• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
நிழலி

ரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்

Recommended Posts

27 வயதான தன் முன்னாள் மனைவியை வாளால் பல முறை வெட்டி ஈழத் தமிழர் ஒருவர் படுகொலை செய்துள்ளார்.

நேற்று புதன் கிழமை (செப்ரம்பர் 11) 27 வயதான தர்சிகா ஜெகநாதனை 38 வயதான சசிகரன் தனபாலசிங்கம் வீட்டின் நடைப்பாதைக்கு அருகில் வைத்து தள்ளி விழுத்திய பின்னர் வாளால் பல முறை வெட்டி படுகொலை செய்துள்ளார். படுகொலை செய்த பின்னர் காரில் ஏறி தப்பிச் சென்றவர் பின்னர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இவர் கொல்லப்பட்டவரின் முன்னாள் கணவர் என்று சில செய்திகளும், விவாகரத்து வழக்கு இன்னும் முடியவில்லை என வேறு சில செய்திகளும் சொல்கின்றன.

இது ரொரண்டோ மாநகரில் இவ் ஆண்டில் இடம்பெற்ற 45 ஆவது கொலையாகும்.

-----

Man, 38, charged with 1st-degree murder in fatal Scarborough machete attack

Tharshika Jeganathan, 27, died of her injuries Wednesday evening in Toronto neighbourhood

machete-attack.jpg
Police tape is set up in the Toronto suburb of Scarborough on Thursday morning. Police have charged a 38-year-old Toronto man with first-degree murder after a woman died in a machete attack Wednesday evening. (Linda Ward/CBC)

A 38-year-old man has been charged with first-degree murder after a woman, who was attacked with a machete, died in Toronto's Scarborough neighbourhood, police say.

The shocking attack, witnessed by several people in the Scarborough neighbourhood of Morrish and Ellesmere roads, happened around 6:15 p.m. ET on Wednesday evening.

"Witnesses observed a male suspect running around, chasing a female victim with a machete," said Insp. Stacey Davis on Thursday morning.

When officers arrived, they located Tharshika Jeganathan, 27, who succumbed to her injuries on the scene.

"Obviously, it was a machete so there were substantial injuries to the female victim," Davis said. 

Davis told reporters that Toronto resident Sasikaran Thanapalasingam drove to the nearby 42 Division police station and surrendered around 7 p.m. Wednesday. He and Jeganathan had a "previous domestic relationship," Davis said.

Thanapalasingam is scheduled to appear in court on Thursday afternoon. 

machete-attack.jpg
Witnesses say a man and a woman were seen arguing on this street near Morrish and Ellesmere on Wednesday evening. Police say the man struck the woman repeatedly with a machete. She later died. (John Grierson/CBC)

'We could have done something about it'

Local resident Aamir Farooqi said he saw a man holding a woman's shoulders while they were arguing.

"They were arguing about something — I thought it was like a regular thing what goes on, so I didn't pay much attention," Farooqi said. "If I knew that this was going to happen, we could have done something about it, but you never know."

Blanche Barretto said she and her husband only saw the aftermath of the incident, which included seeing the body of the woman lying on the ground.

"It was sad. We were so disturbed all night. We haven't slept," she said.

On Thursday morning, a fire crew could be seen hosing down the part of the street where the attack happened.

machete-attack.jpg
Firefighters can be seen hosing down the section of the sidewalk where the attack happened. (Martin Trainor/CBC)

The homicide unit is investigating, police say.

Police are asking anyone with information about the incident or the two people involved to come forward. 

https://www.cbc.ca/news/canada/toronto/woman-injured-machete-attack-scarborough-1.5280226

Share this post

Link to post
Share on other sites

1. இறந்தவரின் ஆத்மா சாந்தியடையட்டும் 
2. கொலை செய்யத்தவர் என குற்றம் சாட்டப்பட்வர் விடயத்தில் சட்டம் தனது கடமையை செய்யும் 
3. இவ்வாறான செயல் கனேடிய தமிழர் விடயத்தில் வெகு அரிது. ஒரு சமூகமாக நாம் இவ்வாறான செயல்கள் நடக்காமல் இருக்க எம்மாலானதை செய்யவேண்டும். கனேடிய சமூக சட்டங்களுக்கு ஏற்ப வாழ மாறவும் வேண்டும். 

Share this post

Link to post
Share on other sites

என்னத்தை சொல்ல...நாடு விட்டு நாடு வந்தும் திருந்தாத ஜென்மங்கள்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

https://www.cp24.com/news/toronto-man-charged-with-first-degree-murder-after-woman-killed-in-machete-attack-1.4590462

Tharshika Jeganathan

Tharshika Jeganathan, 27, is pictured. (Facebook)

Sasikaran Thanapalasingam

Sasikaran Thanapalasingam is pictured in this undated image. (Facebook)

விருப்பம் இருந்தா சேர்ந்து வாழலாம் விருப்பம் இல்லாதபோது பிரிந்து செல்லலாம். இரண்டு சிறந்த வழி இருக்கும் போது எதுக்கு உயிரை எடுக்கவேணும் ?  குடும்ப வன்முறைகள் உச்சத்தை தொட முன் பிரிந்து செல்வதே சிறந்தவழி ஆனால் இங்கு பிரிந்து செல்ல முயற்சித்ததுக்காக மனைவி உயிரை எடுத்ததுபோல் தெரிகின்றது. 

Share this post

Link to post
Share on other sites

கனடா|ஸ்காபரோவில் தமிழ்ப் பெண் கொலை!

கணவர் சரணடைந்தார்

செப்டம்பர் 12, 2019

கனடா, ஸ்காபரோவில் எல்ஸ்மியர் / கொன்லின்ஸ் சந்திப்புக்கருகில் வசித்துவந்த 27 வயதுடைய தர்ஷிகா ஜெகநாதன் புதனன்று, வாள் வெட்டுக்கு இலக்காகி மரணமடைந்தார். இவரது கொலையில் சம்பந்தப்பட்டவர் என்ற காரணத்துக்காக 38 வயதுடைய சசிகரன் தனபாலசிங்கம் காவல்துறையால் வழக்குப் பதியப்பட்டுள்ளார்.

image-1.jpg
தர்ஷிகா ஜெகநாதன்

எல்ஸ்மியர் / கொன்லின்ஸ் சந்திப்பிலுள்ள ஃபிஷெறி வீதியில் மாலை 6:15 மணியளவில் ஒரு ஆண் வாளுடன் ஒரு பெண்ணைத் துரத்திக்கொண்டு ஓடுவதைக் கண்ட பலர் காவல்துறையினருக்கு தொலைபேசியில் தகவல் தந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

image.jpg
சசிகரன் தனபாலசிங்கம்

தர்ஷிகா ஜெகநாதன் என்ற 27 வயதுடைய பெண் பலத்த வெட்டுக்காயங்களுடன் அந்த இடத்திலேயே மரணமானார் எனவும் கொலையைச் செய்தவர் எனச் சந்தேகிக்கப்படும் 38 வயதுடைய சசிகரன் தனபாலசிங்கம் ரொறோண்டோ காவல்துறையின் 42 பிரிவு அலுவலகத்துக்குத் தன் வாகனத்திலேயே சென்று சரணடைந்தார் எனவும் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.

சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட தர்ஷிகாவின் கணவர் எனவும் அவரிடமிருந்து பிரிந்து வாழ்வதற்குத் திட்டமிட்டிருந்ததாகவும் அறியப்படுகிறது.

