Sign in to follow this  
நிழலி

ரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்

Recommended Posts

Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, nunavilan said:

இந்த காணொலியில் தென்படுவது உண்மையாகவே காலமான தர்ஷிகாவாக இருந்தால், 

தாயகத்திலிருந்து திருமணம் முடித்து கனடா வந்த முழுசாக இரண்டு வருஷங்கள் முடியாத காலத்தினுள் , கனடாவில் பிறந்து வளர்ந்தவர்கள் அளவிற்கு  வாழ்க்கையின் முறைமையை சடுதியாக மாற்றியிருக்கிறார்,

தாயகத்தில் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து கனேடிய குடிமகனை திருமணம் செய்து கனடா வந்தவர் குறுகிய காலத்துள் இப்படி மாறுவது  நமது சமூகத்துக்கு ஆச்சரியமும், அவரை கட்டிகிட்டவருக்கு மனநோயும் வரபண்ணும் ஒன்றே.

அது அவர் சுதந்திரம்,, ஆனாலும்  சும்மா கதைச்சாலே ‘அவ என்ர ஆள்’’ என்று சொல்லிகொண்டு நாக்கை தொங்கவிட்டு கொண்டு அலையும் நமது சமூகத்தில் இவற்றையெல்லாம் சகித்திக்கொள்ள நூற்றில் 50% பேர்கூட நம்மில் தயாரில்லை,

இதன் காரணமாகதான் அவர் கணவர் மனநோயாளியானாரோ எவருக்கு தெரியும்?

ஆனாலும்  பிடிக்காட்டில் விலகிபோய் ,தனக்கு பிடித்த வாழ்வை தேடும் ஒரு நாட்டிலிருந்தும் ஒரு உயிரை ஓட ஓட வெட்டி கொன்றது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

Share this post

Link to post
Share on other sites

நீங்கள் இந்த வீடியோவை இணைத்தது எதற்காக?

Edited by பிரபா சிதம்பரநாதன்
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

தவறு யாருடையது என்று இறந்தவர் வந்து கூறப்போவதில்லை..

இந்த செய்தியை பார்த்த பின்பு கொலை செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர், அவர் செய்தது சரிதான் என கூறினாலும் கூறும் சமூகம் இது..

கொலை செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராயின் அவரது உறவினர்கள் நண்பர்கள், அவரை திருத்த வழி செய்தார்களா?

இப்பொழுது இறந்த பெண்ணை, மரியாதை இல்லாமல் தூற்றி என்ன பிரயோசனம்?

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

இவ்வாறான காணொளிகளை வெளியிட்டு (இங்கு இணைத்ததை குறிப்பிடவில்லை) இந்த கொலையை ஏதோ ஒருவகையில் ஒரு தரப்பு நியாயப்படுத்த முனைகின்றதுபோல் தெரிகின்றது. மனைவி காதலி முன்னாள் மனைவி என யாராக இருந்தாலும்  அவர்கள் என்ன தவறு செய்தாலும் அவர்களை அடிப்பது கொலை செய்யும் உரிமை கணவன் காதலனுக்கு இல்லை. அவ்வாறு செய்வது காட்டுமிராண்டித்தனம். பிடிக்கவில்லையாயின் அந்தந்த நாட்டு சட்டத்தை நாடி பிரிந்து செல்வது ஒன்றுதான் நியாயமானதும் நாகரீகமானதும்.  

 • Like 5

Share this post

Link to post
Share on other sites

இந்த கொலையை நான் ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை.
இது மிகவும் காட்டு மிராண்டித்தனமான செயல். கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். ரோட்டில் ஒட ஓட விரட்டி ஒர் பெண்ணை கொல்வதில் எந்த வீரமும் இல்லை. 

இவர் என்ன மனநிலையில்? ஏன் இந்த கொலைசெய்தார்? என்று இவரை தீர விசாரித்து உண்மையை அறிவதே சால சிறந்தது. 

இக்காணோலியை பார்த்தால் ஏதோ ஓர் இந்தோசமான நிகழ்வில் எடுக்கப்பட்டது போல் தெரிகின்றது. இதில் பெண்கள் / ஆண்கள் ஆடிப் பாடி மகிழ்வது வழமை.  இதை வைத்து ஒருவரது குணவியைபுகளை தீர்மானிப்பது தவறு.

 • Like 3

Share this post

Link to post
Share on other sites

15 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் இந்த வீடியோவை இணைத்தது எதற்காக?

"தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள்!" என்ற சக்தி செய்திகள் கோசத்தை அடிப்படையாகக் கொண்டு தான் நுணா இணைத்திருக்கிறார் போல! அதாவது கொலை செய்தவர் பக்கம் நியாயம் கொஞ்சூண்டு இருக்காம்! அது மட்டுமல்ல, இனி கணவர் மார் மனங்கோணாத படி பவ்வியமாக இருக்க வேணுமெண்டு மணமான பெண்களுக்கு அறிவுரை சூசகமாகச் சொல்லவும் படுகுது!

