ர­ணைக்­க­மைய பொறுப்புக் கூறு­வ­தற்­காக அமைக்­கப்­பட்­டுள்ள காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­லகம் என்ற பொறி­முறை பாதிக்­கப்­பட்ட மக்­களின் கோரிக்­கையை நிறை­வேற்­றத்­தக்­க­தா­கவும் அவர்­க­ளுக்குப் பய­னற்­ற­தா­கவும் அமைந்­துள்­ளது. இந்த நிலையில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் கொல்­லப்­பட்­டு­விட்­டார்கள் என்று ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ ஐ.நா.வின் இலங்­கைக்­கான இணைப்­பாளர் ஹனா சிங்­க­ரிடம் தெரி­வித்­தி­ருப்­பது ஓர் அர்த்­த­மில்­லாத அர­சியல் ரீதி­யான கருத்­தா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது. முக்­கி­யஸ்­தர்­களின் முக்­கி­ய­மான சந்­திப்பு காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் அனை­வரும் கொல்­லப்­பட்­டு­விட்­டார்கள் என்று அரச தரப்பிலிருந்து முதன் முறை­யாக ஜனா­தி­ப­தி­யினால் வெளி­யி­டப்­பட்ட கருத்தை சாதா­ர­ண­மா­ன­தாகக் கொள்ள முடி­யாது. ஏனெனில் இந்தக் கருத்து வெளி­யி­டப்­பட்ட சந்­தர்ப்­பமும், சந்­திப்பும் அதி முக்­கி­யத்­துவம் வாய்ந்­தவை. இந்த நாட்டின் அதி­யுயர் அதி­கா­ர­முள்ள தலை­வ­ரா­கிய நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஒரு­வ­ருக்கும் ஐக்­கிய நாடுகள் மன்­றத்தின் இலங்­கைக்­கான இணைப்­பா­ள­ருக்குமிடையில் நடை­பெற்ற உயர் மட்டச் சந்­திப்­பாகும். இதில் கலந்து கொண்­ட­வர்கள் இரு­வ­ருமே இரு முனை­க­ளிலும் நிறு­வன ரீதி­யிலும் பதவி வழி­யிலும் முக்­கி­ய­மா­ன­வர்கள். அதே­போன்று பேசப்­பட்ட விட­யமும் அதிக முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது. அது அனைத்­து­லக அளவில் மனித உரி­மைகள் மற்றும் போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுடன் நெருங்­கிய தொடர்­பு­டைய ஒரு விட­ய­மாகும். இந்த விடயம் குறித்து நாட்டின் அரச தலைவர் என்ற ரீதியில் தெரி­விக்­கப்­பட்ட கருத்தை சாதா­ர­ண­மாகக் கொள்ள முடி­யாது. அத்­துடன் அரச தலைவர் என்ற ரீதியில் பொறுப்­பு­மிக்க நிலையிலிருந்தே கருத்து வெளி­யிட வேண்டும். வெளிப்­பட்­டி­ருக்க வேண்டும். காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் அனை­வரும் கொல்­லப்­பட்­டு­விட்­டார்கள் என்று அந்த விட­யத்­துடன் சம்­பந்­தமும் தொடர்பும் இல்­லாத ஒருவர் கூறு­கின்ற சாதா­ரண கருத்­தாக அதனை வெளி­யிட முடி­யாது. அதே­நேரம் அர­சியல் ரீதி­யான பிர­சாரம் உள்­ளிட்ட வேறு கார­ணங்­க­ளுக்­காக வெளி­யி­டப்­ப­டு­கின்ற கருத்தைப் போன்று இந்த விட­யத்தில் கருத்­து­ரைக்க முடி­யாது. ஏனெனில் ஜனா­தி­பதி கோத்த­பாய ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யா­வ­தற்கு முன்னர் யுத்த மோதல்கள் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் அரச படை­களின் செயற்­பா­டு­க­ளுக்கு மூல­கர்த்தா என்ற நிலையில் மிகவும் பொறுப்­பான பத­வி­யொன்றை வகித்­தி­ருந்­தவர். அப்­போ­தைய பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக அவர் பொறுப்­பேற்றுச் செயற்­பட்­டி­ருந்தார். பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் என் றால் சாதா­ரண நிலையில் அவர் அந்தப் பத­வியில் செயற்­பட்­டி­ருக்­க­வில்லை. மிகவும் அதி­கார பலத்­துடன் அதுவும் இரா­ணுவத் தள­ப­தியை