இந்த இருவரையும் நன்கு அறிந்தவர்களுடன் பேச விரும்புவதாக இக் கொலையை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

http://marumoli.com/கனடாஸ்காபரோவில்-தமிழ்ப்/?fbclid=IwAR05zNbbVvIAm6TYyPUygO7qobEkEUrFKJ9xpQC09uBOGvwlssU9md_w18g

Share this post

Link to post
Share on other sites

என்ன கொடுமை ஐயா இது 
27 வயது?
மணமுடித்து 
பிரிந்து 
கொலையாகி போகிற வயதா? 

பேசாமல் இருப்பவர்கள் நல்லவர்கள் என்றும் 
ஒன்றும் செய்யாது இருப்பவர்களை நல்ல பிள்ளையென்றும் 
ஏதாவது நல்லது செய்யப்போய் சிறிதாக தவறுவோரை தப்பானவர்கள் 
என்று பாப்பதே எமது சமூகம்.

இப்படி வாளால் வெட்ட கூடியவர் ஏற்கனவே சைக்கோவாகத்தான் இருந்து இருப்பார் 
இப்படியான அறிகுறி உள்ளவர்களை பற்றிய கவனம் அவதானிப்பு நிர்ச்சயம் தேவை. 

Share this post

Link to post
Share on other sites

வெளிநாட்டில்... வாளால், வெட்டி கொலை செய்யும் அளவுக்கு வந்ததை நினைக்க,
மிகவும் வேதனையாக உள்ளது.

இருவருக்கும்... 11 வயது வித்தியாசம் எனும் போது...
பெற்றோரால் வற்புறுத்தி நிச்சயிக்கப் பட்ட திருமணமாக இருந்தால்,
அவர்களிலும் தவறு உள்ளது.

Share this post

Link to post
Share on other sites
16 hours ago, தமிழ் சிறி said:

வெளிநாட்டில்... வாளால், வெட்டி கொலை செய்யும் அளவுக்கு வந்ததை நினைக்க,
மிகவும் வேதனையாக உள்ளது.

இருவருக்கும்... 11 வயது வித்தியாசம் எனும் போது...
பெற்றோரால் வற்புறுத்தி நிச்சயிக்கப் பட்ட திருமணமாக இருந்தால்,
அவர்களிலும் தவறு உள்ளது.

மிகவும் வேதனையான விடயம்.  உண்மை பொய் தெரியாது.... என் காதுக்கு எட்டியது.... அந்த பெண் இந்தியாவில் இருந்ததாகவும்.... கனடாவில் இருந்த ஆணை திருமணம் செய்து அவர் ஸ்பான்சர் செய்து கனடா வ‌ந்தா‌ர் எனவும்.... இங்கு citizenship கிடைத்ததும் விவாகரத்து கேட்டார் எனவும்.... இ‌ங்கு வருவதற்காக திருமண நாடகமாடி த‌ன்னை ஏமாற்றிய விரக்தியில் தான் இச்சம்பவம் நடந்ததாக கேள்விபட்டேன். 

Edited by Sabesh

Share this post

Link to post
Share on other sites
22 minutes ago, Sabesh said:

மிகவும் வேதனையான விடயம்.  உண்மை பொய் தெரியாது.... என் காதுக்கு எட்டியது.... அந்த பெண் இந்தியாவில் இருந்ததாகவும்.... கனடாவில் இருந்த ஆணை திருமணம் செய்து அவர் ஸ்பான்சர் செய்து கனடா வ‌ந்தா‌ர் எனவும்.... இங்கு citizenship கிடைத்ததும் விவாகரத்து கேட்டார் எனவும்.... இ‌ங்கு வருவதற்காக திருமண நாடகமாடி த‌ன்னை ஏமாற்றிய விரக்தியில் தான் இச்சம்பவம் நடந்ததாக கேள்விபட்டேன். 

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிலுள்ள செய்தியின் படி

2015 இல் இந்தியாவில் திருமணம் முடித்துள்ளனர். 2017 இல் கொலை செய்யப்பட்ட பெண் கனடா வந்துள்ளார். வந்து சில மாதங்களிலேயே மனைவியை அடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பின் பிணையில் வந்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு பிறகு பிணை விதிகளை மீறியமைக்காக மீண்டும் கைது செய்யப்பட்டு பின்னர் மனைவியை எக்காரணம் கொண்டும் சந்திக்க கூடாது என்ற நிபந்தனையில் probation இல் இருக்கும் போதுதான் கொலை செய்துள்ளார்.

2017 இல் வந்த ஒருவரால் 2019 இல் குடியுரிமை பெற முடியாதல்லவா? ஆகக் குறைந்தது 1095 நாட்கள் (3 வருடங்கள்) கனடா மண்ணில் இருந்து இருக்க வேண்டும். 

இப் பெண் நிலக்கீழ் அறையில் தான் கடந்த 2 வருடங்களாக தனியாக வசித்து வந்துள்ளார். டொலர் கடையில் வேலை செய்து தன் தேவைகளை நிறைவேற்றியிருக்கின்றார்.

https://globalnews.ca/news/5896906/sasikaran-thanapalasingam-charged/

காணொளியையும் பார்க்கவும்

 • Like 1
 • Sad 2

Share this post

Link to post
Share on other sites

image-4-720x450.jpg

கொலை செய்யப்பட்ட தர்ஷிகாவின் உடலை இலங்கைக்கு கொண்டு வர முடிவு!

ஸ்கார்பரோவில் கொலை செய்யப்பட்ட, தமிழ் இளம் குடும்ப பெண் தர்ஷிகா ஜெகநாதனின் உடல், அவரின் சொந்த நாடான இலங்கைக்கு வரப்படவுள்ளது.

நெருங்கிய உறவினர் யாரும் கனடாவில் இல்லாத நிலையில், உடலத்தைப் பொறுப்பேற்றுத் தாயகத்துக்கு அனுப்புவதற்காக, ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு தர்ஷிகாவின் குடும்பத்தினர், நண்பர்கள் சார்பில் ரொறன்ரோவைத் தளமாகக் கொண்டியங்கும் ‘I SEE INITIATIVE’ எனும் இலாப நோக்கற்ற நிறுவனம், Go Fund Me ஊடாக ஒரு நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை மாலை ஸ்கார்பரோவின் கிழக்கு பகுதி- ஃபிஷரி வீதியில் உள்ள குறுக்கு வீதியில் 27 வயதான தர்ஷிகா ஜெகநாதன் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக, அவரது கணவரான 38 வயதான சசிகரன் தனபாலசிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகரன் – தர்ஷிகா தம்பதியினர், கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். எனினும் குழந்தையில்லாத காரணத்தால் சசிகரன், தர்ஷிகாவை தொடர்ந்து தாக்கி வத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 2017ஆம் இரண்டு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து, சசிகரன் 2019ஆம் ஆண்டு பெப்ரவரியில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே குறித்த கொலை நடந்துள்ளது.

எனினும், இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெளிவாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொலை-செய்யப்பட்ட-தர்ஷிகா/

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

சசிகரன் – தர்ஷிகா தம்பதியினர், கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். எனினும் குழந்தையில்லாத காரணத்தால் சசிகரன், தர்ஷிகாவை தொடர்ந்து தாக்கி வத்துள்ளார்

இந்தப் பேய்க் குஞ்சுக்குக்.....குழந்தை பிறக்காதது....ஒரு நல்ல விடயம் போலவே உள்ளது...!😑

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, தமிழ் சிறி said:

image-4-720x450.jpg

கொலை செய்யப்பட்ட தர்ஷிகாவின் உடலை இலங்கைக்கு கொண்டு வர முடிவு!