யாழ் களம் "நல்ல திசையில" தான் போகுது கொஞ்ச நாட்களாக!😎

Share this post

Link to post
Share on other sites

ஐரோப்பாவில் தமிழர்களின்  திருமணம், பிறந்த நாள் என்று எந்த விழா என்றாலும் இங்கு இணைக்கபட்ட காணோலியில் உள்ளதை போல் ஆண்கள் பெண்கள் என்று நடனமாடி மகிழ்வது சர்வ சாதாரணம். அது மிகவும் மகிழ்வான விடயம்.  ஒரு விழா இவ்வாறு மகிழ்வாக நடமாடி கொண்டாடப்படுவது இயல்பானது. அப்படி இருக்க ஒரு குரூர கொலையை  மறைமுகமாக நியாயப்படுத்த  இதனை வெளியிட்டுள்ளார்கள்  சிலர். ஒரு தனிப்பட்ட குடும்ப காணொளியை அவர்களின் அனுமதி இல்லாமல் வெளியிட்டகூடாது என்ற அடிப்படை பண்பாடு கூட இதை வெளியிடவர்களிடம் இல்லை. 

Share this post

Link to post
Share on other sites

எனிமேல் பட்டு இந்த பார்டிவளிய போய் டயட் கோக்கை குடிச்சிட்டு சாணி மிதிப்பதை நிப்பாட்டோணும்😂.

நாளைகே மனிசி போட்டுத்தள்லீட்டு வீடியோவ லீக் பண்ணி எஸ்கேப் ஆகிவிடும்.

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
31 minutes ago, goshan_che said:

எனிமேல் பட்டு இந்த பார்டிவளிய போய் டயட் கோக்கை குடிச்சிட்டு சாணி மிதிப்பதை நிப்பாட்டோணும்😂.

நாளைகே மனிசி போட்டுத்தள்லீட்டு வீடியோவ லீக் பண்ணி எஸ்கேப் ஆகிவிடும்.

உண்மை தான் கோசான். கவனமான இருக்க வேணும். போட்டு தள்ளுதல், ஆளை தூக்குதல் எல்லாம் தமிழரின் கலாச்சாரம் என்று அதை பாதுக்காக்க வேணும் என்று நினைக்கிற ஆட்கள் இருக்கேக்குள்ள கவனமா இருக்கிறது நல்லது தான். 

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, Justin said:

"தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள்!" என்ற சக்தி செய்திகள் கோசத்தை அடிப்படையாகக் கொண்டு தான் நுணா இணைத்திருக்கிறார் போல! அதாவது கொலை செய்தவர் பக்கம் நியாயம் கொஞ்சூண்டு இருக்காம்! அது மட்டுமல்ல, இனி கணவர் மார் மனங்கோணாத படி பவ்வியமாக இருக்க வேணுமெண்டு மணமான பெண்களுக்கு அறிவுரை சூசகமாகச் சொல்லவும் படுகுது!

யாழ் களம் "நல்ல திசையில" தான் போகுது கொஞ்ச நாட்களாக!😎

ஒரு செய்தி சந்திக்கு வந்துவிட்டால் பலரும் பலவிதமாகத்தான் பேசுவார்கள்.
அதென்ன யாழ்களம் போகும் திசை?????
மற்றவர்களுக்கு சரியெனப்படுவது உங்களுக்கு பிழையாக தெரிவது போல்....
உங்களுக்கு சரியெனப்படுவது மற்றவர்களுக்கு பிழையாக தெரிகின்றது ஏனெனில் இதுவொரு கருத்துக்களம். பலதும் பத்தும் பலவிதமாக இருக்கும்.:cool:

நிற்க......

கொலை எந்தவொரு விடயத்திற்கும் தீர்வாகாது.
இது எனது நிலைப்பாடு.

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, tulpen said:

ஐரோப்பாவில் தமிழர்களின்  திருமணம், பிறந்த நாள் என்று எந்த விழா என்றாலும் இங்கு இணைக்கபட்ட காணோலியில் உள்ளதை போல் ஆண்கள் பெண்கள் என்று நடனமாடி மகிழ்வது சர்வ சாதாரணம். அது மிகவும் மகிழ்வான விடயம்.  ஒரு விழா இவ்வாறு மகிழ்வாக நடமாடி கொண்டாடப்படுவது இயல்பானது. அப்படி இருக்க ஒரு குரூர கொலையை  மறைமுகமாக நியாயப்படுத்த  இதனை வெளியிட்டுள்ளார்கள்  சிலர். ஒரு தனிப்பட்ட குடும்ப காணொளியை அவர்களின் அனுமதி இல்லாமல் வெளியிட்டகூடாது என்ற அடிப்படை பண்பாடு கூட இதை வெளியிடவர்களிடம் இல்லை. 