மேவி யுத்தச் செயற்­பா­டு­களை நேர­டி­யாகக் கையாள்­கின்­ற­வ­ரா­கவும், யுத்­தத்தை வழி­ந­டத்­து­ப­வ­ரா­க­வுமே அவர் செயற்­பட்­டி­ருந்தார். தனது சகோ­த­ர­ரா­கிய நிறை­வேற்று அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருந்த ஜனா­தி­ப­தியின் வலது கர­மாக பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் என்ற பத­வியில் - அந்த அந்­தஸ்தில் அதீத உரி­மை­க­ளையும் உரித்­துக்­க­ளையும் கொண்டு செயற்­பட்­டி­ருந்தார். இதன் கார­ண­மா­கவே காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் விவ­காரம் தொடர்பில் அவர் மீது பொறுப்­புக்கள் சுமத்­தப்­பட்டு குற்­றச்­சாட்­டுக்­க­ளும்­கூட முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. பொறுப்பு இரட்­டிப்­பா­னது அர­சி­யல்­வாதி என்ற முன் அனு­ப­வமும் செயல்­வ­ழியும் இல்­லாமல் இத்­த­கைய பின்­பு­லத்தைக் கொண்டு ஆட்சி மாற்­றத்தின் மூலம் நேர­டி­யாக ஜனா­தி­ப­தி­யாகத் தேர்தல் மூல­மாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள நிலையில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் அனை­வரும் கொல்­லப்­பட்டு விட்­டார்கள் என்று நாட்டின் ஜனா­தி­பதி தெரி­விப்­பதை உண்மை என்று ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதே­வேளை அந்தக் கருத்தை அர­சி­யல்­வாதி ஒரு­வரின் கருத்து என்று சாதா­ர­ண­மாகக்கொண்டு கடந்து சென்­று­வி­டவும் முடி­யாது. காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களில் கணி­ச­மா­ன­வர்கள் இறுதி யுத்­தத்­தின்­போது அர­சாங்­கத்தின் கோரிக்­கையை ஏற்று, தங்­க­ளுக்குப் பாது­காப்பும் பொது­மன்­னிப்பும் கிடைக்கும் என்ற உத்­த­ர­வாதத்தின் மீது நம்­பிக்கை வைத்து இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­தார்கள். அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது, அவர்கள் எங்கே வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்ற கேள்­விக்குப் பதி­ல­ளிக்க வேண்­டிய தட்­டிக்­க­ழிக்க முடி­யாத பொறுப்பு அர­சாங்­கத்­துக்குள்­ளது. ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷவைப் பொறுத்­த­மட்டில் இது இரட்­டிப்புப் பொறு ப்­பா­னது. ஏற்­க­னவே யுத்­த­கா­லத்தில் காணாமல் போன­வர்கள் - குறிப்­பாக இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்­த­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்த வேண்­டிய கடப்­பாடு உள்­ளது. போர்க்­காலச் செயற்­பா­டு­களில் நேர­டி­யாகப் பங்­கு­கொண்ட இப்­போ­தைய ஜனா­தி­பதி என்ற வகையில் அந்தப் பொறுப்பும் கடப்­பாடும் மிகவும் கன­தி­யா­னது. ஐ.நா. அதி­கா­ரி­யு­ட­னான சந்­திப்­பின்­போது காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் ஜனா­தி­பதி தெரி­வித்த கருத்­துக்­களை ஜனா­தி­பதி செய­லகம் அறிக்கை மூல­மாக வெளி­யிட்­டுள்­ளது. அதன்­படி, இந்த காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் உண்­மை­யி­லேயே கொல்­லப்­பட்­டு­விட்­டார்கள். அவர்­களில் அநே­க­மானோர் எல்.­ரீ­.ரீ­.ஈ.