ஸ்கார்பரோவில் கொலை செய்யப்பட்ட, தமிழ் இளம் குடும்ப பெண் தர்ஷிகா ஜெகநாதனின் உடல், அவரின் சொந்த நாடான இலங்கைக்கு வரப்படவுள்ளது.

நெருங்கிய உறவினர் யாரும் கனடாவில் இல்லாத நிலையில், உடலத்தைப் பொறுப்பேற்றுத் தாயகத்துக்கு அனுப்புவதற்காக, ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு தர்ஷிகாவின் குடும்பத்தினர், நண்பர்கள் சார்பில் ரொறன்ரோவைத் தளமாகக் கொண்டியங்கும் ‘I SEE INITIATIVE’ எனும் இலாப நோக்கற்ற நிறுவனம், Go Fund Me ஊடாக ஒரு நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை மாலை ஸ்கார்பரோவின் கிழக்கு பகுதி- ஃபிஷரி வீதியில் உள்ள குறுக்கு வீதியில் 27 வயதான தர்ஷிகா ஜெகநாதன் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக, அவரது கணவரான 38 வயதான சசிகரன் தனபாலசிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகரன் – தர்ஷிகா தம்பதியினர், கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். எனினும் குழந்தையில்லாத காரணத்தால் சசிகரன், தர்ஷிகாவை தொடர்ந்து தாக்கி வத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 2017ஆம் இரண்டு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து, சசிகரன் 2019ஆம் ஆண்டு பெப்ரவரியில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே குறித்த கொலை நடந்துள்ளது.

எனினும், இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெளிவாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொலை-செய்யப்பட்ட-தர்ஷிகா/

12 hours ago, புங்கையூரன் said:

இந்தப் பேய்க் குஞ்சுக்குக்.....குழந்தை பிறக்காதது....ஒரு நல்ல விடயம் போலவே உள்ளது...!😑

குழந்தையில்லாத காரணம் என்று கூறுவது கூட மிகத் தவறான காரணமாகவே இருக்கின்றது. ஒன்று இல்லாமையால் புருசன் கோவிச்சு அடிச்சு கொண்டு போட்டுட்டான் என்ற நியாயப்படுத்தலும் இப்படிச் சொல்வதில் இருக்கின்றது.

தர்சிகா கனடா வந்தது 2017 இல் (இந்தியாவில் திருமணம் 2015). வந்து இரண்டு மூன்று மாதங்களில் தன் உயிருக்கு அச்சுறுத்தல் வரும் அளவுக்கு கணவன் அடித்து துன்புறுத்தியதாக தனியாவே சென்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இவருக்கு கனடாவில் குடும்பமோ சகோதரங்களோ இல்லாத நிலையில் புதிதாக வந்த நாட்டில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு செய்யும் அளவுக்கு வன்முறை நிகழ்ந்து இருக்கு. தர்சிகா ஊரில் உள்ள தன் பெற்றோருடன் கதைக்கும் உரிமை கூட மறுக்கப்பட்டு இருந்துள்ளது.

முதல் தடவை முறைப்பாடு செய்யப்பட்டதில் இருந்து தனியாகவே வாழ்ந்து இருக்கின்றார். ஆக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்ததே ஒரு சில மாதங்கள் தான். இதில் கர்ப்பமாகவில்லை என்று குற்றம்சாட்ட எந்த ஏது நிலையும் இல்லை.

தர்சிகா தன் வாழ்வை வாழ மிகவும் பிரயத்தனப்பட்டு இருக்கின்றார். ஒரு போராளியாகவே இறக்கும் வரைக்கும் இருந்துள்ளார். குடும்ப வன்முறையின் victim  ஆக இல்லாமல் அதில் இருந்து survivor ஆக போராடியிருக்கின்றார். தட்டத் தனியாளாக கனடாவில் இறுதி வரைக்கும் தன்னால் ஏலுமானவரை முயன்று வாழத் துடித்து இருக்கின்றார்.

கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்கும் போது கூட கொலையாளி பல தடவை தலையிலும் உடலிலும் தாக்கினார் என சாட்சிகள் சொல்கின்றன. நல்ல வெயிலான நேரத்தில் நிறை வெறியில் தர்சிகா வேலையில் இருந்து பேரூந்தில் இறங்கி வரும் வரைக்கும் காத்திருந்து கத்தியால் எண்ணற்ற தடவை குத்தி கொலை செய்து இருக்கின்றார்

-----
ஒரு பெண் தன் கணவனால் வன்முறைக்குள்ளாகி, அதை பொலிசில் முறையிட்டு, விவாரகத்தாகி பிரியவும் முற்பட்ட பின்னரும் அதே ஆணால் வன்முறையால் கொலையாவது என்பது குடும்ப வன்முறைகளுக்குள்ளாகும் பெண்களுக்கு சரியான பாதுகாப்பு இன்னும் கனடாவில் இல்லை என்பதைத் தான் இது காட்டுகின்றது

----
பொதுவாக இப்படியா விடயங்களை இலகுவாக கடந்து விடும் இம் முறை கொஞ்சம் ஆழமாக நோக்குகின்றது.

செவ்வாய்க் கிழமை ஈஸ்ட் எப் எம் வானொலியின் காலை நேர நிகழ்வில் ஒரு மணித்தியாலம் இக் கொலை தொடர்பான தகவல்களையும், குடும்ப வன்முறைக்கு எதிராக எடுக்க கூடிய சட்ட நடவடிக்கைகளையும் பற்றி விபரமாக கதைத்து இருந்தனர்.

---
தர்சிகாவின் உடலை இலங்கைக்கு அனுப்ப தேவைப்படும் நிதிப் பங்களிப்பை வழங்க:

https://www.gofundme.com/f/tcqe4-in-memory-of-tharshika-jeganathan?pc=fb_dn_postdonate_r&rcid=r01-156857811409-2aa560ff13544138&utm_source=facebook&utm_medium=social&utm_campaign=fb_dn_postdonate_r&fbclid=IwAR2Du0ffHDM4h-XV8Vj-ktLy6y4SYr4D208dfpE0aM1Hi0mDWeklAl9Yhdc

--
இன்றும் காலையில் பிரம்டன்  எனும் ரொரன்டோ பெரும்பாகத்தில் உள்ள நகரில் 64 வயதான கணவனால் 58 வயதான மனைவி கடுமையாக தாக்கபட்டு பலியானார் என செய்திகள் தெரிவிக்கின்றன (தமிழர்கள் அல்ல)

 • Like 1
 • Thanks 2

Share this post

Link to post
Share on other sites

சேர்ந்து வாழ்வது பிடிக்கவில்லையென்றால், கொல்லவேண்டிய தேவையென்ன? பிரிந்து சென்றால், இருவரும் நிம்மதியாக வாழலாமே? 

இந்தக் கொலை தொடர்பாகத் தேடியபோது, கனடாவில் நடைபெறும் தமிழர்களுக்கிடையிலான வன்முறைகள், ஆயுதக் குழுக்கள் என்று சில தகவல்களும் கண்ணில் பட்டது.