இப்பவெல்லாம் தனிப்பட்ட விசயத்தை பாதுகாக்கிறது வலு கஸ்டம் கண்டியளோ. உந்த கைத்தொலைபேசி கோதாரி ஒண்டு வந்து செய்யக்கூடாத கூத்தெல்லாம் செய்யுறாங்கள். குடும்பத்தோடை ஒரு பங்சனுக்கு போகேலாது. குமர்ப்பிள்ளையளை பக்கெண்டு கான் போன்லை படமெடுத்து பேஸ்புக்கிலை போட்டு விளம்பரபடுத்துறாங்கள்.தூரத்தை நிண்டு இடுப்பு மார்புபக்கம் படம் எடுத்து அழகு அளவு பாக்கிற காவாலிக்கூடங்களுக்கு மத்தியிலை நாங்கள் வாழுறம் ராசா.

உங்களுக்கென்ன பழமைவாதிகள் மூடர்கூட்டம் எண்டு  வலு லேசாய் சொல்லுவியள்.

Share this post

Link to post
Share on other sites
28 minutes ago, குமாரசாமி said:

ஒரு செய்தி சந்திக்கு வந்துவிட்டால் பலரும் பலவிதமாகத்தான் பேசுவார்கள்.
அதென்ன யாழ்களம் போகும் திசை?????
மற்றவர்களுக்கு சரியெனப்படுவது உங்களுக்கு பிழையாக தெரிவது போல்....
உங்களுக்கு சரியெனப்படுவது மற்றவர்களுக்கு பிழையாக தெரிகின்றது ஏனெனில் இதுவொரு கருத்துக்களம். பலதும் பத்தும் பலவிதமாக இருக்கும்.:cool:

நிற்க......

கொலை எந்தவொரு விடயத்திற்கும் தீர்வாகாது.
இது எனது நிலைப்பாடு.

அண்ணை, "இது சாதாரண செய்தி, அதனால் பலரும் பலவிதமாகப் பேசுவது சகஜம்" என்ற உங்கள் நிலைப்பாட்டில் எனக்கு ஆச்சரியம் இல்லை! ஏனெனில் பெண்கள் மீதான உங்கள் பார்வை (தாற்பரியம், அரியதுரம் etc போன்றன) எல்லாத்திரிகளிலும் பலரும் அறிந்த விடயம் தான்!

 ஆனால், கொலையுண்டவரின் உடலே இன்னும் புதைக்கப் படாமல் இருக்கும் போது, இப்படி ஆடினார் அப்படி ஆடினார் என்று யுரியூபில்  போடுவோருக்கு தாய், சகோதரங்கள், மனையாள் எல்லாம் இருக்கிறார்கள் என்பதை நினைத்தேன்! அவர்கள்து அதிர்ஷடத்தை நினைத்துப் பார்த்தேன்! அவ்வளவு தான்!  

Share this post

Link to post
Share on other sites
47 minutes ago, Justin said:

நீங்கள் உங்களுக்கான நியாயத்தை எப்படியாவது குடைந்தெடுப்பதில் வல்லவர் என்பது சகலருக்கும் தெரிந்த விடயம். இருந்தாலும் அடியேனின் சிறு கேள்வி.
நான் எங்கே எந்த இடத்தில் இந்த  அவலச்செய்தியை சாதாரண செய்தியென குறிப்பிட்டேன் ?
விடை தெரிந்தால் கூறவும்.

Share this post

Link to post
Share on other sites

“ அதென்ன யாழ்களம் போகும் திசை?????” 

யாழ்களம் தனக்கென்று ஒரு தனித்துவத்தை கொண்டு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும். கருத்துக்களம், கருத்து சுதந்திரம் என்ற பெயரில், பலதையும் அநாகரிமாக எழுதுவது முறையல்ல. Facebook, Instagram, WhatsApp, Twitter போன்றவற்றில் பலதையும் பலவாறு எழுதும் திசையில் “யாழ்” போக வேண்டுமா?  இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே..

மேலும் இந்த வீடியோவை இங்கே இணைத்திருக்க தேவையில்லை.இங்கே மற்றையவர்கள் கூறியது போல, இறந்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றி பேசுவதற்கு எங்களுக்கு உரிமையில்லை. ஒருவர் இறந்தபின்பு அவரது தனிப்பட்ட வாழ்க்கையை அநாகரிமாக கதைப்பது நல்ல பண்பு இல்லை. அதே போல கொலை செய்தவரை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. 

 • Like 3
 • Thanks 2

Share this post

Link to post
Share on other sites
15 hours ago, குமாரசாமி said:

இப்பவெல்லாம் தனிப்பட்ட விசயத்தை பாதுகாக்கிறது வலு கஸ்டம் கண்டியளோ. உந்த கைத்தொலைபேசி கோதாரி ஒண்டு வந்து செய்யக்கூடாத கூத்தெல்லாம் செய்யுறாங்கள். குடும்பத்தோடை ஒரு பங்சனுக்கு போகேலாது. குமர்ப்பிள்ளையளை பக்கெண்டு கான் போன்லை படமெடுத்து பேஸ்புக்கிலை போட்டு விளம்பரபடுத்துறாங்கள்.தூரத்தை நிண்டு இடுப்பு மார்புபக்கம் படம் எடுத்து அழகு அளவு பாக்கிற காவாலிக்கூடங்களுக்கு மத்தியிலை நாங்கள் வாழுறம் ராசா.

