Jump to content

ரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

1. இன்றைய உலகில் முன்னாள் காதலன்/காதலி இல்லாதவர்கள். கட்டிய கணவனை தவிர வேறு யாரையும் முன்பு நேசிக்காமல் கல்யாணம் முடிப்பவர்கள் எத்தனை பேர்? ஆகவே ஒரு பெண்ணுக்கு முன்பு ஒருவர் மீது நேசம் இருந்தது (இருந்தது என்றே வைப்போம் -பேச்சுக்கு) என்பது மட்டுமே அவர் கல்யாணம் முடித்ததே எமாற்றி கனடா வரத்தான் என்று ஆகாது. ஆகவே இந்த ஆதாரங்கள் எல்லாம் “காகம் காகமாக சத்தி எடுத்த” கதைதான்.

2. இந்த விடயம் நீதி மன்றில் உள்ளது. இப்படியான விடயங்களை கதைப்பதே நீதிமன்ற அவமதிப்பாகலாம். ஆதாரம் இருந்தால் கோட்டில் அல்லவா கொடுக்க வேண்டும்? பேஸ்புக்கிலா கொடுப்பது ?

3. இங்கே சிலர், ஏமாற்றிவள்தானே, சாகத்தான் வேண்டும் என்ற மனநிலையில் இருப்பது தெரிகிறது. இப்படி ஏமாற்றியதுக்கு  (ஏமாற்றினாலும்-பேச்சுக்கு) ஒரு கொலை எந்தவகையில் சரியான எதிர்வினையாகும்? இந்த பெண் இந்த மனிதனின் உறவுகளை கொன்றிருக்காதவரையில், அவரை இந்த மனிதன் கொன்றது அநியாயமே. எனவே இந்த பெண் இப்படி செய்தார், அப்படிச் செய்தார், இதனால்தான் அப்பாவி மனிதன் கொலைவரை போனார் என்பதெல்லாம் ஆணாதிக்க, வன்முறை மனோநிலையே.

உங்களது  கருத்தும்  நிலையும் தான்  எனதும்

இது  போன்ற குடும்ப  சம்பவங்களுக்கு  ஆலோசனை  கேட்டால்

கை  வைக்கும்  அளவுக்கு  வநதுவிட்டால்

தயவு  செய்து வெவ்வேறாக  வாழ  முடிவெடுங்கள்  என்பது  தான்.

ஆனால்  தற்பொழுது  இவ்வாறு  வெளிநாடு  வருவதற்காக

புலத்து  ஆண்களை  பயன்படுத்துதல்  என்பது பல  இடங்களில் நடக்கிறது

இங்கும்  எனது  வீட்டருகில்  இவ்வாறு ஒரு  சம்பவம் நடந்தது

3 மாத  விசா  எடுத்தவுடனேயே கணவனை நச்சரித்து லண்டன் விசா  எடுத்து

லண்டன்  போய்  அங்கே  திருமணமும் நடந்து  விட்டது

எனவே  நான் ஏமாற்றப்படும்வரை

ஆலாசனை  சொல்லமுடியுமே  தவிர

அதன் வலியை  என்னால் அறிய  முடியாதல்லவா?

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சக மனிதர்களோடு நடமாடவே தகுதியில்லாத ஒரு மிருகத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு ஜீவராசி கொலையைச் செய்து விட்டது! இதை இனி சட்டம் கொலையாகத் தான் பார்க்குமே தவிர கொலைக்கு என்ன aggravating factor இருந்தது என்று பார்க்கப் போவதில்லை! அப்படித் தான் நாங்களும் பார்க்க வேண்டிய தேவையுள்ளது. இதை விட்டு விட்டு செத்த பெண்ணைக் குற்றம் கண்டு பிடித்து கொலைமிருகத்தை victim ஆகப் பார்க்கும் மன நிலை இங்கே சிலருக்கு இருப்பது கண்டு எனக்கு ஆச்சரியமில்லை! இவர்கள் மற்ற விடயங்களிலும் இப்படி தான் என அறிந்திருப்பதால் ஆச்சரியமேயில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ampanai said:

கனேடிய சட்டம் என்ற அளவுகோல் என்பது கனடாவில் உள்ள ஊடகங்களை கூட அளப்பது. எந்த கொலையை செய்தவரும் கொலையை ஒப்புக்கொண்டாலும்,  ஊடகங்கள் அவரை கொலையாளி என எழுதுவதில்லை. ஏனெனில் சட்டத்தால் நிரூபிக்கும்வரை அவர் நிரபராதி.

கனடாவின் அளவுகோல் : ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பதே.

இந்த திரியின் தலைப்பை கனேடிய ஊடகத்தில் எழுத முடியாது. எழுதினால் அந்த ஊடகம் அரச சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகும்.   இது தமிழர் எனற கனேடியருக்கும் தமிழர் அல்லாத கனேடியருக்கும் பொதுவானது. 

Western justice system சில வேளைகளில் quarks ஐ எறியக்கூடியது.

இந்தக் கொலையில்  யார், எது குற்றம் என்பது வெளிப்படையாக தெரியினும், நீதிமன்றம் சில வேளைகளில் வேறு முடிவுக்கு வரலாம், அந்த பெண்ணின் நிரந்தர வதிவு அல்லது பிரசா உரிமையின்  உண்மையான நோக்கம் (intention), குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமையை துர்பிரயோகம் செய்து தனது முன்னாள் உறவோடு சேர்வதற்காக கனடா  நிரந்தர வதிவு அல்லது பிரசா உரிமை பெற்றது என்பது உண்மையானால்.

1995 அல்லது 1996 என்று நினைவு. பிரான்சில் தந்தை மகளை குதிக்கொன்று விட்டார். தந்தை குத்தியதை ஏற்றுக் கொண்டார். கொலையை ஏற்றகவில்லை. ஏனெனில் மகள் விபச்சாரத்தை தனது முதுகின் பின்னால் (தான் எத்தனையோ தடவை கேட்டும்) நடத்தியதை அறிந்தே தான் குத்தியதாகவும், குத்தும் போதே தான் மனதளவில் செத்துவிட்டதாகவும் தந்தையின் நேரடி (வக்கீல் இல்லாத) வாதாட்டம். 

நீதி மன்றம் அவரை கிரிமினல் வழக்கில் இருந்து நிரபராதி என்றும், சிவில் order ஆக அவரின் மனதை ஆற்றும் மற்றும் கட்டுப் படுத்தும் வகையிலும் சில கட்டுப்பாடுகளை (எதுவென்று நினைவில்லை) விதித்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ampanai said:

அம்பனை, இந்த நேரங்களில் மட்டும் தான் நீங்கள் கனேடிய தராதரத்தில் செய்தியை எதிர்பார்க்கிறீர்கள் போல! ஒரு பெண்ணை பலர் முன்னிலையில் கொன்று போட்டவரை படுகொலையாளன் என்று அழைப்பதில் திடீரென்று மேற்கத்தைய தராதரம் வந்தி விடுகிறது! நல்ல ஜோக் போங்கள்!

Link to comment
Share on other sites

3 minutes ago, Justin said:

அம்பனை, இந்த நேரங்களில் மட்டும் தான் நீங்கள் கனேடிய தராதரத்தில் செய்தியை எதிர்பார்க்கிறீர்கள் போல! ஒரு பெண்ணை பலர் முன்னிலையில் கொன்று போட்டவரை படுகொலையாளன் என்று அழைப்பதில் திடீரென்று மேற்கத்தைய தராதரம் வந்தி விடுகிறது! நல்ல ஜோக் போங்கள்!