குறிப்பாக, ஏ. கே கண்ணன் குழு, வல்வெட்டித்துறைக் குழு, சில்வர் போய்ஸ் என்று பல்வேறு தமிழ் இளைஞர் குழுக்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இக்குழுக்களின் தோற்றம் மற்றும் செயற்பாடுகள் பற்றி ஏன் இங்கே எவரும் எழுதுவதில்லை? இவைபற்றி அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ragunathan said:

குறிப்பாக, ஏ. கே கண்ணன் குழு, வல்வெட்டித்துறைக் குழு, சில்வர் போய்ஸ் என்று பல்வேறு தமிழ் இளைஞர் குழுக்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இக்குழுக்களின் தோற்றம் மற்றும் செயற்பாடுகள் பற்றி ஏன் இங்கே எவரும் எழுதுவதில்லை? இவைபற்றி அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

இக் குழுக்கள் 99 வீதம் அடக்கப்பட்டு பலர் நாடு கடத்தப்பட்டு விட்டனர். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் குழு வன்முறை என்பது பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.

Share this post

Link to post
Share on other sites
Quote

இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெளிவாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொலை செய்தவரின் நெருங்கிய நண்பரை கிழக்கு எவ்.எம்மின்(eastfm 102.7) ரமணன் செவ்வி கண்டிருந்தார். அச்செவ்வியின் படி  மேற்படி பெண்ணின் ஆண் நண்பர் பிரான்சிலிருப்பதாகவும் அதனை மறைத்து இப்பெண் மேற்படி கொலை செய்தவரை ஏமாற்றி திருமணம் செய்து கனேடிய பி.ஆரை எடுத்துள்ளார். பின்னர் விவாகரத்து கோரியுள்ளார். மேற்படி கொலை செய்தவர் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்ததாக தெரிகிறது. மேற்படி பெண் பிரான்சுக்கான பிரயாண சீட்டையும் வாங்கி வந்திருப்பதாகவும் இதனை அறிந்து  கோபத்தில் கத்தியால் தாறுமாறாக வெட்டி கொலை செய்தார் என்றும் கூறப்படுகிறது. 

Share this post

Link to post
Share on other sites
On 9/13/2019 at 9:30 PM, Sabesh said:

மிகவும் வேதனையான விடயம்.  உண்மை பொய் தெரியாது.... என் காதுக்கு எட்டியது.... அந்த பெண் இந்தியாவில் இருந்ததாகவும்.... கனடாவில் இருந்த ஆணை திருமணம் செய்து அவர் ஸ்பான்சர் செய்து கனடா வ‌ந்தா‌ர் எனவும்.... இங்கு citizenship கிடைத்ததும் விவாகரத்து கேட்டார் எனவும்.... இ‌ங்கு வருவதற்காக திருமண நாடகமாடி த‌ன்னை ஏமாற்றிய விரக்தியில் தான் இச்சம்பவம் நடந்ததாக கேள்விபட்டேன். 

20 minutes ago, nunavilan said:

கொலை செய்தவரின் நெருங்கிய நண்பரை கிழக்கு எவ்.எம்மின்(eastfm 102.7) ரமணன் செவ்வி கண்டிருந்தார். அச்செவ்வியின் படி  மேற்படி பெண்ணின் ஆண் நண்பர் பிரான்சிலிருப்பதாகவும் அதனை மறைத்து இப்பெண் மேற்படி கொலை செய்தவரை ஏமாற்றி திருமணம் செய்து கனேடிய பி.ஆரை எடுத்துள்ளார். பின்னர் விவாகரத்து கோரியுள்ளார். மேற்படி கொலை செய்தவர் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்ததாக தெரிகிறது. மேற்படி பெண் பிரான்சுக்கான பிரயாண சீட்டையும் வாங்கி வந்திருப்பதாகவும் இதனை அறிந்து  கோபத்தில் கத்தியால் தாறுமாறாக வெட்டி கொலை செய்தார் என்றும் கூறப்படுகிறது. 

நம்பிக்கை துரோகம் என்றால் கட்டுக்கடங்காத ஆத்திரம் வருவது இயல்பு  இருப்பினும் கொலை  முடிவல்ல.

 • Like 2
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

இந்த பெண்ணை புருசன் ஒருதரம் கத்தியால் குத்தி கொன்றான்.

ஆனால் நாம்? - ஆயிரம் முறை வார்த்தையால் வகுந்து எடுக்கிறோம்.

கொலையூண்டு கிடக்கும் பெண் யாரென்றே தெரியாமல் எப்படி இந்தமாதிரியான பிரான்சில் காதலன், விசாவுக்கு கல்யாணம் போன்ற அவதூறுகளை கொஞ்சமும் மன சஞ்சலமின்றி பொதுவெளியில் காவ முடிகிறது?

கொலை செய்தவரின் நெருங்கிய நண்பரிடம் உண்மையை தேடும் போக்கிலி ஊடகம். அந்த பெண்ணின் தரப்பில் ஒருவர் கூடவா கிடைக்கவில்லை?

பெரியார் சொல்லவே இல்லை. 

ஆனால் இதுதான் உண்மை.

#நாம் காட்டுமிராண்டிகள்

 • Like 3

Share this post

Link to post
Share on other sites

இந்த திரியின் தலைப்பிலும், உள்ளடக்கத்தில் 'படுகொலை செய்த ஈழத் தமிழர்' மற்றும் 'படுகொலை செய்துள்ளார்' என்றும் குறிப்பிடுவது சட்டப்படி தவறு; தர்மமும் இல்லை. 

'கொலை செய்தார் எனக்குற்றம் சாட்டப்பட்டுள்ளார்' என்பதே சரியான செய்தி. அதாவது சட்டப்படி முதலாம் தர குற்றச்சாட்டு, திட்டமிட்ட கொலை குற்றச்சாட்டு. 

நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னரே இவர் படுகொலை செய்தாரா இல்லையா என்ற முடிவிற்கு வரலாம்.   அதுவரை குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளி இல்லை, குற்றம்சாட்டப்பட்டவர். 

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, ampanai said:

பலர் பார்க்கும் நல்ல வெயில் பொழுதொன்றில் பல முறை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, தான் தான் கொலையாளி என்று ஒப்புக் கொண்டு இரத்தம் தோய்ந்த ஆடைகளுடன் பொலிசில் சரணடைந்தவரை (காவல் நிலையத்தில் இருந்த பொலிஸ்காரர் ஒருவரையும் தாக்கியுமுள்ளார்) இன்னும் சந்தேக நபர் என்று மெழுகு பூசி அழைக்க தேவையில்லை,

நீதிமன்றில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின் தான் குற்றவாளி என்று (தானே ஒத்துக் கொண்டு சரணடைந்த பின்னரும் கூட) படுகொலையாளிகளை அழைக்க வேண்டும் என்ற உங்களின் இந்த அளவுகோலை தமிழர் அல்லாதவர்கள் மீதும் பிரயோகிப்பீர்களா.... போர்க்குற்றவாளிகள் உட்பட?

16 hours ago, nunavilan said:

கொலை செய்தவரின் நெருங்கிய நண்பரை கிழக்கு எவ்.எம்மின்(eastfm 102.7) ரமணன் செவ்வி கண்டிருந்தார். அச்செவ்வியின் படி  மேற்படி பெண்ணின் ஆண் நண்பர் பிரான்சிலிருப்பதாகவும் அதனை மறைத்து இப்பெண் மேற்படி கொலை செய்தவரை ஏமாற்றி திருமணம் செய்து கனேடிய பி.ஆரை எடுத்துள்ளார். பின்னர் விவாகரத்து கோரியுள்ளார். மேற்படி கொலை செய்தவர் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்ததாக தெரிகிறது. மேற்படி பெண் பிரான்சுக்கான பிரயாண சீட்டையும் வாங்கி வந்திருப்பதாகவும் இதனை அறிந்து  கோபத்தில் கத்தியால் தாறுமாறாக வெட்டி கொலை செய்தார் என்றும் கூறப்படுகிறது. 