உங்களுக்கென்ன பழமைவாதிகள் மூடர்கூட்டம் எண்டு  வலு லேசாய் சொல்லுவியள்.

நீங்க சொன்ன கைத்தொலை பேசி பேஸ்புக் எல்லாம் தமிழர்களிடம் மட்டும் இல்லை எல்லா மக்களிடமும் உள்ளது. தமது  கொண்டாடங்களையும்  விடுமுறையையும் தமது தனிப்பட்ட போட்டோக்களையும் எந்த தயக்கமும் இன்றி தமது நண்பர்களுடன் தாராளமாக  பகிர்ந்து கொள்கிறார்கள். அவை அவர்களின் நட்பு வட்டத்தை தாண்டி ஊடகங்களில் தவறாக பயன்படுத்த படுவதும் இல்லை மூன்றாம் நபர்கள் தமது முகதூலில் அந்த படங்களை போட்டு விமர்சிப்பதும் இல்லை. கல் தோன்றி மண்தோன்றா இனத்தின்  கலாச்சாரத்தில் தான் நீங்கள் கூறிய விடயங்கள் சர்வ சாதாரணமாக நடை பெறுகிறது. 

Share this post

Link to post
Share on other sites
16 hours ago, குமாரசாமி said:

நீங்கள் உங்களுக்கான நியாயத்தை எப்படியாவது குடைந்தெடுப்பதில் வல்லவர் என்பது சகலருக்கும் தெரிந்த விடயம். இருந்தாலும் அடியேனின் சிறு கேள்வி.
நான் எங்கே எந்த இடத்தில் இந்த  அவலச்செய்தியை சாதாரண செய்தியென குறிப்பிட்டேன் ?
விடை தெரிந்தால் கூறவும்.

அதை பற்றி நீங்கள் கேள்வி கேட்க முடியாது ....
நீங்கள் 6 அடியாக கூட இருக்கலாம் 
ஆனால் நீங்கள் குள்ளமானவர் என்று நாங்கள் எடுப்பதுதான் முடிவான முடிவு என்பதை மிக தாழ்மையுடன் 
தெரிவித்துக்கொள்கிறேன்.

நீங்கள் எழுதுவது விடுவது உங்கள் இஸ்டம் 
நாங்கள் கூறுகிறோம் நீங்கள் எழுதினீர்கள் என்று 
அதுதான் தீர்ப்பு. 
 
Share this post

Link to post
Share on other sites
On 9/22/2019 at 9:38 PM, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் இந்த வீடியோவை இணைத்தது எதற்காக?

அந்திரேட்டியில் வாழ்க்கை வரலாறு அடித்து (அந்த புததகத்தின் பெயர் வாயிலே வருக்குதில்லை) 
விடுவது ஊரில் இருப்பவர்கள் குத்துப்படுவதுக்கு இல்லை .... இவர் இவாறாக வாழ்ந்தார் என்று கூறுவதுக்கும் 
வாசிப்போருக்கு இப்படி நாமும் வாழவேண்டும் என்ற எண்ணம் வருவத்துக்கும் மரணம் என்பதை எதிர்கொள்ளவேண்டும் எனும் எண்ணம் வருவத்துக்கும்.

காணொளியை போட்டவர் 
இவர் இறப்பதுக்கு  முன்னர் இவ்வாறு மகிழ்வாக வாழ்ந்தார் ... இன்று இப்படி கொடுரமாக கொலை ஆகிப்போனார்  என்று ஒரு சாதாரண செய்தியாக kooda போddடு இருக்கலாம்.

யாழ்கள சித்தர்கள்தான் இப்போ இந்த வீடியோவை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள் 
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாதாம். இதை யார் சொல்லி அவர்களுக்கு விளங்க படுத்துறது?

Edited by Maruthankerny

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, tulpen said:

நீங்க சொன்ன கைத்தொலை பேசி பேஸ்புக் எல்லாம் தமிழர்களிடம் மட்டும் இல்லை எல்லா மக்களிடமும் உள்ளது. தமது  கொண்டாடங்களையும்  விடுமுறையையும் தமது தனிப்பட்ட போட்டோக்களையும் எந்த தயக்கமும் இன்றி தமது நண்பர்களுடன் தாராளமாக  பகிர்ந்து கொள்கிறார்கள். அவை அவர்களின் நட்பு வட்டத்தை தாண்டி ஊடகங்களில் தவறாக பயன்படுத்த படுவதும் இல்லை மூன்றாம் நபர்கள் தமது முகதூலில் அந்த படங்களை போட்டு விமர்சிப்பதும் இல்லை. கல் தோன்றி மண்தோன்றா இனத்தின்  கலாச்சாரத்தில் தான் நீங்கள் கூறிய விடயங்கள் சர்வ சாதாரணமாக நடை பெறுகிறது. 