உங்களுக்கு இது புரிந்து விட்டது 🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, வல்வை சகாறா said:

இந்தக் கொலை தொடர்பாக நிறையவே செய்திகள் காதுவழி புகுந்து கடந்து செல்கின்றன. இரண்டுவிதமான பலத்த சர்ச்சை நம்மக்களிடையே உருவாகி இருக்கின்றன. கொலை செய்யப்பட்ட பெண்ணின் தரப்பிலும், கொலை செய்த ஆணின் தரப்பிலும் பலர் பேசுகின்றனர். ஒரு பிரச்சனைக்கு கொலை தீர்வாகாது. இது அப்பட்டமான ஆணின் பலத்தைக்காட்டுகிறது. இங்கு உயிரிழந்துள்ளவர் பெண் இருப்பினும் ஆண்களின் அதிகபட்ச கருத்தாடல்கள் மட்டுமல்ல பெண்களினது நாவீச்சுக்களும் இன்னும் நாம் மீளாத ஏதோ ஒன்றுக்குள்ளேயே அகப்பட்டிருக்கிறோம் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. பலரும் வெளிப்படையாக கொலைக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கும் வேளையிலும் கொலையுண்ட பெண் மீதான பிம்பத்தை தாம் வாழும் சமூகத்திற்கு ஏற்றாற்போலவே மாற்றுகிறார்கள். எங்கள் சமூகம் ஆண் மீதான பிம்பத்தை எப்போதுமே அழுக்கற்று சிருட்டிக்கவே விரும்புகிறது. அதிலிருந்து வெளிவர விரும்பவில்லை என்பதை நாம் பழகும் நம் மினம் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அந்த வகையிலேயே இந்த கொலை செய்யப்பட்ட பெண் மீதான கருத்தாடல்கள் பல தளங்களில் நிகழ்கின்றன. அந்த ஆண் கொலைகாரன் ஆனதற்கும், இந்தப் பெண் பிள்ளை கொல்லப்பட்டதற்கும் உண்மையிலேயே அவர்கள் இருவரும் காரணம் இல்லை. நமது சமூகமே இந்தக் கொலையை ஆணின் கையைக் கொண்டு நிகழ்த்தி இருக்கிறது. நமது சமூகத்தில் தற்காலத்தில் பெண்கள் தெளிவடைந்து வெளியே வந்தளவுக்கு ஆண்கள் வரவில்லை என்பதே நிதர்சனம். இன்னும் எல்லாவிதத்திலும் தன்னுடைய ஆளுமைக்குள் பெண்ணாணவள் தங்கவேண்டும் அதாவது கீழ்படியவேண்டும் என்ற எண்ணம் இல்லாத ஆண்கள் மிகச்சிலரே. இன்னும் சற்று உள்ளாரபோனால் ஆண் பிள்ளைகளைப் பெற்ற பெண்களின் வளர்ப்பை நாம் அலசி ஆராயவேண்டியவர்களாவோம். ஏனெனில் ஒரு ஆணின் செயல் பெண்களுக்கு எதிரான வன்முறையாகிறது என்றால் அதற்குக் காரணம் அவர்கள் வளரும் பருவத்தில் துணிச்சலான, அல்லது சுதந்திரமான பெண்கள் மீது அவர்களின் சுதந்திரத்தையும், துணிவையும் ஏற்க விரும்பாத சமூகம் அவர்கள் மீது அவதூறுகளைப்பரப்பி சமூக வெளியில் அவர்களை அவமானப்படுத்துவதில் மும்முரம் காட்டியிருக்கும். அவர்கள் மீதான துன்பியலில் ஒரு வகை சுகம் கண்டிருக்கும் அப்படிப்பட்ட ஒரு மனோ நிலையில் வளர்கின்றவர்கள். சமூக அவதூறுகளுக்கு அஞ்சி அஞ்சியே வாழ்க்கையைத் தொலைப்பவர்களாக இருக்கின்றனர்.

உண்மையிலேயே நமது சமூகம் நம்மை சுய பரிசோதனை செய்யவேண்டிய தேவை இருக்கிறது. இலகுவாக யாரோ ஒரு பெண்ணை அவள் முன்னாள் துணைவன் கொன்று விட்டான் என்பதற்கு அப்பால் அவன்- அவள் என்று அவர்கள் மீது தம் சுயகற்பனைகளைத் திணித்து சுகம் காண்பதை நிறுத்தவேண்டும். இன்று இக்கொலையின் மூலம் வெளியே வந்திருக்கும் உண்மை என்ன? இன்னும் நாங்கள் அநாகரீகமானவர்களாகவும், பெண்மையை இழிவுபடுத்தும் சைக்கோக்களாகவும் இருக்கிறோம் என்பதே உண்மை. வீட்டுக்கு வீடு நம் எல்லோருக்கும் கவுன்சிலிங் ஏதோ வகையில் தேவைப்படுகிறது. அவை வெவ்வேறு பட்ட காரணங்களுக்காகவும் இருக்கும். ஆனால் அவற்றில் முக்கியமானது. ஆண், பெண் உறவுநிலை சம்பந்தமானது. பண்பாடு என்னாவது? கலாச்சாரத்தை கடாசி எறிவதா? என்று தற்காலத்தில் மேலைத்தேயத்தில் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான பெரும் போராட்டம் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது.  அதே நேரம் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள், இந்தியா, இலங்கை என்று அடக்கமான (அதாவது தமக்கு கீழ் தலையாட்டி நிற்கும் பெண்) பெண்களைத் தேடி சென்று திருமணம் செய்ய முனைவதும், அப்படியே அங்குள்ள பெற்றோரால் பெண்பிள்ளையின் விருப்புக்கு மாறாக திருமணம் செய்து வைக்கப்படுவதும் பெற்றோருக்கு மதிப்புக் கொடுக்கும் பிள்ளைகள் தலை கவிழ்ந்து வாழ்க்கையை ஏற்பதும், வெளிநாடு வந்த பின்னர் தனித்த வாழ்வில் முகங்கொடுக்கும் ஒவ்வொரு பிடிப்பற்ற நிகழ்வுக்கும் அதனோடு ஒட்டிய வன்முறைக்கும் பின்னராக ஏற்படும் நிமிர்விற்கும் பின்னரான விவாகரத்துகளுக்கும்... அப்படியே அதனோடு ஒட்டி நிகழ்த்தப்படும் வன்முறைகள் என்று நிறையவே சொல்லிக் கொண்டு போகலாம். ஒரு சிறிய வன்முறைகூட பெரிய பாதிப்பைக் கொடுக்கும் என்பதைச் சிந்திக்கும் திறனை அதிகரிக்கவேண்டும். அநேகமாக குடும்ப வன்முறையை எடுத்துக் கொண்டால் ஆத்திரக்காரக் கணவன் தன் கையால் சுவரோ அல்லது கதவுக்கோ அருகாமையில் நிற்கும் மனைவியை ஓங்கி குத்துகிறார் என்று   வைத்துக்கொண்டால் ஒன்று அந்தக் குத்தை எதிர்கொள்ளும் மனைவி காயப்படக்கூடும் மனைவி சற்று விலகினால் சுவரைப்போரையாக்கும் அல்லது கதவை உடைக்கும். ஒரு வேளை மனைவி காயப்பட்டால் பிள்ளைகள் அவசர உதவிக்கு ஆன்புலன்சை அழைத்தால் கூடவே காவல்துறையும் வரும்.  ஒருவேளை சுவர் அல்லது கதவு உடைந்தால் ஆத்திரத்தோடு ஓங்கியவர் கையும் காயப்படும். அப்போதும் அவசர உதவிக்கு ஆன்புலன்ஸ் வரும். சரி இவற்றைப் பார்த்துக் கொண்டு பயத்தில் நிற்கும் பிள்ளைகள் மன அளவில் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். வெளியே தெரியாமல் மன அழுத்தம் அவர்களின் கல்வியிலிருந்து எல்லாவற்றையும் பாதிக்கும். ஆத்திரம் தெளிந்து விடும் பாதிப்பு நிலைத்துக் கொள்ளும். பொருளாதாரத்திலிருந்து ஒற்றுமை, மனவளம்வரை பாதிப்பு நீளும். ஒரு சில நிமிட ஆத்திரத்திற்கே இத்தகை நிலை என்றால் என்பதை சிந்திக்கும் அறிவை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யவேண்டும். அநேகமானவர்கள் கவுன்சிலிங் செய்பவர்களை கேலியாக பேசுவதை எமது சமூகத்தில் அவதானித்திருக்கிறேன். இந்தக் கேலியான போக்கு நமக்கான நாகரீகமான வாழ்க்கை முறையை அண்டவிடாது தூரமாக்கும். ஆக நமது சமூகம் தொடர்பான நடைமுறைகளில் ஏதாவது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படல் வேண்டும் என்பதைத் தவிர அக்கொலை தொடர்பாக எதுவும் பேச முடியவில்லை. எங்கிருந்து தொடங்குவது என்றுதான் யாருக்கும் தெரியவில்லை.

👌 இதற்கு மேல் இதைப்பற்றிச் சொல்வதற்கு ஏதுவுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kadancha said:

Western justice system சில வேளைகளில் quarks ஐ எறியக்கூடியது.

இந்தக் கொலையில்  யார், எது குற்றம் என்பது வெளிப்படையாக தெரியினும், நீதிமன்றம் சில வேளைகளில் வேறு முடிவுக்கு வரலாம், அந்த பெண்ணின் நிரந்தர வதிவு அல்லது பிரசா உரிமையின்  உண்மையான நோக்கம் (intention), குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமையை துர்பிரயோகம் செய்து தனது முன்னாள் உறவோடு சேர்வதற்காக கனடா  நிரந்தர வதிவு அல்லது பிரசா உரிமை பெற்றது என்பது உண்மையானால்.

1995 அல்லது 1996 என்று நினைவு. பிரான்சில் தந்தை மகளை குதிக்கொன்று விட்டார். தந்தை குத்தியதை ஏற்றுக் கொண்டார். கொலையை ஏற்றகவில்லை. ஏனெனில் மகள் விபச்சாரத்தை தனது முதுகின் பின்னால் (தான் எத்தனையோ தடவை கேட்டும்) நடத்தியதை அறிந்தே தான் குத்தியதாகவும், குத்தும் போதே தான் மனதளவில் செத்துவிட்டதாகவும் தந்தையின் நேரடி (வக்கீல் இல்லாத) வாதாட்டம். 