நுணா இந்த செவ்வியை நீங்கள் உங்கள் காதுகளால் கேட்டீர்களா?

நான் ஏன் இப்படிக் கேட்கின்றேன் என்றால், ரமணனின் தர்சிகா தொடர்பான காலை நிகழ்வை நான் கடைசி 6 நிமிடங்கள் வரைக்கும் கேட்டுக் கொண்டு இருந்தேன். நீதன் ஷான் தன் இறுதி குறிப்பினை கதைக்கும் வரைக்கும் கேட்டனான். பின்னர் எழில் என்பவர் இறுதியாக கதைத்துக் கொண்டு இருந்தார். ஆனால் அது வரைக்கும் ரமணன் படுகொலையாளியின் நண்பரை செவ்வி எடுத்திருக்கவில்லை. இறுதி 6 நிமிடங்களில் எடுத்திருக்க வாய்ப்புகளும் மிகக் குறைவு என்பதால்.

அப்படி எடுத்திருப்பின் வேலிக்கு ஓணானை சாட்சிக்கு கூப்பிட்ட கதையாக தான் இருந்திருக்கும். சசிதரனின் குடும்பம் அப் பெண் மீது இது மட்டுமல்ல, இதை விட அதிகமாக வசைகளை அள்ளிக் கொட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
15 hours ago, goshan_che said:

இந்த பெண்ணை புருசன் ஒருதரம் கத்தியால் குத்தி கொன்றான்.

ஆனால் நாம்? - ஆயிரம் முறை வார்த்தையால் வகுந்து எடுக்கிறோம்.

கொலையூண்டு கிடக்கும் பெண் யாரென்றே தெரியாமல் எப்படி இந்தமாதிரியான பிரான்சில் காதலன், விசாவுக்கு கல்யாணம் போன்ற அவதூறுகளை கொஞ்சமும் மன சஞ்சலமின்றி பொதுவெளியில் காவ முடிகிறது?

கொலை செய்தவரின் நெருங்கிய நண்பரிடம் உண்மையை தேடும் போக்கிலி ஊடகம். அந்த பெண்ணின் தரப்பில் ஒருவர் கூடவா கிடைக்கவில்லை?

பெரியார் சொல்லவே இல்லை. 

ஆனால் இதுதான் உண்மை.

#நாம் காட்டுமிராண்டிகள்

ஒரு பெண், தனக்கு பிடிக்காத ஒரு திருமண உறவில் இருந்து விலகி , தனக்கு பிடித்த ஒரு திருமண உறவை நாடுவது கூட எம் சமூகத்தில் பலருக்கு ஒத்துக் கொள்ள முடியவில்லை என்பதைத்தான் இந்த அவதூறுகள் காட்டுகின்றன.  இதனால் தான் இன்னும் படுகொலையாளியின் மனம் புண்படுவதை விரும்பாதவர்கள் கூட இருக்கின்றனர்.

நன்றி

 • Like 2
 • Thanks 3

முகநூலில் எனக்கு  நன்கு  தெரிந்த தம்பிகள்  சிலரும்   இந்த  பெண்  குறித்தம்
அவரது காதலன்  குறித்தும்
அவர் வெளிநாடு  வருவதற்காகவும்
தனது  காதலனை  கரம்  பிடிக்கவுமே  
இவரை  பயன்படுத்தினார்  என்று  எழுதினார்கள்
நான் அவர்களுடன் இது  தவறு  இவ்வாறு  ஒருவரது  தனிப்பட்ட விடயங்களை
பொது  வெளியில்  இவ்வாறு  எழுதுவது  தவறு
எழுதக்கூடாது என சண்டை  பிடித்தபோது
பெண்கள்  என்றவுடன் அவர்களுக்காக  இரக்கத்தை  மட்டும் காட்டாதீர்கள்  அண்ணா
எங்களிடம்  முழு  ஆதாரம் இருக்கு
இல்லாமல்  பேசக்கூடியவர்களா  நாம் என கேட்டார்கள்
நான்  ஒதுங்கிவிட்டேன்

அங்கே எழுதியவர்கள் பொழுது  போக்குக்கு  எழுதுபவர்கள்  அல்ல..

Share this post

Link to post
Share on other sites
18 minutes ago, நிழலி said:

ஒரு பெண், தனக்கு பிடிக்காத ஒரு திருமண உறவில் இருந்து விலகி , தனக்கு பிடித்த ஒரு திருமண உறவை நாடுவது கூட எம் சமூகத்தில் பலருக்கு ஒத்துக் கொள்ள முடியவில்லை என்பதைத்தான் இந்த அவதூறுகள் காட்டுகின்றன.  இதனால் தான் இன்னும் படுகொலையாளியின் மனம் புண்படுவதை விரும்பாதவர்கள் கூட இருக்கின்றனர்.

நன்றி

ஒரு பெண் தனக்கு பிடித்தவரை  திருமணம் செய்வதற்கு சகல உரிமைகளும் அவருக்கு உண்டு.அதற்கு நானும் ஆதரவு. ஆனால் ஒரு பெண் தான் விரும்பியவரை மணம் முடிப்பதற்கு எடுக்கும் ஏமாற்று வேலைகளே சிக்கலாக வருகின்றது.
இல்லையேல்.......
நடந்த சம்பவத்தின் கொலையாளி மனநோயாளியாகவும் இருக்கலாம் அல்லவா?

Share this post

Link to post
Share on other sites

1. இன்றைய உலகில் முன்னாள் காதலன்/காதலி இல்லாதவர்கள். கட்டிய கணவனை தவிர வேறு யாரையும் முன்பு நேசிக்காமல் கல்யாணம் முடிப்பவர்கள் எத்தனை பேர்? ஆகவே ஒரு பெண்ணுக்கு முன்பு ஒருவர் மீது நேசம் இருந்தது (இருந்தது என்றே வைப்போம் -பேச்சுக்கு) என்பது மட்டுமே அவர் கல்யாணம் முடித்ததே எமாற்றி கனடா வரத்தான் என்று ஆகாது. ஆகவே இந்த ஆதாரங்கள் எல்லாம் “காகம் காகமாக சத்தி எடுத்த” கதைதான்.

2. இந்த விடயம் நீதி மன்றில் உள்ளது. இப்படியான விடயங்களை கதைப்பதே நீதிமன்ற அவமதிப்பாகலாம். ஆதாரம் இருந்தால் கோட்டில் அல்லவா கொடுக்க வேண்டும்? பேஸ்புக்கிலா கொடுப்பது ?

3. இங்கே சிலர், ஏமாற்றிவள்தானே, சாகத்தான் வேண்டும் என்ற மனநிலையில் இருப்பது தெரிகிறது. இப்படி ஏமாற்றியதுக்கு  (ஏமாற்றினாலும்-பேச்சுக்கு) ஒரு கொலை எந்தவகையில் சரியான எதிர்வினையாகும்? இந்த பெண் இந்த மனிதனின் உறவுகளை கொன்றிருக்காதவரையில், அவரை இந்த மனிதன் கொன்றது அநியாயமே. எனவே இந்த பெண் இப்படி செய்தார், அப்படிச் செய்தார், இதனால்தான் அப்பாவி மனிதன் கொலைவரை போனார் என்பதெல்லாம் ஆணாதிக்க, வன்முறை மனோநிலையே.

