• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

இராணுவத்தளபதி – கார்தினல் சந்திப்பு

Recommended Posts

இராணுவத்தளபதி – கார்தினல் சந்திப்பு

 

9db80ce3b4adacda2a5f2879cc166587_XL

இலங்கை இராணுவத்தில் புதிதாக பதவியேற்ற இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இம் மாதம் (10) ஆம் திகதி பகல் கொழும்பு 8 இல் அமைந்துள்ள பேராயர் வாசஸ்தலத்தில் பேராயர் கார்தினல் மெல்கம் ரஞ்ஜித் அவர்களை சந்தித்தார்.

பேராயர் வாசஸ்தலத்திற்கு சென்ற இராணுவ தளபதியை பேராயரது தனிப்பட்ட உதவியாளர் கலாநிதி ஐவன் விதானகே, இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் மஞ்சுள கருணாரத்ன நுழைவாயிலில் வைத்து வரவேற்றனர்.

பின்னர் இராணுவ தளபதி பேராயரை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார். இதன் போது இராணுவ தளபதி எதிர்காலத்தில் இராணுவ நல்லிணக்க முயற்சிகள், பேரழிவிற்குள்ளான சீயோன் தேவாலயம் மற்றும் கட்டுவபிட்டி தேவாலயத்தின் இராணுவ சீரமைப்பு பணிகள், தேசத்தை கட்டியெழுப்பும் பணிகளுக்கு இராணுவத்தின் ஒத்துழைப்பு தொடர்பாக பேராயருக்கு விளக்கி கூறினார்.

பேராயர் தன்னை சந்திக்க வருகை தந்த புதிய இராணுவ தளபதியை மகிழ்ச்சியுடன் வரவேற்று அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார். பின்னர் இந்த நாடானது பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருந்த போது இராணுவத்தினரது பங்களிப்பு, அர்ப்பணிப்பு தொடர்பாகவும் தளபதியுடன் பேசினார்.

எங்கள் நாட்டு மக்களால் போற்றப்பட்ட ஒரு அனுபவமிக்க இராணுவ அதிகாரி என்ற முறையில் நாட்டிற்கு பாதுகாப்பை வழங்குவதற்கான உங்கள் முயற்சிகளில் எனக்கு முழு நம்பிக்கையுள்ளது. அத்துடன் எதிர்வரும் தினங்களில் தேர்தல்கள் இடம்பெறவிருப்பதனால் உங்களுக்கு பாரிய பொறுப்புக்கள் வழங்கப்படும் என்று நினைக்கின்றேன். என்று பேராசிரியர் தளபதிக்கு கூறினார்.

மேலும் பேராயர் இராணுவ தளபதி மனிதாபிமான நடவடிக்கைகளின் போது நாட்டிற்காக அவராற்றிய பாரிய சேவையை கௌரவித்தும் இராணுவத்தில் வெவ்வேறான துறைகளில் சிறப்பான திறன்களை கொண்ட அதிகாரியென்று பாராட்டியும், சர்வதேசத்தினால் இராணுவ தளபதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நியாயமற்ற குற்ற அழுத்தங்களுக்கு முகமளிக்க உறுதியாய் இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

மேலும் இராணுவ தளபதி கருத்து தெரிவிக்கையில் இராணுவம் எப்போதும் நாட்டின் பாதுகாப்பிற்காக பொறுப்புணர்ச்சியுடன் செயல்படும். அதே நேரத்தில் நாட்டின் அனைத்து பொதுமக்களது பாதுகாப்பையும் உறுதி செய்யும். என்று வலியுறுத்தினார்.

இறுதியில் இராணுவ தளபதி பேராயரது ஆசிர்வாதத்தையும் பெற்றுக் கொண்டு பேராயர் வாசஸ்தலத்திலுள்ள பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் தனது வருகையை நினைவு படுத்தும் முகமாக கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.(அ)

-தகவல் திணைக்களம்-

http://www.dailyceylon.com/189234/

Share this post


Link to post
Share on other sites

எங்கள் நாட்டு மக்களால் போற்றப்பட்ட ஒரு அனுபவமிக்க இராணுவ அதிகாரி என்ற முறையில் நாட்டிற்கு பாதுகாப்பை வழங்குவதற்கான உங்கள் முயற்சிகளில் எனக்கு முழு நம்பிக்கையுள்ளது. அத்துடன் எதிர்வரும் தினங்களில் தேர்தல்கள் இடம்பெறவிருப்பதனால் உங்களுக்கு பாரிய பொறுப்புக்கள் வழங்கப்படும் என்று நினைக்கின்றேன். என்று பேராசிரியர் தளபதிக்கு கூறினார்.

 

பேராயர் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய வேதாளம் மாதிரி தெரிகின்றார். 

உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கு மிகவும்  மனம் வருந்தினார், அரசு உண்மையை சொல்லவேண்டும் என்கிறார், உலகத்தையும் நம்ப வைத்தார். 

அதேவேளை உலகமே தமிழன படுகொலைக்கு காரணமானவர் ஒருவரை நியமிப்பது தவறு என்ற பொழுதும் இவர் அவருடன் சந்திக்கிறார். 

Share this post


Link to post
Share on other sites
On 9/12/2019 at 8:19 PM, nunavilan said:

இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் மஞ்சுள கருணாரத்ன

இராணுவ கிறிஸ்தவ சங்கம்  .......ஆகா ஆகா   .....டச்சுக்காரன்,போர்த்துகீஸ்காரங்களின் வாரிசுகளுக்கு இராணுவத்தில உயர்பதவி சங்கம் ......ம்ம்ம்ம்ம்ம்ம்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this