நீதி மன்றம் அவரை கிரிமினல் வழக்கில் இருந்து நிரபராதி என்றும், சிவில் order ஆக அவரின் மனதை ஆற்றும் மற்றும் கட்டுப் படுத்தும் வகையிலும் சில கட்டுப்பாடுகளை (எதுவென்று நினைவில்லை) விதித்தது. 

இந்த கோர்ட் நாடகமெல்லாம் நடக்கும் என்பது யாவரும் அறிந்தது தான். உணர்ச்சி வசப்பட்ட கொலை, அல்கஹோல் செய்த கொலை, என்றெல்லாம் கொலைஞர் உருப்படியான ஒரு வழக்குரைஞரை வைத்துக் கொண்டால் அவர் வாதாடி 1st degree homicide இல் இருந்து manslaughter என்று குறைத்து விடலாம்! இந்தக் கொலைகாரக் கோழையும் தன் உயிரை ஆசையுடன் கட்டிப் பிடித்துக் கொண்டு வெள்ளனவாகவே சிறையில் இருந்து மீண்டு வந்து எஞ்சிய நாட்களை கனடாவில் களிக்கலாம்! வாய்ப்புண்டு தான், ஆனால் கொலையாளிக்கு நாங்கள் வக்காலத்து வாங்கி நியாயம் சொல்லி எங்கள் ஆன்மாவில் சேற்றை நாமே வாரிக் கொட்டிக் கொள்வது தான் சகிக்க முடியவில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

இந்த கோர்ட் நாடகமெல்லாம் நடக்கும் என்பது யாவரும் அறிந்தது தான்.

பிரான்சில் நடந்தது நாடகமல்ல. 

தந்தை வக்கீல் இல்லாமல் தானாகவே வாதாடியது (litigant in person). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, வல்வை சகாறா said:

இந்தக் கொலை தொடர்பாக நிறையவே செய்திகள் காதுவழி புகுந்து கடந்து செல்கின்றன. இரண்டுவிதமான பலத்த சர்ச்சை நம்மக்களிடையே உருவாகி இருக்கின்றன. கொலை செய்யப்பட்ட பெண்ணின் தரப்பிலும், கொலை செய்த ஆணின் தரப்பிலும் பலர் பேசுகின்றனர். ஒரு பிரச்சனைக்கு கொலை தீர்வாகாது. இது அப்பட்டமான ஆணின் பலத்தைக்காட்டுகிறது. இங்கு உயிரிழந்துள்ளவர் பெண் இருப்பினும் ஆண்களின் அதிகபட்ச கருத்தாடல்கள் மட்டுமல்ல பெண்களினது நாவீச்சுக்களும் இன்னும் நாம் மீளாத ஏதோ ஒன்றுக்குள்ளேயே அகப்பட்டிருக்கிறோம் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. பலரும் வெளிப்படையாக கொலைக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கும் வேளையிலும் கொலையுண்ட பெண் மீதான பிம்பத்தை தாம் வாழும் சமூகத்திற்கு ஏற்றாற்போலவே மாற்றுகிறார்கள். எங்கள் சமூகம் ஆண் மீதான பிம்பத்தை எப்போதுமே அழுக்கற்று சிருட்டிக்கவே விரும்புகிறது. அதிலிருந்து வெளிவர விரும்பவில்லை என்பதை நாம் பழகும் நம் மினம் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அந்த வகையிலேயே இந்த கொலை செய்யப்பட்ட பெண் மீதான கருத்தாடல்கள் பல தளங்களில் நிகழ்கின்றன. அந்த ஆண் கொலைகாரன் ஆனதற்கும், இந்தப் பெண் பிள்ளை கொல்லப்பட்டதற்கும் உண்மையிலேயே அவர்கள் இருவரும் காரணம் இல்லை. நமது சமூகமே இந்தக் கொலையை ஆணின் கையைக் கொண்டு நிகழ்த்தி இருக்கிறது. நமது சமூகத்தில் தற்காலத்தில் பெண்கள் தெளிவடைந்து வெளியே வந்தளவுக்கு ஆண்கள் வரவில்லை என்பதே நிதர்சனம். இன்னும் எல்லாவிதத்திலும் தன்னுடைய ஆளுமைக்குள் பெண்ணாணவள் தங்கவேண்டும் அதாவது கீழ்படியவேண்டும் என்ற எண்ணம் இல்லாத ஆண்கள் மிகச்சிலரே. இன்னும் சற்று உள்ளாரபோனால் ஆண் பிள்ளைகளைப் பெற்ற பெண்களின் வளர்ப்பை நாம் அலசி ஆராயவேண்டியவர்களாவோம். ஏனெனில் ஒரு ஆணின் செயல் பெண்களுக்கு எதிரான வன்முறையாகிறது என்றால் அதற்குக் காரணம் அவர்கள் வளரும் பருவத்தில் துணிச்சலான, அல்லது சுதந்திரமான பெண்கள் மீது அவர்களின் சுதந்திரத்தையும், துணிவையும் ஏற்க விரும்பாத சமூகம் அவர்கள் மீது அவதூறுகளைப்பரப்பி சமூக வெளியில் அவர்களை அவமானப்படுத்துவதில் மும்முரம் காட்டியிருக்கும். அவர்கள் மீதான துன்பியலில் ஒரு வகை சுகம் கண்டிருக்கும் அப்படிப்பட்ட ஒரு மனோ நிலையில் வளர்கின்றவர்கள். சமூக அவதூறுகளுக்கு அஞ்சி அஞ்சியே வாழ்க்கையைத் தொலைப்பவர்களாக இருக்கின்றனர்.

உண்மையிலேயே நமது சமூகம் நம்மை சுய பரிசோதனை செய்யவேண்டிய தேவை இருக்கிறது. இலகுவாக யாரோ ஒரு பெண்ணை அவள் முன்னாள் துணைவன் கொன்று விட்டான் என்பதற்கு அப்பால் அவன்- அவள் என்று அவர்கள் மீது தம் சுயகற்பனைகளைத் திணித்து சுகம் காண்பதை நிறுத்தவேண்டும். இன்று இக்கொலையின் மூலம் வெளியே வந்திருக்கும் உண்மை என்ன? இன்னும் நாங்கள் அநாகரீகமானவர்களாகவும், பெண்மையை இழிவுபடுத்தும் சைக்கோக்களாகவும் இருக்கிறோம் என்பதே உண்மை. வீட்டுக்கு வீடு நம் எல்லோருக்கும் கவுன்சிலிங் ஏதோ வகையில் தேவைப்படுகிறது. அவை வெவ்வேறு பட்ட காரணங்களுக்காகவும் இருக்கும். ஆனால் அவற்றில் முக்கியமானது. ஆண், பெண் உறவுநிலை சம்பந்தமானது. பண்பாடு என்னாவது? கலாச்சாரத்தை கடாசி எறிவதா? என்று தற்காலத்தில் மேலைத்தேயத்தில் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான பெரும் போராட்டம் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது.  அதே நேரம் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள், இந்தியா, இலங்கை என்று அடக்கமான (அதாவது தமக்கு கீழ் தலையாட்டி நிற்கும் பெண்) பெண்களைத் தேடி சென்று திருமணம் செய்ய முனைவதும், அப்படியே அங்குள்ள பெற்றோரால் பெண்பிள்ளையின் விருப்புக்கு மாறாக திருமணம் செய்து வைக்கப்படுவதும் பெற்றோருக்கு மதிப்புக் கொடுக்கும் பிள்ளைகள் தலை கவிழ்ந்து வாழ்க்கையை ஏற்பதும், வெளிநாடு வந்த பின்னர் தனித்த வாழ்வில் முகங்கொடுக்கும் ஒவ்வொரு பிடிப்பற்ற நிகழ்வுக்கும் அதனோடு ஒட்டிய வன்முறைக்கும் பின்னராக ஏற்படும் நிமிர்விற்கும் பின்னரான விவாகரத்துகளுக்கும்... அப்படியே அதனோடு ஒட்டி நிகழ்த்தப்படும் வன்முறைகள் என்று நிறையவே சொல்லிக் கொண்டு போகலாம். ஒரு சிறிய வன்முறைகூட பெரிய பாதிப்பைக் கொடுக்கும் என்பதைச் சிந்திக்கும் திறனை அதிகரிக்கவேண்டும். அநேகமாக குடும்ப வன்முறையை எடுத்துக் கொண்டால் ஆத்திரக்காரக் கணவன் தன் கையால் சுவரோ அல்லது கதவுக்கோ அருகாமையில் நிற்கும் மனைவியை ஓங்கி குத்துகிறார் என்று   வைத்துக்கொண்டால் ஒன்று அந்தக் குத்தை எதிர்கொள்ளும் மனைவி காயப்படக்கூடும் மனைவி சற்று விலகினால் சுவரைப்போரையாக்கும் அல்லது கதவை உடைக்கும். ஒரு வேளை மனைவி காயப்பட்டால் பிள்ளைகள் அவசர உதவிக்கு ஆன்புலன்சை அழைத்தால் கூடவே காவல்துறையும் வரும்.  ஒருவேளை சுவர் அல்லது கதவு உடைந்தால் ஆத்திரத்தோடு ஓங்கியவர் கையும் காயப்படும். அப்போதும் அவசர உதவிக்கு ஆன்புலன்ஸ் வரும். சரி இவற்றைப் பார்த்துக் கொண்டு பயத்தில் நிற்கும் பிள்ளைகள் மன அளவில் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். வெளியே தெரியாமல் மன அழுத்தம் அவர்களின் கல்வியிலிருந்து எல்லாவற்றையும் பாதிக்கும். ஆத்திரம் தெளிந்து விடும் பாதிப்பு நிலைத்துக் கொள்ளும். பொருளாதாரத்திலிருந்து ஒற்றுமை, மனவளம்வரை பாதிப்பு நீளும். ஒரு சில நிமிட ஆத்திரத்திற்கே இத்தகை நிலை என்றால் என்பதை சிந்திக்கும் அறிவை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யவேண்டும். அநேகமானவர்கள் கவுன்சிலிங் செய்பவர்களை கேலியாக பேசுவதை எமது சமூகத்தில் அவதானித்திருக்கிறேன். இந்தக் கேலியான போக்கு நமக்கான நாகரீகமான வாழ்க்கை முறையை அண்டவிடாது தூரமாக்கும். ஆக நமது சமூகம் தொடர்பான நடைமுறைகளில் ஏதாவது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படல் வேண்டும் என்பதைத் தவிர அக்கொலை தொடர்பாக எதுவும் பேச முடியவில்லை. எங்கிருந்து தொடங்குவது என்றுதான் யாருக்கும் தெரியவில்லை.