இங்கேயும் மூடர் கூட்ட தமிழினமா? வாவ்......நீங்க பெரிய புத்திசாலி போங்க....புல்லரிக்குது.😎

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Maruthankerny said:

அந்திரேட்டியில் வாழ்க்கை வரலாறு அடித்து (அந்த புததகத்தின் பெயர் வாயிலே வருக்குதில்லை) 
விடுவது ஊரில் இருப்பவர்கள் குத்துப்படுவதுக்கு இல்லை .... இவர் இவாறாக வாழ்ந்தார் என்று கூறுவதுக்கும் 
வாசிப்போருக்கு இப்படி நாமும் வாழவேண்டும் என்ற எண்ணம் வருவத்துக்கும் மரணம் என்பதை எதிர்கொள்ளவேண்டும் எனும் எண்ணம் வருவத்துக்கும்.

காணொளியை போட்டவர் 
இவர் இறப்பதுக்கு  முன்னர் இவ்வாறு மகிழ்வாக வாழ்ந்தார் ... இன்று இப்படி கொடுரமாக கொலை ஆகிப்போனார்  என்று ஒரு சாதாரண செய்தியாக kooda போddடு இருக்கலாம்
.

யாழ்கள சித்தர்கள்தான் இப்போ இந்த வீடியோவை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள் 
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாதாம். இதை யார் சொல்லி அவர்களுக்கு விளங்க படுத்துறது?

அந்த புத்தகத்தின் பெயர் “கல்வெட்டு”. “எண்சாண் உடம்புக்கு சிறந்த சென்னிபோல் ஈழதிருநாட்டில் அமைந்த யாழ்பாண மண்ணில். உயர் சைவ வேளாண் குலத்தில் உயித்த” எண்டு ஆரம்பிக்கும்.

உங்களிடம் மேலே போல்ட் இட்ட கருத்தை  நான் எதிர் பார்க்கவில்லை. அந்த பெண் கொலையுண்ட நேரம், அவர் (அவரோ என்பதே தெரியாது) நடனமாடியதை போடுபவர்கள் நேர்மறை எண்ணத்தில்தான் போட்டார்கள் என்பதை சின்ன பிள்ளையும் நம்பாது.

Share this post

Link to post
Share on other sites

20 minutes ago, goshan_che said:

கவலை கொள்ளதீர்கள், அவர் இங்கே கருத்தைப் பார்க்கவில்லை! யார் எழுதுகிறார் என்று பார்த்துத் தான் எழுதுகிறார்!  😎

Share this post

Link to post
Share on other sites
39 minutes ago, goshan_che said:

இதுக்கு எதிர் கருத்து எழுத முடியாது மறுக்கவும் முடியாது என்பதுக்கு என்ன காரணமோ 
நான் எழுதியதகவும் இருக்கலாம் என்பதுக்கு அதுதான் காரணம்.
வெறும் ஊகம் மட்டும்தான் ...... போட்டவருக்குத்தான் உண்மையான போக்கும் காரணமும் தெரியும் என்பதுதான்  எனது கருத்து. அதை தமது கருத்துக்களுக்கு நியாயம் கற்பிக்க பிடித்த வர்ணங்களை அடிக்கிறார்கள் என்பதைத்தான்  சொல்லவருகிறேன். 

கல்வெட்டு என்பது வாயில் வரவில்லை.... எழுதியதும் நன்றி! 

23 minutes ago, Justin said:

கவலை கொள்ளதீர்கள், அவர் இங்கே கருத்தைப் பார்க்கவில்லை! யார் எழுதுகிறார் என்று பார்த்துத் தான் எழுதுகிறார்!  😎

உண்மைதான் ..... தாம் மட்டுமே மேதாவிகள் என்றும் மற்றவன் எல்லாம் லூசானவர்கள் என்ற பாணியிலும் 
இங்கு பல கருத்துக்கள் பதிவிட படுகின்றன அவற்றை குறித்ததுதான் எனது கருத்து. 
அடக்குமுறை என்பது எந்த வடிவம் எடுத்தாலும் நான் அதுக்கு எதிரானவன்தான். 

Share this post

Link to post
Share on other sites
14 minutes ago, Maruthankerny said:

உண்மைதான் ..... தாம் மட்டுமே மேதாவிகள் என்றும் மற்றவன் எல்லாம் லூசானவர்கள் என்ற பாணியிலும் 
இங்கு பல கருத்துக்கள் பதிவிட படுகின்றன அவற்றை குறித்ததுதான் எனது கருத்து. 
அடக்குமுறை என்பது எந்த வடிவம் எடுத்தாலும் நான் அதுக்கு எதிரானவன்தான். 

மருதர், மேதாவித் தனம் என்பது உழைப்பினால் வருவது! அது வெளித்தெரியலாம் தெரியாமல் இருக்கலாம்! உங்களுக்கு இந்தத் திரியில் தெரிகிறதாக நீங்கள் கருதும் மேதாவித் தனத்தை உங்கள் அறிவினால் எதிர்கொள்ளுங்கள்! உணர்ச்சிகளால் எதுவும் செய்ய முடியாது!

