Sign in to follow this  
ampanai

இலங்கையின் இரு பல்கலைக்கழகங்களுக்கு கிடைத்த அந்தஸ்து

Recommended Posts

“தி டைம்ஸ் ஹையர் எடியுகேஷன்” (Annual Times Higher Education world rankings 2020 ) பத்திரிக்கை, உலகில் சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் 92 நாடுகளில் இருந்து 1400 பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பட்டியலில் உலகிலுள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக 4 ஆவது தடவையாக முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 3 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

இந்நிலையில், முதல் பத்து இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல் வருமாறு, 

1. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் - பிரித்தானியா

2. கலிபோர்னியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் - அமெரிக்கா

3.கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் - பிரித்தானியா

4. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் - அமெரிக்கா

5. மாசசூசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் - அமெரிக்கா

6 பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் - அமெரிக்கா

7. ஹார்வார்ட் பல்கலைக்கழகம் - அமெரிக்கா

8. யேல் பல்கலைக்கழகம் - அமெரிக்கா

9.சிக்காக்கோ பல்கலைக்கழகம் - அமெரிக்கா

10.இம்ப்றீயல் கொலேஜ் லண்டன் - பிரித்தானியா

இத்தரவரிசைப்பட்டியலில் இலங்கையின் இரண்டு பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளது.

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பேராதனைப் பல்கலைக்கழகம் முதலிடம் பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகம் உலகத் தரவரிசையில் 401 முதல் 500 வரையான பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இப்பட்டியிலுள்ள மற்றொரு இலங்கை பல்கலைக்கழகமான கொழும்பு பல்கலைக்கழகம் உலகத் தவரசையில் 100010 பிரிவில் இடம்பெற்றுள்ளது.

https://www.virakesari.lk/article/64644

 

Share this post


Link to post
Share on other sites

டைம்ஸ் நிறுவனம் வெளியிடும் உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்தது சென்னை அண்ணா பல்கலைக்கழகம்

2020ம் ஆண்டுக்கான பட்டியலை டைம்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டது. அதில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதல் இடத்தையும், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் 2ம் இடத்தையும் பிடித்துள்ளது. அதனைத்தொடர்ந்து 3-வது இடத்தில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உள்ளது. முதல் 10 இடங்களில் அமெரிக்காவை சேர்ந்த 7 உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் இங்கிலாந்தின் 3 உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே மாறி மாறி இடம் பிடித்துள்ளன. பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம், இந்தூர் ஐ.ஐ.டி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில் 300 முதல் 400 இடங்களுக்கு பின்தள்ளப்பட்டுள்ளன. இதேபோல் மும்பை, டெல்லி, கோரக்பூர் ஐ.ஐ.டிகள் 400 முதல் 500வது இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளன.

காந்திநகர், ரூர்கி ஐ.ஐ.டிகள் மற்றும் மும்பை கெமிக்கல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியன 500 முதல் 600 இடங்களில் உள்ளன. இதேபோல், சென்னை, புவனேஸ்வர், கான்பூர், கவுஹாத்தி ஹைதராபாத் ஐ.ஐ.டி.க்களும், கோவை அம்ரிதா விஷ்வ வித்யாபீடம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், புனேயின் இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை 600 முதல் 800 இடங்களில் உள்ளன. அதுமட்டுமல்லாது, இதுவரை பட்டியலில் இடம் பெறாமல் இருந்த சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கோவை வேளாண் பல்கலைக்கழகம், திருச்சி என்.ஐ.டி, வேலூர் வி.ஐ.டி, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், கோவை பி.எஸ்.ஜி பல்கலைக்கழகம், சென்னை எஸ்.ஆர்.எம். உள்ளிட்ட 54 கல்வி நிறுவனங்கள் இந்த பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ளன.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=525499

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this