இப்படிப் பட்ட கொலைகளுக்கு... தமிழ் சினிமாவும், நாடகங்களும்....
ஒரு காரணம் என்றே நினைக்கின்றேன்.  

அங்கு காட்டப் படும்..  குடும்ப குழப்பங்கள்,  பழி வாங்கல்கள்.. ஏராளம்.
அவற்றை... தணிக்கை, செய்ய..  ஒழுங்கான  நடைமுறை இல்லை. என நினைக்கின்றேன்.

இப்படிப் பட்ட   சினிமா, நாடகங்களை பார்த்து வாழ்ந்த ஒருவர்....
நல்ல  பண்புடன் இருப்பார்... என்பதை, நாம் எதிர் பார்க்க கூடாது.

ஆனால்... இதற்கு,  தமிழர்களின்  ஊடகங்கள் உடந்தையாக இருந்து...
வாழைப்பழத்தில்  ஊசி... ஏற்றுவது போல், தமிழர்களை  மூழைச்  சலவை செய்து... 
வெற்றி கண்டு,  கொண்டு இருக்கின்றார்கள்.

எமது, தமிழ் சமூகத்தை...   சீரழிக்க என்று,
இந்தியாவும், ஸ்ரீலங்காவும் திட்டமிட்டே...
தமது செயல்களை, செய்து கொண்டு  இருக்கின்றார்கள் என்பதை....
நாம் இலகுவில்,  தட்டிக் கழித்து... கடந்து செல்ல முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த மட்டில் இந்த வழக்குக்கும் கடஞ்சா சொல்லும் வழக்குக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது.

கடஞ்சா சொல்வதை battered women syndrome என்பார்கள். தொடர் வன்முறையை எதிர்கொள்ளும் ஒருவர் திருப்பி அடிக்க, அது கைமோசமாகி கொலையில் முடிவது. ஒரு மாதம் முன்பு கூட ஒரு கணவனை கொன்ற வயதான மனைவியை விடுதலை செய்தார்கள்.

ஆனால் இது வெறி ஏற்றியபடி, பஸ்சுக்கு காத்திருந்து  செய்யப்பட்ட கொலை. ஆகவே இதை இப்படி முடிப்பது கடினம்.

மனநிலை பாதிப்பு என கூறி diminished responsibly எனச் சொல்லி murder ஐ manslaughter ஆக குறைக்கலாம். ஆனால் இப்படிச் செய்தால் மனநிலை மாறும் வரை (வாழ்நாள் பூராவும் கூட) ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டிவரும். அதுக்கு மேர்டர் சார்ஜை ஒத்துகொண்டு 10 வருடத்தில் வெளியே வருவது பரவாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

நான் இந்த விடயத்தில் கனேடிய சட்டம் என்ன முடிவுக்கு வருகிறது என்று அக்கறைப்படவில்லை! கொடூரமான கொலைகாரர்களே ஆயுள்தண்டனை பெற்றாலும் சராசரியாக 22 ஆண்டுகளுக்கு மேல் கனடாவில் சிறையில் இருப்பதில்லை என்று இந்த கனேடியச் செய்தி சொல்கிறது:

https://nationalpost.com/news/canada/here-is-just-a-partial-list-of-the-brutal-murderers-that-canada-has-set-free

இதன் படி கொடூரக் கொலைஞர்கள் பலரை கனடாவில் சாதாரணமாக வெளியே உலவ விட்டிருக்கிறார்கள்.

என் அக்கறையெல்லாம் இப்படியான ஒரு கொடூரக் கொலையின் பின்னர் கூட, கொலைஞருக்கு கொஞ்சமேனும் நியாயமாகப் படக்கூடிய காரணம் இருந்திருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் வந்து வாதாடும் ஆட்கள் இருப்பது பற்றித் தான்! இது இந்தச் செய்தியையும் சம்பவத்தையும் தாண்டி வியாபித்திருக்கும் ஒரு பிற்போக்கான மனவியாதி! மேலே சகாரா சொன்னதை விட நாம் எதுவும் மேலதிகமாகச் சொல்லி விடமுடியாது இது பற்றி! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இப்படிப் பட்ட கொலைகளுக்கு... தமிழ் சினிமாவும், நாடகங்களும்....
ஒரு காரணம் என்றே நினைக்கின்றேன்.  

அங்கு காட்டப் படும்..  குடும்ப குழப்பங்கள்,  பழி வாங்கல்கள்.. ஏராளம்.
அவற்றை... தணிக்கை, செய்ய..  ஒழுங்கான  நடைமுறை இல்லை. என நினைக்கின்றேன்.

இப்படிப் பட்ட   சினிமா, நாடகங்களை பார்த்து வாழ்ந்த ஒருவர்....
நல்ல  பண்புடன் இருப்பார்... என்பதை, நாம் எதிர் பார்க்க கூடாது.

ஆனால்... இதற்கு,  தமிழர்களின்  ஊடகங்கள் உடந்தையாக இருந்து...
வாழைப்பழத்தில்  ஊசி... ஏற்றுவது போல், தமிழர்களை  மூழைச்  சலவை செய்து... 
வெற்றி கண்டு,  கொண்டு இருக்கின்றார்கள்.

எமது, தமிழ் சமூகத்தை...   சீரழிக்க என்று,
இந்தியாவும், ஸ்ரீலங்காவும் திட்டமிட்டே...

தமது செயல்களை, செய்து கொண்டு  இருக்கின்றார்கள் என்பதை....
நாம் இலகுவில்,  தட்டிக் கழித்து... கடந்து செல்ல முடியாது.

இது தற்போது வழமையாகப் பாவிக்கப் படும்  "மற்றவன் தான் எங்கள் சீரழிவுக்குக் காரணம் (ஆனால், பழம்பெருமைக்கெல்லாம் நாம் மட்டுமே காரணம்!)" என்ற புளித்துப் போன வாதம் போல படுகிறது!

இணைய வெளியும் வானலைகளும் திறந்தே இருக்கின்றன! இது மேற்கத்தைய வாழ்விலும் நவீன வாழ்விலும் நாம் ஏற்றுக் கொண்ட ஒரு மாற்றம்! இந்த சுயமான ஏற்றுக்கொள்ளலோடு பொறுப்பும் வர வேண்டும்! நாடகத்தை சினிமாவைப் பார்த்து விட்டு ஒருவன் தன் வாழ்வை வடிவமைத்தால் அவனைத் தான் நாம் தூற்ற வேண்டுமேயொழிய கற்பனைக் கதைகளை காசுக்காக விற்கும் மீடியாக் காரர்களை அல்ல! உங்கள் வாதப் படி பார்த்தால் தலிபான் மேற்கத்தைய இந்திய  மசாலாக்களைத் தடைசெய்திருக்கும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கோ குழந்தைகளுக்கோ எதிராக வன்முறைகளே இருகக் கூடாதே? ஆனால் அங்கே தானே எல்லாம் நடக்கிறது?