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, Justin said:

மருதர், மேதாவித் தனம் என்பது உழைப்பினால் வருவது! அது வெளித்தெரியலாம் தெரியாமல் இருக்கலாம்! உங்களுக்கு இந்தத் திரியில் தெரிகிறதாக நீங்கள் கருதும் மேதாவித் தனத்தை உங்கள் அறிவினால் எதிர்கொள்ளுங்கள்! உணர்ச்சிகளால் எதுவும் செய்ய முடியாது!

உழைப்பினால் பெற்றுக்கொள்பவர்கள் அடுத்தவனையும் அங்கு தூக்கிவைக்கவே உழைப்பார்கள் அதனால்தான் அதை மேதாவி என்பது.
அடுத்தவனை மட்டம்தட்டுவதன் மூலம் மேதாவியாக காட்டிக்கொள்ள முனைபவர்கள் பற்றியதுதான் எனது கருத்து. இங்கு மேதாவிகளால் பிரச்சனை இல்லை ......... அவ்வாறு தம்மை அடையாள படுத்துபவர்களால்தான் 
இன்னொருவன் மட்டம் ஆக்க படுகின்றான். எதோ ஒன்றை கூறி பிரிவினை வளர்ப்பவன் எல்லாம் மேதாவி இல்லை. ஓர் இனத்தை சமூகத்தை ஒரு சங்கத்தை  ஒரு குழுவை முன்னிலை படுத்தி முன்னெடுப்பாவன்தான் மேதாவி. 

Share this post

Link to post
Share on other sites
Just now, Maruthankerny said:

இந்தத் திரிக்குத் தொடர்பில்லாமல் இருக்கிறது, ஆனாலும் உங்கள் மேதாவித் தனம் பற்றிய கேள்வியை, வரைவிலக்கணத்தை இங்கே இணைத்துப் பதில் தருகிறேன், அதனால் இது அகற்றப் படாமல் இருக்கும் என நம்புகிறேன்:

ஒரு பெண்ணை முன்னாள் கணவர் கொடூரமாகக் கொலை செய்து விட்டார். இப்போது கொலைக்கு அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளும் காரணமாக இருக்கலாம் என்ற தொனியில் செய்திகளும் பதிவுகளும் வருகின்றன. இது அப்பட்டமான பெண்ணடிமை வாதம் என ஒரு தரப்புச் சொல்கிறது. அப்படியில்லை என இன்னொரு தரப்புச் சொல்கிறது. இந்த வாதத்தில் சட்ட நுணுக்கங்களைத் தாண்டி வந்தாயிற்று. இப்ப இது ஒரு தார்மிக விடயமாகத் தான் விவாதிக்கப் படுகிறது.

இங்கே யார் மேதாவித் தனம் காட்டினார்கள்? தனி மனித சுதந்திரத்தை மதிக்கும் ஒருவர் மேதாவியா அல்லது கலாச்சாரப் பொலிஸ் வேலை பார்த்து நபர்களின் நடவடிக்கைக்கு விளைவுகள் உகந்தவையா எனத் தீர்மானிப்பவர் மேதாவியா? என்னைப் பொறுத்தவரை இதில் மேதாவித் தனம் எவரிடமும் இல்லை! நீங்கள் திரி மாறி வந்து விட்டீர்கள் என நினைக்கிறேன்!