யி­னரால் வலிந்து ஆட்­சேர்ப்பு செய்­யப்­பட்­ட­வர்கள். காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பங்கள் இதனை உறு­திப்­ப­டுத்தி இருக்­கின்­றன. ஆயினும் அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என தெரி­யாமல் அவர்­களை இந்தக் குடும்­பங்கள் காணாமல் போயுள்­ள­வர்கள் என கூறு­கின்­றார்கள். முறை­யான விசா­ர­ணை­களின் பின்னர் காணாமல் போயுள்­ள­வர்­க­ளுக்கு மரணச் சான்­றிதழ் வழங்­கவும், அதன் பின்னர் காணாமல் போயுள்­ள­வர்­களின் குடும்­பங்கள் வாழ்க்­கையைத் தொடர்ந்து நடத்­து­வ­தற்­கான உத­வி­களை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் விட­யத்­துக்­கான இந்தத் தீர்வு தங்­க­ளு­டைய அர­சியல் நிகழ்ச்சி நிரலைப் பாதித்­து­விடும் என்ற கார­ணத்­துக்­காக தமிழ் அர­சி­யல்­வா­திகள் இதனை நிரா­க­ரித்­துள்­ளார்கள் என்றும் ஜனா­தி­பதி இந்தச் சந்­திப்­பின்­போது குறிப்­பிட்­டுள்ளார்.   தட்­டிக்­க­ழிக்க முற்­ப­டு­வது நல்­ல­தல்ல ஆட்­களைக் காணா­ம­லாக்­கு­வது என்­பது சர்­வ­தேசக் குற்­றச்­செ­ய­லாகக் கணிக்­கப்­பட்­டுள்­ளது. சாதா­ரண நிலையில் சாதா­ர­ண­மா­ன­வர்கள் இந்தக் குற்றச் செயலைச் செய்ய முடி­யாது. இது பொது­வா­கவே நாடு­களில் பார­தூ­ர­மான குற்­றச்­செ­ய­லாகக் கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது. எனவே, பொறுப்­பான பத­வி­களிலுள்­ள­வர்­க­ளி­னாலும், பொறுப்­பு­மிக்க கட­மை­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளி­னாலும் ஆட்கள் காணாமல் ஆக்­கப்­ப­டு­வது என்­பது இன்னும் மோச­மான குற்றச் செய­லாகக் கரு­தப்­படும். அந்த வகையில் போர்க்­கா­லத்தில் இடம்­பெ­று­கின்ற ஆட்­களைக் காணாமல் ஆக்­கப்­ப­டு­கின்ற குற்றச் செய­லா­னது போர்க்­குற்றச் செய­லா­கவே சர்­வ­தேச மட்­டத்தில் கரு­தப்­ப­டு­கின்­றது. அத்­த­கைய ஒரு பார­தூ­ர­மான விவ­கா­ரத்தில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் அனைவரும் கொல்­லப்­பட்­டு­விட்­டார்கள். அதற்கு விடு­த­லைப்­பு­லி­களே பொறுப்பு எனக்கூறி கைக­ழுவி விட முடி­யாது. இந்த விடயத்தை அரசாங்கம் மிகுந்த பொறுப்போடு கையாள வேண்டும். காணா மல் ஆக்கப்பட்டவர்கள் எவ்வாறு காணாமல் போனார்கள் என்ற உண்மை நிலையை நியாயமான நம்பிக்கைக்கு உரிய வகையில் கண்டறிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக போர்முடிவின்போது பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக் கள் பார்த்திருக்க,  இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கும், சரணடைந் தவர்களுக்கும் என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து தெரிவிக்க வேண்டியது அர சாங்கத்தின் கட்டாயக் கடமையாகும். அதற்குரிய விசாரணைகளை நடத்து வதற்கு அரசாங்கம் தாமதமின்றி நடவ டிக்கைகளை முன்னெடுக்க முன்வர வேண் டும். யுத்தத்தை முன்னின்று நடத்தி, அதனை முடிவுக்குக் கொண்டு வந்தவர்களே இப்போது அதிகாரத்தில் இருக்கின்றார்கள். குறிப்பாக நிறைவேற்று அதிகார பலத்தைக் கொண்டவராக ஜனாதிபதி கோத்தபாய ராஜ­பக் ஷ திகழ்கின்றார். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந் ததன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர் கள் பற்றிய விவகாரம் படிப்படியாக மேலெழுந்தபோது அதற்கு முடிவு காண ப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்தப் பொறுப்பிலிருந்து அப்போதைய அரசாங் கமும் ஆட்சியாளர்களும் தவறி விட்டார்கள்.  