திருந்துவதன் முதல்படி எங்கே பிரச்சினை இருக்கிறதென்று சரியாக உணர்ந்து கொள்வதேயொழிய மற்றவன் மேல் பழி போட்டு விட்டு நம்மை அப்பாவிகளாகக் காட்டிக் கொள்வதில் அல்ல!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Justin said:

ஜஸ்ரின்... மூளைச் சலவை என்பது,  ஒரு மனிதனை.. மெல்லம் மெல்லமாக.. மாற்றுவது.
உதாரணத்துக்கு...  கோழியை, எடுத்துக் கொண்டால்...
அது,  பல்லாயிரம் வருடங்களுக்கு  முன்பு ... நீண்ட தூரம் பறக்கும்  பறவை இனத்தை சேர்ந்தது.
இப்பவும்,  அதன் உடல் அமைப்பு.. அப்படித்தான்... இருக்கு.  
ஆனால்...  அதனால், இன்று பறக்க முடியாததற்கு காரணம்...
மனிதன்... அதன் முட்டைக்கும்,  இறைச்சிக்கும்  ஆசைப்பட்டு...
செல்லப் பறவையாக...  வீட்டில், உள்ள கூட்டில்... வளர்க்க ஆரம்பித்தவுடன்...
கோழி... பறக்கிறதை  மறந்து,  எமது கறிச்  சட்டிக்குள்...
"சிக்கன்  65"  ஆகவும்,   "லெக் பீஸ்"  பிரியாணியிலும்... 
காலை நீட்டிக் கொண்டு இருக்கிறதை பார்க்க,
தமிழருக்கும், அந்த நிலைதான் வந்து கொண்டு இருக்குது....

இதை.. சொன்னால், நீங்கள் என்னை..  "முட்டாள்  பயல்"  என்பீர்கள் என்று, நன்கு  தெரியும். :grin:
ஆனால்... உண்மை,  அது தான்.  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

நான் இந்த விடயத்தில் கனேடிய சட்டம் என்ன முடிவுக்கு வருகிறது என்று அக்கறைப்படவில்லை! கொடூரமான கொலைகாரர்களே ஆயுள்தண்டனை பெற்றாலும் சராசரியாக 22 ஆண்டுகளுக்கு மேல் கனடாவில் சிறையில் இருப்பதில்லை என்று இந்த கனேடியச் செய்தி சொல்கிறது:

https://nationalpost.com/news/canada/here-is-just-a-partial-list-of-the-brutal-murderers-that-canada-has-set-free

இதன் படி கொடூரக் கொலைஞர்கள் பலரை கனடாவில் சாதாரணமாக வெளியே உலவ விட்டிருக்கிறார்கள்.

என் அக்கறையெல்லாம் இப்படியான ஒரு கொடூரக் கொலையின் பின்னர் கூட, கொலைஞருக்கு கொஞ்சமேனும் நியாயமாகப் படக்கூடிய காரணம் இருந்திருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் வந்து வாதாடும் ஆட்கள் இருப்பது பற்றித் தான்! இது இந்தச் செய்தியையும் சம்பவத்தையும் தாண்டி வியாபித்திருக்கும் ஒரு பிற்போக்கான மனவியாதி! மேலே சகாரா சொன்னதை விட நாம் எதுவும் மேலதிகமாகச் சொல்லி விடமுடியாது இது பற்றி! 

கொலைகாரர்களை சிறையில் தள்ளி, திறப்பை எறிந்து விடவேண்டும் எனும் உங்கள் பார்வையில் எனக்கு உடன்பாடில்லை. அவர்களை வெளியே விடுவதும் அல்லாததும் பரோல் சபை எடுக்கும் risk of reoffending இல் மட்டுமே தங்கியிருக்கவேண்டும். எந்த பாதகத்தை செய்தோரும் மனம் திருந்தினால், குறித்த காலத்துக்குப் பின்பும் அவர்களை சிறையில் வைத்திருப்பதில் பழிவாங்குவதை தவிர வேறு எந்த காரணமும் இருக்க முடியாது.

ஆனால் கொலைகாரர்களை, கொலையை நியாயப்படுத்துவதை உங்களை போலவே நானும் வெறுக்கிறேன்.

Link to comment
Share on other sites

8 hours ago, நிழலி said:

பலர் பார்க்கும் நல்ல வெயில் பொழுதொன்றில் பல முறை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, தான் தான் கொலையாளி என்று ஒப்புக் கொண்டு இரத்தம் தோய்ந்த ஆடைகளுடன் பொலிசில் சரணடைந்தவரை (காவல் நிலையத்தில் இருந்த பொலிஸ்காரர் ஒருவரையும் தாக்கியுமுள்ளார்) இன்னும் சந்தேக நபர் என்று மெழுகு பூசி அழைக்க தேவையில்லை,

நீதிமன்றில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின் தான் குற்றவாளி என்று (தானே ஒத்துக் கொண்டு சரணடைந்த பின்னரும் கூட) படுகொலையாளிகளை அழைக்க வேண்டும் என்ற உங்களின் இந்த அளவுகோலை தமிழர் அல்லாதவர்கள் மீதும் பிரயோகிப்பீர்களா.... போர்க்குற்றவாளிகள் உட்பட?

நுணா இந்த செவ்வியை நீங்கள் உங்கள் காதுகளால் கேட்டீர்களா?

நான் ஏன் இப்படிக் கேட்கின்றேன் என்றால், ரமணனின் தர்சிகா தொடர்பான காலை நிகழ்வை நான் கடைசி 6 நிமிடங்கள் வரைக்கும் கேட்டுக் கொண்டு இருந்தேன். நீதன் ஷான் தன் இறுதி குறிப்பினை கதைக்கும் வரைக்கும் கேட்டனான். பின்னர் எழில் என்பவர் இறுதியாக கதைத்துக் கொண்டு இருந்தார். ஆனால் அது வரைக்கும் ரமணன் படுகொலையாளியின் நண்பரை செவ்வி எடுத்திருக்கவில்லை. இறுதி 6 நிமிடங்களில் எடுத்திருக்க வாய்ப்புகளும் மிகக் குறைவு என்பதால்.

அப்படி எடுத்திருப்பின் வேலிக்கு ஓணானை சாட்சிக்கு கூப்பிட்ட கதையாக தான் இருந்திருக்கும். சசிதரனின் குடும்பம் அப் பெண் மீது இது மட்டுமல்ல, இதை விட அதிகமாக வசைகளை அள்ளிக் கொட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

நான் கேட்கவில்லை. நண்பர்கள் கேட்டார்கள்.அவர்கள் மூலமாக தான் செய்தியை அறிந்தேன். காலை 9:15 அளவில்  சசிதரனின் நண்பரின் செவ்வி எடுக்கப்பட்டது. அவரின் செவ்வியின் படி  சசிதரன்  கடந்த சில மாதங்களாக தன்னை ஏமாற்றியவளை  கொலை செய்ய வேண்டும் என அடிக்கடி கூறியதாக கூறினார். அத்துடன் மனநோய்க்கான மருந்து வில்லைகள் எடுப்பதாகவும் கூறினாராம்.

பெண்ணின் பக்கம் இருந்து யாராவது வாக்கு மூலம் கொடுத்தால் தான் உண்மை நிலை தெரியும். அதுவும் வேலிக்கு ஓணான் சாட்சியாக இருக்க கூடாது என்பது எனது அவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் யாரும் கொலையை நியாயப்படுத்தவில்லை என நினைக்கின்றேன்.கொலைக்கான காரணம் கூட இன்னும் சரியாக தெரியவில்லை. இது இப்படியிருக்க ஆணாதிக்கம் , பெண்ணடிமை பற்றி இங்கே வெட்டி விளாசுபவர்களைப்பற்றி என்ன சொல்ல?

ஊடகங்களும் தங்கள் பிரபலத்துக்காக கண்ட கண்டவர்களை பேட்டி எடுக்கும்.அதையெல்லாம் வைத்து விவாதிப்பதும் முட்டாள்த்தனம்.

Link to comment
Share on other sites

நடத்தப்பட்ட கொலை ஆணாதிக்கத்தின் முழு வெறியை நிலைநாட்ட நடத்தப்பட்டிருக்கிறது. பெண் பலவீனமானவள், ஆணின் பலத்தின் முன்னல் அவள் எதுவுமில்லை, ஆண் நினைக்கும் நேரத்தில் அவளின் வாழ்வை முடிக்கவும், வாழவிடவும் முடியும் என்கிற கற்காலச் சிந்தனையின் அடிப்படையில் நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு நாம் என்ன நியாயப்படுத்தல்களை முன்வைத்தாலும் அது ஆணாதிக்க வெறியின் வெளிப்பாடுதான் என்பதில் வேறு பேச்சில்லை.