33 minutes ago, விசுகு said:

முகநூலில் எனக்கு  நன்கு  தெரிந்த தம்பிகள்  சிலரும்   இந்த  பெண்  குறித்தம்
அவரது காதலன்  குறித்தும்
அவர் வெளிநாடு  வருவதற்காகவும்
தனது  காதலனை  கரம்  பிடிக்கவுமே  
இவரை  பயன்படுத்தினார்  என்று  எழுதினார்கள்
நான் அவர்களுடன் இது  தவறு  இவ்வாறு  ஒருவரது  தனிப்பட்ட விடயங்களை
பொது  வெளியில்  இவ்வாறு  எழுதுவது  தவறு
எழுதக்கூடாது என சண்டை  பிடித்தபோது
பெண்கள்  என்றவுடன் அவர்களுக்காக  இரக்கத்தை  மட்டும் காட்டாதீர்கள்  அண்ணா
எங்களிடம்  முழு  ஆதாரம் இருக்கு
இல்லாமல்  பேசக்கூடியவர்களா  நாம் என கேட்டார்கள்
நான்  ஒதுங்கிவிட்டேன்

அங்கே எழுதியவர்கள் பொழுது  போக்குக்கு  எழுதுபவர்கள்  அல்ல..

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, நிழலி said:

பலர் பார்க்கும் நல்ல வெயில் பொழுதொன்றில் பல முறை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, தான் தான் கொலையாளி என்று ஒப்புக் கொண்டு இரத்தம் தோய்ந்த ஆடைகளுடன் பொலிசில் சரணடைந்தவரை (காவல் நிலையத்தில் இருந்த பொலிஸ்காரர் ஒருவரையும் தாக்கியுமுள்ளார்) இன்னும் சந்தேக நபர் என்று மெழுகு பூசி அழைக்க தேவையில்லை,

நீதிமன்றில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின் தான் குற்றவாளி என்று (தானே ஒத்துக் கொண்டு சரணடைந்த பின்னரும் கூட) படுகொலையாளிகளை அழைக்க வேண்டும் என்ற உங்களின் இந்த அளவுகோலை தமிழர் அல்லாதவர்கள் மீதும் பிரயோகிப்பீர்களா.... போர்க்குற்றவாளிகள் உட்பட?

கனேடிய சட்டம் என்ற அளவுகோல் என்பது கனடாவில் உள்ள ஊடகங்களை கூட அளப்பது. எந்த கொலையை செய்தவரும் கொலையை ஒப்புக்கொண்டாலும்,  ஊடகங்கள் அவரை கொலையாளி என எழுதுவதில்லை. ஏனெனில் சட்டத்தால் நிரூபிக்கும்வரை அவர் நிரபராதி.

கனடாவின் அளவுகோல் : ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பதே.

இந்த திரியின் தலைப்பை கனேடிய ஊடகத்தில் எழுத முடியாது. எழுதினால் அந்த ஊடகம் அரச சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகும்.   இது தமிழர் எனற கனேடியருக்கும் தமிழர் அல்லாத கனேடியருக்கும் பொதுவானது. 

Share this post

Link to post
Share on other sites

இந்தக் கொலை தொடர்பாக நிறையவே செய்திகள் காதுவழி புகுந்து கடந்து செல்கின்றன. இரண்டுவிதமான பலத்த சர்ச்சை நம்மக்களிடையே உருவாகி இருக்கின்றன. கொலை செய்யப்பட்ட பெண்ணின் தரப்பிலும், கொலை செய்த ஆணின் தரப்பிலும் பலர் பேசுகின்றனர். ஒரு பிரச்சனைக்கு கொலை தீர்வாகாது. இது அப்பட்டமான ஆணின் பலத்தைக்காட்டுகிறது. இங்கு உயிரிழந்துள்ளவர் பெண் இருப்பினும் ஆண்களின் அதிகபட்ச கருத்தாடல்கள் மட்டுமல்ல பெண்களினது நாவீச்சுக்களும் இன்னும் நாம் மீளாத ஏதோ ஒன்றுக்குள்ளேயே அகப்பட்டிருக்கிறோம் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. பலரும் வெளிப்படையாக கொலைக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கும் வேளையிலும் கொலையுண்ட பெண் மீதான பிம்பத்தை தாம் வாழும் சமூகத்திற்கு ஏற்றாற்போலவே மாற்றுகிறார்கள். எங்கள் சமூகம் ஆண் மீதான பிம்பத்தை எப்போதுமே அழுக்கற்று சிருட்டிக்கவே விரும்புகிறது. அதிலிருந்து வெளிவர விரும்பவில்லை என்பதை நாம் பழகும் நம் மினம் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அந்த வகையிலேயே இந்த கொலை செய்யப்பட்ட பெண் மீதான கருத்தாடல்கள் பல தளங்களில் நிகழ்கின்றன. அந்த ஆண் கொலைகாரன் ஆனதற்கும், இந்தப் பெண் பிள்ளை கொல்லப்பட்டதற்கும் உண்மையிலேயே அவர்கள் இருவரும் காரணம் இல்லை. நமது சமூகமே இந்தக் கொலையை ஆணின் கையைக் கொண்டு நிகழ்த்தி இருக்கிறது. நமது சமூகத்தில் தற்காலத்தில் பெண்கள் தெளிவடைந்து வெளியே வந்தளவுக்கு ஆண்கள் வரவில்லை என்பதே நிதர்சனம். இன்னும் எல்லாவிதத்திலும் தன்னுடைய ஆளுமைக்குள் பெண்ணாணவள் தங்கவேண்டும் அதாவது கீழ்படியவேண்டும் என்ற எண்ணம் இல்லாத ஆண்கள் மிகச்சிலரே. இன்னும் சற்று உள்ளாரபோனால் ஆண் பிள்ளைகளைப் பெற்ற பெண்களின் வளர்ப்பை நாம் அலசி ஆராயவேண்டியவர்களாவோம். ஏனெனில் ஒரு ஆணின் செயல் பெண்களுக்கு எதிரான வன்முறையாகிறது என்றால் அதற்குக் காரணம் அவர்கள் வளரும் பருவத்தில் துணிச்சலான, அல்லது சுதந்திரமான பெண்கள் மீது அவர்களின் சுதந்திரத்தையும், துணிவையும் ஏற்க விரும்பாத சமூகம் அவர்கள் மீது அவதூறுகளைப்பரப்பி சமூக வெளியில் அவர்களை அவமானப்படுத்துவதில் மும்முரம் காட்டியிருக்கும். அவர்கள் மீதான துன்பியலில் ஒரு வகை சுகம் கண்டிருக்கும் அப்படிப்பட்ட ஒரு மனோ நிலையில் வளர்கின்றவர்கள். சமூக அவதூறுகளுக்கு அஞ்சி அஞ்சியே வாழ்க்கையைத் தொலைப்பவர்களாக இருக்கின்றனர்.