அவர்கள் பதவியிழந்து மீண்டும் மக்க ளால் தெரிவு செய்யப்பட்டவர்களாக அதி காரத்துக்கு வந்துள்ள நிலையில் முன்னர் தவறவிடப்பட்ட விடயத்துக்கு நியாயமா னதும் நீதியான முறையிலும் தீர்வுகாண வேண்டும். அதனைத் தட்டிக்கழிக்க முற்படுவது நல்லதல்ல. ஏனெனில் போர்க்குற்றச் செய ல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய இந்த விவகாரம் நீறுபூத்த நெருப்பாக இருந்து எந்தவேளையிலும் பற்றி எரியக் கூடும். அத்தகைய நிலைமை என்பது அனைவருக்கும் பாரதூரமான பாதிப்புக் களை ஏற்படுத்துவதாகவே இருக்கும். எனவே நிலைமைகளின் தீவிரத் தன் மையை உணர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் மனங்களை ஆறுதல்படுத்தவும் தங்கள் மீது சூழ்ந்துள்ள பழிபாவங்களைத் துடைத் தெறிவதற்காகவும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதே முக்கியம். - பி. மாணிக்கவாசகம் https://www.virakesari.lk/article/73803
  • நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் குழாம் அறிவிப்பு   By Mohamed Azarudeen -   © BCCI   தற்போது நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இந்த மாதம் 24ஆம் திகதி ஆரம்பாகும் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் நியூசிலாந்துடன் விளையாடவுள்ளது. இந்த T20 தொடரின் பின்னர் இந்திய – நியூசிலாந்து அணிகள் இடையில் 3 ஒருநாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களும் இடம்பெறவுள்ளன. இந்த சுற்றுப்பயணத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் மோதும் 15 பேர் அடங்கிய இந்திய ஒருநாள் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.  அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் குழாத்தில் முன்வரிசை துடுப்பாட்ட வீரரான சிக்கர் தவான் தோற்பட்டை உபாதை காரணமாக விலகியிருக்கின்றார். அண்மையில் நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரினை வெற்றி கொள்வதில் முக்கிய பங்கு வகித்த சிக்கர் தவான் தற்போது விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான  பிரித்வி சாஹ் மூலம் இந்திய ஒருநாள் குழாத்தில் பிரதியீடு செய்யப்பட்டிருக்கின்றார்.  இதுவரையில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் பெறாத பிரித்வி சாஹ் நியூசிலாந்தின் பதினொருவர் அணிக்கு எதிராக அண்மையில் இடம்பெற்ற List A போட்டி ஒன்றில் 150 ஓட்டங்கள் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது. பிரித்வி சாஹ்வின் மாற்றம் தவிர இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற அதே அணியினையே நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் களமிறக்குகின்றது.  அதன்படி, இருக்கும் இந்திய ஒருநாள் அணியின் துடுப்பாட்டம் அதன் அணித்தலைவர் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் லோக்கேஷ் ராகுல் ஆகியோர் மூலம் பலப்படுத்தப்படுகின்றது.  இவர்கள் ஒருபுறமிருக்க ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி சாஹ் மற்றும் மனீஷ் பாண்டே ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணிக்கு மேலதிக துடுப்பாட்ட வீரர்களாக வலுச் சேர்க்கின்றனர். இந்திய அணியின் பந்துவீச்சுத் துறையினை நோக்கும் போது அதன் வேகப் பந்துவீச்சுத் துறை ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சமி, நவ்தீப் சைனி போன்றோரினால் பலப்படுத்தப்பட குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் ரவிந்தீர ஜடேஜாவுடன் இணைந்து சுழல் பந்துவீச்சாளர்களாக இந்திய கிரிக்கெட் அணிக்கு பலம் சேர்க்கவுள்ளனர். நியூசிலாந்து – இந்திய அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் பெப்ரவரி மாதம் 05ஆம் திகதி ஹேமில்டன் நகரில் ஆரம்பமாகின்றது. இந்திய ஒருநாள் குழாம் 