துரோகத்திற்குத் தண்டனை கொலைதான் என்றால் ஆண்களால் வஞ்சிக்கப்பட்ட பெண்கள் தமக்குத் துரோகமிழைத்த ஆண்களைக் கொல்லலாமா? 

நடத்தப்பட்டது காட்டுமிராண்டித்தனமான ஆணாதிக்க வெறியின் வெளிப்பாடு. வாழுதற்கு ஆணுக்கு இருக்கும் அதே உரிமை பெண்ணுக்கும் இருக்கிறது. அவர்களின் வாழ்வு எப்படியிருப்பினும்கூட. அதைத் தீர்மானிக்க ஆணுக்கு எந்த உரிமையும் இல்லை, அவன் அவளது கணவனாக இருந்தாலும் கூட.

அப்பெண்ணின் இறப்பால் வாடும் உறவுகளுக்கு எனது அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

ஜஸ்ரின்... மூளைச் சலவை என்பது,  ஒரு மனிதனை.. மெல்லம் மெல்லமாக.. மாற்றுவது.
உதாரணத்துக்கு...  கோழியை, எடுத்துக் கொண்டால்...
அது,  பல்லாயிரம் வருடங்களுக்கு  முன்பு ... நீண்ட தூரம் பறக்கும்  பறவை இனத்தை சேர்ந்தது.
இப்பவும்,  அதன் உடல் அமைப்பு.. அப்படித்தான்... இருக்கு.  
ஆனால்...  அதனால், இன்று பறக்க முடியாததற்கு காரணம்...
மனிதன்... அதன் முட்டைக்கும்,  இறைச்சிக்கும்  ஆசைப்பட்டு...
செல்லப் பறவையாக...  வீட்டில், உள்ள கூட்டில்... வளர்க்க ஆரம்பித்தவுடன்...
கோழி... பறக்கிறதை  மறந்து,  எமது கறிச்  சட்டிக்குள்...
"சிக்கன்  65"  ஆகவும்,   "லெக் பீஸ்"  பிரியாணியிலும்... 
காலை நீட்டிக் கொண்டு இருக்கிறதை பார்க்க,
தமிழருக்கும், அந்த நிலைதான் வந்து கொண்டு இருக்குது....

இதை.. சொன்னால், நீங்கள் என்னை..  "முட்டாள்  பயல்"  என்பீர்கள் என்று, நன்கு  தெரியும். :grin:
ஆனால்... உண்மை,  அது தான்.  😎

உண்மை எதுவென்று கண்டறிவதும் நம்புவதும் விடுவதும் உங்கள் உரிமை! ஆனால், கச்சான் சைஸில் மூளை கொண்ட கோழியின் கூர்ப்பிற்கும் 1300 கிராம் நிறை கொண்ட மனிதனின் மூளை கழுவப்படுவதற்கும் நீங்கள் போட்ட ரோடு இருக்கே? அது செவ்வாய்க்கு மனிதன் போய் விட்ட மாதிரியான உதாரணம் பிரதர்😎

கோழிக்குத் தெரிவில்லை! மனிதனுக்குத் தெரிவு இருக்கிறது. அதனால் தான் 18 வயதுக்கு மேலே சில விடயங்களைப் பார்க்கவும் அனுபவிக்கவும் அனுமதி இருக்கிறது. சரியான தெரிவுகளை நாங்கள் செய்யாமல் இருந்து விட்டு பிறகு வந்து மற்றவன் எங்கள் மூளையைக் கழுவுகிறான் என்பது ஒரு excuse மட்டுமே! தீர்வல்ல!

காலாகாலமாக பெண்களை கொஞ்சம் மரியாதை குறைத்தே நடத்தி வரும் எங்கள் பிற்போக்குத் தனத்தை  "கலாச்சாரம், தாற்பரியம்" என்று நாம் தூக்கிப் பிடித்துக் கொண்டு, மற்றவன் மூளையைக் கழுவுகிறான் என்பது சுத்த முட்டாள் தனம் என்று தான் நான் நினைக்கிறேன்!  

15 hours ago, goshan_che said:

கொலைகாரர்களை சிறையில் தள்ளி, திறப்பை எறிந்து விடவேண்டும் எனும் உங்கள் பார்வையில் எனக்கு உடன்பாடில்லை. அவர்களை வெளியே விடுவதும் அல்லாததும் பரோல் சபை எடுக்கும் risk of reoffending இல் மட்டுமே தங்கியிருக்கவேண்டும். எந்த பாதகத்தை செய்தோரும் மனம் திருந்தினால், குறித்த காலத்துக்குப் பின்பும் அவர்களை சிறையில் வைத்திருப்பதில் பழிவாங்குவதை தவிர வேறு எந்த காரணமும் இருக்க முடியாது.

ஆனால் கொலைகாரர்களை, கொலையை நியாயப்படுத்துவதை உங்களை போலவே நானும் வெறுக்கிறேன்.

ஆமாம், எனக்கும் மரணதண்டனையும் மீட்சியற்ற சிறையும் ஒப்புதல் இல்லை! ஆனால், அந்த நஷனல் போஸ்ட் கட்டுரையை வாசித்தால், மீளக் குற்றமிழைக்கும் ஆபத்தைக் கூட சரியாக ஆராயாமல் மனவருத்தம் தெரிவிக்காத கொலைஞர்களைக் கூட வெளியே விட்டிருக்கிறார்கள்! இந்த விடயம் உறுத்துகிறது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, வல்வை சகாறா said:

இந்தக் கொலை தொடர்பாக நிறையவே செய்திகள் காதுவழி புகுந்து கடந்து செல்கின்றன. இரண்டுவிதமான பலத்த சர்ச்சை நம்மக்களிடையே உருவாகி இருக்கின்றன. கொலை செய்யப்பட்ட பெண்ணின் தரப்பிலும், கொலை செய்த ஆணின் தரப்பிலும் பலர் பேசுகின்றனர். ஒரு பிரச்சனைக்கு கொலை தீர்வாகாது. இது அப்பட்டமான ஆணின் பலத்தைக்காட்டுகிறது. இங்கு உயிரிழந்துள்ளவர் பெண் இருப்பினும் ஆண்களின் அதிகபட்ச கருத்தாடல்கள் மட்டுமல்ல பெண்களினது நாவீச்சுக்களும் இன்னும் நாம் மீளாத ஏதோ ஒன்றுக்குள்ளேயே அகப்பட்டிருக்கிறோம் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. பலரும் வெளிப்படையாக கொலைக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கும் வேளையிலும் கொலையுண்ட பெண் மீதான பிம்பத்தை தாம் வாழும் சமூகத்திற்கு ஏற்றாற்போலவே மாற்றுகிறார்கள். எங்கள் சமூகம் ஆண் மீதான பிம்பத்தை எப்போதுமே அழுக்கற்று சிருட்டிக்கவே விரும்புகிறது. அதிலிருந்து வெளிவர விரும்பவில்லை என்பதை நாம் பழகும் நம் மினம் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அந்த வகையிலேயே இந்த கொலை செய்யப்பட்ட பெண் மீதான கருத்தாடல்கள் பல தளங்களில் நிகழ்கின்றன. அந்த ஆண் கொலைகாரன் ஆனதற்கும், இந்தப் பெண் பிள்ளை கொல்லப்பட்டதற்கும் உண்மையிலேயே அவர்கள் இருவரும் காரணம் இல்லை. நமது சமூகமே இந்தக் கொலையை ஆணின் கையைக் கொண்டு நிகழ்த்தி இருக்கிறது. நமது சமூகத்தில் தற்காலத்தில் பெண்கள் தெளிவடைந்து வெளியே வந்தளவுக்கு ஆண்கள் வரவில்லை என்பதே நிதர்சனம். இன்னும் எல்லாவிதத்திலும் தன்னுடைய ஆளுமைக்குள் பெண்ணாணவள் தங்கவேண்டும் அதாவது கீழ்படியவேண்டும் என்ற எண்ணம் இல்லாத ஆண்கள் மிகச்சிலரே. இன்னும் சற்று உள்ளாரபோனால் ஆண் பிள்ளைகளைப் பெற்ற பெண்களின் வளர்ப்பை நாம் அலசி ஆராயவேண்டியவர்களாவோம். ஏனெனில் ஒரு ஆணின் செயல் பெண்களுக்கு எதிரான வன்முறையாகிறது என்றால் அதற்குக் காரணம் அவர்கள் வளரும் பருவத்தில் துணிச்சலான, அல்லது சுதந்திரமான பெண்கள் மீது அவர்களின் சுதந்திரத்தையும், துணிவையும் ஏற்க விரும்பாத சமூகம் அவர்கள் மீது அவதூறுகளைப்பரப்பி சமூக வெளியில் அவர்களை அவமானப்படுத்துவதில் மும்முரம் காட்டியிருக்கும். அவர்கள் மீதான துன்பியலில் ஒரு வகை சுகம் கண்டிருக்கும் அப்படிப்பட்ட ஒரு மனோ நிலையில் வளர்கின்றவர்கள். சமூக அவதூறுகளுக்கு அஞ்சி அஞ்சியே வாழ்க்கையைத் தொலைப்பவர்களாக இருக்கின்றனர்.

