Sign in to follow this  
சாமானியன்

ஆணுக்குப் பெண் தாலி கட்டுதல்

Recommended Posts

1 hour ago, புங்கையூரன் said:

வாழ்க்கை என்பது நகர்ந்து செல்லும் போது.....காலத்துக்குக் காலம்....சில பழக்க வழக்கங்களையும்... தன்னுடன் காவிக்கொண்டு செல்கின்றது...!

அந்தப் பழக்க வழக்கங்கங்களை....இன்னொரு கால கட்டத்தில் நின்று பார்க்கும் போது...அவை முட்டாள் தனமாகத் தோன்றுவது...வழமை தான்!    எனது கருத்தானது....அந்தப் பழக்க வழக்கங்களை.....அந்தக் கால கட்டத்தில் மட்டுமிருந்தே பார்க்க வேண்டும்!

ஆபிரிக்காவில்...சொண்டில் தட்டை ஒட்டுவது....ஒரு ஆணாதிக்க சமுதாய அமைப்பின் முக்கிய அம்சமாகக் கருதப் பட்டது! ஒரு ஆபிரிக்கப் பெண்...அந்த வழக்கத்தைப் கடைப்பிடிக்க மறுத்துப் போராடியிருந்தால்...அவளுக்கு மாப்பிளையே கிடைத்திருக்காது என்பது மட்டுமன்றி......அவள் அந்தக் குழுமத்திலிருந்தே....விவக்கி வைக்கப் பட்டு....மரணித்திருப்பாள்!

அதே போல அந்தக் காலத்து ஜப்பானிலும்....சீனாவிலும்...கால்களைச் சிறிதாக்குவதும் தனது அழகை...ஒரு பெண் அதிகரிப்பதற்காகத் தான்....!அன்னநடை....என்று எமது புலவர்கள் வர்ணிக்கும் அந்த நடை நடப்பதற்க்காகவே....பாதங்கள் சிறிதாக்கப் படுகின்றன!

இவற்றில் உள்ள ஒரு ஆச்சரியம் என்னவெனில்....இவை அனைத்தும் பெண்களாலேயே செய்யப்படுகின்றன என்பது தான்!

வரலாற்றை அதன் இயங்குநிலையில் இருந்தே பார்கவேண்டும். வரலாற்றை இன்றைய நிலையில் இருந்து மதிப்பிட முடியாது என்பதை நானும் ஏற்கிறேன்.

ஆனால் கடந்தகாலத்தில் ஒன்றை செய்தோம் என்பதற்காக அதை கேள்வியின்றி இப்போதும் செய்யவேண்டும் எனும் கருத்தில்தான் உடன்பாடில்லை.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

Image may contain: one or more people

இதுகும்... வித்தியாசமான கலியாணம்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: one or more people

இதுகும்... வித்தியாசமான கலியாணம்.

அடப்பாவி .....முதலிரவில் இருந்து  உதைத்தானே செய்யப்போகிறாய், அதுக்கிடையில் என்ன அவசரம்டா மகனே உனக்கு....!  🤔 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
35 minutes ago, suvy said:

அடப்பாவி .....முதலிரவில் இருந்து  உதைத்தானே செய்யப்போகிறாய், அதுக்கிடையில் என்ன அவசரம்டா மகனே உனக்கு....!  🤔 

அவர்  முதலிரவில்  இருந்து பெண் பாத்திரத்தை தான்  ஏற்கலாம் என  நினைத்து

முதலிலேயே காலில்  விழுந்துஆரம்பிக்கிறாரோ  தெரியவில்லை😂

விடுங்கண்ணயா

நாம்  பட்ட ......  படுக  இவ்வையகம்

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, suvy said:

அடப்பாவி .....முதலிரவில் இருந்து  உதைத்தானே செய்யப்போகிறாய், அதுக்கிடையில் என்ன அவசரம்டா மகனே உனக்கு....!  🤔 

 நான் இண்டுவரைக்கும் கால்லை விழுந்தது கிடையாது. ஏனெண்டால் நான் ஆண்சிங்கமாக்கும்

Ãhnliches Foto

😂

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

 நான் இண்டுவரைக்கும் கால்லை விழுந்தது கிடையாது. ஏனெண்டால் நான் ஆண்சிங்கமாக்கும்

Ãhnliches Foto

😂

 குமாரசாமி அண்ணா...  பெண் சிங்கத்திடம், ஒரு ஆண் சிங்கம்... மண்டியிட்ட போது...  
கடி வாங்கி ஓடும், ஒரு காணொளியை முன்பு பார்த்தேன்.
அதனை, இப்போ தேடினால்...  கண்டு பிடிக்க முடியவில்லை. 
காணொளியை பார்த்தால்,   உங்களுக்கே.... ச்சீய்.. என்று போயிடும். :grin:

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

 நான் இண்டுவரைக்கும் கால்லை விழுந்தது கிடையாது. ஏனெண்டால் நான் ஆண்சிங்கமாக்கும்

Ãhnliches Foto

😂

எல்லா சிங்கங்களும் சக்தி ஏறி சவாரி போற வாகனம்தான் 😂

13 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: one or more people

இதுகும்... வித்தியாசமான கலியாணம்.

எனக்கென்னமோ அந்தாள் மெட்டி போல ஏதையோ காலில் அணிவிப்பது போலவே படுகிறது. 

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, தமிழ் சிறி said:

 குமாரசாமி அண்ணா...  பெண் சிங்கத்திடம், ஒரு ஆண் சிங்கம்... மண்டியிட்ட போது...  
கடி வாங்கி ஓடும், ஒரு காணொளியை முன்பு பார்த்தேன்.
அதனை, இப்போ தேடினால்...  கண்டு பிடிக்க முடியவில்லை. 
காணொளியை பார்த்தால்,   உங்களுக்கே.... ச்சீய்.. என்று போயிடும். :grin:

சிறித்தம்பி! ஆயிரத்திலை ஒண்டு அப்பிடி நடக்கும் அதைப்போய் எல்லாம் பெரிசாய் எடுக்கேலாது. 😎

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, goshan_che said:

எல்லா சிங்கங்களும் சக்தி ஏறி சவாரி போற வாகனம்தான் 😂

சொன்னாலும் சொல்லாட்டிலும் சைவசமயத்திலை கும்புடுற தெய்வங்களிலை முக்காவாசியும் பெண்தெய்வங்கள்.😀
 

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, குமாரசாமி said:

சொன்னாலும் சொல்லாட்டிலும் சைவசமயத்திலை கும்புடுற தெய்வங்களிலை முக்காவாசியும் பெண்தெய்வங்கள்.😀
 

இதை ஒருவகை de-humanizing என்றே நான் பார்கிரேன். ஒரு பகுதியினர்கு மனித உரிமைகளை மறுப்பதன் ஆரம்பம் அவர்களை மனிதர் இல்லை என சித்தரிப்பது. ஒன்றில் அவர்களை மனிதரிலும் கீழான விலங்குகளாக சித்தரிக்கலாம் (ஆபிரிக்க கறுபின அடிமைகளை மனிதருக்கும் குரங்கிற்கும் இடையேயான இனமாக சித்தரித்தது, இந்தியாவின் தெற்கே வாழும் இனக்கூட்டத்தை குரங்காக (அனுமான்) சித்தரித்தது).

அல்லது அவர்களை பூஜிக்க வேண்டிய பொருளாக ஆக்கிவிடலாம். பூஜிக்க வேண்டியவள் பெண். அவள் எப்படி இருப்பாள்? எம் பெண் தெய்வங்களை போல, எத்தனை காமாந்திரனாக இருப்பினும்,  புருசனை தலையில் வைத்து தாசி வீட்டுக்கு காவிச் செல்வவாள். பூமாதா போல் எதையும் தாங்கும் பொறுமை உள்ளவள். சக்தி போல ஆயிரம் கரங்களால் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வாள். 

அப்போ இப்படி தெய்வாம்சத்தோடு இல்லாமல், ரத்தமும், சதையும், மனித உணர்சிகளும், நன்மையும், தீமையும், பிணியும், மூப்பும் கலந்த பெண்? அவள் பெண்ணுக்கான இலக்கணத்தையே இழந்துவிட்டவள். அவள் பெண்ணே இல்லை. மனிதப்பிறவியே இல்லை.

அவளை தெருவில் வைத்து நாயை கொல்லுவது போல கொல்லலாம். கொலை செய்துவிட்டு அவளின் பெயரை களங்கப்படுத்தி கொலையை நியாயமும் படுத்தலாம். ஏனெனில் அவள் மனித/பெண் க்கான இலக்கணத்தில் இருந்து தவறியவள்.

#இதுதான் சூட்சுமம்.

 

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this