  • நான் கேட்ட அளவில் அவர் உச்சரிப்புத்தான் தமிழ்-தனமாக இருந்ததே ஒழிய மொழிநடையில் பிழையேதும் இல்லை. தவிரவும் ஒரு முன்னாள் போராளி, இந்தளவுக்காவது முயற்சிக்கிறாரே? எமது பிரச்சினைகள் பற்றி எடுத்துச் சொல்ல, நெஞ்சுரமும், பிரட்சினை பற்றிய தெளிவான புரிதலுமே போதும். மொழியை பார்த்துக்கொள்ள ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் போதும். பிரபாவும் தமிழ்செல்வனும் எடுத்து சொல்லாததையா நன்கு படித்த, நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் சம்பந்தனும், சுமந்துரனும் விக்கியும் கூறி விட்டார்கள்? குருசாமியை படித்தவர் என வரவேற்கும் நீங்கள், அந்த படித்தவரை நியமிக்கும், நீங்கள் ஆதரிக்கும் நல்ல முடிவை, எடுத்தது செல்வம் என்ற படிக்காத முன்னாள் ஆயுததாரி என்பதை மறுக்க முடியுமா? செல்வத்தின் மீதோ அவரின் அரசியல் மீதோ எனக்கு துளியூண்டும் நம்பிக்கை இல்லை. ஆனால் இதற்கும் படிப்புக்கும் மொழி ஆற்றலுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.  
  • உபாதைக்குள்ளாகிய இஷாந்த் சர்மா நியூஸி. டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவாரா? By Mohammed Rishad -     தோள்பட்டை காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் நியூஸிலாந்து தொடரில் இருந்து விலகிய நிலையில், வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவும் கணுக்கால் காயம் காரணமாக நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ரஞ்சிக் கிண்ண போட்டியில் டெல்லி அணிக்காக இஷாந்த் சர்மா விளையாடினார். விதர்பா அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் பந்துவீசும் போது இஷாந்த் சர்மாவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வலி தாங்க முடியாத இஷாந்த் சர்மா பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார்.  அதன்பின் இஷாந்த் சர்மாவுக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்–ரே பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இஷாந்த் சர்மாவின் கணுக்கால் தசைநார் கிழிந்துள்ளது. ஆனால் எலும்பு முறிவு ஏதும் ஏற்படவில்லை.  இந்த தசைநார் கிழிவு சற்று தீவிரமானது என்பதால் குறைந்தபட்சம் 6 வாரங்கள் ஓய்வில் இருக்க இஷாந்த் சமாவுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.  இதனால் நியூஸிலாந்துக்கு எதிராகப் பெப்ரவரி 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மா பங்கேற்க வாய்ப்பில்லை என்று டெல்லி கிரிக்கெட் அமைப்பின் பொதுச்செயலாளர் வினோத் திஹாரா தெரிவித்துள்ளார். ஆனால், பிசிசிஐ விதிமுறைப்படி, பிசிசிஐ சார்பில் மருத்துவர்கள் குழு இஷாந்த் சர்மாவைப் பரிசோதித்து, ஸ்கேன், எக்ஸ்–ரே போன்ற ஆய்வுகளை மேற்கொள்வார்கள். அதன்பின் இறுதியாக பிசிசிஐயின் முடிவு அறிவிக்கப்படும்.  நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் இந்த காயத்தால் அவர் அணியில் இடம் பெறுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  இந்த நிலையில், இஷாந்த் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக டெஸ்ட் தொடருக்கு இளம் வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறலாம் என இந்திய கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://www.thepapare.com/ishant-sharma-suffers-ankle-injury-ahead-of-new-zealand-test-series-tamil/