உண்மையிலேயே நமது சமூகம் நம்மை சுய பரிசோதனை செய்யவேண்டிய தேவை இருக்கிறது. இலகுவாக யாரோ ஒரு பெண்ணை அவள் முன்னாள் துணைவன் கொன்று விட்டான் என்பதற்கு அப்பால் அவன்- அவள் என்று அவர்கள் மீது தம் சுயகற்பனைகளைத் திணித்து சுகம் காண்பதை நிறுத்தவேண்டும். இன்று இக்கொலையின் மூலம் வெளியே வந்திருக்கும் உண்மை என்ன? இன்னும் நாங்கள் அநாகரீகமானவர்களாகவும், பெண்மையை இழிவுபடுத்தும் சைக்கோக்களாகவும் இருக்கிறோம் என்பதே உண்மை. வீட்டுக்கு வீடு நம் எல்லோருக்கும் கவுன்சிலிங் ஏதோ வகையில் தேவைப்படுகிறது. அவை வெவ்வேறு பட்ட காரணங்களுக்காகவும் இருக்கும். ஆனால் அவற்றில் முக்கியமானது. ஆண், பெண் உறவுநிலை சம்பந்தமானது. பண்பாடு என்னாவது? கலாச்சாரத்தை கடாசி எறிவதா? என்று தற்காலத்தில் மேலைத்தேயத்தில் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான பெரும் போராட்டம் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது.  அதே நேரம் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள், இந்தியா, இலங்கை என்று அடக்கமான (அதாவது தமக்கு கீழ் தலையாட்டி நிற்கும் பெண்) பெண்களைத் தேடி சென்று திருமணம் செய்ய முனைவதும், அப்படியே அங்குள்ள பெற்றோரால் பெண்பிள்ளையின் விருப்புக்கு மாறாக திருமணம் செய்து வைக்கப்படுவதும் பெற்றோருக்கு மதிப்புக் கொடுக்கும் பிள்ளைகள் தலை கவிழ்ந்து வாழ்க்கையை ஏற்பதும், வெளிநாடு வந்த பின்னர் தனித்த வாழ்வில் முகங்கொடுக்கும் ஒவ்வொரு பிடிப்பற்ற நிகழ்வுக்கும் அதனோடு ஒட்டிய வன்முறைக்கும் பின்னராக ஏற்படும் நிமிர்விற்கும் பின்னரான விவாகரத்துகளுக்கும்... அப்படியே அதனோடு ஒட்டி நிகழ்த்தப்படும் வன்முறைகள் என்று நிறையவே சொல்லிக் கொண்டு போகலாம். ஒரு சிறிய வன்முறைகூட பெரிய பாதிப்பைக் கொடுக்கும் என்பதைச் சிந்திக்கும் திறனை அதிகரிக்கவேண்டும். அநேகமாக குடும்ப வன்முறையை எடுத்துக் கொண்டால் ஆத்திரக்காரக் கணவன் தன் கையால் சுவரோ அல்லது கதவுக்கோ அருகாமையில் நிற்கும் மனைவியை ஓங்கி குத்துகிறார் என்று   வைத்துக்கொண்டால் ஒன்று அந்தக் குத்தை எதிர்கொள்ளும் மனைவி காயப்படக்கூடும் மனைவி சற்று விலகினால் சுவரைப்போரையாக்கும் அல்லது கதவை உடைக்கும். ஒரு வேளை மனைவி காயப்பட்டால் பிள்ளைகள் அவசர உதவிக்கு ஆன்புலன்சை அழைத்தால் கூடவே காவல்துறையும் வரும்.  ஒருவேளை சுவர் அல்லது கதவு உடைந்தால் ஆத்திரத்தோடு ஓங்கியவர் கையும் காயப்படும். அப்போதும் அவசர உதவிக்கு ஆன்புலன்ஸ் வரும். சரி இவற்றைப் பார்த்துக் கொண்டு பயத்தில் நிற்கும் பிள்ளைகள் மன அளவில் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். வெளியே தெரியாமல் மன அழுத்தம் அவர்களின் கல்வியிலிருந்து எல்லாவற்றையும் பாதிக்கும். ஆத்திரம் தெளிந்து விடும் பாதிப்பு நிலைத்துக் கொள்ளும். பொருளாதாரத்திலிருந்து ஒற்றுமை, மனவளம்வரை பாதிப்பு நீளும். ஒரு சில நிமிட ஆத்திரத்திற்கே இத்தகை நிலை என்றால் என்பதை சிந்திக்கும் அறிவை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யவேண்டும். அநேகமானவர்கள் கவுன்சிலிங் செய்பவர்களை கேலியாக பேசுவதை எமது சமூகத்தில் அவதானித்திருக்கிறேன். இந்தக் கேலியான போக்கு நமக்கான நாகரீகமான வாழ்க்கை முறையை அண்டவிடாது தூரமாக்கும். ஆக நமது சமூகம் தொடர்பான நடைமுறைகளில் ஏதாவது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படல் வேண்டும் என்பதைத் தவிர அக்கொலை தொடர்பாக எதுவும் பேச முடியவில்லை. எங்கிருந்து தொடங்குவது என்றுதான் யாருக்கும் தெரியவில்லை.

சகாறா அக்கா.. உங்களது இந்த கருத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.. இன்றைய சமூகத்தில் நாங்கள் எங்கே நிற்கிறோம் என்பதை உங்களது ஒவ்வொரு கருத்துகள்/சம்பவங்கள்  மூலம் வெளியே கொண்டு வருகிறீர்கள்.. மனமார்ந்த நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

உண்மை எதுவென்று கண்டறிவதும் நம்புவதும் விடுவதும் உங்கள் உரிமை! ஆனால், கச்சான் சைஸில் மூளை கொண்ட கோழியின் கூர்ப்பிற்கும் 1300 கிராம் நிறை கொண்ட மனிதனின் மூளை கழுவப்படுவதற்கும் நீங்கள் போட்ட ரோடு இருக்கே? அது செவ்வாய்க்கு மனிதன் போய் விட்ட மாதிரியான உதாரணம் பிரதர்😎

கோழிக்குத் தெரிவில்லை! மனிதனுக்குத் தெரிவு இருக்கிறது. அதனால் தான் 18 வயதுக்கு மேலே சில விடயங்களைப் பார்க்கவும் அனுபவிக்கவும் அனுமதி இருக்கிறது. சரியான தெரிவுகளை நாங்கள் செய்யாமல் இருந்து விட்டு பிறகு வந்து மற்றவன் எங்கள் மூளையைக் கழுவுகிறான் என்பது ஒரு excuse மட்டுமே! தீர்வல்ல!

காலாகாலமாக பெண்களை கொஞ்சம் மரியாதை குறைத்தே நடத்தி வரும் எங்கள் பிற்போக்குத் தனத்தை  "கலாச்சாரம், தாற்பரியம்" என்று நாம் தூக்கிப் பிடித்துக் கொண்டு, மற்றவன் மூளையைக் கழுவுகிறான் என்பது சுத்த முட்டாள் தனம் என்று தான் நான் நினைக்கிறேன்!  

ஆமாம், எனக்கும் மரணதண்டனையும் மீட்சியற்ற சிறையும் ஒப்புதல் இல்லை! ஆனால், அந்த நஷனல் போஸ்ட் கட்டுரையை வாசித்தால், மீளக் குற்றமிழைக்கும் ஆபத்தைக் கூட சரியாக ஆராயாமல் மனவருத்தம் தெரிவிக்காத கொலைஞர்களைக் கூட வெளியே விட்டிருக்கிறார்கள்! இந்த விடயம் உறுத்துகிறது! 

