Jump to content

மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி என்பவற்றை உறுதிப்படுத்துங்கள் - ஐரோப்பிய ஒன்றியம்


Recommended Posts

(நா.தனுஜா)

மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி என்பவற்றை உறுதிப்படுத்துவது குறித்த இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நிகழ்த்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இலங்கையிடம் வலியுறுத்தியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையின் உறுதியான பொருளாதார மேம்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்வதற்கு எப்போதும் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்திருக்கிறது.

Credential-4.jpg

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசீர்வாதத்திற்கும், ஐரோப்பிய ஒன்றிய கவுன்ஸிலின் தலைவர் டொனால்ட் டஸ்க்கிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 

இச் சந்திப்பின் போது இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் அண்மைக்காலமாக வலுவடைந்திருக்கும் இருதரப்பு உறவு குறித்தும், இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டமை தொடர்பிலும் இருதரப்பினராலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. 

மேலும் தற்போது இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாக ஐரோப்பிய ஒன்றியம் காணப்படுவதுடன், அதனுடனான வாணிபத்தின் மூலமான வருடாந்த வருமானம் 5 பில்லியன் யூரோவிற்கும் அதிகமாக உள்ளமை குறித்தும் ஆராயப்பட்டது. 

https://www.virakesari.lk/article/64669

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி என்பவற்றை உறுதிப்படுத்துவது குறித்த இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நிகழ்த்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இலங்கையிடம் வலியுறுத்தியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையின் உறுதியான பொருளாதார மேம்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்வதற்கு எப்போதும் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்திருக்கிறது.

அவன்கார்ட் விவகாரம் : கோத்தபாய உட்பட 8 பேரையும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

(எம்.எப்.எம்.பஸீர்)

அவன்கார்ட் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை முன்னெடுத்து செல்ல அனுமதியளித்ததன் ஊடாக அரசாங்கத்துக்கு 1,140 கோடி ரூபா நட்டதை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை ஆட்சேபித்து கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மனுவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அவ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு  உத்தரவிட்டுள்ளது.

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமே  இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் முன்னாள் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, ஆணைக் குழுவின் எழுத்து மூல அனுமதியைப் பெறாமலேயே தான் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், எனவே அப்படி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிவான் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை ரத்து செய்து தான் உள்ளிட்ட 8 பேரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்குமாறும் கோத்தபாய ராஜபக்ஷவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் இந்த  உத்தர்வைப் பிறப்பித்தது.

எனினும் இலஞ்ச ஊழல் சட்டத்தின் 78 (1) ஆம் பிரிவின் கீழ் ஆணைக் குழுவின் எழுத்து மூல அனுமதியைப் பெற்றுக்கொண்டு, இந்த விவகாரத்தில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக புதிதாக வழக்கொன்றினை தாக்கல் செய்த எந்த தடையும் இல்லை என மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பில் சுட்டிக்கடடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/64682

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி என்பவற்றை உறுதிப்படுத்துவது குறித்த இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நிகழ்த்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இலங்கையிடம் வலியுறுத்தியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம்"

≠====≠

நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்..😢

DqKUPiJVAAEaHOj.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.