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஆரிய கூத்து - 2 18+ மட்டும்    
  • நீங்கள் எதிர்பார்க்கிறதுக்காக எல்லாம் மோசமான நிலைக்கு நாம் இறங்க வேண்டும்  என்றில்லையே? நான் மேலே மூன்று கருத்து சீமானின் அரசியில் தளம் பற்றி எதிர்க்கருத்து  இருப்பின் ஒரு ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு வாருங்கள் என்று எழுதி இருக்கிறேன். மீண்டும் மீண்டும் சீமான் பூரி சாப்பிட்டார் பொரிவிளாங்காய் சப்பிட்டார்  என்று கனோடு இருந்தால் நீங்கள் ஓவருவராக வரிசை கட்டி வர இதை வேலையில்லாமல்  கருத்து எழுதிக்கொண்டு இருக்க வேண்டுமா?  எழுதிய பதிலை படிக்க உங்களுக்கு விக்கினம் இருக்கும்போது  நான் மட்டும் எழுதிக்கொண்டே இருக்க வேண்டுமா? எனக்கு சீமான் வன்னியில் தோசை சாப்பிடாரா? பிட்டு சாப்பிடாரா? என்பது தேவை இல்லை ... அரசியல் களத்தில் அவர் என்ன செய்கிறார்  அவருடைய கடைசி என்ன செய்கிறது என்பதே தேவையானது. உங்களிடம் ஆக்கபூர்வமான கருத்து இருந்தால் வாருங்கள்  தொடர்ந்தும் விவாதிக்கலாம்.  சீமான் கடவுள் தப்பே இருக்காது என்ற பிற்போக்கு தனமோ அப்படி தவறு  இருப்பின் மூடி வைத்துக்கொண்டு வக்ககாலத்து வாங்கும் மனநிலையில் நான் இல்லை  உங்களிடம் எதிர் கருத்து இருந்தால் முன்வையுங்கள்.  
  • அதிக மழைப்பொழிவு தான் எரிமலைகள் வெடிக்க காரணமா.?   ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் நாள் பூமி தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பூமி தினத்திற்கு வயது 50. அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகள், கட்டுரைகள், கள ஆய்வுகள் என பல்வேறு அறிவியல் தொடர்பான செய்திகளை வெளியிடும் Journal Nature இதழில் எரிமலைகள் தொடர்பாக வெளிவந்திருக்கும் ஓர் அறிக்கை (case study) நம்மை சிந்திக்க வைக்கும் விதமாக இருக்கிறது. kilauea eruptionவழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வரும் காலநிலை மாற்றத்தின் விளைவாக பூமியின் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகப்படியான வெப்பச் சலனம், காட்டுத் தீ போன்றவைகள் என்றால், ஆர்டிக், அண்டார்டிகா போன்ற பகுதிகளில் பதிவான அதிக வெப்பநிலையால் பனிப்பாறைகள் உருகுகிறது. இதனால் கடல் பகுதிகளில் கடல் நீர் மட்ட உயர்வுக்கு வழிவகுக்கிறது. காலம் தவறாமல் பருவ மழை பொழியும் பகுதிகளில் கூட தலை விரித்தாடிய வறட்சியும், அதற்கு நேர் எதிராகக் கொட்டித் தீர்த்த தொடர் மழைப் பொழிவும் பெரும் சேதத்தை விளைவித்திருக்கிறது. அதிக மழைப் பொழிவால் உண்டான விளைவுகளில் ஒன்றாக 'Kilauea என்ற எரிமலை வெடித்துச் சிதறியது இருக்கலாம்' என்று ஓர் அறிவியல் அறிக்கை வெளிவந்துள்ளது. உலகில் அதிகப்படியான எரிமலைக் குழம்புகள் (lava) வெளிவந்து கொண்டிருக்கும் பகுதி பசுபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் சில தீவுக்கூட்டங்கள் ஆகும். இதில் ஒன்று தான் ஹவாய் தீவுகளில் இருக்கும் 'Kilauea' என்ற தீவுப் பகுதி. இங்கு 1983 ஆம் ஆண்டு முதல், எரிமலை ஒன்று தீக் குழம்பாய் வெளிவந்து கொண்டிருக்கிறது, அது 'Kilauea' என்ற எரிமலை. இது 2018 ஆம் ஆண்டு மிகத் தீவிரமாக வெடித்துச் சிதறியது. கிட்டத்தட்ட 700-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மேலும் அங்கு வசித்து வந்த மக்கள் அத் தீவில் இருந்து அப்போது வெளியேறி விட்டார்கள். இந்த எரிமலை வெடித்த சம்பவத்தை கணக்கிடும் போது, இது கடந்த 200 ஆண்டுகளில் காணப்படாத எரிமலை தீப்பிழம்புகள் ஆகும். இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்ட அறிவியலாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் 'அப்பகுதியில் தொடர்ந்து பெய்த கன மழையால் நிலத்தடியில் சென்ற நீரினால் வெப்ப அழுத்தம் மாறுபட்டதுதான் திடீரென அதிகப்படியான லாவா குழம்புகள் வெளியேறக் காரணம்' என்று கூறியிருக்கிறார்கள். நமது பூமியானது சூரியனிலிருந்து பிரிந்து வந்த ஒரு சிறிய பகுதிதான் என்பதற்கு இன்றளவும் சான்றாக இருப்பது எரிமலைக் குழம்புகள். பூமியின் மேற்பரப்பில் இருந்து அதன் அடிப்பகுதி வரை அவை நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. இவைகள் முறையே Crust, Mantle, Outer core, Inner core ஆகும். 