இது ஒரு பிரச்சினைதான். அண்மையில் கூட இங்கே சிறார் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை வெளியில் விட்டது பற்றி பெரும் சர்ச்சை எழுந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக் பக்கம் போனால் கொலை செய்யப்பட்டவருக்கு இன்னொரு முகமும் வாழ்க்கையும் இருக்கின்றது போல் தெரிகின்றதே???????? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

பேஸ்புக் பக்கம் போனால் கொலை செய்யப்பட்டவருக்கு இன்னொரு முகமும் வாழ்க்கையும் இருக்கின்றது போல் தெரிகின்றதே???????? :rolleyes:

அவரும் யாரினதோ மகன், சகோதரன், நண்பன் தானே? இவர் ஒன்றும் serial killer இல்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

பேஸ்புக் பக்கம் போனால் கொலை செய்யப்பட்டவருக்கு இன்னொரு முகமும் வாழ்க்கையும் இருக்கின்றது போல் தெரிகின்றதே???????? :rolleyes:

முகநூல் பக்கம் ஒரு பெண் இரு ஆண்களுடன் பிறந்தநாள் கொண்டாடினார் என்று தலைப்பிட்டு படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒன்றில் கொலை செய்யப்பட்ட பெண்ணும் கணவரும் பிறந்தநாள் கொண்டாடுவதையும் மற்றையதில் பெண்ணின் பின்பக்க தலை முடி அங்க அடையாளங்கள் கிட்டத்தட்ட ஒத்துப்போகக்கூடிய ஆனால் நேரே தெரியாத கோணத்தில் ஒரு பெண்ணும் இன்னொரு ஆணும் முத்தங் கொடுத்தபடி பதிவிட்டு எழுதியுள்ளார்கள். முத்தமிட்டபடி நின்ற ஜோடியின் சுற்றுப்புறம் நிச்சயமாக வெளிநாடு எதையும் வெளிக்காட்டுவதாக இல்லை. அதிலுள்ள பெண் அவரா என்பதும் தெளிவில்லை. ஆக கொலை செய்யப்பட்ட பெண்ணின் மீது சேறடிக்க தயங்காமல் சிலர் இறங்கியுள்ளனர்.

Link to comment
Share on other sites

1 hour ago, வல்வை சகாறா said:

இது கூட சரியான பார்வையா என தெரியவில்லை.

இப் பெண் முதல் கணவருடன் வாழ தொடங்கி சில வாரங்களில் அவர் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர் என அறிந்து அவ் கணவரது அண்ணை அழைத்து பேசி இருக்கின்றார். 

ஒரு போதைவஸ்து பாவனையாளர் அவர் என அறிந்த பின் தான் அவரது வன்முறைகளுக்கான விபரம் தெரிகின்றது.

விலகுகின்றார்

இன்னொரு துணையை தேடி அமைக்கின்றார்

பிடிக்காத் திருமண உறவில் இருந்து விலகி புதிய துணையை நாடுவது பெண்களுக்கு மட்டும மறுக்கப்பட்ட உரிமையா எனும் கோணத்தில் அணுக வேண்டிய ஒன்று இது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

பிடிக்காத மண உறவில் இருந்து விடுபடுவது மட்டுமல்ல விடுபடும் இருவருக்கும் தத்தம் எதிர்காலத் துணையைத் தேடும் உரிமை இருவருக்கும் உண்டு. இவர்கள் விடயத்தில் மணவாழ்வில் இருந்து விலகிய தனது கடந்தகால மனைவி( விலகிய பின்னர் இந்தச் சொற்பதமே தவறு) வேறு யாரையும் தெரிவு செய்து வாழ்ந்துவிடக்கூடாது என்பதே அடிப்படை ஆணவமாக இருக்கிறது. உண்மை என்ன என்பது எவருக்கும் தெரியாது ஆனால் சட்டப்படி விலகியவர்கள் தமக்கான வாழ்வை தெரிவு செய்வது நியாயமானதே... பிடித்தமில்லாத இருவர் சேர்ந்து வாழ முடியாது...அதில் ஒருவருக்குப் பிடிப்பிருந்து மற்றவருக்கு இல்லையென்றாலும் அதுதான் நிலை.... இன்று புலம் பெயர்ந்த நம்மவர்களை எடுத்துக் கொண்டால் பல வீடுகளில் துணைவனும் துணைவியும் தனித்தனி அறைகளில் வீட்டுக்குள்ளும்,..... வெளியே புறத்தோற்றத்தில் சமூகத்திற்கு ஒஞ்சி கணவன் மனைவியாகவும் தம்மைத்தாமே ஏமாற்றி வாழ்கிறார்கள். ஒவ்வாத திருமணங்களிலிருந்து விலகுவதும் தமக்கான எதிர்காலத்தை நிர்ணயிப்பதும் தற்சமயம் கனடாவில்  வாழும் இளையவர்களிடம் பரவலாக நிகழ்ந்து வருகின்றது. விகிதாசாரத்தில் அதிகமாகவே இருக்கிறது. என்னுடைய திருமண சேவையில் முதல் திருமணத்திற்கு விண்ணப்பிப்பவர்களைக்காட்டிலும் மறுவாழ்வுக்கு விண்ணப்பிப்பவர்களே அதிகமாக இருக்கின்றனர். ஆதலால் அவர்களுடைய கடந்த காலத்தை கேட்டும் விசாரித்தும் அறியவேண்டிய தேவை எனக்கு அதிகம் ஏற்படுகிறது. அநேகமானவை தாயகத்திலிருந்து திருமணம் செய்து இங்கு வந்த பின்னர் ஏதோ காரணம் உருவாக்கி பெண்கள் பிரிவதாகவும் அதன் பின்னர் அவர்கள் வேலை செய்து தமது கடந்த கால (திருமணத்திற்கு) முன்னராக தாம் காதலித்தவரை ஸ்பொன்சர் செய்து அழைப்பதாகவும் அதிக குற்றச்சாட்டுக்களை பெண்கள் மீது போட்டபடிதான் ஆண்பிள்ளைகளின் பெற்றோர் தம் மகனுக்கான வரனைத் தேடுகிறார்கள். இவ்விடயத்தில் உண்மைகள் இல்லாமலும் இல்லை.... வெளிநாட்டுக்கு வரும் சந்தர்ப்பத்திற்கு இலட்சக்கணக்கான பணத்தைச் செலவு செய்யாமல் சில பெண்கள் திருமணம் என்னும் பெயரில் ஒரு ஆணின் வாழ்வை கபாளீகரம் செய்துவிட்டு தன் துணையை அழைத்து வாழும்போது, கடந்த திருமணம் தனக்கு விபத்து என்று கூறி தட்டிக்கழித்துச் செல்லும் நிலையையும் கண்கூடாகப் பார்க்கநேர்கிறது. ஆக திருமணம் என்பது மலினப்பட்டுப்போகிறது. தாயகத்திலிருக்கும் பெற்றோரும் உள்ளூர் வரன்களைக்காட்டிலும் வெளிநாட்டு வரன்களையே அதிகம் விரும்புகிறார்கள்  உண்மையில் மகளுக்கு பிடிக்கிறதா என்று அவர்கள் சிந்திப்பதே இல்லை... மகளை ... அவளின் கனவுகளைக் காவு கொடுத்து தங்கள் குடும்பத்தை முன்னேற்றவே அரும்பாடுபடுகிறார்கள். வெளிநாட்டு மாப்பிள்ளை எத்தகைய பழக்கவழக்கம் உடையவர் என்று சிறிதும் கவலைப்படுவதே இல்லை. அதிகமான வெளிநாட்டு மணமக்கள் அதாவது இரு பாலரும் போதைக்கு அடிமையானவர்களாக இருக்கிறார்கள். ஏகப்பட்ட கனவுகளோடு வாழவரும் மணமகளுக்கு இங்கு வந்தபின்னரே உண்மைகள் மெல்ல மெல்லத் தெரிய வரும். உண்மைகள் தெரியும்போது காலம் கடந்திருக்கும். அதற்குப் பின்னான துயரம் என்பதும் ஏமாற்றம் என்பதும் மன அழுத்தத்தை உருவாக்கி தற்கொலை முயற்சிகள், அடிதடி வன்முறைகளாக வடிவம் கொள்ளும். விவாகரத்துகளும் எதிர்காலம் பற்றிய திண்டாடல்களும் சூழ இன்னொரு வாழ்வை தேடலாமா என்றும் ஏற்கனவே பட்டதே போதும் என்று முடக்கமும் பலர் வாழ்வில் நடந்தேறிக்கொண்டிருக்கும் ஒன்று. இந்த கொலை செய்தவருக்கும் , கொலை செய்யப்பட்டவருக்கும் இடையில் ஏதேனும்  ஏமாற்றம், துயரம் பிணைந்திருக்கலாம். விடுபட்டு சென்ற பின்னர் ஒருவரின் தனிமனித வாழ்வில் தலையிடவே கூடாது.. ஆனால் இவ்விடத்தில் ஆதிக்கவெறி , ஆணவம் ஆத்திரம் என பல்வகைப்பரிமாணங்களில் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இன்று கொலை செய்யப்பட்ட பெண்ணை அவதூறு செய்யும் யாராகட்டும் இன்று கொலையாளி ஆகி நிற்கும் அந்த மனிதனுக்கு நல்வழிகாட்ட எண்ணினார்களா? கொலையாளி முன்பே அவளைக் கொல்லவேண்டும் என்று கறுவிக் கொண்டிருந்தார் என்று வெளிப்படுத்தும் எவரேனும்.... அந்தப் பையனை ஆற்றுப்படுத்த எண்ணவில்லையா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.