உண்மையிலேயே நமது சமூகம் நம்மை சுய பரிசோதனை செய்யவேண்டிய தேவை இருக்கிறது. இலகுவாக யாரோ ஒரு பெண்ணை அவள் முன்னாள் துணைவன் கொன்று விட்டான் என்பதற்கு அப்பால் அவன்- அவள் என்று அவர்கள் மீது தம் சுயகற்பனைகளைத் திணித்து சுகம் காண்பதை நிறுத்தவேண்டும். இன்று இக்கொலையின் மூலம் வெளியே வந்திருக்கும் உண்மை என்ன? இன்னும் நாங்கள் அநாகரீகமானவர்களாகவும், பெண்மையை இழிவுபடுத்தும் சைக்கோக்களாகவும் இருக்கிறோம் என்பதே உண்மை. வீட்டுக்கு வீடு நம் எல்லோருக்கும் கவுன்சிலிங் ஏதோ வகையில் தேவைப்படுகிறது. அவை வெவ்வேறு பட்ட காரணங்களுக்காகவும் இருக்கும். ஆனால் அவற்றில் முக்கியமானது. ஆண், பெண் உறவுநிலை சம்பந்தமானது. பண்பாடு என்னாவது? கலாச்சாரத்தை கடாசி எறிவதா? என்று தற்காலத்தில் மேலைத்தேயத்தில் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான பெரும் போராட்டம் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது.  அதே நேரம் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள், இந்தியா, இலங்கை என்று அடக்கமான (அதாவது தமக்கு கீழ் தலையாட்டி நிற்கும் பெண்) பெண்களைத் தேடி சென்று திருமணம் செய்ய முனைவதும், அப்படியே அங்குள்ள பெற்றோரால் பெண்பிள்ளையின் விருப்புக்கு மாறாக திருமணம் செய்து வைக்கப்படுவதும் பெற்றோருக்கு மதிப்புக் கொடுக்கும் பிள்ளைகள் தலை கவிழ்ந்து வாழ்க்கையை ஏற்பதும், வெளிநாடு வந்த பின்னர் தனித்த வாழ்வில் முகங்கொடுக்கும் ஒவ்வொரு பிடிப்பற்ற நிகழ்வுக்கும் அதனோடு ஒட்டிய வன்முறைக்கும் பின்னராக ஏற்படும் நிமிர்விற்கும் பின்னரான விவாகரத்துகளுக்கும்... அப்படியே அதனோடு ஒட்டி நிகழ்த்தப்படும் வன்முறைகள் என்று நிறையவே சொல்லிக் கொண்டு போகலாம். ஒரு சிறிய வன்முறைகூட பெரிய பாதிப்பைக் கொடுக்கும் என்பதைச் சிந்திக்கும் திறனை அதிகரிக்கவேண்டும். அநேகமாக குடும்ப வன்முறையை எடுத்துக் கொண்டால் ஆத்திரக்காரக் கணவன் தன் கையால் சுவரோ அல்லது கதவுக்கோ அருகாமையில் நிற்கும் மனைவியை ஓங்கி குத்துகிறார் என்று   வைத்துக்கொண்டால் ஒன்று அந்தக் குத்தை எதிர்கொள்ளும் மனைவி காயப்படக்கூடும் மனைவி சற்று விலகினால் சுவரைப்போரையாக்கும் அல்லது கதவை உடைக்கும். ஒரு வேளை மனைவி காயப்பட்டால் பிள்ளைகள் அவசர உதவிக்கு ஆன்புலன்சை அழைத்தால் கூடவே காவல்துறையும் வரும்.  ஒருவேளை சுவர் அல்லது கதவு உடைந்தால் ஆத்திரத்தோடு ஓங்கியவர் கையும் காயப்படும். அப்போதும் அவசர உதவிக்கு ஆன்புலன்ஸ் வரும். சரி இவற்றைப் பார்த்துக் கொண்டு பயத்தில் நிற்கும் பிள்ளைகள் மன அளவில் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். வெளியே தெரியாமல் மன அழுத்தம் அவர்களின் கல்வியிலிருந்து எல்லாவற்றையும் பாதிக்கும். ஆத்திரம் தெளிந்து விடும் பாதிப்பு நிலைத்துக் கொள்ளும். பொருளாதாரத்திலிருந்து ஒற்றுமை, மனவளம்வரை பாதிப்பு நீளும். ஒரு சில நிமிட ஆத்திரத்திற்கே இத்தகை நிலை என்றால் என்பதை சிந்திக்கும் அறிவை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யவேண்டும். அநேகமானவர்கள் கவுன்சிலிங் செய்பவர்களை கேலியாக பேசுவதை எமது சமூகத்தில் அவதானித்திருக்கிறேன். இந்தக் கேலியான போக்கு நமக்கான நாகரீகமான வாழ்க்கை முறையை அண்டவிடாது தூரமாக்கும். ஆக நமது சமூகம் தொடர்பான நடைமுறைகளில் ஏதாவது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படல் வேண்டும் என்பதைத் தவிர அக்கொலை தொடர்பாக எதுவும் பேச முடியவில்லை. எங்கிருந்து தொடங்குவது என்றுதான் யாருக்கும் தெரியவில்லை.