1. நாம் வசிக்கும் மேற்பரப்பானது Crust ஆகும். இது பூமியின் முதல் நிலை என்று அழைக்கப்படுகிறது. மண், மலைப் பகுதிகள், கடல் சார்ந்த பகுதிகள் இவைகள் எல்லாம் 5 கிலோ மீட்டரில் தொடங்கி 40 கிலோ மீட்டர் ஆழம் வரை அமைந்திருக்கிறது. இந்த Crust layer எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான அமைப்பில் இருப்பது கிடையாது. Mantle -ன் மேற்பரப்பில் உடைந்து போன பாகங்கள் plates என்று‌ அழைக்கப்படுகிறது. இவை மெதுவாக சுழன்று கொண்டிருக்கும். சில பகுதிகளில் சிதைந்து போன மண் பரப்பு பகுதிகளாக இருக்கிறது. இதில் தான் மழை நீர் கீழே சென்று ஈரப்பதம் மிக்கதாக அமைந்திருக்கிறது. இது 'light blocks on the upper mantle' என்று அழைக்கப்படுகிறது. 2. இரண்டாவது நிலையில் இருப்பது Mantle ஆகும். இது முழுக்க லாவா நிரம்பி இருக்கிறது என்று உலகில் அனேக மக்களால் நம்பப்படுகிறது. ஆனால், இங்கு இருப்பது தடிமனான பாறைகள். இதிலிருக்கும் வெப்பப் பாறைகள் அதிகப்படியான அழுத்தத்தால் ஆறு (ரோட்டின் மீது தான் தார் இருப்பது போல்) போன்று ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு பகுதியில் மட்டும் கனிம மூலக்கூறுகள், பாறைகள் திரவ நிலையில் இருக்கும். இதைத்தான் 'Magma' என்று அழைக்கிறார்கள். அதிக வெப்பநிலையில் உள்ள திரவப் பாறைகள் தீப்பிழம்பு போல் இருப்பதால் இது லாவா என வர்ணிக்கப்படுகிறது. இது 2,900 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. 3. இதற்கடுத்து மூன்றாவதாக கீழே அமைந்திருப்பது Outer core. இங்கு‌ இருக்கும் இரும்புத் தாதுக்கள் உருகிய நிலையில் சற்று தடிமனாக இருக்கிறது. இதன் வெப்பநிலை சுமார் 4000 முதல் 5000 டிகிரி செல்சியஸ் அளவில் உள்ளது. இந்தப் படிநிலையில் இருக்கும் இரும்புத் தாதுக்கள், சல்பர் மற்றும் நிக்கல் போன்றவைகள் சேர்ந்து பூமியின் காந்தப் புலத்தை உருவாக்குகின்றன. 4. நான்காவதாக இருப்பது Inner core. இது வெப்பமான ஒரு இரும்புக் குண்டு போல் தடிமனாக அமைந்திருக்கும். இங்கு வெப்பநிலை சுமார் 5000 முதல் 7000 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும். எரிமலைகளைப் பற்றி ஆராய்ந்து வரும் அறிவியலாளர்கள், எரிமலை வெடித்துச் சிதறிய பகுதிகளில் மழை நீர் அதிகமாகி நிலத்தடியில் சென்றிருக்கிறது என்பதைத் தரவுகளுடன் விளக்கிக் கூறுகிறார்கள். அமெரிக்காவின் நாசா மற்றும் ஜப்பானிய வானிலை ஆய்வு மையத்தின் மழைப்பொழிவு பதிவாகிய செயற்கைக்கோள் படங்களை ஆராய்ந்து ஒப்பிட்டுப் பார்த்ததில், 2018ஆம் ஆண்டின் முதல் பகுதியில் மட்டும் அதிகப்படியாக 2.25m மழைப்பொழிவு இப்பகுதியில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த ஆண்டு முழுவதும் பரவலாக மழை பொழிந்து உள்ளது. ஹூவாய் தீவுக்கூட்டங்களில் எரிமலைகள் வெடித்துச் சிதறி வரும் பகுதிகளை 'East Rift zone' என்று அழைக்கிறார்கள். நிலத்தடி நீர் அதிகப்படியாக உள்ளே சென்றதால் இந்த பகுதிகளில் 'dyke intrusion' என்ற கூற்றின் படி magma என்ற லாவா குழம்புகள் அதிக அழுத்தம் கொண்டதாக மாறி வெடித்துச் சிதறி இருக்கக்கூடும் என்கிறது அந்த அறிக்கை. 2018 ஆம் ஆண்டு பசுபிக் பெருங்கடல் மற்றும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிகளும் கனமழையும் பெய்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிக மழைப்பொழிவு எரிமலையை ஏற்படுத்தக்கூடுமா? இந்த கேள்விக்கு அறிவியல் பூர்வமாக பதில் அளித்து இருக்கிறார்கள் அறிவியலாளர்கள். "இதை நிரூபிப்பது கடும் சிக்கலான காரியம். நீர் அதிக விஷயங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக இருக்கிறது. இயற்பியல் நமக்குத் தெளிவாக ஒன்றை விளக்குகிறது, சூடாக இருக்கும் ஒரு பாறையின் மீது தண்ணீரைத் தெளித்தால் அத்தண்ணீர் செயலிழந்து போய்விடும்" என்கிறார் மியாமி பல்கலைக்கழகப் பேராசிரியர் Falk Amelung. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை நாம் ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம். 2018ல் ஹவாய் தீவுக் கூட்டங்களில் வெடித்துச் சிறிய எரிமலை கூட காலநிலை மாற்றத்தால் கொட்டித் தீர்த்த மழையினால் தான் உண்டாகி இருக்கலாம். இப்பூமியில் வாழும் மனிதர்கள் நாம்தான் கால நிலை மாறாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். (நன்றி: https://www.npr.org/2020/04/22/839866607/did-heavy-rain-cause-hawaiis-historic-volcanic-eruption) - பாண்டி http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-75/40115-2020-04-29-04-47-39