  • ஷேன் வோர்னின் அணிக்கு பயிற்சியளிக்கும் சச்சின் டெண்டுல்கர்   By Mohammed Rishad -   ©Getty image   அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டுவதற்கான நல நிதி கிரிக்கெட் போட்டியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர்களான ரிக்கி பொண்டிங், ஷேன் வோர்ன் ஆகியோர் தலைமையில் இரு அணிகள் பெயரிடப்பட்டுள்ளன.  ரிக்கி பொண்டிங்கின் அணிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் கோர்ட்னி வோல்ஷ் பயிற்சியாளராகவும், ஷேன் வோர்ன் தலைமையிலான அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பேஷ் டி20 லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பாக எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி புஷ்பயர் கிரிக்கெட் பேஷ் என்ற பெயரில் இந்த கண்காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.  காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள தீயணைப்பு வீரர்கள், மீட்பு மற்றும் நிவாரண பணியாளர்கள், தன்னார்வலர்கள், அவசரகால பணியாளர்கள் ஆகியோரை அங்கீகரிக்கும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்படும். இந்தப் போட்டியின் மூலம் கிடைக்கும் டிக்கெட் கட்டணம் அனைத்தும் காட்டுத் தீயை அணைக்க உதவி வரும் ரெட் க்ரொஸ் அமைப்புக்கு வழங்கப்பட உள்ளது. இந்தப் போட்டியில் ரிக்கி பொண்டிங், ஷேன் வோர்ன், ஜஸ்டிங் லேங்கர், ஆடம் கில்கிறிஸ்ட், பிரட் லீ, ஷேன் வொட்ஸன், அலெக்ஸ் பிளாக்வெல், மைக்கல் கிளார்க் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர்;. இந்நிலையில் ரிக்கி பொண்டிங் அணிக்கு சச்சின் டெண்டுல்கரும், ஷேன் வோர்ன் அணிக்கு கோர்ட்னி வோல்ஷும் பயிற்சியாளர்களாகச் செயல்படுவார்கள் என்ற தகவலை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைவர் கெவின் ரொபர்ட்ஸ் வெளியிட்டுள்ளார்.  இதேவேளை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி கென் ரொபர்ட் கூறுகையில், “சச்சின் டெண்டுல்கர், கோர்ட்னி வோல்ஷ் இருவரின் பங்களிப்பையும் நாங்கள் மனமுவந்து வரவேற்கிறோம்.  இருவரும் மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவுஸ்திரேலிய மக்கள் இந்தப் போட்டியை நேரில் பார்க்க வந்து நிதியுதவி அளிக்க வேண்டும்” என தெரிவித்தார்.  அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உருவாகியுள்ள காட்டுத் தீயால் இதுவரை 29 பேர் பலியாகியுள்ளார்கள். 2,000 மக்கள் வீடுகளை இழந்துள்ளார்கள். இந்தக் காட்டுத் தீயில், 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் பலியாகின.  சுமார் 60 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு காட்டுத் தீக்கு இரையாகியுள்ளன. http://www.thepapare.com/sachin-tendulkar-courtney-walsh-to-coach-aussie-bushfire-relief-match-tamil/