 • Like 8
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இலங்கை பெளத்த நாடு என அர்த்தப்படுத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை - விக்னேஸ்வரன் இலங்கை பௌத்த நாடு என அர்த்தப்படுத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், மகாவம்சம் போன்ற வரலாற்று நூல்கள் பாலி மொழியில் எழுதப்பட்ட புனைக் கதைகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வாராந்தம் ஊடகவியலாளர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட் டுள்ளார். மேலும், இலங்கை பௌத்த நாடு என அர்த்தப்படுத்துவது முற்றிலும் தவறான விடயம். பாளி மொழி மூலம் புனைக்கதைகளை உருவாக்கி பௌத்த தேரர்களால் சிங்கள சமூகத்திற்கு தவறான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிங்கள வரலாறுகள் முதல் பௌத்த தேரர்கள் வரை, வரலாறு என போலியான புனைக்கதைகளை கட்டியெழுப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையில் வடக்குகிழக்கு பிரதேசங்களில் எந்தவொரு சிங்கள பௌத்தரும் வசிக்கவில்லை. இலங்கை எந்தவொரு விதத்திலும் சிங்களவர்களின் பூர்விகம் அல்ல. இலங்கையின் பூர்வீக மக்கள் தமிழர்களே என்ற காரணத்தினால் இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  http://valampurii.lk/valampurii/content.php?id=20136&ctype=news
  • ஐயா,   உங்களுக்கு தெரியும்தானே. வெளிப்படையாக கூறுங்கள்.
  • முட்டி போட்டு, ஆரம்ப பாடசாலை அதிபரின் பிரம்பு எங்களது கையை நன்றாக பதம் பார்த்த அனுபவங்கள் நிறையவே உண்டு.  நல்லதொரு பதிவு.. நன்றி
  • ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய கட்சிகள் மற்றும் தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்பட்டு வரும் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணை வேண்டும் என்ற கருத்துக்கள் வலுப்பெற்றிருந்ததோடு, கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் அதற்கான அழைப்பினை விடுத்திருந்தார். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொடர்ச்சியான தீர்மானங்களால் ஏற்பட்ட பின்னடைவுகளாலும், வாக்குவங்கியை நோக்கிய அரசியலுக்காகவுமே அவ்வாறான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பிற்கு வெளியில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் விமர்சனம் வெளியிட்டிருந்தன. இவ்வாறான நிலையில் தற்போது தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள் ஐக்கியப்படுவதற்கான எந்தவொரு சூழலும் இல்லாத நிலைமையே உருவாகியுள்ளது. முதலாவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போதுள்ள பங்காளிகளான புளொட் மற்றும் ரெலோ ஆகியன இரகசிய சந்திப்புக்களை நடத்தியிருந்த நிலையில் அடுத்து வரும்காலத்தில் கூட்டமைப்பில் அவர்கள் நீடிப்பார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. பொதுவெளியில் கூட்டமைப்பில் அவ்விரு கட்சிகளும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவது தொடர்பில் கருத்துக்களை பகிராது விட்டாலும் அடுத்து பொதுத்தோர்தலில் தமிழரசுக்கட்சியின் ஆதிக்கம் கூட்டமைப்பினுள் அதிகமாகும் என்ற ஐயத்தினைக் கொண்டிருக்கின்றன. அதற்கேற்றால் போல் தமிழரசுக்கட்சியும் பொதுத்தேர்தலில் தமது கட்சி சார்ந்து வாக்குவங்கியுள்ள பலமான இளம்சந்ததியினரை களமிறக்குவதற்காக வடக்கு கிழக்கில் உள்ள அவர்களை நோக்கி வலைவிரிக்க ஆரம்பித்துள்ளது. மறுபக்கத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான நீதியரசர்.சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் மாற்று கூட்டணியொன்றை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன.  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், ஈழத்தமிழர் சுயாட்சிக்கழம் உட்பட சிவில் அமைப்புக்களையும் ஒன்றிணைத்து பலமான அணியொன்றை அமைப்பதற்குரிய நடவடிக்கைள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது வடக்கு கிழக்கில் உள்ள சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சி.வி.விக்கினேஸ்வரன் இரகசியமாக சந்தித்து கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதோடு கூட்டணிக்கான பொதுக்கொள்கையில் உள்ளீர்க்கப்படும் விடயங்கள் தொடர்பிலான ஆலோசனைகளையும் முன்னெடுத்துள்ளார். இதேவேளை,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தான் சார்ந்த சிவில், பொது அமைப்புக்களை ஒருங்கிணைத்து தனியாகவே பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்குரிய தயார்ப்படுத்தல்களை கிராம மட்டங்களில் ஆரம்பித்துள்ளது. எவ்வாறாயினும் புத்திஜீவிகள், சிவில் அமைப்புக்கள், மதத்தலைவர்கள் ஆகியோர் கொண்ட அணியில் உள்ள ஒருசில பிரதிநிதிகள், தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகள் ஐக்கியப்படுவதற்கான சந்தர்ப்பம் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது வடக்கு,கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தபோதும் அந்த அரிய சந்தர்ப்பம் கைநழுவ விடப்பட்டுள்ளதாக விசனம் தெரிவித்துள்ளதோடு தமது ஆழ்ந்த கவலையையும் வெளியீட்டிடம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/71065
  • வெள்­ளைவேன் கடத்­தல்கள் குறித்து பக்­கச்­சார்­பற்று விசா­ரணை செய்­யுங்கள்: ராஜித வெள்­ளைவேன் கடத்­தல்கள் குறித்து தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­ய­வர்­க­ளி­டத்தில் பக்­கச்­சார்­பான விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு முழு­மை­யான விட­யங்கள் வெளிக்­கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். புதிய ஆட்­சி­யா­ளர்கள் வெள்­ளைவேன் விவ­காரம் தொடர்பில் முன்­னெ­டுக்கும் விசா­ர­ணைகள் உள்­ளிட்ட செயற்­பா­டு­க­ளுக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் வழங்­கு­வ­தற்கு தயா­ராக உள்­ள­தா­கவும் அவர் அறி­வித்­துள்ளார். ஜனா­தி­பதித் தேர்தல் இடம்­பெ­று­வ­தற்கு சொற்ப நாட்­க­ளுக்கு முன்­ன­தாக  ராஜித சேனா­ரத்ன நடத்­திய  ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றில் வெள்­ளைவேன்  கடத்­தல்கள் மற்றும் மனி­தப்­ப­டு­கொ­லைகள் இடம்­பெற்று முத­லை­க­ளுக்கு போடப்­பட்­டமை தொடர்பில் தக­வல்­களை வெள்­ளை­வேனில் சார­தி­யாக பணி­யாற்­றி­ய­தாக கூறி தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­திய இருவர் வெளி­யிட்­டி­ருந்­தனர்.  இந்­நி­லையில் குறித்த இரு­வ­ரையும் கைது செய்து குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரி­வினர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தி வரு­கின்­றனர்.  இந்­நி­லையில் அவர்­களின் கைது தொடர்பில் கருத்து வெளி­யிட்ட ராஜித சேனா­ரத்ன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.  அத்­துடன்,  அவ்­வி­டயம் தொடர்பில் மேலும் தெரி­விக்­கையில், 2015ஆம் ஆண்­டுக்கு முன்­ன­ரான காலத்தில் ஜன­நா­யகம் மறு­த­லிக்­கப்­பட்ட ஆட்­சிக்­கா­லத்தில் வெள்­ளைவேன் கலா­சாரம் அறி­மு­க­மா­னது.  இந்­தக்­க­லா­சாரம் நடை­மு­றையில் இருந்த காலத்தில் பலர் கடத்­தப்­பட்டு காணா­ம­லாக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் முறைப்­பா­டுகள் உள்­ளன. அவை தொடர்பில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­போதும் அவை முற்­றுப்­பெற்­றி­ருக்­க­வில்லை. மேலும் பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் பலரும் என்­னி­டத்தில் நேர­டி­யா­கவும் முறைப்­பா­டு­களை தெரி­வித்­தி­ருந்­தனர்.  இந்­நி­லையில் தான் குறித்த இரு­ந­பர்­களும் வெள்­ளைவேன்  கடத்­தல்கள் தொடர்­பி­லான விட­யங்­களை பகி­ரங்­கப்­ப­டுத்­து­வ­தற்கு முன்­வந்­தி­ருந்­தனர். குறித்த நபர்­க­ளி­டத்தில் நான் அதற்­கான சாட்­சிகள் இருக்­கின்­றவா என்­பது உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து கேட்­டி­ருந்தேன்.  அந்த இரண்டு நபர்­களும் நேர­டி­யாக சட்­சி­யத்­தினைக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் மற்றும் சில  ஆவ­ணங்­க­ளையும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். இந்­நி­லையில் தான் வெள்­ளைவேன் கடத்­தல்கள் குறித்த தக­வல்­களை அவர்கள் மூல­மாக நான் பங்­கேற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் ஊடாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தேன்.  மேலும் அவர்கள் தமக்­கான பாது­காப்­பினை வழங்­கு­மாறும் கோரி­யி­ருந்­தார்கள். இந்­நி­லையில் குறித்த விடயம் சம்­பந்­த­மான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறு பொலி­ஸா­ரி­டத்தில் நானே கோரி­ய­தோடு உரி­ய­வர்­க­ளுக்கு பாது­காப்­பினை வழங்­கு­மாறும் கோரி­யி­ருந்தேன்.  தற்­போது அவர்கள் இரு­வ­ரையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். அவர்களிடத்தில் உரிய விசாரணைகள் பக்கச்சார்பின்றி முன்னெடுக்க வேண்டும். அவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அனைத்து விடயங்களும் பகிரங்கப்படுத்தப்படுவது அவசியம் என்பதோடு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நான் தயாராகவும் இருக்கின்றேன் என்றார்.  https://www.virakesari.lk/article/71067